|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, January 28, 2008

தளராத உள்ளம்

''மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு அதைச் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் 'அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு ''பேரீச்சை மரம்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ (61), முஸ்லிம் (5028)

துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்? என்பதற்கு இந்த உதாரணம் அழகிய வழிகாட்டியாகும். வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பங்களை சந்திப்பவர்கள் தான் அதிகம். அவர்கள் விரும்பும் வாழ்க்கை பெரும்பாலும் யாருக்கும் கிடைப்பதில்லை. இது போன்ற நேரங்களில் மோசமான முடிவுகளை எடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர்.

துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நபிகளான் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அந்தக் காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதை எதிர் கொள்ள வேண்டும்.

இதைப் போன்று இன்னொரு உதாரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
''இறை நம்பிக்கையாளன் நிலை, இளம் தளிர் பயிருக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரீ (5643)

அல்லாஹ்வை நம்பியவன் அவனுக்கு எவ்வளவு பெய துன்பம் வந்தாலும் அந்த நேரத்தில் கவலை கொள்வான்; ஆனால் அதனால் உள்ளம் தளர்ந்து தவறான முடிவை எடுக்க மாட்டான். எப்படி இளம் தளிர்ப் பயிர், காற்று அடிக்கும் போது சாய்ந்து விட்டுப் பின்னர் எழுந்து விடுகிறதோ இதைப் போன்று இறைநம்பிக்கையாளன் அவனுக்கு வரும் துன்பங்களில் சோர்ந்து இருந்தாலும் சில நாட்களில் சாதாரண நிலைக்கு வந்து விடுவான்.

பெரும் மரங்கள் சாதாரண காற்றுக்கு அசைந்து கொடுக்கா விட்டாலும் பெரும் காற்று அடிக்கும் போது மொத்தமாக சாய்ந்து விடுகிறது. அது திரும்பவும் நிமிர்ந்து நிற்பதில்லை. அத்தோடு அழிந்து விடுகிறது. இது இறை நம்பிக்கை இல்லாதவனுக்கு உதாரணம்.

சின்ன துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இவர்கள் பெரும் துன்பங்கள் வரும் போது மொத்தமாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.இது போன்று இல்லாமல் சிறிய துன்பமாக இருந்தாலும் பெய துன்பமாக இருந்தாலும் ச, அனைத்தையும் சகித்துக் கொண்டு, திரும்பவும் வீறு நடை போடுபவனே உண்மையான இறை நம்பிக்கையாளன்.

இன்பங்கள் வரும் போது இறைவனைப் போற்றி, துன்பங்கள் வரும் போது பொறுமையைக் கடைபிடித்து இரு நிலைகளிலும் நன்மை சம்பாதிக்கும் பாக்கியம் இறை நம்பிக்கையாளனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை.
''முஃமினுடைய காயம் ஆச்சயத்தை அளிக்கிறது. அவனுடைய அனைத்துக் காயங்களும் நல்லதாகவே அமைகின்றன. இந்த நிலை முஃமினைத் தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் அவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமையைக் கடைபிடிக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷுஹைப் (ரலி)
நூல்: முஸ்லிம் (5318)

தேர்வில் தோல்வி அடையும் போது தற்கொலை, கடன் தொல்லையால் தற்கொலை, குடும்பத் தகராறால் தற்கொலை, திட்டியதால் தற்கொலை, நோயால் தற்கொலை என்று சின்ன சின்ன காரணத்திற்குக் கூட மாபெரும் பாவமான தற்கொலையைச் செய்து கொள்கிறார்கள்.

முஃமின்கள் இது போன்ற நிலையை எடுக்காமல் எந்த நிலையிலும் தடுமாறாமல் மன உறுதியோடு இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது நன்மைக்கே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
''யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (5645)

மேலும் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

''ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரீ (5641)

இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றது போல் அல்லாஹ் கூலியையும் கொடுக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பணிவோடு) தொட்டேன். அப்போது நான் ''தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்ளே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்; உங்க ளில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)'' என்றார்கள். நான் ''(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ''ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக) மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
நூல்: புகாரீ (5667)

எனவே எவ்வளவு பெய கஷ்டங்கள் வந்தாலும் இறைவனைப் பற்றி தவறாக நினைக்காமல் பொறுமை மேற்கொண்டு துன்பங்களை ஈமானிய வலிமையுடன் எதிர் கொண்டு இறையருளைப் பெறுவோமாக!

Saturday, January 26, 2008

இறையச்சம்

எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி லி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? இதைத் தடுக்க எத்தனை தடா, பொடாக்கள் வந்தாலும் அந்தக் கொடுமைகளை ஆட்சியாளர்களால், அதிகாகளால் தடுக்க முடிகின்றதா? இல்லை என்பது தான் யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங் கொடுமைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற ஆயிரக்கணக்கான குற்றங்களைத் தடுக்க லட்சக்கணக்கான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் திருத்த முடியவில்லை. அது இயலாது. சட்டங்களைப் போட்டு கால்நடைகளைத் தடுக்கலாம். ஆனால் பல திட்டங்களைப் போட்டு மனிதத் தீமைகளைத் தடுக்க இயலாது என்பது நாம் பார்த்து விடுகின்ற உண்மை.

அப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களைய, தடுக்க முடியவே முடியாதா? இத்தீமைகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? இதற்குப் பகாரம் தான் என்ன? இஸ்லாத்தை நோக்கிப் பார்ப்போம்.

இஸ்லாம் கூறுகின்றது. இது என்ன? இதை விடப் பன்மடங்கு தீமைகள் இருந்தாலும் அதையும் தடுக்க முடியும். மனித சட்டங்களால் அல்ல! இறையச்சத்தால் மட்டுமே!

இப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பல கொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள். அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூது இவைகள் அனைத்தும் அத்துப்படி. அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத் தீமைகளைப் படித்திருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எது? இறையச்சம் தான்.

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், ''இது ஸதகா லி தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகா

ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ? என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.

பொதுச் சொத்துக்களை எப்படியாவது அபகத்து விட வேண்டும் என்று இன்று பல தலைவர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்கள்.

''நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் அஸர் தொழுதேன். அவர்கள் தொழுகை முடிந்தவுடன் மிக வேகமாக மனைவியன் வீட்டுக்குச் சென்றார்கள். நபியவர்களின் விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிக விரைவாகச் சென்றதன் காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள். ''என்னிடத்தில் (பொது மக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அது என்னிடம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான் நான் சென்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா (ரலி)
நூல்: புகா

இப்படிப்பட்ட தூயவடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.
நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து ''அபூ மஸ்வூதே!'' என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், ''அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்!'' என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், ''இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்'' என்று கூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்லிம்

மனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெயாத மோசமான வாழ்க்கை வாழ்ந்த நபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிமைகளை, விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை லி அவர்களும் மனிதர்கள் தாம்; அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்த இறையச்சம் தான்.

எல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்ச காலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் இறையச்சம் தான். அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களை புனிதர்களாக மாற்றியது. இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம் சொல்லும் போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம்.

எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகத்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.
(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்
அல்குர்ஆன் 22:37

''இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

மேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம் தான் என்பது புயும்.

இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெய தாடி இருக்க வேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.
இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர். அதற்கு நபியின் மனைவியார் நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவத்தார்கள். அப்பொழுது, ''முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி இருந்தால் நாமெல்லாம் எங்கே!'' என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், ''நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்'' என்றார். மற்றவர், ''நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்'' என்றார். மூன்றாமவர், ''நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ''இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா?'' என்று வினவினார்கள். ''உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்பு வைக்கிறேன். நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக் கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகா

நம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும் எடுத்து விடவில்லை. ஏதோ தீமையை செய்யப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால் அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம் என்பதன் அளவுகோலை விளங்கலாம். இறையச்சம் என்பது அதிகமான நன்மை செய்வது அல்ல! 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல! மனைவி மக்களைப் பிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல! குடும்பத்துடன் இருந்து கொண்டு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்வது தான் இறையச்சம் என்பதை இந்தச் செய்தி தெளிவாகத் தெவிக்கின்றது.

ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றோம். பகல் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் கழிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இங்கு தான் இஸ்லாம் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றது.

நோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில் இருக்கும் போது அதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெயப் போவதில்லை. அவன் நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம். ஆனால் அவன் சாப்பிடாமல் இருக்கின்றான். ஏன் தெயுமா? அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவு உட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற இறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது.

தனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல் பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான். நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையே இறையச்சத்தின் காரணமாக சாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா?

அடுத்தவர் பொருளை அநியாயமாக அபகக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால் அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.
சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழ முடியாது. மிருகக் குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை!

எனவே தீய செயல்களைக் களைந்து, நல்லறங்கள் புவதற்குத் தேவையான இறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக!

Thursday, January 10, 2008

குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.

உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன. குடும்பக்கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை. அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும், குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையை மட்டும் கையாண்டு வந்தனர். அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவார்கள். இதுதான் அன்றைய மக்களிடம் அறிமுகமான ஒருமுறை. அரபு மொழியில் இந்தச் செயல் 'அஸ்ல்' எனக் கூறப்படுகிறது. இந்த 'அஸ்ல்' என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக்கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலத்தில், 'அஸ்ல்' செய்து வந்தோம்'' என்று ஜாபிர்(ரலி) அவர்கள் தெரிவிக்கும் செய்தி, புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நபித்தோழர்களும் 'அஸ்ல்' செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் தடை செய்யாமல் இருந்திருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு இது வராமல் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில் ''நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை.'' என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு செய்தி முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன் என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். இதற்கு நபி(ஸல்) அவர்கள், ''நீ விரும்பினால் 'அஸ்ல்' செய்து கொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் அந்த மனிதர் 'அஸ்ல்' செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க, தான் என்ன செய்ய வேண்டும் என்றே கேட்கிறார். நபி(ஸல்) அவர்கள் தாங்களே முன்வந்து 'அஸ்ல்' செய்து கொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்றிவிட இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள்.

விதியை நம்புவது என்பது 'அஸ்ல்' என்ற பிரச்சினைக்கு மட்டும் உரியதன்று. எல்லாப் பிரச்சினைக்கும் விதியை நம்புதல் பொதுவாக அவசியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மருந்து உட்கொள்கிறோம். இறைவனின் விதி வேறுவிதமாக இருந்தால் அதையும் இந்த மருந்து மாற்றிவிடும் என்று நம்பக் கூடாது. இது போல் தான் இந்தப் பிரச்சினையும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நான் என் மனைவியிடமிருந்து 'அஸ்ல்' செய்து வருகிறேன்' என்று கூறினார். எதற்காக 'அஸ்ல்' செய்கிறாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் என் குழந்தை விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் என்று கூறினார். (அதாவது என் மனைவி முதல் குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் அவளுடன் உறவு கொண்டு அவள் மீண்டும் கற்பிணியானால் முதல் குழந்தைக்கு ஏதும் கேடு நேரிடுமோ என்று அவர் அஞ்சுகிறார்) அப்போது நபி(ஸல்) அவர்கள் ''இது ஏதும் கேடு விளைவிக்கும் என்றால் ரூம், பாரசீக மக்களுக்குக் கேடு செய்திருக்குமே'' என்று கூறினார்கள். இதை உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்க முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில் ஒரு மனிதர் வந்து 'அஸ்ல்' செய்வதற்காக கூறிய காரணத்தை மட்டுமே நபி(ஸல்) அவர்கள் மறுக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக 'அஸ்ல்' செய்ய வேண்டியதில்லை. இதனால் எந்தப் பாதகமும் எற்படாது என்று பாரசீக மக்களை மேற்கோள்காட்டி விளக்கம் தருகிறார்கள். 'அஸ்ல்' என்பது அறவே கூடாது என்றால் என்ன காரணத்திற்காக 'அஸ்ல்' செய்கிறாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர் கூறிய காரணத்தை மட்டும் மறுத்திருக்க மாட்டார்கள்.

பால் கொடுக்கும் பெண்களைக் கர்ப்பிணியாக்குவதைத் தடுக்கலாம் என்று நான் கருதினேன். பின்னர் ரூம், பாரசீக மக்களைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதாக இல்லை. எனவே தடை செய்யவில்லை. (ஹதீஸின் கருத்து) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்கள் 'அஸ்ல்' பற்றிக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அஸ்ல்' என்பது குழந்தைகளை மறைமுகாக உயிருடன் புதைப்பது போன்றதாகும் என்று கூறினார்கள். இது அஹ்மத், முஸ்லிம் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.

இந்த ஒரு ஹதீஸ் மட்டும் 'அஸ்ல்' செய்வதைக் கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய ஹதீஸ்கள் அனைத்தும் 'அஸ்ல்' செய்வதை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இப்படி முரண்பட்ட கருத்துக்களை இரண்டு ஹதீஸ்களுமே அறிவிக்கின்றன. இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவையாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் இரண்டையும் இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வர கடமைப்பட்டுள்ளோம்.

அனுமதிக்கும் வகையிலமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் 'அஸ்ல்' செய்ய அனுமதி உண்டு என்ற முடிவை நாம் பெறலாம். கண்டனம் செய்து வருகின்ற ஹதீஸ் 'அஸ்ல்' அவ்வளவு நல்லதல்ல என்ற பொருளிலேயே கூறியிருக்க வேண்டும். அறவே கூடாது என்றிருந்தால் பல சந்தர்ப்பங்களில் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

'அஸ்ல்' போன்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் குடும்பக் கட்டுப்பாடுகள் கூடும் என்றே மேற்கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும். இப்போதையக் குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று தற்காலிகமாக குழந்தை பெறுவதை நிறுத்திக் கொண்டு தேவைப்படும் போது அதற்காக முயற்சித்தல். மற்றொன்று குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வது. இந்த இரண்டில் முதல் வகையான கட்டுப்பாடு முறை மட்டுமே அனுமதிக்கப்பட முடியும். 'அஸ்ல்' என்பது அந்த வகையில் அமைந்துள்ளது தெளிவாகின்றது. மற்றொரு முறை 'அஸ்ல்' என்ற முறையோடு ஒட்டி வராததால் அதை அனுமதிக்க எவ்வித அடிப்படையுமில்லை.

இறைவன் வழங்கிய அருட்கொடையை நிரந்தரமாக அழித்துக் கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை. பல நபித்தோழர்கள் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கோரிய போது, நபி(ஸல்) அவர்கள் மறுத்ததற்குப் பல சான்றுகள் உள்ளன. ஆணுறை, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திட தடை ஏதும் இல்லை. தடுப்பதற்கான அடிப்படைகளும் இல்லை. அதே நேரத்தில் இதைத் தவிர்ப்பதே நல்லது என்தையும் நாம் மறந்து விடலாகாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அதை கண்டித்தும் இருக்கிறார்கள்.

குடும்பக்கட்டுப்பாடு எனும் பெயரில் நடக்கும் இன்னொரு கொடுமையும் நாட்டிலே நிலவுகின்றது. கரு உருவான பின் அதைக் கலைத்து விடும் இந்தக் கொடுமை இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை.

உயிருடன் புதைக்கப்பட்ட சிசுக்கள் (மறுமையில்) என்ன குற்றத்திற்காகப் புதைக்கப்பட்டனர் என்று விசாரிக்கப்படுவர்.

(அல்குர்ஆன் 81:8,9)

உங்கள் குழந்தைகளை, வறுமைக்குப் பயந்து கொலை செய்யாதீர்கள்.

(அல்குர்ஆன் 6:151)

இதுபோன்ற வசனங்கள், உருவான குழந்தைகளை அழிப்பதற்கு தடையாக உள்ளன. இது அல்லாத விதமாக தற்காலிகமான முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.
Thanks..onlinepj