இடஒதுக்கீடு தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Bismillah..
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் உள்ள பிரிவினருக்கும் பழங்குடி வகுப்பினருக்கும் கல்விநிறுவனங்களிலும், வேலை வாய்ப்பிலும் கடந்த பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டு முறை பதவி உயர்வு அளிக்கப்படும் போதும் செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்பளித்துள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு பெறக்கூடிய பிரிவின் கீழ் வரும் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படக் கூடாது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வழி வகை செய்துள்ளது. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து இதுவரை இந்தியா முழுவதிலும் பொதுவான இட ஒதுக்கீடு முறையோ கொள்கையோ கிடையாது. இதன் காரணமாக பல சமயங்களில் குழப்பங்கள் விளைகின்றன. பலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பொறுந்துமா என்பது இது வரை தெளிவில்லாமல் இருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புக்களைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று தீர்பளித்துள்ளது. ஆனால் கிரிமீ லேயர் எனப்படும் இட ஒதுக்கீடு பெற்ற சமூதாயத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தொடர்பான வழக்கில் பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு கிரிமீ லேயர் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் அதே நிலை இப்போது தாழ்த்தப்பபட்ட சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்பட்டது சரி என்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஜயன்.
ழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது
ஆனால் இந்த தீர்ப்பு தவறானது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று கூறுகிறார், தலித் ஆய்வாளரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ரவிகுமார். தற்போதுள்ள சூழலில் உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெற பலத்த போட்டி நிலவுவதாகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்த படித்த பெற்றோர்களின் குழந்தைகளால் தான் இது போன்ற தேர்வுகளில் ஒரளவுக்குப் போட்டி போட முடியும் என்றும், வசதியற்ற சூழலில் இருந்து வரும் மாணவர்களால் இந்தப் போட்டிகளில் தேர்ச்சி பெறுவது கடினம் என்றும் ரவிகுமார் கூறுகிறார்.
அதே சமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகக் கூறுகிறார் மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் தமிழகப் பிரிவின் பொதுச் செயலாளர் எம் துரை பாண்டியன்.
பீகாரில் செல்வாக்கு பெற்ற தலித் மக்களின் தலைவரான ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட சில தலைவர்கள் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை எதிர்த்துள்ளனர். இந்த தீர்ப்பை தான் ஆராய்ந்து வருதாக மத்திய அரசு கூறுகிறது. இட ஒதுக்கீடு போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் கடைசி முடிவெடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான் உள்ளது. இதில் நீதிமன்றங்கள் தலையிடுவது சரியல்ல என்ற குரல்களும் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த தீர்ப்பு சட்டரீதியில் சரியான தீர்ப்பு என்கிறார் விஜயன்.
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சர்ச்சை கடந்த நான்கு மாதங்களாக தேசிய ஊடகங்களில் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பானது, இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தை மேலும் ஒங்கி ஒலிக்கச் செய்துள்ளது

Thanks--BBC-TAMIL
0 Comments:
Post a Comment
<< Home