|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, October 18, 2007

சக்தியற்ற சாயிபாபா - வீதிக்கு வந்த பித்தலாட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால் ...

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சாயிபாபாவை தரிசிக்க சென்று மாரடைப்பினால் அவர் காலடியிலேயே விழுந்து மரணமடைந்தார் என்ற பத்திரிகை செய்தி அறியாதவர்கள் புரிந்து கொள்வதற்காக பல தகவல்களை நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளது.

தன்னுடைய பக்தர்களுக்கு தனது உள்ளங்கையிலிருந்து தங்க செயினை எடுத்துக் கொடுக்கக்கூடிய சாயிபாபாவிற்கு தன்னுடைய காலடியில் ஒருவர் மரணமடைவார் என்ற ஞானம் இல்லாமல் போனதெப்படி?

வருவோருக்கெல்லாம் தீர்க்காயுசோடு வாழ்க என ஆசி வழங்கும் சாயிபாபாவினால் கண்முன்னே நடந்த மரணத்தை தடுக்க முடியாமல் போனதெப்படி ?

சாகாவரத்திற்கும் செல்வம் கொழிக்கவும் யாகங்கள் நடத்தும் சாயிபாபாவினால் ஏதாவதொரு யாகத்தை நடத்தி இறந்தவரை உயிர்ப்பிக்க முடியாமல் போனதெப்படி ?

இதுதான் இன்று பலரும் எழுப்பக்கூடிய கேள்வியாக இருக்கின்றது. தன்னை தரிசிக்க வந்த ஒருவர், அதுவும் அனைவராலும் அறியப்படக்கூடிய ஒரு தொழிலதிபர் தன் காலடியிலேயே இறந்துவிட்டதால் தன்னுடைய படத்தைவைத்து பூஜித்துக்கொண்டு, தன்னை நம்பியிருக்கும் மக்கள் தன்னுடைய பித்தலாட்டத்தை தெரிந்து கொள்வார்களே என பயந்து தனது முழு சக்தியையும் பயன்படுத்தி இறந்தவருக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டாமா ?

சக்தி இருந்தால் தானே செய்வார். இவருக்கு எந்த சக்தியும் கிடையாது, சில வித்தைகளை செய்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்பதை இவரை நம்பி ஏமாந்த மக்கள் இனியாவது விளங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜே அவர்கள் லிங்கத்தையும் செயினையும் கையிலிருந்து எடுத்து கொடுக்கும் சாய்பாபா, ஒரு பூசணிக்காயை எடுத்து தருவாரா என்று பொது மேடையிலேயே கேட்டார். லிங்கத்தையும் செயினையும் கைகளுக்குள் மறைத்து விட முடியும். ஆனால் பூசணிக்காயை மறைக்கமுடியாதல்லவா? அதுபோல திராவிடர் கழகத்தின் பெரியார் பித்தன் சாய்பாபாவின் கோட்டைக்கு முன்பாக சென்று சாய்பாபாவை விட சிறந்த பல வித்தைகளை செய்து காட்டி சவால் விட்டார். இதை செய்ய எந்த சக்தியும் தேவையில்லை. அனைவராலும் செய்ய முடியும் என்பதையும் நிரூபித்தார்.

இவருக்கு சக்தியிருந்தால் தினந்தோறும் பசியும் பட்டினியுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கு தன்னுடைய சக்தியால் உணவை (அதுவும் வேக வைத்த உணவை) வரவழைத்து கொடுத்து ஏழ்மையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும்.

தினந்தோறும் நோய்களினால் அவதிப்படும் நம் நாட்டு மக்களின் நோய்களை போக்கி தன்னுடைய சக்தியால் நோயற்ற, ஆரோக்கியமான ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும்.

கட்டி கட்டியாக தங்கத்தை வரவழைத்து, இந்தியாவின் கடனை அடைத்து, கடனில்லாத இந்தியாவை உருவாக்கி நம்மை தலை நிமிர்ந்து நிற்கும்படி செய்யவேண்டும்.

அஃதன்றி தன்னுடைய சுய லாபத்திற்காகவும் புகழுக்காகவும் பித்தலாட்டம் செய்து, சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதற்காக அரசியல்வாதிகளிடமும் சில தொழிலதிபர்களிடமும் மட்டும் உள்ளங்கையிலிருந்து தங்க செயினை எடுத்து கொடுக்கும் சாய்பாபா போன்ற ஏமாற்று பேர்வழிகளை அடையாளப்படுத்தி இவர்களிடத்தில் தங்களுடைய கற்பையும் பொருளையும் இழந்துவிடாமலிருக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

- அபு ஆஃபியா

0 Comments:

Post a Comment

<< Home