இறையச்சமின்றி ஃபித்னா செய்யும் விஷமிகள்!
நாடும் நடப்பும்
வாங்க ஃபாரூக்! ரெண்டு வாரமா உங்களை காணாததால நீங்களும் ஹஜ்ஜுக்குப் போயிட்டீங்களோன்னு நினைச்சேன் என்றபடியே வரவேற்றார் பரக்கத்.
நான் ஹஜ்ஜுக்குப் போனா உங்ககிட்ட சொல்லாமப் போவேனா? சொந்த வேலை விஷயமா ஊருக்குப் போய் இருந்தேன். திடீர்னு உடம்பு முடியாம போனதால அங்கேயே ரெஸ்டு எடுத்துக்கிட்டு நேத்துத்தான் இங்கே திரும்பினேன் என்றார் ஃபாரூக்.
ஆமாம், ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிச்ச பல பேருக்கு கடைசி நேரத்துல விசா கிடைக்கலையாமே! கேள்விப்பட்டீகளா? என்றார் பரக்கத்திடம்,
ஆமாம் பாய்! ரொம்ப வருத்தமாக இருக்கு. எவ்வளவு ஆசையாய் ஒவ்வொருத்தரும் விண்ணப்பிச்சிருப்பாங்க! கடைசி நேரத்துல சவூதி அரசு விசா கொடுக்க மறுத்ததால நம்ம இந்தியாவுல இருந்து 13 ஆயிரம் பேருக்கு மேல இந்த வருடம் ஹஜ் பயணம் செய்ய முடியாம ஆயிடுச்சாம் என்றார் பரக்கத்.
வருஷா வருஷம் ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே இருக்கையில் எல்லோரும் ஹஜ் செய்யிற அளவுக்கு தகுந்த ஏற்பாட்டை சவூதி அரசு செய்யணும் என்ற ஃபாரூக், இந்த விஷயத்தை வச்சு சிலர் 'ஃபித்னா' பரப்பி வர்ற விஷயத்தை கேள்விப்பட்டீங்களா? என அடுத்த விஷயத்தைக் கிளப்பினார்.
ஆமாம் ஃபாரூக்! இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பிஜேயும், துணைத்தலைவர் சைபுல்லாஹ் ஹாஜாவும் போவதா இருந்தாங்க. கடைசி நேரத்துல போக முடியாம போயிடுச்சு!
இந்த விஷயத்தை வேற மாதிரி திரிச்சு, சவூதி அரசாங்கமே இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் விசா மறுத்துட்டது மாதிரி ஃபித்னா கிளப்பிட்டு இருக்காங்க. கொஞ்சங்கூட இறையச்சமின்றி ஃபித்னா செய்யும் அந்த விஷமிகளை நினைச்சா வெறுப்பா இருக்கு என்றார் பரக்கத்.
அந்த விஷமிகளை மறுமையில் அல்லாஹ் பாத்துக்குவான் என்றார் ஃபாரூக்.
இதன் தொடர்ச்சியை உணர்வு (உரிமை 11, குரல் 17) வார இதழில் பார்வையிடுக!
நன்றி - tntj.net
0 Comments:
Post a Comment
<< Home