|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, September 30, 2007

ஃபித்ரா எபபொழுது, எவ்வளவு, எங்கு கொடுக்க வேண்டும்?

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, ''பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்'' என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே ''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று நான் கூறினேன். அதற்கு அவன் ''எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது'' எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, ''நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்'' என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து ''உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்'' என்று கூறினேன். ''எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்'' என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, ''உன் கைதி என்ன ஆனான்?'' என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். ''அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

''இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது ஃபித்ராவை குறிக்கவில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் 'ரமளான் ஜகாத்' என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந் திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்'' என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.

எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.

திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக் கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551லிவது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்
ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள். (புகாரி 1395, 1496, 4347)

''அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடு கின்றனர்.

இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டதா?

முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். ''இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது'' என்று அவர் கூறினார்... (புகாரி 6979)

பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால் தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.
ஃபித்ராவை குறிக்கவில்லை
நன்றி.... ஆன்லைன்பிஜெ

முஸ்லிம் மதத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தரலாம் - சுப்ரீம் கோர்ட் கருத்து

முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் பிற்படுத்தப்பட்டோராக ஒதுக்கப்படும் போது அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க ஆந்திர அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து போடப்பட்ட மனுவை ஐகோhட் தள்ளுபடி செய்தது. இப்போது இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துள்ளது.

வழக்கில் அவசர சட்டத்துக்கு எதிராக ப.ஜ.க.தலைவரும், பிரபல வக்கீலுமான அருண் ஜெட்லி வாதாடினார். 'இரண்டு முறை அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு அவை நீதி மன்றத்தில் ரத்து செய்யப்பட்டன. மூன்றாவது முறையாக இப்போது அவசர சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. ஆந்திராவில் 2 சதவிகித முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது' என்றார் அவர்.

ஆந்திர அரசு வக்கீல் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், முஸ்லிம் சமுதாயத்தில் 34பிரிவினர் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில்இ 10பிரிவினர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படும்' என்றார்.

முஸ்லிம் மதத்தில் உள்ள சில பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று பிரித்து வைக்கும் போது அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு தரலாம் அதில் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியுள்ளது.

சவூதியில் இந்திய பல்கலைக்கழகங்கள்

இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் சவூதி அரேபியாவில் தேர்வு மையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

சவூதியில் தற்போது இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் ரியாத்; ஜித்தா மற்றும் தமாம் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்களை நிறுவியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மெளலானா பல்கலைக்கழகம் ஆகியவை ரியாத் மற்றும் ஜித்தாவில் தேர்வு மையங்களை தொடங்கியுள்ளன.

இதன் மூலம் சவூதியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது உயர் கல்வியை இந்தப் பல்கலைக்கழகங்களில் சவூதியில் இருந்தபடியே படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் இங்கு தேர்வு மையங்களைத் தொடங்கவுள்ளன.

ரியாத்தில் 26ம் தேதி ஓஸ்மானியா பல்கலைக்கழக பழைய மாணவர் என்.ஆர்.ஐ சங்கத்தின் வருடாந்திர விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இந்திய தூதரகத்தின் உதவி அதிகாரி ராஜீவ் சஹாரே இத்தகவலைத் தெரிவித்தார்.

Saturday, September 22, 2007

ராமர் பெயரில் இனி பாஜக ஓட்டு வாங்க முடியாது-காரத்

ராமர் பால விவகாரத்தை வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட பாரதீய ஜனதா கட்சி முயற்சித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கி மதப் பிரச்சனையாக்க மும்மரமாக முனைந்து வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

சென்னை வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டது எனபதற்கு அறிவியல் பூர்வமாக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில்,சேது சமுத்திர திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற முயல வேண்டும்.

ராமர் பால பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற தப்புக்கணக்கில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் என்று அத்வானி கூறியிருக்கிறார். ராமரை முன்னிறுத்தி உத்தரப்பிரதேச தேர்தலில் களமிறங்கிய பாஜக அங்கு படுதோல்வி அடைந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறுகையில்,

சேது சமுத்திர திட்டத்தை பாஜக மத ரீதியான பிரச்சனையாக்குகிறது. அரசியல் ஆதாயத்துக்காக கற்பனைக் கதையை வரலாறு என்று சொல்லி அப்பாவி மக்களிடம் மத உணர்வுகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்றார்.

Thursday, September 20, 2007


Bismillah...
புகைப்பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோயை எதிர்த்து போராடும் மரபணு (ஜீன்) அழிவதன் காரணமாகவே புகைப்பிடிப்பவர்களுக்கு அதிகமாக நுரையீரல் புற்றுநோய் வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடித்து நிறுத்தியவர்கள்தான் அதிகமாக நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும் பி.எம்.சி. ஜெனோமிக்ஸ் ஆய்வு வெளியிட்டுள்ளது.

பி.சி. புற்றுநோய்க் கழகத்தைச் சேர்ந்த வான் எல் டாம் மற்றும் ஸ்டீபன் லாம் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வரும் கனடாக் குழுவினர் இது குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

புகைபிடிக்கும், புகைபிடித்து நிறுத்தியவர்கள் மற்றும் புகையே பிடிக்காதவர்கள் என 24 பேரின் நுரையீரல்கள் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நுரையீரல்களில் உள்ள மரபணுக்களின் தொடர்ச்சியான மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதுதான் மரபணுக்களின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள உதவியது.

ஒவ்வொரு நுரையீரலிலும் 5வது மரபணு எந்த நேரத்திலும் செயல்படும் திறனுடன் உள்ளது. ஆனால், புகைப்பிடித்தல் போன்ற சுகாதார மாற்றங்களால் இந்த மரபணுவின் செயல்பாடு மாறுகிறது (குறைகிறது). இந்த மரபணு செயல்பாடு மாற்றங்களில் ஒரு சில மாற்றங்கள் புகைப்பிடித்தலை நிறுத்தும்போது மீண்டும் சீரடைகிறது. ஆனால் ஒரு சில மரபணுக்களின் தன்மை (மாற்றங்கள்) மீண்டும் சீர் செய்ய முடியாத அளவிற்கு அழிந்துவிடுகின்றன.

உடலில் ரசாயனத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன், உணவுச் சத்தை உயிர்ச்சத்தாக மாற்றும் திறன் போன்றவைகளை செய்யும் மரபணுக்கள் புகைப்பிடித்தலை நிறுத்தும்போது மீண்டும் சீரடைகிறது.

ஆனால் நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மரபணுக்கள் புகைப்பிடிப்பதால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடுகின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுவரை புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் என்று தான் கூறப்பட்டு வந்தது. ஆனால் புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோயை எதிர்க்கும் மரபணுக்கள் அழிவதால் புகைப்பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் புகைப்பிடித்து தற்போது நிறுத்தியவர்களுக்கும் உண்டு என்பதே இந்த ஆய்வில் அறியப்பட்ட மற்றொரு தகவலாகும்.

மற்றொரு உண்மை என்னவென்றால், ஒரு சில மரபணுக்கள் எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றன. இவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் செயல்படத் துவங்குகின்றன. இந்த மரபணுக்கள் செயல்படத் துவங்கினாலும் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும். அதில் குறிப்பிடத்தக்க மரபணுவான ஒன்று செயல்படும்போது மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட 3 முக்கிய விஷயங்கள் என்னவெனில், புகைப்பிடிப்பதால் மீண்டும் சீராக வாய்ப்புக் கொண்ட மாற்றங்களை அடையும் மரபணுக்கள், முற்றிலுமாக தங்களது தன்மையை இழந்துவிடும் மரபணுக்கள், புதிதாக திறன்பெற்று செயல்படத் துவங்கும் மரபணுக்கள் என்பனவாகும்.

புகைப்பிடிப்பவர்களில் 85 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களாகவும், புகைப்பிடித்து நிறுத்தியர்வகளுக்கும் இதில் பாதி விழுக்காடு அளவிற்கு நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டு வருவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Thanks...tafareg

நோன்பு

Bismillah...
ரமழானில் அல்லாஹ்வுக்காக அவனது கூலியை நாடிஇ உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான 'லைலத்துல் கத்ர்' இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)
நூல்:புகாரிஇ முஸ்லிம்

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும்இ தீய நடத்தையையும்இ விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால்இ அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் 'நான் நோன்பாளி' என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)
புகாரிஇ முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.
(அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும்இ அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி)
நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோதுஇ நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோஇ அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி)
நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூதுஇ திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோஇ அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி)
நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும்இ ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும்இ பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்:புகாரிஇ முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி)
புகாரிஇ முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுதுஇநஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி)
நூல்: புகாரீஇமுஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத்இ இப்னுமாஜ்ஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி)
நூல்:திர்மிதீஇ அபூதாவூது

Monday, September 17, 2007

யாருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளது? கர்ப்பிணிகள் விட்ட நோன்பை மீண்டும் நோற்க வேண்டுமா?

Bismillah...

குறிப்பிட்ட சில நபர்களுக்கு மார்க்கத்தில் நோன்பு வைக்கும் விஷயத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1.நோயாளி.

2.பிரயாணி.

3.மாதவிடாய் பெண்கள்.

4.கர்ப்பிணிகள்.

5.பாலூட்டும் தாய்மார்கள்.

6.முதியவர்கள்.

மேற்குறிப்பிட்ட ஆறு விதமான நபர்களுக்கு ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியுள்ளது. எனினும் இவர்கள், விட்ட நோன்பை அவர்களுக்கு ஏதுவான மற்ற நாட்களில் வைத்தாக வேண்டும். எப்போழுதுமே நோன்பு வைக்க இயலாதவர்கள் அதற்கு பரிகாரமாய் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.


1.நோயாளி

2.பிரயாணி

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.


(அல்குர்ஆன்-2:183,184)

3.மாதவிடாய் பெண்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي زَيْدٌ هُوَ ابْنُ أَسْلَمَ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقُلْنَ وَبِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ قُلْنَ وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا

ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர்.

புகாரி-304

و حدثنا عبد بن حميد أخبرنا عبد الرزاق أخبرنا معمر عن عاصم عن معاذة قالت سألت عائشة فقلت ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت قلت لست بحرورية ولكني أسأل قالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன, (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்ட) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், 'நீ ஹரூரா எனும் இடத்தை சேர்ந்தவளா?' என்று கேட்டார்கள். நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் இல்லை. ஆயினும் (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கிறேன் என்றேன். அப்போது ஆயிஷா(ரலி) அவர்கள் 'எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்பட வில்லை'. என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம்(560)

4.கர்ப்பிணிகள்.

5.பாலூட்டும் தாய்மார்கள்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا أَيُّوبُ قَالَ كَانَ أَبُو قِلَابَةَ حَدَّثَنِي بِهَذَا الْحَدِيثِ ثُمَّ قَالَ لِي هَلْ لَكَ فِي الَّذِي حَدَّثَنِيهِ قَالَ فَدَلَّنِي عَلَيْهِ فَأَتَيْتُهُ فَقَالَ حَدَّثَنِي قَرِيبٌ لِي يُقَالُ لَهُ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِبِلٍ لِجَارٍ لِي أُخِذَتْ فَوَافَقْتُهُ وَهُوَ يَأْكُلُ فَدَعَانِي إِلَى طَعَامِهِ فَقُلْتُ إِنِّي صَائِمٌ فَقَالَ ادْنُ أَوْ قَالَ هَلُمَّ أُخْبِرْكَ عَنْ ذَلِكَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى وَضَعَ عَنْ الْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ وَعَنْ الْحُبْلَى وَالْمُرْضِعِ قَالَ كَانَ بَعْدَ ذَلِكَ يَتَلَهَّفُ يَقُولُ أَلَا أَكُونُ أَكَلْتُ مِنْ طَعَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَعَانِي إِلَيْهِ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا أَبُو هِلَالٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَحَدُ بَنِي كَعْبٍ أَخُو بَنِي قُشَيْرٍ قَالَ أَغَارَتْ عَلَيْنَا خَيْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ يَأْكُلُ فَقَالَ لِيَ ادْنُ فَكُلْ فَقُلْتُ إِنِّي صَائِمٌ فَذَكَرَ الْحَدِيثَ

அல்லாஹ் பிரயாணிக்கு, நோன்பிலும் தொழுகையை சுருக்கி கொள்வதிலும் சலுகை அளித்துள்ளான். மேலும் கர்ப்பிணிக்கும், பாலுட்டும் தாய்க்கும், நோன்பு வைப்பதில் சலுகை அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

நூல்- அஹ்மத்(19438)

6.முதியவர்கள்.

حَدَّثَنِي إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ عَطَاءٍ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقْرَأُ وَعَلَى الَّذِينَ يُطَوَّقُونَهُ فَلَا يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ قَالَ ابْنُ عَبَّاسٍ لَيْسَتْ بِمَنْسُوخَةٍ هُوَ الشَّيْخُ الْكَبِيرُ وَالْمَرْأَةُ الْكَبِيرَةُ لَا يَسْتَطِيعَانِ أَنْ يَصُومَا فَيُطْعِمَانِ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا

இப்னு அப்பாஸ்(ரலி) 2-184 ஆவது வசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அல்ல. நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்களையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓரு ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று கூறினார்கள்.

புகாரி-4505

கர்பிணிகள் விட்ட நோன்பை வைக்க வேண்டுமா?

கர்பிணிப் பெண்கள், ''தாங்கள் விட்ட நோன்பை மீண்டும் நோற்கத் தேவையில்லை, அவர்கள் ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவு கொடுத்தால் போதும்' என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு, பின்வரும் ஆதாரத்தை எடுத்து வைக்கின்றனர்:

حدثنا أبو صالح الأصبهاني ثنا أبو مسعود ثنا الحجاج ثنا حماد عن أيوب عن نافع عن بن عمر ثم أن امرأته سألته وهي حبلى فقال أفطري وأطعمي عن كل يوم مسكينا ولا تقضي

ثنا أبو صالح ثنا أبو مسعود ثنا أبو أسامة عن عبيد الله عن نافع قال ثم كانت بنت لابن عمر تحت رجل من قريش وكانت حاملا فأصابها عطش في رمضان فأمرها بن عمر أن تفطر وتطعم عن كل يوم مسكينا

حدثنا أبو صالح ثنا أبو مسعود ثنا أبو عامر العقدي ثنا هشام عن قتادة عن عزرة عن سعيد بن جبير عن بن عباس ثم أنه كانت له أمة ترضع فأجهضت فأمرها بن عباس أن تفطر يعني وتطعم ولا تقضي هذا صحيح

ثنا أبو صالح ثنا أبو مسعود ثنا أبو أسامة عن عبيد الله عن نافع قال ثم كانت بنت لابن عمر تحت رجل من قريش وكانت حاملا فأصابها عطش في رمضان فأمرها بن عمر أن تفطر وتطعم عن كل يوم مسكينا

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி (நோன்பு சம்பந்தமாக) கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நீ நோன்பை விட்டு விடு. (அதற்கு பகரமாய்) ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவு கொடு. விட்ட நோன்பை மீண்டும் நோற்காதே.

நூல்: தாரகுத்னி(14) பக்கம்-207 பாகம்-2

இதே போன்று மற்றொரு அறிவிப்பு தாரகுத்னியில் மேற்குறிப்பிட்ட அதே பக்கம் மற்றும் பாகத்தில் 15 ஆவது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

மேலும் இதே போன்று இப்னு அப்பாஸ் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி தாரகுத்னியில் அதே பக்கம் மற்றும் பாகத்தில் 10 மற்றும் 11 ஆவது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

இந்த செய்திகள் அணைத்துமே 'மவ்கூஃப்' ஆகும். அதாவது இந்த செய்தியில், எதிலும் நபிகள் நாயகம் அவ்வாறு கூறியதாக இடம் பெறவில்லை. மாறாக இப்னு உமர் மற்றும் இப்னு அப்பாஸ் அவர்கள் தனது சொந்த கருத்தை கூறியதாகவே வருகின்றது. எனவே இதை நாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே கர்ப்பிணிகளும் விட்ட நோன்பை தங்களுக்கு ஏதுவான நாட்களில் நோற்க வேண்டும்.

சலுகை அளிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் ரமளானில் நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளது இதை தவிர்த்து உள்ள மற்ற அனைவரும் கட்டடிப்பாக நோன்பு நோற்றாக வேண்டும்.
Thanks....www.onlinepj.com


Sunday, September 09, 2007

நோன்பு வைத்து கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? மற்றும் குளுகோஸ், ஊசி போடலாமா?

ஏகனின் திருப்பெயரால்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் அரபியரிடம் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி வந்னர்.

கண்ணாடிக் குவளையைப் பயன் படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பிவந்தனர்.

இந்த வழக்கம் இன்றைக்கு அடியோடு ஒழிந்து விட்டாலும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ أَنَّهُ مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْفَتْحِ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بِالْبَقِيعِ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ وَهُوَ آخِذٌ بِيَدِي فَقَالَ أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ

'இரத்தம் கொடுப்பவரும் எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத்(16489).

இந்த கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனாலும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடை முறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது. இதற்கான ஆதாரத்தை இப்பொழுது காண்போம்:

حدثنا أبو القاسم عبد الله بن محمد بن عبد العزيز ثنا عثمان بن أبي شيبة ثنا خالد بن مخلد نا عبد الله بن المثنى البناني عن أنس بن مالك قال أول ما كرهت الحجامة للصائم ثم أن جعفر بن أبي طالب احتجم وهو صائم فمر به النبي صلى الله عليه وسلم فقال أفطر هذان ثم رخص النبي صلى الله عليه وسلم بعد في الحجامة للصائم وكان أنس يحتجم وهو صائم

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். அப்போது ''இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர்' என்று கூறினார்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்.

நூல்: தாரகுத்தனீ (பக்கம்-182,பாகம்-2)

நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு உயிர்காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளு கோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துக்களை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாக காட்ட முடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உள்ளே செலுத்துவற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது.

மேலும் குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார். குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து, மற்றொரு நாளில் முறித்த நோன்பை வைத்துக் கொள்ளலாம்.

குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் என்பது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்கு பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். எனவே 'உண்ணக் கூடாது' என்ற தடையை மீறியதாகவே ஆகும்.

இது போலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல. உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில் தான் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற நிலையை அடைந்தவர், நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் விட்டு விடுவது இவரைப் பொருத்த வரை கடமையாகவும் ஆகிவிடும்.

ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல் நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டு விட அனுமதி பெற்றவர் தான். நோயாளியாக இருப்பவர் வேறு நாளில் வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழி காட்டியிருக்கும் போது இவர்கள் நோன்பை விட்டு விடுவதே சிறப்பாகும்.

அப்படியே உடலுக்குள் இவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும்.

நன்றி...ஆன்லைன்பிஜெ

Wednesday, September 05, 2007

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ ஆதாரப்பூர்வமானதா?

ஏகனின் திருப்பெயரால்..
நோன்பு திறக்கும் போது அல்லாஹும்ம லக சும்து என்று தொடங்கும் துஆவை தமிழக முஸ்லிம்கள் பரவலாக ஓதி வருகின்றனர்.

நோன்பு கால அட்டவனையிலும் இந்த துஆவை அச்சிட்டு விநியோகம் செய்து வருகின்றனர்.

பெரும்பாலான பள்ளிவாசல்களிலும் நோன்பு துறக்கும் போது இமாம்கள் இந்த துஆவை சப்தமிட்டு மக்களுக்கு கூறி, இதை சொல்ல வைக்கின்றனர்.

அதனால் பெரும்பாலான தமிழக முஸ்லிம்கள் நோன்பு துறக்கும் போது இந்த துஆவை ஓதும் வழக்கமுடையோராக உள்ளனர்.

இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதாக சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுடிருக்கின்றது. இதனடிப்படையில் தான் இமாம்கலால் இந்த துஆ பிரபல்யமாக்கப்பட்டது.

இந்த துஆ பல்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.

முஆத் பின் ஸஹ்ரா அறிவிக்கும் ஹதீஸ்

அல்லாஹும்ம லக சும்து என்று தொடங்கும் துஆவை நபிகள் நாயகம் (ஸல்) ஓதியதாக முஆத் பின் ஸஹ்ரா என்பவர் அறிவிக்கும் செய்தி அபுதாவுத், பைஹகி உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை அறிவிக்கும் முதல் அறிவிப்பாளராகிய முஆத் பின் ஸஹ்ரா என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்திக்காத ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பாக அறிவிப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இது தவிர இந்த அறிவிப்பில் அடுத்தடுத்த அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்களாக உள்ளனர்.

இப்னு அப்பாஸ் அறிவிக்கும் செய்தி

இந்தக் கருத்துடைய ஹதிஸ் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்ரானியின் கபீர் உட்பட சில நூல்களில் இந்த அறிவிப்பு பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மாலிக் பின் ஹாரூன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதிஸ்கலை அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி

இதே கருத்து அனஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் தப்ரானியின் அவ்ஸத், தப்ரானியின் ஸகீர் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவுத் பின் ஸபர் கான் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ்களை அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே மேற்கண்ட துஆவை நோன்பு திறக்கும் போது ஓத வேண்டும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று நாம் கூறிவருகின்றோம்.

தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ!

இந்த நிலையில் நோன்பு துறக்கும் போது தஹபள்ளமவு என்று தொடங்கும் துஆவை ஓதுவது நபிவழி என்று நாம் கூறினோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபுதாவுத், ஹாகிம், பைஹகி, தாரகுத்னி ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை நாம் ஓதி வருமாறு கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும், நூல்களிலும் இதைக் தெரிவித்தோம்.

எதனடிப்படையில் இதை ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டு பின்வருமாறு கூறுகிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபி அவர்களும் இதை வழி மொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட இரண்டு அறிவிப்பாளர்களும் புகாரி, முஸ்லிம் நூல்களில் ஆதாரமாகக் கொள்ளப்பட்டிருப்பதாக ஹாகிம், தஹபி ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் இதை நாமும் வழிமொழிந்தோம்.

புகாரி, முஸ்லிம் ஆகியோர் ஒருவரை ஆதாரமாக கொள்வதென்றால் அவரது நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார்கள். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை.

இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதற்கு தக்க பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபி ஆகிய இருவரும் மேற்கண்ட இரண்டு அறிவிப்பாளர்கள் பற்றி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றவர்கள் எனக் கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னி அவர்களும் இதை ஹசன் எனும் தரத்திலமைந்த ஹதீஸ் என்று சான்று அளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபி, தாரகுத்னி ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதிஸும் புகாரியிலும், முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபி ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் புகாரியில் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இல்லை. மர்வான் அல் அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபி ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்கு தெரியவருகின்றது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாக தெரியவில்லை. (இப்னு ஹிப்பானை பின்பற்றி இமாம் தஹபீ அவர்கள் மட்டும் இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.)

இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களை நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவறாக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.

வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உருதிப்படுத்தவில்லை.

எனவே யாரென அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கபப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.

இதனடிப்படையில் நோன்பு துறக்க தனியாக எந்த துஆவும் இல்லை என்பது நமது மறு ஆய்வில் தெரிகிறது.

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற நபிமொழிக் கேற்ப (புகாரி-5376) பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறையாகும்.


ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர், அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி நியாயப்படுத்துவதும் இறையச்சத்துக்கு எதிரானதாகும். நமது கௌவரத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் தெளிவுபடுத்துகிறோம்.

நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சுவோமே தவிர மனிதர்களுக்கு அஞ்சவில்லை என்பதால் இது பற்றி யார் கிண்டல் செய்தாலும் நமக்கு கவலையில்லை.

மார்க்கம் சம்பந்தமான திருத்தம் என்பதால் இதை ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த நண்பர்களுக்கு எப்;படியாவது சேர்த்து விடும் பொறுப்பை நிறைவேற்றி நன்மையை அடைந்து கொள்ளுங்கள்!
நன்றி...ஆன்லைன்பிஜெ

கள்ளு கடைகளை திறக்க கோரும் பாஜக!


தமிழகத்தில் மீண்டும் கள்ளுக் கடைகளைத் திறக்கக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு தின கூலி கூட முழுமையாக கிடைப்பது இல்லை. பொள்ளாச்சி விவசாயிகளின் நிலை அதைவிட மோசமாக உள்ளது. தென்னை மரத்தினை குத்தகைக்கு விட்டுத் தான் லாபம் பார்க முடிகிறது. டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது ஏன் கள்ளுக்கடைகள் இருக்கக் கூடாது. விவசாயிகளின் நலன் கருதி அரசு கள்ளுக்கடையை திறக்கலாம். இக்கோரிக்கையை முன் வைத்து முன்ளாள் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் தஞ்சையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

குடிப்பவரின் உடல் நலத்தையும் கெடுத்து, சுயசிந்தனை அற்றவராக மாற்றி, அவரது குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்திவரும், டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்று சமுதாய அமைப்புகளும், பா.ம.க போன்ற அரசியல்கட்சிகளும் போராடி வருகிற வேளையில் பா.ஜ.க வின் இந்த செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது.
தாங்களும் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்க்கு இது போல எதையாவது செய்வது பா.ஜ.கவின் வாடிக்கை. இது போன்ற போராட்டங்கள் பா.ஜ.கவின் வளர்சிக்கு ஒரு விதத்திலும் உதவ போவது இல்லை. மேலும் அது அழிவைத்தான் ஏற்படுத்தும். மத குரோதத்தை வளர்த்து குளிர்காய முடியாமல் போன பா.ஜ.க வேறுவழியில் இறங்கியுள்ளது.

கள்ளுக்கடையை திறந்தால் பல விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று சொல்லும் பா.ஜ.க. சூதாட்ட விடுதி, விபச்சார விடுதி போன்றவற்றை அரசு திறக்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலமும் பல குடும்பங்கள் பயன் பெறுகின்றன என்று போராடினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை.
-ஜாஹிர் ஹீசேன்-

Sunday, September 02, 2007

ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது


சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் கால்வாய் அமைப்பதற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், இந்துக்கள் புனிதச் சின்னமாக கருதுவது ராமர் பாலம். அதை இடித்தாலோ, சேதப்படுத்தினாலோ அது லட்சக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளையும், மனதையும் புண்படுத்தும் செயலாகும்.

மேலும் நமது பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஈடு கட்ட முடியாத இழப்பாக அமைந்து விடும். ராமர் பாலத்தின் மீது துளையிடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். விரைவில் வெடிகுண்டு வைத்து பாலத்தைத் தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

எனவே இதை அவசர வழக்காக கருதி விரைந்து விசாரித்து தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சுவாமி.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி.நலோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மோகன் வாதிடுகையில், சுவாமி கூறுவதைப் போல அது பாலமே அல்ல. கால்சியப் படிவுகளால் ஆன இயற்கையான ஒரு அமைப்பு என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மோகன் பதில் ஏதும் சொல்லவில்லை.

ராமர் பாலம் இடிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை அரசு அளிக்குமா என்றும் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மத்திய அரசின் வக்கீல் உறுதிமொழி அளிக்கவில்லை.

பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். செப்டம்பர் 14ம் தேதி வரை ராமர் பாலத்தை இடிக்கவோ, துளையிடவோ கூடாது. அதற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படக் கூடாது.

பாலத்துக்குச் சேதமில்லாத வகையில் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் சென்று கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அரசியல் கோமாளி என்று பலராலும் அறியப்பட்ட சு.சுவாமி. சில நேரத்தில் உண்மைகளை சொன்னாலும், பெரும்பாண்மை நேரங்களில் தன்னை பிரபலபடுத்த பொய்யான செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி அவர் தற்போது கையில் எடுத்துள்ளதுதான் ராமர் பாலம் இடிப்பு.

இதே சுப்பரமணி சுவாமி சில மாதங்களுக்கு முன்பு ராமர் பாலம் இருப்பதற்க்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், நாஸா மையமே பாலம் இருப்பதை உறுதிபடுத்தியிருப்பதாகவும் கதையளந்திருந்தார். பிறகு நாஸா மையமே இருப்பது மணல் திட்டுதான் என்று போட்டு உடைத்தவுடன், தற்போது சு.சாமி இந்துக்களின் நம்பிக்கை என்று பிளேட்டை திருப்பி போட்டுள்ளார்.

இலட்சோப லட்ச ஆண்டுகளுக்கு முன்பு வாணரங்களை வைத்து கட்டப்பட்டதாக கதையில் வரும் பாலத்தை இடிக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. உலகிலேயே இல்லாத பாலத்தை இடிக்ககூடாது என்று நீதி மன்றத்தை அனுகியவர்கள் நமது இந்தியர்களகாகவே இருப்பர்.

இந்த விசயத்தில் சமுதாய ஆர்வலர்கள், திராவிட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் மக்களிடம் சங்பரிவார கும்பல் ஏற்படுத்த முனைந்திருக்கும் திட்டத்தை முறியடித்து உண்மையில் ராமர் பாலம் என்று கிடையாது என்பதை பரப்ப முனையவேண்டும். மேலும் தமிழகத்திற்க்கு நண்மை பயக்கும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துகிற திமுக அரசை முழுமையாக இவ்விசயத்தில் ஆதரிக்க வேண்டும்.
ஜாஹிர் ஹீசேன்.