|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, November 09, 2006

தமுமுக மண்ணிப்பு கேட்கவேண்டும்.

ஏகனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சுனாமி பேரழிவு என்பது தமிழக மக்கள் மறக்க முடியாத கருப்பு அத்தியாயம். அன்று சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது பல அமைப்புகள் தன்னலம் பார்க்காமல் உழைத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளில் உதவினர். தற்காலிமாக செய்யப்பட்ட அந்த உதவிகள் அம்மக்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே பாதிக்கப்பட்ட அம்மக்களின் துயர்துடைக்க பல அமைப்புகள் சுனாமி நிதியை வசுலித்தனர்.

நமது சமுதாயத்தில் ததஜ, தமுமுக, ஜமாத்தே இஸ்லாமி மற்றும் சில அமைப்புகளும் சுனாமி நிதி வசுலித்தனர். இதில் ததஜ ஒரு பைசா பாக்கி இல்லாமல் சுனாமி நிதியை அரைகோடிக்கு மேல் அம்மக்களுக்கு பணமாக தமிpழகத்தில் சுனாமியால் காதிக்கப்பட்ட பல ஊர்களில் வழங்கியது. இதில் இரண்டாவதாக ஜமாத்தே இஸ்லாமி தொகுப்பு வீடுகளை கட்டுக்கொடுத்துள்ளது.

ஆனால் தமுமுக மட்டும் சில லட்சங்களை கடலூரில் வழங்கிவிட்டு மீதி தொகையை அந்தமானிலும், ஆந்திராவிலும் கொடுத்ததாக கல்லகணக்கு காட்டியது. இதில் கல்ல கணக்கு காட்டி எடுக்கப்பட்ட பணத்தில் சில லட்சங்களை கொண்டுதான் சில ஊர்களில் ஆம்புலன்ஸ் கொடுத்துள்ளார்கள். மீதி பணம் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டனர்.

கணக்கு கேட்ட தமுமுகவினருக்கு தாங்கள் முழு சுனாமி நிதியையும் விணியோகித்து விட்டதாகவும் அதன் கணக்கு தங்களிடம் உள்ளதாகவும் தனது வார இதழில் கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் கூறினர். இதன் பிறகும் சட்டையை பிடித்து கேட்கவேண்டிய அதன் தொண்டர்கள் வாய் மூடி மவுனம் காத்தனர். அந்த திருட்டு சுனாமி நிதி வெளியாக்கி பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சகோ.பிஜெ அவர்கள் தமுமுகவுக்கு பகிரங்க அறைக்கூவல் விட்டார். இதன் பிறகு வேறு வழி இல்லாமல் தாங்கள் திருடி வைத்திருந்த 35 லட்சத்தை தமுமுக தலைவர்கள் வெளிக்காட்டினார்கள். தங்கள் ரசிகமணிகளை திருப்தி படுத்த மேடைநாடகமும் நடத்தினர். தமிழ்சமுதாயம் முழுவதும் சகோ.பிஜெவின் முயற்சியால் வெளிவந்த தமுமுக திருடிய 35லட்சம் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என்று நிம்மதியடைந்தனர்.

ஆனால் புகழ் விரும்பிகளான தமுமுகவின் பகட்டு தலைவர்கள் அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்காமல் தமுமுகவின் சொத்தாக்க நினைத்தனர். அதன் வெளிப்பாடுத்தான் நாகூரில் கல்யாண மண்டபத்தை சுனாமி பணத்தை கொண்டு கட்ட முடிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொண்டு இவர்கள் செய்யும் இந்த இழிசெயலை தடுத்து நிறுத்த தமுமுகவில் எந்த ஆண்மகனும் இல்லை என்பதுதான் வேடிக்கை.

சுனாமியில் விழுந்த பிணத்தை கொண்டு வசுலிக்கப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைமையை திருப்பி கொடுக்க ஒவ்வொரு சகோதரர்களும் தமுமுக தலைமையை வற்புருத்த வேண்டும். மற்றும் சுனாமி நிதியை திருடிவைத்து அதை முறைகேடாக பயன்படுத்திய தமுமுக தலைமை முஸ்லிம் சமுதாயத்திடம் மண்ணிப்பு கேட்கவேண்டும். பாதிக்கப்பட்டவன் கையை அந்த ஏகனிடம் உயர்த்தினால் இவர்களின் நிலை என்னவாகும் என்பதை இவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்ன நடக்கிறது, தமுமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்பதை பொருமையாக பார்ப்போம்.

வஸ்ஸலாம்.
அஹமது அலி.




0 Comments:

Post a Comment

<< Home