|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 30, 2007

திருச்சியில் மூட்டை மூட்டையாக ஜெலட்டின் குச்சிகள்

திருச்சி துவாக்குடியில், மூட்டை மூட்டையாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

துவாக்குடியில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிட்டங்கியில் 18 மூடைகளில் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த வெடிபொருட்களை வைத்திருப்பதற்கு உரிய அனுமதியை நடராஜன் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடராஜனை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதே சம்பவத்தில் ஒரு முஸ்லிம் பெயர் அடிபட்டிருந்தால், திருச்சி மலைக்கோட்டையை தகர்க்க முஸ்லிம் தீவிரவாதி சதி, சென்னையை தகர்க்க சதி என்றும் சம்மந்தப்பட்ட நபரோடு உலகில் உள்ள அனைத்து இயக்கத்தையும் சம்மந்தப்படுத்தி செய்தி வெளியிட்டு பரபரப்பை நமது காவல்துறையும், பத்திரிக்கைகளும் ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால் இந்த திருச்சி சம்பவத்தில் அதிக அளவில் வெடிப்பொருட்கள் பிடிபட்டும் சாதரண செய்தியாகயுள்ளது அதிர்சியளிக்கிறது. முஸ்லிம்கள் பிடிபட்டால் திவிரவாத குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்படுத்துவதும், அதே மற்றவர்கள் செய்தால் பாறையை பிளக்க மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள் பிடிப்பட்டது என்றும் செய்தி வெளியாவது வேடிக்கை. .இந்த சம்பவத்தை காவத்துறை தீவிர விசாரனை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் விருப்பம்.

Sunday, August 26, 2007

தமிழர்களின் இரத்தம் உலகில் பரவுகிறது.

மிழகத்தை மையமாகக் கொண்டு அனைத்து மதத்தினரிடமும் சமூக நல்லிணக்கத்தை பேணிவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) , ஆன்மீக பணியோடு சமுதாயப்பணியும் செய்து வருகின்றது. அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழகத்திலேயே முதலாம் இடத்திற்கான விருதினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய சமூகநலப்பணிகளை இதனுடைய ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாமில் கடந்த ஜுலை 12-ம் தேதி ரியாதிலுள்ள கிங் ஃபைஸல் சிறப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் 49 பேர் இரத்ததானம் செய்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) நேற்று (ஆகஸ்ட் 24 ) "கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி"யில் இரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி இந்தியாவின் பிற மாநிலத்தவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதி கொடையளித்தனர்.

இங்கே சொந்த சகோதரனின் உயிர் காப்பதற்காக கூட இரத்தம் வழங்க முன்வராமல் காசுக்கு ஆள் பிடிக்கும் நிலையில் உயிர் காப்பதற்காக தியாகம் செய்ய நாங்கள் தயார் என்று முன்வந்த தமிழர்களை அனைவரும் பாராட்டினர். குல்லும் மதராஸி? அல்ஹம்துலில்லாஹ்! (ஏற்பாடு செய்ததும் தமிழர்களா! வந்தவர்களும் தமிழர்களா ! புகழனைத்தும் இறைவனுக்கே!) என்று கூறி இங்குள்ள அரபிகளுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட நெகிழ்சியால் அவர்களுடைய கண்கள் கலங்கின.

அன்றைய தினம் அந்த மருத்துவமனை முழுவதும் தமிழ்குரலாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. நேரமின்மையால் மொத்தம் 89 பேர் இரத்ததானம் செய்தனர். சவுதி அரேபியா வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனைபேர் இரத்ததானம் செய்தது இதுவே முதன்முறையாகும் என்று இரத்தவங்கியின் துணை இயக்குநர் திரு.ஃபத்தூஹ் அல் ஆலெம் கூறினார். அந்த பெருமை இன்று தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. மொத்தத்தில் தமிழர்களின் இரத்தம் தேசம், மொழி வேறுபாடின்றி உலகிலுள்ள அனைவரின் உயிர்காத்து, அனைவரின் உடலிலும் தமிழர்களின் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் என்ற தியாகத்தில் நாம் மகிழ்ச்சியுறுவோம்.

ரியாதிலிருந்து முஹம்மது மாஹீன்

Thursday, August 23, 2007

தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கூடுமா?

? முஸ்லிம்கள் தற்கொலை தாக்குதல் நடத்துகின்றார்கள். இது இஸ்லாத்தில் கூடுமா?

பதில்:

தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1364

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது.

உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும். ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப் பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப் பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப் படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப் படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப் பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ''கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன.

அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 15036, 15037)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

முன்னர் அனுமதிக்கப் பட்டு பின்னர் தடைசெய்யப் பட்டதால் தான் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொது மக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப் படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப் படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப் படுகின்றது.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.

நன்றி

நிரபராதிக்கு சிறை தண்டனை! குற்றவாளிக்கு பாதுகாப்பு!! நீதியின் விலை?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

ஒரு குற்றத்தை செய்தவர் தலை மறைவாகிவிட்டால் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைப்பார்கள், வலைவீசி தேடுவார்கள். ஆனால் அதற்கு மாறாக அவர் மேலும் குற்றம் செய்யும் விதம் போலீசார் அவருக்கு பந்தோபஸ்து வழங்குவதை கேள்விபட்டிருக்கிறீர்களா ! இன்றைய தமிழக அரசும் காவல்துறையும் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

கொலைமிரட்டல் உட்பட உள்ள பல வழக்குகள் நிலுவையிலிருக்கும் போது பி.ஜே.பி.யின் உமாபாரதி தமிழகத்திற்கு வந்து சென்றிருக்கிறார். அரெஸ்ட் வாரண்டை கையில் வைத்துக்கொண்டிருக்கும் காவல்துறை, அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு பந்தோபஸ்தும் வழங்கியிருக்கிறது. இது தான் நம் நாட்டு நீதிதுறையின அவலநிலை. தமிழகத்திற்கு வந்து சென்றதோடு மட்டுமல்லாமல் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் பேசும்போது 'என்ன நடந்தாலும் ராமர்பாலத்தை பாதுகாப்போம், முடியுமானால் தன்னை கைது பண்ணுங்கள் பார்க்கலாம்' என்று தமிழக அரசிற்கு சவால் விட்டுள்ளார். அரசுக்கு சவால் விட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அவரை கைது செய்ய முடியாத இந்த கையாலாகாத அரசு வாயில் விரலை வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறது.

கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் பேசியதற்காகவும் அரசு அதிகாரிகளை கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததற்காகவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அரெஸ்ட் வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவரை ரோந்து செல்லும் போது பிடிக்க தேவையில்லை, வலை வீச வேண்டியதில்லை, தனிப்படை அமைக்க வேண்டியதுமில்லை.கண்ணுக்கு முன்பாக நிற்கிறார். தமிழகத்திற்கே வந்த அவரை காவல்துறை கைது செய்யாமல் விட்டிருக்கிறது. ஆனால் எந்த குற்றமும் செய்யாத மதானிக்கு 9 வருடம் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது. இதற்கு நீதித்துறையும் காவல்துறையும் என்ன பதில் சொல்லப்போகிறது.

-முஹம்மது மாஹீன்

Monday, August 20, 2007

அர்த்தமற்ற பண்டிகைக்கொண்டாட்டம்.

'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறும் சிந்தனையாளர்கள் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளைப் பார்த்து விட்டு மதங்களை வெறுக்கின்றனர்.

''நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக மற்றவர்களைத் துன்பத்திற்குள்ளாக்குவது எப்படி அர்த்தமுள்ள செயலாக இருக்கும்?'' என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

பண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அந்தச் சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேர மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன.

எத்தனையோ குடிசைகள் இதனால் எரிந்து சாம்பலாகின்றன.

உயிர்களும் கூட பலியாகின்றன.

அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களும், இதய நோயாளிகளும், தொட்டில் குழந்தைகளும் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

நச்சுப் புகையின் காரணமாக மற்றவர்களுக்கும், நமக்கும் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வசதி படைத்தவர்கள் விலை உயர்ந்த புதுமையான பட்டாசுகள் கொளுத்துவதைக் காணும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறு எரிகின்றது.

இப்படி இன்னும் பல தீமைகள் இதனால் ஏற்படுகின்றன.

நாம் தீப்பிடிக்காத வீட்டில் இருக்கலாம். குடிசையை இழந்த அந்த ஏழை ஒரு குடிசையை மீண்டும் உருவாக்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும்?

அவன் சிறுகச் சிறுகச் சேர்த்த அற்பமான பொருட்களை மீண்டும் சேர்க்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும்?

இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது நடக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவை தாமா? என்று சிந்தனையாளர்கள் எண்ணுகின்றனர்.

வீதிகளில் பூசனிக்காய்களை உடைத்து விபத்துக்களை ஏற்படுத்துவதும், குப்பைகளை வீதிகளில் எரிப்பதும், மாடுகளை வீதியில் விரட்டி அவற்றுக்கு ஆத்திரமூட்டுவதும், வாகனங்களில் செல்பவர்களை மறித்து வாழ்த்துச் சொல்லி அவர்களை நிலைகுலைய வைப்பதும், பஜனைப் பாடல்களை இரவு முழுவதும் உரத்த குரலில் பாடுவதும், பொது இடங்களில் ஆடல் பாடல் கும்மாளம் போடுவதும் நமக்குச் சந்தோஷமாகத் தெரிந்தாலும் இது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மற்றவரைத் துன்புறுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இந்த விமர்சனத்தையும் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்ப முடியாது.

''தனது கையாலும் நாவாலும் பிறருக்குத் தொல்லை தராதவன் எவனோ அவனே முஸ்லிம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 10, 11, 6484

ஒரு முஸ்லிம் தனக்கோ, மற்றவருக்கோ துன்பம் இழைக்கக் கூடாது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். எனவே முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இது போன்ற காரியங்களைச் செய்ய அனுமதி இல்லை.

முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களே உள்ளன.

க்ஷி இவ்விரு பெருநாட்களிலும் புத்தாடைகள் அணியலாம்.

க்ஷி சிறப்பான உணவுகள் சமைத்து உண்ணலாம்.

க்ஷி உடலுக்கு வலிமை தரும் விளையாட்டுக்களில் இவ்விரு நாட்களிலும் ஈடுபடலாம்.

க்ஷி இரண்டு பெருநாட்களிலும் நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் தான தர்மங்கள் செய்தல்

க்ஷி அதிகாலையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுதல், இறைவனிடம் நல்லருளை வேண்டுதல்

க்ஷி உடலுக்கு வலிமை சேர்க்கும் வீர விளையாட்டுக்களில் ஈடுபடுதல்

போன்றவை தான் இஸ்லாமியப் பண்டிகைகளின் போது கடைப்பிடிக்க வேண்டியவை.

எந்த முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் இப்பண்டிகைகளால் எந்தவிதமான தொல்லைகளும் இல்லை. இறைவனைப் பற்றி நினைவு கூர்வதும், மனிதர்களுக்கு நலம் நாடுவதும் தான் இஸ்லாமியப் பண்டிகைகளில் உள்ளன.

எனவே பண்டிகைகள் என்ற பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு செய்யப்படுகின்றன என்ற விமர்சனமும் இஸ்லாத்துக்கு பொருந்தாது.

மதங்கள் அர்த்தமற்றவை; மனித குலத்துக்குத் தேவையில்லாதவை என்பதை நிலைநாட்டுவற்காக கூறப்படும் காரணங்களில் ஒன்று கூட இஸ்லாம் மார்க்கத்துக்கு பொருந்தாது.

எனவே இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மலேசியாவில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா.அத் சமுதாயப்பணிகளை செய்வதுடன் மார்க்கப் பணிகளையும் வெகு சிறப்பாக செய்து வருகின்றது. இணையதளம், தொலைக்காட்சி வாயிலாக இஸ்லாமிய பிரச்சாரத்தை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றது. தற்போது இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் மலேசியாவிற்கு கடந்த 17-8-2007 அன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து மலேசியா TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை 19-8-2007 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மலேசியாவில் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஏற்பாடு செய்தபடி அல்லாஹ்வின் கிருபையால் 19-8-2007 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மலேசியாவில் நடைபெறும் முதல் இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழச்சியை மலேசியா TNTJ நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Thanks...www.tntj.net

Sunday, August 19, 2007

தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


இஸ்லாத்தை பற்றியும், உலகமுஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் நபி (ஸல்) அவர்களை பற்றியும் அசிங்கமாக விமர்சித்து வருகின்ற சர்ச்சைக்குரிய முஸ்லிம் விரோத வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் சில மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா தான் எழுதிய லஜ்ஜா என்ற நாவலால் வங்கதேச முஸ்லீம்களின் மற்றும் உலக முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அவருக்கு எதிராக முஸ்லீம்கள் அனைவரும் போர்க்கொடி உயர்த்தியதால் வங்கதேசத்திலிருந்து அவர் வெளியேறினார்.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள அவருக்கு தற்போது இங்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் ஹைதராபாத்தில்இ மஸ்ஜிலிஸ் இ இத்தாஹுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் தஸ்லிமாவைத் தாக்கினர்.

இந்த நிலையில் முஸ்லிம்களின் உணர்வை மதித்து தஸ்லிமாவை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டிய காங்கிரஸ் அரசு அவரது விசாவை மேலும் சில மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. நேற்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரைக்கும் அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தர குடியுரிமை கோரி தஸ்லிமா மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை மட்டும் நீட்டித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அரசின் இந்த முடிவு வண்மையாக கண்டிக்கத்தக்கது. தஸ்லிமாவை உடனே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். காங்கிரஸ் அரசு இது போன்று முஸ்லிம்களின் உணர்வோடு விளையாடுமானால் அதன் பலனை வருகின்ற தேர்தலில் அனுபவிக்கும்.

Saturday, August 18, 2007

ஒரு முஸ்லீம் காந்தியைக் கொன்று விட்டான்


1948-ஜனவரி 30, பார்ப்பன கொலை வெறிக்கு காந்தியார் பலிகடா ஆனநாள் அதுதான்!

புதுடில்லியில் உள்ள பிர்லா மாளிகையில் தனது அறையிலிருந்து காந்தி புறப்பட்டார். அதுவரை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக் கொண்டிருந்தவர், பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று பட்டேலிடம் விடை பெற்றுக் கிளம்பி, பிரார்த்தனை மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காந்தியாரின் பேத்தி 'ஆவா காந்தி' மருமகள் 'மனுகாந்தி' ஆகியோர் தோள் கொடுக்க தோட்டத்தைக் கடந்து பிரார்த்தனை மேடைக்கு வந்தார். மண்டபத்தை அடைய இன்னும் நான்கு அடிகளே எடுத்து வைக்கவேண்டும். 500 பேருக்கும் மேல் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அப்போது கூட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு 35 வயதுடைய இளைஞன் ஒருவன் வந்தான்.

தனது உடலை வளைத்து குனிந்து, 'பிராணம் (சல்யூட்) செய்தான். காந்தியார் திருப்பி மரியாதை செலுத்தினார்.

'இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா?' என்று கேட்டான்.

காந்தியார் சிரித்துக் கொண்டே 'ஆம், நேரமாகிவிட்டது.' என்றார்.

உடனே துப்பாக்கியை எடுத்தான். காந்தியாரை நோக்கி மூன்று முறை சுட்டான். காந்தியார் வயிற்றுக்குக் கீழேயும், இதயத்துக்குக் கீழேயும் குண்டுகள் துளைத்துச் சென்றன. காந்தியார் குலைந்து போனார். ஆவா காந்தியும், மனுகாந்தியும் அழுத்திப் பிடித்துக் கொண்டனர். அப்போது நேரம் மாலை 5 மணி 12 நிமிடம்! காந்தியார் மூச்சை இழந்தார்.

அதற்குமுன் ஜனவரி 15-ம் தேதியிலிருந்து வகுப்புக் கலவரங்களை எதிர்த்து தொடர்ந்து 'உண்ணா விரதம்' இருந்த காந்தியார் சில நாட்களுக்கு முன்புதான் உண்ணா விரதத்தை முடித்திருந்தார்.

காந்தியாரை சுட்டுக் கொன்றவனை கூடியிருந்தவர்கள் வளைத்துப் பிடித்தனர். ஆத்திரமடைந்த கூட்டத்தினர் அவனை அடித்துக் காயப்படுத்தினாகள். போலீசார் அவனை கைது செய்து சிறைக்கு கொண்டு போனார்கள்.

அந்த இளைஞன் தான் 'நாதுராம் கோட்சே' என்கிற மாராட்டிய மாநிலத்தைச் சார்ந்த சித்பவன் பார்ப்பனர்!

அதிர்ச்சி அடைந்த நேரு வானொலியில் இவ்வாறு பேசினார்.

"ஒரு பைத்தியக்காரன் காந்திஜியின் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டான். நான் அவனை ஒரு பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவேன். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் ஒரு 'விஷம்' பரப்பப்பட்டு வருகிறது. இந்த 'விஷம்' மக்களிடையே பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விஷத்தை நாம் சந்திப்போம், சந்தித்தே தீருவோம்!"

என்று நேரு, காந்தியாரின் உயிரை மாய்த்த அந்த 'விஷத்தை' சுட்டிக்காட்டி அறைகூவல் விடுத்தார். அவர் சொன்ன அந்த ஆலகால விஷம் "ஆர்.எஸ்.எஸ்"!

காந்தியார் மறைவு பற்றிய வரலாறு ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் முழுமை பெற முடியாது! காந்தியார் உயிரைக் குடித்த சிதபவன் பார்ப்பனர் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரே என்பது கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் உண்மை! ஆனால், கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று இமயமலையை தூணில் மறைக்கும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் ஈடுபட்டது. அதையே இப்போதும் செய்து கொண்டிருக்கிறது!

நாம் இந்த பொய்மைத் திரையை கிழித்துக் காட்டப் போகிறோம். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவரப் போகிறோம்! காந்தியார் கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்புகளை பட்டியல் போட்டுக் காட்டப் போகிறோம்.

காந்தியார் இறந்தார் என்ற செய்தி வந்தவுடன் அந்த வாய்ப்பையும் பயன் படுத்திக் கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க முயன்ற கூட்டம் இது. காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லீம் என்ற வதந்தியை திட்டமிட்டுக் கிளப்பினார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே இந்த வதந்தி காட்டுத்தீ போல பரவிவிட்டது. பல இடங்களில் முஸ்லீம்கள் மீது தாக்குதலும் தொடங்கி விட்டது.

காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மவுண்ட்பாட்டன் (அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்) பிர்லா மாளிகைக்கு விரைகிறார். அப்போது வெளியே பெரிய கூட்டம் திரண்டு நிற்கிறது. கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டு மவுண்ட்பாட்டன் அவசரமாக நுழையும் போது ஒரு பார்ப்பனன் ஓடிவந்து,

"ஒரு முஸ்லீம் காந்தியைக் கொன்று விட்டான்." என்று அலறுகிறான்.

"முட்டாள்' வாயை மூடு; கொன்றது ஒரு இந்துதான் என்று உனக்குத் தெரியாதா?" என்று ஆத்திரத்தோடு பதிலளிக்கிறார் மவுண்ட்பாட்டன்.

(ஆதாரம்: Freedom at Midnight பக்கம் 440)

அகில இந்திய வானொலியின் டைரக்டருக்கும் - காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லீமே என்று இந்தக் கூட்டம் தகவல் கொடுத்தது. வானொலியில் இப்படி ஒரு செய்தி வந்துவிட்டால், நாடெங்கும் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்பது இவர்களின் அற்ப ஆசை! ஆனால், வானொலி இந்தச் செய்தியை நல்ல வேளையாக ஒலி பரப்பவில்லை.

காந்தியாரை சுட்டுக் கொன்றது யார் என்று தெரிந்த பிறகே, அந்தச் செய்தியை ஒலி பரப்பவேண்டும் என்று வானொலி நிலைய அதிகாரிகள் செய்தியை தாமதப் படுத்தினர். காந்தியார் மறைவுக்குப் பிறகும், வானொலியில் தொடர்ந்து வழக்கமான நிகழ்ச்சிகளே ஒலி பரப்பப்பட்டு வந்தன.

பிர்லா மாளிகைக்குத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்திய பிறகுதான் வானொலி காந்தியாரின் மறைவை நாட்டுக்கு அறிவித்தது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டது மாலை 5 மணி 12 நிமிடம். வானொலியில் அந்தச் செய்தி ஒலி பரப்பானதோ, மாலை ஆறு மணிக்குத்தான்! அதுவும் செய்தி எப்படி ஒலிபரப்பப் பட்டது தெரியுமா?

"காந்தியாரை இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்!" என்று சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி செய்தி அறிவிக்கப் பட்டது. இப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். என்கிற சதிகாரப் பார்ப்பனர் கூட்டம்தான்!

காந்தியாரின் உதவியாளராக இருந்து, காந்தியார் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதிய பியாரிலால் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"அந்தக் கடிதத்தை ஒரு இளைஞர் எழுதியிருந்தார். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் ஈர்க்கப்பட்டு, பிறகு அதிலிருந்து வெறுப்படைந்து வெளியேறியவர் அந்த இளைஞர். ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு, 'காந்தியார் சுட்டுக் கொல்லப்பட இருக்கிறார்' என்ற செய்தி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 'அந்த இனிப்பான செய்தியை கேட்பதற்கு தயாராக இருங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள். பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வானொலிமுன் உட்கார்ந்து கொண்டு, 'அந்த இனிப்பான செய்தி'க்காகக் காத்துக் கொண்டிருந்தனர். செய்தி வந்தவுடன் டில்லி உட்பட பல இடங்களில் இனிப்பு வழங்கினர்." என்று எழுதியிருக்கிறார்.

(ஆதாரம்: பியாரிலால் எழுதிய Mahathma Gandhi the Last phase நூல் பக்கம் 756)

அதே நூலில் அதே பக்கத்தில், இன்னொரு தகவலும் தரப்பட்டிருக்கிறது.

"பிறகு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட போது இந்திய மாநிலங்களின் தலைநகர் ஒன்றில் இருந்த தலைமை போலீஸ் அதிகாரி, உடனே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து 13 நாட்கள் துயரம் தெரிவிப்பதாகக் கூறி அலுவலகங்களை மூடிவிட்டு, தலைமறைவாகி விடுங்கள்! தடை உத்தரவை மீற வேண்டாம் என்று அறிவித்தார்."

என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது! போலீஸ் அதிகாரியாக இருந்த பார்ப்பனர் ஒருவர் தமது இனத்துக்கு செய்திருக்கிற 'சேவை' இது. காந்தியார் மறைவுக்கு 13 நாள் துக்கம் அறிவித்ததில்கூட இவர்களின் தற்காப்பும் சுயநலமும் அடங்கியிருக்கிறது என்பது இப்போது புரிகிறதல்லவா?

Thansks..Karuppupayan.

Thursday, August 16, 2007

தஸ்லிமாவை நாடு கடத்தக் கோரி போராட்டம்

சென்னை: வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினை நாடு கடத்தக் கோரி தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மெமோரியல் ஹால் எதிரே ஜமாத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.எம்.பேக்கர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

தஸ்லிமா, முஸ்லீம்களின் உணர்வுகளை காயப்படுத்தியவர். அவர் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது. உடனடியாக அவரை நாடு கடத்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

போராட்டத்தின்போது பேக்கர் பேசுகையில், தஸ்லிமாவை நாடு கடத்தும் வரை முஸ்லீம்கள் போராட்டம் நடத்துவர். முஸ்லீம் பெண்கள் குறித்து தஸ்லிமா கூறியுள்ள கருத்துக்கள் முஸ்லீம் சமுதாயத்தை காயப்படுத்தியவை ஆகும் என்றார் அவர்.
Thanks...Thatstamil

இந்தியன் என்று சொல்வோம் இனவெறி நீங்கி வாழ்வோம்

நன்பர்களே,
தென்காசி சம்பவத்தை இருமதத்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலாக கருதாமல் இரு குழுக்களுக்குள் பழிவாங்கும் மோதலாகவே நான் கருதுகிறேன். இந்துக்களும் , முஸ்லிம்களும் முன்புபோல் மாமன், மச்சான்களாக ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். மற்றும் இருசாமுதாயத்தின் மனகசப்பை நீக்கக்கூடிய இஸ்லாம் ஒரு இனியமார்க்கம், மானுட வசந்தம் போன்ற நிகழ்சிகள் அதிக அளவில் நடக்க வேண்டும்.காவல்துறை முறையான பாதுகாப்பு செய்திருந்தால் தென்காசி சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.

நாம் இந்தியன் என்று சொல்வோம் இனவெறி நீங்கி வாழ்வோம்.
துரைமுருகன்.
தமாம்.

Wednesday, August 15, 2007

தென்காசி கொலை சம்பவம் - உண்மைநிலவரம்.


தென்காசியில் கடந்த டிசம்பர் மாதம் இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமுமுகவின் தென்காசி மைதீன் சேட்கான் மீது கடந்த மார்ச் 2ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மயிரிழையில் மைதீன் சேட்கான் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் தொடர்புடையோர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

இச்சூழ்நிலையில் குமாரன் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் களும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். குமாரபாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் தென்காசியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளியே வந்த முஸ்லிம்களை அடிக்கடி இந்து முன்னணியினர் தாங்கள் அவர்களை கொலை செய்வது உறுதி என மிரட்டி வந்துள்ளனர். இக்கொலை மிரட்டல் குறித்து முஸ்லிம்கள் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரனிடமும், தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனத்திடமும் புகார் செய்தனர். இப்புகார் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சூழ்நிலையில் 14.8.2007 அன்று காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற 10 பேர் டாடா சுமோ காரில் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக சிலர் இரண்டு ஆட்டோக்களில் வந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த இந்து முன்னணியைச் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் கூலைக்கடை மார்க்கெட்டில் உள்ள கன்னிமாரன்கோவிலும், மார்க்கெட்டில் வேறு சில பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்தது. காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு மார்க்கெட் வழியாக திரும்பிக் கொண்டிருந்தவர்களின் ஆட்டோவை ஏற்கனவே திட்டமிட்டபடி தயாராக இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனம் மூலம் மறித்தனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு தயாராக இருந்த மற்ற இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது தாங்கள் வைத்திருந்த அரிவாள்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பஷீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதனிடையே எதிர்தரப்பில் ஓரிருவர் தாங்கள் தற்காப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்கள் மூலம் பதிலடி தந்துள்ளனர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த சுரேந்திரன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோருக்கு வெட்டுக்காயம் விழுந்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நாகூர் மீரான் உயிரிழக்க, மருத்துவமனையில் ஹஸன் கனி (எ) ராஜன் உயிரிழந்துள்ளனர். இந்து முன்னணி தரப்பில் கபிலன், ரவி ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

பாளையங்கோட்டை மருத்துவமனையில் இந்து முன்னணியினரும், ஹை கிரவுண்டு மருத்துவமனையில் மற்றொரு தரப்பும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த பஷீர், நாகூர் மீரான், ஹஸன் கனி ஆகியோரின் ஜனாஸாக்கள் நடுப்பேட்டை கபரஸ்தானில் செவ்வாய் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் தென்காசியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி கோஷ்டி மோதலை தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனனும், தென்காசி காவல் ஆய்வாளர் சந்திரசேகரனும் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அசட்டையாக இருந்ததன் காரணமாக இத்தாக்குதல் நடைபெறுவதற்கும், ஆறு பேர் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் காரணமாக தென்காசியில் பதட்டம் நிலவுவதால் தென்காசி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. தென்காசிக்கு செல்லும் அனைத்தும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Monday, August 13, 2007

சகோதரர் செந்தில் அழகுவிற்கான பதில்களும், கேள்விகளும்..!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்புக்குறித்தான சகோதரர்களுக்கு..

தஸ்லிமா நஸ்ரின் என்ற விபச்சார ஆதரவு எழுத்தருக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சித்தும் கருத்து பரப்பிய சகோதரர் செந்தில் அழகு அவர்களுக்கு என்னால் முடிந்தளவு கீழே விளக்கம் அளித்துள்ளேன். சில இடங்களில் அவரை நோக்கி எழுப்பும் கேள்விகள், விமர்சனங்களை தனி நபர் தாக்குதலாக கருதாமல் அவரின் கூற்றிற்கு எதிரான வாதங்களாகவே கருத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கென்று தனியாக வலைப்பூ இல்லாததினால் இது தொடர்பான விமர்சனங்களை, ஆதரவுகளை, எதிர்ப்புகளை அல்லது எனது விளக்கத்தையும் விட சிறந்த விளக்கத்தை தர விரும்புபவர்கள் அதை வெளிச்சம் (http://velicham 2006.blogspot.com/) வலைப்பூவில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் வெளிச்சம் வலைப்பூ இந்த விவாதத்தினை தொகுத்து ஒரு "மாலை" யாக்கி வருகிறது.

====================================================================

ஹலோ பிரதர். நான் ஒரு இஸ்லாமிய point of view வில் சொல்லவில்லை. நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமிய நோக்கத்தோடு பார்க்கிறீர். நீங்கள் அனைவரும் இஸ்லாம் எனும் மாயையில் உள்ளீர்கள். எப்போது நீங்கள் அதிலிருந்து வெளியே வருகிறீர்களோ அன்று தான் உங்கள் சமுதாயம் முன்னேறும். - செந்தில் அழகு

அன்புள்ள செந்தில் அழகு சகோதரருக்கு..

உங்களுடைய விமர்சனங்களை நான் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்ப்பதாக சொல்லியிருந்தீர்கள். மிக்க நன்றி சகோதரரே! எதையுமே இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அனுக வேண்டும் என்பதுதான் உலகத்தில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் ஆசையும் , பிரார்த்தனையும். அந்த வகையில் உங்களுடைய விமர்சனம் எனக்கு மகிழ்ச்சிதான். என்ன எங்களை நீங்கள் பாராட்டுவதற்கு பயன்படுத்திய இஸ்லாமிய மாயை என்ற சொல் பிரயோகம்தான் சற்று நெருடலாக இருக்கிறது.

நீங்கள் மாயையாக கருதும் எந்தவிதமான குற்றச்சாட்டையும் , நேர்மையாக எங்களுக்கு எடுத்துச் சொன்னால் எங்களால் முடிந்த அளவு உங்களுக்கு விளக்கம் அளிக்கிறோம். எங்களுடைய தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டினால் கூச்சமின்றி ஒத்துக்கொண்டு அதை திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்கிறோம். எங்களின் இந்த நிலைப்பாட்டையே நீங்களும் கையாள வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் உங்களுக்கு விடுக்கும் நிபந்தனை.

நீங்கள் வேண்டிக்கொண்டது போல் இஸ்லாமிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்து தான் நாங்கள் எங்கள் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக குடிமக்களை இப்படி பட்டவர்த்தனமாக இஸ்லாத்தை விட்டு வெளியே வா , அப்பொழுதான் உனக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்று அழைப்பு விடுப்பது எந்த வகையில் மதசார்பற்றதாக கருதுகிறீர்களோ என்று தெரியவில்லை. நம் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கக்கூடிய சிறந்த குடிமகனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.

15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஷரியா சட்டம் இயற்றப்பட்டது. இன்றும் நீங்கள் அதை பின்பற்றினால் உங்களை என்னவென்று சொல்ல. உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்பதா இல்லை உங்களை நினைத்து அழுவதா என்று எனக்கு புரியவில்லை. அம்பேத்கார் 50 வருடங்களுக்கு முன்னர் எழுதிய சட்டத்தையே நாம் திருத்தி, மாற்றி எழுதுகிறோம் ஆனால் நீங்கள் 15 ஆயிரம் வருடங்கள் முன்னர் எழுதிய ஷரியா சட்டங்களை பின்பற்றுவது என்ன முட்டாள்தனம்!! - செந்தில் அழகு

இப்படி கேட்கிற உங்களை நினைத்து சிரிப்பதா ? இல்லை அழுவதா ? என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் இயற்றிய சட்ட வடிவங்களை 50 ஆண்டுகளில் பலமுறை திருத்தி மாற்றி எழுதிவிட்டோம் என்று சொன்னால் அதற்கு என்ன காரணம் ? அம்பேத்கர் என்பவர் ஒரு மனிதர் , அவரால் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து ஒரு 10 அல்லது 20 ஆண்டுகள் முன்னோக்கி மட்டுமே யோசிக்க முடிந்திருக்கிறது. அதற்காக அவருடைய சிந்தனை ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் அவரால் முடிந்த சட்ட வடிவத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அது பாராட்டுக்குறியது. ஆனால், எந்த ஒரு மனிதரின் கருத்தும், சட்ட வடிவமும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் தாக்குப்பிடிக்கும். அதற்கு உதாரணம் தான் பலமுறை இந்திய சட்ட வடிவத்தை நாம் மாற்றியமைத்தது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய சட்டத்தை வடிவமைத்தது மனிதரல்ல , இறைவன். உங்களையும் என்னையும் இன்னும் இந்த உலகத்தை படைத்து அதில் வாழுகிற அனைத்து ஜீவராசிகளையும் படைத்த இறைவன். அந்த இறைவனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விசயங்களை அறிந்து கொள்ளும் ஞானம் இருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பின்னாலும் அல்லது இந்த உலகம் அழியும் நாள் வரை என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலும் இருக்கிறது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட இந்த ஆற்றல்கள் இருப்பவனைத்தான் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து பார்ப்பவர்கள் இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காமல் அவசரகதியாக வெரும் மனித அறிவோடு ஒப்பிட்டுப் பார்ப்பதனால்தான் நமக்கு அதாவது உங்களுக்கு பழமையான சட்ட வடிவமாக இஸ்லாமிய சட்டம் தெரிகிறது.

எந்த ஒரு சித்தாந்தத்தையும் அனுபவப்பூர்வமாக உணர வேண்டும் , உலகில் நடக்கின்ற அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு நாடி ஒவ்வொரு சித்தாந்தத்தையும் பிரச்சனைகளோடு உரசிப்பார்க்க வேண்டும். அந்த சித்தாந்தம் வழங்கும் தீர்வுகள் அந்த நேரத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியவையாக , தற்காலிகமானதாக இருக்கக் கூடாது. நமக்கு பின்னால் 1000 ஆண்டுகள் கடந்து வருபவர்களுக்கும் அது தீர்வாக இருக்க வேண்டும். அப்படி ஒரு தீர்வைதான் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் வழங்கி இருக்கிறது என்று உலகில் வாழுகின்ற முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தையும் , முஸ்லிம்களையும் கருவறுக்க துடிக்கும் சங்க்பரிவார் அமைப்பைச் சேர்ந்த அத்வானி கூட உள்துறை அமைச்சராக இருந்த பொழுது கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார். இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் குறிப்பிடும் பழமையான இஸ்லாமிய சட்டம் சொல்லி விட்டது. இஸ்லாத்தை வெறுக்கும் அத்வானி கூட இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று சொன்னது , மனிதன் பல இடங்களிலும் முட்டி மோதி கடைசியில் இங்கு வந்து தான் நிற்பான் என்பதைத்தானே காட்டுகிறது.

முன்பு மனிதன் ஒரு வேளையும் இல்லாமல் இருந்தான். அப்போது 5 வேளைகள் தொழுதான். ஆனால் இப்போது உள்ள வேளைகளிலும் 5 வேளை தொழ வேண்டும் என்றீர்கள் என்றால் எந்த சுவரில் சென்று முட்டிக் கொள்வது?? - செந்தில் அழகு

பல்வேறு விதமான வேலை பளுக்களுக்கு இடையேவும், கடையை மூடிவிட்டு , அலுவலக வேளையை நிறுத்தி விட்டு 5 வேளை தொழுகைக்காக பள்ளிவாசலை நோக்கிச் செல்லும் பழக்கம் சவுதி அரேபியாவில் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சவுதி அரேபியா பொருளாதார ரீதியாக எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லையே? எந்த நாட்டிடமும் கையேந்தி கடன் வாங்கவில்லையே. இன்னும் சொல்லப்போனால் பல நாடுகளுக்கு வாரி கொடுத்து சுபிட்சமாகத்தானே இருக்கிறார்கள் அந்த அரபுக்கள்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள் , இதில் 5 வேளை தொழுகைக்காக முஸ்லிம்கள் அதிகபட்சமாக செலவிடுவது வெறும் 30 நிமிடங்கள் தான். இதை மரணத்திற்கு பின்னால் ஏற்படக்கூடிய வாழ்விற்கான சேகரிப்பாக முஸ்லிம்களாகிய நாங்கள் கருதுகிறோம். இறைவன் நாடினால் இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அப்படி புரிந்து கொள்ளாமல் நீங்கள் ஏதேனும் சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு இஸ்லாமோ, முஸ்லிம்களோ நிச்சயமாக பொருப்பேற்க முடியாது.

அரிசி முழுமையாக வெந்து குழைந்து இருந்தால் நன்றாக இருக்காது. அரை வேக்காடுதான் நன்றாக இருக்கும் :-) !!! - செந்தில் அழகு

Promise பேஸ்ட்லதான் பல்லு வெளக்குவாரு , True பிஸ்கட்தான் சாப்பிடுவாரு , சத்யம் தியேட்டர்லதான் படம் கூட பாப்பாரு , ஆனால் வாயை திறந்த புழுகு மூட்டையா அவிழ்த்து கொட்டுவாரு.. என்று அரசியல்வாதி ஒருவரை குறித்து என் நண்பர் ஒருவர் சமீபத்தில் கமெண்ட் அடித்தார். அரைவேக்காடு குறித்து நீங்கள் சொன்ன விளக்கத்தை பார்த்தவுடன் ஏனோ எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது.

சராசரியாக சாப்பிடும் பக்குவத்தில் இருக்கும் சாதத்தை சரியாக அல்லது முழுமையாக வெந்திருக்கிறது என்றுதான் நடைமுறையில் அனைவரும் சொல்லி வருகிறார்கள். சாப்பிடும் பக்குவத்திற்கு குறைவாக இருந்தால் அதை அரைவேக்காடு என்றும் , சாப்பிடும் பக்குவத்திற்கு அதிகமாக வெந்திருந்தால் அதை குழைந்து விட்டது என்றும் தான் நடைமுறையில் அதிகமானோர் சொல்லி வருகிறார்கள். நீங்கள் ஏதோ விவரமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு விசயமே இல்லாமல் எழுதியுள்ளீர்கள். எது எப்படி இருந்தாலும் நான் உங்களை தனிப்பட்ட முறையில் அரைவேக்காடு என்று சொல்ல வரவில்லை. அப்படி நீங்கள் புரிந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

நான் மறுபடியும் கூறிக்கொள்கிறேன். நான் முதலில் சமய மார்க்கமாய் எழுதவில்லை. இதை சமய மார்க்கமாய் திசை திருப்பியது பெருமதிப்புக்குறிய தாங்கள் தான். நான் இன்றும் சொல்வேன், இந்தியா அடைக்கலம் தேடி வந்தவரை ஒருப்போதும் ஏமாத்துவதில்லை, நீங்கள் என்னதான் கத்தினாலும் ஆர்ப்பாட்டம் செய்தாலும் தஸ்லீமா நஸ்ரினை இந்தியா வெளியேற்றம் செய்யாது!! - செந்தில் அழகு

அடைக்கலம் தேடி வருபவர்களை இந்தியா ஒருபோதும் ஏமாத்தாது என்றால் அனைவருக்கும் இது பொருந்துமா என்பதை நீங்கள் விளக்க வேண்டும். ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு நாம் எந்த அளவு கோலை பயன்படுத்துகிறோம் ? முஸ்லிம்களுடைய உணர்வுகளை கேலி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்ற அளவுகோலா ? அப்படிச் சொன்னால் மதச்சார்பற்ற நாடு என்று சொல்ல முடியாதே ? அதுபோல் இந்தியாவில் குற்றம் புரிந்துவிட்டு இந்தியாவிலிருந்தும் வெளியேறி பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் கோருவதில் நியாயம் இருக்கிறதா என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும்.

மதசார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மதத்தினர் புனிதமாக கருதுவதை இழிவு படுத்தும் ஒரு விபச்சாரிக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயமாக இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று சொல்வதற்கு எள் முனையளவும் தகுதி இல்லை. பிற மதத்தினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் வணக்க வழிபாடுகள் நமக்கு பிடிக்கிறதோ , பிடிக்கலையோ அது அவர்கள் வழி என்று கருதி அவர்களோடு சுமூகமாக வாழ வேண்டும் என்றும் , ஆட்சி பொருப்பில் இருந்தாலும் மற்ற சமயத்தினரை சமமாக நடத்த வேண்டும் என்றும் சொல்லும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கும் , அதை சரி காணும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. (இதை தனிநபர் தாக்குதலாக கருத வேண்டாம்)

முஸ்லிம்களாகிய நாங்கள் என்னதான் எங்களின் எதிர்ப்பை தெரிவித்தாலும் பங்களாதேஷை சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் என்ற விபச்சார புரோக்கரை இந்தியா வெளியேற்றாது என்ற பிரதமர் தொனியிலான பிதற்றல் கண்டு நாங்கள் உஷ்னமடைய மாட்டோம்.

30 வருடங்களுக்கு மேலாக எங்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பு , மற்றும் அரசு அதிகாரங்களில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம் , தந்து விட்டார்களா எங்கள் மதிப்பிற்குறிய மாண்புமிகுக்கள் ?

மது போன்ற போதை பொருட்களை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று மூச்சு முட்ட பிரச்சாரம் செய்து அரசின் செவிகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள் முஸ்லிம் தலைவர்களும் , அறிஞர்களும். தடையா செய்து விட்டார்கள் எங்கள் மதிப்பிற்குறிய மாண்புமிகுக்கள் ?

வட்டி அடிப்படையிலான கொடுக்கல் , வாங்கல்களை நாம் செய்யக்கூடாது என்று பலமுறை முஸ்லிம்கள் அரசிற்கு எடுத்துச் சொல்லி விட்டார்கள். அதை நிறுத்தியா விட்டார்கள் எங்கள் மதிப்பிற்குறிய மாண்புமிகுக்கள் ?

குஜராத் போன்ற பகுதிகளிலே அப்பாவி முஸ்லிம்களை கொன்றும் , முஸ்லிம் பெண்களை கற்பழித்தும் கொலை செய்த மாபாவிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று இந்திய முஸ்லிம்களாகிய நாங்களும் , நியாயமான சிந்தனை கொண்டவர்களும் சேர்ந்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களுக்கு நீதி வழங்கி விட்டார்களா இந்த மானங்கெட்ட மாண்புமிகுக்கள் ?

இதையெல்லாம் செய்யாத , வழங்காத மானங்கெட்ட ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் தஸ்லிமா நஸ்ரின் என்ற விபச்சார புரோக்கரை வெளியேற்றவா போகிறார்கள். அதுவும் உங்களைப் போன்ற விசிறிகள் வேறு அந்த விபச்சார புரோக்கருக்கு!

இருந்தாலும் நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.

ஒரு தீமை நடக்கக் கண்டால் அதை உன் கையால் தடுத்து நிறுத்தி விடு

அதற்கு நீ சக்தி பெறாவிட்டால் உன் நாவால் தடுத்து விடு

அதற்கும் நீ சக்தி பெறாவிட்டால் அதை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடு.

என்பது இஸ்லாமிய சட்ட வடிவங்களில் ஒன்று. இதில் முதல் நிலைக்கும் , மூன்றாம் நிலைக்கும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தகுதி பெற மாட்டார்கள் என்பதே என் கருத்து. அதனால் தான் (ஆர்ப்பாட்டம் , தர்ணா , அறப்போராட்டம் போன்ற) இரண்டாம் நிலையை பெரும்பான்மையான முஸ்லிம்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற போரட்டங்களால் அதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் தங்களது கோரிக்கையை முஸ்லிம்கள் வென்றும் இருக்கிறார்கள்.

ஆகவே அவளை எதிர்ப்போம்,

எதிர்ப்போம்,

எதிர்த்துக்கொண்டே இருப்போம்.

அதை எந்த கொம்பனும் தடுக்க இயலாது.

ஏனெனில் என் தேசமாகிய இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு.
--------------------------------------------------------------
ஜெய் ஹிந்துஸ்தான்.
அபிவிருத்தி.

தஸ்லீமா நஸ்ரினை இந்தியா வெளியேற்றாது - செந்தில் அழகு.

ஹலோ பிரதர். நான் ஒரு இஸ்லாமிய point of view வில் சொல்லவில்லை. நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமிய நோக்கத்தோடு பார்க்கிறீர். நீங்கள் அனைவரும் இஸ்லாம் எனும் மாயையில் உள்ளீர்கள். எப்போது நீங்கள் அதிலிருந்து வெளியே வருகிறீர்களோ அன்று தான் உங்கள் சமுதாயம் முன்னேறும்.

15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஷரியா சட்டம் இயற்றப் பட்டது. இன்றும் நீங்கள் அதை பின்பற்றினால் உங்களை என்னவென்று சொல்ல. உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்பதா இல்லை உங்களை நினைத்து அழுவதா என்று எனக்கு புரியவில்லை.

அம்பேத்கார் 50 வருடங்களுக்கு முன்னர் எழுதிய சட்டத்தையே நாம் திருத்தி, மாற்றி எழுதுகிறோம் ஆனால் நீங்கள் 15 ஆயிரம் வருடங்கள் முன்னர் எழுதிய ஷரியா சட்டங்களை பின்பற்றுவது என்ன முட்டாள்தனம்!!

முன்பு மனிதன் ஒரு வேளையும் இல்லாமல் இருந்தான். அப்போது 5 வேளைகள் தொழுதான். ஆனால் இப்போது உள்ள வேளைகளிலும் 5 வேளை தொழ வேண்டும் என்றீர்கள் என்றால் எந்த சுவரில் சென்று முட்டிக் கொள்வது??

// முஸ்லிம்களை நன்கு தெரிந்தவர்கள் அரைவேக்காடுகள் என்றுதான் சொல்வார்கள். //

அரிசி முழுமையாக வெந்து குழைந்து இருந்தால் நன்றாக இருக்காது. அரை வேக்காடுதான் நன்றாக இருக்கும் :-‍) !!!

நான் மறுபடியும் கூறிக்கொள்கிறேன். நான் முதலில் சமய மார்க்கமாய் எழுதவில்லை. இதை சமய மார்க்கமாய் திசை திருப்பியது பெருமதிப்புக்குறிய தாங்கள் தான். நான் இன்றும் சொல்வேன், இந்தியா அடைக்கலம் தேடி வந்தவரை ஒருப்போதும் ஏமாத்துவதில்லை, நீங்கள் என்னதான் கத்தினாலும் ஆர்ப்பாட்டம் செய்தாலும் தஸ்லீமா நஸ்ரீனை இந்தியா வெளியேற்றம் செய்யாது !!

செந்தில் அழகு.

தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும்

உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் பற்றியும், திருகுர்ஆனை பற்றியும், இஸ்லாமிய சட்டங்கள் பற்றியும் முழுமையாக அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்து வருகின்ற தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். பங்களாதேசத்திம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல கோடி முஸ்லிம்களின் எதிர்கின்ற தஸ்லிமாவை இந்திய அரசு இங்கே தங்க அனுமதித்தது மாபெரும் தவறு. அரசியல் காரணங்களுக்காக ஒரு வெளிநாட்டவரை தங்க அனுமதித்தால் அதில் தவறு காணமுடியாது. உதாரணத்திற்கு தலாய்லாமா போன்றவர்களை சொல்லாலாம். ஆனால் ஒரு மதத்திற்க்கு எதிராக பெரும் எதிர்ப்பில் உள்ள ஒருவரை இந்தியாவில் தங்க அனுமதித்தது தவறு. தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் போன்ற இயக்கங்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளது. இது போல் மற்ற சமுதாய இயஙக்கங்களான தமுமுக, முஸ்லீம்லீக், தேசியலீக் போன்றவைகளும் போராட முன்வரவேண்டும். நாம் எந்த அளவுக்கு போராட்டத்தை வலுபடுத்துகிறோமோ அதுதான் தஸ்லிமாவை வெளிடீயற்ற அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.
BY Hassan Basha...Madurai.

Sunday, August 12, 2007

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

தஸ்லிமா நஸ்ரின் என்பவள் முஸ்லிம் விரோத எழுத்தாளர் என்பது உலகமே அறிந்த ஒன்று. அதையே தெரியாத அல்லது தெரிந்தும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் இஸ்லாம் பெண்ணடிமைத்தனமான மார்க்கம் என்று சொல்வது கேலிக்குறியது. இஸ்லாம் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் மேலாக மதிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவாக எழுதிய தஸ்லிமா நஸ்ரின் என்பவளை முஸ்லிம் விரோத எழுத்தாளர் இல்லை என்று சொல்பவர்களை முஸ்லிம்களை நன்கு தெரிந்தவர்கள் அரைவேக்காடுகள் என்றுதான் சொல்வார்கள்.

இந்த உலகில் மனித சமுதாயம் பல்வேறுபட்ட சுதந்திரத்திற்காக போராடியிருக்கிறது. இந்த தஸ்லிமா நஸ்ரின் என்பவள் மட்டும் தான் கற்பப்பை சுதந்திரம் கேட்டு கதை எழுதி போராடியவள். ஒரு கருத்தை/கொள்கையை ஒருவர் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்தால் குறைந்த பட்சம் அதை அவர்கள் தனது சொந்த வாழ்வில் நடைமுறை படுத்தத்தயாராக இருக்க வேண்டும்.

அனைத்து மதத்தையும் சேர்ந்த பெரும்பான்மையான மனித சமுதாயம் திருமண உறவை சரி காண்கிறது, அதை நடைமுறை படுத்தி மகிழ்ச்சியும் அடைந்து வருகிறது. தஸ்லிமா நஸ்ரின் என்பவள் இதை கூடாது என்கிறாள், பெண்கள் தான் விரும்பிய எத்தனை ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்கிறாள். இதைத்தான் அவள் கற்பப்பை சுதந்திரம் என்கிறாள். இதை ஆதரித்து கருத்து சொல்பவர்கள் தங்களுடன் பிறந்த சகோதரிகளுக்கு இதை கற்பனை செய்து பார்ப்பார்களா? தங்களால் பெறப்பட்ட மகளுக்கு இதை கற்பனை செய்து பார்ப்பார்களா? நிச்சயமாக செய்ய மாட்டார்கள். அவர்களால் இதை செய்யவும் முடியாது.

பிறகு ஏன் இவர்கள் தஸ்லிமா நஸ்ரின் என்ற ஒரு விபச்சாரியை ஆதரிக்கிறார்கள்? ஒரே காரணம்தான் இருக்கிறது. ஏனெனில் முஸ்லிம்கள் அவளை எதிர்க்கிறார்கள், ஆகையால் நாம் அவளை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு குருட்டு புத்திதான். இவர்கள் தெளிவாக சிந்திப்பார்களேயானால் நிச்சயமாக அவளை ஆதரிக்க மாட்டார்கள். அவளை ஆதரிப்பதற்கு நம் இந்திய கலாச்சாரத்திலும் கூட எந்த முகாந்திரமும் கிடையாது.

மிரட்டல்கள் பயனளிக்காது.

ஒருவர் சமூக சீர்கேட்டிற்கு அழைப்பு விடுக்கும் பொழுது அது எந்தளவுக்கு தவறானது, கேவலமானது என்பதை வரிக்கு வரி அறிவுப்பூர்வமாக விளக்குவது தான் அறிவு ஜீவிகளின் கடமையாக இருக்க வேண்டும். அதை விடுத்து மிரட்டல் விடுவது என்பது சமூக சீர்கேட்டிற்கு அழைப்பு விடுத்தவளுக்கு வலு சேர்க்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற மிரட்டல்கள் உணர்ச்சிப்பூர்வமாக சிந்திப்பவர்களாலேயே செய்யப்படுகிறது.

என்னவோ அவள் மிகப்பெரிய சீர்திருத்த கருத்தை சொல்லிவிட்டது போலும் அதற்கு எதிராக முஸ்லிம்கள் கோபப்படுவது போன்றும் இன்றைய மீடியாக்கள் செய்தி பரப்பி தனது விசுவாசத்தை யாருக்குத்தான் காட்டுகிறார்களோ தெரியவில்லை.

அதே சமயம், என்னதான் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக சிந்தித்தாலும், அதை செயல்படுத்தினாலும் அதிலிருந்தும் சில தகவல்களை புரிந்து கொள்ளலாம். எங்களுடைய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது களங்கம் சுமத்த நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிர்ப்போம் என்று உலக முஸ்லிம்கள் பிரகடனப்படுத்துவதன் மூலம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக உலக முஸ்லிம்களின் உள்ளத்தில் ஒப்பற்ற தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள் என்பதுதான். இந்தப் பெருமை உலகில் எந்த தலைவனுக்கும் கிடையவே கிடையாது என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்பு.

தஸ்லிமாவைப்பற்றி முஸ்லிம்களுக்கு என்ன தெரியும்? தஸ்லிமாவை இந்தியாவை விட்டு வெளியேற்ற சொல்ல நீங்கள் யார்? என்றெல்லாம் சிலர் கேட்டுள்ளனர். அப்படி கேட்டவர்கள் தெரிந்து கொள்ளுங்கள், தஸ்லிமாவைப்பற்றிய அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. அவள் ஒரு விபச்சாரி என்பதையும், உலகில் வாழ்கிற அனைத்து பெண்களையும் விபச்சாரம் செய்ய தூண்டுபவள் என்பதையும் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். மேலும். உலக முஸ்லிம்களின் தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தவள் என்பதையும் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். அது ஒன்று போதும் நாங்கள் அந்த விபச்சாரியை எதிர்ப்பதற்கு.

இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்ல நீங்கள் யார் என்று கேட்டவர்கள் நன்றாக கண்ணை திறந்து நாங்கள் எழுதியிருப்பதை படித்துக்கொள்ளுங்கள். அவளை இந்தியாவை விட்டும் வெளியேற்றச் சொல்லும் நாங்கள் இந்தியர்கள். அடிமை இந்தியாவை சுதந்திர பாதைக்கு இட்டுச்செல்வதற்கு முதல் வித்தை விதைத்த இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் நாங்கள். இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால், தேச விடுதலைக்கு போராடியவர்களை வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை நாங்கள்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையெனில் ஒரு சமுதாயத்தின் உணர்வுகளோடு விளையாடிய தஸ்லிமா நஸ்ரின் என்ற ஒரு விபச்சாரிக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக? அப்படி என்றால் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் உஸாமா பின் லாடனுக்கு இந்திய அரசு அடைக்கலம் தருமா? இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஒரு விபச்சார ஆதரவு எழுத்தருக்கு அடைக்கலம் கொடுப்பது எந்த வகையில் மதச்சார்பற்றதாக இருக்க முடியும்? நாடு மதச் சார்பற்ற நாடுதான், ஆனால் தலைவர்கள் மதச்சார்பு உடையவர்கள், நாடு ஜனநாயக நாடுதான், ஆனால் தலைவர்கள் போலி ஜனநாயகவாதிகள் என்று நாங்கள் புரிந்து கொள்ளட்டுமா?

இப்படி பலவாறும் விமர்சிக்கும் இவர்களுடைய பொது அறிவு எப்படி இருக்கிறது தெரியுமா? துபை ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லுமளவிற்கு தான் அவர்களுடைய பொது அறிவு இருக்கிறது. துபை ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால், அங்கே மதுவிற்கு அனுமதி இருந்திருக்காது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் மத்திய கிழக்கு நாடுகளின் சமுதாய சீர்கேட்டிற்கு ஊற்றுக்கண்ணாக துபை (ஐக்கிய அரபு அமீரகம்) விளங்கி வருகிறது என்பதுதான் உண்மை.

இறுதியாக இவர்களை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் இஸ்லாத்தை விமர்சிக்க உங்களுடைய சொந்த பாதங்களை பயன்படுத்தி நடந்து வர முயற்சி செய்யுங்கள். ஒரு விபச்சாரியின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டுதான் வர வேண்டுமா என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.

நன்றி
அபிவிருத்தி

12-Aug-2007

நன்பர்களே;
தஸ்லிமா நஸ்ரின் அல்ல மற்ற யார் வண்முறையால் தாக்கப்பட்டாலும் அது வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் நமது இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சிதைக்கக்ககூடிய வகையில் எந்த பெண்ணும் யாருடன் வேண்டுமானாலும் திருமணபந்தம் இல்லாமல் கருவை சுமக்கலாம் என்ற நச்சுக்கருத்தை பரப்பும் தஸ்லிமாவை கண்டிக்காமல் இருக்கமுடியாது. இந்தியாவில் இருக்கிற பிரச்சனையில் தஸ்லிமாவை இங்கே தங்கவைத்து பிரச்சனையை வளர்க்க வேண்டுமா?. அவரை இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதுதான் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த விடயத்தில் நாம் மதம் பார்க்காமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தஸ்லிமா ஒரு இந்திய குடிமகன் அல்ல. அவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முஹமது சலீம்.சென்னை.

Saturday, August 11, 2007

சகோதரர் பெருமாள் அவர்களே தஸ்லிமாவை பற்றி என்க்கு தெரிந்ததை விட உங்களுக்கு கூட தெரிந்தது சந்தோசமே.அவர் இஸ்லாத்தை விமர்சிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தூக்கிபிடிக்கும் உங்களை போன்றோரை என்ன வென்று சொல்வது. பெண்களின் கர்பஅறையில் யாருடைய விந்தை வேண்டுமானாலும் விட்டு கொள்ளலாம் என்ற தஸ்லிமாவின் கருத்தை தாங்கள் ஏற்க்க தயாரா? அல்லது செயல்படுத்த முன்வருவீர்காளா?
ஜாபர் அலி.
துபை.

வந்துட்டாங்கய்யா!! வந்துட்டாங்கய்யா!! தஸ்லிமாவைப் பற்றி தங்களுக்கென்ன தெரியும்? எப்படி நீங்கள் தஸ்லிமாவை இந்திய அரசு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லுகிறீர்? இந்தியா ஒரு மதச் சார்பற்ற அரசு. எனவே அது மதத்தின் சார்பில் யாரையும் வெளியேற்ற முடியாது, தெரிந்து கொள்ளும். நீங்கள் இஸ்லாமிய நாட்டில் (துபை) இருப்பதால் நீங்கள் அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறீர். சற்று இந்தியாவின் கண்ணோட்டத்தில் பாருமய்யா!!
Senthil alagu perumail..

வெளிச்சம். தஸ்லீமா நஸ்ரின் முஸ்லீம் விரோத எழுத்தாளர் அல்ல. மேலும் அவர் இஸ்லாத்துக்கும் எதிரானவர் அல்ல. அதே சமயம் புனித குர்ரானில் உள்ள பெண்ணடிமைத்தனம் - ஆணாதிக்க சிந்தனை மற்றும் பழமைவாத கருத்துக்கள் இன்றைய சமூகத்துக்கு ஒத்துவராதவை என்பதையும். அத்தகைய கருத்துக்களில் இசுலாமிய சமூகத்தை அடிமைத்தனத்தில் கருத்து ரீதியாக முகிழ்த்து வைத்திருப்பதற்கு எதிராக வெளிச்சம் பாய்ச்சி வருகிறார் தஸ்லீமா நஸ்ரின். இதற்கு எதிராக மத அடிப்படைவாதிகள் அவருக்கு பங்களாதேசில் இருந்து இந்தியா வரை கொலை மிரட்டல் விடுத்து தங்களது பழமைவாத தனத்தை காட்டி வருகிறார்கள். எனவே முஸ்லீம்கள் உண்மையில் எதிர்க்க வேண்டியது அந்த மத அடிப்படைவாதிகளைத்தானே ஒழிய தஸ்லீமா நஸ்ரினை அல்ல.
சந்திப்பு

வாசகர் வெளிச்சம்.

இஸ்லாத்தை மிகவும் கேவலமாக விமர்சித்து வந்த இந்த தஸ்லிமாவை வன்முறையை கையில் எடுத்து தாக்கியது தவறு என்றாலும் அந்த முஸ்லிம் எம்.எல்.எக்களில் உணர்வு போற்றத்தக்கது. ஆனால் கருத்தை கருத்தால் வென்றிருந்தால் மிகவும் பாராட்டியிருக்கலாம். இது போன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசுதான் பொருப்பேற்க்க வேண்டும். உலகமே எதிர்க்க கூடிய ஒரு கழிசடை எழுத்தாளரை இந்தியாவில் தங்க அனுமதித்தது அரசின் தவறே.இனியாவது தஸ்லிமா இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவாரா பார்பபோம்??

ஜாபர் அலி.
துபை.

முஸ்லிம் விரோத எழுத்தாளர் தஸ்லீமா மீது எம்எல்ஏக்கள் தாக்குதல்


ஏகனின் திருப்பெயரால்..
வங்கதேச எழுத்தாளரும் தனது எழுத்துக்களால் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானவருமான தஸ்லீமா நஸ்'ரீன் தாக்கப்பட்டார்.

ஹைதராபாத் பிரஸ் கிளப்பில் இந்தத் தாக்குதல் நடந்தது. அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திகாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியைச் சேர்ந்த 3எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து தஸ்லிமாவைத் தாக்கினர்.

பத்திரிக்கையாளர்களை தஸ்லீமா சந்திக்க இருந்த நிலையில் 3 எம்எல்ஏக்கள் தலைமையில் அவரை எதிர்த்து கோஷமிட்டபடி வந்த அவர்கள் தாக்கினர். பூச்செண்டுஇ பூத் தொட்டி என கையில் கிடைத்தை எடுத்து அவர் மீது வீசினர். இதில் அவர் காயமடைந்தார்.

இந் நிலையில் அந்த 3 எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாம் குறித்தும்இ பெண்ணுரிமை குறித்தும்இ செக்ஸ் குறித்தும் பல சர்ச்சைக்குரிய புத்தகங்களை எழுதியுள்ளவர் தஸ்லீமா.

அவருக்கு எதிராக வங்கதேசத்தில் 'பத்வா' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இந்தியாவில் குடியேறி வசித்து வருகிறார்.

Thursday, August 09, 2007

இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் அழிக்க வேண்டும்


அமெரிக்கா மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமெனில் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டு போட்டுச் சுவடின்றி அழிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் பிரமுகர் டாம் டான்க்ரெடோ என்பவர் கூறியுள்ளார்.

அமெரிக்க செனட்டில் கொலரோடா மாநிலப் பிரதிநிதியாக இருக்கும் இவர் நேற்று (3/8/2007) AFP நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இவர் அமெரிக்கா மீதான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டுமழை பொழிந்து அழிப்பது தான் தமக்குச் சரியாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறு இவர் கூறியுள்ளது உலக முஸ்லிம்களிடையேயும் அமெரிக்க அரசின் உயர் அலுவலர்களிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. டாம் டான்க்ரடோவின் இந்தப் பேட்டி வெளியாகிய சில மணிநேரங்களிலேயே அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கும் டான்க்ரெடோவின் இந்தப் பேச்சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது என்றும் பைத்தியக்காரத்தனமான உளறல் (reprehensible and absolutely crazy) என்றும் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் போரில் மிகச் சிறந்த ஒத்துழைப்பை நல்கி வரும் மத்தியகிழக்கு நாடுகளையும் பல முஸ்லிம் நாடுகளையும் அமெரிக்கா ஒருபோதும் பகைத்துக் கொள்ளவிரும்பாது என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க இஸ்லாமியக் குழுமத்தின் (Council for American Islamic Relations) செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹூப்பர், இப்படிப்பட்ட பொறுப்பற்ற ரவுடித்தனமான பேச்சுகள் பொது வாழ்வில் போட்டியிட விரும்பும் எவருக்கும் பொருந்தாதவை என்று தெரிவித்தார். இது குறித்து முறையான புகார்கள் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கராவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு இனி முஸ்லிம் நாடுகள் வழங்கி வரும் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Wednesday, August 08, 2007

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள்...

ஏகனின் திருப்பெயாரால்...
தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை.இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு.மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிப்பதற்காக நடந்த நாட்டு பிரிவினைக்குப் பின், இந்தியாவுடனே இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு கூட,மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும்,இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பலருடைய தியாகம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள்.அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார்.
அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்புப் பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.

"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா'க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா' அறிவிக்கப்பட்டது.


சையத் அஹ்மத் ஷகீத் (1831) மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா' இந்த படைக்கு தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.


மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர்.
தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான "அவுத்'தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், "என் முன்னால்ரத்த ஆறு ஓடியதைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்'' என்றுஎழுதினார்.
Thansk..maraikayar

Tuesday, August 07, 2007

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு






Bismillah...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு 05.08.2007 ஞாயிற்றுக்கிழமையன்று திண்டுக்கல் சாத்தங்குளம் நாடார் உறவின் முறை மஹாலில் மஹாலில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவிற்கு மாநிலத் தலைவர் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள கிளைகளிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலுடன் இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானங்கள்:

இட ஒதுக்கீடு தொடர்பாக:
1. கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகின்றது. இதற்கென பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. அதன் ஒரு கட்டமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் கடந்த ஜூலை 4 அன்று மாபெரும் சிறை நிரப்புப் போராட்டத்தை நடத்தியது. இதற்குப் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாததை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதே நிலை தொடருமானால் வெகு விரைவில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துவது எனவும் அதற்கான தேதியை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலத் தலைமைக்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


2. ஜூலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை நிரப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினர் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் இப்பொதுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


3. தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அனைத்தும் கடந்த தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தன. தற்போது இந்தக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசாங்க ரீதியில் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், மாநாடுகள் நடத்தி முஸ்லிம்களை ஏமாற்றி வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நிலை நீடித்தால் இந்தக் கட்சிகளை முஸ்லிம்கள் வரும் தேர்தலில் புறக்கணிக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றது.


4. முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு அளித்த ஆந்திர மாநில காங்கிரஸ் அரசாங்கத்தையும், முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களையும் இப்பொதுக்குழு பாராட்டுகின்றது.


பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக:
5. கோவை குண்டு வெடிப்பு வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு போன்ற வழக்குகள் அனைத்தும் விசாரணை முடிந்து தீர்ப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பான வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் இருந்து வருவதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.



15 ஆண்டுகளாக நீடித்து வரும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு விசாரணையை விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.


6. பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும், பாபர் மஸ்ஜித் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரியும், மஸ்ஜிதை இடித்த சங்பரிவார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.


மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக:
5. ஆந்திரா மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களே குற்றவாளிகள் என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கோயிலில் குண்டு வெடித்தாலும், பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நடந்தாலும் முஸ்லிம்கள் மீதே குற்றம் சுமத்தும் போக்கைக் கைவிட்டு, பள்ளிவாசல் குண்டு வெடிப்பு தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று ஆந்திர அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக:
6. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதானி உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


7. எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கும், தண்டனைக் காலத்தை விட அதிகமான காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்களுக்குக் கூட வேலை வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு, சுய தொழில் தொடங்கும் வகையில் கணிசமான நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


8. கோவை குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சொத்துச் சேதம், உயிரிழப்பு ஆகியவற்றுக்கு காவல்துறை அதிகாரிகளின் பாரபட்சமான போக்கே காரணம் என்று இப்பொதுக்குழு கருதுகின்றது. கலவரங்களுக்கும் உயிர்ச் சேதங்களுக்கும் காரணமான இத்தகைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.


9. குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து வெளியாகும் நிலையில், குண்டு வெடிப்புக்குத் தொடர்பில்லாத, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணங்குடி அனீபா அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.


மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக:
10. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கியது போன்று, 1993ல் மும்பை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 900 பேரைக் கொன்று குவிப்பதற்குக் காரணமானவர்கள் என்று கிருஷ்ணா கமிஷனால் கண்டறியப்பட்ட 31 அதிகாரிகளுக்கும், மற்றும் கலவரத்திற்குக் காரணமான சங்பரிவார்களுக்கும் உரிய தண்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் மேற்படி குற்றவாளிகளுக்கு உடனடியாக அதிகப்பட்சத் தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


துணை ஜனாதிபதி தேர்தல்
11. துணை ஜனாதிபதி தேர்தலில் டாக்டர் ஹமீத் அன்சாரி அவர்களை வேட்பாளராக அறிவித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை இப்பொதுக்குழு பாராட்டுகிறது.


இராக் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் தொடர்பாக:
13. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இராக்கை ஆக்கிரமித்து, அங்குள்ள அப்பாவி மக்களை அமெரிக்க, பிரிட்டானிய படைகள் அன்றாடம் கொன்று குவித்து வருகின்றது. அதன் உச்சக்கட்டமாக முஸ்லிம்களின் பெருநாளன்று இராக் அதிபர் சதாம் ஹுசைனைப் படுகொலை செய்தது. சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் நடத்தி வரும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை உடனே நிறுத்திக் கொள்வதுடன், உடனடியாக இந்தப் படைகள் இராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


14. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அங்குள்ள அப்பாவி மக்களை தினந்தோறும் கொன்று குவித்து வரும் மனித குல விரோதியான சீயோனிஸ இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக அரபு நாடுகள் ஒன்றிணைந்து போராடி, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


ஆஸ்திரேலியாவின் மனித உரிமை மீறலைக் கண்டித்து:
15. பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் எந்தக் குற்றமும் செய்யாத இந்திய டாக்டர் ஹனீஃப் அவர்களை பயங்கரவாத வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலிய அரசாங்கம் கைது செய்தது. டாக்டர் ஹனீஃப் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய பின்னரும் அவரது விசாவை ரத்து செய்து, தீவிரவாதி போல் நடத்திய ஆஸ்திரேலிய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுயமயாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்

Bismillah...
கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.

மானத்தோடும், மயாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.

எனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம். இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.

முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர். எந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.

தம்மையும் கூட வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சக்கை செய்து சென்று விட்டார்கள்.''எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்'' என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் ''நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு'' என்றார்கள்.
நூல்: புகா 4001, 5147
நான் யரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ''இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்'' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ''நான் யரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன்.
நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். ''மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ''எந்த மனிதரும் எந்த மனிதன் காலிலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உயது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தங்கள் அபிமானிகளால் இது போன்ற மயாதை தங்களுக்குச் செய்யப்படும் போது அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம். வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காயம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.

''எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே'' என்று மக்களுக்குத் தெயும் வகையில் இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்: அஹ்மத்: 7054
எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்கள்: அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449
யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சக்கை செய்தனர்.
நூல்: புகா 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகா 1330, 1390, 4441
பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் நபிகள் நாயகம் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசக்கப்படுவதில்லை. அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை. மனிதன் சுய மயாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய நபிகள் நாயகம் அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமயாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.
சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவன் சிலைகளுக்கு இன்று மாலை மயாதை செய்து தங்கள் சுயமயாதையை இழப்பதைக் காண்கிறோம். தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம்.
இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமயாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.
நபிகள் நாயகம் அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்குச் சிலை வடிக்கவில்லை.
அவர்களின் சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.
அவர்களுக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.
அவர்களின் அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.
எந்த முஸ்லிமுடைய சுயமயாதைக்கும் அவர்களால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை. காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மயாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ''அமருங்கள்!'' என்றனர். ''தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதி 2769 அபூதாவூத் 4552
''உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்'' என்பதே இதற்குக் காரணம். நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ''பாரசீக, ரோமாபு மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 624
யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு. அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மயாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது ''நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது'' என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.
தமக்கு மயாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்தார்கள்.
தமக்காக நிற்பதையும், குனிவதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதால் தான் உண்மையான முஸ்லிம்கள் பெற்ற தாய் உள்ளிட்ட எவரது காலிலும் விழுவதில்லை. எந்த முஸ்லிம் பெண்ணும் கணவனின் காலில் விழுந்து கும்பிடுவதில்லை. எந்தத் தலைவருக்கும் சிலை வடித்து அவர்களை வழிபடுவதுமில்லை. . எனவே மனிதனின் சுயமயாதையை இஸ்லாம் பேணுமளவுக்கு எந்த இஸமும் பேணியதில்லை.
சுயமயாதைக்காக இயக்கம் கண்டவர்கள் கூட தமது தலைவருக்கு சிலை வடித்து மாலை அணிவித்து மயாதை செய்கிறார்கள். கற்சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை எனக் கூறி பகுத்தறிவு இயக்கம் கண்டவர்கள் தமது தலைவன் கற்சிலைக்கு மாலை அணிவிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்?
வழிபடும் சிலைகளை மாற்றிக் கொண்டார்கள். வழிபடும் முறையை மாற்றிக் கொண்டார்கள். பூஜைப் பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். வழிபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
எனவே சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இஸ்லாம் மனிதனின் சுயமயாதையை அதிகமாகவே காப்பாற்றுகிறது. மத குருமார்களின் கால்களில் விழுவதைப் போலவே சுய மயாதை இயக்கத்தின் வழிவந்த தலைவர்களின் கால்களில் அவர்களின் தொண்டர்கள் விழுந்து பணிகிறார்கள்.
ஆனால் மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைக் கூட இஸ்லாம் அடியோடு தடை செய்து விட்டது. எனவே இந்தக் குற்றத்தையும் இஸ்லாம் செய்யவில்லை.

Thanks..onlinepj

Sunday, August 05, 2007

பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு நம் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது.

Bismillah..
திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.

கஃபாவும் அதைச் சுற்றியுள்ள புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஃபாவை எவரும் தகர்க்க முடியாது; அன்னியர்கள் கைப்பற்றவும் முடியாது என்று திருமறைக் குர்ஆன் உறுதி மொழி அளிக்கிறது.

நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமிலியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(திருக் குர்ஆன் 28:57)

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

(திருக் குர்ஆன் 29:67)

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள் ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(திருக் குர்ஆன் 3:97)

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

(திருக் குர்ஆன் 14:35)

யுக முடிவு நாளின் போது கால்கள் சிறுத்த ஒரு கூட்டத்தினர் கஃபாவை அழிப்பார்கள் என்ற நபிகள் நாயகத்தின் முன் அறிவிப்பு உள்ளது. (புகாரி 1591, 1596, )

அதற்கு முன் எவரும் கஃபாவை அழிக்க முடியாது. இத்தகைய உத்தரவாதம் இருப்பதால் தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஃபாவை இறைவன் பாதுகாத்தான். நாளை யாரேனும் கஃபாவைத் தகர்க்க முயன்றால் யானைப் படைக்கு ஏற்பட்டது போன்ற கதியை அவர்கள் அடைவார்கள்.

மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை. மாறாக மற்ற பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம் என்பதைத் திருக்குர்ஆன் கூறியுள்ளது.

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். ( 22:40)

பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு நம் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.
Thanks..onlinepj

Wednesday, August 01, 2007

வரலாறு பாடத்தில் இந்துத்வா!

Bismillah...
பாஜக ஆட்சிப் பொறுப்பின் கீழ் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் முஸ்லீம் மன்னர்கள் குறித்த செய்திகள் குறைக்கப்பட்டு, இந்து மன்னர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அதிக அளவில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்தான் இது நடந்துள்ளது. சண்டல் மகாராஜா ராணி துர்காவதி குறித்து அதிக பக்கங்களில் பாடம் உள்ளது. அதேசமயம், முகலாய சக்கரவர்த்தி அக்பர் குறித்து மிகக் குறுகிய அளவிலேயே பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மகாராணா பிரதாப் சிங், சிவாஜி ஆகியோர் குறித்தும் விரிவான அளவில் பாடம் உள்ளது.
சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்து மத நம்பிக்கைகள் குறித்த பாடங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி கூறுகையில், பாஜக சிறுபான்மை விரோத கட்சி. எனவே இந்தப் பாடங்களை வரலாற்றுப் பாட நூலிலிருந்து நீக்க வேண்டும். ம.பி. மாநிலத்தில் தங்களது வரலாற்றை மாணவர்களுக்குப் போதிக்க அவர்கள் முயலுகிறார்கள் என்றார் காட்டமாக.
இதேபோல எட்டாவது வகுப்புப் பாடப் புத்தகத்தில், நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து எட்டு பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஒரு வரி செய்திதான் உள்ளது. இதுவும் காங்கிரஸை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

கோவை குண்டு : மதானி விடுதலை

Bismillah...




கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி விடுதலை செய்யப்பட்டார்.அல் - உம்மா நிறுவனர் பாஷா உள்ளிட்ட 30 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி கோவையில் பிரச்சாரம் செய்ய வந்தபோது அங்கு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இத்தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அல் உம்மா தடை செய்யப்பட்டது. இத்தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று அல் உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித தலைவர் மதானி உள்ளிட்ட 167 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

2002ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி விசாரணை துவங்கி 2006ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சாட்சிகள் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், 1731 ஆதார ஆவணங்களும், 480 ஆதாரப் பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 167 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்கள் மீதான தீர்ப்பு இன்று முதல் வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்ராபதி கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மீதான குற்றசசாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. தடைசெய்யப்பட்ட அல் - உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி உள்ளிட்ட 30 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி தீர்ப்பளித்தார்.