|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, December 23, 2006

ஆல்ப்ஸ் மலையின் நிழலினிலே - உ...உ...உமர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

தமுமுக வளர்ச்சிக்காக உழைத்த தன்னலமற்ற ததஜவின் தாஇகள்!!

அஹமது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உமர்: வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அஹமது: புது செய்தி எதாவது இருக்கா உமர் பாய் ?

உமர்: புதுசா ஒண்ணுமில்ல ! பழசு தான்.

அஹமது: சரி அப்புடின்னா வாங்க ஆளுக்கு ரெண்டு புரோட்டாவை சாப்பிட்டுட்டு நடையைக் கட்டுவோம்

உமர்: இன்னக்கி ஏன் இவ்வளவு அவசரம் ?

அஹமது: அட குளிர் தாங்க முடியலங்க 'இன்னர்' போட்டும் குளிர் வெளுத்துக் கட்டுதுங்க !

உமர்: இந்த தடவை ரியாத்துல வரலாறு கானாத குளிர், குளிரும் அப்புடி வெயிலும் அப்புடி கெந்தக பூமியில கெடந்து ஏன்டா சாவுரீங்க ஊருக்கு வந்து சேருங்கடா என்று பழநிபாபா அடிக்கடி செல்லமாக கடிந்து கொள்வார்

அஹமது: நாமும் 'இன்று நாளை என்று நாளை' எண்ணுகின்றோம், விதியும் நம்மை 'இன்று நாளை என்று நாளை' என்று எண்ணி தள்ளிக் கொண்டிருக்கிறது

உமர்: என்று தனியும் இந்த வெளிநாட்டு மோகம் என்று தெரியல.

அஹமது: தனி இட ஒதுக்கிடு அறிவித்து விட்டால் நமது சந்ததியினராவது கெந்தக பூமிக்கு வராமல் நமது முன்னோர்கள் ரெத்தம் சிந்தி உருவாக்கிய சொந்த ( சுதந்திர ) பூமியில் தங்கி விடுவர் வருகிற ஜனவரி 29க்கு குடந்தை குலுங்கியதை அரசுக்கு நினைவூட்டுவதற்கு தமிழகம் முழுவதையும் உஷார் படுத்தி வருகிறார்கள் நமது தமிழ்நாடு தவஹீத் ஜமாத் அமைப்பினர் இப்பொழுதே நமது உறவினர்களுக்கு இங்கிருந்து கொண்டு உஷார் படுத்தும் பணியை முடுக்கி விடுவோம் தமிழகம் முழுவதும் குலுங்கினால் குடந்தை கோரிக்கையை அரசு அமுல் படுத்தும்

உமர்: கூட்டம் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது பாக்கர் நின்று சிம்மக் குரலெழுப்பியும் முகவையில் டிசம்பர் 6க்கு கூட்டம் மூன்று இலக்கை தாண்டவில்லையாமே இதை ஆதாரத்துடன் வெளியிடப் போவதாக முகவைத் தமிழன் மார்தட்டுகிறாராமே ?

அஹமது: அவர் மார் தட்டுவது இவருக்கு எப்படித் தெரிஞ்சது நான் எந்த அமைப்பையும் சார்ந்தவனல்ல, நான் இன்ன அமைப்பைச் சார்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டால் எனது ப்ளாக்ஸ்பாட்டை மூடிவிடத் தயார் என்று ஏற்கனவே அவர் மார்தட்டியது என்ன ஆவதாம் ? அவர் மார்தட்டுவார் என இவர் முன்மொழிகிறாரே இது அவர்களுக்குள் இருக்கின்ற அன்டர்ஸ்டேன்டிங்கை படம் பிடித்துக் காட்டவில்லையா ? இதுக்கு மேல முகவை மூதேவி இன்ன அமைப்பைச் சார்ந்தது தான் என்று அவர் சார்ந்த அமைப்பின் அடையாள அட்டையை காட்டினால் தான் நம்புவார்களா ?

உமர்: புத்திசாலிகளுக்கு ஒரு சோறுப் பதம் குதிரைகளுக்கு சட்டி சோறும் சாத்தியப்படாது ?

அஹமது: இன்னும் சொல்லப் போவதாக இருந்தால் இவுங்களுக்கு சுயமாக மார் தட்டத் தெரியாதா ? இதுக்கும் முகவைத் தமிழன் தான் மார்தட்ட வரனுமா ?

உமர்: அவுங்க ஒண்ணும் சும்மா மார்தட்ட விடலயாம் மார்தட்டுவதற்கு மடிநிறைத்து கொடுக்கவேச் செய்கிறார்களாம் அதுக்காகத்தான் உறக்கத்துல இருக்குர கூலிக்காரனை கூவி அழைக்கிறார்கள்.

அஹமது: இதுவரைக்கும் அப்புடி ஒன்ணும் எவருக்கும் மடிநிறைத்து கொடுத்ததாக தெரியலயே ?

உமர்: என்ன இப்புடி சொல்லிட்டீங்க இவுங்களுக்காக அமீரகத்துல இருந்து கொண்டு மார் தட்டினவருக்கு பாளையங்கோட்டையை மடிநிறைத்து கொடுக்கலயா ! கூட்டணி கட்சி என்று கூடப்பாராமல் அவர்களுக்கு கல்தா கொடுத்துட்டு அவர்களுடையதை பிடுங்கி இவருக்கு தாரைவார்க்கலையா? இவுங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்துட்டு கலைஞர் அதை லட்டு மாதிரி கொத்திச் செல்லலையா ? அதனால் மார் தட்டுபவருடைய மாரளவு வீதிக்கு தகுந்தாற்போல் மடிநிறைத்துக் கொடுப்பார்கள் அதனால் இந்தியாவிலும் வளைகுடாவிலுமாக ஆங்காகங்கே எதிர்ப்புக்கு தகுந்தாற்போல் அவர்களது கூலிப்படை மார் தட்டும். குதிரை மேய்ப்பாளருடைய மார்வீதி குறுகலாக இருப்பதால் பாய்ந்து குதறக் கூடிய மார்வீதிக்காரனாகிய ராஜபாளையத்து ... ரய்சுதீனை கூவி அழைக்கிறார்கள்.

அஹமது: நிர்வாக வசதிக்காகத் தான் முகவையை மூன்றாகப் பிரித்தார்களாமே ? நீங்க சொல்ரது புருடாவாமே ?

உமர்: பின் எதற்கு அவரை ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார்களாம் ? அவரது செல்வாக்குள்ளப் பகுதிpயில் வேண்டுமென்றே ஏன் ஹைதர் அலியுடைய ஆளைப் போட்டார்களாம் ? புரிய வேண்டியவர்கள் எமது மெஸேஜ் மூலம் என்ன நடக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டனர் குதிரை சுற்றி வளைப்பது அவங்களோட ஆட்களுக்கு வழமையாக பூச்சுற்றுவதற்காகும்.

அஹமது: சரி அவரும் ஆம்புலன்ஸை இயக்கத்தின் பேரில் எழுதிக் கொடுக்காம தனது பெயரில் எழுதி வைத்துக் கொண்டு அடம்பிடிப்பது நல்லதில்லையே என்று அவர்களோட எடுபிடிகள் பலரும் குறைபடுகிறார்களாமே ?

உமர்: ஊரான் பணத்தை வசூல் பண்ணி எப்படி சொத்து சேர்த்தார்கள் என்பது வாசல்படி, வாசல்படியாக வசூலுக்கு ஏறி இறங்குனவர்களுக்குத் தான் அதனுடைய வருத்தம் தெரியும் வாணியம்பாடி காலேஜூல உட்கார்ந்து கொண்டு ஆல்ப்ஸ் மலையின் நிழலை எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கு தெரியாது

அஹமது: அதை மட்டும் என்ன ? சமுதாயத்திற்காக சும்மாவா எழுதுனாரு அதுக்கும் துட்டுங்கோ? அவர் உல்லாசம் அனுபவித்த ஆல்ப்ஸ் மலையின் நிலலைப் பற்றி எழுதினதுக்கும் கை நீட்டி துட்டு வாங்கிட்டாருங்கோ !!!

உமர்: இதுபோன்ற ஒரு சமுதாய தலைவரை ? சல்லடைப் போட்டு துலாவினாலும் கிடைக்காதுங்கோ !!!

உமர்: அவருக்கும் வயிறு இருக்கத்தானே செய்கிறது துட்டுவாங்காம எப்புடி எழுதுவாரு ?

அஹமது: சமுதாயம் ! சமுதாயம் என்று கூக்குரலிடுபவர் காலேஜூல வாங்குன சம்பளத்துல அதே காலேஜூல உக்காந்து கொண்டு தானே ஒற்றுமைக்கு கட்டுரையும் தலையங்கமும் தீட்டினாரு அதை சும்மா எழுத வேண்டியது தானே ! தாஇகள் மட்டும் ஊர் ஊராகச் சென்று தமுமுகவுக்காக மணிக் கணக்கில் காசுப் பெறாமல் தொண்டை தண்ணிர் வற்ற கத்தினார்களே ! இவர் மட்டும் ஒரு தலையங்கமும் ஒருக்கட்டுரையும் எழுத கெந்தக பூமியில வாடி வதங்குபவர்களுடைய காசிலிருந்து பல்லாயிரக் கணக்கில் கறந்துகொள்ளலாமா ? வேலை வெட்டி இல்லாதவர் என்றால் பரவா இல்லை பாக்கெட் நிறைத்து காலேஜூல கொடுக்கத் தானே செய்தார்கள் அதனால் சமுதாயம் என்று முழங்கினதெல்லாம் வெரும் கோஷமல்லவா ?

உமர்: மேலும் எந்த சொத்தை உருவாக்குவதற்கு யாருடைய பங்களிப்பு மிக முக்கியமாக இருந்ததோ அவர்களை முதலில் கட்டம் கட்டுவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதுடன் ஊரான் சொத்தில் எப்படி சுகமனுபவிப்பார்கள் என்பது நம்மைக்காட்டிலும் அவர்களுடன் நகையும் சதையுமாக இருந்த அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன், மாபெரும் மக்கள் பேரியக்கத்தை கட்டமைத்த மூதறிஞர் பிஜே அவர்களை கட்டம் கட்டுவதற்காக அவர்களது கைகளுக்கு மேல் கைவைத்து உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்காக வெயிட்டான கைகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு மேல்படியாருடைய கை அவர்களது கைகளுக்கு மேல் வந்து உட்கார்ந்தப் பின்தான் திட்டம் உயிர்பெற்றது என்பதுடன் பிஜே அவர்களைக் கழட்டி விடுவதற்காக என்ன மாதிரியான பிளான்களை வகுத்தார்கள் என்பதையும் அவர் தெளிவாக தெறிந்தவர் அதனால் அவர்களை அவரும் மறக்க மாட்டார், அவர்களும் அவரை மறக்க மாட்டார்கள்.

ஆம்புலன்ஸை எழுதிக் கொடுத்த அடுத்த நிமிடம் உம்முடைய செயல்பாடுகள் முகவையில் மாவட்டத்தில் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது வெளியேப் போய் விடு என்றுக் கூறி விடுவார்கள் அதனால் கஷ்டப்பட்டு வாங்கிய ஆம்புலன்ஸை கொடுக்க மறுக்கிறார். மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள்.(இதை) அவர்கள் உணருவதில்லை. அல்குர்ஆன் 6:123.

அஹமது: இலாஹியை ராஜ்மஹாலுக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று போலீஸில் எழுதிக் கொடுத்து விட்டுத்தான் மூதறிஞர் பிஜே அவர்கள் ராஜ் மஹாலில் காத்திருந்தாராமே ?

உமர்: மேலப்பாளையத்தில் வேறொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது அதற்காகவே போலீஸ் அனுமதிக்காக எழுதிக் கொடுத்திருந்தார்கள் மாறாக தென்காசிக்குள் ஓடி ஒளிந்து தலைமறைவாகி விட்ட இலாஹியை நிகழ்ச்சி முடியும் வரை திரும்பி வரவிடாமல் தென்காசியிலேயே கட்டிப் போட்டு விடும்படி எழுதிக் கொடுக்கவில்லை. என்பதை குதிரையின் காதுல மேலும் ஒரு முறை சங்கை வைத்து ஊதி விடுவோம்

தேதி நிர்ணயித்த மேலப்பாளையம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த முதறிஞர் பிஜே அவர்கள் அன்றைய தினம் நேரம் ஒதுக்கி ஹம்பக் மன்னனுக்காக ராஜ்மஹாலில் காத்திருந்தார்கள் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்காகவே போலீஸ் அனுமதி பெற்றிருந்தார்கள் இதைத் தான் குதிரை தனது மனோ இச்சைப் பிரகாரம் திரித்து கூறிவருகிறது. கெடுபிடிகள் அதிகம் உள்ள அமீரகத்திலேயே விவாதத்திற்கு கூப்பிட்டவர்கள் தாயகத்தில் அவரை மேலப்பாளையத்திற்குள் நுழையவிடாமல் தென்காசியில் கட்டிப் போட்டு விடுங்கள் என்று போலீஸ்க்கு எழுதிக் கொடுப்பார்களா ?

அஹமது: மூன்று வாரம் உறங்கி விட்டு திடீரென உறக்கத்திலிருந்து எழுந்து வந்து உளறி இருக்கிறீர்களாமே ?

உமர்: மெஸேஜ் இருந்தா வருவோம் இல்லை என்றால் வரமாட்டோம் நமது நோக்கமே பதிலடி என்பது மட்டுமேயாகும் நாம் உளறுகிறோமா ? பொட்டிலறைந்தாற் போல் பதில் கொடுத்துக் கொண்டு மக்களை தெளிவடையச் செய்து கொண்டுள்ளோமா ? என்பது எமது மெயிலைப் பார்வையிடும் மக்களுக்கு தெளிவாக தெரியும்.

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. 2:190

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்தக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home