மோசடிப் பித்தலாட்டப் பேர்வழியான முகவைத்தமிழன்!!
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் என்று நபியவர்கள் கூறினார்கள்: அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (நூல் - முஸ்லிம்)
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
முகவைத்தமிழன் ஃபோர்ஜரியா? என்ற தலைப்பில் தான் செய்தது ஃபோர்ஜரி அல்ல என்று தன்னை உத்தமனாக காட்டிக் கொள்வதற்காக பல பிரயாச்சித்தங்களை மேற்கொண்டு வருகிறார்.
அவைகள் அனைத்தும் மேலும் அவரை படுபாதாளத்தில் தள்ளி விடுவதாகவே அமையும் என்பதையும் கூறிக் கொள்கிறோம்.
<> தலைமையிலிருந்து ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் பேடிலிருந்து ரெஃபரன்ஸ் நம்பர் 333/200 என்ற எண்ணிட்ட கடிதம் 15-12-2005 தேதியன்று தம்மாம் நிர்வாகத்திற்கு நிர்வாகிகளுடைய மறு சீரமைப்பை அங்கீகாரம் செய்து அனுப்பி இருந்தார்கள், அதன் இறுதியில் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகளை தவிர வேறெவரும் வசூல் செய்யக் கூடாது என்கின்ற செய்தியும் கூடவே எழுதி இருந்தார்கள்.
<> அதே தேதியிட்ட, அதே ரெஃபரன்ஸ் நம்பருடன் அதே ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் ஹெட்டிலிருந்து ரியாத் நிர்வாகிகள் வெப்சைட் நடத்துவதில் அனுபவமிக்கவர்களாக இருப்பதால் அவர்களுடன் இணைந்து எதிர் அமைப்பினரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுங்கள் எதிர் அமைப்புகளைப் பற்றி எழுதும் போது தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அதன் இறுதியில் சவுதி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் மௌலவி அவர்கள் தலைமையில் தம்மாம் நிர்வாக சீரமைப்பு செய்த நிர்வாகிகளை தலைமை அங்கீகரிப்பதாகவும், தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறெவரும் வசூலிகக் கூடாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஒரிஜினல் எது? ஃபோர்ஜரி எது? என்று அறிவுப் பூர்வமாக சிந்தித்துக் கொள்வதற்கு சில விளக்கங்களை உங்கள் முன் வைக்கிறோம் .
1- நாடு தழுவிய ஒரு மாபெரும் மக்கள் பேரியக்கம் தனது கிளை நிர்வாகத்திற்கு எழுதும் கடிதத்தில் ஒரே ரெஃபரன்ஸ் நம்பரில் இரு கடிதங்களை எழுத மாட்டார்கள் இதை ஒரு ஜனநாயக அமைப்பு செய்யாது, தீவிரவாத அமைப்பு அதன் தலைமறைவு பேர்வழிகள் செய்வார்கள். காரணம் முகவரியற்றவர்களுக்கு அவர்களது வரம்பு மீறிய செயல்பாடுகளில் இதையும் பத்தோடு பதினொன்றாக ஆக்கிக் கொள்வார்கள் .
2- ஒரு காரியத்தை ரகசியமாக செய்யச் சொல்பவர்கள் எங்கள் பெயரை சொல்லாதீர்கள் என்றேக் கூறுவார்கள், அத்துடன் அவர்களது பெயர் எதிலும் வந்துவிடாமல் மிக ஜாக்ரதையாக கையாளுவார்கள். இதுதான் யதார்த்தம் அதற்கு உதாரணமாக கல்வி டாட் காம் காரரை முகவை முட்டாள் காட்டிக் கொடுத்ததை உதாரணமாகக் கூறலாம். மேலும் இந்த முட்டாளுடைய ஃபோர்ஜரி கடிதம் என்னக் கூறுகிறது என்பதையும் கவனியுங்கள், எதிர் அமைப்புகளைப் பற்றி எழுதும் போது உங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவதுடன் அதற்கு கீழ் தலைவர் பிஜே அவர்களுடைய கையெழுத்துடன் கடிதம் நிறைவு பெறுகிறது, எந்த மாங்காய் மடையனுடைய அமைப்பாவது இந்த ரகசியமேட்டரை தலைமை லட்டர் பேடிலிருந்து எழுதி அனுப்புவார்களா? அதுவும் ரெஃபரன்ஸ்ன் நம்பருடன்? தன்னைப் போன்றே முட்டாள்களாக அதிகபட்சம் மற்றவர்களும் இருப்பார்கள் என்று இந்த முட்டாள் முகவைத்தமிழன் நினைத்துக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
3- அடுத்து ஒரிஜினல் கடிதத்திலும், ஃபோர்ஜரி கடிதத்திலும் கூறப்படும் சம்பவங்களும், அதன் காலமும் (தேதியும்) மிகவும் முக்கியமான ஆதாரமாகும்.
4- ஒரிஜினல் கடிதத்தில் 15-12-2005 என்று தேதியிடபட்டுள்ளது, அதில் சவுதி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் மௌலவி அவர்கள் தலைமையில் தம்மாம் நிர்வாக சீரமைப்பு செய்த தேதியாகிய 8-12-2005யும், தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறெவரும் வசூலிக்கக் கூடாது என்கிற 29-12-2005 குடந்தை மாநாட்டுப் பேரணிவசூலும் இக்கடிதம் எழுதப்பட்ட தேதியுடன் ஒத்து வருவதைக் கவனிக்க வேண்டும். ஆக தம்மாம் நிர்வாகிகளுடைய மறுசீரமைப்பை அங்கீகரித்து தலைமையிலிருந்து வரப்பட்ட பதிலும், குடந்தை பேரணியும் அதே 12வது டிசம்பர் மாதத்துடன் தொடர்புயைவைகளாகும், பலமாதம் கால இடைவெளி உள்ள சம்பவங்களை அக்கடிதம் சுட்டிக்காட்டவில்லை என்பதை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
5- ஒரிஜினல் கடிதம் கூறும் சம்பவமும் அது எழுதப்பட்ட தேதியும் கால இடைவெளி மிகவும் நெருக்கமாக அதே மாதத்தை ஒட்டியதாக இருப்பதும் அதுவே ஒரிஜினல் கடிதம் என்பதற்கு ஒரு சான்று.
6- அடுத்து ஃபோர்ஜரி கடிதத்தில் நமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி சிலர் பேரணி வசூல் செய்யவிருப்பதை அறிந்தோம் என்கின்ற (ஒரிஜினல் கடிதத்தில் குறிப்பிட்ட) இரண்டு பாராக்களும் (இதிலும் அப்படியே நீக்கப்படாமல் இருக்கிறது) இந்த சம்பவத்திற்கும் ஃபோர்ஜரி கடிதத்தில் எழுதப்பட்டுள்ள 15-9-2005 குடந்தை பேரணிக்கும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் கால இடைவெளி உள்ளன.
7- குடந்தை பேரணிக்காக மூன்று மாதங்களுக்கு முன்பு வசூலைப் பற்றி எந்த விதமான முடிவையும் தலைமையும் எடுக்க வில்லை, அதன் கிளைகளும் எடுக்கவில்லை, அதனால் தலைமையின் பெயரைப் பயன்படுத்தி வேறு அமைப்பு வசூல் செய்ய முயற்சிப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தம்மாம் நிர்வாகத்திற்கு எழுதப்பட்டதாக கூறுவது வடிகட்டியப் பொய்
8- அதனால் ஃபோர்ஜரி கடிதம் கூறும் சம்பவமும் அதன் காலஇடைவெளியும் அதிக தூரமாக மூன்று மாதங்களுக்கு மேலுள்ளதாக இருப்பதும் இதுவே ஃபோர்ஜரி கடிதம் என்பதற்கு ஒரு சான்று.
9- ஆக முட்டாளுடைய கைவசம் இருந்தது ததஜவின் டிசம்பர் மாதத்து தம்மாம் புதிய நிர்வாகிகளுடைய அங்கீகாரம் செய்யப்பட்ட தலைமையின் கடிதம் மட்டுமே என்பதால் அதில் மக்காவின் சவுதி கூட்டமைப்பு நடந்த தேதியை மாற்றியும், தம்மாம் நிர்வாகிகள் பெயர் இருந்த இடத்தில் கள்ளவெப்சைட் கதையையும் தினித்து தனது கைவித்தைகளை காட்டியுள்ளார். (இதை அல்லாஹ் எங்களுக்கு காட்டிக் கொடுத்தான் அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்)
10- அடுத்து பிஸ்மில்லாஹ் விஷயத்திற்கு வருவோம் தலையிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் தமிழில் மட்டுமே எழுதுவார்கள் என்று நபிதரசன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள், தலைமை என்றால் இப்பொழுது இயங்கும் தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் தலைமையைத் தான் குறிக்கும் மாறாக ஜாக், அந்நஜாத்தை குறிக்காது. உலகில் உள்ள நடைமுறை என்று உதாரணத்திற்கு ஒருவர் கூறுவதாக இருந்தால் இந்த ஜெனரேஷனில் உள்ள நடைமுறையையே உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும், மாறாக கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து நடைமுறையை உதாரணமாக்கக் கூடாது. ஜாக்கிலிருக்கும்போது எழுதிய கடிதத்தையும், அந்நஜாத்திலிருக்கும் போது எழுதிய கடிதத்தையும் ஸ்கேன் செய்து இதிலிருக்கிறது பாருங்கள் அரபியில் என்று காட்டுவதில் அர்த்தமில்லை.
11- மேலும் இதுபோன்று படம்காட்டி விடுவதால் முகவைத்தமிழன் ஃபோர்ஜரி செய்யவில்லை என்றாகி விடுமா? ஒருவேளை ததஜ தலைமையிலிருந்து எதாவது ஒரு கடிதத்தில் அரபியில் எழுதப்பட்டதை காட்டி விட்டாலும் அல்லது அதையே இதே ஸ்டைலில் ஃபோர்ஜரி செய்து படம் காட்டி விட்டாலும் கள்ளவெப்சைட் செய்யச் சொன்னதாக தலைமை லட்டர் ஹெட்டில் எழுதி அனுமதி வழங்கியதாக சொன்னது ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா? அவர்கள் அந்த ஒரு உதாரணத்தை மட்டும் தான் காட்டி இருந்தார்களா?
'நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத்)
பொது மக்களே!
இதுபோன்ற ஒரு மோசடிப் பித்தலாட்டப் பேர்வழியான முகவைத்தமிழன் என்கிற அல்கோபர் ரயிசுதீன் தான் எங்கள் தலைமையை தரங்கெட்ட ஜமாத் என்று எழுதி வந்தார். இந்த ஃபோர்ஜரி மோசடி கண்டு பிடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் நிரூபணமாக்கப்பட்டு விட்டதால் யார் தரங்கெட்டவர்கள்? யார் தரங்கெட்ட ஜமாத்தினர்? இவரை மெஸ்மரிஸம் செய்த கூட்டத்தார்கள் தரங்கெட்ட ஜமாத்தினர்களா? இல்லையா? என்பதை சிந்தித்துக் கொள்வதுடன், ஃபிர்தவ்ஸி அவர்களைப் பற்றியும், ஜாஃபர் அவர்களைப் பற்றியும் எழுதும் போது எனக்கு போனுக்கு மேல் போன் வந்து கொண்டே இருக்கிறது, பாதிக்கப் பட்டவர்களுடைய ஆடியோ, வீடியோ என்றெல்லாம் புருடா விட்டது அவ்வளவும் ஃபோர்ஜரி தான், இதை கல்வி டாட் காம் காரர் தான் எழுத ஊக்கமளித்தார் என்றுக் கூறியதை அவரே ஒத்துக் கொண்டதால் கவ்விக் கொண்ட எலும்புத் துண்டுக்கு வாலாட்டிய எஜமான விசுவாசம் பளிச்சிட்டதை அவரது வாக்கு மூலம் உங்களுக்கு உண்மைப்படுத்துகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'இறுதித் தீர்ப்பு நாளில் மிக மோசமான நிலையில் இருப்பவன் பிறருடைய உலக வாழ்வை வளப்படுத்துவதற்காக தன் மறுமையை அழித்துக் கொண்டவனேயாவான்.' அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) (மிஷ்காத்)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக்கூறும் உமர்
0 Comments:
Post a Comment
<< Home