|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, December 03, 2006

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்!!

அபுதாபியில் நடந்த கட்டுரைபோட்டியும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமும்.

அபுதாபி, கடந்த நவம்பர் 24ந்தேதி வெள்ளிக்கிழமை, அபுதாபி ஹம்தான் ரோட்டில் உள்ள ரெயின்போ ஸ்டீக் ஹவுஸ் ரெஸ்டாரண்டில் ஜம்மியத்துல் முஸ்லிமீன் (TNTJ) கட்டுரைபோட்டி பரிசளிப்பு விழா ஒன்று நடத்தியது.

இது 3வது கட்டுரைப்போட்டியாகும். இந்த கட்டுரைப்போட்டி குறிப்பாக பிற மத சகோதரர்களுக்காக நடத்தப்பட்டு அதற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கடந்த 2004 ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு இஸ்லாம் என் பார்வையில் என்ற தலைப்பிலும், 2005-ம் ஆண்டு திருக்குர்ஆன் என் பார்வையில் என்ற தலைப்பிலும், 2006-ம் ஆண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் என் பார்வையில் என்ற தலைப்பிலும் நடந்தது.

நிறைய பிற மத சகோதரர்கள் தங்கள் பார்வையினை செலுத்தி கட்டுரை எழுதியிருந்தது குறிப்பிட தக்க விசயமாகும். இதன் மூலம் பிற மத சகோதரர்கள் எந்த அளவிற்கு முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி அறிந்து வைத்துள்ளார்கள் என்பது பலரை வியப்பிற்குள் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புரை அமைப்பின் தலைவர் அ.யூசுப்அலி அவர்களால் வழங்கப்பட்டது. பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரபு அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ. ஹாமீன் அவர்களால் இஸ்லாத்தை பற்றிய ஒரு அறிமுக உரை வழங்கப்பட்டு பின் கேள்விகளுக்காக பதிலும் அளிக்கப்பட்டது.

புதிய கேள்விகள் நிறைய கேட்கப்பட்டது, குறிப்பாக 200 பிற மத சகோதரர்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்க விசயமாகும்.

அமைப்பின் ஆலோசகர் சகோ. பஜிலுல்லாஹ் இந்த கட்டுரைப்போட்டி ஏற்பாடுகளின் தலைவராக செயல்பட்டதுடன், சகோ. சுல்தான் சலாஹீதீன் தலைமையில் நின்ற தன்னார்வ தொண்டர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த ஒத்துழைத்தது அமைப்பின் நிர்வாக செயல்திறனை கூட்டியது. இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒளிப்பதிவை நம் துனைதலைவர் சகோ. ஷேக் முஹம்மது அவர்கள் எடுத்தார்கள். மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தங்கள் பங்கிற்கு ஒத்துழைப்பை நல்கியது சிறப்பாக இருந்தது.

அல்லாஹ்தஆலா நம் அனைவர்களுக்கும் நற்கிருபை செய்வானாக.

நன்றி - TNTJ.NET

0 Comments:

Post a Comment

<< Home