|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, July 09, 2008

பள்ளிகளில் பர்தா அணிய தடை- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்த தடையை உடனே நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


நாகை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பள்ளி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாட்டை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று கூறி பல பள்ளிகள் இந்த விதிகளை அமுல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக பள்ளிக்கு பர்தா அணிந்துவர முஸ்லீம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மாநில செயலாளர் சித்திக் கூறுகையில், நாகை மாவட்டத்தில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர பள்ளிகள் தடை விதித்துள்ளன. இது கடுமையாக கண்டிக்கதக்கது.

இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் தெரிவித்துள்ளோம். கல்வித்துறை அமைச்சரிடமும் முறையிட உள்ளோம்.

பள்ளியில் மதிய நேரத்தில் முஸ்லீம் மாணவ, மாணவிகள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அண்ணா பல்கலை கழகமே தொழுகை நடத்த அனுமதித்துள்ளது. எனவே இதை மற்ற பள்ளிகளும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதை கண்டித்து விரைவில் கண்டன ஆர்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.


Thanks:

Thatstamil.

Tuesday, July 01, 2008

ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?


'போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!' என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். 'இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.

உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - ‘The Prosecution of George W. Bush for Murder’. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.

'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ். ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்கெய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 'இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை! சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.

ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.

உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி! ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக்குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.

'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது? அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?

பிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய்! இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.

யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு! ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.

பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும்! தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறார் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.

'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான்! உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?' என்கிறார்கள் இராக்கியர்கள்.

குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே! போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.

உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார்? தலையாட்டி இராக் அரசாங்கமா? புஷ்ஷா? வரவிருக்கும் மீட்பர் ஒபாமாவா?


நன்றி: ஆனந்த விகடன்.

குமுதம் டாட் காமில் தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாட்டு உரை.

ஏகனின் திருப்பெயரால்...குமுதம் டாட் காமில் தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாட்டு வீடியோக்கள் மற்றும் மௌலவி பி.ஜெ. அவர்களின் உரை.


Sunday, June 22, 2008

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்திற்கு பொதுப்பணி மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்காக ஆள் எடுக்கிறார்கள். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் ஜுலை மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆள்சேர்ப்பு முகாம்
இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், டிரேட்மேன், நர்சிங் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) ஆகிய பணி இடங்களுக்காக ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (அண்ணா ஸ்டேடியம்) ஜுலை மாதம் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பொதுப்பணி நீங்கலாக மற்ற அனைத்திற்கும் வயது 171/2 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பணி வயது வரம்பு 21 ஆகும்.

உடற்திறன் தேர்வு
பொதுப்பணிக்கான தேர்வு ஜுலை 8 மற்றும் 9-ந் தேதியில் நடக்கிறது. 8-ந் தேதி அன்று வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோரும், 9-ந் தேதி அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் வர வேண்டும். தேர்வு நடக்கும் மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும்.

10-ந் தேதி அன்று டிரேட்மேன் தேர்வும், 11-ந் தேதி தொழில்நுட்ப பணி தேர்வும், 12-ந் தேதி நர்சிங் உதவியாளர் தேர்வும், 13-ந் தேதி கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கான தேர்வும் நடைபெறும். இந்த தேர்வுகளில் மேற்கண்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தோரும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்து மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும். `ஆப்டிடிïட்' தேர்வு 14-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி:
தினத்தந்தி

பெட்ரோல் கதை

கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன.

'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை.

இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன.

அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி. உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் சரிவு.

இப்படியாக அடிமேல் அடி வாங்கி வரும் தங்கள் சந்தையை நிலை நிறுத்த அமெரிக்கர்களுக்கு கிடைத்த கடைசி ஆயுதம் தான் கச்சா எண்ணெய்.

உலகின் தேவையில் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேல், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது என்னவோ செளதி அரேபியா, வெனிசுவேலா, ஈரான், அல்ஜீரியா, யுஏஇ, குவைத் உள்ளிட்ட OPEC (Organization of Petroleum Exporting Countries) நாடுகளாக இருக்கலாம்.ஆனால், இந்த கச்சா எண்ணெயின் வர்த்தகம் நடப்பது அமெரிக்காவிலும் லண்டனிலும் தான். குறிப்பாக அமெரிக்காவின் வால் ஸ்டீரிட்டில் தான் (நம் ஊர் மும்பை புரோக்கர்கள் நிறைந்த தலால் ஸ்டீரிட் மாதிரி). விலை நிர்ணயிக்கப்படுவது டாலரில் தான்.

(இத்தனைக்கும் உலகில் பெரிய அளவில் அமெரிக்காவிலும் பெட்ரோலிய 'ரிசர்வ்' உண்டு. அதை அவர்கள் வெளியே விற்பதில்லை. செளதியிடம் வாங்கிக் கொண்டு பதிலுக்கு கொஞ்சம் பணம், நிறைய போர் விமானங்கள்-ராக்கெட்களை தந்து விடுகிறார்கள், பணத்துக்கு பணம் மிச்சம்.. கூடவே அமெரிக்க தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம்!)

இந்த புரோக்கர்கள் தான் நாம் திண்ணும் உப்பில் ஆரம்பித்து நாம் அணியும் பனியன் வரை விலையை நிர்ணயம் செய்கின்றனர்.

பங்குச் சந்தை வர்த்தம் என்பதே ஒரு கணிப்பு தான். உண்மையை சொன்னால் 'பெட்டிங்' தான்.. உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று...

சீனாவில் ஒலிம்பிக் வருதா, அங்கு ஸ்டேடியங்கள் கட்ட இரும்பு அதிகமாக பயன்படுத்தப்படப் போகிறது, இதனால் இரும்பு நிறுவனங்களின் லாபம் அதிகமாகும், இதனால் இரும்பு நிறுவன பங்குகளில் அதிகம் முதலீடு செய்யுங்கோ.. என்று இவர்கள் 'கிளப்பிவிட்டால்' இரும்பு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் தான். ஒரே நாளில் அவர்களது பங்கு மதிப்பு பல பில்லியன் கூடிவிடும்.

(எதிர்பார்த்தபடி அந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவில்லை என்றால் அதன் பங்கு மதிப்புகள் மடமடவென சரியும். புரோக்கர்களின் கூவலை நம்பி பணம் போட்டவர்கள் தலையில் துண்டு மிஞ்சும். அது வேறு கதை)

இப்படித்தான் கச்சா எண்ணெயின் விலையையும் அமெரிக்க-இங்கிலாந்து புரோக்கர் நிறுவனங்கள் கூவிக் கூவியே கூட்டிவிட்டுவிட்டன.

குறிப்பாக கோல்ட்மேன் சேக்ஸ், சிட்டி குரூப் (நம்ம சிட்டி பாங்க்), ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் அண்ட் ஸ்டான்லி ஆகிய நான்கு நிறுவனங்கள் தான் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் மிக அதிகமாக முதலீடுகளை தள்ளிவிட்டவர்கள்.

இந்த நிறுவனங்களை 'financial companies' என்று அழைப்பதற்கு பதில் 'oil traders' என்றே அன்புடன் அழைக்கலாம். அந்த அளவுக்கு தங்கள் தொழிலையே கச்சா எண்ணெய்யை சார்ந்து மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டன.

கச்சா எண்ணெய் விலை கன்னாபின்னாவென உயர்வதற்கு கடவுளைத் தவிர வேறு யாருக்காவது காரணம் தெரியும் என்றால் அது இந்த நான்கு பேராகத் தான் இருக்க முடியும்.

விலை ஏன் உயர்கிறது என்று தெரியாமல் OPEC நாடுகளே திக்குமுக்காடிக் கொண்டிருப்பதும், விலை உயர்ந்தாலும் இந்த நாடுகளுக்கு நயா பைசா லாபம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் முன்பே சொன்னது போல பங்குச் சந்தையே ஒரு 'பெட்டிங்' தான். இன்று கச்சா எண்ணெய் விலை என்னவாக இருக்கும் என்று காலையில் புரோக்கர் நிறுவனங்கள் பெட்டிங்கை ஆரம்பித்தால் மாலையில் அந்த நிறுவன சிஇஓக்களும் சிஎப்ஓக்களும் வீடு போவதற்குள் பெட்ரோலியத்தின் விலை பீப்பாய்க்கு மேலும் சில டாலர்கள் உயர்ந்திருக்கும்.

விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்.. விலையைக் கூட்டிவிட்ட புரோக்கர் நிறுவனங்களுக்கு கமிஷன்.

இப்படியாகத் தான் speculative trading காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணை நோக்கி போய்க் கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதை விட்டுவிட்டு OPEC உடனே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் சாம் போட்மேன்.

எதற்காக கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும்.. அப்படி என்ன திடீரென தேவை அதிகரித்துவிட்டு.. உற்பத்தியை அதிகரித்தாலும் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றன எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.

எண்ணெய் விலையை உயர்த்தும் நிதி நிறுவனங்கள்- உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையி்ல் சிக்கித் தவிப்பது ஒவ்வொரு சொட்டு பெட்ரோலையும் இறக்குமதி செய்து வாழ்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள்.

இந்த OPEC, புரோக்கர்கள், சாம் போட்மேன் கதையை எல்லாம் எப்படி சமானிய மக்களுக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றனர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் விலைவாசியும் உயர, மக்கள் வெறுப்பேற, இனியும் சமாளிக்க முடியாது.. பேசாமல் நாமே ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று முடிவு செய்து தான் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தையே கையில் எடு்த்து இடதுசாரிகளை காங்கிரஸ் வெறுப்பேற்றுகிறதோ என்னவோ.

அடுத்த முறை பெட்ரோல் பங்குக்குள் நுழையும்போது இந்த 'பெட்ரோல் கதை'யை ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.. இனி தெரு முக்குக்கு போக எல்லாம் காரையோ பைக்கையோ எடுக்க மாட்டீர்கள்...


நன்றி
தட்ஸ்தமிழ்.காம்

Saturday, June 21, 2008

விடியாத வெள்ளி !

ஏகனின் திருப்பெயரால்..
நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று மக்களை ஏமாற்றி இயக்கம் வளர்க்கும் ஒரு கூட்டம் நம்மிடையே வலம் வந்து கொண்;டிருக்கிறது. இந்த கூட்டம் எவ்வளவு கொள்கை முரண்பாடுகளை கொண்ட கூட்டம் என்பதை விளக்கவே இக்கட்டுரை.இஸ்லாமிய ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் இக்கூட்டம் தனது உண்மையான முகத்தை மக்களிடம் காட்டி ஆள் எடுப்பது இல்லை. இவர்கள் ஆள் எடுக்கும்பொழுது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில கலவரங்களை எடுத்துக்காட்டி உசுப்பி, மக்களை குறிப்பாக இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கலவரத்தை சொல்லி உசுப்பப்பட்ட இந்த இயக்கத்தவர்கள், கலவரத்தை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை. பின்னர் அணு அணுவாக இஹ்வான்களின் கொள்கையான, முதலில் இஸ்லாமிய ஆட்சி பின்னர்தான் எல்லாம் என்ற நஞ்சை மெதுவாக திணிப்பார்கள். எக்கொள்கையும் சம்மதம் என்று எல்லா கொள்கையில் உள்ளவர்களையும் தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் இவர்கள், உண்மையான எந்த கொள்கையும் இயக்கத்தவர்களிடம் சொல்லுவதில்லை. மாறாக தாங்களின் இஸ்லாமிய ஆட்சி சிந்தனையை ஊட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இவர்களின் வலையில் அதிகம் சிக்குபவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய இளைஞர்கள். இப்படிப்பட்ட இளைஞர்களில் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்த பிறகு தங்களின் குர்ஆன் ஹதீஸ் கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக விட ஆரம்பிப்பார்கள். அதற்கு அந்த இளைஞர்களை நாம் குறை சொல்ல இயலாது, காரணம் அவர்களை இவ்வாறு மாற்றுவதற்கு இந்த இயக்கம் அந்த அளவு மூளைச் சலவையை செய்யும்.குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய அந்த இயக்க இளைஞர்களில் சிலர் தாங்கள் சதி வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்து இந்த இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களிடம் கேள்விகளை தொடுக்கத் தொடங்குவார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களை முடிந்தவரை சமாளிப்பார்கள், முடியாத பட்சத்தில் கேள்வி கேட்பவர்களை ஒதுக்கி இயக்கத்தை விட்டு வெளியேற்றி விடுவார்கள். அதே நேரத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது சிறிய குறைகள் ஏதுவும் இருந்தால் அதை பெரிதுபடுத்துவார்கள், அப்படி இல்லாவிட்டால் குறைகளை இவர்களே உருவாக்குவார்கள், அதை பரப்பவும் செய்வார்கள். இதற்கு இந்த இயக்கத்தின் முன்னாள் பல தலைவர்களே உதாரணம். எடுத்துகாட்டாக, இந்த இயக்கத்தை தூக்கிப் பிடித்த ஷம்சுதீன் காஸிமீ, குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, முகைதீன் பக்ரி, அபுதாஹீர், உமர் பாய், முஜாஹீத் மற்றும் இல்யாஸ் ரியாஜி. இன்று இவர்களில் யாருமே இந்த இயக்கத்தில் இல்லை. இவர்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தை விட்டு வெறியேறிய அல்லது அவர்கள் கூறுவது போல் வெளியேற்றப்பட்ட பொழுது அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி இறைத்தார்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தினர். அக்குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? என்பதை நாம் இங்கு ஆய்வு செய்யவில்லை.இவர்கள் இந்த விடியலை விட்டு வெளிச்சத்துக்கு சென்றப் பொழுது இவர்கள் மீது பல அவதூறுகளை அள்ளி வீசினார்கள் இந்த இஸ்லாமிய ஆட்சி பேசும் கொள்கையற்ற இயக்கத்தவர்கள். இவர்களில் சிலர் மீது சில குற்றச்சாட்டுகள் சொல்லும் இவர்கள், தங்கள் இயக்கத்தில் உள்ளவரையும் அதைப்பற்றி வாய்திறந்தில்லை. ஓரின சேர்க்;கை குற்றம் சாட்டப்பட்ட இவர்களில் ஒருவர் மீது கூட இவர்கள் வாய் திறந்து இந்த குற்றச்சாட்டைக் கூறியது இல்லை. அவர் இந்த இயக்கத்தில் இருந்து கொண்டே இந்த இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை வாய் திறந்து பேசிய பொழுதே! அதுமட்டுமல்லாமல், அவரை இந்த இயக்கத்தை விட்டு வெறியேற்றும் பொழுது 'நீங்கள் எங்கள் இயக்கத்தைப் பற்றி எதுவும் பேச கூடாது, அவ்வாறு செய்தால் தங்களின் இந்த குறையை நாங்கள் மக்களிடத்தில் பரப்புவோம்' என்றார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த இயக்கத்தின் முன்னாள் தன்மானத் தலைவர் குலாம் முஹம்மது அவர்கள் தனது வீட்டின் கல்யாணத்தை ஆடம்பரமாகவும், தனது வீட்டு பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றி தனது இயக்க பொறுப்பாளர்களுக்கு கண்காட்சி நடத்தி, தனது கொள்கை பிடிப்பை நிரூபித்தபொழுது, தனது தன்மானத் தலைவரின் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தற்பொழுது அந்த தன்மான தலைவரின் அந்த சூப்பர் கல்யாணத்தை குறை கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த திருமணத்தைப் பற்றி மக்கள் கேள்வி கேட்;க ஆரம்பித்தவுடன் அந்த திருமணத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசுவது எப்படி என்று பல இடங்களில் தனது இயக்கத்தின் தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) பயிற்சி கொடுத்தார்கள் என்பது தான் ஹைலைட்.விpடியலை வளர்த்து விட்டு வெளிச்சத்துக்கு போகிறோம் என்று சமீபத்தில் விடியலை விட்டு வெளியேறிய குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, உமர் பாய் மற்றும் இல்யாஸ் ரியாஜி ஆகியோர் மீண்டும் ஒர் இயக்கத்தை துவங்கியிருக்கிறார்கள். இவர்களின் கொள்கையை பின்னர் ஆய்வு செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்...தொடரும்...

Tuesday, June 10, 2008

*** கேமராக்கள் - பெண்களுக்கு எச்சரிக்கை ***


கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ��’ன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி**, **கல்லூரி**, **விடுதிகளில் :***
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை,குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன்
இருக்கவும்.


*பொதுக்கழிப்பிடங்கள்**, **குளியலறைகள்**, **ஹோட்டல் அறைகள் :***
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும்,கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

*மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :***
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப்
பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.


இப்படித்தான் ��’ரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான்.
இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை . ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

*துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு***
*பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :***
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ��’துக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும்
பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ��’ரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ��’ளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ��’ரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

நன்றி:Sha Nawas”

Tuesday, May 27, 2008

கொள்கை மட்டும் போதாது !தொழுகையும் வேண்டும்!!

Bismillah...

நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் உடையவர்கள். எதிரிகள் செய்த ஏராளமான கொடுமைகளை மன்னித்திருக்கிறார்கள். இப்படி மென்மையான குணம் கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஒருவரை எரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் அவர் செய்த குற்றம் எவ்வளவு பெரிய குற்றமாக இருக்கும்? தொழுகைக்காகப் பள்ளிக்கு வராதவரின் வீட்டைத் தான் நபி (ஸல்) அவர்கள் எரிக்க வேண்டும் என்று நாடினார்கள். ஜமாஅத் தொழுகை பள்ளியில் நடக்க, அதைப் பொருட்படுத்தாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் இதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

ஒரு தொழுகையில் நபி (ஸல்) அவர்கள், மக்கள் வராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, ''மக்களுக்குத் தொழவைக்கும் படி நான் ஒருவரை ஏவி விட்டு தொழுகைக்கு வராதவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் அவர்களுடைய வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எலும்புள்ள கொழுத்த கறித்துண்டு கிடைக்கும் என அவர்களில் யாருக்காவது தெரியுமானால் இஷா தொழுகையில் கலந்து கொண்டு விடுகிறார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1040

இந்த ஹதீஸ் ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஏனென்றால் மக்கள் பள்ளிக்கு வராததால் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டு இந்த வார்த்தையைக் கூறினார்கள்.

இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு மார்க்கம் வழங்கியுள்ள சலுகையைத் தவறாக விளங்கிக் கொண்டு சிலர் ஜமாஅத் நடக்கும் போது கலந்து கொள்ளாமல் தனி ஜமாஅத்தாகப் பிறகு தொழுது கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஏதோ ஒரு முக்கிய வேலையினால் தொழுகை தவறி விடும் போது இரண்டாவது ஜமாஅத் ஏற்படுத்துவது தவறில்லை.

சரியான காரணம் இருக்க வேண்டும். முடிந்த அளவு முதல் ஜமாஅத்துடன் தொழுவதற்கு முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் தான் அனுமதி உள்ளது. ஆனால் இன்றைக்கு எந்த வித சரியான காரணமும் இல்லாமல் சோம்பறித்தனத்தினால் இரண்டாவது ஜமாஅத் தொழ வைக்கப்படுகிறது. ஒரு ஏகத்துவவாதிக்கு இது அழகல்ல. தொழுகையில் பிந்துவதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் (முதல் வரிசையை விட்டு) பிந்துவதைப் பார்த்தார்கள். எனவே அவர்களிடத்தில், ''முந்தி வந்து என்னைப் பின்தொடர்ந்து தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் உங்களைப் பின் தொடரட்டும். ஒரு கூட்டம் (முதல் வரிசையை விட்டும்) பிந்திக் கொண்டே இருக்கிறது. இறுதியில் அல்லாஹ் அவர்களை (தன் அருளிலிருந்து) பின் தள்ளி விடுவான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 662

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைகளைக் கேட்ட சில நாட்கள் நாம் முறையாகத் தொழுவோம். பின்பு பழையபடி தொழுகைகளை விட ஆரம்பித்து விடுவோம். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யப்படும் வணக்கமே அல்லாஹ்விற்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 43

ஜமாஅத் தொழுகைக்குத் தாமதமாக வருவதை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதுடன் தொழுகைக்காக சீக்கிரம் வந்து காத்திருந்தால் கிடைக்கும் சிறப்புகளைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில், ''இறைவா! நீ இந்த மனிதர் மீது அருள் புரிவாயாக! உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக! என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 647

ஜமாஅத்துடன் தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ஒருவர் உளூவை முழுமையாகச் செய்து விட்டு கடமையான தொழுகைக்காக நடந்து சென்று மக்களுடன் அதைத் தொழுதால் அல்லது ஜமாஅத்துடன் அதைத் தொழுதால் அல்லது பள்ளிவாசலில் அதைத் தொழுதால் அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 341

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இமாமுடன் தொழக் காத்து இருக்கிறாரோ அவர் (தனியாகத்) தொழுது விட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: முஸ்லிம் 1064

தொழுகையை அதற்கான நேரத்தில் தொழ வேண்டும்
அல்லாஹ்வின் அச்சம் உள்ளவர்கள் ஒரு தொழுகையைக் கூட விடாமல் தொழுது விடுவார்கள். ஆனால் அதற்குரிய நேரத்தில் தொழுவதை விட்டு விடுகிறார்கள். தொழுவது அல்லாஹ்விற்குப் பிடித்த வணக்கமாக எப்போது ஆகுமென்றால் அதற்குரிய நேரங்களில் தொழும் போது தான்.

''அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?'' என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, ''தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்'' என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 527

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ''தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள் அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றவிடாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். ''(அப்போது) என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ''தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1027

இரவுத் தொழுகை
இரவுத் தொழுகை ரமலான் மாதத்திற்கு மட்டும் உரியது என்று சிலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துகள் தான் தொழுதார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே இரவுத் தொழுகை என்பது ரமலானில் மாத்திரம் செய்கின்ற வணக்கம் இல்லை. பொதுவாக எல்லா நாட்களிலும் இரவில் இதைத் தொழ வேண்டும். இந்தச் சட்டத்தை விளங்கியவர்கள் கூட இரவுத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த இரவுத் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் சிறந்தவராக மாறுகிறார்.

''அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாகி விட்டேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 1158

நபி (ஸல்) அவர்கள் செய்த எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் குறை வைக்கவில்லை. அதிகமான ரக்அத்துக்களை நீண்ட நேரத்தில் தொழுது நமக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

இன்றைக்கு இளைஞர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இரவு நேரங்களில் வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டு பொன்னான நேரங்களை வீணடித்து விடுகிறார்கள். கடமையான தொழுகைகளுக்கு அடுத்து சிறந்த தொழுகையாக இருக்கக்கூடிய இந்த இரவுத் தொழுகையில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.

''கடமையான தொழுகைக்குப் பின்பு சிறந்த தொழுகையாக இருப்பது இரவுத் தொழுகையாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1982

சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது, ''நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.

அறிவிப்பவர்: முகீரா (ரலி)

நூல்: புகாரி 1130

தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்
இஸ்லாம் ஒன்றை வலியுறுத்திச் சொல்லும் போது அதை நிறைவேற்றாமல் விட்டால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடும். அதே நேரத்தில் அதை முறையாக நிறைவேற்றினால் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடும். தொழுகையை விடுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப் பார்த்தோம். அதை முறையாக நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுத்தம் ஈமானில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று கூறுவது நன்மை) தராசை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் (ஆகியவற்றைக் கூறுவதால் கிடைக்கும் நன்மை) வானங்கள் மற்றும் பூமிக்கு இடையில் இருப்பவற்றை நிரப்பிவிடும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 328

இந்த ஹதீஸில் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் ஒளி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. மறுமை நாளில் இருள் சூழ்ந்திருக்கும் போது நாம் முறையாக இந்த உலகத்தில் தொழுகையைக் கடைப்பிடித்திருந்தால் அந்தத் தொழுகை நமக்கு வெளிச்சமாக வந்து உதவும். தொழுகையைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது அது மானக்கேடான மற்றும் அருவருக்கத்தக்க செயல்களிலிருந்து தடுக்கிறது என்று கூறுகிறான். தொழுகை தீய வழியில் செல்லவிடாமல் தடுத்து நல்ல வழியில் செலுத்தும் என்ற கருத்தும் ஒளி என்று சொல்லப் பட்டதிலிருந்து விளங்குகின்றது.

''அல்லாஹ் தனக்குக் கட்டளையிட்டவாறு ஒருவர் உளூவை பூரணமாகச் செய்தால் கடமையான தொழுகைகளுக்கு இடையில் (அவர் செய்த சிறுபாவங்களுக்கு) பரிகாரமாக (அந்தக்) கடமையான தொழுகைகள் ஆகி விடுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 339

ஒரு நாளைக்கு நாம் செய்யக்கூடிய நன்மைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் பாவங்களை எண்ண முடியாது. அந்த அளவுக்கு அதிகமான பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பாவங்கள் மறுமையில் நமக்குப் பெரும் சுமையாக வந்து விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் நம்முடைய தொழுகைகளின் மூலம் இவைகளை அழித்து விடுகிறான். தொழவில்லை என்று சொன்னால் தொழாத பாவத்துடன் இந்தப் பாவங்களும் இணைந்து கொண்டு நம்மைப் பாடுபடுத்திவிடும். தொழுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அழகான ஒரு உதாரணத்தைக் கூறியுள்ளார்கள். மேலும் இதை அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்தும் அறியலாம்.

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியில் உள்ள அழுக்குகளில் எதுவும் மிஞ்சியிருக்குமா? கூறுங்கள்'' என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது'' என நபித்தோழர்கள் கூறினர். ''இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 528

ஒரு மனிதர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ''பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும்'' (11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ''அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு, ''என் சமுதாயம் முழுமைக்கும்'' என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 526

சொல்லப்பட்ட செய்திகளைக் கவனத்தில் வைத்து தொழுகையை முறையாகப் பேணுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக!

Thursday, February 14, 2008

நம்முடைய பேச்சு.....

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.

நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.

ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.

நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்
நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!

அல்குர்ஆன் (33:70)

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.

அல்குர்ஆன் (35:10)

ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2989)

நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் (9996)

நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி (6023)

இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).

நூல்: புகாரி (5754)

தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.

சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)

நூல்: முஸ்லிம் (4020)

பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!
நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (6780)

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்

நூல்: முஸ்லிம் (118)

யாகாவாராயினும் நாகாக்க!
நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: அஹ்மத் (14870)

தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்
தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

அல்குர்ஆன் (17:53)

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (28:55)

வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் (23:3)

அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

அல்குர்ஆன் (25:72)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6018)

நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.

அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்

நூல்: அஹ்மத் (19403)

பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.

இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலியுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.

ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.

சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.

அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி)

நூல்: அஹ்மத் (17902)

Tuesday, February 12, 2008

தஞ்சையில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

35க்கும் மேற்பட்ட அரங்குகள்;!
இன்ஷா அல்லாஹ்; மே மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் தஞ்சையில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு வெறும் சொற்பொழிவுகளைக் கொண்டதாக மட்டும் இருக்காது. இரண்டு நாட்களும் பயனள்ள முறையில் அமைந்திடும் வகையில் பல்வேறு நிகழச்;சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

• இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி.

• இஸ்லாமிய வரவாற்றுக் கண்காட்சி.

• நாட்டின் விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கை விளக்கும் கண்காட்சி.
• பலவகைக் குர்ஆன் பிரதிகள் கண்காட்சி.
• நபிவழித் தொகுப்புகள், விரிவுரைகள் கண்காட்சி.

• இஸ்லாமிய மென்பொருட்கள் (சாஃப்ட்வேர்) கண்காட்சி.

• குஜராத், மும்பை, ஈராக், ஆப்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டும் ஆவணப்படங்கள் - தனி அரங்கம்.

• மந்திரமா? தந்திரமா? தனி அரங்கம்.

• ஓவ்வொரு தலைப்பின் கீழும் கேள்வி கேட்க தனித்தனி அரங்குகள்.

• ஆதாரங்களை உடனுக்குடன் அச்சிட்டுத் தரும் வசதிகளுக்கு தனி அரங்கம்.

• தொழுகை உள்ளிட்ட வணக்கங்களைச் செய்முறை விளக்கம் செய்ய தனி அரங்கம்.

• சிறு முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் மூலம் சொந்த தொழில் செய்ய ஆலோசனை கூற தனி அரங்கம்.

• மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதற்க்கும், வேலைவாய்ப்பைப் பெறுவதற்க்கும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும், முஸ்லிம் மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்யும் அமைப்புகளை அறிந்து கொள்ளவும் தனி அரங்குகள்.

• சுட்டப் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போருக்கும், குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாதவர்களுக்காகவும் வல்லுனர்களிடம் ஆலோசனைப் பெற தனி அரங்கம்.

• முதியோர், விதவைகள், பெண்கள், சிறுபான்மையோருக்காக அரசு நலத்திட்டங்கள், அவற்றைப் பெறும் வழிமுறைகளுக்காக தனி அரங்கம்.

• வரதட்டசணை இல்லா நபிவழித் திருமணம் நடத்தவும், வாழ்க்கைத் துணைகளைத் தேர்வு செய்யவும் முன்பே பதிவு செய்து கொண்ட குடும்பத்தினர் மட்டும் சந்தித்து கொள்ளும் அரங்கம்.

• தினம் மூன்று மணிநேரம் மட்டும் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து முக்கியத்தலைப்புகளில் சிறப்புரை கேட்க ஏற்பாடு.

• 100 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரம் இல்லாமல் அனைத்து வசதிகளுடனும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

• விரும்பியதைத் தேர்வு செய்து பயனடைய ஏற்பாடு.

இந்த மாநாடு வெற்றியடைய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!.