அருணாசலபிரதேசம் - சீனாவுக்கு பிரணாப் முகர்ஜி மறுப்பு
அருணாசல பிரதேசம் தங்களுக்கு சொந்தமான பகுதி என சீனாவின் தூதர் கூறியிருப்பதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சீனவின் தூதர் சுன் யூக்சி, அருணாசல பிரதேசம் முழுவதும் சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று கூறியிருந்தார்.
அருணாசல பிரதேசம் முழுவதையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என அவர் கூறியிருந்தார்.இதனிடையே அருணாசல பிரதேசத்தின் கவர்னரும் முன்னாள் வெளியுறவுத் துறை செயலருமான எஸ்.கே.சிங்கும் சீனத் தூதரின் கருத்தை மறுத்துள்ளார்.
சீனா இதுபோன்ற தவறான பிரச்சாரத்தில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளது என்றும் இது தவறானது என்றும் அவர் கூறினார்.இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை குறித்து இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Thanks-(Tamil-msn)
0 Comments:
Post a Comment
<< Home