பாபர் மஸ்ஜிதை மீட்கும் வரை போராட்டம் ஓயாது! TNTJ சூளுரை!!
மத்திய அரசே, மத்திய அரசே! மானங்கெட்ட காங்கிரஸ் அரசே!!
கடந்த 06-12-2006 அன்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் மௌலவி பி.ஜெய்னுல்ஆப்தீன் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பேட்டியின் விபரம்.
1992 டிச.6-ம் நாள் 450 ஆண்டுகால வரலாற்று சின்னமான பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பாபர் மஸ்ஜித் இடித்த நேரத்திலே அன்றைய பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்கள் அதே இடத்திலே பள்ளிவாசல் கட்டித்தருவோம் என்றார், கட்டித்தரவில்லை. பள்ளிவாசல்களை இடித்தவர்கள் மீது நடவடிக்ககை எடுக்கப்படும் என்றார், போதுமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவார்கள் என்பதற்காக லிபரஹான் கமிசனை அமைத்து அதனுடைய அறிக்கை அடிப்படையிலே நடவடிக்கை எடுப்போம் என்றார்கள், இன்றுவரை லிபரஹான் கமிசனுடைய அறிக்கை தாக்கல் செய்யப்படவுமில்லை, முடியவும் இல்லை.
இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்படும் காரணத்தினால் பாபர் மஸ்ஜிதை மீட்பதற்காக அந்த இடத்தை முஸ்லிம்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக அந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை தமிழகத்திலே 50க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களிலே இன்று நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். எல்லா பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களுடைய எதிர்ப்பை, அதிருப்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் மஸ்ஜிதை மீட்க்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மௌலவி பி.ஜெய்னுல்ஆப்தீன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
போரட்டத்தில் எழுப்பப்பட்ட கோசங்களில் சில..
அல்லாஹ் அக்பர்.. அல்லாஹ் அக்பர்..
மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
சட்டவிரோத பிழைகளுக்கு
நாளும் பூஜை நடத்திடவே
பூட்டை திறந்தது நீதானே?
மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
மானங்கெட்ட காங்கிரஸ் அரசே
பூட்டை உடைத்து பூஜை செய்ய
அனுமதி தந்தது நீதானே?
மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
மானங்கெட்ட காங்கிரஸ் அரசே
பாபர் பள்ளியை இடித்த போது
ஆட்சியில் இருந்தது நீதானே?
ஆசி வழங்கியதும் நீதானே?
இடிக்கப்பட்ட இடத்தினிலே
கட்டித்தருவோம் என்றாயே!
14 ஆண்டுகள் ஓடிப்போச்சு
உன் வாக்குறுதி என்ன ஆச்சு?
மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
மானங்கெட்ட காங்கிரஸ் அரசே
துரோகத்திற்கு மண்ணிப்பு கேட்டாய்
முஸ்லிம்கள் உன்னை ஆதரித்தோம்
ஆட்சிக்கட்டிலில் அமர்த்திவிட்டோம்
பாபர் பள்ளி என்ன ஆச்சு?
மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
தாமதம் வேண்டாம், தாமதம் வேண்டாம்
மத்திய அரசே தாமதம் வேண்டாம்.
அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம்,
காங்கிரஸ் அரசே அலட்சியம் வேண்டாம்,
கொடுத்த வாக்கை காத்துவிடு.
பாபர் மஸ்ஜித் பானியிலே
பள்ளிவாசலில் கை வைக்க
பாசிச கும்பல் முயற்சித்தால்
பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்.
ஓயமாட்டோம், உறங்கமாட்டோம்
இறை இல்லத்தை மீட்க்கும் வரை
இனியும் நாங்கள் ஓயமாட்டோம்,
மறக்கமாட்டோம், மறக்கமாட்டோம்
டிசம்பர் 6ஐ மறக்கமாட்டோம்.
என்ன ஆச்சு? என்ன ஆச்சு?
லிபரஹான் கமிசன் என்ன ஆச்சு?
மஸ்ஜிதை இடித்த பாவிகள் மீது
தடா சட்டம் பாயலையே!
தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது
தடா சட்டம் பாய்ந்தது ஏன்?
நன்றி - WIN TV.
வெளிச்சத்திற்காக எழுத்துருவில் முத்துப்பேட்டையார்.
0 Comments:
Post a Comment
<< Home