|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, November 24, 2007

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது.
இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்f;கின்றன.

குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:
1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்
1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
5. பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.
6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன.
ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.


தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:
1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.
5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.
7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும்.
டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்' என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!

ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார்!
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள்!
இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது.
அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.
நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.
மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள்.
ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள்.
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது.
(ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)


பெற்றோர்களே! உஷார்!!
பெற்றோர்களே! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?
சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் 'சுட்டி' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை.
பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை.ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.

சிலைகளாக
பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான்.உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.
கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா?


குழந்தைகளின் எதிர்காலம்?
ப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?
உடல் வலுவிழந்து,மூளைத்திறன் குன்றி,சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள்.

அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அலட்சியம் காட்டாதீர்!
இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள்; என்பது தான் பொருள்.
எனவே! பேற்றோர்களே!குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும்,சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.
அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.
இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு.
குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும்,நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Thanks.. seeniali

'ஜெய்ராம்' என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் அஷிஷ்கேதான் தலைமையிலான நிருபர்கள் குழு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஷ்வஹிந்த் பரிஷத் முக்கியஸ்தர்கள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள் போன்றோரிடம் தங்களை இந்துத்துவாவின் பெருமைகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதப் போவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு நட்பை வலுப்படுத்தி, நம்பிக்கையைப் பெற்று, குஜராத் கலவரத்தை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே பேச வைத்து ரகசியமாக பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பையே ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் இதில் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததற்கு முஸ்லிம்கள் காரணமா? இல்லையா? என்பதை தெஹல்காவின் புலனாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ரயில் பெட்டியை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள் என்பதை நிலைநாட்ட குஜராத் அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவையாகும்.

பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்சிங்கிற்கு 'முஸ்லிம்கள் 140 லிட்டர் பெட்ரோல் வாங்கிச் சென்றார்கள்' என்று கூறுவதற்காக தரப்பட்ட ரூ.50,000, டீ விற்கும் சிறுவன் அஜய்பாரியாவிடம், 'நான்தான் பெட்ரோல் கேன்களை ரிக்ஷாவில் எடுத்து வைத்தேன்' என்று பணம் தந்து நிர்ப்பந்தப்படுத்தி பெற்ற வாக்குமூலம், குறிப்பிட்ட தினத்தன்று வெளிநாட்டில் இருந்த 'மவலபியாகூப்' என்பவரை 'தீ வைத்தார்' என்று கைது செய்து நிரூபிக்க முடியாமல் திணறிய போலீஸ், சம்பவத்தின்போது அங்கே இல்லாத 'பதக்' என்பவரை 'முஸ்லிம்கள் எரித்ததைப் பார்த்தேன்' என்று சொல்ல வைத்தது.

நாதுராம் கோட்சே, கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றதுதான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அவசரப்பட்டு அவனை முஸ்லிம் என அறிவித்துவிடாமல், நிதானமாக விசாரித்தறிந்து காந்தியை கொன்றது இந்துதான்' என்று ரேடியோவில் அறிவிக்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு.

ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விசிட் செய்த அந்த நிமிடத்திலேயே, 'இது ஒரு சமுதாயத்தின் பயங்கரவாதச் செயல்' என்றார். இந்துத்துவ அமைப்புகளின் துவேஷத் தீ கனன்று எரிய அவரே எண்ணெய் வார்த்தார்.

ஒன்றா, இரண்டா... சுமார் 2,000 மனித உயிர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே வேட்டையாடப்பட்டது. சொந்த மண்ணிலேயே லட்சக்கணக்கானவர்கள் அகதிகளான அவலமும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலேயே தான் நிகழ்ந்துள்ளது.

ஒரு நாடு அல்லது ஒரு இனம் இவற்றின் மீதான துவேஷத்தை திட்டமிட்டு கட்டமைத்தே இது போன்ற இனப் படுகொலைகள், பேரழிவுகள் வரலாற்றில் சாத்தியமாகியுள்ளது. போர்களின் போது எதிரிகளை வீழ்த்த, பெரும் தீமைகளை அரங்கேற்ற ஒரு 'பரிசுத்தமான உயர்ந்த நோக்கம்!' மக்கள் மனதில் விதைக்கப்படுவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது. குஜராத்தில் 'ஜெய்ராம்' என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

சிலுவைப்போர்களின் போது குழந்தைகளின் சிலுவைப்படை பலகொடிய அழிவுகளுக்குப் பயன்பட்டு, பலியிடப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மானிய சமூகத்தினரை கொலை வெறியர்களாக மாற்ற முடிந்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு நாகரிகம் வளர்ந்த 21_ஆம் நூற்றாண்டிலும் அந்த வரலாறு திரும்ப வேண்டுமா?

இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷ மனப்பான்மைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்துக்களுக்கு சில விஷயங்களில் தெளிவை உண்டாக்க வேண்டும். எல்லாவற்றையும் வாளும், நெருப்புமே சாதிக்குமென்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம்!

இப்படி பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்கு மக்களை கொண்டு சென்றதால்தான் நரேந்திரமோடி போன்றவர்களும், அவர் சார்ந்த இந்து இயக்கங்களும் குஜராத்தில் இவ்வளவு வன்முறைகளை நிகழ்த்த முடிந்தது.

இதே இந்தியாவின் மற்ற பகுதிகளில் சகிப்புத்தன்மையின் சாட்சியமாக இந்து மதத்தை நம்பும் கோடிக்கணக்கான இந்துக்களும் வாழ்கின்றனர்.

'அகம் பிரம்மாஸ்மி' அகமே தெய்வம். தத்துவமஸி.. நீயே கடவுள் என்ற உபநிஷத்தின்படி ஒவ்வொரு மனிதனுமே தெய்வம்!

''காக்கை குருவி எங்கள் ஜாதி'' நீள் கடலும், வானும் மலையும் எங்கள் கூட்டம்'' என்ற வேத வாழ்வை விரும்பிய மகாகவி பாரதியாரின் பிரகடனத்தை ஒரு உண்மையான இந்துவின் பிரகடனமாக இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்வோம்..

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

வளைகுடா தொழிலாளர்களுடன் அல் ஜஸீரா

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களை அல் ஜஸீராவின் ஆங்கில சானல் ஒளிபரப்ப துவங்கியுள்ளது. ' வியர்வை துளிகளும் கண்ணீர் கன்னங்களும்' என்ற புலனாய்வு தொடரின் முதல் எபிஸோடு கடந்த சனிக்கிழமையன்று ஒளிபரப்பானது.
வளைகுடாவில் வாழும் ஆசியத்தொழிலாளர்களின் துன்பங்களுக்காக முதன்முறையாக ஒரு சானல் கேமராவை தூக்கி செல்கிறது. ஜேம்ஸ் போக்ஸ் எனும் அல் ஜஸீரா ரிப்போட்டரின் தலைமையிலான குழு மூன்று மாதங்களாக பணியிடங்களிலும் தொழிலாளர்கள் தங்கும் கேம்புகளிலும் செய்த விசாரணையின் தொகுப்புதான் இந்த தொடராகும்.

இந்தியா, வங்கதேசம்,நேபாளம், இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ளவர்கள் இங்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் படும் துன்பங்கள் இதில் நேரடியாக காட்டப்படுகின்றன.

மிகமிக குறைந்த சம்பளத்தில் 50 டிகிரிவரை கொதிக்கும் வெயிலில் இவர்கள் இரத்தம் சிந்துகின்றனர். அடிப்படை வசதிகள் பெயரளவுக்குக் கூட இல்லாமல் நோய்கள் வெகுமதியாக கிடைக்கும் கேம்புகளில்தான் இவர்கள் தங்கள் வாழ்வை கழிக்கின்றனர்.
இவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த தொழிலதிபர்கள் சிந்தித்ததுகூட கிடையாது. இவர்களை அனுப்பி வைக்கும் நாடுகளும் இந்த விஷயங்கள் பற்றி முழுமையாக அறிந்திருந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அதை கண்டுகொள்ள மறுக்கிறது என்பதையும் அல்ஜஸீரா சுட்டிக்காட்டுகிறது. ஏஜென்ஸிகளும் முதலாளியும்தான் இவர்களுடைய வியர்வையையும் உழைப்பையும் சுரண்டி கொழுக்கின்றனர். 2006- ல் மட்டும் யூ.ஏ.இ யில் 109இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.செல்வகுமார் தங்கவேலு என்கிற இந்தியத்தொழிலாளி > தனக்காக யாரும் இரக்கப்பட வேண்டாம், துயரப்பட வேண்டாம் பொருளாதார பிரச்சனைக்கு தற்கொலை தான் தீர்வு என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதின் குறிப்புகள் அல் ஜஸீராவிற்கு கிடைத்துள்ளன.

விஸாவிற்கும் டிக்கெட்டிற்கும் ஆன செலவுகளை ஈடுசெய்வதற்காக தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்வது சட்டப்படி குற்றமென்றபோதும் சர்வசாதாரணமாக இதை செய்கிறார்கள் என்று அல் ஜஸீரா கூறுகிறது. பணியிடங்களில் நடைபெறும் மரணங்கள் பற்றி பெரும்பாலும் விசாரணை செய்யப்படுவதில்லை. சமீபத்தில் கத்தாரில் சுவர் இடிந்து விழுந்து நான்கு தொழிலாளிகள் மரணமடைந்த சம்பவமும் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டது.

இப்படியாக ஆசியத்தொழிலாளர்களின் துன்பங்கள் சர்வதேச மனித உரிமை கமிஷன் மற்றும் பத்திரிகைகளின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. பல வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களின் நலன்கருதி தொழிற் சட்டங்களில் புதிய பல விஷயங்களை உட்படுத்தும் நடவடிக்கை துவங்கியிருப்பதாகவும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு : முஹம்மது மாஹீன் , ரியாத்

Tuesday, November 20, 2007

இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு-TNTJ செயற்குழு கண்டனம்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு 18-11-2007 அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை நிஜாம் காலனியில் அமைந்துள்ள மீனா மஹால் அரங்கத்தில் துவங்கியது.

இச் செயற்குழுவில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு, டிசம்பர் 6, வளைகுடா இந்தியர்கள் நிலை, போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது. மேலும் வரும் 2008 மே 12, 13 ஆகிய இரு தினங்கள் திருச்சில் மாபெரும் தவ்ஹீது எழுச்சி மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இச் செயற்குழுவில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இட ஒதுக்கீடு நன்றி அறிவிப்பு

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி கும்பகோனத்தில ஜனவரி 29-2006 ல் TTNTJ நடத்திய பேரணியிலும் மாநாட்டிலும் இலட்சக்கணக்கில் குடும்பத்துடன் திரண்டு வந்ததன் மூலமும் ஜனவரி 29-2007 ல் மாவட்டத் தலைநகரங்களில் TNTJ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டதன் மூலமும் ஜூலை 4-2007ல் TNTJ நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்டு சிறை சென்றதன் மூலமும் சட்டமன்ற முற்றுகைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டதன் மூலமும் தனி இடஒதுக்கீட்டை வென்றெடுத்த முஸ்லம் சமுதாய மக்கள் அனைவருக்கும் இச்செயற்குழு தனது நன்றியைத தெரிவித்துக் கொள்கிறது.


முஸ்லிம் சமுதாயத்தின் போராட்டத்திற்கு மதிப்பளித்து பிற்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்து பின்னர் சட்டமன்றத்திலும் நிறைவேற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் இச்செயற்குழு தனது நன்றியைத தெரிவித்துக் கொள்கிறது.


முஸ்லிம்களுக்கு திமுக அரசு தனி இட ஓதுக்கீடு அளித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று TNTJ நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தின் போதும் அதற்கு முன் TNTJ நடத்திய பல்வேறு போராட்டங்களி;ன் போதும் பிரகடனம் செய்தது. அதனடிப்படையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வுக்கு ஆதரவளிப்பதை இச் செயற்குழு மீண்டும் உறுதி செய்கிறது.


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு என்பதால் திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதில்லை என்றும் சமுதாயத்திற்கு நியாயம் வேண்டும் போதும், சமூகம் பாதிக்கப்படும் போதும் களமிறங்கி போராடுவதில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்வதில்லை என்றும் இச்செயற்குழு அறிவிக்கிறது.


மத்திய மாநில அரசுகள் செய்யும் நல்லவைகளைப் பாராட்டுவது, தீயவைகளைத் தாட்சண்யமின்றி எதிர்ப்பது என்ற கொள்கையைத் தொடர்ந்து மேற்கொள்வது என்று இச்செயற்குழு உறுதி செய்கிறது.


முழு திருப்தியில்லை.

முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப இந்த இட ஒதுக்கீடு அமையவில்லை என்பதை இச்செயற்குழு கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் ஓமந்தூர் ராமசாமி அவர்கள் முதல்வராக இருந்த போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஏழு சத விகிதமாவது அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.


இக்கோரிக்கையை வென்றெடுக்க அரசுக்கு தக்க அவகாசம் அளித்து தொடர்ந்து போராடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

மத்திய அரசின் அலட்சியம்

மாநில அரசு முஸ்லிம்களுக்கு தனியிட ஓதுக்கீடு அளித்து விட்ட நிலையில் மத்திய அரசாங்கம் இது பற்றி உருப்படியாக எதையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இடஓதுக்கீடு அளிக்க மத்திய அரசு தவறினால் திமுகவுக்கு தனி நிலைபாடும் காங்கிரசுக்கு வேறொரு நிலைபாடும் எடுக்க தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று காங்கிரசை இச்செயற்குழு எச்சரிக்கிறது.


இராணுவம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளிலும் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் தனி இட ஓதுக்கீடு கிடைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.


ஜனவரி 31- 2008 க்குள் முஸ்லிம்களுக்கு தனியிட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் பிப்ரவரி முதல் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வரும் போதும் அவர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சிகளின் போதும் அவர்களை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

அரசியல் அதிகாரத்தில் இட ஒதுக்கீடு

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலித் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ்; தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.


புதுவை அரசின் மெத்தனம்
கும்பகோணத்தில் TNTJ நடத்திய பேரணிக்குப் பின் முஸ்லிம்களுக்கு தனியிட ஒதுக்கீடு அளிக்க புதுவை சட்டமன்றத்தில் 27-2 2006 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் இட ஒதுக்கீடு பற்றி புதுவை அரசு நீண்ட மௌனம் சாதித்து வருகிறது. 27-2-2007 அன்று புதுவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல்லாயிரம் முஸ்லிம் பெண்களுடன் முஸ்லிம்கள் மாபெரும் பேரணி நடத்தி தனி இடஓதுக்கீடு பற்றி வலியுறுத்தினோம். இதன் பிறகு புதுவை முதல்வரை இரு முறை சந்தித்து வலியுறுத்தினோம்.

இதன் பின்பும் இட ஒதுக்கீடு கிடைக்க வில்லை. எனவே வரும் 27-2-2008 அன்று புதுவையில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அளித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியை ஆதரிப்போம். ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை இழுத்தடித்தால் எதிர் வரும் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை முழுமையாகஇழக்க நேரும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

குஜராத் இனப்படுகொலையும் தெஹல்கா புலனாய்வும தெஹல்காவுக்கு நன்றி

கோத்ரா ரயிலை எரித்ததும், அதைக் தொடர்ந்து இனப்படுகொலையை நிகழ்த்தியதும் மோடியும் பாஜகவினரும் அரசு அதிகாரிகளும் தான் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. பாரபட்சமின்றி துணிவாக புலனாய்வு செய்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய தெஹல்கா வார இதழையும் தெஹல்கா இணைய தளத்தையும் இச்செயற்குழு பாராட்டுவதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தெஹல்கா புலனாய்வும் அரசியல் கட்சிகளின் அலட்சியப் போக்கும்
இதயத்தைப் பிளந்து விடும் வகையில் அமைந்த இந்த அறிக்கை வந்த பின் இது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலலை என்று கூறிய தமிழக முதல்வர் கருணாநிதியை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. கலவரம் நடந்த போது மோடி அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் மோடிக்கு ஆதரவாக தி.மு.கவினர் வாக்களித்ததையும், கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று இப்போது கருணாநிதி கூறியதையும் பார்க்கும் போது மோடியுடன் கருணாநிதிக்கு இன்று வரை உறவு இருக்கிறது என்று இச்செயற்குழு ஐயம் கொள்கிறது.


உள்ளூர் பிரச்சனைக்கெல்லாம் தினசரி அறிக்கை விட்டு தினசரி போராட்டம் நடத்தி வரும் ஜெயலலிதா தெஹல்கா புலனாய்வு பற்றி மௌனம் சாதிப்பதை இச் செயற்குழு கடுமையாகக் கண்டிக்கின்றது. குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட்டதை ஜெயலலிதா நியாயப்படுத்தியதையும், ரயிலை எரித்ததே மோடி தான் என்பது அம்பலமான பின்பு மௌனம் சாதிப்பதையும் பார்க்கும் போது இன்னும் மோடியின் அன்புத் தொழியாகவே ஜெயலலிதா இருக்கிறார் என்று இச் செயற்குழு ஐயம் கொள்கிறது.


முஸ்லிம்களின் நண்பர்களாக வேடம் போடும் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மௌனம் சாதிக்கின்றன. அல்லது மென்மையாக வருடிக் கொடுக்கும் வகையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து முஸ்லிம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர், உடமை, மானம் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் எந்த அளவு எதிர்ப்புக் காட்ட வேண்டுமோ அந்த அளவு எதிர்ப்புக் காட்டத் தவறி விட்டன. அனைவருக்குள்ளும் மதவெறி மறைந்திருக்கின்றது என்பதை இந்த மௌனம் அம்பலப்படுத்துகிறது என்று இச் செயற்குழு குற்றம் சாட்டுகிறது.


குஜராத் கலவரத்தின் போதும், தெஹல்கா புலனாய்வு அறிக்கை வெளியான போதும் இடைப்பட்ட காலங்களிலும் வலிமையாகக் குரல் கொடுத்து வரும் ஒரே அரசியல் வாதியான லாலு பிரசாத் யாதவ் அவர்களையும் அவரது கட்சியையும் இச் செயற்குழு பாராட்டுவதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.


நடந்த அக்கிரமத்தை தாட்சண்யமின்றி தெஹல்கா புலானய்வு அறிக்கையை தமிழுலகுக்குக் கொண்டு சென்ற செய்தியாளர்களையும் செய்தி நிறுவனங்களையும் இச்செயற்குழு பாராட்டுகிறது.


இவ்வளவு பெரிய அக்கிரமத்தைப் பற்றி கண்மூடிக் கொண்ட சந்தர்ப்பவாதிகளான பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள், முற்போக்காளர்களை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. மனிதாபிமானமற்ற இவர்கள் எழுத்துத் துறையில் இருப்பதற்கும் பொதுவாழ்வில் இருப்பதற்கும் அறவே தகுதியற்றவர்கள் என்று இச்செயற்குழு இனம் காட்டுகிறது. இவர்களையும் இவர்களது பத்திரிக்கைகளையும் மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டும் என்று இச் செயற்குழு கோருகின்றது.

CBI விசாரனை
தெஹல்கா புலனாய்வு ஆதாரங்களின் அடிப்படையில் தாட்சண்யமின்றி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மத்திய அரசாங்கம் ஊடீஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனி நீதி மன்றம் அமைத்து குஜராத் இனப்படு கொலை வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அமெரிக்காவுடன் அனுசக்தி ஒப்பந்தம்
123 ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும்

ஆரம்ப காலம் முதல் அமெரிக்கத் தயாரிப்பு என்று விமர்சிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங் அதை உண்மைப்படுத்துவது போல் அமெரிக்காவின் எடுபிடியை விடக் கேவலமாக நடந்து வருகிறார். அமெரிக்காவின் கட்டளைப்படி ஈரானுக்கு எதிராக வாக்களித்தார். நமது நாட்டின் அனைத்து இரகசியங்களையும் அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுக்கும் வண்ணம் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்திருக்கிறார். அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மன்மோகன் சிங்கை மாற்ற வேண்டும்
நாட்டு நலனை விட அமெரிக்க நலனுக்காக பாடுபடும் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றி விட்டு நாட்டு நலனில் அக்கரையுள்ள தலைவரை பிரதமராகத் தேர்வு செய்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

வளைகுடா பணியாளர் அவலம் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும்
அமெரிக்க டாலரின் மதிப்பும், அமெரிக்க டாலரின் அடிப்படையில் தங்கள் நாணய மதிப்பை நிர்ணயிக்கும் அரபு நாடுகளின் ரியால் மற்றும் திர்ஹத்தின் மதிப்பும் பெருமளவு சரிந்துள்ளது.


நூறு ரியால் அல்லது திர்ஹமுக்கு ஆயிரத்து இரு நூறு ரூபாய்கள் கிடைத்து வந்த நிலை மாறி தற்போது 950 ரூபாய்கள் தான் கிடைக்கின்றது. இதனால் அரபு நாட்டில் பணிபுரிபவர்களின் ஊதியம் 15 சதம் முதல் 20 சதம் வரை குறைந்து விட்டது. இந்தியச் தொழிலாளர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு இலக்காகியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய ரூபாய் மதிப்பில் அவர்கள் பெற்று வந்த ஊதியம் குறையாத வகையில் அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அரசு அரபு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.


இந்த பாதிப்பை எதிர் கொள்ள முடியாத ஏழைத் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினால் நாட்டில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதுடன் அரபு நாடுகள் மூலம் நமது நாட்டிற்கு கிடைக்கும் அன்னியச் செலாவனியும் குறைந்து நாடு மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் எனவே போர்க்கால அடிப்படையில் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியக் குறைவைச் சரி செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு
அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்து வண்ணம் உள்ளன.


தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அனுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
சாதிக் கலவரத்தைத் தூண்டும் மாநில அரசு
கடந்த காலங்களில் பேருந்துகளுக்கும் மாவட்டங்களுக்கும் சாதித் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டதால் சாதிக் கலவரம் கொளுந்து விட்டு எரிந்தது. பல உயிர்களும் உடமைகளும் நாசமான பின் காலம் கடந்து உண்மையை உணர்ந்து கொண்ட அன்றைய தமிழக அரசு சாதித் தலைவர்களின் பெயர்களில் இருந்த மாவட்டப் பெயர்களை நீக்கியது. அரசுப் பேருந்துகளில் இடம் பெற்ற சாதித் தலைவர்களின் பெயரை நீக்கியது.


ஆனால் அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை இவ்வளவு சீக்கிரம் தமிழக அரசு மறந்து வருகிறது. சாதித்தலைவர்களின் பெயரில் விமான நிலையம், சாதித் தலைவர்களுக்கு அரசு செலவில் விழா மனி மண்டபம் என்று கலவரத்துக்கான தீயை அரசாங்கமே மூட்டுவதை இச்செயற்குழு கண்டிக்கிறது.

எந்த சாதி தலைவருக்கும் அரசு விழா நடத்தக் கூடாது.
எந்த சாதித் தலைவரின் பெயரையும் எந்த அரசுத் தொடர்பான நிறுவனங்களுக்கும் சூட்டக் கூடாது.
அரசின் சார்பில் சாதித் தலைவர்களுக்கு சிலை அமைக்கக் கூடாது. சாதித் தலைவர்கள் தொடர்பான அனைத்து நிகழ்விலிருந்தும் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டு நாட்டில் அமைதி ஏற்பட பாடுபட வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

முழு மது விலக்கு
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்த பின் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் அளவு அதிகரித்துள்ளது,. குடிகாரக் கணவர்களால் பெண்களின் இன்னல் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகவுள்ளன. பல்வேறு சமூக விரோதச் செயல்களுக்கும் குடிபோதையே முக்;கியக் காரணமாக அமைந்துள்ளது. எனவே வருமானத்தை கவனத்;தில கொள்ளாமல் சமுதாய நலனைக் கருத்;தில் கொண்டு தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை
சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இச் செயற்குழு ஆலோசனை கூறுகிறது.

இரத்த தானம்
2006 ம் ஆண்டு மாநில அளவில் 3240 பேர் இரத்த தானம் செய்ததன் மூலம் மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று 2006 ஆம் ஆண்டுக்கான சுழல் கோப்பையைப் பெற்ற TNTJ இரத்த தான பொறுப்பாளர்களை இச்செயற்குழு பாராட்டுகிறது. வரும் ஆண்டுகளிலும் இந்த நிலையைத் தக்க வைக்கவும் தேசிய அளவில் முதலிடம் பெறுவதற்காக பாடுபடவும் இரத்த தான பொறுப்பாளர்களை இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

டிசம்பர் 6
பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை விரைந்து தண்டிக்கும் வகையில் தனி நீதி மன்றம் அமைத்து விசாரிக்க வலியுறுத்தியும், பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கும் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் முஸ்லிமல்லாத நியாவான்களும் பங்கேற்க வேண்டும் எனவும் இச் செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

விரைந்து நீதி வழங்க வேண்டும்
குடிமக்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு நியாயம் வழங்குவதும் இந்திய ஆட்சியாளர்களின் தலையாய கடமை. பொதுமக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் ஆட்சியாளர்கள் மக்கள் தொகைக்கேற்ப நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் அதிகரிப்பதற்கு செலவு செய்ய வேண்டும். லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் இலட்சக்கணக்கான அப்பாவிகள் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த அவலத்தைப் போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க இச் செயற்குழு வேண்டிக் கொள்கிறது

புதுக்கோட்டையில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்

மிகவும் பின் தங்கிய மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு படையெடுக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.

மத்திய மாநில அரசுகள் இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி இந்த அவல நிலையை மாற்ற வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தவ்ஹீத் எழுச்சி மாநாடு
2008 மே 12, 13 ஆகிய இரு தினங்கள் திருச்சியில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடத்துவது என்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.
Thanks..WWW.TNTJ.NET
Sunday, November 18, 2007

உயிர் காக்க உதவும் பத்து வழிமுறைகள்

நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவ மனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி. உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.

3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும்.

6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும்.

7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.

8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.

9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது.

10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்ளதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.

Mujibur Rahman (Sr. Programmer)

Monday, November 12, 2007

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!!


இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால் தான் தங்களுக்கு ஏதேனும் மன இறுக்கம் ஏற்படும் போது அல்லது சலிப்பு ஏற்படும் போது இசை கேட்க விரும்புகின்றார்கள்.

இசை நம்முடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி, ஓய்வைத் தருகின்றது என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதும் இதற்குக் காரணம்.

பெண்களும் கூட வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வேலையில் சிரமம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. மார்க்கம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருமே இந்த இசையில் மூழ்கியுள்ளனர்.

இந்த இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல், தூக்கமின்மை, அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.

இசை கேட்கும் போது மனித உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கின்றது என்பதை சமீபத்தில் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அட்ரினலின் என்ற ஹார்மோன் பொதுவாக ஏதாவது மன இறுக்கம் ஏற்படும் போதோ அல்லது சாதாரண நிலைகளிலோ சிறிதளவு தான் உற்பத்தியாகின்றது.

இசை கேட்கும் போது அட்ரினலின் தொடர்ந்து உற்பத்தியாகின்றது. அட்ரினலின் அதிகமாக உற்பத்தியாவதால் மனித உடலில் ஒரு பரபரப்பும், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவையும் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதனால் மேலும் பல தீமைகள் ஏற்படுகின்றன.

இசை கேட்பது மனதுக்கு நிம்மதி அளிக்காது. மாறாக அமைதி யின்மையை ஏற்படுத்தும். இறைவனை நினைவு கூர்வது தான் மனதுக்கு அமைதியைத் தரும். பாவமான, மானக்கேடான காரியங்களை விட்டும் தடுக்கும்.

(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (29:45)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)

இறைவனை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும் நாம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அவனும் நம்மை நினைவு கூர்கின்றான்.

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (2:152)

நாவுக்கு இலேசானது தராசில் கனமானது
இன்று ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்கள் எந்த நேரமும் வாயில் நுழையாத, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றார்கள். அந்தப் பாடல்களை எப்படியாவது பாடியே ஆக வேண்டும் என்பதற்காக அவற்றைக் கேட்டு, மனப்பாடம் செய்து பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வாயில் நுழையாத, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைப் பாடி தீமையைச் சேர்ப்பதை விட மிகவும் சிறந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்வது நாவுக்கு மிகவும் எளிதானது. மறுமையில் மீகான் எனும் தராசினைக் கனமாக்குவதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். அவை:

1. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்)

2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7563

சுப்ஹானல்லாஹில் அழீம் என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 3464

வார்த்தைகளில் சிறந்தது

நபி (ஸல்) அவர்களிடம், ''வார்த்தைகளிலேயே சிறந்தது எது?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''மலக்குமார் களுக்கும், தன்னுடைய அடியார் களுக்கும் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்ற வார்த்தையை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2731

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ''அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு, ''அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான வார்த்தை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4911

பாவங்கள் மன்னிக்கப்பட...

நாம் நம்மையும் அறியாமல் எத்தனையோ சிறு சிறு தவறுகளைச் செய்கின்றோம். இன்னும் சில நேரங்களில் அந்தச் சிறு தவறுகளை நாம் தவறு என்று தெரிந்து செய்கின்றோம். ஆனால் அதன் விளைவை நாம் பெரிதாக எண்ணுவதில்லை. மிகவும் சாதாரணமானது என்று நினைக்கிறோம். ஆனால் நம்முடைய பதிவேடு அதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் பதிவு செய்து விடும்.

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! ''இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (18:49)

தூய்மையான எண்ணத்துடன் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்று ஒரு நாளைக்கு நூறு முறை கூறினால் நம்முடைய பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும் அதை அல்லாஹ் மன்னித்து விடுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப் பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6405

செல்வந்தர்களின் அந்தஸ்தை அடைய...

பணம் இருக்கும் செல்வந்தர்களில் அதிகமானவர்களுக்குக் கொடுக்க மனம் இருக்காது. பணம் இல்லாத ஏழைகளிடம் கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கும். இன்னும் சிலரோ தங்களுக்குக் கிடைக்கும் செல்வத்தை வீண் விரயம் இல்லாமல் செலவழித்து, அதில் மீதம் இருப்பதைத் தர்மம் செய்து விடுவார்கள். என்றாலும் இவர்களது எண்ணம் இன்னும் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும் என்றே இருக்கும்.

தர்மம் செய்பவர்களைப் பார்க்கும் ஏழைகளுக்கு, இது போன்று நமக்கும் செல்வம் தரப்பட்டால் நாமும் தர்மம் செய்து அதிக நன்மைகளைப் பெறலாமே! இவர்கள் மட்டும் அதிகமான நன்மைகளைப் பெறுகிறார்களே! என்று நினைப்பார்கள்.

இது போலத் தான் சத்திய ஸஹாபாக்களும் வருத்தப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த திக்ருகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

ஏழைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்று அவர்களும் தொழுகின்றார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு வைக்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். அறப்போர் செய்கின் றனர். தர்மமும் செய்கின்றனர் (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடியவில்லை)'' என்று முறையிட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகின்றேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவர்கள் ஆவீர்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள். 33 தடவை இறைவனைப் புகழுங்கள். 33 தடவை இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.

நாங்கள் இவ்விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 34 தடவையும் கூறினோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 தடவைகள் கூறியதாக அமையும்'' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 843

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு

நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானைப் பற்றிக் கூறும் போது மனிதர்களின் இரத்த நாளங்களில் ஓடுவதாகக் கூறுகின்றார்கள். இந்த ஷைத்தான் மனிதர்களை வழி கெடுப்பதற்கு ஏதேனும் ஒரு சிறு வழியேனும் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டேயிருக்கின்றான். இந்த ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு வழியைக் கற்றுத் தருகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமை உள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். நூறு தவறுகள் அவரது கணக்கிலிருந்து அழிக்கப்படும். மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6403

அல்லாஹ்வை நினைவு கூராத மனிதனை நபி (ஸல்) அவர்கள் இறந்தவனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவனின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கின்றது.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 6407

அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (33:35)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுபவர்களைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரைக் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்' என்று அவர்கள் தம்மில் ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர்.

அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன், ''என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?'' என்று கேட்கிறான். அந்த வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கு அறிந்தவன் ஆவான். ''அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்'' என்று வானவர்கள் கூறுவார்கள்.

அதற்கு இறைவன், ''அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா?'' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ''இல்லை. உன் மீது ஆணையாக அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ''என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?'' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ''உன்னைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள். இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்'' என்று பதிலளிப்பார்கள்.

அதற்கு இறைவன், ''அவர்கள் என்னிடம் எதை வேண்டுகிறார்கள்?'' என்று தனக்குத் தெரியாதது போல் கேட்பான். ''அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறார்கள்'' என்று வானவர்கள் கூறுவர். ''அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?'' என்று இறைவன் கேட்பான். ''இல்லை. உன் மீது ஆணையாக! அதிபதியே! அவர்கள் அதைப் பார்த்ததில்லை'' என்று வானவர்கள் கூறுவர். அதற்கு இறைவன், ''அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை எப்படியிருக்கும்?'' என்று கேட்பான். ''அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்'' என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

''அவர்கள் எதிலிருந்து என்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றனர்?'' என்று இறைவன் வினவுவான். ''நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோருகின்றனர்'' என்று வானவர்கள் பதிலளிப்பார்கள். ''அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?'' என்று இறைவன் கேட்பான். ''இல்லை. உன் மீது ஆணையாக அவர்கள் அதைப் பார்த்ததில்லை'' என்று வானவர்கள் கூறுவர். அதற்கு இறைவன், ''அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும்?'' என்று கேட்பான். ''அவர்கள் நரகத்தைப் பார்த்திருந்தால் நிச்சயமாக அதிலிருந்து கடுமையாக வெருண்டு ஓடுபவர்களாகவும், அதை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்'' என்று வானவர்கள் பதில் கூறுவர்.

அப்போது இறைவன், ''ஆகவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாளர்களாக ஆக்குகின்றேன்'' என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ''(இறைவனைத் துதிக்கும் குழுவிலிருந்த) இன்ன மனிதன் உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ வேலை நிமித்தமாகவே அங்கு வந்தான்'' என்று கூறுவார். அதற்கு இறைவன், ''அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர) பாக்கியமற்றவனாக ஆக மட்டான்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6408

இத்தனை சிறப்புகளையும் நன்மைகளையும் கொண்ட இந்த திக்ருகளைத் துதிக்க வேண்டிய நாவுகள் இன்று நம்மைத் தீமைக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. பாவத்தைச் சேர்க்கக் கூடிய, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைத் துதித்துக் கொண்டிருக்கின்றன.

இனியாவது இது போன்ற பாடல்களை ஒதுக்கி விட்டு, நன்மையைச் சேர்க்கக் கூடிய திக்ருகளை அதிகமதிகம் துதிப்போமாக! நமது பிள்ளைகளையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தீய பாடல்களைப் பாடுவதை விட்டும் தடுத்து, இறைவனை அதிகமாக நினைவு கூரக் கூடியவர்களாக ஆக்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

Thanks...WWW.PTJAMATH.COM

சவுதியில் தமிழர்களின் ரத்ததான சேவைசவூதி அரேபியா ஜித்தா (Jeddah) மாநகரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மன்னர் ஃபஹத் பொது மருத்துவமனையில் (King Fahad General Hospital), 09.11.2007 அன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை, மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் (General Director - Dr. Abdul Munam Al-Sheik) டாக்டர் அப்துல் முனம் அல்-ஷேக் துவக்கி வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர்.

இதே போன்று, சவூதி அரேபியா தலைநகர் ரியாத் (Riyadh) மற்றும் அல்-ஹெயில் (Al-Hail) நகரங்களிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த மாதங்களில் மாபெரும் இரத்த தான முகாம்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு வாழ் இந்திய குறிப்பாக தமிழ் மக்களின் இந்த சேவை சவூதியில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. முகாம்கள் மட்டுமன்றி உடனடி அவசர இரத்த தேவைகளுக்கும் இவ்வமைப்பினரை மருத்துவமனை நிர்வாகத்தினர் அணுகி வருகின்றனர்.
Thanks...WWW.TNTJ.NET

Thursday, November 08, 2007

புகை பகைப்போம்.

1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களைச் சிறுக சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இளம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவி கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?

10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?

16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?

18) புகைப்பிடிப்பது நாகரிகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரிகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களா?

உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

Thanks...Nihalvu.blogspot.com

Wednesday, November 07, 2007

மனித வடிவில் இரத்த வெறிப் பிடித்த ஒரு மிருகம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்). ஆல்குர்ஆன் 8:8.
இக்கட்டுரையை வாசிக்கும் அனைத்து ( ஹிந்து, முஸ்லீம் ) சகோதரர்களுக்கும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக !
ஹிட்லரிலிருந்து தொடங்கி இந்திய சங்பரிவாரர்களிலிருந்து இன்றைய ஜார்ஜ் புஷ் வரை எடுத்துக் கொண்டால் அவர்களை எல்லாம் விஞ்சி நிற்கும் அளவுக்கு நரபலி மோடி முஸ்லீம் இன விரோதியாவான், அவர்களெல்லாம் தான் சார்ந்த இனத்தவர்களை காவு கொடுத்து பிற சமுதாயத்தவர்களை பழி கொண்டதில்லை.

ஹிட்லர் தனது எதிரி இனமாகிய யூத இனத்தை தனது சகாக்ககை; கொண்டு மட்டும் கொன்றொழித்தான் அதற்காக தனது இனத்தில் சிலரை காவு கொடுத்து அதன் மூலம் அனுதாபம் தேடி அவர்கள் மூலமாக யூதர்களை அழிக்கவில்லை.

நாதுராம் கோட்சே தன்னைத் தானே அழித்துக் கொண்டு பல்லாயிரக் கக்கான முஸ்லிம் இனத்தை அழிக்க திட்டம் தீட்டினான்

மனித மிருகம் நரபலி மோடி மட்டும் தன் இனத்தவர்களை காவு கொடுத்து (சபர்மதி எக்ஸ் பிரஸில் பயணித்து வந்த ராம பக்தர்களை தாமே எரித்து சாம்பலாக்கி விட்டு, அதை முஸ்லீம் சமுதாயத்து மக்கள் மீதுப் போட்டு ஹிந்து சமுதாயத்து மக்களுக்கு கோபத்தை ஊட்டி அவர்களைக் கொண்டு ) எண்ணற்ற முஸ்லீம்களை கொன்றொழித்;து அவர்களுடைய கோடிக்கணக்கான பொருதாராத்தை அழித்தொழித்தான்.

இவ்வாறு செய்யப்பட்டதற்கு மதவெறி மட்டும் முக்கிய காரணமல்ல, மாறாக அப்பொழுது வரவிருந்த தேர்தலில் ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயத்து ஓட்டுக்களை அறுவடை செய்து தனது முதல்வர் பதவியை மீண்டும் தக்கவைத்துக் கொல்வதற்காக நடத்தப்பட்ட நர வேட்டையாகும்.

தெஹல்கா டாட் காம் வெளியிட்ட மோடியின் திட்டம்
 ரயில் எரிப்பு முடிந்ததும் மோடி தலைமையில் மதவெறி சங்பரிவார்கள் கூடி முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு பற்றி திட்டமிடுகின்றனர், மோடியினால் சங்பரிவார குண்டர்களுக்கு இனச்சுத்திகரிப்பு, மற்றும் பொருளாதார சூறையாடல் நடத்துவதற்கு பயிற்சியும், அதற்காக மூன்று நாட்கள் அவகாசமும் அளிக்கப்படுகிறது. திட்டம் தீட்டிக் கொடுத்தது முதல்வர் என்பதால் கலவரம் அதிக நாட்கள் நீடித்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறி தனது பதவி ரத்து செய்யப்படலாம் என்பதால் மூன்று நாட்கள் மட்டும் ஒதுக்கப்படுகிறது ?( சில மணி நேரங்கள் என்பதே போலீஸ் துணையுடன் நடத்தப்படும் கலவரத்து பெரும் இழப்பை ஏற்படுத்த முடியும் ) மூன்று நாட்கள் என்பது பூண்டோடு அழிப்பதற்கு இடப்பட்ட மாபெரும் திட்டமாகும் )
 அஹமதா பாத்தின் மீது நானே சென்று குண்டு வீசலாம் என்று எண்ணுகின்றேன் ஆனால் என்னுடைய முதல்வர் பதவி என்னை தடுக்கிறது என்றுக் கூறி ஆதங்கப்பட்டு கொலை கும்பல் வெறி ஏற்றப் படுகின்றார்கள்.
 இவ்வாறு வெறி ஏற்றப்பட்ட கொலைக்கும்பல் முதல் நாள் நரோ, பாட்டியா என்ற ஊர்களில் முஸ்லீம்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்து பிணங்களை குவியில் குவியலாக்குகிறது, இதையறிந்த நரபலி மோடி அவசரக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து கலவரக்காரர்களை நரோ, பாட்டியா என்ற ஊர்களில் நடத்தப்பட்ட பேரழிவுகளை வெகுவாகப் பாராட்டி மேலும் வெறி ஏற்றப் படுகின்றனர்.

 இவ்வாறு மீண்டும் வெறியேற்றப்பட்ட கொலைக் கும்பல் அசந்து விடாமல் செயல்படுவதற்காக அவர்கள் கொலை வெறியாட்டமும், காமவெறியாட்டமும் நடத்தும் இடங்களுக்கெல்லாம் அவர்களுடன் சென்று அவர்களை உற்சாகப் படுத்த உமா பாரதி வகையைச் சேர்ந்த மாயா என்ற பாஜக பெண் எம்.எல்.ஏ நியமிக்கப்படுகிறார்.

முஸ்லீம்களுக்கு வரலாறு கானாத பேரழிவும்,கலவரகாரர்களுக்கு கோடிக்கணக்கான சன்மானங்களும்.
முதலில் குறி வைத்து முஸ்லீம் ஆண்கள் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள், அதனையடுத்து முஸ்லீம் பெண்கள் மானபங்க படுத்தப் படுகிறார்கள், அதற்கடுத்து ஆங்காங்கே நெருப்புக் குண்டங்கள் வார்க்கப்பட்டு பிணங்களும், குற்றுயிரும் குறையயிருமாய் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பவர்களும் அந்த நெருப்புக் குண்டங்களில் வீசி எறியப்படுகின்றனர் இதில் மிகப்பெரிய கொடூரம் என்னவென்றால் கற்பிpனி பெண்களுடைய வயிற்றைக் கர்ண கொடூரமாக கிழித்து பச்சை சிசுவை இரத்தம் சொட்ட சொட்ட வெளியில் எடுத்து எரியும் நெருப்பில் வீசியதுடன் தாயையும், தந்தையையும் கண்ணுக்கெதிரில் பறிகொடுத்து விட்டு மிகவும் பரிதாபமாக அந்தப் பாவிகளை நோக்கிப் பார்த்துக் கொண்டு நின்ற பச்சிளம் பாளகர்களையும் ஈரலில் ஈரமில்லாத பாவிகள் தங்கள் கைகளில் வைத்திருந்த திரிசூலம், ஈட்டிப் போன்ற ஆயுதங்களால் அப்படியே சொறுகி தூக்கி அதே நெருப்புக் குண்டங்களில் வீசி யெறிந்து ஆனந்தமடைந்தனர்

முஸ்லீம்களுடைய தொழிற்சாலைகளை தீ வைத்துக் கொளுத்தி சாம்பலாக்கினார்கள் சூரத்துடைய தொழில் நகரமாகிய அஹமதாபத் முழுவதையும் கொளுத்தி அதன் புகை விண்ணை முட்டுமளவுக்கு ஆக்கினார்கள் மனித மிருகம் மோடியால் அனுமதிக்கப்பட்ட அந்த மூன்று நமட்களும் முஸ்லீம்களின் பிணத்தின் மீது நடந்து கோரத் தாண்டவம் ஆடினார்கள்.

மோடி வழங்கிய சன்மானத்துடன் முஸ்லீம்களுடைய தொழிற்சாலைகளிலும், அவர்களது இல்லங்களில் சூறையாடப்பட்ட பணங்களையும், விலை மதிப்புள்ள பொருள்களையும், நகைகளையும் கொண்டு மேல்படி கொலைக் கும்பல் குஜராத்தின் பெரும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆகிக் கொண்டனர்.

இதற்கு மூலகாரணம் மோடியின் தலைமையில் கொலைகாரர்கள் வெறியேற்றப்பட்ட விஷேச கூட்டங்களாகும் .

ஏக இறைவனின் திட்டம்
குற்றுயிரும் குறையுயிருமாய் கிடந்தவர்களுடைய அழுகுரலும், அல்லாஹ்வுடைய சந்நிதானத்தை அடைந்ததால் அல்லாஹ் இந்த அயோக்கியர்களுக்கு அப்பொழுதே இன்னாரைக் கொண்டு இன்ன நேரத்தில் சட்டத்தின் பிடியில் சிக்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டான்.
நெஞ்சுரமிக்க தெஹல்கா இணைய தளக்காரர்களை இப்பணிக்காக நியமித்தது ஏக இறைவனுடைய மாபெரும் திட்டமாகும். நிச்சயமாக உயிரைப் பணயம் வைத்துப் போராடக் கூடிய இந்த பணிக்கு ஒருவர் தன்னை அர்ப்பணிப்பது என்பது சாதாரண விஷயமல்ல அசாத்திய துணிச்சல் இருந்தால் மட்டுமே இறங்க முடியும். இந்த அசாத்திய துணிச்சலை இறைவன் தான் விரும்பிய சிலருக்கு மட்டும் வழங்கி அவர்களை களத்தில் இறக்கி விடுவான்.

தெஹல்கா டாட் காம் காரர்கள் தங்களுக்கு துணையாக இந்தியா டுடே காரர்களையும் இணைத்துக் கொண்டு ஆறு மாத காலம் மிக அழகாக தனது திட்டத்தில் சதி காரர்களை விழவைத்து வீடியோவில் படமும் எடுத்து விட்டார்கள். உலகில் இதுவரை யாரும் செய்திட முடியாத அளவு மிகவும் சாமர்த்தியமாக கிடுக்குப் படி போட்டு முண்ட விடமுடியாத அளவு சிக்க வைத்துள்ளனர், ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை அவர்களது வாயால் சொல்ல வைத்து படமெடுத்து விட்டார்கள். மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை. அல்குர்ஆன் 6:123
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கு
நீங்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி அனைத்து மாநிலங்களின் முஸ்லீம் அமைப்புகளையும் சந்தித்து மேல்படி சம்பவத்தை வலியுருத்துவதுடன், பொதுநலனில் அக்கறை கொண்ட ஹிந்து அமைப்புக்களின் தலைவர்களையும் சந்தித்து அவர்களிடமும் சம்பவத்தை வலியுருத்தி அனைத்து மாநிலங்கலிளும் ஒரே தேதியில், அல்லது தனி, தனி தேதிகளில் பெருந்திரளான ஹிந்து – முஸ்லீம் சங்கிலி போராட்டம் ஒன்றை மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதம் நடத்தி நரபலி மோடியையும், மோடியால் தயார் செய்;யப்பட்ட கலவரக்காரர்களுக்கும் மரண தண்டனை கொடுக்கும் வரை தொடர் போராட்டங்கள் செவதற்காக முயற்சி செய்யுங்கள். இதை விட சிறந்த வழி உங்களிடம் இருந்தால் அதன்படி செய்யுங்கள்.

ஹிந்துக்களே ! முஸ்லீம்களுடன் ஒன்று திரளுங்கள்
ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயமும் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அறிவர். இவ்வாறிருக்கையில் மேல்படி குஜராத் கலவரத்தில் அப்பாவி ஹிந்துக்களும் ஈடுபட்டதற்கு முக்கிய காரணம் '' ராம பக்தர்கள் '' முஸ்லீம்களால் எரிக்கப்பட்டனர் என்ற தவறான தகவல் தரப்பட்டதுவேயாகும்.

ராம பக்தர்கள் யாரால் எரிக்கப்பட்டனர் என்பதை இப்பொழுது நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் ராம பக்தர்களுக்காகத் தான் முஸ்லீம்களின் மீது கோபம் கொண்டது உண்மை என்றால் அந்த கோபம் இப்பொழுது மோடியின் பக்கமும், அவனால் தயாரிக்கப்பட்டு, ஏவப்பட்ட குண்டர்கள் மீதும் இனபேதமில்லாமல் மாற வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துக்களை மனிதாபிமானமுள்ளவர்களாக காண முடியும்.

இது போன்று இனிவரும் காலங்களில் நரபலி மோடிக்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமெனில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் பதாகைகளை ஏந்திய வன்னம் மத்திய அரசை வலியுருத்தி குற்றவாளிகளுக்கு மரண தன்டனை கிடைக்கும் வரை போராடுவதற்கு முன் வர வேண்டும் .

முஸ்லீம்களே !!
ஆதாரம் இல்லை என்று அரசால் நழுவி விட முடியாத அளவுக்கு தெஹல்கா டாட் காம் சகோதரர்கள் குற்றவாளிகளின் வாக்கு மூலத்தை வீடியோவில் பதிந்திருக்கின்றனர் இதற்கு மேலும் பாபர் மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்குவதற்கு மாபெரும் ஒத்துழைப்பை நல்கிய அதே காங்கிரஸ் அரசு இப்பொழுதும் இருப்பதால் மோடியை ஒரு வேளை குற்றத்திலிருந்து தப்பி;க்க விடலாம்

ஆனாலும் குஜராத் இனப்படுகொலையின் குற்றவாளிகள் யார் ? என்பதை இறைவன் உலகுக்கு அறிவித்து விட்டான் இதற்கு மேல் மறுமையின் மீது நம்பிக்கை உள்ள முஸ்லீம்கள் மோடியை இறைவன் மறு உலகில் பிடித்து தண்டிப்பான் என்ற நம்பிக்கை கொண்டு இன்னும் பொறுமையுடன் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்து வருவோம்.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். அல்குர்ஆன் 2:153

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை


Thanks... Kumudam

Thursday, November 01, 2007

அண்ணல் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவது ஷிர்க்


நம்பிக்கை (ஈமான்) கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். (திருக் குர்ஆன் 33:6)அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறோம். நமது தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, உடன் பிறந்தோரை விட, உற்றார் உறவினரை விட, ஏன் நமது உயிரை விடவும் மேலாக, நாம் அவர்களை மதிக்க வேண்டும்.அப்படித் தான் நாம் அவர்களை மதிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால், அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதுவதோ, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருப்பதாக நம்புவதோ கூடாது. அது ஷிர்க் ஆகும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் வந்து, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடியபடி' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், முதலில் அல்லாஹ் நாடியபடி, அதன் பிறகு அவனது தூதர் நாடியபடி என்று தனித் தனியாகக் கூறும்படி திருத்தினார்கள்.மக்கள் எந்த வகையிலும் அல்லாஹ்வுக்குச் சமமாகத் தம்மை ஆக்கி விடக் கூடாது, என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.நம்மில் எவருமே, நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராகக் கருதுவதும் கிடையாதே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் அணுளவும் அப்படி ஓர் எண்ணமோ, கொள்கையோ இல்லை என்பது உண்மை தான்.ஆனால் நம்மில் பலரிடம், அவர்களையும் அறியாமல் அப்படி ஒரு விபரீதக் கொள்கைக் குடி கொண்டிருப்பதை அவர்கள் உணருவதில்லை. உணர்ந்து விட்டால் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலை பாடுகிறோம் என்று, பொருள் புரியாமல் பாடுகின்ற மவ்லிதுப் பாடல்களிலும், பொழுது போக்காகப் பாடுகின்ற இஸ்லாமியப் பாடல்கள் என்னும் இன்னிசை கீதங்களிலும், ஷிர்க்கான கருத்துக்கள் மலிந்துக் கிடக்கின்றன.அன்த ஷம்சுன் அன்த பத்ருன் அன்த நூருன் ஃபவ்க நூரி நீங்களே சூரியன், நீங்களே சந்திரன், நீங்களே ஒளி, ஒளிக்கும் மேல் ஒளி, என்னும் சுப்ஹான மவ்லிதின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிப் போனவர்கள்,அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான் (திருக் குர்ஆன் 24:35) என்னும் திரு மறை வசனத்தை நினைவிற் கொள்ள வேண்டாமா?வானங்கள் மற்றும் பூமியின் ஒளி, தானே என்று அல்லாஹ் கூறும் போது அவனது அடியாரும் தூதருமாகிய நபி (ஸல்) அவர்களை 'ஒளிக்குமேல் ஒளி' எனக் கூறுவது
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அன்த கஃப்பாருல் கதாயா வத் துனூபில் மூபிகாத்திபாவங்களை மன்னிப்பவர் நீங்களே! என்று அரபியில் நீட்டி முழக்கிப் பாடுபவர்கள், அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? (திருக் குர்ஆன் 3:135) என்று அதிகாரத்துடன் அல்லாஹ் கேட்பதை எப்படி மறந்தார்கள்? பாவங்களை மன்னிப்பவன் தன்னைத் தவிர யாரும் இல்லை என்று அல்லாஹ் கூறும் போது, 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிப்பவர்' என்று சொல்வது மன்னிக்க முடியாத குற்றமல்லவா? இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அரபிக் கவிதைகளின் அர்த்தம் தெரியாமல், ஆர்வமேலீட்டால், அப்படியே பாடியிருந்தாலும், பொருள் புரிந்த பிறகேனும், இந்த ஷிர்க்கான பாடல்களையும், மவ்லிதுகளையும், விட்டொழிக்கா விட்டால், அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். எச்சரிக்கை!மவ்லிதுப் பாடல்களில் பரவிக் கிடக்கும் ஷிர்க்கான கருத்துக்களைப் பட்டியலிட்டால், அதுவே ஒரு தனி நூலாக விரியும். மவ்லிது கிதாபுகளில் காணப்படும் பெரும்பாலான கருத்துக்கள் ஷிர்க்கானவை.
உதாரணத்திற்கு மட்டுமே ஒன்றிரண்டை தொட்டுக் காண்பித்தோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈசா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்.அல்லாஹ்வின் அடியார் என்றும் தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி)இறைத் தூதர் என்னும் உயர்ந்த பதவியை விட இறைவனின் அடியார் என்று தம்மைக் கூறுவதற்கே முன்னுரிமை அளித்து, கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்கள் விஷயத்தில் வரம்பு கடந்து விட்டதையும் உதாரணம் கூறி, ஷிர்க்கின் நிழல் கூட விழாமல் எவ்வளவு தெளிவாக எச்சரித் திருக்கிறார்கள்.

இறை நேசர்களை இறைவனுக்குச் சமமாகக் கருதுவது ஷிர்க்
அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், எல்லாக் கால கட்டத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களிலும் எத்தனையோ இறை நேசர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று, அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அடியொற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அனைவருமே இறை நேசர்கள் தான்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட தர்காக்களில், அடக்கப் பட்டுள்ளவர்கள் மட்டும் தான், 'இறை நேசர்கள்' என்று எண்ணி விடக் கூடாது. வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமலேயே, வாழ்ந்து மறைந்த பண்பாளர்கள் எத்தனயோ? பாரெங்கும் யாரெல்லாம் அப்படி இறை நேசர்களாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின்; உயரிய குடும்பத்தாரும், உற்ற தோழர்களும், பாரெங்கும் இஸ்லாம் பரவ பாடுபட்ட அனைவருமே, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள் தான்.அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) போன்றவர்களை விடச் சிறந்த இறை நேசர்கள் இருக்க முடியுமா? இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு சிலரை மட்டும், அவ்லியாக்களாகக் கருதி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற் பட்ட கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி, அவர்களைப் புகழ்வதாக நினைத்து, அவர்களின் தூய இறை நேச வாழ்க்கையை களங்கப் படுத்துவது வேதனையிலும் வேதனை.
அந்த அவ்லியாக்கள் என்னும் இறை நேசச் செல்வர்களை அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவர்களாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மைகள் அந்த இறை நேசர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் ஷிர்க் ஆகும்.எந்த மகானையும் யாருமே அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதில்லையே! அவர்களின் அடக்கத் தலங்களுக்குச் சென்று அவர்களை ஸியாரத் செய்வதைத் தவிர, அவர்களை அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வுக்குச் சமமானவராகவோ கடுகளவும் மனதால் கூட யாரும் நினைப்பதில்லையே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் இப்படி ஒரு எண்ணம் இருக்க முடியாது என்பது உண்மை தான்.ஆனால் அப்படிச் சொல்பவர்கள், தங்கள் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும், எண்ணங்களையும், காய்தல் உவத்தலின்றி, நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால், அவர்களது கொள்கையில் ஷிர்க் குடி கொண்டிருப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இறை நேசர்களைஅழைத்துப் பிரார்த்திப்பது ஷிர்க்
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்(திருக் குர்ஆன் 7:194)அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறிர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவிட முடியாது. (திருக் குர்ஆன் 7:197)அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அழைக்கக் கூடாது என, அல்லாஹ்வின் திரு மறை தெளிவாகக் குறிப்பிடும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்தித்தால், ஓடி வந்து உதவுவார்கள் என நம்புவது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
இந்த வசனங்கள் அனைத்தும், மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தைத் தான் கண்டித்து அல்லாஹ் அருளிய வசனங்கள் என்று, இறை நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போர் வாதம் புரிகின்றனர்.இவ்விதம் வீண் விவாதம் புரிபவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் திரு மறை குர்ஆன் மேலும் சில வசனங்களின் மூலம் இன்னும் தெளிவு படுத்துகிறது. அந்த வசனங்கள் இதோ!அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 16:20)இதிலும் தெளிவு பெறாதவர்களுக்கு இன்னும் தெளிவாக அல்லாஹ் விளக்குகிறான்.அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 16:21)'எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்' எனக் குறிப்பிடுவது காஃபிர்கள் வணங்கிக் கொண்டிருந்த கற் சிலைகளை அல்ல என்பதும் தர்காக்கள் என்னும் கல்லறைகளில் மீளாத் துயில் கொண்டிருப் போரைப் பற்றித் தான் என்பதும் இன்னுமா புரியவில்லை? அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து விட்டு, இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்? என்பது போல் விதண்டாவாதம் புரிவோரும்,இறந்து போய் மண்ணில் அடக்கப்பட்டு விட்ட, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போரும், அதுவே சரி என்று நியாயம் கற்பிப்போரும், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இறை நேசர்கள் துன்பத்தைப் போக்குவார்கள் என நம்புவது ஷிர்க்
அல்லாஹ் உமக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்தினால், அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தி விட்டால், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். (திருக் குர்ஆன் 6:17)அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! (திருக் குர்ஆன் 17:56)மனிதர்களுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே நீக்க முடியாது என்று அல்லாஹ் கூறும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், துன்பத்தைப் போக்குவார்கள் என்றும், தீங்கிலிருந்துக் காப்பாற்றுவார்கள் என்றும் நம்புவதும், இருட்டறையில் இருந்துக் கொண்டு 'குத்பிய்யத்' என்னும் கொடுமையை அரங்கேற்றுவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் குழந்தையைத் தருவார்கள் என நம்புவது ஷிர்க்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். (திருக் குர்ஆன் 42:49)அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்.(திருக் குர்ஆன் 42;:50)ஆண் குழந்தைகளைத் தருவதும், பெண் குழந்தைகளைத் தருவதும், இரண்டையும் சேர்த்துத் தருவதும், குழந்தையைத் தராமல் இருப்பதும், அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.அப்படியிருக்க, இறந்து போன இறை நேசர்கள் குழந்தை வரம் தருவார்கள் என்று தர்காக்களில் தவம் இருக்கும் தம்பதிகள் நம்புகிறார்களே!
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால்நேர்ச்சை செய்வது ஷிர்க்
நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத் தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (திருக் குர்ஆன் 2:270)இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன், என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 3:35)நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே என்றும், மர்யம் (அலை) அவர்கள் பிறந்த போது அவரது தாய் செய்த நேர்ச்சையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.

திருமணம் விரைவில் நடை பெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வெளி நாடு செல்ல விசா கிடைக்கவும், இன்னும் இது போன்று பல்வேறு நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக, பிற சமயத்தவர் தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வது போல் தர்காக்களுக்கு நேர்ச்சை செய்யும் பாவிகளே!அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை அவனது அடியார்களாகிய அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் பெயரால் செய்வதும், தர்காக்களில் தவம் கிடப்பதும், ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால் அறுத்துப் பலியிடுவது ஷிர்க்
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை, உங்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளன. (திருக் குர்ஆன் 5:3)அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுவதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அல்லாஹ் தடை செய்திருக்கும் போது அவ்லியாக்களுக்காக அறுப்பது, ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப் பட்டதைத் தான் விலக்கப்பட்டதாக இந்த வசனம் கூறுகிறது. 'நாங்கள் அவ்லியாக்களுக்காக அறுத்தாலும், பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கிறோம்' என்று வாதிடலாம்.இதோ! திரு மறையின் இன்னொரு வசனம் இன்னும் தெளிவாக அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறது.'எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (திருக் குர்ஆன் 108:2)தொழுகை என்னும் வணக்கம் எப்படி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதோ, அது போல அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.

நாகூர், ஏர்வாடி என்று ஊர் ஊராகச் சென்று ஆடு அறுக்க நேர்ச்சை செய்து பணத்தைச் செலவு செய்து பாவத்தை விலை கொடுத்து வாங்கும் பாவிகளே! சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ் அல்லாதவருக்காக தொழுதால், அது ஷிர்க் என்று தெளிவாகத் தெரிகிறது. தொழுகையும் நேர்ச்சையும் தனக்குரியது எனக் கூறும் அல்லாஹ்வின் வார்த்தைகளை அலட்சியப் படுத்தி விட்டு, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிட்டால்? அது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவருக்கு ஸஜ்தாச் செய்வது ஷிர்க்
தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர்.அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக் குர்ஆன் 53:62)இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28)ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே! இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்கள் மரியாதையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழி என்று கருதி அந்த மக்கள் இச் செயலைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஷெய்கு மார்களுக்கு புத்தி எங்கே போனது?அறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத் தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக் கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்?பெற்றோரிடமும், பெரியார்களிடமும், அடக்கத்தையும் பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். இயலாத முதியோரை கண்ணியப் படுத்த வேண்டும். ஆனால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

முஆத் (ரலி) அவர்கள் தமக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்ய முன் வந்த போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை அங்கீகரிக்க வில்லை என்பது மட்டுமல்ல தடுத்து விட்டார்கள்.'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிவதை நான் வெறுக்கிறேன். அது ஆகுமாக்கப் பட்டிருந்தால் மனைவி கணவனுக்கு சிரம் பணிய அனுமதித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் திருமறை தெளிவாகக் கூறகின்றதுஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள். (திருக் குர்ஆன் 41:37)


இறை நேசர்கள் இறந்த பின்பும் உயிருடன் உள்ளனர் என நம்புவது ஷிர்க்
உலகில் பிறந்த அனைவருமே இறக்கக் கூடியவர்கள் தான். ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே இன்றளவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் இறுதி நாளின் அடையாளம் என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார் (திருக் குர்ஆன் 43:61)அந்த ஈஸா (அலை) அவர்களும் கியாமத் நாள் சமீபம் பூமிக்கு வந்து, வாழ்ந்து, மரணம் அடைவார் என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலிருந்து அறிகிறோம்.அண்ணல் நபி (ஸல்) அவர்களும் மரணித்து விட்டார்கள். அவர்கள் மரணிக்க வில்லை என்றால் அடக்கம் செய்யப் பட்டிருக்க மாட்டார்கள்.(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள். (திருக் குர்ஆன் 39:30,31)நபி (ஸல்) அவர்களே இறந்து விட்டார்கள் எனும் போது, இறை நேசர்கள் எனக் கருதப்பட்டோர் மரணிக்காமல் இன்றளவும் மண்ணறையில் உயிருடன் உள்ளனர் என்று நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (திருக் குர்ஆன் 3:2)மரணிக்காது உயிருடன் இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றி புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (திருக் குர்ஆன் 25:58)அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (திருக் குர்ஆன் 40:65)மரணமே இல்லாது என்றென்றும் உயிருடன் இருப்பவன், தான் மட்டுமே என்று அல்லாஹ் கூறும்போது 'மண்ணறை வாழும் அவ்லியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது' என்று ராகம் போட்டுப் பாடுவது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் உயிருடன் இருப்பதாக வாதிடுவோர் அதற்குச் சான்றாக கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூறுவர்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீhகள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.(திருக் குர்ஆன் 2:154)இறை நேசர்களின் நேசர்களாகத் தங்களை இனம் காட்டிக் கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு, இறை மறை குர்ஆனின் இந்த வசனம் மட்டும் நன்றாகத் தெரியும். அரபி மூலத்துடன் எழுத்துப் பிசகாமல் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். 'குர்ஆன் நமக்குப் புரியாது' எனக் கூறுபவர்கள் கூட பொருளுடன் இந்த வசனத்தை ஒப்பு விப்பார்கள்முதலில் இந்த வசனம், இறை நேசர்களாகிய அவ்லியாக்களைக் குறிக்கும் வசனமே அல்ல என்பதை வசனத்தை நன்றாகக் கவனித்தாலே புரியும்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள், என்று இந்த வசனமே வியாக்கியானத் தேவையின்றி விளக்கி விடுகிறது. இறந்தோர் எனக் கூறாதீர்கள் என்னும் வாசகத்தையும், மாறாக உயிருடன் உள்ளனர் என்னும் வாசகத்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பவர்களுக்கு 'எனினும் உணர மாட்டீர்கள்' என்னும் வாசகத்தை உச்சரிக்கும் போது மட்டும் சுருதி சற்றுக் குறைந்து விடும்.'உயிருடன் உள்ளனர்' என்று அல்லாஹ் குறிப்பிடுவது, இவர்கள் நினைப்பது போல் தர்காக்களின் உள்ளே உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்ல என்பதை, திரு மறை குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இன்னும் தெளிவாகவே அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 3:169)இறை வழியில் தங்கள் இன்னுயிரை நீத்த ஷுஹதாக்கள் என்னும் உயிர்த்தியாகிகள்- அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர் எனவும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும்- நம்பிக்கை (ஈமான்) கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அடுத்தடுத்த வசனங்களில் இன்னும் விரிவாக அல்லாஹ் எடுத்தியம்புகிறான். ஆக, இறந்த பின்பும் உயிருடன் இருப்பதாக இறைவன் கூறுவது, இறை வழியில் போரிட்டுத் தம் இன்னுயிரை நீத்த 'ஷஹீத்' என்னும் உயிர்;த்தியாகிகளைப் பற்றித் தானே தவிர, தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டு, இறை நேசர்கள் என மக்கள் கருதிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அல்ல என்பதை, முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறு ஊர்களிலும், கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆண்டு தோறும் ஆடல் பாடல் கச்சேரிகளால் உற்சவம் கொண்டாடி பக்தர்களை(?) உற்சாகப் படுத்தும் தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, உயிர்த்தியாகம் செய்தவர்களா என்ன? இஸ்லாமிய யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்களா என்ன?அப்படியே ஷஹீத் ஆனவர்களும் அவர்களில் உள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்வைப் பொருத்தவரைத் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டவர்களே!ஏனெனில் அவர்கள் மரணித்து விட்டதால் தான் மண்ணுக்கடியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களின் சொத்துக்களை, அவர்களின் வாரிசு தாரர்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?


இறை நேசர்களுக்கு இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது ஷிர்க்
ஒரு மனிதர் உயிர் வாழும் போது, பல் வேறு ஆற்றல்களைப் பெற்றிருக்கலாம். அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சிந்தனையாற்றல் போன்ற பல் வேறு ஆற்றல்கனைப் பெற்ற அறிஞர்களாயினும், அவர்கள் பெற்ற ஆற்றல்கள் அனைத்தையும் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமே செயல் படுத்த முடியும்.உயிர் வாழ்ந்த போது இருந்த ஆற்றல்களே, இறந்த பின்பு இருக்க முடியாது என்கிற போது, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது, அறிவுக்கும், அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கும் எதிரானதல்லவா? இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?கல்வியை நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இறந்து போய் விட்ட பின்னர், அவர்களுடைய கப்ருகளுக்கு அருகில் நின்று கொண்டு நமது பாடங்களில் நாம் சந்தேகம் கேட்பதில்லை. வாழ்ந்த போது சிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்திருந்தாலும், இறந்த பின்னர் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும், நமக்குத் தெரியும்.அப்படியிருக்க, மரணித்து தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது மட்டும் எப்படிச் சரியாகும்? திரு மறை குர்ஆனின் எந்த வசனத்திலாவது- திரு நபி (ஸல்) அவர்களின் எந்நத பொன் மொழியிலாவது அப்படிச் சொல்லப் பட்டுள்ளதா?அவ்லியாக்களுக் கெல்லாம் தலைவர் என்று கூறப்படுபவராகவும், இறை நேசர்களிலேயே மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் பலரால் கருதப் படுபவராகவும் உள்ளவரின் அடக்கத்தலம் அமையப் பெற்றுள்ள அந்த பக்தாத் நகரத்திலேயே அக்கிரமக்காரர்கள் அத்து மீறி நுழைந்து துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போது,
அண்டமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்

ஆட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டி
கலக்கி விளையாட வல்லீர்
ஏழு உலகங்களையும் பம்பரம் போல் சுற்ற வைக்க ஆற்றல் பெற்றவரே! கடுகை இரண்டாகப் பிளந்து அதில் ஏழு கடல்களைப் புகுத்த ஆற்றல் பெற்றவரே! என்றெல்லாம் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராக வர்ணிக்கப் பட்டவரால், எழுந்து வந்து எதுவும் செய்ய முடியவில்லையே! இது இறந்தவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை நமக்கு உணர்த்த வில்லையா?

இறை நேசர்களை அழைத்தால் ஓடி வந்து உதவுவார்கள் என நம்புவது ஷிர்க்
தங்களது முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களுக்கு சிலை வடித்து, அவற்றை வணங்கி வந்தவர்களும், அல்லாஹ்வையே இறைவனாகக் கருதினாலும், இந்த முன்னோர்கள் தங்களை அல்லாஹ்வின் பால் சமீபமாக்கி வைப்பார்கள் என்று நம்பி முன்னோர்களையும் வழிபாடு செய்தவர்களுமாகிய, மக்கத்துக் காஃபிர்கள் கூட சாதாரண நேரங்களில் தான், தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தரும்படி முன்னோர்களின் சிலைகளுக்கு முன் மண்டியிட்டனர். ஆனால், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்விடமே பிரார்த்தித்தனர். இதை நாம் சொல்லவில்லை, அல்லாஹ்வின் திரு மறையே அறிவிக்கிறது.

கடலில் பயணம் செய்யும் போது காற்றும் அலையும் அவர்களைச் சூழ்ந்து தாம் சுற்றி வளைக்கப் பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்தால், வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் நன்றியுடையோராக ஆவோம்.' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். (திருக் குர்ஆன்10:22)ஆபத்திலிருந்து காப்பாற்றப் பட்ட பிறகு அவர்கள் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள் என்று அடுத்த வசனம் கூறுகிறது.அவர்களை விடவும் மோசமாக, சாதாரண நேரங்களில் அல்லாஹ்வைத் தொழுது பிரார்த்திப்பவர்கள், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனரே! இது மக்கத்துக் காஃபிர்களின் செயலை விட மோசமான செயல் அல்லவா? இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

ஆபத்தான நேரங்களில் யா முஹ்யித்தீன்! என்று ஓலமிட்டால், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவது அப்பட்டமன ஷிர்க் என்பதில் என்ன சந்தேகம்?எத்தனை பேர் எங்கிருந்து அழைத்தாலும், அழைப்பை செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அல்லவா? அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள் என நம்புவதும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் என்று காத்திருப்பதும், ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ்வே செவியுறுபவன். அறிந்தவன். (திருக் குர்ஆன் 5:76)தானே செவியுறுபவன் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் மனிதர்களாகிய நாமும் ஒருவர் அழைப்பதையும் பேசுவதையும் செவியுறுகின்றோமே என்று சிலர் கேட்கலாம்.செவியுறும் தன்மையில் மனிதர்களாகிய நமக்கும் அல்லாஹ்வுக்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பேர் நம்மை அழைத்தால், ஒருவரின் அழைப்புக்கு பதிலளித்து விட்டுத் தான் மற்றவரின் அழைப்புக்கு நம்மால் பதிலளிக்க முடியும். பலர் ஒரே சமயத்தில் அழைத்தாலோ, பேசினாலோ நம்மால் புரிந்துக் கொள்ளவும் முடியாது. பதிலளிக்கவும் முடியாது. ஆனால் அல்லாஹ்வின் செவியுறும் தன்மை அப்படிப்பட்டதல்ல. ஒரே நேரத்தில் கோடானு கோடி பேர் அழைத்தாலும், அத்தனை பேரின் அழைப்பையும் ஏக காலத்தில் செவியுறவும், பதிலளிக்கவும் அல்லாஹ்வால் முடியும்;. அல்லாஹ்வினால் மட்டுமே முடியும். இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை.ஒரே நேரத்தில் பலரும் 'யா முஹ்யித்தீன்!' என்று அழைக்கும் போது, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செவியுறுவார்கள் என்றால், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான செவியுறுதல் என்னும் தனித்தன்மை, அப்துல் காதிர் ஜீரானி (ரஹ்) அவர்களுக்கும் இருப்பதாக அல்லவா அர்த்தமாகிறது?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

எங்கிருந்து அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் மட்டுமே! இது அவனுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை. நாம் ஒருவரை உரக்கக் கூவி அழைத்தால், நமது சப்தம் எவ்வளவு தொலைவுக்குக் கேட்குமோ அவ்வளவு தொலைவில் உள்ளவர் மட்டுமே செவியேற்க முடியும். அதுவும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே சாத்தியம்.ஒலி பெருக்கி மூலம் அழைத்தால் இன்னும் சற்று தொலைவில் உள்ளவர் கேட்க முடியும். தொலை பேசி மூலம் அழைத்தால் தொலைவில் உள்ளவர் கேட்க முடியும்.எவ்வித தொலைத் தொடர்பு சாதனமும் இல்லாமல் அழைத்தாலும், மனதிற்குள் மெத்தப் பணிவுடன் அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அப்படியிருக்க அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் அதே போல் செவியேற்பார்கள் என நம்புவது அறிவீனம் மட்டுமல்ல, அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத பெரும் பாவம் என்பதை இன்னமும் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த அறிவீனர்களை என்ன வென்பது?அவர்களின் உள்ளங்களிலும், செவியிலும், அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வையில் திரை உள்ளது. அவர்களுக்கு கடும் வேதனையுண்டு.(திருக் குர்ஆன் 2:7)

மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் மட்டுமே அவர்களுக்குப் புரியும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. அவர்களுடைய தாய் மொழியாகிய அரபியைத் தவிர வேறு மொழி அவர்களுக்குத் தெரியாது. அது போல் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தாய் மொழியாகிய அரபியைத் தவிர, வேறு மொழிகள் அவர்களுக்குத் தெரியும் என்பதாக அவர்களது வரலாற்றில் நம்மால் காண முடியவில்லை. அவர்கள் அறியாத மொழியில் அழைத்தாலும் அவர்களுக்குப் புரியும் என்பது அவர்கள் உயிர் வாழ்ந்த போதே சாத்தியமில்லை. அப்படியிருக்க அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு எல்லா மொழிகளும் புரியும் என்று சொல்வது அறிவீனம்.

பிரசவ வேதனையில் துடிக்கும் போது, 'யா முஹ்யித்தீன்' என ஓலமிடும் தாய்க் குலமே! அல்லாஹ்வை அஞ்சுவீராக. ஒருகால் இறுதி வார்த்தை இதுவாக இருப்பின் சென்றடையும் இடம் நரகமே! (அல்லாஹ் காப்பானாக) இனியேனும் 'யா அல்லாஹ்' என்று அல்லாஹ்வையே அழைப்பீராக!அறியாமையால் சிலர் தவறான கொள்கையில் இருக்கக் கூடும். அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து விளங்குவதற்காக, தர்க்க ரீதியான சில காரணங்களை இது வரைத் தெளிவு படுத்தினோம்.ஆனால் அல்லாஹ்வின் வேத வசனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டோருக்கு கீழ்க் காணும் சில வசனங்கள் மட்டுமே போதும். தெளிவான வழி காட்டுதல் கிடைத்து விடும்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும், உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீ;ங்கள் இணை கற்பித்ததை மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (திருக் குர்ஆன் 35:14)

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். (திருக் குர்ஆன் 13:14)இவ்வளவு தெளிவாக அல்லாஹ் அறிவித்து விட்ட பின்னரும், கப்ருகளில் உறங்கிக் கொண்டிருக்கும் நல்லடியார்கள், நமது அழைப்பை செவியுறுவார்கள், அழைப்புக்கு பதிலளிப்பார்கள், ஓடி வந்து உதவுவார்கள், நோய்களை நீக்குவார்கள், துன்பங்களைப் போக்குவார்கள், என்று நம்புவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கும் மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது ஷிர்க்

மறைவானவற்றின் திறவுகோள்கள் அவனிடமே உள்ளன.அவனைத் தவிற யாரும் அறிய மாட்டார். (திருக் குர்ஆன் 6:59)வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 27:65)மறைவானவற்றை தன்னைத் தவிர யாரும் அறிய முடியாது, என்று கூறும் அல்லாஹ், தனது திருத் தூதர் அவர்கள் கூட அறியமாட்டார்கள் என்பதை, அவர்களையே கூறச் சொல்லி தனது தனிச் சிறப்பை உறுதிப் படுத்துகிறான். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன, மறைவானதை அறிவேன், என்று நான் உங்களிடம் கூற மாட்டேன்.நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே) கூறுவீராக! (திருக் குர்ஆன் 6:50)

'மறைவான ஞானம்' என்பது சிலருக்குப் புரியாத வார்த்தையாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்பதும், எங்கோ தொலை தூரத்தில் நடப்பதை இங்கிருந்துக் கொண்டே கண்களால் காணாமல், யாரும் அறிவிக்காமல், கூறவதும் தான் 'மறைவான ஞானம்'. இது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே சாத்தியம்.கண்களால் காணாததையும், எதிர் காலத்தில் நடக்க இருப்பவை குறித்தும், ஏராளமான செய்திகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது உண்மை தான். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை, அப்போது வாழ்ந்த மக்களும், அதற்குப் பின் வரக் கூடிய சமுதாயமும் உறுதியாக நம்புவதற்காக, சில சமயங்களில் சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.இனி வரும் தலைமுறையினரும், அவர்களை உண்மையான இறைத் தூதர் தான் என்று நம்பும்படி, அவர்களின் எத்தனையோ முன்னறிவிப்புகள் இன்றளவும் மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இறைவனே அறிவித்துக் கொடுத்தவை.இறைவனே அறிவித்துக் கொடுத்த ஒரு சில, மிகவும் சொற்பமான விஷயங்களைத் தவிர, மற்றபடி மறைவான ஞானம் அவர்களுக்கு இல்லை என்பதற்கு, அவர்கள் வாழ்வில் எதிரிகளால் அவர்கள் அடைந்த இன்னல்களும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களும், சில போர்க் களங்களில் சந்தித்த தோல்விகளும் சான்று பகர்கின்றன. மறைவான ஞானம் அவர்களுக்கு இருந்திருக்குமானால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.
எதிர் காலம் குறித்து குறிகாரன் சொல்வதை நம்புவதும், ராசி பலன் பார்த்து காரியங்கள் செய்வதும், மாந்திரீகத்தில் மனதைப் பரிகொடுப்பதும், பால் கிதாபு பார்த்து பரிகாரம் காண்பதும், மறைவான ஞானம் இந்த குடுகுடுப்பைக் காரனுக்கும், பால் கிதாபு பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிய பித்தலாட்டக் காரனுக்கும் இருப்பதாக நம்புவதாகாதா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

தாயத்து அணிவது ஷிர்க்
அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வதும், அல்லாஹ்வுக்குச் சமமாக மற்றவர்களைக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும், தான் ஷிர்க் என்று நினைக்கிறோம்.சாதாரணமாவை என்று நாம் கருதும், சில சாதாரணமான சின்னஞ்சிறு செயல்கள் கூட ஷிர்க் என்னும் மன்னிக்க முடியாத மாபெரும் பாவத்தை ஏற்படுத்தி விடும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ அவர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டார்.(ஆதாரம்:அஹ்மத்)'தாயத்து அணிந்துக் கொள்வது தவறில்லை' என்ற கொள்கையுடைய எந்த ஒரு முஸ்லிமும், இரண்டு இறைவன்கள் இருப்பதாக நம்புவதோ, அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் இந்த தாயத்துக்கும் உண்டு என்று நம்புவதோ இல்லை. அப்படி ஒரு எண்ணம் கடுகளவும் எவர் மனதிலும் இருப்பதில்லை.ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாயத்தை அணிந்துக் கொண்டவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டதாகக் கூறுகிறார்கள்.நோய் நொடிகள் ஏற்பட்டால், அல்லாஹ் சுகமளிப்பான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் சுகமளிக்கும் என்று நம்புவதும், துன்ப துயரங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் காப்பாற்றும் என்று நம்புவதும்
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அப்படியானால் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்கிறோமே, மருத்துவர் நோயை நீக்குவார் என்று நம்புகிறோமே இது ஷிர்க் ஆகாதா? என்று சிலர் கேட்கக் கூடும்.நோய்க்கு மருத்துவம் செய்யாமல், கடவுளையே நம்பியிருக்க வேண்டும் என்று வேறு மதங்களில் ஒரு சாராரின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை.நோயைத் தீர்ப்பவன் இறைவனே என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.அதே சமயம் வைத்தியமும் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் அல்லாஹ் மருந்தில்லாமல் வைக்க வில்லை.(அறிவப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி)

நமது கொள்கை கோட்பாடுகளில், வணக்க வழிபாடுகளில், சிந்தனை செயல்பாடுகளில், எள்ளளவும் ஷிர்க் என்னும் இணை வைத்தல் இல்லாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது வரை நாம் கொண்டிருந்த கொள்கைகளில், நமது செயல் முறைகளில், ஷிர்க் என்னும் இணை வைத்தல் இருந்தால், எவ்வித தயக்கமும் இன்றி அவற்றை விட்டொழிக்க முன் வர வேண்டும்.காலங்காலமாக செய்துக் கொண்டிருந்தோம், நமது முன்னோர்கள் இப்படித் தான் செய்தார்கள், உலகில் பெரும் பாலானவர்கள் இப்படித் தான் செய்துக் கொண்டிருக்கின்றனர், என்பன போன்ற எந்த வாதமும் நாளை மறுமையில் பயனளிக்காது.காலங்காலமாக என்று நாம் கூறுவது, சில நூற்றாண்டுகளைத் தான். ஆனால் இணை வைத்தல் என்னும் கொள்கையில் பல்லாயிரம் ஆண்டுகள் ஊறித் திளைத்த ஸஹாபாக்கள், ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை விளங்கிக் கொண்ட போது, எல்லா விதமான ஷிர்க்கையும் வேரோடும், வேரடி மண்ணோடும், களைந் தெறிய வில்லையா?அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களாகிய ஹதீஸ்களும், நம் தாய் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு, வழி காட்டும் ஒளி விளக்குகளாக நம் முன்னே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.அறியாமை என்னும் இருளில் இருந்தோம், என்று அல்லாஹ்விடம் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆராய்ந்து பார்க்கும் அறிவை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான். நமக்கு வழங்கப்பட்ட அறிவு குறித்தும் நாளை மறுமையில் நாம் விசாரிக்கப் படுவோம்.இனியேனும் சிந்தித்து, நமது எண்ணங்களையும், செயல்களையும் சீர் திருத்திக் கொள்ள வில்லையென்றால், இறைவனின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.ஏனெனில் ஷிர்க் என்னும் பாவம் அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத மாபெரும் பாவமாகும்.இனியும் சரியான வழியை அறிந்துக் கொள்ளாமலும், அறிந்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளாமலும், இருந்தால் அதன் விளைவுகளை அடுத்து வரும் வசனங்களில் அல்லாஹ்வின் திரு மறை இறுதி எச்சரிக்கை விடுக்கிறது.

அவர்கள் வேதனையைப் பார்த்த போது 'அல்லாஹ்வை மட்டுமே நம்பினோம். நாங்கள் எதை இணையாகக் கருதினோமோ அதை மறந்து விட்டோம்' என்றனர்.நமது வேதனையைப் பார்த்த போது அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயன் தரவில்லை. சென்று விட்ட தனது அடியார்களிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அப்போது (நம்மை) மறுத்தோர் நஷ்டமடைந்தார்கள். (திருக் குர்ஆன் 40:84,85)
Aஅப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி சென்னையில் இன்று மழையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!
குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவித்தது மோடி தான் என்பதை ஆதாரப்பூர்வமாக தெஹல்கா நிரூபித்ததை அனைவரும் அறிவர். இதனைத் தொடர்ந்து மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக் கோரி சென்னையில இன்று (30-10-2007) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

திடீர் என்று ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டாலும் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மழை என்றும் பாராமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன், மாநிலச் செயலளார் சித்தீக் ஆகியோர் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் மற்றும் துனைத் பொதுச் செயலாளர் ஏ.எஸ் அலாவுத்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.