|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, November 14, 2006

இஸ்ரேல் பாலஸ்த்தீன மோதலைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள்!

'இஸ்ரேலுக்கும், பாலஸ்த்தீனத்துக்கும் இடையிலான மோதலே மேற்குலகுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவுக்குக் காரணம்' - கோஃபி அன்னான்.


இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தீனத்திற்கும் இடையேயான மோதலே மேற்கத்திய உலகிற்கும் முஸ்லீம் சமுதாயத்திற்கும் உள்ள பெரும் பிளவிற்கு அடிநாதமாகத் திகழ்கிறது எனக் கூறும், உலகின் பிரபலமான இருபது பேர் அடங்கிய குழு ஒன்று தயாரித்துள்ள அறிக்கை ஒன்றினை ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் கோஃபி அன்னான் ஆதரித்துள்ளார்.

அரபு, இஸ்ரேல் சர்ச்சை என்பது அந்தப் பிராந்தியத்திலுள்ள பல சர்ச்சைகளில் ஒன்றல்ல என்றும், வேறு எந்த மோதலும் குறியீட்டு அளவில் போர்க்களத்திற்கு அப்பாற்பட்டு உணர்வு ரீதியாக இவ்வளவு பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கோஃபி அன்னான் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு அமெரிக்கா மீதான தாக்குதல்கள், மத்திய கிழக்குப் போர் மற்றும் மேற்கத்திய நாடுகளில் முஹமது நபி (ஸல்) அவர்கள் குறித்து வெளியாயான கேலிச் சித்திரங்கள் ஆகியவை மேலும் மோதல்களைத் தூண்டிவிடக் காரணமாக இருந்தாலும், இரு நாகரீகங்களுக்கு இடையே இணக்கப்பாடு ஏற்பட முடியாத நிலை உள்ளது என்கிற கருத்தை அவர் புறந்தள்ளியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்த்தீன மோதலைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

நன்றி - பிபிசி

0 Comments:

Post a Comment

<< Home