ராமநாதபுரம் - TNTJ சார்பில் 12 லட்சத்தில் குர்பானி!
ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் குர்பானி
ராமநாதபுரம், டிச. 28:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஒட்டகங்கள், ஆடுகள், மாடுகள் குர்பானி கொடுக்கப்படவுள்ளன.
இது குறித்து அந்த அமைப்பின் செயலர் ஆரிப்கான் கூறியது:
ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 9 ஒட்டகங்களும், ஏராளமான ஆடுகளும், மாடுகளும் குர்பானி கொடுக்கப்படவுள்ளன.
கீழக்கரை கிளையும், கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையும் இணைந்து கீழக்கரையில் மட்டும் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை குர்பானி கொடுக்க உள்ளன.
ஹஜ் பெருநாளான ஜன. 1-ம் தேதி கீழக்கரையை சுற்றியுள்ள பாலக்கரை, மோர்குளம், நொச்சிவயல், கொத்தங்குளம், கீழக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது என்றார்.
அப்போது கீழக்கரை கிளைத் தலைவர் ஹசன் அலி, கல்வி தர்ம அறக்கட்டளை நிர்வாகிகள் ஜமீல் முகமது, மன்சூர், அமைப்பின் மக்கள் தொடர்பாளர் சாகுல் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்றி – தினமணி 28-12-2006
0 Comments:
Post a Comment
<< Home