|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, October 23, 2007

கல்லூரிகளிலும் செல்போனுக்கு தடை கோரும் ராமதாஸ்


பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது போல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது போல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகளும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இளைஞர்களின் சக்தி செல்போன் பேச்சால் வீணடிக்கப்படுகிறது.

முன்பெல்லாம் திருமணம் நிச்சயமான பின்னர் ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் தொலைபேசியில் பேசிக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது முன்பின் அறிமுகமே இல்லாத நபரிடம் கையில் செல்போன் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசி முனங்கிக் கொண்டிருக்கிறார்கள். கண்டதும் காதல், காணாமல் காதல் மாதிரி இது செல்போனில் காதல். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த 16ம் தேதி நடந்த அரசு விழா ஒன்றில் இளைஞர்களை கெடுக்கும் வகையில் கெட்ட நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தியேட்டரில்தான் இது போன்று நடனங்களை ஆடுகிறார்கள் என்றால் இந்த விழாவில் யாருக்காக அப்படிப்பட்ட நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. இது இளைஞர்களை கெடுக்கும் வகையில் அமைந்திருந்தது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

1 Comments:

At 12:43 AM, Blogger ? said...

ஐய்யோ இப்பவே கண்ணைக் கட்டுதே... இவரு ஆட்சிக்கு வந்தா? (எல்லாம் வல்ல இறைவன் நம்மை அந்த ரேஞ்சுக்கு சோதிக்க மாட்டான்னு நம்புவோம்)

 

Post a Comment

<< Home