TNTJ - விழுப்புரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்
திண்டிவனம், டிச.25:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விழுப்புரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலர் சலீம்கான் துவக்க உரை நிகழ்த்தினார், மாநிலச் செயலர் தௌபீக் சிறப்புரை நிகழ்த்தினார், மாவட்ட பேச்சாளர் ஷாபி மன்பா, வர்த்தக அணிச் செயலர் பசுல்லா, செய்தி மக்கள் தொடர்பாளர் பசுலுதீன், திண்டிவனம் நகரச் செயலர் ஜமீல், பொருளாளர் செய்யது இப்ராகீம், விழுப்புரம் நகரத் தலைவர் அப்துல் கையு, செயலர் முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திண்டிவனத்தில் எல்லாத் தெருக்களில் உள்ள வெறி நாய்கள் கடித்து பொது மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர், இந்த வெறி நாய்களை பிடிப்பதற்கு நகராட்சி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் காந்தி சிலை அருகே நான்கு சாலைகளின் சந்திப்பு வருகிறது. அந்த இடத்தில் சிக்னல் இல்லாததால் வாகன போக்குவரத்து மற்றும் மக்களின் போக்குவரத்தும் அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.
எனவே அங்கு ஒரு சிக்னல் அமைக்க வேண்டும். முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுகளான அரசியல் அதிகாரம், கல்வி, அரசு வேலை வாய்ப்பு அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு கேட்டு விழுப்புரத்தில் மாபெரும் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடத்துவது என்றும் இதில் 10 ஆயிரம் மக்களை கலந்து கொள்ள செய்வதென்றும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.
நன்றி - தினமணி 25-12-2006
0 Comments:
Post a Comment
<< Home