|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, November 20, 2007

இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு-TNTJ செயற்குழு கண்டனம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு 18-11-2007 அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை நிஜாம் காலனியில் அமைந்துள்ள மீனா மஹால் அரங்கத்தில் துவங்கியது.

இச் செயற்குழுவில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு, டிசம்பர் 6, வளைகுடா இந்தியர்கள் நிலை, போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது. மேலும் வரும் 2008 மே 12, 13 ஆகிய இரு தினங்கள் திருச்சில் மாபெரும் தவ்ஹீது எழுச்சி மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இச் செயற்குழுவில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இட ஒதுக்கீடு நன்றி அறிவிப்பு

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி கும்பகோனத்தில ஜனவரி 29-2006 ல் TTNTJ நடத்திய பேரணியிலும் மாநாட்டிலும் இலட்சக்கணக்கில் குடும்பத்துடன் திரண்டு வந்ததன் மூலமும் ஜனவரி 29-2007 ல் மாவட்டத் தலைநகரங்களில் TNTJ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டதன் மூலமும் ஜூலை 4-2007ல் TNTJ நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்டு சிறை சென்றதன் மூலமும் சட்டமன்ற முற்றுகைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டதன் மூலமும் தனி இடஒதுக்கீட்டை வென்றெடுத்த முஸ்லம் சமுதாய மக்கள் அனைவருக்கும் இச்செயற்குழு தனது நன்றியைத தெரிவித்துக் கொள்கிறது.


முஸ்லிம் சமுதாயத்தின் போராட்டத்திற்கு மதிப்பளித்து பிற்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்து பின்னர் சட்டமன்றத்திலும் நிறைவேற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் இச்செயற்குழு தனது நன்றியைத தெரிவித்துக் கொள்கிறது.


முஸ்லிம்களுக்கு திமுக அரசு தனி இட ஓதுக்கீடு அளித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று TNTJ நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தின் போதும் அதற்கு முன் TNTJ நடத்திய பல்வேறு போராட்டங்களி;ன் போதும் பிரகடனம் செய்தது. அதனடிப்படையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வுக்கு ஆதரவளிப்பதை இச் செயற்குழு மீண்டும் உறுதி செய்கிறது.


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு என்பதால் திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதில்லை என்றும் சமுதாயத்திற்கு நியாயம் வேண்டும் போதும், சமூகம் பாதிக்கப்படும் போதும் களமிறங்கி போராடுவதில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்வதில்லை என்றும் இச்செயற்குழு அறிவிக்கிறது.


மத்திய மாநில அரசுகள் செய்யும் நல்லவைகளைப் பாராட்டுவது, தீயவைகளைத் தாட்சண்யமின்றி எதிர்ப்பது என்ற கொள்கையைத் தொடர்ந்து மேற்கொள்வது என்று இச்செயற்குழு உறுதி செய்கிறது.


முழு திருப்தியில்லை.

முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப இந்த இட ஒதுக்கீடு அமையவில்லை என்பதை இச்செயற்குழு கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் ஓமந்தூர் ராமசாமி அவர்கள் முதல்வராக இருந்த போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஏழு சத விகிதமாவது அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.


இக்கோரிக்கையை வென்றெடுக்க அரசுக்கு தக்க அவகாசம் அளித்து தொடர்ந்து போராடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

மத்திய அரசின் அலட்சியம்

மாநில அரசு முஸ்லிம்களுக்கு தனியிட ஓதுக்கீடு அளித்து விட்ட நிலையில் மத்திய அரசாங்கம் இது பற்றி உருப்படியாக எதையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இடஓதுக்கீடு அளிக்க மத்திய அரசு தவறினால் திமுகவுக்கு தனி நிலைபாடும் காங்கிரசுக்கு வேறொரு நிலைபாடும் எடுக்க தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று காங்கிரசை இச்செயற்குழு எச்சரிக்கிறது.


இராணுவம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளிலும் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் தனி இட ஓதுக்கீடு கிடைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.


ஜனவரி 31- 2008 க்குள் முஸ்லிம்களுக்கு தனியிட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் பிப்ரவரி முதல் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வரும் போதும் அவர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சிகளின் போதும் அவர்களை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

அரசியல் அதிகாரத்தில் இட ஒதுக்கீடு

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலித் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ்; தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.


புதுவை அரசின் மெத்தனம்
கும்பகோணத்தில் TNTJ நடத்திய பேரணிக்குப் பின் முஸ்லிம்களுக்கு தனியிட ஒதுக்கீடு அளிக்க புதுவை சட்டமன்றத்தில் 27-2 2006 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் இட ஒதுக்கீடு பற்றி புதுவை அரசு நீண்ட மௌனம் சாதித்து வருகிறது. 27-2-2007 அன்று புதுவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல்லாயிரம் முஸ்லிம் பெண்களுடன் முஸ்லிம்கள் மாபெரும் பேரணி நடத்தி தனி இடஓதுக்கீடு பற்றி வலியுறுத்தினோம். இதன் பிறகு புதுவை முதல்வரை இரு முறை சந்தித்து வலியுறுத்தினோம்.

இதன் பின்பும் இட ஒதுக்கீடு கிடைக்க வில்லை. எனவே வரும் 27-2-2008 அன்று புதுவையில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அளித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியை ஆதரிப்போம். ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை இழுத்தடித்தால் எதிர் வரும் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை முழுமையாகஇழக்க நேரும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

குஜராத் இனப்படுகொலையும் தெஹல்கா புலனாய்வும தெஹல்காவுக்கு நன்றி

கோத்ரா ரயிலை எரித்ததும், அதைக் தொடர்ந்து இனப்படுகொலையை நிகழ்த்தியதும் மோடியும் பாஜகவினரும் அரசு அதிகாரிகளும் தான் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. பாரபட்சமின்றி துணிவாக புலனாய்வு செய்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய தெஹல்கா வார இதழையும் தெஹல்கா இணைய தளத்தையும் இச்செயற்குழு பாராட்டுவதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தெஹல்கா புலனாய்வும் அரசியல் கட்சிகளின் அலட்சியப் போக்கும்
இதயத்தைப் பிளந்து விடும் வகையில் அமைந்த இந்த அறிக்கை வந்த பின் இது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலலை என்று கூறிய தமிழக முதல்வர் கருணாநிதியை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. கலவரம் நடந்த போது மோடி அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் மோடிக்கு ஆதரவாக தி.மு.கவினர் வாக்களித்ததையும், கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று இப்போது கருணாநிதி கூறியதையும் பார்க்கும் போது மோடியுடன் கருணாநிதிக்கு இன்று வரை உறவு இருக்கிறது என்று இச்செயற்குழு ஐயம் கொள்கிறது.


உள்ளூர் பிரச்சனைக்கெல்லாம் தினசரி அறிக்கை விட்டு தினசரி போராட்டம் நடத்தி வரும் ஜெயலலிதா தெஹல்கா புலனாய்வு பற்றி மௌனம் சாதிப்பதை இச் செயற்குழு கடுமையாகக் கண்டிக்கின்றது. குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட்டதை ஜெயலலிதா நியாயப்படுத்தியதையும், ரயிலை எரித்ததே மோடி தான் என்பது அம்பலமான பின்பு மௌனம் சாதிப்பதையும் பார்க்கும் போது இன்னும் மோடியின் அன்புத் தொழியாகவே ஜெயலலிதா இருக்கிறார் என்று இச் செயற்குழு ஐயம் கொள்கிறது.


முஸ்லிம்களின் நண்பர்களாக வேடம் போடும் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மௌனம் சாதிக்கின்றன. அல்லது மென்மையாக வருடிக் கொடுக்கும் வகையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து முஸ்லிம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர், உடமை, மானம் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் எந்த அளவு எதிர்ப்புக் காட்ட வேண்டுமோ அந்த அளவு எதிர்ப்புக் காட்டத் தவறி விட்டன. அனைவருக்குள்ளும் மதவெறி மறைந்திருக்கின்றது என்பதை இந்த மௌனம் அம்பலப்படுத்துகிறது என்று இச் செயற்குழு குற்றம் சாட்டுகிறது.


குஜராத் கலவரத்தின் போதும், தெஹல்கா புலனாய்வு அறிக்கை வெளியான போதும் இடைப்பட்ட காலங்களிலும் வலிமையாகக் குரல் கொடுத்து வரும் ஒரே அரசியல் வாதியான லாலு பிரசாத் யாதவ் அவர்களையும் அவரது கட்சியையும் இச் செயற்குழு பாராட்டுவதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.


நடந்த அக்கிரமத்தை தாட்சண்யமின்றி தெஹல்கா புலானய்வு அறிக்கையை தமிழுலகுக்குக் கொண்டு சென்ற செய்தியாளர்களையும் செய்தி நிறுவனங்களையும் இச்செயற்குழு பாராட்டுகிறது.


இவ்வளவு பெரிய அக்கிரமத்தைப் பற்றி கண்மூடிக் கொண்ட சந்தர்ப்பவாதிகளான பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள், முற்போக்காளர்களை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. மனிதாபிமானமற்ற இவர்கள் எழுத்துத் துறையில் இருப்பதற்கும் பொதுவாழ்வில் இருப்பதற்கும் அறவே தகுதியற்றவர்கள் என்று இச்செயற்குழு இனம் காட்டுகிறது. இவர்களையும் இவர்களது பத்திரிக்கைகளையும் மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டும் என்று இச் செயற்குழு கோருகின்றது.

CBI விசாரனை
தெஹல்கா புலனாய்வு ஆதாரங்களின் அடிப்படையில் தாட்சண்யமின்றி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மத்திய அரசாங்கம் ஊடீஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனி நீதி மன்றம் அமைத்து குஜராத் இனப்படு கொலை வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அமெரிக்காவுடன் அனுசக்தி ஒப்பந்தம்
123 ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும்

ஆரம்ப காலம் முதல் அமெரிக்கத் தயாரிப்பு என்று விமர்சிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங் அதை உண்மைப்படுத்துவது போல் அமெரிக்காவின் எடுபிடியை விடக் கேவலமாக நடந்து வருகிறார். அமெரிக்காவின் கட்டளைப்படி ஈரானுக்கு எதிராக வாக்களித்தார். நமது நாட்டின் அனைத்து இரகசியங்களையும் அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுக்கும் வண்ணம் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்திருக்கிறார். அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மன்மோகன் சிங்கை மாற்ற வேண்டும்
நாட்டு நலனை விட அமெரிக்க நலனுக்காக பாடுபடும் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றி விட்டு நாட்டு நலனில் அக்கரையுள்ள தலைவரை பிரதமராகத் தேர்வு செய்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

வளைகுடா பணியாளர் அவலம் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும்
அமெரிக்க டாலரின் மதிப்பும், அமெரிக்க டாலரின் அடிப்படையில் தங்கள் நாணய மதிப்பை நிர்ணயிக்கும் அரபு நாடுகளின் ரியால் மற்றும் திர்ஹத்தின் மதிப்பும் பெருமளவு சரிந்துள்ளது.


நூறு ரியால் அல்லது திர்ஹமுக்கு ஆயிரத்து இரு நூறு ரூபாய்கள் கிடைத்து வந்த நிலை மாறி தற்போது 950 ரூபாய்கள் தான் கிடைக்கின்றது. இதனால் அரபு நாட்டில் பணிபுரிபவர்களின் ஊதியம் 15 சதம் முதல் 20 சதம் வரை குறைந்து விட்டது. இந்தியச் தொழிலாளர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு இலக்காகியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய ரூபாய் மதிப்பில் அவர்கள் பெற்று வந்த ஊதியம் குறையாத வகையில் அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அரசு அரபு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.


இந்த பாதிப்பை எதிர் கொள்ள முடியாத ஏழைத் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினால் நாட்டில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதுடன் அரபு நாடுகள் மூலம் நமது நாட்டிற்கு கிடைக்கும் அன்னியச் செலாவனியும் குறைந்து நாடு மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் எனவே போர்க்கால அடிப்படையில் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியக் குறைவைச் சரி செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு
அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்து வண்ணம் உள்ளன.


தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அனுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
சாதிக் கலவரத்தைத் தூண்டும் மாநில அரசு
கடந்த காலங்களில் பேருந்துகளுக்கும் மாவட்டங்களுக்கும் சாதித் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டதால் சாதிக் கலவரம் கொளுந்து விட்டு எரிந்தது. பல உயிர்களும் உடமைகளும் நாசமான பின் காலம் கடந்து உண்மையை உணர்ந்து கொண்ட அன்றைய தமிழக அரசு சாதித் தலைவர்களின் பெயர்களில் இருந்த மாவட்டப் பெயர்களை நீக்கியது. அரசுப் பேருந்துகளில் இடம் பெற்ற சாதித் தலைவர்களின் பெயரை நீக்கியது.


ஆனால் அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை இவ்வளவு சீக்கிரம் தமிழக அரசு மறந்து வருகிறது. சாதித்தலைவர்களின் பெயரில் விமான நிலையம், சாதித் தலைவர்களுக்கு அரசு செலவில் விழா மனி மண்டபம் என்று கலவரத்துக்கான தீயை அரசாங்கமே மூட்டுவதை இச்செயற்குழு கண்டிக்கிறது.

எந்த சாதி தலைவருக்கும் அரசு விழா நடத்தக் கூடாது.
எந்த சாதித் தலைவரின் பெயரையும் எந்த அரசுத் தொடர்பான நிறுவனங்களுக்கும் சூட்டக் கூடாது.
அரசின் சார்பில் சாதித் தலைவர்களுக்கு சிலை அமைக்கக் கூடாது. சாதித் தலைவர்கள் தொடர்பான அனைத்து நிகழ்விலிருந்தும் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டு நாட்டில் அமைதி ஏற்பட பாடுபட வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

முழு மது விலக்கு
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்த பின் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் அளவு அதிகரித்துள்ளது,. குடிகாரக் கணவர்களால் பெண்களின் இன்னல் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகவுள்ளன. பல்வேறு சமூக விரோதச் செயல்களுக்கும் குடிபோதையே முக்;கியக் காரணமாக அமைந்துள்ளது. எனவே வருமானத்தை கவனத்;தில கொள்ளாமல் சமுதாய நலனைக் கருத்;தில் கொண்டு தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை
சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இச் செயற்குழு ஆலோசனை கூறுகிறது.

இரத்த தானம்
2006 ம் ஆண்டு மாநில அளவில் 3240 பேர் இரத்த தானம் செய்ததன் மூலம் மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று 2006 ஆம் ஆண்டுக்கான சுழல் கோப்பையைப் பெற்ற TNTJ இரத்த தான பொறுப்பாளர்களை இச்செயற்குழு பாராட்டுகிறது. வரும் ஆண்டுகளிலும் இந்த நிலையைத் தக்க வைக்கவும் தேசிய அளவில் முதலிடம் பெறுவதற்காக பாடுபடவும் இரத்த தான பொறுப்பாளர்களை இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

டிசம்பர் 6
பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை விரைந்து தண்டிக்கும் வகையில் தனி நீதி மன்றம் அமைத்து விசாரிக்க வலியுறுத்தியும், பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கும் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் முஸ்லிமல்லாத நியாவான்களும் பங்கேற்க வேண்டும் எனவும் இச் செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

விரைந்து நீதி வழங்க வேண்டும்
குடிமக்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு நியாயம் வழங்குவதும் இந்திய ஆட்சியாளர்களின் தலையாய கடமை. பொதுமக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் ஆட்சியாளர்கள் மக்கள் தொகைக்கேற்ப நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் அதிகரிப்பதற்கு செலவு செய்ய வேண்டும். லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் இலட்சக்கணக்கான அப்பாவிகள் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த அவலத்தைப் போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க இச் செயற்குழு வேண்டிக் கொள்கிறது

புதுக்கோட்டையில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்

மிகவும் பின் தங்கிய மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு படையெடுக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.

மத்திய மாநில அரசுகள் இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி இந்த அவல நிலையை மாற்ற வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தவ்ஹீத் எழுச்சி மாநாடு
2008 மே 12, 13 ஆகிய இரு தினங்கள் திருச்சியில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடத்துவது என்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.
Thanks..WWW.TNTJ.NET




1 Comments:

At 11:39 AM, Blogger தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

முஸ்லிம் சமுதாயத்தின் போராட்டத்திற்கு மதிப்பளித்து பிற்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்து பின்னர் சட்டமன்றத்திலும் நிறைவேற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் இச்செயற்குழு தனது நன்றியைத தெரிவித்துக் கொள்கிறது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
மேலே குறிப்பிட்ட பத்தியில் வரும் வசனங்கள் தங்களது பிளாக்கரில் இருந்து காப்பி செய்தவை தான். உங்களது உள் மன வாழ்த்துப்படியும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் குவைத்திலேயே மிகப்பிரமாண்டமான முறையில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. தாங்களது வாழ்த்து எனது மின்னஞ்சலில் வந்தது
ஆஹா! அன்று டெல்லியில் பேரணி! இன்று குவைத்தில் நன்றியறிவிப்பு மாநாடு??? குவைத் - அமெரிக்க அம்பாசிடரை கூப்பிட்டுவிட்டால் நல்லது!
தேர்தல் சகதியில் குதித்து பிஜெபி-யை விட படு மோசமாக தோல்வியடையப் போகும் இவர்கள் குவைத்திலாவது வெற்றி பெறட்டும்.

PJP (P. Jainulabdeen Party) என்று அதிமுகவின் பின்புறவாசல் வழி வந்த கட்சியினர் கூட ரகசியமாக வேவு பார்க்க வந்து கூட்டத்தில் மாட்டிக்கொண்ட கதையெல்லாம் தங்களுக்கு தெரியுமா.

Visit: www.q8tmmk.blogspot.com
வஸ்ஸலாம்.

 

Post a Comment

<< Home