|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, December 07, 2006

டிசம்பர் 06 முஸ்லிம் அமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி

சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.



சென்னை, டிச.7-

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி முஸ்லிம் அமைப்பினர் சென்னையில் நேற்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை பாரபட்சமின்றி விரைந்து நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கோசமிட்டனர்.

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடத்தில் உடனே ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை அமைப்பினர் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் கைகளை கோர்த்தபடி நின்று கோசமிட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் மேலை நாசர் தலைமை தாங்கினார்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக்

தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சேக்தாவூத் தலைமை தாங்கினார்.

இந்திய தேசிய லீக்

இந்திய தேசிய லீக் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் எம்.பஷீர் அகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் இம்தாத் உசேன், துணைத்தலைவர் கேப்டன் நூர்தீன், பொருளாளர் ஒய்.ஜவகர் அலி, கொள்கை பரப்பு செயலாளர் பெரோஸ் அகமது, முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் இயக்க பொதுச்செயலாளர் திருமாவளவன், சமூக நீதிக்கட்சித் தலைவர் ஜெகவீர பாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அச.உமர் பாருக் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது பேசுகையில், 'இந்த நாள் உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்த நாள் இறையாண்மைக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவித்த நாள் இது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசே பாபர் மசூதியை கட்டி தர வேண்டும்'' என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கும், போராட்ட களத்தின் புகைப்படங்களுக்கும் இங்கே சொடுக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home