|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, January 28, 2007

இட ஓதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாஅத் தர்னா!

முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு கோரி நாளை தவ்ஹீத் ஜமாஅத் தர்னா
நாகர்கோவில், ஜன. 28: முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை தர்னா போராட்டம் நடத்தப்படுகிறது என்று, அதன் மாநிலச் செயலர் ஹாஜா நூஹ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சிறுபான்மையினர் இட ஓதுக்கீடு விசயத்தில் அலட்சியம் காட்டும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை உணர்த்தும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும், சச்சார் கமிட்டி பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்படும்.

போராட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் குடும்பத்துடன் பங்கேற்பர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை எரிமை மீட்பு தினமாக கடைபிடிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 வரை இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றார் ஹாஜா நூஹ்.

தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் அபூதாகிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி - தினமணி 28-01-2007

Friday, January 19, 2007

தவ்ஹீதின் எழுச்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் தமுமுக!!
Monday, January 15, 2007

மக்கா நகர வீதிகளில் அலைக்கழிக்கப்பட்ட ஹாஜிகள்!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

மக்கா நகர வீதிகளில் தமுமுகவின் ஹஜ் குரூப்பினரால் அலைக்கழிக்கப்பட்ட ஹாஜிகள் !! ஓர் அலசல் ரிப்போர்ட்

உண்மையை உரத்துக் கூறும் உமர் தரும் தகவல்கள் அனைத்தும் உண்மையேயல்லாமல் வேறில்லை என்பதை இப்பொழுது அவர்களது பலசம்பவங்கள் உண்மை படுத்தி வருகிறது.

உமர் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அஹமது : வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உமர் : போன வாரமே சீக்கிரம் வந்துடுங்கோன்னு சொன்னேன் நீங்க வரல அதுனால உங்களைத் தேடி நான் வந்துட்டேன்.

அஹமது: விஷேசமான செய்தி எதுவும் இருக்கா ?

உமர் : இருக்கு !

அஹமது: சொல்லுங்க

உமர்: தமுமுக காரங்களோட ஹஜ் குரூப் ஊழலை இதற்கு முன்பு அம்பலப்படுத்தி இருந்தோம் அல்லவா அது இந்த வருஷம் வெளித்துக்கு வந்துருச்சி

அஹமது: ஏற்கனவே சொன்னதை மீண்டும் கொஞ்சம் ஞாபகப்படுத்துங்கோ மறந்துடுச்சி

ஃப்ளாஷ் பேக் - 1
--------------------------------------------------------------------
அஹமது: இந்த வருஷம் ரியாத் தமுமுக வின் ஹஜ் ஊழல் குரூப்பிலிருந்து ஜமால் மௌலவி ஜகா வாங்கிட்டாரு கேள்விப் பட்டீங்களா ?

உமர்: சத்தியத்தை இப்பத் தான் விளங்கினாரா ?

அஹமது: எது சத்தியம் ? எது அசத்தியம் என்று அவருக்;கு கொட்டாம்பட்டியில் இருக்கும் போதே தெரியும், ஆனாலும் என்ன செய்ய பணம் படுத்தும் பாடு அவரையும் ஒரு வழிப்படுத்தி விட்டது யாரெல்லாம் பணம் பண்ணும் நோக்கத்தில் தமுமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டனரோ அதே நோக்கத்தில் அவரும் தமுமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டார் பாக்கெட்டை நிரப்புவதற்காக அவர்களுடன் இருந்து கொண்டார் என்பது தனி விஷயம் இப்பொழுது உள்ள மேட்டர் அதுவல்ல , ஹஜ் செர்வீஸ் எனும் பெயரில் ரியாத் தமுமுக நடத்தும் மெகா ஊழலின் வருமானத்தில் சட்டியை அவர்கள் எடுத்துக் கொண்டு அகப்பையை மட்டும் இவருக்கு காட்டி வந்தார்களாம் கொதிப்படைந்த ஜமால் மௌலவி தனிச்சட்டிப் பார்ப்பதற்காக தனி சர்வீஸை தொடங்கி விட்டாராம் .

உமர்: அதான் கிளிக்கு ரெக்கை மொளச்சிருச்சு ஆத்த விட்டுப் பறந்துப் போயிடுச்சின்னு இளையவன் புலம்பிக் கொண்டுள்ளாரோ.

அஹமது: ஜமால் மௌலவி மட்டும் ஆத்தை விட்டுப் பறக்கல இளையவனை தனியாற்றில் விட்டு விட்டு அந்த மூவரும் கூட தொண்டரணியுடன் தனியாப்பறந்து விட்டார்களாம்.

உமர்: சூரியன் எத்திசையில் உதிக்கிறது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்

அஹமது: கண்கெட்டப் பின்னே சூரியன் எத்திசையில் உதித்தால் அவருக்கென்ன ?

உமர்: அதென்னங்க தொண்டரணி ? எதெதுக்கு தொண்டரணின்னு ஒரு வௌஸ்தை இல்லையா ? ஹஜ் செர்வீஸூக்கு எதுக்குங்க தொண்டரணி ? தமுமுக காரங்களுக்கு தவாபுலயும், ' சஈ 'யிலயும் முதலிடம் வேண்டும்; என்று கொடிப் பிடிச்சு கோஷம் போடுவதற்காகவா தொண்டரணி ?

அஹமது: அங்கப்போய் கொடிப் பிடிச்சு கோசம் போட்டா குருவிய சுடுர மாதிரி சுட்டுப் பொசுக்கிடுவான் நாம் மெகா ஊழல் என்று ஏற்கனவே சொன்னோமல்லவா ? அந்த மெகா ஊழலை பக்காவாக செய்து முடிக்கவே இந்த தொண்டரனியை யூஸ் பண்ணுவாங்க ரியாத்திலிருந்து ஹஜ் செய்வதற்கு '' தஸ்'ரீஹா '' என்று சொல்லக் கூடிய அரசு அனுமதி பெற வேண்டும் அதற்கு ஒரு தொகை செலுத்த வேண்டும் '' தஸ்ரீஹா '' இல்லாமல் அழைத்துச் சென்றால் ஒருப் பெருந்தொகையை லட்டு மாதிரி லபக்குன்னு விழுங்கிடுவாங்க இந்த '' லபக் ''குக்காகத் தான் அந்த தொண்டரனி வழியில் சோதனைச் சாவடியில் மாட்டிக் கொண்டால் இஹ்ராம் அணிந்த ஹாஜிகள் தவியாய் தவிக்கும் பொழுது தொண்டரணியினர் ஹாஜிகளை கொரில்லா மாதிரி ' லபக் ' கென கொத்திச் சென்று வேறு வழியாக மக்காவில் திணித்து விடுவர் இதற்குத் தான் தொண்டரனியினர் இதல்லாமல் கொடிப் பிடித்துக் கோஷம் போடுவதற்கல்ல இஹ்ராம் அணிந்து இஸ்லாமிய அரசை ஏமாற்றுவதற்காக என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

உமர்: என்று திருந்துமோ இந்த பாஜில் பாகவிகள் கூட்டம் ?
--------------------------------------------------------------------

உமர்: இந்த வருஷம் தனிச் சட்டிப் பார்க்கும் ஆசையில் தனித் தனியாகப் பறந்தவர்கள் அனைவரும் மெகா ஊழல் செய்து தங்களது தலைமைக்கும், தலைவன் கோயபல்ஸூக்கும் நல்லப் பெயர் ??? எடுத்துக் கொடுத்துள்ளனர்

அஹமது: விவரமா சொல்லுங்க.

உமர்: இந்த வருஷம் அவர்களுடன் பயணித்த அனைத்து ஹாஜிகளுக்கும் ' தஸ்'ரீஹா ' ( அரசு அனுமதி ) பெறவில்லையாம் மினாவில் டென்டுக்கும் முன்பதிவு செய்ய வில்லையாம் இந்த இரண்டுக்காகத் தான் ஹாஜிகளிடத்தில் 1500 ரியால் வசூல் செய்கின்றார்கள் வாகனத்திற்;கான செலவும், சாப்பாட்டுக்கான செலவும் எவ்வளவு தான் அதிகமாத ஒதுக்கினாலும் 300 லிருந்து 500 வரை ஆகலாம் இது அதிகபட்சம் மீதி தலைக்கு ஆயிரம் வைத்தால் 400 பயணிகளுக்கு லட்டு மாதிரி லாட் அமவுன்டு ஒதுங்கிடும்.

அஹமது: பிஜேபி காரனின் சவப்பெட்டி ஊழலை விட மோசமா இருக்கே !
அவனுக்குத் தெரிஞ்சா காறித் துப்பிடுவானே !

உமர்: பிச்சைக்காரனுடைய திருவோட்டிலிருந்து வெட்கப்படாமல் கையை விட்டுத் திருடியவர்களுக்கு பணக்கார ஹாஜிகளிடம் கொள்ளையடிப்பதற்கு வெட்கப்படவாப் போகிறார்கள்?

அஹமது: விஷயத்துக்கு வாங்க .

உமர்: தம்மாம் அலிஅக்பர் உமரி தலைமையில் 5 பஸ்களைக் கொண்ட ஒரு குரூப், அதற்கடுத்து ரியாத்தில் இளையவனை நடாற்றில் விட்டு விட்டு தனியாகப் பறந்த ரியாத் தமுமுகவின் இரண்டு பஸ்களும், தம்மாம் தமுமுகவிலிருந்து மூன்று பஸ்களுமாக சேர்ந்து ஐந்து பஸ்களும் ஒரு குரூப்பாக பயணித்துள்ளனர்.

அஹமது: ஒவ்வொரு குரூப்புடைய ஊழலையும் தனித் தனியாச் சொல்லுங்க .

உமர்: முதலில் அலிஅக்பர் உமரியுடைய குரூப்பைச் சொல்கினே; எந்த ஒருப் பயணிக்கும் ' தஸ்'ரீஹா ' அடிக்கவில்லை, மினாவில் டெண்டுக்கும் புக்கிங் பண்ணவில்லை வழி நெடுகிலும் ஹாஜிகள் கடுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு ஆங்காங்கே லஞ்சம் கொடுத்து அழைத்துச் செல்ல இறுதியில் தாயிஃபில் வலுக்கட்டாயமாக இறக்கி விடப் பட்டுள்ளனர் அவர்களோட கூலிப்படை அவர்களை மாற்றுவழியில் சவுதிக் காரனுடைய ஜி.எம்.ஸியில் லஞ்சம் கொடுத்து அள்ளிப் போட்டுக் கொண்டு மக்காவில் கொண்டு கொட்டி உள்ளனர்.

அஹமது : தஸ்ரீஹா அடிக்காமல் அரசாங்கத்தை ஏமாற்றி விட்டார்கள் சரி , ஆனால் ஹஜ் கிரியைகளில் மினாவில் கூடாரம் அமைத்து தங்குவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியாயிற்றே ?

உமர்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய வழியில் இது ஒரு முக்கியமான அமலாகும் என்பதால் தான் ஹஜ் செர்வீஸ் நிருவனங்கள் முதலில் செய்கின்ற வேலையே மினாவில் ஹாஜிகள் கூடாரம் அமைப்பதற்கு இடம் புக்கிங் பண்ணுவதாகும் பணம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தவர்கள் மினாவில் தங்குவதை ( நபிவழியை ஹஜ்ஜின் முக்கிய அமலை ) ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வில்லை ,
மினாவில் தங்காததால் நபிவழியிலான ஹஜ்ஜூடைய அமல்களில் ஒன்று விடுபட்டதால் கொதிப்படைந்த ஹாஜிகள் சம்மந்தப்பட்ட பொறுப்புதாரிகளை நையப்புடைக்க வெகுண்டெழுந்துள்ளனர் அவர்களை சரிக்கட்டுவதற்காக அங்கேயே சில முக்கியஸ்தர்களைப் பிடித்து உதவிகோரி ' ஜபலுந் நூர் ' என்ற இடத்தில் ( ஹஜ்ஜூடைய அமலுக்கு முற்றிலும் சம்மந்தப்படாத ) ஓர் இடத்தில் இஸ்திராஹா ( ஓய்வு விடுதி ) எடுத்து தங்கவைத்துள்ளனர்.

அஹமது: அவர்கள் என்ன உல்லாச சுற்றுலாவாப் போனார்கள் ? ஓய்வு விடுதியில் தங்க வைத்து சாப்பாடு பறிமாறி உறங்கப் போடுவதற்கு, அல்லது ஜவாஹிருல்லாஹ் சாருக்கு மினாவுக்கு பதிலாக ஜபலுந் நூரில் தங்கிக் கொள்ளுங்கள் என்று வஹீ வந்ததா ???? )

உமர்: அலிஅக்பர் உமரிக்கு சென்னையிலிருந்து ஜவாஹிருல்லாஹ் சார் செல் மூலம் வஹீ அனுப்பினாராம் !

ரியாத் அன்ட் தம்மாம் தமுமுகவின் மெகா ஊழல்

உமர்: சுமார் மாலை ஐந்து மணியளவில் பத்தா பழைய பஸ்ஸ்டாண்டுக்கு ஹாஜிகளை வரச் சொல்லி உள்ளனர்
மூட்டை முடிச்சுகளுடன் மனைவி பிள்ளைகளோடு இரவு பத்து மணிவரை காத்திருந்து நொந்துப் போன ஹாஜிகள் செல்லை எடுத்து சம்மந்தப் பட்ட பொறுப்புதாரிகளை ஒரு சொடுக்கு சொடுக்கி உள்ளனர் அடுத்த சில நிமிடங்களிலெல்லாம் சாப்ட்கோ பஸ்ஸூடன் விரைந்து வந்து ஹாஜிகளை கூல் படுத்தி ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் ரியாத் எல்லை முடிவின் சோதனைச் சாவடியில் நிருத்தி சோதிக்கப்பட்டதில் ரூட் பெர்மிட் பெறாதது கண்டு பிடித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் 100 கிலோ மீட்டர் மீண்டும் திரும்பி வந்து பெர்மிட் பெற்று மக்கா திரும்பிச் சென்றுள்ளனர் இதிலும் எந்த ஒருப் பயணிக்கும் ' தஸ்'ரீஹா ' வும் பெறவில்லை, மினாவில் டெண்டும் புக்கிங் பண்ணவில்லை. வழி நெடுகிலும் ஹாஜிகள் கடுமையான சோதனைகளுக்குட்படுத்தி ஆங்காங்கே லஞ்சம் கொடுத்து அழைத்துச் செல்ல இறுதியில் தாயிஃபில் வலுக்கட்டாயமாக இறக்கி விட அவர்களோட பயணிகளில் ஒருவர் தாயிஃபில் குளித்து விட்டு இஹ்ராம் அணிந்த நிலையில் இறந்து விடுகிறார் ( இன்னாலில்லாஹி... ) இறப்புச் செய்கியறிந்த ஹஜ் வியாபாரிகள் மையித்தைப் போட்டது போட்ட மாதிரி அவசர அவசரமாக எஞ்சி இருந்தவர்களை அவர்களோட தொண்டரணி (கூலிப்படை) சவுதிக் காரனுடைய ஜி.எம்.ஸியில் லஞ்சம் கொடுத்து அள்ளிப் போட்டுக் கொண்டு மக்காவில் கொட்டி உள்ளனர்.

அஹமது: அப்பாடா ஒரு வழியாக தப்பித்தேன் பிழைத்தேன் என்று கரை ஒதுங்கி இருக்கின்றனர்

உமர்: கரை எங்கே ஒதுங்க இனிமேல் தான் மூழ்கவேப் போகிறார்கள் ? இதற்குப் பிறகு தான் புனித ஹரம் எல்லைக்குள் அவர்களது பித்தலாட்டம் அறங்கேற்றப்படுகிறது .

அஹமது: என்ன சொல்ரீங்க !

உமர்: ஒரு வழியாக மக்காவுக்குள் நுழைந்தவர்கள் மினாவில் வேறு ஒருவருக்கு சொந்தமான டெண்டை கையைக காட்டி உள்ளனர் ( அதாவது காலியாக கிடந்த டெண்டில் ) டெண்டுக்கு சொந்தக் காரர் விடுதலைப் புலிகள் மாதிரி டயம் கொடுத்துட்டாராம் கண்இமைக்கும் நேரத்துல காலிபண்ணாட்டி நடக்குரதே வேறு என்றுக் கூற திகைத்துப் போன ஹாஜிகள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி உள்ளனர் .

அஹமது: பின்ன என்னாச்சு

உமர்: தமுமுக ஹஜ் வியாபாரிகள் அசடு வழிந்தவர்களாக இடம் மாறி அமர்ந்து விட்டோம் என்றுக் கூறி காலியாகக் கிடந்த வேறொரு டெண்டில் தங்க வைத்துள்ளனர் அப்பாடா என்று இழுத்து ஒரு பெருமூச்சை விட்டு அங்கேப் போய் உட்கார்ந்துள்ளனர் அந்த டெண்டுக்கு சொந்தக் காரர் ஓடிவந்து இது எங்களுடைய டெண்டு என்றுக் கூற விழிப் பிதுங்கிய தமுமுகவின் ஹஜ் வியாபாரிகளும், தொண்டரணியும் (கூலிப்படையும்) செய்வதறியாது திகைத்துப் போய் ஹாஜிகளை அவ்விடத்திலேயே அம்போவென்று விட்டு விட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி ஒளிந்தே போய் விட்டனர் அல்லோல கல்லோலப் பட்ட ஹாஜிகள் ஒரு வழியாக சிரமப் பட்டு ஹஜ்ஜை முடித்திருக்கின்றனர்.

அஹமது: எப்படி ஊர் வந்து சேர்ந்தார்கள் ?

உமர்: இரண்டு குரூப் ஹஜ் வியாபாரிகளும்; இவர்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தால் மானம் மரியாதை எல்லாம் கப்பலேறி விடும் அதனால் ஒவ்வொருவரையும் போன் செய்து அழைத்து காலில் கையில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அழைத்துச் சென்றிடுவோம் எனும் முடிவுக்கு வந்தவர்கள் ஹாஜிகளுடைய செல்லில் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரையும் அழைத்துள்ளனர். இவ்வாறு அழைக்கப்பட்டதும் இவர்களும் ஒன்று கூடி ஆலொசனை செய்துள்ளனர் தமுமுகவினர் பைசாவை விழுங்கினால் விழுங்கியது தான் தொண்டைக் குழிக்குள் விரலை விட்டு வெளியே எடுக்க முடியாது சுனாமி பைசாவை விழுங்கியது பெரிய உதாரணமாகும் அதனால் கொடுத்தக் காசுக்கு பஸ்ஸில் உட்கார்ந்து சொந்த ஊருக்குத் திரும்பிடுவோம் என்று மோசடிப் பேர்வழிகளுடைய பஸ்ஸில் அமர்ந்து சத்தம் போடாமல் வந்துள்ளனர். ஏமாற்றப்பட்ட ஹாஜிகள் ஹரமில் பலர் பஷீர் மௌலவியை தொடர்புகொண்டு மூதறிஞர் பிஜே அவர்களுடைய தொலைபேசி நம்பரை கேட்டு;ள்ளனர் அவர்களுக்கும் மூதறிஞர் பிஜே அவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ? நம்பர் தரமுடியாது எனக்கூறியுள்ளார் அவர்களுக்கும் அண்ணனுக்கும் சம்மந்தமில்லை என்பது எங்களுக்கும் தெரியும் அவர்களுடைய இந்த வடிகட்டிய அயோக்கியத் தனத்தை அண்ணனிடம் கூறி உணர்வில் வெளியிடச் செய்யவே நம்பர் கேட்கிறோம் என்றுக் கூறியுள்ளனர்.

அஹமது: இதுவல்லாமல் ஹஜ்ஜை முடித்து வந்தவர்களில் '' ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்த சகோதரர்கள் தம்மாம் ததஜ நிர்வாகிகளை தொடர்புகொண்டு எங்களை எவ்வாறு அலைக்கழித்தார்கள் என்பதை பேட்டி தருகிறோம் உங்களது ஊடகத்தில் n;வளியிடுங்கள் என்று கண்ணீர் ததும்ப கோரியுள்ளனராம்.

உமர்: நம்மாள்களுக்கு விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பக்குவம் அதிகம் என்பதால் பேட்டி எடுத்து வெளியிட யோசிக்கின்றனர்.

அஹமது: இதுமாதிரி பல விஷயங்களில் விட்டுக் கொடுத்ததனால் தான் புனித ரமளான் என்று கூடப்பாராமல் நமது தாஇகளை கொச்சைப் படுத்தி எழுதினார்கள், தனி இணையதளம் உருவாக்கி அவதூறுகளை அறங்கேற்றினார்கள்

அஹமது: சரி தனியாப் பறந்து சென்ற ஜமால் மொளலவி என்ன ஆனார் ?

உமர் : தனியாப் பறக்கலயாம் 39 ஹாஜிகளையும் அலி அக்பர் உமரிட்ட வித்துட்டாராம் !!!

அஹமது : வித்துட்டாரா ? என்ன சொல்ரீங்க இது என்ன ரியல் எஸ்டேட்டா ? ப்ளாட் போட்டு விக்கிறதுக்கு

உமர்: ரியல் எஸ்டேட் பிஸினஸை விட செல்வம் கொழிக்கிற ஒரே பிஸினஸ் இன்று ஹஜ் பிஸினஸ் தான் ப்ரதர் காரணம் ஒரு மாதம் கஸ்டப்பட்டால் (ஊழல் செய்தால்) போதும் 11 மாதம் கால் மீது கால் போட்டு முழுக் குடும்பமும் கோத்திரமும் சாப்பிடலாம்.

அஹமது: சரி இதையே நமது ததஜ காரர்களுதம் வளைகுடாவில் செய்து வருகிறார்களே அவர்களது நிலை என்னாவது ?

உமர்: தமிழ் தஃவா அன்ட் தமுமுக என்று போல்ட் எழுத்தில் எழுதி ஆளுயர போஸ்டர் அடித்து அவர்களே விளம்பரப் படுத்தி செய்கிறார்கள் ததஜவிலிருந்து அதுமாதிரி எங்காவது ஒரு விளம்பரத்தையேனும் கண்டதாக எவரும் சொல்லமுடியாது ததஜவின் உறுப்பினர் ஒருவர் ஹஜ் சர்வீஸ் நடத்தலாம் நிர்வாகியும் கூட நடத்தலாம் ஆனால் இதுவரை நேரடியாக ததஜ நடத்தவில்லை. இது மார்க்க அடிப்படையிலான அமல் என்பதால் அல்லாஹ்வுக்கு பயந்து ஒழுங்காக செய்து விட்டால் கேள்விக்கு இடமில்லை . பணம் பண்ணுவது தான் அவர்களது ஒரே குறிக்கோள் என்று நாம் அடிக்கடி கூறிவந்துள்ளோம் இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் தமுமுக உடைக்கப்பட்டது தமுமுக உடைக்கப்படுவதற்கு மிக மிக முக்கிய காரணகர்த்தாக்களாக முதுகெலும்பாக செயல்பட்டவர்கள் இப்பொழுது நடந்த ஹஜ் பிஸினஸ் ஊழலில் பெரும்பங்காற்றியவராவார்கள் .

அஹமது: ஜமால் மொளவி இல்லாததால் வழிகாட்டிக்கு எந்த மொளவியைப் படித்தார்கள்

உமர்: தமுமுகவை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சபதம் போட்ட செய்யது மௌலவியாம் ?

அஹமது: திருப்பூரில் தவஹீத் கூட்டம் போடப் போகிறோம் என்று சமீபத்தில் ததஜ காரர்களிடம் வசூல் வேட்டையாடினாரே அவரா ?
உமர்: அவரே தான் !

அஹமது: எப்புடிப் போனார் ?

உமர்: பணம் ப்ரதர் பணத்திற்காக இரு இடத்திலும் டபுள் கேம் ஆடியுள்ளார்.
எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான். 14:27.

உமர்: ஏற்கனவே ஒருமுறை தமுமுக காரர்களின் குண்டர் படை ஒன்று கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் புகுந்து தொழுகைக்காக காத்திருந்த தவஹீத் சNகுhதரர்களின் மண்டைகளை உடைத்து ரத்த ஆறங ஓடச்செய்தனர் என்று எழுதி இருந்தோம் இன்று அதை உணர்வு உண்மைப் படுத்தியதை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .

அஹமது: மீண்டும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்

ஃப்ளாஷ்பேக் 2- மார்ச் 25
--------------------------------------------------------------------

மார்ச் 25 சனிக்கிழமை லுஹர்நேரம் இறைவனைத் தொழுவதற்காக அமைதியாக அமர்ந்திருந்த அல்லாஹ்வின் அடியார்களை ஏர்வாடிசிராஜ், அவருடைய சகோதரர் ஆதம், சுரண்டை இக்பால், மைதீன் சேக்கான், தலைமையில் கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களுடன் ஒருக்கும்பல் மஸ்ஜிதிற்குள் புகுந்து உருட்டுக் கட்டைகளால் கொலைவெறியாட்டம் போடுகிறது இதை முற்றிலும் எதிர்பாராத தொழுகையாளிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் பள்ளிவாசலுக்குள் இதுமாதிரியெல்லாம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள், அவர்களும் எதிர்பாராததால் செய்வதறியாது திகைத்துப் போனவர்கள் பள்ளிக்குள் இங்குமங்கும் வெருண்டோடுகிறார்கள் இதில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஷேஹன்னா அவர்கள்.
--------------------------------------------------------------------

அஹமது: தென்காசி கொலை வழக்கில் சிக்கிக் கொண்டவர்களை தமுமுக கண்டுகொள்ளவே இல்லையாமே ?

உமர்: கண்டு கொண்டால் அல்உம்மா போன்று தமுமுகவும் தீவிரவாத அமைப்பென்று முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்படலாம் அதனால் அவர்களை நடாற்றில் விட்டு விட்டு கண்டு கொள்ளமால் இருக்கிறார்களாம்.

அஹமது: இந்த நிலையில் கோவை சிறைவாசிகளுக்காக குரல் கொடுக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்களே ?

உமர்: பேரிடி முழக்கக் கார முகவைத் தமிழனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு தங்களுக்காக மீண்டும் பஜனை பாடவேண்டுமு; என்று கோரிக்ரை வைக்கிறார்கள் போலும்.

அஹமது: தங்களுக்காக தேவைப் படும்போதெல்லாம் ஆயுதம் தூக்கியவர்களுக்காக குரல் கொடுக்காததால் விரக்தி அடைந்த தமுமுகவினர் ஆங்காங்கே கூண்டோடு கூடாரத்தை கலைத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிந்து நமக்கு தகவல்கள வந்து கொண்டிருக்கின்றன.

இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கிறான் என்று (நபியே!) நீங்கள் கருதவேண்டாம். அவர்களை அவன்விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான். அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும். அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள். அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும். மேலும், அவர்களின் இதயங்கள் சூனியமாம் விட்டிருக்கும் (திருக்குர்ஆன் 14:42, 43)

அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

குறிப்பு : ஹஜ் ஊழல் விஷயமாக பாதிக்கப் பட்டவரிடம் தகவல் பெறப்பட்டது செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, January 02, 2007

இறையச்சமின்றி ஃபித்னா செய்யும் விஷமிகள்!

நாடும் நடப்பும்

வாங்க ஃபாரூக்! ரெண்டு வாரமா உங்களை காணாததால நீங்களும் ஹஜ்ஜுக்குப் போயிட்டீங்களோன்னு நினைச்சேன் என்றபடியே வரவேற்றார் பரக்கத்.

நான் ஹஜ்ஜுக்குப் போனா உங்ககிட்ட சொல்லாமப் போவேனா? சொந்த வேலை விஷயமா ஊருக்குப் போய் இருந்தேன். திடீர்னு உடம்பு முடியாம போனதால அங்கேயே ரெஸ்டு எடுத்துக்கிட்டு நேத்துத்தான் இங்கே திரும்பினேன் என்றார் ஃபாரூக்.

ஆமாம், ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிச்ச பல பேருக்கு கடைசி நேரத்துல விசா கிடைக்கலையாமே! கேள்விப்பட்டீகளா? என்றார் பரக்கத்திடம்,

ஆமாம் பாய்! ரொம்ப வருத்தமாக இருக்கு. எவ்வளவு ஆசையாய் ஒவ்வொருத்தரும் விண்ணப்பிச்சிருப்பாங்க! கடைசி நேரத்துல சவூதி அரசு விசா கொடுக்க மறுத்ததால நம்ம இந்தியாவுல இருந்து 13 ஆயிரம் பேருக்கு மேல இந்த வருடம் ஹஜ் பயணம் செய்ய முடியாம ஆயிடுச்சாம் என்றார் பரக்கத்.

வருஷா வருஷம் ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே இருக்கையில் எல்லோரும் ஹஜ் செய்யிற அளவுக்கு தகுந்த ஏற்பாட்டை சவூதி அரசு செய்யணும் என்ற ஃபாரூக், இந்த விஷயத்தை வச்சு சிலர் 'ஃபித்னா' பரப்பி வர்ற விஷயத்தை கேள்விப்பட்டீங்களா? என அடுத்த விஷயத்தைக் கிளப்பினார்.

ஆமாம் ஃபாரூக்! இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பிஜேயும், துணைத்தலைவர் சைபுல்லாஹ் ஹாஜாவும் போவதா இருந்தாங்க. கடைசி நேரத்துல போக முடியாம போயிடுச்சு!

இந்த விஷயத்தை வேற மாதிரி திரிச்சு, சவூதி அரசாங்கமே இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் விசா மறுத்துட்டது மாதிரி ஃபித்னா கிளப்பிட்டு இருக்காங்க. கொஞ்சங்கூட இறையச்சமின்றி ஃபித்னா செய்யும் அந்த விஷமிகளை நினைச்சா வெறுப்பா இருக்கு என்றார் பரக்கத்.

அந்த விஷமிகளை மறுமையில் அல்லாஹ் பாத்துக்குவான் என்றார் ஃபாரூக்.

இதன் தொடர்ச்சியை உணர்வு (உரிமை 11, குரல் 17) வார இதழில் பார்வையிடுக!

நன்றி - tntj.net