|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, November 12, 2007

சவுதியில் தமிழர்களின் ரத்ததான சேவை



சவூதி அரேபியா ஜித்தா (Jeddah) மாநகரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மன்னர் ஃபஹத் பொது மருத்துவமனையில் (King Fahad General Hospital), 09.11.2007 அன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை, மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் (General Director - Dr. Abdul Munam Al-Sheik) டாக்டர் அப்துல் முனம் அல்-ஷேக் துவக்கி வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர்.

இதே போன்று, சவூதி அரேபியா தலைநகர் ரியாத் (Riyadh) மற்றும் அல்-ஹெயில் (Al-Hail) நகரங்களிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த மாதங்களில் மாபெரும் இரத்த தான முகாம்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு வாழ் இந்திய குறிப்பாக தமிழ் மக்களின் இந்த சேவை சவூதியில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. முகாம்கள் மட்டுமன்றி உடனடி அவசர இரத்த தேவைகளுக்கும் இவ்வமைப்பினரை மருத்துவமனை நிர்வாகத்தினர் அணுகி வருகின்றனர்.
Thanks...WWW.TNTJ.NET

0 Comments:

Post a Comment

<< Home