|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, September 20, 2006

இலங்கை டூ காத்தான்குடி

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

மேற்கானும் தலைப்பை அல்கோபர் கோமாளியுடைய வலையில் பார்த்திருப்பீர்கள் எழுதியது யார் ? என்பதையும் நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறோம். மொத்தக் கழிவுகளின் சங்கமமாகிய கூவம் போல் அல்கோபர் கோமாளியுடைய ஃபித்னா வலை ஆகிவிட்டதை நாம் ஏற்கனவே எழுதி இருந்தோம்.

அதை உண்மைப் படுத்தும் விதமாக ஏற்கனவே தமுமுகவின் கள்ளவெப்சைட்டில் தனது கூடாரத்தை அமைத்திருந்த ஒருவர் அதுப் பழுது பட்டதும் இப்பொழுது அல்கோபர் கோமாளியுடைய ஃபித்னா வலையில் தனது புதுக் குடிலுக்கு அஸ்த்திவாரமிட்டுள்ளார் ( இனம் இனத்தோடு சேரும் )

உள் நோக்கமில்லாத லட்சனம் பாரீர்

பிஜே தான் விரிவினைக்கு காரணகர்த்தா என்றும் தன்னை சூக்குக் கீழ் வைத்திருந்த ஜவாஹிருல்லாஹ்வை தனது சிரத்தில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டு கரகமாடினார் அப்பொழுது நான் எந்த உள் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு கரகமாடவில்லை என்று அழுத்தமாக பொதுமக்களுடைய காதுகளில் பூச்சுற்றி விட்டார் இதற்கு எது விலையாக பேசப்பட்டது என்பதை கடந்த சட்டமன்ற தேர்தலில் பார்த்தோம் அது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பதவியாகும் !

இதை உங்களால் ஜூரணிக்க முடியவில்லை என்றால் அறிவுப்பூர்வமாக ஒன்றை சிந்தியுங்கள் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக்கூறுவது அவர்களை அல்ல அவர்கள் அற்பக் கிரயத்திற்காக அறிவை அவர்களுவடய கோயபல்ஸ் தலைவர்களிடம் அடகு வைத்து விட்டு பிஜே அவர்களை ஒழித்துக்கட்டும் வரை அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்து மதுரையை எரிக்கக் கண்ணகி சபதம் பூண்டு தலைவிரிக் கோலமாக அலைந்தது போல் இந்த ஜாஹில்கள் அலைகிறார்கள்.

அதனாவ் அறிவுப் பூர்வமாக பொதுமக்களை மட்டுமே சிந்திக்கத் தூண்டுகிறோம் மூதறிஞர் பிஜே அவர்களுடன் கோயபல்ஸ் சார் இணைந்திருக்கையில் மேல்படியார் டிசம்பரை விழுங்கி விட்டதையறிந்து இருவரும் எடுத்த முடிவு தான் வளைகுடா பொறுப்பாளர் எனும் பதவியிலிருந்து கடாசி விடுவதென்று , காலச்சூழ்நிலை இருவரும் பிரிந்தப்பின் பிரிவினையை சாதகமாக்கிக் கொண்ட டிசம்பரை விழுங்கயவர் ஒருவருக்குப் பூப்பல்லக்குத் தூக்குவதும் மற்றொருவரைப் பந்தாடுகிறாரென்றால் இதில் உள்நோக்கம் இருக்கிறதா ? இல்லையா ? உள்நோக்கமில்லையென்றால் பிரிவினைக்கு முன்பே மொட்டை நோட்டீஸ்களை பிஜே அவர்கள் பெயரில் அடித்து விநியோகித்திருக்க வேண்டும் மாறாக மொட்டை நோட்டீஸை துபைக்கு விசிட் செய்திருந்த பொய்யாமொழிப் பேராசிரியர் பேரில் அடித்து விநியோகிக்க் அதை வாங்கிப் படித்தப் பேராசிரியர் போட்டாரே ஒருப்போடு அவர் போட்டப் போடு எப்படிப் பட்டதென்றால் உண்மையில் அவன் ஒரு மானுடனாக இருப்பானென்றால் அவருடைய முகத்தில் வாழ்நாளில் ஒரு முறைக் கூட விழிக்கவே மாட்டான் ஆனால் இவர் தனது சிரஸில் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாரென்றால் அதற்காக தகுதியான விலை பேசப்பட்டு;ளளது என்று ஆரம்பத்திலிருந்தே நாம் எழுதி வந்தோம் அதை கடந்த சட்டமன்ற தேர்தலில் வழங்கப்பட்டதைப் பார்த்தோம் .

தமுமுகவின் ரவுடி ஹைதர் அலி அவர்கள் சென்னையில் திமுக பிரமுகர்களின் வீடுகளில் பாளையங்கோட்டையைக் கேட்டு ஏறி இறங்கி இறுதியில் படுதோல்வி அடைந்ததை எல்லோரும் அறிவீர்கள் இறுதியில் அரசியல் சாக்கடைக் கூட தன் மீது நீந்துவதற்கு அனுமதியளிக்க வில்லை. அதனால் அந்த அசிங்கத்தில் இருந்து விடுபட முடியாமல் நீண்ட நாட்கள் கீ போர்டை தூசுப்படிய விட்டவர் இப்பொழுது பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் கீ போர்டை தூசு தட்டி விட்டுள்ளார். ( அரசியல் சாக்கடை தன் மீது நீந்துவதற்கு சீட் கொடுக்க மறுத்ததையறிந்த ரய்சுதீன் தனது கூவத்தில் நீந்துவதற்கு தற்போது சீட் கொடுத்து;ளளார் இவரும் பிற்காலத்தில் சட்டமன்றத்தையேர் – பாராளுமன்றத்தையோ கேட்டு நிற்கும் நிலையை நீங்கள் காண நேரலாம் )

ததஜ ஊடகத்தைப் பார்ப்பதில்லையாம்

ததஜ வுடைய எந்த ஊடகத்தையும் அவர் பார்ப்பதில்லையாம் நாணயத்தின் இருப் பகுதியையும் பார்ப்பவனால் மட்டுமே நாணயத்தை மதிப்பிட முடியும். அதனால் தான் உண்மை எது ? பொய் எது ? என்று அவரால் பிரிவினையிலிருந்து ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தான் பெற்றுக் கொண்ட கூலிக்கொப்ப ( சட்ட மன்ற உறுப்பினர் பதவி ) கோயபல்ஸ் போக்கே தனது போக்காக மாரடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுதும் பாராளுமன்றத்தை கருத்தில் கொண்டு மாரடிக்க புறப்பட்டுள்ளார்.

காத்தான் குடி ஜமாத்தின் மவ்லூதுக்கெதிரான அறிவிப்பை தாங்கி வந்த ததஜ வின் இணையத்தை மட்டும் பார்வையிட்டாராம் காத்தான்குடி ஜமாத் லட்டர்பேடில் எழுதி இருப்பதை கண்டுப் பிடித்து விட்டாராம்.

இதனால் பிஜேயுடைய இமேஜ் கெட்டுவிட்டது போன்று எழுதி பாராளுமன்ற சீட்டுக்காக தமுமுகவுக்கு தூபமிட்டுள்ளார்.

மாகானம் என்பது ஒரு நாடல்ல, அது ஒரு மாவட்டமாகும் என்று குறுக்கு விசாரனை செய்யத் தெரிந்த அதிமேதாவி (?)க்கு இலங்கையில் ஒரு ஜமாத்தைத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா ? ஒரு நாட்டிலிருந்து வெளியாகக் கூடிய ஒரு ஊடகத்தில் அடுத்த நாட்டின் செய்தியை தரும்போது சம்மந்தப்பட்ட நாட்டின் தலைநகரை இணைத்தே செய்தி தருவார்கள் அதனடிப்படையில் இலங்கையில் உள்ள காத்தான் குடி முஸ்லிம் ஜமாத்தை ( இலங்கை ஜமாத் ) என்று குறிப்பிடப்பட்டது.

அடுத்து
காத்தான் குடி ஜமாத் நிறைவேற்றிய மவ்லூதுக்கெதிரான தீர்மானம் களியக்காவிளையின் ஜமாலி வகையறாக்களுடனான விவாதத்தின் தாக்கம் இல்லை என்று உளறுகிறார்

களியக் காவிளையில் நடந்த விவாதம் அறவே எடிட் செய்யாமல் ததஜ தரப்பில் டான் தமிழ் ஒளியில் வெளியிடப்பட்டு அது உலகம் முழுவதுமுள்ள மக்களை தட்டி உசுப்பியது என்றால் மிகையாகுமா ? ஜமாலி வகையறாக்களுக்காக தமிழனில் தமுமுக கொத்திக் குதறி (எடிட் செய்து) வெளியிட்டதையும் உலகம் பார்த்து அதிசயித்தது என்றால் மிகையாகுமா ? மேலும் வளைகுடா முழுவதும் உள்ள ததஜ அழைப்பு பிர்ச்சார மர்கஸ்களில் களியக்காவிளை விவாத சிடிக்கள் வரலாறு கானாத விற்பனையை எட்டியது என்றால் அதுவும் மிகையாகுமா ? அதில் முக்கிமாக இலங்கை சகோதரர்கள் அதிகமாக வாங்கிச் சென்றுப் பார்த்தார்கள் இதை விட எல்லாம் கோமாளியுடன் கூட்டு வைத்துள்ள ட்யூப் லைட்களுக்கு ஹைலைட்டான விஷயம் என்ன வென்றால் இலங்கையில் ததஜ தனது கிளையை வலுவாக வேரூன்றி இருப்பதுவேயாகும். அதனால் களியக்காவிளையின் ததஜ தரப்பின் அணல் பறக்கும் சத்திய விவாதமே காத்தான் குடி ஜமாத்தை சிந்திக்கத் தூண்டி மவ்லூது குப்பையை தூக்கிக் கடாசி விடுவதற்கு எடுத்த தீர்மானமாகும்.

எங்கள் ஊர் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் உங்கள் ஊர் பனை மரத்தில் நெறி கட்டுமா ? என்று இலங்கையச்சார்ந்த சகோதரர் ஒருவர் இவரிடம் போன் போட்டுக் கேட்டாராம் ? ( அதாவது காத்தான்குடி ஜமாத்தின் மவ்லுதுக்கெதிரான தீர்ப்பு களியக்காவிளையின் தாக்கமில்லையாம். )

அது எப்படி இலங்கையைச் சார்ந்த ஒருவர் இவரிடம் கேள்வி கேட்பது ? காத்தான் குடி ஜமாத்தைச் சார்ந்த ஒருவரல்லவா கேட்டிருக்க வேண்டும் மவ்லூதுக் கெதிரான தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது காத்தான் குடியல்லவா ? இவருக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டமா ? இவரிடம் கேள்வி கேட்டவரை மட்டும் இலங்கையின் எதாவது ஒரு மூளையில் வசிப்பவராக இருக்கலாம் ஆனால் ததஜ வின் இணையம் மட்டும் இலங்கை ஜமாத் என்று குறிப்பிடக் கூடாதாம் ? இப்படிப்பட்ட ட்யூப் லைட் தான் பாளையங்கோட்டயை தனக்கு கேட்டு அடம் பிடித்தார் சீட் கொடுக்க மறுத்ததனால் ஜாக் வேறு கொடிப் பிடித்து ஊர்வலம் நடத்தியது.

எங்கள் ஊர் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் உங்கள் ஊர் பனை மரத்தில் நெறி கட்டுமா ?
கட்டாது !

ஆனால் மக்காவில் உதயமான இஸ்லாம் இலங்கைக்கு எப்படிப் போயிற்று ? பதில் சொல்ல முடியுமா போன் போட்டுக் கேட்டவர் எப்படி முஸ்லிமானார் ? சத்திய மார்க்கத்தை ஓரிடத்தில் எத்தி வைத்து விட்டால் அது செல்ல வேண்டிய இடங்களுக்கு தாமாக சென்றுக் கொள்ளும் இது இறைவாக்கு. களியக்காவிளையில் ஷிர்க்குக்கு எதிராக அடிக்கப்பட்ட சாவுமணி உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் ஒலித்து முஸ்லிம்களின் உள்ளங்களை புரட்டி எடுத்தது அதனால் அல்லாஹ் புரட்ட வேண்டிய உள்ளங்களை அதன் மூலம் புரட்டி எடுத்தான் அதுவே இலங்கை ஜமாத்தின் மவ்லூதுக்கெதிரான தீர்மாணமாகும் என்பதை ஒன்றுக்கு ஆயிரம் தடவையாக இதை அறிவிக்கிறோம்.

வான்சுடர் என்ற பத்திரிக்கையின் வாயிலாக நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் தான் ஏகத்துவத்தை இலங்கையில் முதன் முதலாக போதித்தார் அவர் இறந்ததும் தவ்ஹீதும் இறந்து விட்டது என்று இன்றளவும் இலங்கையின் சுன்னத் வல் ஜமாத்துடைய எல்லாப் பள்ளிகளிலும் குத்பாக்களில் கூறுகிறார்கள் என்றும் கூறுகிறார்.

அவ்வாறெனில் நிஸார் குவ்வத்தி அவர்கள் மரணித்ததும் கூடவே மரணித்து விட்ட தவ்ஹ்Pதை முதறிஞர் பிஜே அவர்கள் இல்கையில் புணர் நிர்மானம் செய்து நிலை நிருத்தினார்கள் என்பதை இலங்கை சுன்னத் வல் ஜமாத் குத்பாக்களில் அறிவித்ததை அவருடைய கூற்றுப் பிரகாரம் பொதுமக்கள் எடுத்துக் கொள்வதுடன் நிஸ்ஸார் குவ்வத்தி அவர்கள் மரணித்ததும் இலங்கையில் தவ்;ஹீத் மரணித்து விட்டது போல் இன்ஷா அல்லாஹ் இனி மரணிக்காது என்பதுடன் தமிழகத்திலும் மரணிக்காது காரணம் களியக்காவிளையில் ஏகத்துவ இளம் அறிஞர்கள் மத்ஹபு குப்பைகளுக்கெதிரான விவாதத்தில் கலந்து கொண்டு விவாதித்தது பெரியதொரு எடுத்துக் காட்டாகும்.

வான்சுடர் என்ற பத்திரிக்கையின் வாயிலாகத் தான் தமிழகத்திலும் தவ்ஹீத் பரவியது என்றும் புருடா விட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏகத்துவ பிரச்சாரத்தை முதறிஞர் பிஜே அவர்கள் மேற்கொண்ட காலகட்டத்தில் இவரும் அதில் இணைந்திருக்;கும் போது நம்முடைய ஏகத்துப் பிரச்சாரத்திற்கு முந்தியது கேரளத்தில் முஜாஹிதீன்களுடைய தவ்ஹீத் புரட்சியாகும் என்று கூறியுள்ளார்கள் ஆகவே ஒருக்காலமும் குவ்வத்தி அவர்களுடைய பிரச்சாரம் தாக்கததை ஏற்படுத்தி இருக்காது காரணம் அவர் மரணித்ததும் இலங்கையில் அவரது பிரச்சாரத்திற்கும் அவருடன் குழி தோண்டப் பட்டுவிட்டதாக மேல்படியாரேக் கூறுவதால் அது தமிழகத்தில் நுழைந்தது என்று சொல்வதை நாம் ஏற்றுக் கெர்ளள முடியாது. அது அந்த ட்யூப் லைட்களுனுக்கே வெளிச்சம்

1000 ரூபாய் சம்பளத்திற்கு அந்நஜாத்தில் இணைந்து பணியாற்றினார் அவசர ஆலோசனைக்காக திருச்சி வந்து போவதற்குரிய செலவுகளை அந்நஜாத்தே கொடுக்க வேண்டும், பாத்ரூம் அட்டாச் ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் ?

ஹோட்டலில் தங்கிக் கொண்டு கக்கூஸூக்கு சாலையோரத்துக்கு செல்ல முடியுமா ? அட்டாச் பாத்ரூம் வீன் விரய செலவா ? அவசர ஆலோசனைக்காக திருச்சி வந்து போவதற்குரிய செலவுகளை அந்நஜாத் தான் கொடுக்க வேண்டும் அவர் தனது பாக்கெட்டிலிருந்து போட்டு செலவு பண்ண முடியுமா ? 1000 ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு அதில் தனது குடும்பத்தை வழிநடத்துவாரா ? அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு திருச்சி வந்து போவாரா ? சமுதாயத்தின் பேரைச் சொல்லி வசூல் செய்து அமுக்;கிக் கொள்பவராக இருந்தால் பரவா இல்லை அவர் எந்த டிசம்பரையும் இதுவரை பார்க்கவே இல்லை பல டிசம்பர்களை தொடராப் பாரத்தவர்களுக்கு இது சகஜம் புரிய வேண்டியவரல்களுக்கு இதுப் புரியும்


அன்று சைக்கிள் இன்று குவாலிஸ்

குவாலிஸ் அவருடைய வீட்டுக்காக வாங்கிக் கொடுக்க வில்லை மாறாக ததஜவின் அனைத்துப் பிரச்சார தாஇகளுக்காக பாதுகாப்புக் கருதி வாங்கி வழங்கப் பட்டதாகும் மூதறிஞர் பிஜே அவர்கள் மட்டும் குவாலிஸில் பயணிப்பதாக இருந்தால் களியக் காவிளையிலிருந்து திரும்பும் போது நிகழ்ந்த விபத்தில் அவரல்லவா காயப்பட்டிருப்பார், மாறாக அவர் அதில் பயணிக்காமல் எம்.ஐ அவர்களும், கோவை ரஹ்த்துல்லாஹ் அவர்களும் விபத்துக்குள்ளானதிலிருந்து குவாலிஸ் பிஜே என்கிற தனிமனிதருக்காக வாங்கப்பட்டதல்ல மாறாக தவஹ்pத் ஜமாத் அனைத்து நிர்வாகிகளுக்காகவும் வாங்கப்பட்டதாகும். அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள் அன்று வளைகுடா தவ்ஹித் பிரச்சாரக் குழுவுக்கு பொறுப்பாளர், இன்று சட்டமன்ற – பாராளுமன்ற உறுப்பினராவதற்கு பரினாமம் பெற முயற்சிப்கவரால் புரிந்து கொள்ள முடியாது.


அல் ஜன்னத்தில் ரகசிய சம்பளம் வாங்கினார், குவைத்தில் உள்ள வெளிநாட்டு அமைப்பு தவ்ஹிது; தாஇகளுக்கென அனுப்பியப் பணத்தை வேறு ஒரு மவுலவி பெயரில் வரவழைத்து கொடுத்து வந்தது எஸ்கே தான் இதன் ரகசியம் வெளிப்பட்டதும் மதனி மீது கோபம் கொண்டு அவரை ஒதுக்க ஆரம்பித்தார் ? இவ்வாறு புலம்புகிறார்

மேல்படிப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எஸ்.கே தான் பிஜே அவர்களுக்கு வாங்கிக் கொடுத்ததாகவும்; செய்தி லீக்கானதும் எஸ்.கே மீது கோபம் கொண்டு அவரை ஒதுக்கத் தொடங்கினார் என்றும் உளறுகிறார் நாம் கேட்கிறோம் தாஇகளுக்காக மட்டுமே அந்தப் பணம் குவைத்திலிருந்து அனுப்பப் பட்டதாக அவரேக் கூறுவதால் வேரு ஒரு மூன்றாவது மௌலவிப் பெயரில் ஏன் வரவழைக்க வேண்டும் ? ஜாக்குடைய அமீராக கமாலுதீன் மதனி நியமிக்கப்பட்டிருப்பதால் அவர் பெயரில் வரவழைக்கப்பட்டு அல்லது ஜாக் நிர்வாக கணக்கு நம்பரில் வரவழைக்கப்பட்டு தாஇகளுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாமே என்பது நமது அடுத்த கேள்வி ? அடுத்து ஜாக்குடைய தலைவர் தான் இப்பணத்தை கைமாற்றி விட்டதாகவும் அவர் ஓர் இடைத்தரகர் போல் செயல்பட்டதாகவும் இவர் கூறுகிறார் இதற்கு அவசியமே இல்லை காரணம் அந்தப் பணம் தாஇகளுக்கென்றே ஒதுக்கப்பட்டு வந்ததாகும் பிஜே அவர்கள் ஒரு தாஇ அது டிசம்பர் வசூலோ – சுனாமி வசூலோ அல்ல அதனால் இதற்குள் இத்தனை ஒளிவு – மறைவு அவசியமற்ற ஒன்றாகும் அதனால் குவைத்திலிருந்து பணம் வந்தது என்பதும், மூன்றாவது பெயரில் வரவழைக்கபபட்டது என்பதும், பிஜே அவர்களுக்கு எஸ்.கே அதை ரகசியமாக கொடுத்தார் என்கிற மூன்று அடுக்கும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் மூட்டைகளாகும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் செய்தி லீக்கானதும் என்று உலறுகிறார் யார் மூலம் எப்படி ஏன் லீக்கானது ஒரு வேளை எஸ்.கே இடைத்தரகர் போன்று பணத்தை கைமாற்றி விட்டு அவரே உள்ளுக்குள் எவரிடமாவது போட்டுகு; கொடுத்திருப்பாரோ அவாள்களுக்கே வெளி;ச்சம் ,

பணக்காரர்களான ரஹ்மத் ட்ரஸ்ட் காரர்களிடம் பிஜே வீழந்து விட்டார் என்ற விமர்சனத்தை அவரே சொல்ல வைத்தார் அது செட்டப் நாடகமாகும் என்றுக் கூறுகிறார்.

அவ்வாறெனில் இப்பொழுது பிஜேயைப் பற்றி இவர் பேசுவதெல்லாம் இவரை சொல்ல வைத்தது யார் ?
இவர் சொல்லும் போது மட்டும் இவராக சொல்வாராம் ? பிறர் சொல்வது மட்டும் செட்டப் நாடகமாம் ? இதிலிருந்து கோயபல்ஸ் காரர்களிடம் வலுவான ஒன்றை பகரமாக ( சட்டமன்ற – பாராளுமன்ற சீட்டுக்காக ) பெற்றுக்கொண்டு எழுதுகிறார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். 21:18 .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home