|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, February 14, 2008

நம்முடைய பேச்சு.....

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.

நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.

ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.

நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்
நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!

அல்குர்ஆன் (33:70)

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.

அல்குர்ஆன் (35:10)

ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2989)

நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் (9996)

நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி (6023)

இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).

நூல்: புகாரி (5754)

தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.

சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)

நூல்: முஸ்லிம் (4020)

பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!
நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (6780)

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்

நூல்: முஸ்லிம் (118)

யாகாவாராயினும் நாகாக்க!
நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: அஹ்மத் (14870)

தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்
தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

அல்குர்ஆன் (17:53)

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (28:55)

வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் (23:3)

அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

அல்குர்ஆன் (25:72)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6018)

நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.

அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்

நூல்: அஹ்மத் (19403)

பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.

இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலியுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.

ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.

சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.

அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி)

நூல்: அஹ்மத் (17902)

Tuesday, February 12, 2008

தஞ்சையில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

35க்கும் மேற்பட்ட அரங்குகள்;!
இன்ஷா அல்லாஹ்; மே மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் தஞ்சையில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு வெறும் சொற்பொழிவுகளைக் கொண்டதாக மட்டும் இருக்காது. இரண்டு நாட்களும் பயனள்ள முறையில் அமைந்திடும் வகையில் பல்வேறு நிகழச்;சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

• இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி.

• இஸ்லாமிய வரவாற்றுக் கண்காட்சி.

• நாட்டின் விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கை விளக்கும் கண்காட்சி.
• பலவகைக் குர்ஆன் பிரதிகள் கண்காட்சி.
• நபிவழித் தொகுப்புகள், விரிவுரைகள் கண்காட்சி.

• இஸ்லாமிய மென்பொருட்கள் (சாஃப்ட்வேர்) கண்காட்சி.

• குஜராத், மும்பை, ஈராக், ஆப்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டும் ஆவணப்படங்கள் - தனி அரங்கம்.

• மந்திரமா? தந்திரமா? தனி அரங்கம்.

• ஓவ்வொரு தலைப்பின் கீழும் கேள்வி கேட்க தனித்தனி அரங்குகள்.

• ஆதாரங்களை உடனுக்குடன் அச்சிட்டுத் தரும் வசதிகளுக்கு தனி அரங்கம்.

• தொழுகை உள்ளிட்ட வணக்கங்களைச் செய்முறை விளக்கம் செய்ய தனி அரங்கம்.

• சிறு முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் மூலம் சொந்த தொழில் செய்ய ஆலோசனை கூற தனி அரங்கம்.

• மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதற்க்கும், வேலைவாய்ப்பைப் பெறுவதற்க்கும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும், முஸ்லிம் மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்யும் அமைப்புகளை அறிந்து கொள்ளவும் தனி அரங்குகள்.

• சுட்டப் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போருக்கும், குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாதவர்களுக்காகவும் வல்லுனர்களிடம் ஆலோசனைப் பெற தனி அரங்கம்.

• முதியோர், விதவைகள், பெண்கள், சிறுபான்மையோருக்காக அரசு நலத்திட்டங்கள், அவற்றைப் பெறும் வழிமுறைகளுக்காக தனி அரங்கம்.

• வரதட்டசணை இல்லா நபிவழித் திருமணம் நடத்தவும், வாழ்க்கைத் துணைகளைத் தேர்வு செய்யவும் முன்பே பதிவு செய்து கொண்ட குடும்பத்தினர் மட்டும் சந்தித்து கொள்ளும் அரங்கம்.

• தினம் மூன்று மணிநேரம் மட்டும் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து முக்கியத்தலைப்புகளில் சிறப்புரை கேட்க ஏற்பாடு.

• 100 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரம் இல்லாமல் அனைத்து வசதிகளுடனும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

• விரும்பியதைத் தேர்வு செய்து பயனடைய ஏற்பாடு.

இந்த மாநாடு வெற்றியடைய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!.

Tuesday, February 05, 2008

இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீச்சு..

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் சமீபத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்காசி குண்டு வீச்சு தொடர்பாக ரவிபாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குமார் பாண்டியன் குடும்பத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியும் அக்குடும்பத்துக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.

குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Thanks..Thatstamil

Sunday, February 03, 2008

உறங்கும் முன்.....


விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான்.

காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை.

முஸ்லிம்களாக இருந்தால் அந்தக் காரியத்தை இஸ்லாம் எவ்வாறு செய்யச் சொல்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. சிலருக்குத் தெரிந்தாலும் அதைச் சரியான முறையில் செய்வதில்லை.

இஸ்லாம் ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கின்ற வரை அவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும், அந்தச் செயல்களைச் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் என்னென்ன என்பதையும் இஸ்லாம் சொல்லித் தருகின்றது.

இதில் ஒரு மனிதன் படுக்கைக்குக் செல்லும் முன் செய்ய வேண்டிய காரியங்கள் எவை எனப் பார்ப்போம்.

படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும்.

பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

''நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

நூல்: புகாரி 247

இது நபி (ஸல்) அவர்க்ள காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.

உளூச் செய்து விட்டு உறங்குவதற்கும், உளூச் செய்யாமல் உறங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நபியவர்கள் காட்டித் தந்தபடி உளூச் செய்து விட்டு படுத்தால் புத்துணர்ச்சியுடன் கூடிய நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

அன்றாடம் வேலை பார்த்து விட்டு, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, வியர்வை நாற்றத்துடன் அப்படியே படுக்கைக்குச் சென்று விடாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள படி உளூச் செய்து விட்டு, உறங்குவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது.

படுக்கை விரிப்பை உதறுதல்

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டி விடுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 7393

இஸ்லாம் எதைச் சொன்னாலும் அதில் ஒரு நன்மை இருக்கும். நாம் படுக்கும் இடத்தை நன்றாகச் சுத்தம் செய்து விட்டு நம் படுக்கைகளையும் நன்றாக உதறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஏதாவது பூச்சிகளோ, அல்லது எறும்புகளே இருக்கலாம். படுக்கையை உதறாமல் படுத்தோம் என்றால் அந்தப் பூச்சிகளால் ஏதாவது தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த ஒழுங்கையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஓத வேண்டிய துஆக்கள்

''நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3275

மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.

''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5009

மேலும் படுக்கைக்குச் செல்லும் போது, திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி, நமது உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங் கைகளை இணைத்து அதில், ''குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ்'' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5017

இன்றைய பெண்கள் வீட்டு வேலைகளில் எந்த வேலையைச் செய்தாலும் இயந்திரங்கள் மூலமாகவே செய்கின்றார்கள். ஆனால் அதுவும் கூட அவர்களுக்குச் சிரமமாக உள்ளது. இதனால் சில பெண்கள் காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, இரவில் கணவரிடம் சென்று தங்கள் மனக் குறைகளைக் கொட்டுகின்றார்கள். இதனால் கணவனின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் படுக்கைக்குச் செல்லும் முன் சொல்ல வேண்டிய திக்ருகளையும், தஸ்பீஹ்களையும் செய்து விட்டுப் படுத்தால் அவர்கள் என்ன தான் அன்று சிரமப்பட்டிருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது. அது மட்டுமின்றி இதன் மூலம் கணவனின் வெறுப்பையும் சம்பாதிக்காமல் இருக்கலாம்.

(என் மனைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்த போது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே எழுந்திருக்க முயற்சித்தோம். அவர்கள், ''நீங்கள் இருக்கும் உங்கள் இடத்திலேயே அமருங்கள்'' என்று சொல்லி விட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை உணரும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்தார்கள். அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, 33 முறை சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றும், 33 முறை அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 5361

பிறகு பின்வரும் துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும்.

பி(இ)ஸ்மி(க்)க ரப்பீ(இ), வளஃது ஜன்பீ(இ) வபி(இ)(க்)க அர்ப(எ)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(எ)ஸீ ப(எ)ர்ஹம்ஹா வஇன் அர்ஸல்(த்)தஹா ப(எ)ஹ்ப(எ)ள்ஹா பி(இ)மா தஹ்ப(எ)ளு பி(இ)ஹி இபா(இ)த(க்)கஸ் ஸாலிஹீன்.

பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பளிப்பாயாக! அதை நீ (கைப்பற்றாமல்) விட்டு விட்டால் உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7393

அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் மரணிக்கின்றேன். உன் பெயரலால் உயிர் பெறுகின்றேன்.

நூல்: புகாரி 6325

இவைகள் அனைத்தையும் ஓதி முடித்த பின் வலப்புறமாக ஒருக்களித்துப் படுத்து, பின்வரும் துஆவை ஓதி அந்த வார்த்தையையே அன்றைய தினத்தின் இறுதி வார்த்தைகளாக ஆக்கிக் கொள் வேண்டும்.

''நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர்,

அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப(எ)வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(இ)(த்)தன் வரஹ்ப(இ)(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(இ)(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(இ)நபி(இ)ய்யி(க்) கல்லதீ அர்ஸல்(த்)த

பொருள்: யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்.

என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையான வனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி)

நூல் : புகாரி (247)

இவ்வாறு உன்னதமாக இஸ்லாம் உறங்கும் முறையைப் போதிக்கின்றது. எனவே இதன் அடிப்படையில் நாமும் செயல்பட்டு, நம் சந்ததிகளையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் செயல்படச் செய்து, நபிவழியைப் பின்பற்றியவர்களாக அல்லாஹ் என்றென்றும் நம்மை ஆக்கி வைப்பானாக!

Saturday, February 02, 2008

துர்மணம் தேடும் ஜமாஅதே இஸ்லாமி

(அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில், ஜமாஅதே இஸ்லாமி அமீர உஸ்தாத்(?)ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவர்,'நறுமணம் நீக்கி துர்மாணம் தேடும் விமர்சிகர்கள்' என்ற தலைப்பில், தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரை குறை என்று - தான் ஓர் அரை குறை என்பதை மறந்துவிட்டு - கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார். அவரது விமர்சினத்திலுள்ள முரண்பாடுகளுக்கும் தவறான விடயங்களுக்கும் பதில் அளிக்கப்படுகிறது.)

கடந்த அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில் காக்கா ஹஜ்ஜுல் அக்பர் என்பார் : ஹஸனுல் பன்னா, மவ்லானா மவ்தூதி, மவ்லானா இல்யாஸ், ஸையித் குதுப், யூசுப் அல்கர்ளாவி, ரஷீத் அல்ஃகன்னூஸி, உமர் தில்மஸானி, பைஸல் மவ்லவி போன்றோர் இஸ்லாமிய உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு, வாதிடுகின்றார்.

உண்மையில், இங்கு இவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பெரிய அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அல்லர் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் உலகிலுள்ள மிகச் சொற்பமான, இஸ்லாத்தை விளங்காத சில ஆதரவாளர்களைப் பெற்ற, பல தவறான கொள்கைகளையுடைய இயக்கவாதிகள் மாத்திரமே. இமாம் இப்னு தைமிய்யா, அல்பானி, P.ஜைனுல் ஆபிதீன் போன்ற பன்முக ஆளுமையுடைய அறிஞர்களுக்கு நிகரானவர்களும் அல்லர். வெறுமனே இயக்க ஸ்தாபகர்கள், இயக்கவாதிகள். அவ்வளவுதான் இவர்களின் பெருமை. இவர்களில் பலர் அகீதாவில் தவறு விட்டதால், சமகால பல்துறை சார்ந்த அறிஞர்களால் மிக வன்மையாக விமர்சிக்கப்பட்டவர்கள். எந்தளவுக்கென்றால், சமகால ஹதீஸ் துறை அறிஞர்களில் ஒருவர், யூசுப் கர்ளாவி பற்றி ஒரு விமர்சன நூல் எழுதியுள்ளார். (இஸ்காத் அல்கல்புல் ஆவி யூசுப் அப்தில்லாஹ் அல்கர்ளாவி) யூசுப் கர்ளாவி ஒரு வெறிபிடித்த நாய் என்று தனது நூலுக்கு பெயரிட்டு விமர்சித்துள்ளார்.
இந்தளவு கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டவர்களுக்குத்தான் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று நீங்கள் போலிப் புகழ் தேடிக் கொடுக்க முனைகின்றீர்.
நீங்கள் பெயர் குறிப்பிட்டுத் துதிபாடுபவர்களில் மவ்தூதி தவிர, மற்றவர்கள் எகிப்தில் பல முஸ்லிம் இளைஞர்களைக் குர்பான் கொடுத்ததைத் தவிர, இதுவரை எதையும் சாதிக்காத இக்வான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மவ்தூதி என்பவர் நபி () அவர்களின், தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பை மறுத்தவர். நபி () அவர்கள் யூகத்தின் அடிப்படையில் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்று ஹதீஸைக் கேவலப்படுத்திவர். (பார்க்க: முiவாயடிரச சுயளயயடை றுயடஅயளயயடை P.57) இதை மவ்தூதி தனது தப்ஹீமில் 'யூஸூப் நபி ஹிட்லருக்கு நிகரான அதிகாரத்தை வேண்டினார்' என்று நபியையும் குர்ஆனையும் கேவலப்படுத்தியவர்.
இவ்வாறு, நபிமார்களை அவமதிப்பவர்களை முஸ்லிம் உம்மத் எவ்வாறு அங்கீகரிக்கும்? மவ்லானா இல்யாஸைப் பற்றிப் பேசவே தேவையில்லை. தப்லீக் இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளை அவதானித்தால், அவரது இஸ்லாமிய அறிவு ஞானத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பட்டென்று புரிந்து கொண்டு விடலாம்.

இலங்கையில் கூட, நீங்கள் குறிப்பிட்டுள்ள இயக்கவாதிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான்களான ஆகுஊனு தவிர்ந்த மற்ற இயக்கங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்கள். ஜமாஅத்தே இஸ்லாமியும் இக்வான்களான ஆகுஊனுயும், இல்யாஸ் மவ்லானாவின் சமூக அங்கீகாரக் கருத்துக்களை(?) எடுத்துக் கூறுவதில்லை. தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக, தப்லீக் ஜமாஅத்வாதிகளைத் தூண்டிவிட மாத்திரம் அவரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல், தப்லீக் ஜமாஅத் மஜ்லிஸ்களில், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் கருத்துக்கள் பேசப்படுவதில்லை. ஏன்? ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் ஒரே இலட்சியம் கி(இ)லாபத் கனவுதான். எனினும் இவர்களே இரண்டாகப் பிரிந்து, பல துருவங்களாக உள்ளனர். இவர்களே ஒற்றுமைக் கோஷத்தையும் இடைவிடாது போட்டும் வருகின்றனர்.

'முதலில் விமர்சிக்கப்படுபவரையும், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பவற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின் அவரது உலக மறுமை நற்பேறுகளுக்காக துஆச் செய்துவிட்டு அடுத்ததாக,ஒரு முஸ்லிம் தன் அடுத்த சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைப்பாடு என்ற வகையில் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பண்பாடாக விமர்சிக்கும் போதும், பின்னால் அந்தத் தவறுகளுக்காக அல்லாஹ் அவரை மன்னித்து விடுவானாக! என்று பிரார்த்தனை செய்யும் போதும் மனம் புல்லரித்து விடுகின்றது. ஒரு மனிதரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்.' என்று எழுதியுள்ளீர்.

'ஒருவரை விமர்சித்தால், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின்னர்தான்...' என்று தொடரும் நீங்கள், இதற்கு முன்னர் அறிஞர் P.து.யையும் பல தவ்ஹீத் அறிஞர்களையும் விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் எழுதியபடி, அறிஞர் P.து. அவர்கள் செய்துவரும் நற்பணிகளை எல்லாம் சுட்டிக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?

• இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியூடாக இஸ்லாத்தின் தூதை, முஸ்லிமல்லாத மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களில் கணிசமான ஒரு தொகையினரை, இஸ்லாத்தில் நுழைய வைத்து, பலரை இஸ்லாத்தின் ஆதராவாளர்களாக மாற்றியதை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?

• வரதட்சணை கொடுமைகளால் ஏற்பட்ட சீரழிவுகளை எடுத்துக்காட்டி, இஸ்லாமிய பெண் விடுதலைக்காக அவர் ஆற்றிவரும் புரட்சிகரமான பணிகளை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?

• அமேரிக்க, இஸ்ரேலின் அராஜகங்களை பகிரங்கமாக மேடை போட்டு அவர் கண்டித்து ஆற்றிய உரைகளை எடுத்து விளக்கித்தான் விமர்சித்தீர்களா?

• தூய்மைத் தவ்ஹீத் வாதத்தை ஆய்வினடியாய் எடுத்துக் கூறி, ஷிர்க்-பித்அத்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதில் அவர் ஆற்றிவரும் நிகரற்ற பணிகளை எடுத்துக் காண்பித்துத்தான் விமர்சித்தீர்களா?

• காதியானிஸம், தரீக்காயிஸம், சூபிஸம், 19யிஸம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு தவறான மதவாதிகளுடன் அவர் விவாதித்து, இஸ்லாத்தின் பெருமையை நிரூபித்ததையெல்லாம் எடுத்துக் கூறித்தான் விமர்சித்தீர்களா?

• 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து, உரை, ஆய்வு போன்ற அனைத்து ஊடகங்களாலும் அவர் சத்திய இஸ்லாத்தைக் காப்பதற்காக இடைவிடாது போராடி வருவதைக் குறிப்பிட்டுக் கூறித்தான் விமர்சித்தீர்களா?

• இந்த நாட்டில் தவ்ஹீத் அமைப்புக்கள் செய்து வரும் நற்பணிகளையெல்லாம் சிலாகித்துத்தான் விமர்சித்தீர்களா?

ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் இயக்கங்களின் தவறான கொள்கைகளை எவருக்கும் அஞ்சாமல், துணிகரமாகவும் விவேகமாகவும் விமர்சித்தார் என்பதற்காக மட்டும் அவரை விமர்சித்தீர்கள். உங்கள் இயக்கம் சார்ந்தவர்களை விமர்சிக்கும் போது, நாங்கள் மட்டும் நன்மையைக் கூற வேண்டும். நீங்கள் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற இறுமாப்புத்தானே இவ்வாறு எழுதவைத்துள்ளது. 'ஒருவரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்...' என்று தொடரும் நீங்கள், மற்றவர்களின் ஒரே ஒரு நற்பணியைக் கூட சுட்டிக் காட்டிப் பண்பாடாக விமர்சிக்கவில்லை;. மனிதத் தவறுகளுக்காக அல்லாஹ்விடம் அவர்கைளை மன்னித்து விடுவாயாக! என்று நீங்கள் பிரார்த்தனை செய்யவில்லை.

எனவே, நீங்கள் எவ்வாறு விமர்சிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குக் கூறுகின்றீரோ, அந்தப் பண்புகள் உங்களிடமே இல்லை. உங்களின் வாதப்படி உங்களிடமே அடக்கமும் அறிவும் இல்லை என்பதை நீங்களே ஏற்றுக்கொண்டுவிட்டீர். நீங்கள் ஓர் அரைகுறை என்பதை எழுத்தாலும் பேச்சாலும் மட்டுமல்ல, பத்வாக்களாலும் கூட நிரூபித்துள்ளீர்கள். ஒரு முறை சிலாபம் பள்ளியின் ஹவ்லில் நாய் விழுந்த போது, உங்களிடம் ஹவ்லை சுத்தம் செய்வது எவ்வாறு என்று கேட்கப்பட்டபோது, மண்போட்டு ஏழு முறை கழுவ வேண்டும் என்றீர். இதையே சகோ. அகார் முஹம்மதிடம், உங்கள்; பத்வாவை யார் சொன்னது என்று குறிப்பிடாமல் கேட்டபோது, யார் இவ்வாறு அரைகுறை பத்வா வழங்கியது? அது, தவறு. நாயை வெளியே எடுத்து வீசினால் போதும் என்றார். ஆகவே, அகார் முஹம்மதும் உங்களை அரைகுறை என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய அடிப்படையை, கலிமாவின் விளக்கத்தை அரை-குறையாகப் புரிந்துகொண்டவர்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரைகுறை என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மாதம்பையில் லுஹர் தொழுகையை 5 ரக்ஆத்துக்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தீர்கள். அதை நினைவுபடுத்திய பின், நீங்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று சுடசுட அரைகுறை பத்வா வழங்கினீர்கள். 4 ரகஅத் தொழுகையை மறதியாக 5 ரக்ஆத்துக்கள் தொழுதால், இரண்டு ஷஸஜ்தா செய்ய வேண்டும் என்ற அன்றாடத் தொழுகை சட்டமே தெரியாத அறிவுமகாஞானி நீங்கள், இதையும் மறந்து மற்றவர்களுக்கு அரைகுறை என்கிறீர்களே! ஹஜ்ஜுல் அக்பர் நானா! இது நியாயம்தானா? மத்ரஸா சான்றிதழ் கூட இல்லாத உங்கள் பெயருக்கு முன்னால் 'உஸ்தாத்' பட்டம் எவ்வாறு வந்தது? 'உஸ்தாத்' பட்டம் பெற எவ்வளவு தகுதியும், P.Hன முடித்த பின்னர் பல வருட அனுபவமும் வேண்டும். இவையெல்லாம் உங்களிடம் இருக்கின்றனவா? நீங்களும் ஜாமிஆ நளீமிய்யாவில் துரஅp ழுரவ என்பதை மறந்து, மற்றவர்களை அரைகுறை என்று எழுதுவது உங்களுக்குக் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?; இயக்கவாதிகள் மீதான அளவு மிஞ்சிய பாசம், கடந்த காலத்தை எல்லாம் மறக்கடித்துவிட்டதா? அல்லது தவ்ஹீத்வாதிகள் மீதுள்ள வெறுப்பா?

சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், முஸ்லிம் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலரில், செய்யித் குதுப் என்பவரும் ஒருவராவார். இவர் வாழ்ந்த காலப் பகுதியில் உலகில் எங்கும் முஸ்லிம்கள் இல்லை என்று, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காபிராக்கியவர்! செய்யித் குதுப் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் காபிர் என்றார் என்பதை, அதே இயக்கத்தைச் சேர்ந்த யூசுப் கர்ளாவி தனது ஷஅவ்லியாத்து ஹரகதில் இஸ்லாமிய்யா என்ற நூலில் ஏற்றுக் கொள்கின்றார். இவர் முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்கவே இல்லை. செய்யித் குதுப், மூஸா நபியையும் இப்ராஹீம் நபியையும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும், மூஸா நபியை இனவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியவர்.
முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்காத இவர், எவ்வாறு முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறுவார்? பெற முடியும்? சூறா அல் - இஃலாஸுக்கு விரிவுரை (?) வழங்கும் போது, அனைத்திறைவாத(அத்வைத)க் கொள்கையை பிரதிபலித்திருக்கின்றார். அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளார். இவரது முகத்தில் இஸ்லாத்தின் அடையாளங்கள் கூட இருந்ததில்லை.

யாரடா என்று கேட்கப்பட்ட மேதை யார்? தரீக்கா வழிபாட்டையும், ஷிர்க்கையும், ஷீஆயிஸத்தையும் ஆதரித்தவர், உமர் தில்மஸானி (மூன்றாவது இக்வானியத் தலைவர்- சினிமாத் தியட்டரில் அஸரையும் லுஹரையும் ஜம்வு செய்தவர்) சிகரட் குடித்துக்கொண்டு வந்தபோது, தடுக்கவும் - ஏவவும் மாட்டேன் என்று சொன்னவர். பல இளைஞர்களின் இரத்தத்தை வீணாக ஓட்டியவர். அவர்தான் நீங்கள் போற்றும் மாமேதை ஹஸனுல் பன்னா. P.து. என்றாலும் ஓரளவு கண்ணியமாக விமர்சித்தார். ரபீவு மத்கலி வெறிபிடித்த நாய் என்று எழுதியுள்ளாரே! இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள். மத்கலி ஒரு சமகால மாமேதை. அவரின் உள்ளத்திலுள்ள இஸ்லாத்தின் அறிவுப் பாரம்பரியத்தை ஹஸாபிய்யா தரீக்கா மந்திர சக்தியால் பன்னா கடத்திவிட்டாரா? உலக அதிசயம்தான். தவறான கொள்கைகளை விமர்சித்தால் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் எடுபட்டுவிடுமா?

தரீக்கா வழிபாட்டை அங்கீகரித்தோர்தான் மாமேதைகளா? அல்லாஹ் தனது நண்பராக்கிய இப்ராஹீம் நபியை ஒழுக்கம் கெட்டவர் என்று தூற்றியவர்கள் தான் மாமேதைகளா? இவர்களின் கருத்துககளுக்;குத்தான் கண்ணியம் கொடுக்க வேண்டுமா? இவர்களையெல்லாம் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அங்கீகரிக்கும்? எங்கள் கொள்கை உள்ளத்தில் செய்யித் குதுபைவிட, நபிமார்களும் ஸஹாபாக்களும் மரியாதையில் உயர்ந்து நிற்கின்றார்கள். ஏகத்துவ வாதிகளுக்கும் இயக்கவாதிகளுக்குமிடைலுள்ள வேறுபாடு இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது. ஹஸனுல்பன்னா, மவ்லானா இல்யாஸ் போன்றவர்கள் தரீக்கா சிந்தனை சார்ந்தவர்கள். இவர்கள் முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறாத, குறுகிய சில ஆதராவாளர்களை மட்டுமே கொண்ட ஜமாஅதே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) போன்ற இயக்கங்களின் ஆதரவை மட்டும் பெற்றவர்கள். நபிமார்களை இனவெறியர்கள், ஹிட்லர் போன்ற அதிகாரத்தை வேண்டியவர்கள் என்றெல்லாம் தூற்றிய இவர்கள், சகோ. ஹஜ்ஜுல் அக்பருக்கும் அவர் தலைமை வழங்கும் ஜமாஅத்தே இஸ்லாமிக்கும், மீள்பார்வைக்கும் வேண்டுமானால், நேசத்திற்குரியவர்களாக தெரியலாம். ஆனால், ஏகத்துவவாதிகளுக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் இவர்களைவிட பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களாக உள்ளனர். அதனால்தான் நாம் அல்குர்ஆனையும் நபி வழியையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்கின்றோம்.

கண்மூடித்தனமாக எந்த அறிஞர்களின் பின்னாலும் நாம் செல்வதில்லை. தவ்ஹீத் உலமாக்கள் தவறுவிட்டால், எப்படி ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனுகளின் தவறான கருத்துக்களை விமர்சிக்கின்றோமோ, அதேபோன்று விமர்சிக்கின்றோம். தவ்ஹீத்வாதிகளிடம் என்னவன் உன்னவன் என்ற வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இஸ்லாமியப் பாரம்பரியங்களை இதயத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, மனோ இச்சைகளையும் இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் வழி எங்கள் வழி அல்ல என்று உறுதியாகக் கூறுகின்றோம். முஸ்லிம் சமூக அங்கீகாரமற்றவர்களுக்காகவும் இஸ்லாத்தையும் இறைத்தூதர்களையும் அவமதித்தவர்களுக்காகவும் வாதிட்டு, அல்குர்ஆனையும் ரசூல்மார்களையும் ஸஹாபாக்களையும் அவமதிக்கும் ஈனச் செயலுக்கு நாம் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம்.

'குர்ஆனிய வசனங்களில் காணப்படுகின்ற அற்புதமான ஓசை நயத்தில் தன்னைப் பறிகொடுத்த அவர் அதில் காணப்படுகின்ற இசை நுணுக்கங்களை விபரிக்கின்றார். துர்மணம் தேடுவோருக்கு அது போதாதா? அவரது மூக்கு இசை என்ற சொல்லில் பட்டுவிடுகிறது. உடனே அந்த சொல்லின் கூடாத வாசம் அவரது மூக்கைத் துளைக்கிறது.' நறுமணம் மூக்குக்குக் அடிப்பது போன்று துர்மணமும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால், மலத்தையும் பிணத்தையும் உண்ண மனிதன் ஆரம்பித்துவிடுவான். எனவே, நாங்கள் குறை-நிறைகள் இரண்டையும் பேசுகின்றோம். நல்லறிஞர்களிடம் நளினத் தன்மையையும் குறைமதிகளிடமும் முஸ்லிம் உம்மத்தை தவறாக வழிநடாத்தியவர்களிடமும் கடுமையான விமர்சனத் தன்மையையும் கடைப்பிடிக்கின்றோம்.

தவ்ஹீத் அறிஞர்கள், ஜமாஅதே இஸ்லாமியை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக அவர்களின் விமர்சனத்தை மட்டும் குறைகாணும் நீங்கள், அவர்களின் மகத்தான நற்பணிகளை எடுத்துக் கூறியதுண்டா? '...குறைகளை மட்டும் தேடி விமர்சிக்கும் குணமுடையவர்கள் மேதாவித்தனமும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்' என்று அடுக்கிக் கொண்டே போகின்றீர்கள். அப்படியாயின், P.J. அவர்களும் மற்றும் தவ்ஹீத் அறிஞர்களும் உரையாற்றிய பலவாயிரம் ஏஊனுகள் உள்ளன. ஆவற்றின் அத்தனை நறுமணமும் உங்கள் மூக்குக்குப்படவில்லை. பல்லின மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்ற ஒரே ஒரு உரையில் பேசப்பட்ட உங்களுக்கு பிடிக்காத சொல்லின் கூடாத வாசம் உங்கள் மூக்கைத் துளைத்துவிட்டது. உடனே! அதை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறீர்! அவ்வாறாயின் பல்லின மக்களுக்கு மத்தியில் எவ்வாறு வாழுவது என்று அருமையாக கூறப்பட்ட அத்தனை நறுமணம் கமழும் நல்லறிவுரைகளையும் விடுத்து, குறைமட்டும் தேடிய உங்களிடம் மேதாவித்தனமும் அகம்பாவமும் குடிகொண்டுள்ளது என்றுதானே உங்கள் எழுத்து மூலம் உங்களுக்கு நீங்களே சொல்லியுள்ளீர்கள்.

2005ல் P.J. இலங்கை வந்த போது, பல பாகங்களிலும் பல்;வேறு தலைப்புக்களில் உரையாற்றினார். இவையெல்லாம் அருமையான, ஆழமான, தர்க்கரீதியான உரைகள். இந்த உரைகளில் அவர் ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனு என்பன மழுப்புவது போன்று, வளையாது, நெளியாது, மழுப்பாது, மறைக்காது அழுத்தமாக உண்மைகளைப் பேசினார். இதை தாங்க முடியாத சகோ. மின்ஹாஜ் இஸ்லாஹி என்பவர் மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று அல்ஹஸனாத்தில் எழுதினார். ஆனால், இதே மின்ஹாஜ் சில வருடங்களுக்கு முன்னர் புத்தளத்தில் ஷரீஆ கவ்ன்சில் ஆநநவiபெ போட்ட போது, கற்களுடனும் பொல்லுகளுடனும் சில தடியடி ஜமாஅத் ஊழியர்களுடன் சென்று, மேடையிலுள்ள பொருட்களை உடைத்து, சேதப்படுத்தினார். கருத்தை கருத்தால் வெல்ல முடியாமல், தடியடியால் வெல்ல முனைந்த ஜமாஅதே இஸ்லாமி மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று எழுதுவது வேடிக்கைக்குரியதாகும். கருத்தால் புரோகித இயக்கங்களை துணிவாக விமர்சித்த P.J.யை மென்மை இழந்தார் என்று எழுதுவது எவ்வளவு வக்கிரப் புத்தி நிறைந்தது? யார் மென்மையை இழந்தவர்கள். மழுப்பாது, மறைக்காது, தெளிவாக கருத்தை முன்வைத்தவரா? ரவ்டிகளுடன் இணைந்து, வுரடிந டுiபாவகளை உடைத்து, ஷரீஆ கவ்ன்சிலின் மேடையை ரணகளப்படுத்திய ஜமாஅதே இஸ்லாமியா?

ஸஹாபாக்களைத் திட்டித் தீர்க்கும் ஷீஆக்களைக் கண்டித்து நீங்கள் இப்படி ஒரு கட்டுரை எழுதியதுண்டா? ஆயிஷா(ரழி)வை வேசி என்பவர்களை இயக்க அரசியல் நலனுக்காக ஆதரிக்கின்றீர்களே! அபூபக்கரை 'காபிர்' என்று கூறிய சாட்சாத் குமைனியின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று எழுத எப்படி உங்களுக்குத் துணிவு வருகிறது? ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் கண்ணியமிக்க தாயாக மதிக்கும் ஆயிஷா (ரழி)யை வேசி என்று எழுதிய குமைனியின் புரட்சியை மவ்தூதி : 'இஸ்லாமியப் புரட்சிளூ அதனை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிப்' என்றார். முஅவியா () அவர்களை ஏமாற்றுக்காரன், பொய்யன், நயவஞ்சகன் என்றெல்லாம் மவ்தூதி திட்டியுள்ளார். மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! யாரின் உள்ளத்திலிருந்து அல்லாஹ் இஸ்லாமியப் பாரம்பரியத்தை அகற்றியுள்ளான்? வஹியை எழுதிய முஅவியா (), மற்றும் அம்ர் () போன்ற ஸஹாபாக்களைவிட, சமகாலத்தில் தோன்றிய, கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாத, அரைகுறை இஸ்லாம் தெரிந்த இயக்கவாதிகள், உங்கள் மதிப்புக்கும் மாண்புக்கும் உரித்தானவர்களாகிவிட்டார்கள்! இது ஏன்? இஸ்லாத்தைவிட இயக்கம் பெரிதானதால் தானே?

இஸ்லாத்தை விட, பன்னாயிஸத்தையும் மவ்தூதியிஸத்தையும், இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் பின்னே செல்பவர்கள் யார்?
• கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள்.
• நபிகளாரின் ஸூன்னாவில் ஏற்றத் தாழ்வு பார்ப்பவர்கள்.
• ஸூன்னாவுக்கும் பித்அத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.
• ஷிர்க்-பித்அத் என்பவற்றை சில்லறைப் பிரச்சினை என்பவர்கள்.
• நபியின் ஹதீஸ்களைவிட தமது இயக்க இஸ்தாபகர்களின் கருத்துகளுக்கு முதலிடம் வழங்குபவர்கள்.
• சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட ஸஹாபாக்களைக் காபிர்கள் என்று திட்டும் ஷீஆக்களை வாயாரப் புகழ்ந்து, ஆதரிப்பவர்கள்.
• அரசியல் அதிகார ஆசை பிடித்தவர்கள். அதற்காக, பல நல்லறிஞர்களைக் கொலை செய்தவர்கள்.
• அரசியல் அதிகாரத்திற்காக அனைத்து வழிகெட்ட இயக்கங்களுடனும் நளினத்தன்மை கடைப்பிடிப்போர்.
• ஷிர்க்-பித்அத்,வழிகேட்டு இயக்கங்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளுடன் மட்டும் கடுமை காட்டுவோர்.

மொத்தத்தில், இவர்கள் அல்குர்ஆன் - ஹதீஸ் பற்றிய ஆழமான அறிவற்ற, ஜிஹாத், அரசியல் பற்றிய மேலோட்டமான சில விடயங்களை மட்டும் தெரிந்த உணர்ச்சிக் கோஷதாரிகள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கூட, எந்த அரசியல் மாற்றத்ததையும் இதுவரை ஏற்படுத்த முடியாத வரண்டுபோன நிலையிலுள்ள இவர்கள்தான், 8மூ முஸ்லிம்கள் வாழும் இலங்கையில், நளைக்கழித்து இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டுவருவோம் என்று, கற்பனை உலகில் சிறகு இல்லாமல் பறந்து கொண்டு, தானும் ஏமாந்து, அல்குர்ஆன் - ஹதீஸ் தெரியாத அப்பாவிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! நீங்கள் இயக்க சிந்தனைவாதிகளுக்காக வாதாடி, கட்டுரை எழுதி அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் அவனது தூதர்களையும் ஹதீஸ்களையும் அகவ்ரவப்படுத்தாதீர்கள். நீங்கள் நேசிப்பவர்களைவிட, இறைத்தூதர்களும் ஸஹாபாக்களும்; கண்ணியமானவர்கள் என்று எண்ணவாவது முயற்சி செய்யுங்கள். அப்போது, அல்லாஹ் அருள் செய்வான், கண்ணியப்படுத்துவான். இல்லாவிட்டால் இழிவுதான் மிஞ்சும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைவிட, தரமான அறிஞர் பட்டியல் உள்ளது. அந்த இஸ்லாமிய அறிஞர்களின் தூய சேவைகளையும் எடுத்துச் சொல்லுங்கள்.

சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! இஸ்லாத்திற்காக வாதிடுங்கள். இயக்கத்திற்காக வாதிடாதீர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் சாதாரண மனிதர்களின் கருத்துக்களைவிட மேன்மையானதாக மதியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலித்து, மார்க்க ஞானத்தையும் அதில் தெளிவையும் வழங்குவானாக!

மௌலவி.ஹபில் ஸலஃபி.


.