|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, July 09, 2008

பள்ளிகளில் பர்தா அணிய தடை- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்த தடையை உடனே நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


நாகை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பள்ளி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாட்டை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று கூறி பல பள்ளிகள் இந்த விதிகளை அமுல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக பள்ளிக்கு பர்தா அணிந்துவர முஸ்லீம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மாநில செயலாளர் சித்திக் கூறுகையில், நாகை மாவட்டத்தில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர பள்ளிகள் தடை விதித்துள்ளன. இது கடுமையாக கண்டிக்கதக்கது.

இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் தெரிவித்துள்ளோம். கல்வித்துறை அமைச்சரிடமும் முறையிட உள்ளோம்.

பள்ளியில் மதிய நேரத்தில் முஸ்லீம் மாணவ, மாணவிகள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அண்ணா பல்கலை கழகமே தொழுகை நடத்த அனுமதித்துள்ளது. எனவே இதை மற்ற பள்ளிகளும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதை கண்டித்து விரைவில் கண்டன ஆர்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.


Thanks:

Thatstamil.

Tuesday, July 01, 2008

ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?


'போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!' என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.



நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.



சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். 'இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.

உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - ‘The Prosecution of George W. Bush for Murder’. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.

'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ். ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்கெய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 'இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை! சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.

ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.

உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி! ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக்குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.

'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது? அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?

பிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய்! இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.

யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு! ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.

பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும்! தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறார் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.

'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான்! உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?' என்கிறார்கள் இராக்கியர்கள்.

குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே! போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.

உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார்? தலையாட்டி இராக் அரசாங்கமா? புஷ்ஷா? வரவிருக்கும் மீட்பர் ஒபாமாவா?


நன்றி: ஆனந்த விகடன்.

குமுதம் டாட் காமில் தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாட்டு உரை.

ஏகனின் திருப்பெயரால்...



குமுதம் டாட் காமில் தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாட்டு வீடியோக்கள் மற்றும் மௌலவி பி.ஜெ. அவர்களின் உரை.