|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, October 31, 2007

நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை


நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.
Thanks...BBC


0 Comments:

Post a Comment

<< Home