|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, September 20, 2006

அல்கோபர் கோமாளி ரயிசுதீனுக்கு

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப்பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

விவஸ்தை கெட்ட ஜென்மம்

யார் எதைப் பேச வேண்டும் ? எதை விமர்சிக்க வேண்டும் ? என்கிற விவஸ்தை ஒன்று இருக்கிறது.

கூப்பிடு உன் சிரசில் சுமந்து வைத்துள்ள தாஇகள் என்றழைக்கப் படுகிறவர்களை ( ஜமாலி வகையறாக்களை ); நான் கடையநல்லூர் தவ்ஹீத் மதரஸாவில் பயின்று கொண்டிருக்கும் ஒரே ஒரு மாணவரைக் கொண்டு சகோதரர் பாக்கர் அவர்கள் உரையாற்றிய பேச்சுக்களை சரியா ? தவறா ? என்று விவாதிப்போம் ?

முகவையில் வைத்துக் கொள்வோமா ?

சென்னையில் வைத்துக் கொள்வோமா ?

நீ தலைமை தாங்க முடியாது அதற்குரிய அருகதை உன்னித்தில் அறவே கிடையாது. காரணம் உனது மரணத்திற்கு உன்னைப் போன்ற சக மனிதன் காரணமாக முடியும் என்று இஸ்லாமிய இயற்கை சித்தாந்தத்தை தலைகீழகாக புரட்டிய தருதலை நீ என்பதால் உனது ஜனாப் (?) கள் உனக்கு பதிலாக அமரட்டும் அழைப்புக் கொடு அவர்களை வைத்து விவாதிப்போம் .

சகோ: பாக்கர் அவர்கள் பேசியது உனது இஸ்லாமிய உணர்வுகளை மேலோங்கச் செய்ததாக சொல்லி சுய விளம்பரம் தேடிக் கொண்ட நீ ராமகோபாலனுடைய விநாயகர் சதுரத்தி ஊர்வலத்திற்க்கு மதநல்லிணக்கம் எனும் பெயரில் தனது மாவட்டப் பொறுப்பாளர்களை ஜவாஹிருல்லாஹ் அனுப்பி வைத்தது இஸ்லாமிய உணர்வுகளை மேலோங்கச் செய்யாதது ஏன் ? இதன் மூலம் இஸ்லாமிய அடிப்படை சட்டம் தகர்ந்து தூளாகிப் போனதைக் கண்டு கொதித்தெழாதது ஏன் ? ஜவாஹிருலலாஹ்வுக்கு இறுதி மூச்சு வரை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததிலிருந்து மீறுவதில்லை எனும் நோக்கிலா ? அதனால் தான் ஜவாஹிருல்லாஹ்வுக்கு ஜனாப் ( ? ) பட்டம் சூட்டி தனது வலையில் வண்ணப் படங்களுடன் பிரசுரித்து கௌரவப் படுத்தப் படுகிறதா ? ( ஜவாஹிருல்லாஹ்வுக்கு வென்சாமரம் வீசுவதன் மூலம் தன்னை தமுமுக காரர் போன்று வெளி உலகுக்கு காட்டிக் கொண்டாலும் நீ யார் என்பதும், உனது உள்நோக்கம் எதுவென்பதும் வெளி உலகக்குத் தெரியும் )

பொது மக்களுக்கு சிந்திப்பதற்கு சில வரிகள்
ததஜ மாநில பொதுச்செயலாளர் அவர்களை '' கிசுபுல்லாஹ் '' என்று வர்ணித்தமைக்கு மார்க்கம் பேசும் அவரால் மார்க்க அடிப்படையில் அர்த்தம் கூற முடியுமா ? அதுவும் அல்லாஹ்வுடையப் பெயருடன் இணைத்து. நாங்கள் அல்கோபர் கோமாளி என்கிறோம் என்றால் ? சாவதற்கு முன்னமே குழியை வெட்டி ஆரப்போட்டதால் கோமாளி என்று அழைத்தோம் எனது சாவுக்கு இன்னார் தான் காரணம் என்று எழுதி கழுத்தில் மாட்டிக் கொண்டதால் முனை மழுங்கியவர் என்றழைத்தோம் கிசுபுல்லாஹ் என்றெழுதியமைக்கு இந்த ஒழுங்காப் பிசையாத மாவு பதில் தருமா ?

சகோ? பாக்கர் அவர்களுடைய எந்த பயானையும் ஒழுங்காக கேட்காதவர் அதை அவரே ஒத்துக் கொள்ளவும் செய்கிறார் இதுதான் இஸ்லாம் டான் ஒலியில் '' எதேச்சையாக கண்ட நான் திடுக்குற்றேன் '' என்றுக் கூறுகிறார்

தலையையும் பார்க்காமல், காலையும் பார்க்காமல் நடு முண்டத்தை மட்டும் பார்த்து விட்டு அழகை வர்ணிக்கும் அறிவு கெட்ட முண்டம் என்றால் இவரை மிகையாகுமா ?

ஒரு பயானை முழுமையாக கேட்க வேண்டும் , அத்துடன் பயான் கேட்கிறோம் என்கிற சிந்தனையில் உட்கார வேண்டும் குறை கண்டுப் பிடித்தால் இங்கிதத்துடன் எடுத்துக் கூற வேண்டும்

உதாரணத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மி மக்தூம் (ரலி) அவர்களுடைய சலாமுக்கு பதில் கூற மறுத்து விட்டதையறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கோபம் கொள்கிறான் இக்கோபத்தை நபிகள் நாயகத்திற்கு தெரிவிக்கும் பொழுது ஒரு மூன்றாவது நபரிடம் பேசுவது போன்று அவர்களிடமேப் பேசிக் கடிந்து கொள்கிறான் இதைப் புரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய தவறை உணருகிறார்கள் மார்க்க அடிப்படையில் பயான் செ;யயும் ஒருவரிடம் எடுத்துக் கூறுவது இவ்வாறானதாக ( அல்லாஹ் கூறியது போல் மூன்றாமவரிடம் கூறுவது போன்றில்லாமல் நேராகப் பேசலாம் )

காரணம் மேடையில் ஒரு பேச்சாளர் மார்க்க அடிப்படையில் அமைக்கக் கூடிய வியாக்கியானம் நமதுப் புலனுக்கு எட்டாதவையாக இருக்கலாம் ஆனால் அந்த வியாக்கியானம் பெரும்பாலும் சம்பவத்தோடு பொருந்தக் கூடியதாகவே இருக்கும் நமது சிற்றறிவிற்கு எட்டாமல் போனதால் அது தப்பாகி விடுமா ? நாம் மார்க்க விஷயத்தில் எவ்வளவு பெரிய மெதை என்பதை நமது மரண அறிவிப்பு தெளிவாக படம் பிடித்துக் காட்டியதை உலகமறியும் இது இயத்தைப் பாரத்துப் பித்தளைப் ப்ளளிலித்ததாக கருதப்படாதா ?

விஷயத்திற்கு வருவோம்

தமிழ்நாடு முழுவதும் வாழக்கூடிய மக்களுக்கு தாய்மொழி தமிழ் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது அனால் இதேத் தமிழ் மாவட்டம் தோறும்இ மறி வருவதைக கவனிக்கலாம் சென்னையில் ஒரு மாதிரியாகவும், சென்னையை அடுத்த மற்ற மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரியாகவும் பேசுவார்கள் உதாரணத்திற்கு ஒருவரை அழைத்துக் கொண்டு போங்கள் என்கிற வார்த்தையை சென்னையில '' இவர தள்ளிக்கினு போப்பா '' என்பார்கள் தள்ளிக்கினு போ என்றால் முகவை மாவட்டத்தில் அர்த்தமே தலைகீழாகப் புரண்டு விடும் .

இன்றும் இலங்கை மௌலவிகள் சஹாபி பெண்மணிகளைக் குறிப்பிட்டுப் பேசும் போது ' அவள், இவள் ' என்று குறிப்பிட்டுத்தான் பேசுவார்கள் இலங்கையில் பேச்சு வழக்கிலுள்ளது அவ்வாறானதேயாகும்.

அதேப் போன்று சகோதரர் பாக்கர் அவர்கள் கிழவிகள் என்று மட்டுமே கூறினார் என்றால் அவரது மாவட்டப் பேச்சு வழக்கில் உள்ள ஒரு வார்த்தையாகும். இதை நாம் சப்பைக் கட்டவில்லை,

நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை வாய்க்கு வந்தவாறு பொய்களை அள்ளி வீசினார், நபிகள் நாயகம் கல்யாணம் செய்தது அத்தனையும் ஐம்பதைத் தாண்டியது என்றும் அவர் கூறியதை பொய் என்று வாதிடுகிறார் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த மனைவியர்களில் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களே ஒரு ஆயிஷா நாயகியை கண்ணிப் பெண்ணாக இருந்தார்கள் என்பதால் எல்லோரையும் இளைய வயதுடையவர்கள் என்றுக் கூறமுடியுமா ? அதனால் உம்முல் முஃமனீன்களில் அதினமானவர்கள் வயது முதிர்ந்தவர்களே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மறுப்பதாக இருந்தால் அவர்களுடைய உலமாப் பெருமக்கள் மத்தியில் விவாதிப்போம் வரச்சொல்லட்டும்.

அடுத்து அவர் அள்ளி வீசிய பொய்களில் நவ்பல் பின் வரக்கா அவர்களை யூதர் என்று குறிப்பிட்டதாகும் ,

நாம் கேட்பது நவ்பல் பின் வரக்கா அவர்களை இவர் முஸ்லிம் என்று சொல்ல வருகிறாரா ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனம் இறக்கி அருளப் படுவதற்கு முன் இன்ஜில், தவ்றாத் என்ற இரண்டு வேதங்களையும் கற்றறிந்த வேத விற்பண்ணராக இருந்தார் நவ்பல் பின் வரக்கா அவர்கள்.

யூதனை விட , கிருஸ்தவர் மேலென்று வாதிட வருகிறாரா ? கிருஸ்தவர் என்றுக் கூறாமல் யூதர் என்று எவ்வாறு அழைப்பது என்று Nகுட்கிறார் என்றால் யூதருக்கும் , கிருஸ்தவருக்கும் மார்க்க அடிப்படையில் என்ன வேறுபாட்டைக் காண்கிறார் என்பது நமது கேள்வி ?

யூத கிருஸ்தவர்களை உங்களுக்கு பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்பது இறைவாக்கு அதனால் ஒரு முஸ்லிமை யூதன் என்றோ, அல்லது கிருஸ்தவன் என்றோ அழைப்பது பாவமாகும், அது குற்றச் செயலாகவும் கருதப்படும், அதே நேரத்தில் மாரக்க அடிப்படையில் முஸ்லிமல்லாத எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை மொத்தத்தில் காஃபிர்கள் ( இறை நிராகரிப்பாளர்கள் ) என்றே மார்க்கம் அழைப்பதால் நவ்பல் பின் வரக்கா அவர்களை யூதர் என்றோ, கிருஸ்தவர் என்றோ அழைத்ததால் மார்க்கத்திற்கு எந்த இழிவும் குறைவும் ஏற்படாது. ''வல் முஷ்ரிக்கீன நாரி ஜஹன்னம க்ஹாலிதீன ஃபீஹா '' என்று அல்லாஹ் திட்டவட்டமாக கூறிவிட்டதால் இவர் யூதரை விட கிருஸ்தவரை தாங்கிப் பிடிக்க வருகிறாரா ? உதாரணத்திற்கு முகவைப் பொய்யனை புதுவைப் பொய்யன் என்றழைத்தால் ஊர் மட்டும் மாறும், பெயர் மாறாது. நடந்தது அவ்வளவு தான்.

அவர் பொய்யரல்ல மாபெரும் தியாகி
சகோதரர் பாக்கர் அவர்கள் நினைத்திருந்தால் அவரிடமிருந்த வசதிக்கு சென்னையில் அவரிடமிருந்து வியாபார நிருவனத்தை வளப்படுத்தி இருக்கலாம் இன்றளவும் தனது வியாபாரத்தை பொருட்படுத்தாமல் தனது நேரத்தை மார்க்கத்திற்காகவும், சமுதாய வளர்ச்சிக்காகவும் செலவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமுதாய சேவகரைப் பொய்யன் என்று குறிப்பிடுவதால் பொய்யர்கள் யார் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும் அதனால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் பொய்யர்கள் மீது இறங்கவே செய்யும்.

கேவலம் சட்டம்னற பாராளுமன்ற சீட்டுக்காக தனது தன்மாத்தை அடகு வைத்து விட்டு பொய் சொல்லக் கிளம்பியவர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் இறங்கவே செய்யும்.

சமுதாயத்தைக் கூறுப் போட்டு சமுதாயப் பெயரில் வசூல் செய்து அமுக்கிக் கொண்டவர்களுக்கு ஜனாப் என்றப் பட்டம் வழங்கி தனது ஃபித்னா வலையில் மிண்ண விட்டுக் கொண்டிருப்பதும், ஒரு அற்பக காரணத்திற்காக சன்மார்க்க தாஇகளை பொய்யர்கள் என்று முத்திரைக் குத்தி அவர்களை கானும் போதெல்லாம் முடிந்த மட்டும் குரைத்துத் தீர்ப்பது இதை எல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பார்க்காமலா இருக்கிறான் ? சத்தியத்தை வீழ்த்திட அசத்தியத்திற்கு துணைப் போகும் பொய்யர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் இறங்கவே செய்யும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'இறுதித் தீர்ப்பு நாளில் மிக மோசமான நிலையில் இருப்பவன் பிறருடைய உலக வாழ்வை வளப்படுத்துவதற்காக தன் மறுமையை அழித்துக் கொண்டவனேயாவான். அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) (மிஷ்காத்)
உண்மையை உரத்துகூறும் உமர்

இலங்கை டூ காத்தான்குடி

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

மேற்கானும் தலைப்பை அல்கோபர் கோமாளியுடைய வலையில் பார்த்திருப்பீர்கள் எழுதியது யார் ? என்பதையும் நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறோம். மொத்தக் கழிவுகளின் சங்கமமாகிய கூவம் போல் அல்கோபர் கோமாளியுடைய ஃபித்னா வலை ஆகிவிட்டதை நாம் ஏற்கனவே எழுதி இருந்தோம்.

அதை உண்மைப் படுத்தும் விதமாக ஏற்கனவே தமுமுகவின் கள்ளவெப்சைட்டில் தனது கூடாரத்தை அமைத்திருந்த ஒருவர் அதுப் பழுது பட்டதும் இப்பொழுது அல்கோபர் கோமாளியுடைய ஃபித்னா வலையில் தனது புதுக் குடிலுக்கு அஸ்த்திவாரமிட்டுள்ளார் ( இனம் இனத்தோடு சேரும் )

உள் நோக்கமில்லாத லட்சனம் பாரீர்

பிஜே தான் விரிவினைக்கு காரணகர்த்தா என்றும் தன்னை சூக்குக் கீழ் வைத்திருந்த ஜவாஹிருல்லாஹ்வை தனது சிரத்தில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டு கரகமாடினார் அப்பொழுது நான் எந்த உள் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு கரகமாடவில்லை என்று அழுத்தமாக பொதுமக்களுடைய காதுகளில் பூச்சுற்றி விட்டார் இதற்கு எது விலையாக பேசப்பட்டது என்பதை கடந்த சட்டமன்ற தேர்தலில் பார்த்தோம் அது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பதவியாகும் !

இதை உங்களால் ஜூரணிக்க முடியவில்லை என்றால் அறிவுப்பூர்வமாக ஒன்றை சிந்தியுங்கள் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக்கூறுவது அவர்களை அல்ல அவர்கள் அற்பக் கிரயத்திற்காக அறிவை அவர்களுவடய கோயபல்ஸ் தலைவர்களிடம் அடகு வைத்து விட்டு பிஜே அவர்களை ஒழித்துக்கட்டும் வரை அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்து மதுரையை எரிக்கக் கண்ணகி சபதம் பூண்டு தலைவிரிக் கோலமாக அலைந்தது போல் இந்த ஜாஹில்கள் அலைகிறார்கள்.

அதனாவ் அறிவுப் பூர்வமாக பொதுமக்களை மட்டுமே சிந்திக்கத் தூண்டுகிறோம் மூதறிஞர் பிஜே அவர்களுடன் கோயபல்ஸ் சார் இணைந்திருக்கையில் மேல்படியார் டிசம்பரை விழுங்கி விட்டதையறிந்து இருவரும் எடுத்த முடிவு தான் வளைகுடா பொறுப்பாளர் எனும் பதவியிலிருந்து கடாசி விடுவதென்று , காலச்சூழ்நிலை இருவரும் பிரிந்தப்பின் பிரிவினையை சாதகமாக்கிக் கொண்ட டிசம்பரை விழுங்கயவர் ஒருவருக்குப் பூப்பல்லக்குத் தூக்குவதும் மற்றொருவரைப் பந்தாடுகிறாரென்றால் இதில் உள்நோக்கம் இருக்கிறதா ? இல்லையா ? உள்நோக்கமில்லையென்றால் பிரிவினைக்கு முன்பே மொட்டை நோட்டீஸ்களை பிஜே அவர்கள் பெயரில் அடித்து விநியோகித்திருக்க வேண்டும் மாறாக மொட்டை நோட்டீஸை துபைக்கு விசிட் செய்திருந்த பொய்யாமொழிப் பேராசிரியர் பேரில் அடித்து விநியோகிக்க் அதை வாங்கிப் படித்தப் பேராசிரியர் போட்டாரே ஒருப்போடு அவர் போட்டப் போடு எப்படிப் பட்டதென்றால் உண்மையில் அவன் ஒரு மானுடனாக இருப்பானென்றால் அவருடைய முகத்தில் வாழ்நாளில் ஒரு முறைக் கூட விழிக்கவே மாட்டான் ஆனால் இவர் தனது சிரஸில் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாரென்றால் அதற்காக தகுதியான விலை பேசப்பட்டு;ளளது என்று ஆரம்பத்திலிருந்தே நாம் எழுதி வந்தோம் அதை கடந்த சட்டமன்ற தேர்தலில் வழங்கப்பட்டதைப் பார்த்தோம் .

தமுமுகவின் ரவுடி ஹைதர் அலி அவர்கள் சென்னையில் திமுக பிரமுகர்களின் வீடுகளில் பாளையங்கோட்டையைக் கேட்டு ஏறி இறங்கி இறுதியில் படுதோல்வி அடைந்ததை எல்லோரும் அறிவீர்கள் இறுதியில் அரசியல் சாக்கடைக் கூட தன் மீது நீந்துவதற்கு அனுமதியளிக்க வில்லை. அதனால் அந்த அசிங்கத்தில் இருந்து விடுபட முடியாமல் நீண்ட நாட்கள் கீ போர்டை தூசுப்படிய விட்டவர் இப்பொழுது பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் கீ போர்டை தூசு தட்டி விட்டுள்ளார். ( அரசியல் சாக்கடை தன் மீது நீந்துவதற்கு சீட் கொடுக்க மறுத்ததையறிந்த ரய்சுதீன் தனது கூவத்தில் நீந்துவதற்கு தற்போது சீட் கொடுத்து;ளளார் இவரும் பிற்காலத்தில் சட்டமன்றத்தையேர் – பாராளுமன்றத்தையோ கேட்டு நிற்கும் நிலையை நீங்கள் காண நேரலாம் )

ததஜ ஊடகத்தைப் பார்ப்பதில்லையாம்

ததஜ வுடைய எந்த ஊடகத்தையும் அவர் பார்ப்பதில்லையாம் நாணயத்தின் இருப் பகுதியையும் பார்ப்பவனால் மட்டுமே நாணயத்தை மதிப்பிட முடியும். அதனால் தான் உண்மை எது ? பொய் எது ? என்று அவரால் பிரிவினையிலிருந்து ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தான் பெற்றுக் கொண்ட கூலிக்கொப்ப ( சட்ட மன்ற உறுப்பினர் பதவி ) கோயபல்ஸ் போக்கே தனது போக்காக மாரடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுதும் பாராளுமன்றத்தை கருத்தில் கொண்டு மாரடிக்க புறப்பட்டுள்ளார்.

காத்தான் குடி ஜமாத்தின் மவ்லூதுக்கெதிரான அறிவிப்பை தாங்கி வந்த ததஜ வின் இணையத்தை மட்டும் பார்வையிட்டாராம் காத்தான்குடி ஜமாத் லட்டர்பேடில் எழுதி இருப்பதை கண்டுப் பிடித்து விட்டாராம்.

இதனால் பிஜேயுடைய இமேஜ் கெட்டுவிட்டது போன்று எழுதி பாராளுமன்ற சீட்டுக்காக தமுமுகவுக்கு தூபமிட்டுள்ளார்.

மாகானம் என்பது ஒரு நாடல்ல, அது ஒரு மாவட்டமாகும் என்று குறுக்கு விசாரனை செய்யத் தெரிந்த அதிமேதாவி (?)க்கு இலங்கையில் ஒரு ஜமாத்தைத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா ? ஒரு நாட்டிலிருந்து வெளியாகக் கூடிய ஒரு ஊடகத்தில் அடுத்த நாட்டின் செய்தியை தரும்போது சம்மந்தப்பட்ட நாட்டின் தலைநகரை இணைத்தே செய்தி தருவார்கள் அதனடிப்படையில் இலங்கையில் உள்ள காத்தான் குடி முஸ்லிம் ஜமாத்தை ( இலங்கை ஜமாத் ) என்று குறிப்பிடப்பட்டது.

அடுத்து
காத்தான் குடி ஜமாத் நிறைவேற்றிய மவ்லூதுக்கெதிரான தீர்மானம் களியக்காவிளையின் ஜமாலி வகையறாக்களுடனான விவாதத்தின் தாக்கம் இல்லை என்று உளறுகிறார்

களியக் காவிளையில் நடந்த விவாதம் அறவே எடிட் செய்யாமல் ததஜ தரப்பில் டான் தமிழ் ஒளியில் வெளியிடப்பட்டு அது உலகம் முழுவதுமுள்ள மக்களை தட்டி உசுப்பியது என்றால் மிகையாகுமா ? ஜமாலி வகையறாக்களுக்காக தமிழனில் தமுமுக கொத்திக் குதறி (எடிட் செய்து) வெளியிட்டதையும் உலகம் பார்த்து அதிசயித்தது என்றால் மிகையாகுமா ? மேலும் வளைகுடா முழுவதும் உள்ள ததஜ அழைப்பு பிர்ச்சார மர்கஸ்களில் களியக்காவிளை விவாத சிடிக்கள் வரலாறு கானாத விற்பனையை எட்டியது என்றால் அதுவும் மிகையாகுமா ? அதில் முக்கிமாக இலங்கை சகோதரர்கள் அதிகமாக வாங்கிச் சென்றுப் பார்த்தார்கள் இதை விட எல்லாம் கோமாளியுடன் கூட்டு வைத்துள்ள ட்யூப் லைட்களுக்கு ஹைலைட்டான விஷயம் என்ன வென்றால் இலங்கையில் ததஜ தனது கிளையை வலுவாக வேரூன்றி இருப்பதுவேயாகும். அதனால் களியக்காவிளையின் ததஜ தரப்பின் அணல் பறக்கும் சத்திய விவாதமே காத்தான் குடி ஜமாத்தை சிந்திக்கத் தூண்டி மவ்லூது குப்பையை தூக்கிக் கடாசி விடுவதற்கு எடுத்த தீர்மானமாகும்.

எங்கள் ஊர் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் உங்கள் ஊர் பனை மரத்தில் நெறி கட்டுமா ? என்று இலங்கையச்சார்ந்த சகோதரர் ஒருவர் இவரிடம் போன் போட்டுக் கேட்டாராம் ? ( அதாவது காத்தான்குடி ஜமாத்தின் மவ்லுதுக்கெதிரான தீர்ப்பு களியக்காவிளையின் தாக்கமில்லையாம். )

அது எப்படி இலங்கையைச் சார்ந்த ஒருவர் இவரிடம் கேள்வி கேட்பது ? காத்தான் குடி ஜமாத்தைச் சார்ந்த ஒருவரல்லவா கேட்டிருக்க வேண்டும் மவ்லூதுக் கெதிரான தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது காத்தான் குடியல்லவா ? இவருக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டமா ? இவரிடம் கேள்வி கேட்டவரை மட்டும் இலங்கையின் எதாவது ஒரு மூளையில் வசிப்பவராக இருக்கலாம் ஆனால் ததஜ வின் இணையம் மட்டும் இலங்கை ஜமாத் என்று குறிப்பிடக் கூடாதாம் ? இப்படிப்பட்ட ட்யூப் லைட் தான் பாளையங்கோட்டயை தனக்கு கேட்டு அடம் பிடித்தார் சீட் கொடுக்க மறுத்ததனால் ஜாக் வேறு கொடிப் பிடித்து ஊர்வலம் நடத்தியது.

எங்கள் ஊர் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் உங்கள் ஊர் பனை மரத்தில் நெறி கட்டுமா ?
கட்டாது !

ஆனால் மக்காவில் உதயமான இஸ்லாம் இலங்கைக்கு எப்படிப் போயிற்று ? பதில் சொல்ல முடியுமா போன் போட்டுக் கேட்டவர் எப்படி முஸ்லிமானார் ? சத்திய மார்க்கத்தை ஓரிடத்தில் எத்தி வைத்து விட்டால் அது செல்ல வேண்டிய இடங்களுக்கு தாமாக சென்றுக் கொள்ளும் இது இறைவாக்கு. களியக்காவிளையில் ஷிர்க்குக்கு எதிராக அடிக்கப்பட்ட சாவுமணி உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் ஒலித்து முஸ்லிம்களின் உள்ளங்களை புரட்டி எடுத்தது அதனால் அல்லாஹ் புரட்ட வேண்டிய உள்ளங்களை அதன் மூலம் புரட்டி எடுத்தான் அதுவே இலங்கை ஜமாத்தின் மவ்லூதுக்கெதிரான தீர்மாணமாகும் என்பதை ஒன்றுக்கு ஆயிரம் தடவையாக இதை அறிவிக்கிறோம்.

வான்சுடர் என்ற பத்திரிக்கையின் வாயிலாக நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் தான் ஏகத்துவத்தை இலங்கையில் முதன் முதலாக போதித்தார் அவர் இறந்ததும் தவ்ஹீதும் இறந்து விட்டது என்று இன்றளவும் இலங்கையின் சுன்னத் வல் ஜமாத்துடைய எல்லாப் பள்ளிகளிலும் குத்பாக்களில் கூறுகிறார்கள் என்றும் கூறுகிறார்.

அவ்வாறெனில் நிஸார் குவ்வத்தி அவர்கள் மரணித்ததும் கூடவே மரணித்து விட்ட தவ்ஹ்Pதை முதறிஞர் பிஜே அவர்கள் இல்கையில் புணர் நிர்மானம் செய்து நிலை நிருத்தினார்கள் என்பதை இலங்கை சுன்னத் வல் ஜமாத் குத்பாக்களில் அறிவித்ததை அவருடைய கூற்றுப் பிரகாரம் பொதுமக்கள் எடுத்துக் கொள்வதுடன் நிஸ்ஸார் குவ்வத்தி அவர்கள் மரணித்ததும் இலங்கையில் தவ்;ஹீத் மரணித்து விட்டது போல் இன்ஷா அல்லாஹ் இனி மரணிக்காது என்பதுடன் தமிழகத்திலும் மரணிக்காது காரணம் களியக்காவிளையில் ஏகத்துவ இளம் அறிஞர்கள் மத்ஹபு குப்பைகளுக்கெதிரான விவாதத்தில் கலந்து கொண்டு விவாதித்தது பெரியதொரு எடுத்துக் காட்டாகும்.

வான்சுடர் என்ற பத்திரிக்கையின் வாயிலாகத் தான் தமிழகத்திலும் தவ்ஹீத் பரவியது என்றும் புருடா விட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏகத்துவ பிரச்சாரத்தை முதறிஞர் பிஜே அவர்கள் மேற்கொண்ட காலகட்டத்தில் இவரும் அதில் இணைந்திருக்;கும் போது நம்முடைய ஏகத்துப் பிரச்சாரத்திற்கு முந்தியது கேரளத்தில் முஜாஹிதீன்களுடைய தவ்ஹீத் புரட்சியாகும் என்று கூறியுள்ளார்கள் ஆகவே ஒருக்காலமும் குவ்வத்தி அவர்களுடைய பிரச்சாரம் தாக்கததை ஏற்படுத்தி இருக்காது காரணம் அவர் மரணித்ததும் இலங்கையில் அவரது பிரச்சாரத்திற்கும் அவருடன் குழி தோண்டப் பட்டுவிட்டதாக மேல்படியாரேக் கூறுவதால் அது தமிழகத்தில் நுழைந்தது என்று சொல்வதை நாம் ஏற்றுக் கெர்ளள முடியாது. அது அந்த ட்யூப் லைட்களுனுக்கே வெளிச்சம்

1000 ரூபாய் சம்பளத்திற்கு அந்நஜாத்தில் இணைந்து பணியாற்றினார் அவசர ஆலோசனைக்காக திருச்சி வந்து போவதற்குரிய செலவுகளை அந்நஜாத்தே கொடுக்க வேண்டும், பாத்ரூம் அட்டாச் ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் ?

ஹோட்டலில் தங்கிக் கொண்டு கக்கூஸூக்கு சாலையோரத்துக்கு செல்ல முடியுமா ? அட்டாச் பாத்ரூம் வீன் விரய செலவா ? அவசர ஆலோசனைக்காக திருச்சி வந்து போவதற்குரிய செலவுகளை அந்நஜாத் தான் கொடுக்க வேண்டும் அவர் தனது பாக்கெட்டிலிருந்து போட்டு செலவு பண்ண முடியுமா ? 1000 ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு அதில் தனது குடும்பத்தை வழிநடத்துவாரா ? அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு திருச்சி வந்து போவாரா ? சமுதாயத்தின் பேரைச் சொல்லி வசூல் செய்து அமுக்;கிக் கொள்பவராக இருந்தால் பரவா இல்லை அவர் எந்த டிசம்பரையும் இதுவரை பார்க்கவே இல்லை பல டிசம்பர்களை தொடராப் பாரத்தவர்களுக்கு இது சகஜம் புரிய வேண்டியவரல்களுக்கு இதுப் புரியும்


அன்று சைக்கிள் இன்று குவாலிஸ்

குவாலிஸ் அவருடைய வீட்டுக்காக வாங்கிக் கொடுக்க வில்லை மாறாக ததஜவின் அனைத்துப் பிரச்சார தாஇகளுக்காக பாதுகாப்புக் கருதி வாங்கி வழங்கப் பட்டதாகும் மூதறிஞர் பிஜே அவர்கள் மட்டும் குவாலிஸில் பயணிப்பதாக இருந்தால் களியக் காவிளையிலிருந்து திரும்பும் போது நிகழ்ந்த விபத்தில் அவரல்லவா காயப்பட்டிருப்பார், மாறாக அவர் அதில் பயணிக்காமல் எம்.ஐ அவர்களும், கோவை ரஹ்த்துல்லாஹ் அவர்களும் விபத்துக்குள்ளானதிலிருந்து குவாலிஸ் பிஜே என்கிற தனிமனிதருக்காக வாங்கப்பட்டதல்ல மாறாக தவஹ்pத் ஜமாத் அனைத்து நிர்வாகிகளுக்காகவும் வாங்கப்பட்டதாகும். அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள் அன்று வளைகுடா தவ்ஹித் பிரச்சாரக் குழுவுக்கு பொறுப்பாளர், இன்று சட்டமன்ற – பாராளுமன்ற உறுப்பினராவதற்கு பரினாமம் பெற முயற்சிப்கவரால் புரிந்து கொள்ள முடியாது.


அல் ஜன்னத்தில் ரகசிய சம்பளம் வாங்கினார், குவைத்தில் உள்ள வெளிநாட்டு அமைப்பு தவ்ஹிது; தாஇகளுக்கென அனுப்பியப் பணத்தை வேறு ஒரு மவுலவி பெயரில் வரவழைத்து கொடுத்து வந்தது எஸ்கே தான் இதன் ரகசியம் வெளிப்பட்டதும் மதனி மீது கோபம் கொண்டு அவரை ஒதுக்க ஆரம்பித்தார் ? இவ்வாறு புலம்புகிறார்

மேல்படிப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எஸ்.கே தான் பிஜே அவர்களுக்கு வாங்கிக் கொடுத்ததாகவும்; செய்தி லீக்கானதும் எஸ்.கே மீது கோபம் கொண்டு அவரை ஒதுக்கத் தொடங்கினார் என்றும் உளறுகிறார் நாம் கேட்கிறோம் தாஇகளுக்காக மட்டுமே அந்தப் பணம் குவைத்திலிருந்து அனுப்பப் பட்டதாக அவரேக் கூறுவதால் வேரு ஒரு மூன்றாவது மௌலவிப் பெயரில் ஏன் வரவழைக்க வேண்டும் ? ஜாக்குடைய அமீராக கமாலுதீன் மதனி நியமிக்கப்பட்டிருப்பதால் அவர் பெயரில் வரவழைக்கப்பட்டு அல்லது ஜாக் நிர்வாக கணக்கு நம்பரில் வரவழைக்கப்பட்டு தாஇகளுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாமே என்பது நமது அடுத்த கேள்வி ? அடுத்து ஜாக்குடைய தலைவர் தான் இப்பணத்தை கைமாற்றி விட்டதாகவும் அவர் ஓர் இடைத்தரகர் போல் செயல்பட்டதாகவும் இவர் கூறுகிறார் இதற்கு அவசியமே இல்லை காரணம் அந்தப் பணம் தாஇகளுக்கென்றே ஒதுக்கப்பட்டு வந்ததாகும் பிஜே அவர்கள் ஒரு தாஇ அது டிசம்பர் வசூலோ – சுனாமி வசூலோ அல்ல அதனால் இதற்குள் இத்தனை ஒளிவு – மறைவு அவசியமற்ற ஒன்றாகும் அதனால் குவைத்திலிருந்து பணம் வந்தது என்பதும், மூன்றாவது பெயரில் வரவழைக்கபபட்டது என்பதும், பிஜே அவர்களுக்கு எஸ்.கே அதை ரகசியமாக கொடுத்தார் என்கிற மூன்று அடுக்கும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் மூட்டைகளாகும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் செய்தி லீக்கானதும் என்று உலறுகிறார் யார் மூலம் எப்படி ஏன் லீக்கானது ஒரு வேளை எஸ்.கே இடைத்தரகர் போன்று பணத்தை கைமாற்றி விட்டு அவரே உள்ளுக்குள் எவரிடமாவது போட்டுகு; கொடுத்திருப்பாரோ அவாள்களுக்கே வெளி;ச்சம் ,

பணக்காரர்களான ரஹ்மத் ட்ரஸ்ட் காரர்களிடம் பிஜே வீழந்து விட்டார் என்ற விமர்சனத்தை அவரே சொல்ல வைத்தார் அது செட்டப் நாடகமாகும் என்றுக் கூறுகிறார்.

அவ்வாறெனில் இப்பொழுது பிஜேயைப் பற்றி இவர் பேசுவதெல்லாம் இவரை சொல்ல வைத்தது யார் ?
இவர் சொல்லும் போது மட்டும் இவராக சொல்வாராம் ? பிறர் சொல்வது மட்டும் செட்டப் நாடகமாம் ? இதிலிருந்து கோயபல்ஸ் காரர்களிடம் வலுவான ஒன்றை பகரமாக ( சட்டமன்ற – பாராளுமன்ற சீட்டுக்காக ) பெற்றுக்கொண்டு எழுதுகிறார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். 21:18 .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

Wednesday, September 13, 2006

இனம் கண்டு கொள்ளுங்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் நம்மில் நலிந்தப் பிரிவினருக்காக செய்யும் சமுதாயப் பணிகள், மற்றும் மக்களை மார்க்கத்தின்;பால் அழைக்கும் அழைப்புப் பணிகள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்ததை நாடியதாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவைகள் அல்லாஹ்விடத்தில் ஈடேற்றம் பெறும்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியதாக நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமெனில் அவைகள் இரண்டை தழுவியதாக இருக்க வேண்டும்.

அவைகள் :
அல்லாஹ்வின் கலாம் (வார்த்தைகள்) அடங்கிய திருக்குர்ஆனையும் அகிலத்தாருக்கு அருட்கொiடையாயக அனுப்பப்பட்ட அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய தூய வாழ்க்கையுமாகும்.

இது இரண்டையும் தழுவி அழைக்கின்ற அழைப்புப்பணியும், இந்த இரண்டுடைய உபதேசத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கின்ற சமுதாயச்சேவைகள் மட்டுமே அல்லாஹ்விடத்தில் நமக்கு நற்கூலியை ஈட்டித் தருவதாக அமையும் .

இவை அல்லாமல் ( உலக ) நோக்கத்துடன் வேறு ( மாற்று மத அத்வைத ) சித்தாந்தங்களின் அடிப்படையில் செயலாற்றினால் அவைகள் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடும். அதுமட்டுமல்லாது வேறு ( மாற்று மத அத்வைத ) சித்தாந்தங்களின் அடிப்படையில் பணியாற்றும் முஸ்லீம் அமைப்புகளும் நம்மிடம் இருக்கச்செய்கின்றன அவைகளும் வசூல் காலங்கள் நெருங்கி விட்டால் மட்டும் குர்ஆன் - ஹதீஸ்கள் கூறும் தான தர்ம உபதேசங்களை கையில் பிடித்துக் கொண்டு பாமர மக்களிடம் வசூல் வேட்டையில் களம் இறங்குவார்கள் வசூல் முடிந்தப் பிறகு ஏகத்துவத்திற்கு எதிராக குரலெழுப்பக் கூடிய ஜமாலி வகையறாக்களுடைய கைகோரத்துக் கொண்டு அவர்களது கூட்டங்களுக்கு கூலிப்படையை ( தினக் கூலி தொண்டர்களை ) அனுப்பி வைக்கும் பணியில் ரகசியமாகவும் சில வேலை பராகசியமாவும் ஈடுபடுவார்கள் .


தெளிந்த நீரோடையும், கலங்கிய குட்டையும் ஒன்றாகாது .

இன்னும் மனிதர்களில் ''நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்'' என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். 2:8

(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. 2:9

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேற்கானும் திருமறை வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இரட்டை வேடம் தறித்து முஸ்லிம்களை ஏமாற்றி வந்த யூதர்களுடைய உள் நோக்கத்தைக் குறித்து இறக்கி ஏகத்துவ வாதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்தான்.


இன்றும் அதே செயல் ( நாங்களும் தவ்ஙீத் வாதிகள் தான் எனும் வேடம் ) தொடருகிறது, தங்களது ஊடகங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின் பற்றி சேவை புரிவோரை சொல்லொனாச் சொற்களைக்கொண்டு ஏளனம் கூறுபவர்கள் வசூல் செய்யும் காலங்களில் மட்டு;ம் ஏகத்துவ அடிப்படையில் வசூலித்து, விநியோகம் செய்யப்படுவதாக கூறி உங்களை ஏமாற்ற வருவார்கள் நீங்கள் ஏமாந்து விடக்கூடாது .


நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் எங்களிடத்திலும் இன்னும் தவஹீத் ஆலிம்கள் இருக்கவேச் செய்கின்றனர் என்று அவர்கள் கூறுவார்களேயானால் அவர்களது ஊடகங்களில் நாங்கள் எந்த மத்ஹபையும் சார்ந்தவர்களல்ல ஹந்தூரி கூடு கொடி ஊர்வலத்திற்கு எதிரானவர்கள், ஹத்தம் பாத்திஹாவுக்கு எதிரானவர்கள், மௌலூதுக்கு எதிரானவர்கள், பள்ளிவாசல்களில் கட்டி தொங்க விடப்பட்டுள்ள மத்ஹபுக்கு ஆதரவான போர்டுகளை உடைத்தெரிவதற்கு நாங்களும் தொடர்ந்து போராடுவோம் தொழுகையில் விரலலசைப்பது உயிரிலும் மேலானது ( காரணம் நபி வழி) என்று எழுதி அவர்களது ஊடகங்களில் போல்டு எழுத்துக்களில் எழுதி அறிவிக்கச் சொல்லுங்கள் அவ்வாறு அவர்கள் செய்யவில்லையென்றால் அது இடிமுழக்க அமைப்பாக இருந்தாலும் சரி, கள்ள பைஅத் அமைப்பாக இருந்தாலும் சரி, அடுத்தவனுடைய வியர்வையில் உதயமான கொடியையும், கட்சியையும் அமுக்கிக் கொண்ட அமைப்பாக இருந்தாலும் சரி அவ்வமைப்புகள் அனைத்தும் ஜமாலி கோஷ்டி தான் என்று தெரிந்து கொள்ளுங்கள் .

(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. 6:70

உங்களுடைய நற்செயல்களும், உங்களுடைய பொருள்களும் வீன் விரயம் ஆகாமல் அவைகள் உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் பலன் ஈட்டித் தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவைகளை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அல்லாஹ்வுடைய கூற்றையும், அவனது தூதருடைய வாழ்க்கையையும் பின்பற்றி சமுதாயப்பணி செய்வோருக்கு வழங்கி அதற்கான மறுமையின் பலனை அறுவடை செய்து கொள்ளுங்கள்.


உங்களிடமிருந்து வசூலிக்கும் ஒவ்வொருப் பைசாவுக்கும் தெளிவான கணக்கு புள்ளி விபரங்களுடன் உணர்வில் எழுதப்படும், இவ்வாறு எழுதப்படுவதன் மூலமாக உலகின் எந்த மூளையிலிருந்து எவர் நிதி வசூல் செய்து அனுப்பப்பட்டாலும் அந்த சகோதரர் அனுப்பிய இடத்திலிருந்து கொண்டே தெளிவாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இதன்மூலம் அடைந்து கொள்ளலாம்.


செலவு அதிகம் காட்டப்பட்டதாக உணர்வு கட்டிங் ஸ்கேனிங்கை அடிக்கடி காட்டுவார்கள் உண்மை அது தான் ஒரு நாள் நடத்திய விளம்பரமோ சூட்டிங்கோ அல்ல மாறாக வருடத்தைக் கடந்ததாகும் இவர்கனைப் போல் அமுக்கிக் கொள்ள வில்லை என்பதை ஒன்றுக்குப் பலமுறை கூறிக் கொள்ள விரும்புகிறோம்.


''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) 3:53.

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். ''எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். 5:83 .

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

Saturday, September 09, 2006

திருவோடுத் திருடர்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

திருவோடுத் திருடர்கள் என்றால் என்ன ?திருவோட்டைத் திருடுபவர்கள் அல்ல ! மாறாக அவனுடைய திருவோட்டில் போடப்பட்டப் பிச்சைக் காசுகளைத் திருடுபவர்களையே திருவோட்டுத் திருடர்கள் என்று கூறப்படுகிறது .

அது எவ்வாறு சாத்தியமாகும் ?

திருட்டுக்களிலேயே சிரமமில்லாமல், அச்சுறுத்தல் இல்லாமல், எளிதில் அகப்பட முடியாமல் மிக சுலபமாக திருடுவதே திருவோட்டில் திருடுவதாகும், மற்ற இடங்களில் திருடுவதற்கு அதி தீவரமாக சிந்திக்க வேண்டும் இல்லையேல் திருடச்சென்ற இடத்தில் முதுகுக்கு டின்னும், காலுக்குக் காப்பும் அணிவித்து விடுவார்கள்.

திருவோட்டை தூக்கிக்கொண்டு திரியும் பிச்சைக்காரர்களில் அநேகர் கண் தெரியாதவர்களாக, கால் நடக்க முடியாதவர்களாக, வாய் பேச முடியதாவர்களான ஊணமுற்றோராய் இருப்பர்.மனிதாபிகானம் அறவே அற்றுப்போன பாவிகள் தான் ஈவிறக்கமில்லாமல் அவ்வாறான ஊணமுற்றோரிடம் மிக சுலபமாக திருடுவார்கள்,

எவ்வளவு தான் ஊனமுற்றோராக இருந்தாலும் அவர்களுக்கும் உணர்வு ஒன்று இருக்குமல்லவா ?

உடலில் ஒரு புலன் செயலிழந்திருந்தால், மற்றொரு புலன் சிறப்பாக செயல்படும் என்பது இயல்பு தன்னுடைய மற்றொரு புலனின் உதவியுடன் தனது திருவோட்டிலிருந்து திருடப்படுவதை உணர்ந்து கொண்டு கூக்குரலிட்டால் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பிடித்து நையப்புடைத்து விடுவார்கள் என்பதால் உனக்கு 10 பைசாப் போட வேண்டும் என்னிடத்தில் சில்லரை இல்லை அதனால் ஒரு ரூபாய் துட்டைப் போட்டு விட்டு மீதி 90 பைசாவை எடுத்துக் கொள்கிறேன் என அவனிடம் கூறிவிட்டு, 10 பைசா துட்டை போட்டு விட்டு 90 பைசாவை லட்டு மாதிரி தூக்கிவிடுவான் இதைத்தான் திருவோட்டுத் திருட்டு என்பதாகும்.

சமுதாயப் போராளிகள் எனும் வேஷம் தரித்த வேடதாரிகள்.

ஏழைகளுக்கு விநியோகிப்போம் என்று கூறி ஃபித்ராவை வசூல் செய்து சிறிய தொகையை அவர்களுக்கு வழங்கி விட்டு பெரிய தொகையை லபக்கென ஒரே மூச்சில் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டார்கள், இவர்களுடைய இந்த ஈனச்செயலுக்கும், திருnவுhடுத் திருடனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஃபித்ரா என்ற தர்மம் ஒரு படி அரிசியை பெற்றுக்கொள்ள முடியாத பரம தரித்திரருக்கு மார்க்கம் கடமையாக்கப் பட்டதாகும். சுனாமி பாதிப்புக்குள்ளானோரின் நிலமை ஃபித்ராவை பெறுபவர்களைவிட துயரமானதாகும். வீடுவாசல்களை இழந்து உற்றார் உறவினர்களை இழந்து தங்களுடைய உடல், உறுப்புகளை இழந்து தவிக்கும் திக்கற்றோராவார்கள் அப்படிப்பட்டரவநளச் சேரவேண்டிதை அமுக்கிக் கொண்டார்களே, இவர்களை நம்பி இவர்களுக்குப்பின்னால் அணிவகுக்க காத்திருப்போரே சிந்திந்துக் கொள்ளுங்கள். அதனால் தான் அண்ணன் பகிரங்க அழைப்புக்கு அவர்களை அழைக்;கிறார். த.த.ஜ காரர்கள் சுனாமி வசூலை விநியோகித்துக் கொண்டிருக்கும் வேளையில் உணர்வுக்கு ஒரு வாசகர் தமுமுக காரர்கள் சுனாமி வசூலை முறையாக விநியோகம் செய்யாமல் உள்ளனர் என்று கேள்வி அனுப்பி இருந்தார் அதற்கு அவர்கள் முறையாக விநியோகம் செய்யவில்லையெனில் அவர்களை செய்யவைப்போம் , அவர்களுடைய ஊடகத்தில் வெளியிட வைப்போம் என்று டிதிலளித்திருந்தார் பார்க்க உணர்வு இதழ் உரிமை 9, குரல் 38. இது திடீரென்று கிளப்பியப் பிரச்னை அல்ல, மாறாக த.த.ஜ அலுவலகத்திற்கும், உணர்வு இதழுக்கும் மக்களிடமிருந்து தொடர்ந்து டார்ச்சர் வந்து கொண்டிருந்ததால் அண்ணன் அவர்களே இப்பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு நேராக களம் இறங்குகிறார் .

திருவோட்டுத் திருடர்கள் தெருவோரங்களின் பிச்சைக்காரர்களிடம் திருடுவார்கள், இவர்கள் பிச்சைக்காரர்கள் பேரில் அமைப்பு ரீதியாக வசூல் செய்து திருடிக் கொண்டார்கள்.

நாம் அவர்களின் கள்ளவெப்சைட்டில் வெளியான கப்ஸாக்களுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் தீவிரமாக நம்மை இணைத்துக் கொண்டு எழுதத் தொடங்கியதிலிருந்து ஃபித்ரா வசூலையும், சுனாமி வசூலையும் தமுமுக காரர்கள் விழுங்கிக் கொண்டதை சுட்டிக்காட்டி வந்தோம்.

நமக்கு தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது இருந்துவந்த சந்தேகம் மூதறிஞர் பிஜே அவர்களுடைய சமீபத்திய பகிரங்கஅழைப்பு நம்மை வியப்பின் விளிம்பிற்கே இட்டுச்சென்றது என்றால் மிகையில்லை.

ஆர்.எஸ்.எஸூம், தமுமுகவும்.

அவர்களாவது கோயில் பேரை வைத்து மேலைநாடுகளில் மில்லியனர், பில்லியனர்களிடம் வசூலித்து கோடிக்கணக்காக அமுக்கிக் கொண்டார்கள். இவர்கள் அரபு நாடுகளில் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கும் லேபர்களிடம் ஏழை,பரதேசியுடைய பேரைச்சொல்லி வசூல் செய்து அவர்களுக்கு சேர வேண்டியதை முறையாக சேர்க்காமல் அமுக்கிக் கொண்டார்கள் !

இவர்களை விட அவர்கள் ஒரு படித்தரம் மேலானவர்களா ? அல்லது சமமானவர்களா ?

இல்லை கண்டிப்பாக அவர்களைவிட இவர்கள் கீழானவர்களே ! காரணம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சுனாமி பேரில் வசூல் செய்ததை முறையாக விநியோகித்து விட்டதாக அவாள்களின் ஊடகங்கள் அப்பொழுதே செய்தி வெளியிட்டு விட்டது. இவாள்களின் ஊடகத்தில் தான் இதுவரை பைசா பாக்கி இல்லாத கணக்கை வெளியிட வில்லை,

தர்மத்தைக் கொடுத்தவனும், அதை பெறத் தகுதியுடையவனும் இவர்கள் அமுக்கிக் கொண்டதை அறிந்து அல்லாஹ்விடம் கையேந்தினால் இவர்கள் என்ன நிலைக்கு ஆளாகுவார்கள் ?

கொடுத்த தர்மத்தை திருப்பி எடுத்துக் கொண்டவனை நாய் கக்கியதை நக்குவதைப் போன்றதாகும் என்று நபிகள் நாயகம் உவமை கூறினார்கள்;. ஏழை பரதேசிகளுக்கு சேர வேண்டிதை இவர்கள் அமுக்கிக் கொண்டார்களே இவர்களுக்கு எவ்வாறான உவமை கூறுவது, உவமையைத் தேடினோம் இறுதியில் கிடைத்ததே மேற்கூறிய திருவோட்டுத் திருடர்கள் எனும்; உவமையாகும்.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. 9:34

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறப்படும்).

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையை உரத்துக்கூறும் உமர்

மஸ்ஜிதுல் முபாரக் திரிபுவாத ஃப்ளாஷ்பேக்

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

மக்களுடைய மறதியின் மீது குதிரை ஓட்டி பழக்கப்பட்ட அரசியல் வாதிகளால் கொம்பு சீவி விடப்பட்ட பொய்யன் பட்டணத்தான் சுமார் 6 மாதங்களுக்கு முன் நடந்த மஸ்ஜிதுல் முபாரக் சம்பவத்தை திருபுவாதத்தின் மூலம் திசை திருப்பி விட நினைத்து தம்முடைய முகங்களில் தாமே உமிழ்ந்துக் கொண்டதை அல்கோபர் கோமாளியுடை முகத்திலும் உமிழ்ந்து விட்டதை நடுநிலையாகளர்களுக்கு எடுத்து விளக்கி காட்ட கடமைப் பட்டுள்ளேன்.

ஃப்ளாஷ் பேக் 1,
என்றுக் கூறி 6 மாதங்களுக்கு முன்னால் நடந்த மஸ்ஜிதுல் முபாரக் சம்பவத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட்டு அவாள்களுக்கு ஷோ காட்டி உள்ளார்.


தென்காசி கோட்டாட்சியர் ரமணி சரஸ்வதி அவர்கள் பள்ளியின் சாவியை கித்வாயிடம் கொடுக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டப் பிறகும் கித்வாய் ஜாக்கினால் நியமிக்கப் பட்டவர் அதனால் கொடுக்க முடியாது என்று கோட்டாட்சியர் அவர்களிடம் எஸ்.எஸ்.யு. அவர்கள் மறுத்து விட்டதால் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கச் சொல்லி மறு உத்தரவுப் பிறப்பித்தும் அதற்கும் மறுக்கவே கோட்டாட்சியர் உத்தரவின் படி வருவாய் துறை பள்ளியை பூட்டி வீடியோ எடுத்துக் கொள்கிறது என்று தொடருபவர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் எழுதியவைகளையே மீண்டும் மீண்டும் பல இடங்களில் எழுதி பக்கங்களை நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டு தனது செஞ்சோற்றுக் கடனை தீர்த்துள்ளார்.

மறைக்க முயன்று, மறைக்க முடியாமல் வெளிப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வெளிப்பட்டு விட்டன.

அவர் எழுதியவைகளிலிருந்தே கொஞ்சம் அலசுவோம்.

ஜலீல் மதனி அவர்கள் கடையநல்லூரில் பள்ளிக் கட்;டிடப் பணி தொடங்கிய சிறிது காலத்தில் கடையநல்லூரிலேயே தங்கி கட்டிடப் பணியினை மிக விரைவாக முடித்தார்கள் பள்ளி கட்டி முடிக்கப் பட்டதும் நாடோடியாகத் திறிந்த ஸைபுல்லாஹ் ஹாஜா ஜலீல் மதனியுடைய காலைப் பிடித்து அங்கேயே தங்கி விட முயற்சி எடுத்தார்


பள்ளிக் கட்டிடப் பணியில் கவணம் செலுத்தி மிக துரிதமாக கட்டி முடித்தார் ஜலீல் மதனி அவர்கள் என்பது சரி அப்பள்ளியை மிக துரிதமாக கட்டி முடிக்க பொருளாதாரத்தை வாறி இரைத்தது யார் ? தவ்ஹீத் பள்ளி வேண்டும் என்கிற உணர்வு வளைகுடா மக்களுக்கு எந்த போதனையால் யாரால் ஊட்டப்பட்டது எந்த அமைப்பினரால் வசூல் செய்யப்பட்டது ? என்பதையும் எழுதி இருக்க வேண்டும் வளைகுடாவில் வாழக் கூடிய தமிழ் முஸ்லீம்களுக்கு எந்த கொள்கை சமுதாய உணர்வையும், மார்க்க உணர்வையும் ஊட்டியது ? என்பதை திரிபுவாத கதை எழுதும் மூடர்கள் சிந்திக்க கடமைப் பட்டு;ள்ளனர்.


ஏகஇறைவனின் ஓரிறைக்கொள்கையாகிய தவ்ஹீத் என்ற கொள்கையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு உடுத்திய வேட்டியுடன் தொண்டியை விட்டுப் புறப்பட்டவரால் ஊட்டப்பட்ட ஏகத்துவக் கொள்கை மார்க்க வளர்ச்சிக்காகவும், சமுதாய வளர்ச்சிக்காவும் எந்த பங்களிப்பையும் எந்த நேரத்திலும் செலுத்துவதற்கு தவறாத தயங்காத செயல் வீரர்களை வார்த்தெடுத்தது என்றால் மிகையாகுமா ? அவ்வாறு சமுதாய உணர்ச்சிகளை ஏகத்துவக் கொள்கையிலிருந்து ஊட்டப்பட்ட மக்களின் மாபெரும் பங்களிப்பே கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மஸ்ஜிதுல் முபாரக்கும், மஸ்ஜிதுர் ரஹ்மானுமாகும் என்று கள்ளமெயில் அனுப்பும் பெட்டைகளுக்கும் அதைப்பிரசுரிக்கும் பேடிகளுக்கும் கூறிக் கொள்கிறேன்.


20-3-2006 தென்காசி கோட்டாட்சியர் ரமணி சரஸ்வதி அவர்கள் தலைமையில் இருதரப்பு ஆவணங்களும் சமர்ப்பி;க்கப்பட்டு முறை ஜூம்ஆ நடத்த உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது என்றும் அதை நைனார் நாகேந்திரன் அவர்கள் மூலம் மாவட்ட ஆட்சி தலைவர் மூலம் தென்காசி கோட்டர்சியர் அவர்களுடைய உத்தரவை ரத்து செய்து ஒரு நாள் ஒரு இயக்கத்தினர் நிர்வகிக்க வேண்டும் எனும் உத்தரவு பிறப்பிக்கப் படுவதாகவும் இதையும் பொதுநலன் கருதி ஜாக் அமைப்பினர் ஏற்றுக் கொண்டதாகவும் ஏசி ரூம் கூலி எழுத்தர் கதை அளந்துள்ளார்.


சகோதரர்களே !!

அறிவுப் பூர்வமாக சிந்திப்போம் நைனார் நாகேந்திரன் மூலமாக மாவட்ட ஆட்சியரை கடையநல்லூர் ததஜ வினர் அனுகி இருந்தால் அன்றைய தினம் பள்ளியுடைய முழு நிர்வாகமும் ததஜவினருக்கே என்று தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும் காரணம் மாவட்ட ஆட்சியர் வரை ( கலெக்டர் வரை ) போவதென்றால் வெயிட்டாக சாதிப்பதற்காகவே செல்ல வேண்டும் எவ்வாறு இப்பொழுது மஸ்ஜிதுர் ரஹ்மானுக்காக மைதீன்; கான் மூலமாக மாவட்ட ஆட்சியரை அனுகி வக்பு வாரியம் கையகப் படுத்தியதாக அறிவிப்பு செயயப் பட்டதோ அவ்வாறிருந்திருக்க வேண்டும் மாறாக வாரம் ஒரு முறை என்பதை ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று மாற்றுவதற்காக செல்ல மாட்டார்கள் வாரம் ஒரு முறை என்பதற்கும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது இதற்காகவா மாவட்ட ஆட்சியரை அனுக வேண்டும் ?


உண்மை அதுவல்ல பள்ளி சாவியை கித்வாய் அவர்களிடம் வழங்கக் கோரி பிறப்பித்த உத்தரவுக்கடுத்து ததஜ தனது ஆவணங்களை அதே கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்தப் பின் கோட்டாட்சியர் அவர்கள் பழைய நிலையே நீடிக்கும் எனும் உத்தரவைப் பிறப்பிக்கிறார்கள் இதற்கிடையில் ஜாக்கிஜனரே பிடிக்க Nவுண்டடியவர்களைப் பிடித்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அதே ரமணி சரஸ்வதி ஒரு நாளட விட்டு ஒருநாள் எனும் தீர்ப்பை பிறப்பிக்கிறார் இதை எஸ்.எஸ்.யு அவர்கள் ஏற்றுக் கொண்டதை தமிழகம் முழுவதும் உள்ள ததஜவினர் கடுமையாக எஸ்.எஸ்.யு அவர்களைக் கடிந்து கொண்டனர் ஆனாலும் அரசு அதிகாரி ஒருவரிடம் பீஸ் மீட்டிங்கில் வாக்குறுதி கொடுத்து விட்டதால் அதன்படி நடைமுறைப் படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுவே உண்மையாகும் இதை நாம் பிப்ரவரியிலேயே எழுதியும் இருந்தோம் பட்டணத்தானுடைய கதை ஜமுக்காளத்தில் வடிகட்டியப் பொய்யாகும்..

24-2-2006 அன்று பள்ளிக்குள் நுழைந்த ஸiபுல்லாஹ் வகையறாக்கள் அடுத்த நாள் பள்ளியை ஜாக்கிடம் கொடுக்காமல் ரவுடியிஷம் செய்தார்கள்.

எது உண்மை ? என்பதை அறிவுப் பூர்வமாக சிந்திப்போம்.

24-2-2006 ம் தேதி வெள்ளிக்கிழமை அஸரிலிருந்து ததஜவுடைய நிர்வாகம் தொடருகிறது, ஒருநாள் என்றால் 25-2-2006 சனிக்கிழமை அஸர் வரை நீடிக்க வேண்டும் அதாவது 25-2-2006 அன்று மக்ரிபு தொழுகையிலிருந்து தான் நிர்வாகம் ஜாக்கிற்கு செல்ல வேண்டும்.


ஆனால் 25-2-2006 அன்று லுஹருக்கே ஏர்வாடிசிராஜ், அவருடைய சகோதரர் ஆதம், சுரண்டை இக்பால், மைதீன் சேக்கான், தலைமையில் கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களுடன் ஒருக்கும்பல் மஸ்ஜிதிற்குள் புகுகிறது. இன்றைய அஸரிலிருந்து அடுத்த நாள் லுஹர் வரைதான் ஒரு நாளா? எந்த வாத்தியாரிடம் படித்தீர்கள் ஜவாஹிருல்லாஹ் சாரிடம் படித்தீர்களோ ?


எது முறை ?

அடுத்த நாள் அஸர்வரை பொறுத்திருக்க வேண்டும் அஸர்வரை வெளியேறா விட்டால் மக்ரிபு வரையிலும் பொறுக்க வேண்டும் மக்ரிபிலும் வெளியேறா விட்டால் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரை அனுகி புகார் செய்திருக்க வேண்டும் ! அவர்களிடம் சொன்னால் அவர்கள் வந்து முறையான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். எவ்வாறெனில் ஏற்கனவே கித்வாய் அவர்களிடம் சாவியைக் கொடுக்க கோட்டாட்சியர் ரமணி சரஸ்வதி அவர்கள் பிறப்பித்த உத்தரவை ததஜ மறுத்து போலீஸ் ஆய்வாளரிடம் கொடுக்கச் சொல்லியும் மறுத்ததால் வருவாய் துறை பள்ளியைப் பூட்டி அதை வீடியோ படமும் எடுத்ததைப் போல் இதிலும் எதையாவது செய்திருப்பார்கள் இதை அவரே எழுதியும் உள்ளார்.

இவ்வாறு ஏன் செய்யவில்லை ? ஏன் லுஹருக்கே பள்ளிக்குள் நுழைந்தனர் ?

ஆக ஏர்வாடிசிராஜ், அவருடைய சகோதரர் ஆதம், சுரண்டை இக்பால், மைதீன் சேக்கான், தலைமையில் கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களுடன் புகுந்த கும்பல் மஸ்ஜிதிற்குள் இருந்த ததஜ நிர்வாகிகளை தாக்குகின்றனர் குறிப்பாக இதில் சகோதரர் ஷேகன்னா அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்கள் இந்த அநியாயாத்தை எதிர்த்த பள்ளி நிர்வாகிகள் அல்லாத தொழுகையாளிகளையும் தாக்குகி;ன்றனர் என்றால் இது ஜாக்கினருடைய திட்டமிட்ட தாக்குதலா ? இல்லையா ? இவ்வாறு திட்டமிட்டு அல்லாஹ்வின் பள்ளிக்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதலை நடத்தி விட்டு அதையே திருப்பி பள்ளியை பொறுப்பேற்க வந்த ஜாக் நிர்வாகிகளின் மீது ததஜவினர் கொலைவெறி தாக்குதலை நடத்தினர் என்று அல்லாஹ்வுடைய பயமில்லாமல் பொய்யை அரங்கேற்றுகிறார்.


தனது நன்பரை பார்க்க வந்த வெளிஊர் காரர் ஒருவரும் இதில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு;ளளதாகவும் அவர் மீது வழக்குகள் பதியப் பட்டுள்ளதாகவும் கூறுகிறார் இதிலிருந்து நாம் மேலே கூறியுள்ள விதம் ஏர்வாடிசிராஜ், அவருடைய சகோதரர் ஆதம், சுரண்டை இக்பால், மைதீன் சேக்கான், தலைமையில் கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களுடன் புகுந்த கும்பல் என்று நாம் எழுதியது வெளிச்சத்திற்கு வருவதைப் புரிந்து கொள்ளுங்கள் அந்த கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களில் ( அடியாட்களில் ) பட்டணத்தான் குறிப்பிட்டுள்ள அவரும் ஒருவர் என்பதை புரிந்து கொள்வதுடன் இதை நாம் ஏற்கனவே சம்பவம் நடந்த பிபரவரிலேயே எழுதி இருந்தோம். 6 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மூலமாகவே அவைகள் வெளிpச்சத்திற்கு வந்துள்ளன அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்.


அடுத்து சதுர அடிபுகழ் சேகன்னா தலைமையில் அடியாட்கள் பள்ளியில் மறைந்திருந்து ஜாக்கினரை தாக்கியதாகவும் போலீஸ் பள்ளிக்குள் ஏறியதாகவும் கூறி இருந்தார்.

போலீஸ் பள்ளிக்குள் ஏறியது உண்மையா ? என்றுப் பார்பபோம்

ஜாக்குடைய குண்டர் படை பள்ளிக்குள் ஏறி ததஜவினரின் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் பொழுது தகவலறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் பள்ளிக்கு வெளியில் நின்று கொண்டனர் பள்ளிக்கு வெளியில் போலீஸார் நின்றுக் கொண்டிருப்பதை அறிந்தப் பிறகே தங்களது தாக்குதலை நிருத்தி;க் கொண்டு வெளியில் வந்தனர் ஜாக் குண்டர்கள் என்பதுவே உண்மையாகும். நாம் ஏன் இதைக் குறிப்பிடுகிறோம் என்றால் ஜெயலலிதாவுடைய நிர்வாகத்தில் போலீஸ் பூட்ஸ் காலுடன் பள்ளிக்குள் ஏறிவிட்டது என்று கூறிடக் கூடாது என்பதற்காக வெளியில் காத்து நின்றோம் என்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் கூறிய தகவலாகும். முன்னுக்குப் பின் முரனாக எழுதுவதன் நோக்கம் சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆவதால் மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற லாவகத்தாலானதாகும்.


இதிலிருந்து கதை சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை கேரக்டர் தான் பட்டணத்தானுடைய கேரக்டர் என்பதை எல்லா விஷயத்திலும் தெரிந்து கொள்ளுங்கள்.


இருதரப்புக்கும் நடந்த தாக்குதலில் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்பப்பட்டது தவ்ஹீத் சகோதரர்களே என்பதை அப்பொழுதே நாம் எழுதியதுடன் உணர்விலும் வெளியிடப் பட்டிருந்தது அன்று இதை கள்ளவெப்சைட்டோ, நல்ல வெப்சைட்டோ மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது . அதில் குறிப்பாக எந்த சேகன்னா அவர்களை சதுர அடிப் புகழ் என்று அடைமொழி இட்டு அவரை ஒரு ரவுடிப்போன்றும் அவரது தலைமையில் அடியாட்கள் கொண்டு வரப்பட்டது போன்றும் எழுதப் பட்டிருந்ததோ அவரே இத்தாக்குதலில் கடுமையாக பாதிக்கப் பட்டார் என்பது அன்றைய தினம் அனைத்து மக்களும் அறிந்திருந்தனர் இன்று 6 மாதங்களைக் கடந்து மஸ்ஜிதுல் முபாரக் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தற்கு திருப்பி விடப்பட்டதையறிந்து எரிச்சலில் எத்தனைப் பெரிய பொய்யை கொஞ்சங்கூட கூச்சமில்லாமல் அரங்கேற்றுகிறார்கள் இந்த அயோக்கியர்கள் என்பதை பொதுமக்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்.

மேலும் சிந்திப்பதற்கு

தவ்ஹீத் ஜமாத் தரப்பில் அடியாட்களை ஏற்பாடு செய்து பள்ளிக்குள் ஒளித்து வைத்திருந்தால் லுஹருக்கு பள்ளிக்குள் நுழைந்த தமுமுகவின் ஏர்வாடி சிராஜ் சுரண்டை இக்பால் போன்ற ரவுடிகள் கடுமையாக தாக்கப் பட்டிருக்க வேண்டும் நிலைமை இங்கு அவ்வாறில்லை மாறாக தவ்ஹீத் சகோதரர்களே கடுiமாயான தாக்குதலுக்கு உள்ளானதாலும் மேலும் யாரை ரவுடிபோல் சதுர அடிப்புகழ் என்று அடைமெரிழி இட்டு எழுதி உள்ளாரோ அவர்களுமே கடுமையானக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் நடுநிலையாளர்கள் இவ்விஷயத்தை நியாயமாக சிந்திப்பதற்கு இறுதியாக சில வரிகள் :

ததஜ வினருடைய வக்து முடிந்து ஜாக்குடைய வக்தில் இப்பிரச்சனை நடந்திருக்குமேயானால் இதை ததஜவுடைய சதி என்று ஏற்றுக் கொள்ளலாம் மாறாக இப்பிரச்சனை ததஜவுடைய நிர்வாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்குரிய வக்து முடிவடையாத தருவாயில் இச்சம்பவம் நடந்ததால் இது முற்றிலும் ஜாக்குடைய ஆலோசனையின் அடிப்படையில் தமுமுக செயல்வடிவம் கொடுத்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்


கள்ள மெயில் அனுப்புவதற்கு புனித மக்காவில் ஆலோசனை தீட்டப்பட்டதாக உளறுகிறர்

புனித மக்காவில் இது விஷயமாக ஆலோசனை செய்யக் கூடாது என்று எஸ்.கே ஃபத்வா கொடுத்தாரா ? அல்லது பக்ரி ஃபத்வா கொடுத்தாரா ? அல்லது இம்தாதி ஃபத்வா கொடுத்தாரா ? சீட் கிடைக்காத வெறியில் மேலப்பாளைய வீதிகளில் கொள்கைகளை விட்டுக் கொடுத்து கொடிப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ய ஃபத்வா கொடுத்த எஸ்.கே இதற்கும் ஃபத்வா கொடுத்திருப்பார் என்றே நம்புகிறோம் ஒருவேளை அவர்கள் அவ்வாறு ஃபத்வா கொடுத்தது உண்மையென்றால் கள்ளவெப்சைட் காரரும், சைக்கோ வலைக்காரரும் அவர்களுக்கு எழுதி அனுப்பும் பட்;டணத்தான்களும் மக்கா செல்வதாக இருந்தால் யாரை எவருடன் எந்த வலையில் பிண்ணி விடுவது போன்ற ஃபித்னாக்களை பேசுவதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளுங்கள் .

நாங்கள் அனுப்புவது அவர்களுடைய ஃபித்னாவுக்கு பதிலடி மட்டுமேயாகும் என்று எங்கள் பணி தொடங்கப் பட்டதிலிருந்து இன்றுவரை உரத்துக் கூறி வருகிறோம் உங்கள் தரப்பு ஃபித்னாவை நிருத்திக் கொண்டால் எங்கள் தரப்பில் ஒருக்காலமும் எவரைப் பற்றியும் எழுத மாட்டோம் நாமாக எந்த அமைப்பின் மீதும் அது தடைசெய்யப்பட்ட இடிமுழக்க அமைப்பாகட்டும்;, தடைசெய்யப்படும் விளிம்பில் இருக்கும் இருட்டரைக்குள் செய்யப்படும் கள்ள பைஅத் அமைப்பாகட்டும், அல்லது அடுத்தவருடைய பேனரையும், அமைப்பையும் களவாடிய கோயபல்ஸ் காரருடைய அமைப்பாகட்டும் நாமாக முந்திக் கொண்டு எந்த அமைப்பின் மீதும் ஃபித்னாவைக் கிளப்பி விட்டது கிடையாது .


உயிரைப் பணயம் வைத்துப் போராடி வளர்த்த அமைப்பையும் பேனரையும் கூட அடுத்தவர்கள் சுருட்டிக் கொண்டதை மீண்டும் அடைந்து கொள்வதற்கு எந்த வழியையும் தேடாமல் சத்தியப் பிரச்சார தாயிகள் பழைய பணியாகிய ஏகஇறைவனின் ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்து முன்னைப் போன்றே மக்களை வென்றெடுப்பது எனும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது தேவையில்லாமல் அவர்கள் மீது இவர்கள் தான் கள்ளவெப்சைட்டைத் திறந்துகொண்டு வம்புக்கிழுத்தார்கள் என்பது பச்சிளம் பாளகர்களும் நன்கறிவர் அதனால் அவற்றிற்கு பதிலடி கொடுத்து பாமர மக்களை தெளிவடையச் செய்வது எமது பணியாகும். அதனால் புனித மக்காவில் இது விஷயமாக நாங்கள் ஆலோசனை செய்வது தடுக்கப்பட்டதல்ல, ஆகுமானதாகும். பொய்யர்களின் முகத் திரையை கிழித்து மக்களுடைய மத்தியில் இனங்காட்டுவதற்காக ஆலோசனை செய்வதற்கு மக்காவின் மற்ற எந்த இடத்தையும் விட ஹரம் ஷெரீபுக்கு உள்புற மஜ்லிஸ் இன்னும் மேலானதாகும்.

பள்ளியில் அரசுப் பண்டாரங்களை நுழைத்தது யார் என்று கேட்கிறார் ?
பள்ளிப் பிரச்சனையை அரசு அதிகாரிகள் பேசித் தீர்க்கக் கூடாதென்று எஸ்;.கே சொன்னாரா ? சொல்லியருப்பார் ! அவர் தான் ஜமாலி வகையறாக்களுடன் சேர்ந்து விட்டாரே அதனால் சொல்லி இருப்பார்.

பள்ளிக்குள் புகுந்து தொழுகையாளிகளுடைய மண்டைகளைப பிளந்து தள்ளுவது உங்களுக்கு உங்களுடைய வழிகாட்டி மேதாவிகளால் அனுமதித்திருக்கும் போது அதிலிருந்து பாதுகாப்புக்காக அரசு அதிகாரிகளை நாடுவது ஒருக்காலும் தவறாகாது இது தான் ஒரு ஜனநாயக நாட்டில் வாழுகிறவன் பேனக்கூடிய வழியுமாகும். ஜனநாயக வழியில் மக்களை வழி நடத்தக் கூடிய அமைப்பில் இருந்து செயல்பட்டால் இது புரியும் பேரிடி முழங்கும் அமைப்பில் அங்கம் வகிக்கும் கோமாளிகளுக்கு இது புரியாது.

இறுதியாக முகவை தமிழனுக்கு ஓர் எச்சரிக்கை !

எம்மை எந்த அமைப்போடும் இணைத்து முடிச்சுப் பேடுவதாக இருந்தால் நிரூபிக்க வேண்டு;ம் இல்லையேல் யார் புணைப் பெயரில் எழுதுகிறார்கள் என்ற விபரத்தைக் கூறுவதுடன் தமுமுகவிடம் சொல்லி மான நஷ்டஈடு வழக்கு தொடரச்சொல்வேன் என்று பெட்டையைப் போல் மிரட்டல் விட்டிருந்;தார் ?

என்னை ததஜவுடைய அடிப்படை உறுப்பினர் அட்டையுடன் அவரால் நிரூபிக்க முடியுமா ?

குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாளன் என்று சொல்லிக் கொண்டு வருபவனையே அடுத்த அமைப்புக் காரன் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க முடியாத நிலை இருக்கும் போது நவராத்திரி நாயகனை எந்த அமைப்புடனும் இணைத்து நிரூபிக்க முடியுமா ? என்றால் முடியாது !

ஆனால் எதாவது ஒரு அமைப்புடன் இணைத்து எழுத முடியும் எவ்வாறு என்பதை இதற்கு முந்தைய எமது மெயிலில் தெளிவாக எழுதி இருந்தேன் இன்னும் பழைய மரண பீதி அவரை விட்டு விலகவில்லை என்பதால் மாபெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் அதனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை அதனால் அதையே இங்கு மீண்டும் எழுதுகிறேன்.

ஒருவர் பிஜேபி க்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராகவும் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவர் எங்கள் பார்வையில் பிஜேபி காரரேயாகும் அவரை பிஜேபியுடன் இணைத்தே எழுதுவோம் அவரே தனது அடுத்த கட்டுரையை அல்உம்மாவுக்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராகவும் எழுதினால் அல்உம்மாவுடைய ஆதரவாளராக இணைத்து எழுதுவோம். அவரே தனது அடுத்த கட்டுரையில் விடியலுக்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராகவும் எழுதினால் விடியலுடன் இணைத்து எழுதுவோம் முகவை தமிழன் முழு நவராத்திரி நாயகனாக செயல்படுவதால் மேற்கானும் ரீதியை கடைபிடிக்கிறோம் அது விரும்பவில்லையென்றால் இடிமுழக்கத்துடன் தன்னை இன்ன அமைப்பைச் சேர்ந்தவன் என்று அறிமுகமாகிக் கொள்வது சிறந்தது.

நடுநிலையாளர் என்றால் எல்லா அமைப்பையும் சாடவேண்டும்.

எந்த அமைப்பினர் உத்தம புத்திரர்களாக நடந்து கொள்கிறார்கள் ?
ரொம்பத் தேவை இல்லை சமீபத்திய ஒரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம் திமுக அமைத்துக் கொடுத்த இரண்டு வருட கெடு ஆணையத்தை திமுகவின் சிறுபான்மை பிறிவாகிய தமுமுக அந்த ஆணையத்தை எதிர்த்து குரல் கொடுக்காததை இதுவரை ஏன் கண்டித்து எழுதவில்லை ? இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமுமுகாவால் இழைகை;கப்பட்ட மாபெரும் துரோகமாக தெரிவில்லையா ?

ததஜ மட்டுமே தன் கண்ணுக்கு குற்றமிழைப்பதாக தெரிந்தால் எந்தெந்த அமைப்புக்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராக எழுதும் போதெல்லாம் அவர் எவராக இருந்தாலும் அவரை அந்த அமைப்புடன் முடிச்சுப் போட்டு இடிமுழக்கத்துடன் முழங்கவேச் செய்வோம்.


எங்களுடைய பெயரை தாராளமாக அறிவித்துக்கொள்ளட்டும்

இந்த பெட்டை மிரட்டல் எல்லாம் எங்களுடைய குதி காலில் மிதி பட்டு விழக் கூடிய அற்ப தூசுக்கு சமமானதாகும் இன்றும் அவரையும், அவருடன் இணைந்து எழுதுபவர்களையும் எமது குதி காலுக்கு கீழாக விழும் தூசுக்கு சமமாகவே வைத்துள்ளோம் என்றும் கூறுவதுடன் அவர் ஒரு சரியான ஆண் மகனாக இருந்தால் கருத்தை கருத்துடன் மோத விட்டுப் பார்க்க வேண்டும் ? பேட்டை ரவுடிப்போன்று பொண்ணத் தனமான வார்த்தைகளை உபயோகப் படுத்தினால் நன்றாக இருக்காது என்று நாகரீகமாக கூறிக் கொள்கிறோம்.


இந்த நெருக்கடியான நேரத்தில் எம்மோடு சகோதரர் அஹமது அலியைத் தவிர துணையாக எழுத வேறு எவரும் வரவில்லையெனிலும் உமர் ஒருவராக நின்று எதிரிகளை எதிர் கொள்ள முடியும் எமக்கு அல்லாஹ் போதுமானவன்.

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். 4:76 .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்