|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, December 10, 2006

அமெரிக்கர்களையும், சதாமையும் விட ஆபத்தானவர்கள்.

'அமெரிக்கர்களையும் சதாமையும் விட ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள்'

கெய்ரோ, டிச. 10:

அமெரிக்கர்களையும் சதாம் ஹூசைனையும் விட ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் ஏன சமீபத்தில் அமெரிக்க குண்டுவீச்சில் கொல்லப்பட்ட, அல்காய்தாவின் ஈராக் தலைவர் ஸர்காவி கூறியதாக பேட்டி வெளியாகியுள்ளது.

அல்காய்தா அமைப்பின் ஈராக் பிரிவுக்கு தலைவராக பொறுப்பு வகித்தவர் அபு முஸாப் அல்லிஸர்காவி. சமீபத்தில் நடந்த அமெரிக்க விமான குண்டுவீச்சில் இவர் கொல்லப்பட்டார்.

ஆனால் ஜூன் மாதம் அவர் அளித்ததாக கூறப்படும் 33 பக்க பேட்டி ஓன்றை, அல்காய்தாவின் செய்திகளை வெளியிடும் இணையதளம் வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட பிறகு மிகத்தாமதமாக இந்தப் பேட்டி வெளியிடப்படுவதற்கு என்ன காரணம் ஏன்பது தெரியவில்லை. ஆனால் ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுவரும் நிலையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஸர்காவி, ஈராக்கில் வந்து குடியேறி, அல்காய்தா அமைப்புக்கு தலைவரானார். ஷியாவுக்கும் சன்னிக்கும் இடையிலான மோதலை தவிர்ப்பதே அமெரிக்காவை முறியடிக்க சரியான வழி என இவர் கூறிவந்தார்.

ஆனால் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு ஷியாக்களின் தலைவர் என கருதப்படும் அயத்துல்லா அலி அல் சிஸ்டானியை சாத்தான் என கூறினார். சன்னிகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என வெளிப்படையாக அவர் கூறிவந்தாலும், சன்னிகளை தாக்கி அழிக்கும்படி மறைமுகமாக உத்தரவிடுகிறார் என ஸர்காவி தெரிவித்திருந்தார்.

அமெரிக்கர்களுடன் மோதவேண்டாம். அதற்கு பதிலாக சன்னிகளை படுகொலை செய்யுங்கள் ஏன சிஸ்டானி தெரிவித்ததாக ஸர்காவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அல்காய்தா அமைப்பின் விளம்பரப்பிரிவு அலுவலராக செயல்படும் அபு அல் யாமன் அல் பாக்தாதி என்பவருக்கு இந்தப் பேட்டி அளிக்கப்பட்டுள்ளதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

நன்றி – தினமணி

0 Comments:

Post a Comment

<< Home