|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 31, 2006

விளக்கங்கள் தேவை...

பிஸ்மில்லா...

சவுதியின் மத்திய தமுமுக கிளையின் பொருப்பாளர் இளையவன்-ராவுத்தர்-இப்னு பாத்திமா-வேங்கை-அபாபில் என்கிற புனைபெயருடன் மெயில்களை வெளியிடுகிற ஹீசைன் கனி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் மெயிலை கண்டேன். அதில் உள்ள பல செய்திகள் நம்பும்படியாக இல்லை எனNவு எனக்கு சில விளக்கங்கள் தேவை. எனவே எனது கேள்விக்கு விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

1) தவ்ஹிதுதான் தமுமுகவின் வளர்சிக்கு முட்டுக்கட்டை என்று மவுலவி.பிஜெ பொய் சொன்னதாக எழுதி இருக்கிறீர்கள். அப்படி என்றால் பேரா.ஜவாஹிருல்லா தன் கையெழுத்து போட்டு தவ்ஹித் பிரச்சாரம்தான் தமுமுகவின் வளர்சிக்கு தடை என்று ஒத்து கொண்டாரே அதை பற்றி உங்கள் விளக்கம் என்ன? அப்பொழுது அவர் மனநிலை சரியில்லாமல் பைத்தியமாக இருந்தார் பிஜெ ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டார் என்று நீங்கள் சொன்னால்; சொல்வதை நம்பலாம் ஆனால் தெளிவாக இருந்தார் என்றால் அவ்வாறு கையெழுத்து போட்டு கொடுத்தன் காரணம் என்ன விளக்கவும்?.

2) தான் வெளியேற்றப்பட்டதற்க்கு தமுமுக தலைவர்களின் சதிதான் காரணம் என்று மவுலவி.பிஜெ பொய் சொல்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அப்படி என்றால் மவுலவி.பிஜெ தமுமுக தலைமையை கைப்பற்ற போகிறார் என்று தமுமுக தலைவருக்கு நெருக்கமானவர்களால் அவதூறு பரப்பபட்டதே இதை சதியின் ஒரு கட்டம்தானே இதை நீங்கள் மறைக்க முடியமா?, பேராசிரியரின் ஜெனிவா பயணத்தை தொடர்ந்து சவுதிக்கு வருகைதந்து ஜித்தாவில் ஒரு ரகசிய கூட்டம் நடத்தப்பட்டு அங்கு பிஜெவை வெளியேற்ற சதித்திட்டம் வரையருக்கபட்டதே இதை உங்களால் மறுக்க முடியுமா?

3) மார்க்க பிரச்சாரத்திற்க்கு பிஜெ பணம் வாங்குவதாக ஆதரமற்ற ஒரு அவதூரை வெளியிட்டு இருக்கிறீர்கள். அப்படி எதாவது ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். அதை விட்டு பித்னா செய்யாதீர்கள். உண்மையிலேயே பிஜெ பணம் வாங்குவதாகஇருந்தால் தற்போது அவர் தமிழக கோடிஸ்வரர்களில்; ஒருவராக இருக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு தெரிந்து அவர் சுமார் ஆயிரக்கணக்கான கூட்டத்திலாவது பேசி இருப்பார். ஓரு கூட்டத்திற்க்கு சிலஆயிரம் என்று வைத்தாலும் அவர் கோடிஸ்வரராக இருந்திருப்பார். சகோ.பிஜெ தமுமுகவில் இருந்த காலத்திலாவது எந்த ஊரிலாவது பேசுவதற்காக பணம் வாங்கினார் என்று சொல்ல முடியுமா?. மார்க்க கூட்டத்தை பயன்படுத்தி நபி மருத்துவம் என்று ஜீரக எண்ணையை விற்று கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சகோ.பிஜெ எந்த பணமும் எந்த வகையிலும் பெற மாட்டார் என்பது உலகறிந்த விசயம். உண்மையை சொன்னால் அதுதான் அவருடைய பிளஸ் பாயின்டும். எனவே அவதூறு பரப்புவதற்க்கு முன் யோசித்து எதையம் பரப்புங்கள்.

4) கலைஞரை சந்திக்க மவுலவி பிஜெ சென்ற போது அவரை கையெடுத்து கும்பிட்டார் என்று ஆதாரமற்ற பொய்யை சொல்லி அதானால் அவர் தவ்ஹிதுக்கு எதிரானவர் என்கிற நீங்கள் சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஹைதர் பாய் அவர்கள் மண்ணடியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு கேட்டாரே அவரை தவ்ஹிதுக்கு எதிரானவர் என்று அறிவிக்க தயாரா?. மற்றும் நடந்த தமிழக தேர்தலில் ஒவ்வொரு தமுமுக மேடையிலும் வேட்பாளர்களை கையெடுத்து கும்பிட வைத்து ஓட்டு கேட்டார்களே அதையும் எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பு செய்தார்களே அந்த உங்கள் தமுமுகவை தவ்ஹிதுக்கு எதிரான அமைப்பு என்று அறிவிக்க நீங்கள் தயாரா?

5) லப்பைகுடிகாடில் சமாதி வழிபாடு கூடும், மவுலுது ஓதலாம், பாத்திஹா ஓதலாம், மத்ஹபை பின்பற்றலாம் என்ற கலப்பு தலைப்பில் சுன்னத் ஜமாத் அறிஞரும் தவ்ஹிதை தமிழகத்தில் கடுமையாக எதிர்க்க கூடியவரும் ஷேக் அப்துல் ஜமாலி அவர்கள் பேசினார்கள். அவருடைய நிகழ்சிக்கு தமுமுகவினர் தங்கள் சீறுடையில் அந்த நிகழ்சியை சிறப்பாக நடத்தி கொடுத்தனர். இது பரவலாக அனைவருக்கும் தெரிந்த செய்தியாகையால். வேறு வழியில்லாமல் இதை நீங்கள் ஒத்து கொண்டிர்கள். ஆனால் தமுமுக உடையை கேசுவலாக அணிந்திருக்கலாம் என்று சப்பை கட்டு கட்டுகிறீர்கள். தமுமுக உடை என்ன பைத்தியக்கார ஆஸ்பத்திரியல் போடும் பச்சை உடையா? எப்பொழுதும் அணிந்து கொண்டு இருக்க?. எதாவது நிகழ்சி என்றால்தான் தமுமுக உடையை அதன் தொண்டர்கள் அணிவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கேசுவலாக அணிந்தார்கள் என்பது வெட்டிவாதமாகும். அந்த தவ்ஹித் எதிர்ப்பு நிகழ்சியை பற்றி சப்பை கட்டு கட்டும் நீங்கள் கடையநல்லூரில் தொழுகையில் விரலசைப்பது, தொப்பி போட்டு தொழுவது குழப்ப செயல் என்று பகிரங்கமாக தமுமுக கிளையின் பெயரை போட்டு நோட்டிஸ் அடித்து வெளியிட்டார்களே அதை பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்?.அப்படி பட்ட தமுமுகவை தவ்ஹிதுக்கு எதிரான அமைப்பு என்று அறிவிக்க தயாரா?. அதை விட்டு வெளியேர தயாரா?

6) தர்கா வழிபாடு, சந்தன கூடு, கந்தூரி ஆகியவை கூடாது என்று குர்;ஆன் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து முத்துப்பேட்டையில் ததஜ வெளியிட்டதற்க்கு அந்த ஊரை சேர்ந்த பாக்கர் அலி லெப்பை என்பவர் போலிஸில் பொய்புகார் கொடுத்து ததஜவினர் கைது செய்து ஏகத்துவ பிரச்சாரத்தை முடக்க நினைத்தார். அந்த அலி லெப்பையை தமுமுகவின் ஆம்புலன்ஸ் விழாவில் முன்னிலை படுத்தி கௌரவப்படுத்தப்பட்டாரே அப்படிபட்ட தமுமுகவினர்தான் தவ்ஹித் வாதிகளா? அல்லது தவ்ஹிதுக்கு ஆதரவாலர்களா?. இதற்க்கு பதில் சொல்லுங்கள் சகோதரரே?.

7) பொட்டல்புதூர் என்ற ஊரிலே வரதட்சனைக்கு எதிராக போர்டு வைத்த தவ்ஹித்வாதி அப்துல்காதர் என்பவரை சுன்னத் ஜமாத்துடன் சேர்ந்து கொண்டு ஊரை விட்டு தள்ளிவைத்தும் தமுமுகவை விட்டும் அவரை ஹைதர் பாய் வெளியேற்றினாரே அப்படிபட்ட தமுமுகவை தவ்ஹித் இயக்கம் என்று சொல்ல உங்களுக்கு எப்படிதான் மணம் வருகிறதோ தெரியவில்லை?

8) சவுதியிலும் மற்ற வளைகுடா நாடுகளிலும் வசூலுக்காகவும், தவ்ஹிதின் பெயரை சொல்லாமல் இயக்கம் நடத்த முடியாது என்பதால் தவ்ஹித், தவ்ஹித் என்று குரல் கொடுப்பதும் ஆனால் தமிழகத்தில் தவ்ஹிதுக்கு எதிராக எல்லா வகையிலும் காய்நகர்த்துவதும் தமுமுகவின் வழக்கமான செயல்?. இயக்கவெறி என்ற போதையிலிருந்து வெளியே வந்து பாருங்கள் உண்மை புரியும்?

உங்கள் கூற்றுபடி உண்மையிலேயே தமுமுக தவ்ஹிதுக்கு ஆதரவான இயக்கம் என்றால் அதன் பெயரை போட்டு தவ்ஹித் பிரச்சாரத்திற்க்கு கடுமையான எதிர்பு உள்ள லால்பேட்டை, வேலூர், சுல்தான் பேட்டை, பொட்டல்புதூர், சிதம்பரம் போன்ற ஊர்களில் ஒரே ஒரு தவ்ஹித் கூட்டம் போட தயாரா?. அப்படி ஒரே ஒரு கூட்டத்தை போடட்டும் பிறகு தமுமுகவை ஒரு பேருக்காவது தவ்ஹிதுக்கு ஆதரவான இயக்கம் என்று சொல்லலாம். அதுவரையாவது தமுமுக தவ்ஹிதுக்கு ஆதரவான இயக்கம் என்று காமெடி செய்யாமல் இருங்கள்.

தமுமுக கலிமா சொன்ன முஸ்லிம்களுக்காக பாடுபடுவதாக கூறி கொள்கிறது, ஆனால் தவ்ஹித் சகோதரர்களுக்கு எதிராக களத்தில் உள்ளது அப்படி என்றால் தவ்ஹித் சகோதரர்கள் கலிமா சொல்ல வில்லையா?. தமுமுக தவ்ஹிதுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை தயவு செய்து தமுமுக தவ்ஹிதை எதிர்காமலும், ஆதரிக்காமலும் இருந்தாலே போதும்.

அன்புடன்..
ஹசன்.

Sunday, July 30, 2006

ஏசி அறை கதாசிரியர்களும் கற்பனை கதைகளும்.

ஏகனின் திருப்பெரால்...
ஏசி அறை கதாசிரியர்களும் கற்பனை கதைகளும்.

அன்பு சகோதரர்களே.. அஸ்ஸலாமு அலைக்கும்.
சவுதியிலிருந்து ஏசி அறை கதாசிரியர்கள்.
தென்காசி சித்திக் என்ற தமுமுககாரர் எழுதிய அவதூறு மெயி;லை பித்னா செய்வதையே முழு நேர பணியாக கொண்ட விடியல் ரயிசுதீன் என்பவர் எனக்கு அனுப்பி இருந்தார். சகோ.பிஜெ இவர்கள் அமைப்பின் (விடியல், தமுமுக) பொய்முகத்தையும், வசூல் மோசடிகளையும் மக்களுக்கு அம்பல படுத்தி கொண்டு இருக்கிறார் என்பதாலும் அவர் தலைவராக கொண்ட ததஜ அமைப்பு இந்திய முஸ்லிம் அமைப்புகளில் முண்ணோடியாக உள்ளது என்பதால் சகோ.பிஜெயின் பெயரை களங்கப்படுத்தவும், ததஜவின் இமாலய வளர்சியை குறைக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சகோ.பிஜெவையும் கோவை கைதையும் தங்கள் கற்பனையால் தொடர்பு படுத்தி ஏதோ சிபிஐ போல இவர்கள் தங்களை நினைத்து கொண்டு சவுதியில் ஏசி அரையில் இருந்து கொண்டு தங்கள் கதைகளை வெளியிட்டு வருகிறார்கள். கோவை கைது சமுதாயத்தில் பதட்டத்தை உண்டாக்கியிருக்கும் இவ்வேளையில் இவர்களின் இது போன்ற கீழ்தரமான செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. வுpடியலின் வேலை, ஆர்.எஸ்.எஸ் சதி, ஆளுங்கட்சி, எதிர கட்சி சதி என்று செய்தி மக்களிடம் பேசப்படும் பொழுது சம்மந்தமே இல்லாமல் சகோ.பிஜெயை வம்புக்கு இழுக்கும் இவர்களின் செயலை ஓவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும்.

யார் இந்த தென்காசி சித்திக்
முதலில் யார் இந்த தென்காசி சித்திக் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும். இந்தியாவில் எங்கேயாவது குண்டு வெடித்தாலோ, அல்லது தமிழகத்தில் எங்கேயாவது குண்டோ அல்லது தீபாவளி ஊசி பட்டாசு வெடித்தாலோ, அது சம்மந்தமாக யாராவது கைது செய்யப்பட்டாலோ அதற்க்கும் சகோ.பிஜெ அவர்களுக்கும் தொடர்பு என்று இவர் கற்பனை செய்து ஒரு கதையை உண்டாக்கி அதை வெளியிட்டு ஆனந்தமடையக் கூடியவர். இவர் ஒரு வகையான சைக்கோ என்று கூட சொல்லாம்.(ஆதாரத்திற்க்கு இவருடைய அனைத்து மெயிலையும் பார்வையிடவும்) தமுமுகவில் சகோ.பிஜெ இருந்தவரை அன்பு அண்ணணாக தெரிந்த பிஜெ இன்று இவரின் இயக்க வெறியால் அபுஜஹிலாக தெரிகிறார்.

சிறைவாசிகளுக்கு பிஜெயின் உதவிகள்.
சுகோ.தென்காசி சித்திக்கிற்க்கு இருக்கும் கற்பனைக்கு எதாவது கிரைம் நாவல் எழுத போனால் நன்றாக புகழ் பெறலாம். ஆனால் நாட்டில் நடக்கிறதுக்கெல்லாம் சகோ.பிஜெதான் காரணம் என்று தொடர்ந்து சொன்னால் சைக்கோ கேஸ் என்றுதான் என்ன தோன்றுகிறது. இவருடைய உளரளுக்கு இதோ ஒரு எடுத்து காட்டு சில வாரங்களுக்கு முன்பு பித்னா ரயிசுதீன் இணையத்தில் சகோ.பிஜெ சிறைவாசிகளுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை என்று இவர் எழுதி சில ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். நான் கூட சகோ.பிஜெ சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்யவில்லை என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஆனால் தென்காசி சித்திக் வெளியிட்ட ஆதாரத்தை வைத்துதான் சகோ.பிஜெ சிறைவாசிகளுக்கு பல உதவிகள் செய்து இருக்கிறார் என்பதை தெளிவாக பல கடித ஆதரத்துடன் அறிந்து கொண்டேன். அதாவது இவர் பிஜெ அவர்கள் மீது எப்படியாவது பழி போட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்கிற வேளைகள் அவருக்கு எதிராகவே திரும்பி நம்மை தெளிவடைய வைத்தது.

பிஜெவும் பாக்கரும்
தற்போது சகோ.பிஜெவுக்கு தனக்கு அடுத்த இடத்தில் உள்ள சகோ.பாக்கரின் வளர்சி பிடிக்க வில்லையாம் அதனால் அவரை போலிஸில் மாட்டி விட சகோ.பிஜெ திட்டமிட்டு கோவைக்கு அனுப்பி வைத்தாராம். ஆனால் சகோ.பாக்கர் எப்படியோ தப்பித்து வந்து விட்டாராம். இதுதான் இவருடைய மெயிலின் முக்கிய செய்தி. நான் இது சம்மந்தமாக சில கேள்விகளை இவருக்கு முன் வைக்கிறோம் அதற்க்கு இவர் பதில் தருவாரா பார்கலாம். 1)சகோ.பாக்கர் சம்மந்தப்பட்ட செய்தி அவரே சொல்லாத நிலையில் இவருக்கு எப்படி தெரிந்தது?.2)தன்னை மாட்டிவிட பிஜெ முயற்சித்தார் என்றால் அவர் எப்படி தற்போதும் ததஜவின் பொருப்பில் இருக்கிறார் மற்றும் சகோ.பிஜெவுடன் மிகுந்த நட்புடன் தற்போதும் இருப்பது ஏன்?.உலகத்தில் யாராவது தன்னை ஒழித்து கட்ட நினைக்கிறவருடன் நட்புடன் கூடி குலாவுவார்களா, அப்படி யாராவது இருப்பார்களா?.ஆக சகோதரர் பாக்கர் தற்போதும் எப்பொழுதும் சகோ.பிஜெவுடன் மிகுந்த நட்பில் இருக்கும் பொழுது இவர் எப்படி பட்ட கற்பனைகளை வெளியிடுகிறார் என்று பார்பதை வைத்தே மற்ற அவருடைய செய்திகளை எடைபோட்டு கொள்ளலாம்.

ஹிட் லிஸ்டில் பிஜெவின் பெயர்
சுகோ.பிஜெவை பொருத்த வரை அவர் எந்த தணி நபருக்கும், எந்த அமைப்புக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் பயப்பட கூடியவர் இல்லை. முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தாலே தடா, ஜெயில் என்று பாய்ந்த காலத்திலேயே தமுமுக என்ற இயக்கத்தை உறுவாக்கி சமுதாய மக்களுக்கு குரல் கொடுக்து வளர்த்தவர். நிலைமை சீறடைந்த இன்றைய நிலையில் அரசாங்கத்திற்க்கு சவால் விடும் சமுதாய தலைவர்கள் அன்று எங்கு ஒளிந்து கொண்டிருந்தார்கள்; என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். சகோ.தென்காசி சிpத்திக் அவர்கள் எல்லா கால கட்ட ஹிட் லிஸ்டிலேயும் பிஜெவின் பெயர் மட்டும் வருவது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மற்ற சமுதாய தலைவர்கள் போல யார் சொத்தை யார் எடுத்து கொண்டால்; நமக்கென்ன என்று இருந்திருந்தால், யார் மார்கத்திற்க்கு முரணான செயலை செய்தால் நமக்கென்ன என்று கண்டு கொள்ளாமல் இருந்தால், யார் எந்த பணத்தை திருடினால் என்ன என்று சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தால், யாராவது எவனாவது எந்த தீவிரவாத இயக்கத்துடனாவது தொடர்பு வைத்து கொண்டால் நமக்கென்ன என்று சும்மா இருந்திருந்தால், தவறு செய்தவர்கள் நமது சகோதரர்கயாயிற்றே என்பதற்காக முடி மறைத்து இருந்தால், எந்த வெளிநாட்டிலிருந்து எவ்வளவு வந்தால் என்ன நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கிறதா என்று சொகுசாக வாழ்ந்திருந்தால், ஜிஹாது என்ற பெயரில் மக்களை முளை சலவை செய்தால் நமக்கென்ன என்று பயந்து ஒதுங்கியிருந்தால் இப்படி சகோ.பிஜெ மட்டும் யாருடைய தவறுகளையும் கண்டுக்கொள்ளாமல் அவர்கள் செய்கிற மார்கத்திற்க்கு முரணான மற்றும் அரசியல் சகுனி வேளைகளை, திவிராவாத நடவடிக்கைகளை கண்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவருடைய பெயர் எந்த ஹிட் லிட்டிலேயும் இருந்திருக்காது. மற்றும் இன்று இந்திய முஸ்லிம்கள் 100 சதவீதத்தினரின் தன்னிகரற்ற தலைவராக அவர் இருந்து கொண்டு இருப்பார்.

ஆனால் சமுதாயத்தின் நண்மையை கருதி அல்லாஹ்விற்க்கு பயந்து உண்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் பொழுது அவருடைய பெயர் ஹிட் லிஸ்டில் வராமல் என்ன செய்யும்?;. அதனால் பிழைப்பு நடத்தி வந்தவர்பகள் தங்கள் பிழைப்பில் பிஜெவால் மண் விழுந்தால் அவரை எதிரியாக கருதி அவரை முடிக்க நினைக்கிறார்கள்(அல்லாஹ் அவரை பாதுகாப்பானாகா). இதுதான் அவர் ஹிட் லிஸ்டில் வருவதற்கான காரணம். ஆனால் மற்ற தலைவர்களே எவன் செத்தா என்ன, எவன் பிழைத்தா என்ன, எவன் திருடியால் என்ன, எவன் எப்படி போனால் என்ன, எவன் எந்த இயக்கத்தோடு தொடர்பு வைத்தால் என்ன, எவன் எந்த வகையில் மக்களை முளை சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக ஆக்கினால் என்ன என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் மற்றவர்களின் பெயர் ஹிட் லிஸ்டில் வருவது இல்லை. இங்கு ஒரு முக்கிய செய்தி தமுமுகவில் பிஜெ இருந்த காலம் வரை ஜவாஹிருல்லா பெரும் ஐஹதர் பெயரும் ஹிட் லி;ஸ்டில் இருந்தது. இன்று அவர்களின் பெயர்கள் இல்லை அதிலிருந்து இவர்களின் அஜ்ஜஸ்ட்மேன்ட் பாலிஸியை அறியலாம்.

இந்த செய்திகள் அனைத்தும் சித்திக் அவர்களுக்கும் ரயிசுதீனுக்கும் நம்மை விட தெளிவாகவே தெரியும். இருந்தும் அவர்களின் இயக்க வெறி உண்மையை மறைத்து அவதூறுகளை பரப்ப சொல்கிறது. பிஜெ, பிஜெ என்று இப்படி இவர்கள் வெறிபிடித்து அலைவதை பார்க்கும் பொழுது இவர்கள் மேல் நமக்கு கோபம் ஏற்படவில்லை மாறாக பரிதாபம்தான் ஏற்படுகிறது. இந்த இருவரின் மற்றும் இது போன்ற இயக்க மயையில் உள்ள சகோதரர்களின் நேர்வழிக்காக இறைவனிடம் பிரார்தனை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் பிஜெ எதிர்பு வெறி என்ற குறுகிய வட்டத்தில் இருந்து இவர்கள் வெளியே வருவார்கள் என்று நம்புவோம்.

அன்புடன்
அஹமது அலி.

Thursday, July 27, 2006

தமுமுக இயக்க வெறியரின் லட்சனம் பாரீர்.

பிஸ்மில்லா.....
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரரின் ஆக்கம் கண்டேன். முத்துப்பேட்டை வலைபதிவில் உள்ள செய்தி அந்த சகோதரர் எந்த அளவுக்கு இயக்கவெறியில் முழ்கி கிடக்கிறார் என்பதற்க்கு ஆதாரமாகும். தமிழ்பேசும் மக்களுக்கு தூய இஸ்லாமிய நிகழ்சியை வழங்க அவர்களிடம் நிதி கேட்பதை சகோதரர் பிச்சை என்று கொச்சை படுத்தி இருந்தார். இவர்களை போன்றோர் பிச்சை என்று அசிங்கப்படுத்தக்கூடும் என்று நன்றாக தெரிந்தே ததஜவினர் வெளிப்படையாக நிதி கேட்கிறார்கள். இதில் இருந்து அவர்களிடம் மறைத்து வைக்க எதுவும் இல்லை அவர்கள் தூய்மையானவர்கள் என்று தெரிகிறது.

ஆனால் 2004 வருட பித்ரா, 2005 வருட பித்ரா, சுனாமி என்று கோடிக்கணக்கில் வசூலித்து விட்டு இன்று வரை கணக்கு வெளியிடாத தமுமுகவுக்கு நிகழ்சி நடத்த என்ன பிரச்சனை இருக்கிறது?. இருக்கிற நான்கு விளம்பரமும் இல்லை என்றாலும் அவர்களால் நிகழ்சி நடத்த முடியும். இதில் கடந்த 3வருடமாக திமுகவுக்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்து திமுகவின் சிறுபான்மை அணியாக செயல்படுகிறதுக்கு என்ன பெற வேண்டுமே அப்படி பெற்ற ப வேறு தமுமுககையில் இருக்கிறது இவர்களுக்கு எதற்க்கு நிதி வேண்டி பிச்சை கேட்க போகிறார்கள்?.

ததஜவின் ஒரு மணிநேர நிகழ்சி நடத்த மாதந்தோறும் 2 லட்சம் வரை செலவாகிறது என்று தெரிகிறது எத்தனை விளம்பரம் வருகிறது அதில் எவ்வளவு கிடைக்கிறது என்று சகோதரருக்கு தெரிந்து இருந்தால் இவ்வாறு நக்கலடிக்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஒரு வருடத்திற்க்கு முன்பு ததஜ நிகழ்சியை நிறுத்த நிகழ்சி தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அந்த நேரத்தை தமுமுக பெற்றதும் ததஜவின் நிகழ்சி ஒரு மாத காலம் ஒளிபரப்பாகமல் நிறுத்தப்பட்டதும் சகோதருக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. அன்று நிகழ்சியை நிறுத்த முயற்றி செய்து தோல்வி கண்டவர்கள் இன்று நிகழ்சி நடத்துபவர்களை பற்றி அவதூறு பரப்பி அசிங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவர்களின் நோக்கம் தவறாக இருக்கும் வரை இவர்கள் வெற்றி பெருவது கடினமே.

Monday, July 24, 2006

சகோதரர் முகவை தமிழன் அவர்களுக்கு


அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பு சகோதரர் முகவை தமிழன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..தங்கள் மெயில்களை தொடர்ந்து காண்கிறேன். முதலில் நடுநிலை போல தொடங்கிய தங்களின் அவதூறு பரப்பும் வேலை பிறகு பிஜெ எதிர்ப்பு என்ற ஒரு நோக்கத்தில் மட்டுமே உள்ளது. சில மெயில் விலாசமும், ஒரு இணையமும் கிடைத்து விட்டது என்பதற்காக மனதில் தோன்றிய கற்பனைகளை திரட்டி எறும்பை யானையாக்கி, யானையை எறும்பாக்கி அவதூறை வெளியிட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

தங்களின் மெயிலை பார்க்கும் பொழுது இந்தியாவின் ஐஎஸ்ஐ பூச்சாண்டிதான் ஞாபகம் வருகிறது. இந்தியாவில் மழைபெய்யவில்லை என்றால் ஐஎஸ்ஐதான் காரணம் என்பதும், அதிகமான மழை பெய்தாலும் ஐஎஸ்ஐதான் காரணம் என்பார்கள். அது போல் எந்த செய்தி எப்படியாகிலும் அதில் பிஜெயை வலுக்காட்டாயமாக இறக்கி அவர்தான் அதற்க்கு காரணம் என்று கூறும் உங்களை நினைக்கும் பொழுது அடக்க முடியாமல் சிரிப்புதான் வருகிறது. நீங்கள் மக்கள் உரிமையை கண்டிப்பீர்களாம். அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாம், அதை நீங்கள் பாராட்டுவீர்களாம். இந்த நாடகத்தை நம்ப நாங்கள் தாயரில்லை. நீங்கள் என்ன நடுநிலை வேசம் போட்டாலும் நீங்கள் விடியல் சிந்தனையில் இருந்து தமுமுகவிற்க்கு விலைபோனவர் என்று தங்கள் மெயில்களை பார்பவர்களுக்கு அப்பட்டமாக தெரியும்.

பிஜெ என்ற தனிமனிதரின் மீது அவதூறு பரப்பாமல் தங்களால் ஒரு வார காலமாவது இணையத்தை நடத்த முடியுமா?. தங்களின் மெயிலை தொடர்ந்து பார்க்கையில் தவறான புரிதல்களால் பிஜெ மீது தங்களுக்கு பயங்கர வெறுப்பு உண்டாகி அது தற்போது மனநோயின் ஆரம்ப கட்டமாக உள்ளது. கண்டிப்பாக மருத்துவரை அனுகி ஆலோசிக்கவும். அது மட்டும் இல்லாமல் தினந்தோறும் தொழுகைக்கு பிறகு அல்லாவிடம் உங்களின் மனநோய் குணமடைய பிராத்திக்கவும்.

சகோதரரே இந்த உலகம் மிகப்பெரியது பிஜெ என்ற ஒரு தனிதனிதருக்குல் அது அடங்கி விடவில்லை. பிஜெ என்பரை விட்டு வெளியே வந்து பாரக்கவும். இஸலாத்திற்க்கு எதிராக எத்தனை வேலை நடக்கின்றது என்பது புரியும். ஒரு பக்கம் கிருஸ்துவத்திற்க்கு நம் மக்களை மாற்ற மூலை சலவை நடக்கின்றது. மறு பக்கம் நமது சகோதர இந்து சகோதரர்களை நமக்கு எதிராக திருப்பும் வேளை நடக்கின்றது. மறுபக்கம் நமது இஸ்லாமியர்களே சமாதிவழிபாடு, மந்திரம், பொழுது போக்கு என்று திசை மாறி கொண்டு இருக்கிறார்கள்;. இவர்களை திருத்த உங்கள் எழுத்தை திருப்புங்கள். வெறும் பிஜெ,பிஜெ என்று 24மணிநேரமும் முழு சிந்தனையும் திருப்பி அவதூறு பரப்பி கொண்டு இருந்தால் கூடியவிரைவில் நீங்கள் சட்டையை கிழித்து கொண்டு நடு தெருவில் பைத்தியமாக திரிவது உறுதி. மற்றும் மறுமையில் ஒரு தனி மனிதன் மீது அவதூறு பரப்பியதற்காக அல்லாஹ்விடம் பெரிய தண்டனையும் கிடைக்கும்.

இதற்கான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். சகோ.பிஜெயை திட்டாமல் நேரிடையாக பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களின் மனநோயின் மாற்றத்திற்காக இறைவனிடம் பிராத்திக்கும்.
ஹசன்.
சகோதரர் முனாப் அவர்களே

gஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பு சகோதரர் முனாப் அவர்களே.. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)

ஒர் முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் சகோர்தரன் என்ற அடிப்படையில் தங்களை சகோதரன் என்று அழைக்கிறேன் அப்படி தான் சகோதரர் அவர்களும் அழைத்திருப்பார் என நம்புகிறேன்

சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்:

- 17-06-2006 -ந் pகதியிலிருந்து 3 மாதங்கள் அவகாசம் குறிப்பிடப்பட்ட நான் அனுப்பிய விவாத அழைப்பிற்கு நீர் உமது இணையத் தளத்தில் அளித்திருக்கும் பதிலிலிருந்து உமது ஞான சூனியம் தெளிவாகத் தெரிகின்றது.
- முதலில் உம்போன்ற பொய்யர் என்னை சகோதரன் என்று கூறியதற்காக நான் வெட்கப்படுகின்றேன். நீர் உலக மகா பொய்யன் என்பதற்கும்இ மிகப்பெரும் வழி கேடன் என்பதற்கும் உமது அறிக்கையே போதிய சான்றாகும்.
- அடுத்ததாக நீர் வாய்மையானவர் என்றால் நான் உமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அழைப்பிற்கான பதிலை எனது மின்னஞ்சலுக்கோ அல்லது எனது தொலை பேசி மூலமோ அல்லது எனது முகவரி ஊடாகவோ தெரிவித்திருக்க வேண்டும் அதுதான் அறிவுடமை. அதனை விட்டுவிட்டு உமது ஆதரவாளர்களை மட்டும் திருப்திப் படுத்துவதற்காக எனது பெயருக்கு விலாசமிட்டு வெட்கமின்றி உமது இணையத்தளத்தில் இட்டுள்ளமை உமது கோழைத்தனத்தையும்இ முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டுகின்றன

தாங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அதற்கு சகோதரர் Pது உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பாமல் அவர் தனது ஆதரவாளர்களை திருப்தி படுத்தும் நோக்கோடு தனது இணையதளத்தில் போட்டதாக கூறியிருக்கிறீர்கள்.

இது பச்சை பொய் அல்லவா? அவர் உங்களுக்கு அனுப்பவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்ல முடியுமா?

நீங்கள் சகோதரர் Pது அவர்களுக்கு மூன்மீடியா யாஹூ விலாசத்திற்கு அனுப்பி விட்டு அதை எனக்கும் ஊஊ பண்ணியிருந்தீர்கள். நான் கூட ஏன் இவர் நமக்கும் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன்.

அல்லாஹ்வின் நாட்டம் என் மூலம் உங்களது முகத்திரையை கிழிக்க நாடியிருக்கிறான் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் நான் ஒரு இறைவசனத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால்இ அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

தாங்கள் சகோ Pது எழுதிய மின்னஞ்சலில் எனக்கு ஊஊ பண்ணியது
சகோ Pது நீங்கள் எழுதிய மின்னஞ்சலில் நீங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தீர்களோ அவர்கள் அனவருக்கும் அனுப்பியது.தாங்கள் இது தான் என் இ-மெயில் ஐடி என்று இப்பொழுது உங்கள் மெயிலில் கூறியிருப்பது?இப்பொழுது சொல்லுங்கள்


யார் பொய்யர்?
யார் கோழை?
யார் முட்டாள்?
நபி (ஸல்) அவர்கள் ''பெரும்பாவங்களிலெல்லாம் மிகப் பெரியபாவத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?'' என வினவினார்கள். நாங்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அறிவித்துத் தாருங்கள்'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுஇ பெற்றோருக்கு நோவினை செய்வது'' என்று கூறினார்கள். அப்போது சாய்ந்து அமர்ந்திருந்த அவர்கள் எழுந்து உட்கார்ந்து கூறினார்கள்இ ''அறிந்து கொள்ளுங்கள்! பொய்ச்சொல்இ பொய்சாட்சியம்.'' நபி (ஸல்) அவர்கள் இதைத் திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்கள். அப்போது நாங்கள் 'நபி (ஸல்) அவர்கள் அமைதியாக வேண்டுமே' என்று நினைத்தோம்.

(ஸஹீஹுல் புகாரிஇ ஸஹீஹ் முஸ்லிம்)

ஒன்று தங்களுக்கு இ மெயில் பார்க்க தெரியாமல் இருக்க வேண்டும்
இல்லை பார்த்து என்ன பதில் எழுதுவது என்ற புரியாமல் வரவே இல்லை என்று பொய் கூறவேண்டும்.
தாங்கள் இணைய தளத்தில் எழுதுவதாலும்இ டாக்டர் பட்டம் பெற்றவராக இருப்பதாலும் இமெயில் தங்களுக்கு பார்க்க தெரியும் என நான் எண்ணுவதால் தாங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..


தங்கள் பொய்யர்கள் மீது சாபம் உன்டாகட்டும் என்று எழுதியுள்ளீர்கள் உங்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ளலாம் என்று ஆசைப்படுகின்றேன்.


''உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்'' (சூரா அல் பகறா : 195)


தமக்கு தாமே சாபம் இடுவது ஹராம் என்று சாமானிய ஒரு மாணவனான எனக்கு தெரிந்தது மார்க்க மேதையான தாங்களுக்கு தெரியவில்லையா?

சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்:
நான் அரபு நாட்டுப்பணத்திற்காக கூலி வேலை பார்ப்பவன் என்று நீர் ஏளனமாகக் கூறியுள்ளீர். ஆம் நான் அரபு நாட்டுப் பணத்திற்காக எனது உழைப்பை செலுத்தி அதற்கான கூலியினைப் பெறுவது உண்மையே. நீரோ என் போன்று அரபு நாட்டுப்பணத்திற்காக தனது காலத்தையும்இ சிரமத்தையும் தியாகம் செய்து உழைக்கும் அப்பாவிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை ஒட்டுண்ணி போன்று உறிஞ்சுகின்றீர். இதை எண்ணி இஸ்லாமியன் என்ற வகையில் நான் வெட்கப்படுகின்றேன்


தாங்கள் இப்பொழுது கூறியுள்ளீர்கள் என்னவோ ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிப்பதாக.. ஆனால் இதற்கு முன்னால் தாங்கள் சவாலுக்கு அழைத்த பொழுது எழுதியது நியாபகம் இருக்கிறதா?


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்

விவாதத்திற்குரிய சகல செலவினங்களும் என்னைச்சாரும். ‎


அவ்வளவு செலவும் என்னை சாரும் என்று தாங்கள் சொன்னீர்களே அது எப்படி.. அதை வைத்து வசூல் செய்யலாம் என்றா??

உங்களைச்சொல்லி குற்றமில்லை . சகோ Pது மீது யார் குற்றம் சொல்வார்கள். உடனே அவர்களுக்கு ஒரு மேடைப்போட்டு கொடுத்து திட்டச்சொல்லும் கும்பல் இருக்கும் வரை நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்.


உதாரணத்திற்கு.. அவரைப்பற்றி திட்டியவுடன் தாங்களின் பேச்சு றறற.ளைடயஅமயடஎi.உழஅ என்ற இணைய தளத்தில் வருகிறது. அது மட்டுமில்லை தாங்களை சிங்கப்பூர் வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது. இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை நீங்கள் இப்படி சொன்னால் தான் சிலர் அங்கிகரிக்கிறார்கள். இதை சிந்தித்து பார்த்தால் தாங்களுக்கே புரியும்.

அவர்களுக்கு ஒரு வசனத்தை நியாபகப்படுத்த விருப்புகிறேன்.

மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.' (5:8)

சரி தாவா உடைய விஷயத்திறக்காகவும் இ சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவும் செலவு செய்கிறீர்கள் என்று நல்லென்னம் கொண்டாலும் தாங்களின் சிங்கப்பூர் மற்றும் பாங்காக் பயணத்திற்கு இங்கு உங்கள் கொள்கையை சார்ந்த சகோதரர்கள் பணம் கேட்கிறார்களே.. நாகரிகம் கருதி அவர் பெயர் வெளியிட வில்லை..

அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பொழுது என்னடா? இது சகோ Pது சவுதிக்கு வந்து விவாதம் செய்ய கூப்பிட்டவர். அவ்வளவு செலவுக்கும் தாமே பொருப்பு ஏற்பதாக கூறியவர். இப்பொழுது அவர் இங்கே வருவதற்கு வசூல் நடக்கிறதே என்று நான் பதில் அனுப்பவில்லை..

அந்த சகோதரர் பின்பு என்னை தொடர்பு கொண்டு கேட்டபொழுது கொஞ்சம் வேலை அதிகம்இ இருந்தாலும் பதில் அனுப்பாதது தவறு தான் என்ற வருத்தம் தெரிவித்துக்கொண்டேன்.

வேண்டும் என்றால் தாங்கள் சிங்கப்பூரில் உள்ள உங்கள் சகோதரர்களிடம் ஆரிப் இடம் தாங்களின் சிங்கப்பூர் வருகைக்காக பணம் கேட்டீர்களா? என்று விசாரித்துக்கொள்ளுங்கள்


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்
அரபு நாட்டு அறிஞர்கள் எனது கருத்திலேயே இருப்பதாகவும் அவர்களை நடுவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளீர். அல்லாஹ்விற்காகவும் இறையச்சத்துடனும் மார்க்கம் பேசுபவர்கள்தான் அரபு நாட்டு அறிஞர்கள். உம்மைப்போன்று தலைக்கனம் பிடித்து கிறுக்குத்தனமாக இஸ்லாம் பேசுபவர்கள் அல்லர் அவர்கள். (கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை)
சகோதரரே தாங்கள் அவர்களிடம் தான் வேலைப்பார்கிறீர்கள் அவர்களை குளிர்விப்பதற்காக கூறுகிறீர்கள் அதைப்பற்றி ஒரு பிரச்சனையும் இல்லை. ஏதாவது பண்ணி காரியம் சாதித்துக்கொள்ளுங்கள். ஆனால் ஏன் சகோதரர் Pது அவர்களை கழுதை என்று திட்டுகிறீர்கள். ஒரு மூமின் இன்னொரு மூமினை திட்டலாமா? அவர் செயலை விமர்சியுங்கள் அதை விட்டு விட்டு தனி மனிதனை கழுதை என்று திட்டுவது ஒரு தாயிக்கு அழகல்ல?

சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்
விவாதம் நடாத்துவதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும்இ அது சவூதி அரேபியாவில் இல்லை என்றும்இ அது இந்தியாவில்தான் உள்ளதென்றும் கூறியுள்ளீர். அல்குர்ஆன்இ அல்ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிப் புரியும் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் இஸ்லாத்தினைப் பற்றி பேச முடியாமல் அந்நிய மதத்தவர்கள் ஆட்சி புரியும் ஒரு நாட்டில்தான் இஸ்லாத்தை பேச முடியும் என்று நீர் கூறியதிலிருந்து உமது முட்டாள்தனம் தெளிவாகின்றதோடு நீர் பேச வருவது இஸ்லாத்தைப் பற்றித்தானா? என்ற சந்தேகமும் எழுகின்றது.
நானும் சவுதியில் சில வருடங்கள் வேலைப்பார்த்தவன் தான்? எனக்கும் சவுதியில் என்ன நடக்கிறது என்று தெரியும்? எவ்வளவு சுதந்திரம் என்றும் தெரியும்?

இஸ்லாம் சட்டப்படி நிழற்படம் எடுக்க கூடாது? ஆனால் சவுதியில் அனைத்து அலுவலகத்திலும் மற்றும் அந்நாட்டு பணத்திலும் மன்னர் படம் போட்டுருக்கிறது. சவுதி ரியாலில் சம்பளம் வாங்கும் சகோதரர் இதை நன்றாக அறிவார்.


அங்கு குர் ஆன்இ ஹதீஸ் படி தான் ஆட்சி நடப்பதென்றால் இது எங்கே கூறப்பட்டிருக்கிறது என்று கூற வேண்டும். இல்லை அது குர் ஆன் ஹதீஸ்க்கு முரணானது என்றால்
அங்கு பேச்சு சுதந்திரம் இருக்குமென்றால் அதை எதிர்த்து தாங்கள் வரும் வெள்ளியன்று பேச வேண்டும்.
முடியுமா உங்களால்?


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்


உமது பதிலில் ஒப்பந்தம் செய்யப் பிரதிநிதிகளை அனுப்புகிறேன் என்று கூறியுள்ளீர். அதே கடிதத்தில் விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகின்றீர் என்று முன்னுக்குப்பின் முரணாகவே பேசுவதில் புலமை வாய்ந்தவர் என்பதனை நிரூபித்து காட்டுகின்றது.


எனக்கு விளங்கியவரை சொல்லுகிறேன். விவாதம் பேச வுNவுது சகோதரர்களை அங்கே அனுப்பவா? அல்லது தாங்கள் இங்கே வருகின்றீர்களா என்று கேட்பது போல் இருக்கிறது. எனக்கே விளங்கிகொள்ள முடியும் சின்ன விஷயம் டாக்டராகிய தாங்களுக்கு புரியவில்லையா?


சரி இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள். நீங்கள் விவேகாமனவர் தான் என்றால் தாங்கள் கூறுவது சத்தியம் என்றால் வருகிறேன் என்று சொல்லவேண்டியது தானே?

அதை கடைசி வரைக்கூறவே இல்லை ?


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்
நீர் இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் நான் மறுத்ததாக என்மீது அபாண்டமான பொய் சுமத்தியுள்ளீர். அவ்வாறு நீர் என்னை விவாதத்திற்கு அழைத்து நான் மறுத்தது எப்போது என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்படியில்லையென்றால் நீர் உலக மகா பொய்யன் என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் நடந்த விஷயம் எனக்கு தெரியாது.அதற்கு சகோ Pது தகுந்த பதில் அளிப்பார் என நம்புகிறேன்.
ஆனால் இப்பொழுது தாங்கள் ஓடி ஒளிகிற மாதிரி தான் தெரிகிறது.


49:9 .முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால்இ அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால்இ அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில்இ (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறுஇ அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்


(5:2) இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;


சரி இன்ஷா அல்லாஹ் தாங்களின் சிங்கப்பூர் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வரும் பொழுது தாங்களும் தங்களைச்சார்ந்தவர்களும் திட்டமிட்டு பரப்பும் சகோ Pது மீதான அவதூறுக்கு பதிலோடு வருவீர்கள் என் எதிர்பார்க்கிறேன்


நடுக்கடை யு.மு.டீ முஹம்மது ஆரிப் ஆ.ளுஉ.இஆடீயு.இ


சிங்கப்பூர்

உழnநெஉவயசகைகளூலயாழழ.உழ.ரம

ஆழடிடைந : 0065-96261627

Tuesday, July 11, 2006

நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்

பிஸ்மில்லா...
நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்
அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
தமிழ் மண்ணில் இஸ்லாம் தடம்பதித்து நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் இஸ்லாத்தின் ஆணி வேராகிய இறைமறை குர்ஆனும் இறைத் தூதர் போதனைகளும் போதுமான அளவுக்குப் போதிக்கப்படாத காரணத்தால் மூடப் பழக்கங்களில் தங்கள் முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மூழ்கிக் கிடந்த தமிழ் முஸ்லிம் சமுதாயம் 1980 களின் துவக்கத்தில் உறக்கத்திலிருந்து எழுந்து உட்காரத் தொடங்கியது எனலாம்.

உறங்கிக் கிடந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி புரையோடிப் போன மூடப்பழக்கங்களைக் கண்டித்து உண்மையான இஸ்லாத்தை உரத்த குரலில் நம் சம காலத்தில் முழங்கியவர்களில் முதலாமவர்.. தூதுத்துவத்தை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தவர்களில் பலர் ஏகத்துவத்தைக கண்டுக் கொள்ளாமலேயே இருந்த நிலையை மாற்றி தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏகத்துவத்தையும் தூதுத்துவத்தையும் முறையாகப்போதித்தவர்களில குன்றின் மேலிட்ட விளக்காகப் பிரகாசித்தவர்.ஆண்டாண்டு காலமாய் ஆழப்பதிந்து போன அறியாமை இருளகற்றி தமிழ் முஸ்லிம் சமுதாயத்தை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வந்த விடி வெள்ளி ஏகத்துவக் கொள்கையைத் தன் இதயத்தில் தாங்கி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்து ஏகப்பட்ட எதிர்ப்புகளைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக சத்தியத்தை சமுதாயத்திற்கு மத்தியில் எத்திவைத்த பெருமேதை.

ஏகத்துவக் கொள்கையைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுஇ கொண்ட கொள்கையின் உறுதியைப் பறைசாற்றி தம் மனைவி மக்களுடன் காயல் பட்டணத்தில் முபாஹலாவைச் சந்தித்த கொள்கைக் குன்று.

முஸலிம்களுக்கு மத்தியில் பிரசுரங்கள் வாயிலாக அவ்வப்போது விஸமக் கருத்துக்களைப் பரப்பி வந்த கிறிஸ்தவர்களுக்கு பாடம் புகட்ட இ நெல்லை ஜெபமனியின் சவாலை ஏற்று 4 நாட்தள் விவாதம் நடத்தி வெற்றி கண்ட வர்.

எவருமே கண்டு கொள்ளாத காதியானிக் கும்பலுடன் கோவையில் விவாதம் செய்து தூதுத்துவக் கொள்கையில் அவர்களின் குளறுபடிகளை தோலுரித்துக் காட்டியவர்.

தறி கெட்டுத் தடம் மாறிப் போன உமர் அலியையும் அவர் தம் கூட்டாளிகளையும் நேரடியாக இலங்கைக்கே சென்று விவாதம் நடத்தி அவரின் வறட்டுத் தத்துவங்களை தவிடு பொடியாக்கியவர்.

19 என்ற எண்ணை வைத்து பம்மாத்துக் காட்டிய ரஸாத் கலீபா போன்ற அரைக் கிறுக்கர்களின் கிறுக்குத் தனத்தை அம்பலப் படுத்தி அடக்கி வைத்தவர்.ஊருக்கு ஊர் சவால் விட்டுக் கொண்டுத் திரியும் வாய்ச் சவடால் பேர்வழிகளின சவால்களை ஏற்று பகிரங்கமாக அறைகூவல் விட்டு புறமுதுகிட்டு ஓடவைத்தவர்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளை பல்வேறு ஊர்களில் நடத்திஇ தவறான புரிதல்களால் இஸ்லாத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த எண்ணற்ற பிற சமயத்தவகளின் வித விதமான கேள்விகளுக்கு வியக்கத்தக்க முறையில் விடையளித்து அவர்களின் சந்தேகங்களைக் களைந்து இஸ்லாத்தின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியவர். ஏராளமான பிற சமய சகோதர சகோதரிகள் இஸ்லாம் என்னும் இன்பப் பாசறையில் இணைவதற்குக் தூண்டுகோலாக இருந்தவர்.

மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேட்டு விட்டு அப்படியே களைந்து போன கூட்டத்தினரை தேள்விகள் கேட்க வைத்து. கேட்கப் பட்ட கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதில் தந்து பாமரரையும் மார்க்க ஞானம் பெற்ற பண்டிதராக்கியவர்.

இலட்சக் கணக்கான முஸ்லிம்கள்இ மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவமாகிய ஸிர்க்கிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டு உண்மை முஸ்லிம்களாக வாழ்வதற்குக் காரணமாக இருந்தவர்.

குர்ஆனும் ஹதீஸ் நூல்களும் அரபிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற மெளலவிகளின் ஏகபோக சொத்து என்னும் நிலையை மாற்றி திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும்இ ஹதீஸ் நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பையும் அனைவரும் படித்துப் பார்த்து உண்மை இஸ்லாத்தை உணர்ந்துக் கொள்ள வைத்தவர்.

இஸ்லாமிய சமூகத்தில் புரையோடிப் போன வரதட்சனை என்னும் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்தி மக்களுக்கு உணர்த்தி மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

சமுதாயப் பேரியக்கங்களாகத் திகழ்ந்தவை எல்லாம் சரியானச் செயல் பாடுகள் இல்லாமல் மங்கி மறைந்துக் கொணடிருந்த கால கட்டத்தில் செயல் துடிப்புள்ள இளைஞர் பட்டாளத்தை உருவாக்கிச் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க வைத்தவர்.

பள்ளிவாசல்களின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடங்கிப்போன மார்க்கச் சொற்பொழிவுகளை கடல் கடந்து வாழும் பல கோடி மக்கள் கேட்டுப் பயனடையும் விதத்தில் மீடியாக்கள மூலம் கொண்டு சென்றவர்.

சீர் கெடுக்கும் சீரியல்களில் மதி மயங்கிக் கிடந்த மக்களை மாற்றி ஈமானின் கிளைகள்இ நபிமார்கள் வரலாறுஇ பிறப்பு முதல் இறப்பு வரை போன்ற மார்க்கத் தொடர் சொற் பொழிவுகளில் மக்களின் மனதைப் பறிகொடுக்க வைத்தவர்.

தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் ஒவ்வொரு முஸ்லிமும் தன்

நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும் 'இவர் யார்?'என்று.
.

Tuesday, July 04, 2006

தமுமுக தலைவர்களின் லட்சனம் பாரீர்..

ஏகனின் திருப்பெயரால்..
இஸ்லாமிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,

கீழ்கானும் வாசகங்கள் கருனாநிதியை புகழ்ந்து திமுகவின் பத்திரிக்கை முரசொலியில் வந்த செய்திகள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது எங்களை விலைக்கு வாங்க எந்த கரண்சியும் இந்த உலகில் இன்னும் அச்சடிக்கபடவில்லை என்றும் விழித்து கொண்டு இருக்கும் நேரமெல்லாம் உங்களுக்காக உழைத்து கொண்டு இருப்போம் என்று சுயதம்பட்டம் அடிக்கும் தமுமுகவின் வார இதழில் இருந்து எடுக்கப்பட்ட வாக்கியங்கள்.
அரசு சில நல்ல திட்டங்களை நிறைவேற்றும் பொழுது வரம்புமீறாமல் பாராட்டவேண்டும். அதுபோல அரசு தவறு செய்தால் தட்டி கேட்க வேண்டும். ஆனால் கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு திமுக கூட்டனியை ஆதரித்த தமுமுக பிறகு அதன் தலைவர்களின் பண, விளம்பர ஆசையால் திமுகவின் உள்பிறிவாக மாறி அதற்க்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர். அதன் தொடர்சிதான் இது. நாம் தமுமுக தலைவர்களின் துரோகத்தை தோலுறிக்கும் பொழுது சில இயக்க வெறியில் முழ்கியுள்ள, சகோதரர்கள் கோபப்பட்டு நமக்கு மெயில் அனுப்புகிறார்கள். அந்த சகோதரர்கள் நமது கீழ்கானும் கேள்விக்கு பதில் தருவார்களா?

1)கருனாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் கோவை சிறைவாசிகள் ஜாமினில் வெளியே வந்து விடுவார்கள் என்று மேடைக்கு மேடை பேசி திரிந்த தமுமுகவினர் இன்று சிறைவாசிகளின் விவகாரத்தில் தன்னால் தலையிட முடியாது என்று நீதிமன்றத்தை காட்டி நழுவிய கருனாநிதியை அவர்கள் கண்டிக்காமல் இருப்பதை எப்படி சொல்வது? சுpறைவாசிகளின் விடுதலைக்காக கருனாநிதி அரசை எதிர்த்து போராட்டம் அறிவிக்க தமுமுக தயாராகாதது ஏன்?

2) ஜெயலலிதா அமைத்தது போலி ஆணையம், ஒரு வேஸ்ட் பேப்பர் என்று முழங்கிய தமுமுக தலைவர்கள் அதை இன்று நிறுபிக்காமல் இருப்பது ஏன்?. ஆணையம் அமைக்கப்பட்டது உண்மையானது என்று அன்று நன்றாக அறிந்த நிலையில் அதை மறைத்து ஆணையத்தை விமர்சித்து திமுகவை ஆதரித்தவர்களை திமுகவிற்க்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இன்று வரை ஆணையத்தை ஒத்துக்கொண்டு மறுப்பு தெரிவிக்காதது ஏன்?.

3)ஜெயலலிதா மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் வாங்கவில்லை என்று முழுங்கிய தமுமுக இன்று கருனாநிதியே வாபஸ்வாங்கப்பட்டது உண்மைதான் என்று ஒத்துக்கொண்ட பிறகு அதை பற்றி தமுமுக மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

4)மத்தியில் இடஒதுக்கீடு தயாராகிவிட்டது இன்னும் சில மாதத்தில் இடஒதுக்கீடு அறிக்கை வெளிவந்து விடும் என்று தேர்தலில் முழங்கி வந்த தமுமுக தற்போது அதை பற்றி வாயே திறக்காமல் அதை மறைத்து அர்ஜீன் சிங், சோனியாவின் சில சிறுபான்மை சிறு திட்டங்களை பற்றி பெருமைபட்டு திரிவது ஏன்? சமுதாயத்தை அடகு வைத்து திமுகவிடம் பெற வேண்டிதை பெற்றுக்கொண்டு இன்று கருனாநிதிக்கு ஜால்ரா அடித்து தமுமுக வார இதழில் வெளியான செய்திகள்.

தமிழக முதல்வர் கருணாநிதி எப்போதெல்லாம் தமிழக எல்லையைத் தாண்டு கிறாரோ அப்போதெல்லாம் தமிழகம் தழைக்கும் திட்டங்கள் தலையெடுக்கின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஹைதரா பாத்திற்குச் சென்றால் உப்பகையிலே ஓய்வெடுப்பார். திராட்சை ரசத்தைப் பருகி பரவசம் காண்பார். ஆனால் கருணாநிதியோ, மாநிலம் தாண்டிச் சென்றாலும் தமிழகப் பயன்பாட்டுத் திட்டங்களின் ரசத்தை தமிழக மக்களுக்கே ஊட்டி மகிழ் கிறார்.

பெரும்பாலும் கருணாநிதியின் ஓய்வு என்பது தமிழ் இலக்கிய ஆய்வு என்றுதான் பொருள்படும். ஆனால் பெங்களூல் அவன் ஓய்வு என்பது தமிழக மக்களின் வேலை வாய்ப்புக்கான ஆய்வு என்று பொருள்பட்டிருக்கிறது.
கருணாநிதிக்கு ஒரு ராசி (?) உண்டு. அவர் விரும்பிய திட்டம் ஒன்றை வெளியிட்டு விடுவார். அத்திட்டம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும், பேசப்பட வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார்.

வைக்கம் வீரர் என்ற பெருமையைப் பெற்ற பெயாருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அம்சம் ஒன்று உண்டு. நெஞ்சில் தைத்த அந்த நெருஞ்சியை நீக்கும் பாங்கில், ''அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்'' என்ற சட்டத்தை இயற்றி சமூக மறுமலர்ச்சிக்கு, சமநீதிச் சிந்தனைக்கு ஊட்டமூட்டினார் கருணாநிதி.

சகோதரர்களே அப்பட்டமாக திமுகவின் தீவிர ரசிகர்களாகிவிட்ட இந்த தமுமுக தலைவர்கள்தான் இனியும் நமக்காக பாடுபாடுவார்களா?, திமுகவை நிர்பந்தித்து நமது சமுதாயத்திற்க்கு வேண்டியதை பெற்றுதருவார்கள் என்று நம்புகிறீர்களா?. பதில் சொல்லுங்கள்.

Monday, July 03, 2006

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஏகனின் திருப்பெயரால்...
விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

சகோதரர்கள் உண்மையை உரத்து கூறும் உமர், தீன் முஹம்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய மெயில் கண்டேன். தமுமுக என்ற அமைப்பை உருவாக்கிய அமைப்பாளர் சகோ.பிஜெவை நயவஞ்சகதனமாக அவருடன் இருந்த ஜவாஹிருல்லா, ஹைதர் அலி போன்றோர் பதவி, பணத்தாசையால் சதிதிட்டம் போட்டு வெளியேற்றி. அவர் வெளியேறிய மறுநாளே அவரை திட்டுவதற்காகவும் அவர் மீது பொய், அவதூறுகளை பரப்புவதற்காகவும் கள்ள இணையத்தை உலகிலேயே முதல்முறையாக தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான மெயில்களை பரப்பிவரும் தமுமுக பொட்டை நிர்வாகிகளில் ஒருவனான இளையவனை தமுமுகவை சேர்ந்த பெரும்பாலான சகோதரர்களே சைத்தான், பொய்யன் என்று கூறி அவனை மதிக்காமல் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் அவனுக்கெல்லாம் பதில் கொடுத்து கொண்டு இருக்கிறீர்களோ தெரியவில்லை. அவனது இணையதலத்தை பார்பவர்கள் உலகில் நீங்கலாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இந்த இளையவனும், மேலப்பாளைய சைத்தானும் என்ன பாட்டு பாடினாலும் கேட்பதற்க்கு யாரும் தயாரில்லை. குறிப்பாக தமுமுக சகோதரர்களே தயாரில்லை எனும் பொழுது மற்றவர்களை சொல்ல வேண்டுமா?

சகோதரர்களே உங்களுக்கு எழுத்து திறமை அதிகமாக உள்ளது. அதை சரியானபடி பயன்படுத்துங்கள். எந்த இயக்கத்தையும் ஒரு சார்பாக சாராமல் யார் தவறு செய்தாலும் அவர்களின் தவறுகளை சுட்டிகாட்டுங்கள். பெரும்பாலும் தமுமுகவே, ததஜவோ அந்த தலைமையை பற்றி கட்டுரை வெளியிடுங்கள். இளையவன் போன்ற இப்லிஸ்களை புறந்தள்ளுங்கள்.

குறிப்பாக தேர்தல் உறவு தேர்தலோடு போச்சு என்ற ததஜவை இன்று விமர்சிப்பதற்க்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் இன்று அவர்கள் நடுநிலமையோடுதான் எதையும் செய்கிறார்கள். ஆனால் தமுமுக என்ற நடிகர் கூட்டம் திமுகவுக்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்து அந்த தமுமுக தலைவர்கள் செய்கிற கேடுகெட்ட செயல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது எழுத்து விபச்சாரி சல்மாவை சந்தித்தது, பிரச்சார மேடைகளில் வேட்பாளரை கையை தூக்கி கும்பிட வைத்தது, கூட்டணி மேடையில் இடமில்லாமல் மூலைகளில் தள்ளப்பட்டு அசிங்கப்பட்டது, முதல்வருக்கு வாழ்த்து கூற சென்று புறந்தள்ளப்பட்டது என்று அடுக்கி கொண்டே செல்லலாம். சமுதாயத்திற்க்கு ஏதோ செய்து கிழித்து விடுவோம் என்று கூறிகொள்ளும் இவர்கள் இன்று செய்யும் சமுதாய பணிகள் தெரியுமா?.
1) திரைபடங்களை தலைமை தாங்கி வெளியிடுவது. அதிலும் ராம் திரைப்பட முஸ்லிம் விரோத இயக்குனர் அமீருடன் கூடி கூத்தடித்தது.
2) கவிதை புத்தக வெளியீடு என்ற வெட்டி வேளைக்கு தொடர்ந்து தலைமை தாங்குவது, அது குறித்து வாய்கிழிய உரையாற்றுவது.
3) வேறு எந்த வேளையும் இல்லை என்றால் எதாவது ஆPஇ ஆடுயு க்களை தங்கள் தலைமைக்கு அழைத்து வந்து போட்டோ எடுத்து அதை உலக மாகா சாதனை போல இணையத்தளம், பத்திரக்கை என்று வெளியிட்டு பெருமைபடுவது.
4) அந்த வேளையும் இல்லை என்றால் திமுக இதழான முரசொலியை மிஞ்சும்வகையில் திமுகவை கண்முடி ஆதரித்து, ஜால்ரா அடித்து பத்திரிக்கை வெளியிடுவது.
5) அதுவும் இல்லை என்றால் திமுக டிவியில் தலை காட்டுவது. அதை பெரிய வீர சாதனை போல விளம்பர படுத்துவது.

இது போன்ற தொடர் செயல்களைத்தான் தமுமுக தலைவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் கண்ணியத்தின் காப்பகமாக இருந்ததை இன்று களியாக்கி விட்டார்கள். அன்று செய்த பல சமுதாய பணிகள் இவர்களிடம் இருந்து இன்று வெளியேறி வெளியே சென்றது ஏன்?. ததஜ எதை செய்தாலும் போட்டிக்கு செய்யும் இவர்கள் தற்போது ததஜ தலைமை பல நூறு மாணவர்களை வைத்து கோடைகால பயற்சி முகமை மிகப்பெரிய அளவில் நடத்தும் பொழுது தமுமுக ஏன் அது போல பெரிய அளவில் எதையும் செய்யவில்லை. வருமானம் வரக்கூடிய பித்ரா, ஜக்காத், பத்திரிக்கை கட்டுரை போன்றவற்றில்தான் இவர்கள் போட்டி போடுவார்களோ?. செலவு செய்யக்கூடிய சமுதாய பணிகளை செய்யாமல் இருப்பது ஏன்?.

அதுமட்டும் இல்லாமல் ஜெயலலிதா அமைத்த இடஒதுக்கீடு ஆணையத்தை வேஸ்ட் பேப்பர், போலி ஆணையம் என்றது ஆனால் இன்று அது சரியான ஆணையம்தான் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதே போல மதமாற்ற தடை சட்டத்தை ஜெயலலிதா வாபஸ் வாங்க வில்லை என்று தமுமுக பிரச்சாரம் செய்தது ஆனால் அது வாபஸ் வாங்கப்பட்டது உண்மை என்பதை திமுக அரசு ஒத்துக் கொண்டது. மற்றும் தமுமுகவின் 2004 ஃபித்ரா திருட்டு, 2005 ஆண்டு ஃபித்ரா திருட்டு, சுனாமி திருட்டு பல உண்மைகள் மக்களுக்கு செல்ல வேண்டியுள்ளன. எனவே இதை மக்களுக்கு கொண்டு செல்ல முழு முயற்சி கொள்ளுங்கள்.

எனவே சகோதரர் தீன் முஹம்மது, உமர் அவர்களே இது போன்ற தீய தலைவர்களை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பெரும்பாலான சகோதரர்கள் இது போன்ற தலைவர்களின் உண்மை சுயருபத்தை தெரிந்திருந்தாலும் சில சகோதரர்கள் இவர்கள் இன்னும் இந்த சமுதாயத்திற்க்கு பெரிதாக எதையோ செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருப்பதை அடையாளம் காட்டி விழிப்படைய செய்யுங்கள். மேலும் எனக்கு தொடர்ந்து மெயில் அனுப்புங்கள்.
நம் அனைவரையும் அல்லாஹ் நேர்வழியில் நடத்துவானாக.

வஸ்ஸலாம்,
சைதை அஹமது அலி.

Sunday, July 02, 2006

சகோதரர் முனாப் நுபர்தீன் சவாலுக்கு மவுலவி பி.ஜெ பதில்

بسم الله الرحمن الرحيم

அன்புள்ள சகோதரர் முனாப் நூர்தீன் (நுபர்தீன்) அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் பகிரங்க விவாத அழைப்பு என்ற மெயில் என் பார்வைக்கு வந்தது.

அந்த அழைப்பிலேயே உங்கள் மதியீனம் பளிச்சிடுகிறது!

விவாதம் செய்வதாக இருந்தால் அது குறித்த விதிகளைக் கலந்து பேசி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இ;ந்தச் சாதாரண உண்மையைக் கூட அறியாதவராக நீங்கள் இருக்கின்றீர்கள்.

விவாதத்தின் விதிகள் என்று நீங்களே பட்டியல் போட்டுள்ளீர்கள்.

நீங்கள் அரபு நாட்டுப் பணத்துக்காகக் கூலி வேலை பார்ப்பதாலும், பல்வேறு பணிகளைச் சொல்லி அரபுகளிடம் 'சல்லி' (பணம்) அடிப்பதாலும்; விவாதம் சவூதி அரேபியாவில் நடைபெறும் என்றும், சவூதி அரேபிய அறிஞர்களை நடுவர்களாக வைக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக முடிவு செய்து உத்தரவு போட்டுள்ளீர்கள்.

எனக்கு இது போன்ற அவசியம் ஏதும் இல்லை. அரபுகளின் சல்லிக்கு நான் அடிமை இல்லை.

விவாதம் நடத்துவது என்றால் கருத்தைச் சொல்வதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும். அதாவது இரு தரப்புக்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவில் தான் இந்தச் சுதந்திரம் உள்ளது என்பதும், சவூதி அரேபியாவில் இந்தச் சுதந்திரம் இல்லை என்பதும் மூளையுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.

அரேபிய அறிஞர்களை நடுவர்களாக வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறீர்கள். அரேபிய மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை சல்லிக்காக நீங்கள் வாந்தி எடுக்கின்றீர்கள். எனவே நடுவர்களான அவர்களும் உங்கள் கருத்திலேயே இருக்கும் போது அவர்கள் எப்படி நடுவர்களாக இருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லை.

உங்கள் வாதப்படி தமிழ் பேசும் மக்களைத் தான் நான் குழப்புகிறேன். தமிழ் பேசும் மக்களைத் தான் நீங்களும் குழப்பத்திலிருந்து விடுவிக்க(?) முன்வருகின்றீர்கள். எனவே தமிழ் மொழியில் தமிழகத்தில் விவாதம் நடத்துவது தான் முறை.

விவாதம் நடத்துவது என்றால் முதலில் நமக்கிடையே கருத்து வேறுபாடு உள்ள விஷயங்கள்
என்ன? அதில் எந்த எந்தத் தலைப்புகள் பற்றி நீங்கள் விவாதிக்க விரும்புகிறீர்கள் என்பது தான் விவாதத்தில் முதலில் முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.
அது பற்றி உங்கள் கடிததத்தில் ஒரு வார்த்தையும் இல்லை. உண்மையாக விவாதம் நடத்துபவர்களுக்குத் தான் அது பற்றிக் கவலை? ;மூளையுள்ள எவனும் உங்களுடைய கிருக்குத்தனமான நிபந்தனையை ஏற்க மாட்டான் என்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் நாடகம் ஆடுவதால் தலைப்பைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

முனாப் நூர்தீன் அவர்களே!

உங்களிடம் உண்மையிருந்தால் விவாதம் செய்வது பற்றி சந்தித்துப் பேச முன் வாருங்கள்! இரு தரப்பும் பேசி விவாத ஒழுங்குகளை முடிவு செய்வோம்.

இலங்கையில் நமது தாய் மொழியில் விவாதம் செய்ய நீங்கள் ஒப்புக் கொண்டால் உங்களைப் போல் அரபு மொழி படிக்காத எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு இஞைரை ஏற்பாடு செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் அவ்விவாதத்தில் அவர் உங்களை வெல்வார்;. அவர் முன்னிலையில் நீங்கள் விவாதத்தில் வென்று விட்டால் நானே தோற்று விட்டதாக ஒப்புக் கொள்கிறேன். தாமதமின்றி பதில் தந்தால் தலைப்புகள் மற்றும் விவாத ஒழுங்குகளைப் பேசி ஒப்பந்தம் செய்ய பிரதிநிதியை அனுப்புகிறேன்.

அரபு மொழி தெரியாதவரிடம் விவாதம் செய்வது சாத்தியமில்லை என்ற ரெடிமேட ;பதிலை நீங்கள் அளித்தால் 'விவாதம் செய்வதற்கு அரபு மொழி தெரிந்திருப்பது அவசியமா?' என்ற தலைப்பில் அந்த இளைஞருடன் விவாதியுங்கள்;;;;;;;;.

இந்தியாவில் விவாதம் நடத்தத் தயார் என்றால் எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு இஞைரை உங்களுடன் விவாதம் செய்ய ஏற்பாடு செய்கிறேன். உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்ய இவர்களே போதும்.

விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகிறீர்கள் என்பதை ஒரு மாதத்துக்குள் தெரிவிக்கவும்.

நான் ஏற்கனவே இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் பின்னங்கால் பிடரியில் பட நீங்கள் ஓட்டம் எடுத்ததை இலங்கை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

அன்புடன்,

பி.ஜைனுல் ஆபிதீன்.

தமுமுக தலைவர்களை சுனாமி திருடர்கள் என்பது சரியா!

ஏகனின் திருப்பெயரால்..

இன்று காலை இளையவன் என்ற முகவரியுடன் சகோ.பிஜெ அவர்களுக்கு கடிதம் என்ற பெயரில் மெயில் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த மெயிலை சகோ.பிஜெவுக்கு மட்டும் அனுப்பி இருந்தால் நாம் ஒன்றும் சொல்ல போவது இல்லை ஆனால் அதை பலருக்கு பரப்பி விட்டு எனக்கும் அனுப்பியதால் அதற்க்கு பதில் அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

இளையவன் வெளியிட்ட மெயிலில் தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று உணர்வில் குறிப்பிட கூடாது என்று சகோ.பிஜெயை மிரட்டி இருந்தார். அதை அடுத்து சகோ.பிஜெ உணர்வு, முஸ்லிம் டிரஸ்ட் போன்றவற்றை திருடி விட்டார் என்றும் எழுதி இருந்தார்.

எந்த அமைப்புக்கும் சொந்தமில்லாத முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடிய டிரஸ்ட் என்பதற்க்கு அன்றிலிருந்து இன்றுவரை சகோ.பிஜெ அவர்கள்தான் ஆயுட்கால தலைவராக உள்ளார். பிறகு அவர் எப்படி தமுமுகவிலிருந்து அதை திருடி இருக்க முடியும். மக்கள் உரிமை இதழை அது ஆரம்பமானதிலிருந்து இன்றுவரை பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடுகிறார். அந்த வாரஇதழை இன்று அவர் திருடிவிட்டார் என்று சொன்னால் எப்படி அபத்தமோ அது போலத்தான் உள்ளது உணர்வு மீதான குற்றச்சாட்டு. நல்லவேளை மீடிய வேல்ட், ஏகத்துவம், பிஜெ மொழிபெயர்த்த குர்ஆன் ஆகியவற்றையும் பிஜெ திருடி சென்று விட்டார் என்று சொல்லாமல் விட்டார்களே அதுவரை சந்தோசம்தான்.

இன்று முஸ்லிம் தமிழ் பத்திரிக்கையிலேயே அதிகமாக விற்பனையாககூடிய பத்திரிக்கையாக உணர்வு இருக்கின்றது என்றால் அதற்க்கு முக்கிய காரணம் அன்றைய தமுமுகவின் உறுதியான அடிப்படை விற்பனை கட்டுமானம்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. தற்போது உணர்வில் தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று எழுதுவதில் எந்த தவறும் இல்லை என்பதுதான் எனது நிலை. ஆனால் தமுமுகவினர் உண்மையிலேயே சுனாமி மோசடி செய்திரிந்தாலும் அவர்களை பற்றி பக்கத்துக்கு 10 இடத்தில் சுனாமி திருடர்கள் என்று எழுதுவதை உணர்வு நிறுத்தி கொள்ள வேண்டும், இப்படி உணர்வு அதிகமாக எழுதுவதை பார்க்கும் பொழுது தமுமுகவை அசிங்கபடுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதை போன்று தோன்றுவதை மறுப்பதற்கில்லை.

இப்படி உணர்வில் ஒரு சில இடங்களில் சுட்டி காட்டினால்தான் தமுமுக தலைமை வேறு எந்த மோசடியிலும் ஈடுபட மாட்டார்கள் மற்றும் இது மற்ற அமைப்புகளுக்கும் ஒரு பாடமாக அமையும். ஆனால் உண்மையில்லாத தமுமுக வழிகெட்ட கூட்டம், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கூட்டம், முனாபிக் முன்னேற்ற கழகம் என்று ததஜ சகோதரர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் அது வண்மையாக கண்டிக்க தக்கது.

தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று சொல்வதே தவறு என்றால் எனது பின்வரும் கேள்விக்கு தமுமுகவினர் பதில் தரவேண்டும்.

1)பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவதற்க்கு என்று வசூலித்து விட்டு பாதியை வழங்கி மீதி சுமார் 35 லட்சத்தை மறைத்து வைத்தவர்களை சுனாமி திருடர்கள் என்று சொல்வது தவறா?

2)சுனாமி கணக்குகளை பகிரங்கமாக வெளியிட நடுவரிடம் சென்றால் எங்கே தாங்கள் திருடியது வெளியே தெரிந்து விடுமோ என அஞ்சி நம்ம ஊர் அஜ்ஜஸ்மென்ட் ஆடிட்டர் மொட்டை கணக்கை வெளியிட்டு முழு கணக்கு வெளியிட்டதாக நாடகமாடியவர்களை சுனாமி திருடர்கள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கின்றது?

3) தமிழக மக்களுக்கு வழங்குவதற்க்கு சுனாமி நிதி பற்றாத நிலையில் ஆந்திரா, அந்தமான் என்று கொடுத்தாக கள்ள கணக்கு காட்டிய தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் தவறு உண்டா?

4) மீன் பிடிப்பு வலைக்கு அட்வான்ஸ் என்று சில லட்சத்தை கணக்கு காட்டி இன்று வரை அது என்ன ஆனது என்று தெரியாமல் மறைத்தவர்களை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் என்ன தவறு?

5) அரை கோடி கணக்கில் ஒரு சிறு கணக்கு தவறையும் செய்யாமல் 100 சதவீதம் சரியாக கணக்கு வெளியிட்டதாக போலி கணக்கை தயாரித்த தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது?

6) சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று சொல்லி வசூலித்து விட்டு அந்த தொகையை அம்மக்களுக்கு வழங்காமல் நாகூரில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கன்றது?

6)முழு சுனாமி கணக்கையும் விரைவில் அனைத்து விவரத்துடன் வெளியிடுவோம் என்று தமுமுக பத்திரிக்கையில் அறிவித்து இதுவரை விவரகணக்கு வெளியிடாத தமுமுகவை சுனாமி திருடர்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

7)சுனாமி வந்து ஒன்னரை ஆண்டுகள் கழிந்த பின்பும் கணக்கை முடிக்காமல் இழுத்தடிப்பவர்களை சுனாமி திருடர்கள் என்று சொன்னால் என்ன தவறு ?.

உண்மையிலேயே தமுமுக தலைமை சுனாமி நிதியை திருடியிருந்தால் கூட இந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து அவர்கள் வாங்கிய பல லட்சம் தொகையில் இது சிறிய அளவே. தேர்தல் நிதியை கொண்டு சுனாமி கணக்கை சரிபடுத்தியிருக்க முடியும். ஆனால் தமிழ் முஸ்லிம் சமுதாயமே தமுமுகவை இத்தனை அசிங்க படுத்தியும் ஏன் கணக்கை முடிக்காமல் காலம் கடத்துகிறார்கள் என்று தெரியவில்லை ?.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால் உணர்வு தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று மட்டும்தான் குறிப்பிட்டது ஆனால் 2004,2005 வருட ஃபித்ரா விணியோக கணக்கை தமுமுக இதுவரை வெளியிடாமலும், ஃபித்ரா பணம் எங்கிருந்து வந்தது என்பதை கூட வெளியிடாமலும் இருப்பதாலும் சுனாமி திருடர்களோடு, பித்ரா திருடர்கள் என்பதையும் சேர்த்து சுட்டிகாட்டினால் சமுதாயத்திற்க்கும் நல்லது மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும் நல்லது.

வஸ்ஸலாம்,
சைதை அஹமது அலி.
ahamedali2006@gmail.com