விடியாத வெள்ளி !
ஏகனின் திருப்பெயரால்..
நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று மக்களை ஏமாற்றி இயக்கம் வளர்க்கும் ஒரு கூட்டம் நம்மிடையே வலம் வந்து கொண்;டிருக்கிறது. இந்த கூட்டம் எவ்வளவு கொள்கை முரண்பாடுகளை கொண்ட கூட்டம் என்பதை விளக்கவே இக்கட்டுரை.

இஸ்லாமிய ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் இக்கூட்டம் தனது உண்மையான முகத்தை மக்களிடம் காட்டி ஆள் எடுப்பது இல்லை. இவர்கள் ஆள் எடுக்கும்பொழுது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில கலவரங்களை எடுத்துக்காட்டி உசுப்பி, மக்களை குறிப்பாக இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கலவரத்தை சொல்லி உசுப்பப்பட்ட இந்த இயக்கத்தவர்கள், கலவரத்தை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை. பின்னர் அணு அணுவாக இஹ்வான்களின் கொள்கையான, முதலில் இஸ்லாமிய ஆட்சி பின்னர்தான் எல்லாம் என்ற நஞ்சை மெதுவாக திணிப்பார்கள். எக்கொள்கையும் சம்மதம் என்று எல்லா கொள்கையில் உள்ளவர்களையும் தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் இவர்கள், உண்மையான எந்த கொள்கையும் இயக்கத்தவர்களிடம் சொல்லுவதில்லை. மாறாக தாங்களின் இஸ்லாமிய ஆட்சி சிந்தனையை ஊட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இவர்களின் வலையில் அதிகம் சிக்குபவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய இளைஞர்கள். இப்படிப்பட்ட இளைஞர்களில் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்த பிறகு தங்களின் குர்ஆன் ஹதீஸ் கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக விட ஆரம்பிப்பார்கள். அதற்கு அந்த இளைஞர்களை நாம் குறை சொல்ல இயலாது, காரணம் அவர்களை இவ்வாறு மாற்றுவதற்கு இந்த இயக்கம் அந்த அளவு மூளைச் சலவையை செய்யும்.
குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய அந்த இயக்க இளைஞர்களில் சிலர் தாங்கள் சதி வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்து இந்த இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களிடம் கேள்விகளை தொடுக்கத் தொடங்குவார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களை முடிந்தவரை சமாளிப்பார்கள், முடியாத பட்சத்தில் கேள்வி கேட்பவர்களை ஒதுக்கி இயக்கத்தை விட்டு வெளியேற்றி விடுவார்கள். அதே நேரத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது சிறிய குறைகள் ஏதுவும் இருந்தால் அதை பெரிதுபடுத்துவார்கள், அப்படி இல்லாவிட்டால் குறைகளை இவர்களே உருவாக்குவார்கள், அதை பரப்பவும் செய்வார்கள். இதற்கு இந்த இயக்கத்தின் முன்னாள் பல தலைவர்களே உதாரணம். எடுத்துகாட்டாக, இந்த இயக்கத்தை தூக்கிப் பிடித்த ஷம்சுதீன் காஸிமீ, குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, முகைதீன் பக்ரி, அபுதாஹீர், உமர் பாய், முஜாஹீத் மற்றும் இல்யாஸ் ரியாஜி. இன்று இவர்களில் யாருமே இந்த இயக்கத்தில் இல்லை. இவர்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தை விட்டு வெறியேறிய அல்லது அவர்கள் கூறுவது போல் வெளியேற்றப்பட்ட பொழுது அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி இறைத்தார்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தினர். அக்குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? என்பதை நாம் இங்கு ஆய்வு செய்யவில்லை.
இவர்கள் இந்த விடியலை விட்டு வெளிச்சத்துக்கு சென்றப் பொழுது இவர்கள் மீது பல அவதூறுகளை அள்ளி வீசினார்கள் இந்த இஸ்லாமிய ஆட்சி பேசும் கொள்கையற்ற இயக்கத்தவர்கள். இவர்களில் சிலர் மீது சில குற்றச்சாட்டுகள் சொல்லும் இவர்கள், தங்கள் இயக்கத்தில் உள்ளவரையும் அதைப்பற்றி வாய்திறந்தில்லை. ஓரின சேர்க்;கை குற்றம் சாட்டப்பட்ட இவர்களில் ஒருவர் மீது கூட இவர்கள் வாய் திறந்து இந்த குற்றச்சாட்டைக் கூறியது இல்லை. அவர் இந்த இயக்கத்தில் இருந்து கொண்டே இந்த இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை வாய் திறந்து பேசிய பொழுதே! அதுமட்டுமல்லாமல், அவரை இந்த இயக்கத்தை விட்டு வெறியேற்றும் பொழுது 'நீங்கள் எங்கள் இயக்கத்தைப் பற்றி எதுவும் பேச கூடாது, அவ்வாறு செய்தால் தங்களின் இந்த குறையை நாங்கள் மக்களிடத்தில் பரப்புவோம்' என்றார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த இயக்கத்தின் முன்னாள் தன்மானத் தலைவர் குலாம் முஹம்மது அவர்கள் தனது வீட்டின் கல்யாணத்தை ஆடம்பரமாகவும், தனது வீட்டு பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றி தனது இயக்க பொறுப்பாளர்களுக்கு கண்காட்சி நடத்தி, தனது கொள்கை பிடிப்பை நிரூபித்தபொழுது, தனது தன்மானத் தலைவரின் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தற்பொழுது அந்த தன்மான தலைவரின் அந்த சூப்பர் கல்யாணத்தை குறை கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த திருமணத்தைப் பற்றி மக்கள் கேள்வி கேட்;க ஆரம்பித்தவுடன் அந்த திருமணத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசுவது எப்படி என்று பல இடங்களில் தனது இயக்கத்தின் தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) பயிற்சி கொடுத்தார்கள் என்பது தான் ஹைலைட்.
விpடியலை வளர்த்து விட்டு வெளிச்சத்துக்கு போகிறோம் என்று சமீபத்தில் விடியலை விட்டு வெளியேறிய குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, உமர் பாய் மற்றும் இல்யாஸ் ரியாஜி ஆகியோர் மீண்டும் ஒர் இயக்கத்தை துவங்கியிருக்கிறார்கள். இவர்களின் கொள்கையை பின்னர் ஆய்வு செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்...தொடரும்...
0 Comments:
Post a Comment
<< Home