மோதல்களைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!
முஸ்லிம்கள், இந்தியர் மற்றும் சீனர்களுக்குள் இன மோதல்களைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை ஏடுக்கப்படும்: மலேசியப் பிரதமர்
கோலாலம்பூர், நவ. 16: முஸ்லிம்களுக்கும், சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கும் இடையே இன மோதல்களைத் தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை ஏடுக்கப்படும் என மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி ஏச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாத்தை யாரும் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆளுங்கட்சியான 'உம்னோ'-வின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இந்தியாவில் இருந்து 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில் தலைமை உரையாற்றிய படாவி கூறியது:
மலேசியா பல மதங்களைச் சேர்ந்த, பல இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் தேசம். மலேசியாவின் இந்த பன்முகத் தன்மையைத் தோல்வியடையச் செய்வதே இனமோதல்களைத் தூண்டி விடுபவர்களின் நோக்கமாக உள்ளது.
இந்த வேலையைச் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார் படாவி.
இஸ்லாத்தின் நிலைப்பாட்டை பாதுகாப்பேன் என்றும், வெறுப்பு மற்றும் சகிப்புத் தன்மையின்மை போன்றவற்றை உருவாக்கும் வகையில் மலேசியாவில் யாரும் இஸ்லாத்தை தவறாகப் பயன்படுத்தாமல் தடுப்பேன் என்றும் உறுதியளித்தார் படாவி.
நன்றி - தினமணி
0 Comments:
Post a Comment
<< Home