|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, July 31, 2007

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

Bismillah...

இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் மேல் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று 'முஸ்லிம்கள் அனைவரும் அன்னிய நாட்டவர்'. இதில் ஐந்து சதம் கூட உண்மையில்லை என்று சொன்னாலும் குறிப்பிட்ட சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். இப்படி கூப்பாடு போடுபவர்களின் வரலாறை நாம் புரட்டினால் அந்த மக்களே வரலாற்று ரீதியாக இந்நாட்டுக்கு அன்னியராகிறார்கள். சரி தலைப்புக்கு வருவோம்.

அன்றைய முகலாயர்கள் இந்தியாவை சுமார் எண்ணூறு வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவிலேயே தங்கி இந்நாட்டு மக்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இருந்தும் இஸ்லாமியர் அன்னிய தேசத்தவர் என்ற குரல் எப்போதாவது ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.

முகலாயர்களையும், கேரளக் கரையோரம் வந்த ஒரு சில அரபுகளையும் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவரும் முன்னால் இந்துக்களே! இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப் பட்டும் தீண்டாமையிலிருந்து விடுபடவும் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட இந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இந்த முகலாயர்களில் கூட ஒரு சில அரசர்கள் இந்நாட்டு பெண்களை மணமுடித்து பாரத நாட்டு பிரஜைகளான வரலாறை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நான் படித்த அந்த ஒரு சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

**********************************

இந்து இளவரசியை மணந்த அக்பர்!

முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.

க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48

ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.

Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.

******************************************

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

********************************************

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.

டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.

ஐம்பது வயதைத் தாண்டிய நிலையில்.....

ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.

ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.

இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339அரசியல் வேறு மதம் வேறு!

ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80

இது போன்று தன் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒளரங்கஜேப் இந்துக்களைக் கொடுமை படுத்தினார் என்று எழுதுவது நேர்மையான வாதம் தானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.எனது தேசத்து ஏழைகளுக்கு......

ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு 'எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு 'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்'

டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

நம்நாட்டை எந்த அளவு நேசித்திருந்தால் இத்தகைய வார்த்தை ஒளரங்கஜேப்பின் வாயிலிருந்து வந்திருக்கும்? இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிக்கிறேன் இறைவன் நாட்டம் இருப்பின்.

********************************************

சுப்ரமணிய பாரதி!

'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'

6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.

Thanks...
சுவனப்பிரியன்.

Monday, July 30, 2007

பௌத்த பிக்குமார்களுடன் இஸ்லாத்தை குறித்த கலந்துரையாடல்

Bismillah...கடந்த ஜுன் மாதம் குருநாதல் மாவட்டத்திலுள்ள தல்கஸ்பிடிய எனும் ஊரில் அமைந்துள்ள மஸ்ஜித் ஜமாமிஉத் தவ்ஹீத் பள்ளிவாசலில் பௌத்த பிக்குமார்களுடன் இஸ்லாத்தை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது

இதில் இலங்கை மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பிக்குமார்கள் கலந்து கொண்டனர். இஸ்லாம் குறித்து பிக்குமார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சகோ அஸாத், சகோ ஜினான், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் வஸ்னி ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தின் தல்கஸ்பிடிய கிளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. தூய இஸ்லாத்தை பௌத்த பிக்குமார்கள் தெரிந்து கொள்ள இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியாக அமைந்தது குறிப்பிடதக்கது
Thanks..www.tntj.net

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் - (PART-1)

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள் ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான்: குர்ஆன்2:208

அல்லாஹ் கூறும் மேற்கானும் திருமறை வசனம் கூறும் எச்சரிக்கை அறிவிப்பை ஒருப் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டதனால் இன்று மற்ற சமுதாயங்களை விட முஸ்லிம் சமுதாயத்தில் தீமைகள் மிகைத்து விட்டது.

குடியிருப்புகளை மேடானப் பகுதிக்கு மாற்றிக் கொள்வார்கள்.
அரசு தரப்பில் ஒரு அறிவிப்பு வரும் எவ்வாறெனில், தாழ்வானப் பகுதிகளில் குடியியிருப்போர் மேடானப் பகுதிகளுக்கு உங்கள் குடியிருப்பை மாற்றிக்கொள்ளுங்கள் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அறிவிப்பார்கள். இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் மிண்ணல் வேகத்தில் தங்களது குடியிருப்புகளை மேடானப் பகுதிக்கு மாற்றிக் கொள்வோம். கடல் கொந்தளித்து வேறு ஒரு பகுதியின் குடியிருப்புகளை தாக்கி அங்குள்ளவர்களை சுருட்டிக் கொண்டு சென்று விடும். சில நேரம் அவ்வறிவிப்பு சரியாகவும் அமைந்து விடும். இவ்வறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் ஏன் இவ்வாறு அசுர வேகத்தில் செயல்பட்டு தமது குடியிருப்பை மாற்றிக் கொள்கிறோம் ? அரசு தரப்பில் வெளியிடுகின்ற இதுபோன்ற அறிக்கைகள் பெரும்பாலும் சரியாக அமைந்து விடும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணமாகும்.

அவ்வாறு நம்புவதற்கு ஒரு காரணமும் உண்டு வானிலை ஆராய்ச்சிக்கென அரசு ஒருக் குழுவை நியமித்து அதற்கு சம்பளம் கொடுத்து அரசு பணியாளர்களாக நிரந்தரமாக நியமித்திருப்பார்கள் அவர்கள் துல்லியமாக ஆராய்ந்து தரப்படுகின்ற தகவல்களின் அடிப்படையில் அரசு அறிவிப்பதால் அதை நம்பிவிடுகிறோம் அதனால் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பல லட்சங்களை கொட்டி வடிவமைக்கப்பட்ட பங்களாக்களை உதறி தள்ளி விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒருசில நிமிடங்களில் இடம் பெயர்ந்து கொண்டு ஓடி விடுகிறோம்.

எந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தளவுக்கு ஓடுகிறோமோ அந்த உயிர் நமது உடலின் மீது ஏவப்பட்டதற்கும், குறிப்பிட்ட தவனையில் மீண்டும் அதை பிரித்து விடுவதற்கும் அதிகாரம் படைத்த ஏக இறைவன்; ஷைத்தானுடைய அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான் என்றுக் கூறியதை எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டோம்.

ஷைத்தானின் சபதம்
அல்லாஹ் மனித சமுதாயத்தைப் படைக்க எண்ணி அதனடிப்படையில் முதல்மனிதர் ஆதம் (அலை) அவர்களை சிருஷ்டித்தான் அவர்களை சிருஷ்டித்து முடித்தப்பின் அவருக்கு இப்லீஸை (ஷைத்தானை) சாஷ்டாங்கம் செய்ய ஏவினான் அதற்கு ஷைத்தான் மறுத்து விடுகிறான். அல்லாஹ்வுடைய கட்டளை மறுக்கப்பட்டதால் அல்லாஹ் ஷைத்தான் மீது கோபம் கொண்டு அங்கிருந்து வெளியேறும்படி கூறிவிடுகிறான். ஆவன் அங்கிருந்து வெளிNறுவதற்கு முன் அல்லாஹ்விடம் ''என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 15:39 . என்றுக் கூறுகிறான் அதற்கு அல்லாஹ் ''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான். 15:42 . நிச்சயமாக (உன்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். 15:43

மேற்கனானும் அல்லாஹ்வுக்கும், ஷைத்தானுக்குமிடையே நடந்த பகிரங்க உரையாடலை அல்லாஹ் தன்னுடைய தூதர் மூலமாக உலக மக்கள் அனைவருக்கும அறிவித்து விடுகிறான் இவ்வாறு அறிவிப்பதற்கு என்ன காரணம் ? மனிதனே உனக்கு சாஷ்டாங்கம் செய்யச் சொன்னதால் என்னை எதிர்த்தான், எதிர்தததோடல்லாமல் உன்னுடைய மொத்த வழித் தோன்றலையும் வழி கெடுப்பதாக கூறுகிறான் சுதாரித்துக்கொள் என்பதாகும்.

பெற்ற மகனே மீறும் பொழுது ?
உதாரணத்திற்கு உங்களில் ஒருவர் அல்லாஹ்வை பின்பற்றியொழுகக் கூடியவராகவும் அத்துடன் மக்களை நன்மையை ஏவி , தீமையை தடுக்கும் அரும் பணியில் ஈடுபடும் அழைப்பாளராகவும் இருக்கிறீர்கள். ஒருநாள் உங்கள் ஊரில் பகிரங்கமான வழிகேட்டில் ஈடுபடும் ஒருவரிடம் உபதேசம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் உபதேசம் செய்யப்படுபவர் உங்களுடைய உபதேசத்தை புறக்கனிப்பதுடன் எனது வழியில் உனது மகனையும் ஈடுபடுத்திக் காட்டுகிறேன் என்று சபதம் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் ? ஓடோடி வந்து தனது மகனிடம் நடந்தவைகளை எடுத்துச்சொல்லி மேல்படி வழிகேடனுடைய இடத்திற்கு அறவே செல்லாதே என்றும் கூறுகிறீர்கள் சரி என்று ஏற்றுக் கொண்ட உங்களது மகன் ஒருநாள் அவனுடன் இஸ்லாம் தடைசெய்த ஒரு ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் கண்ணுற்றால் என்ன செய்வீர்கள் ?

அவன் மீது கோபம் வருமா ? வராதா ?
வரும் !
ஏன் வருகிறது ?

பெற்றோம் வளர்த்தோம் என்கிற உரிமையின் காரணத்தால் உங்களுக்கு கோபம் வருகிறது அதுவும் அவனுக்கு உயிர் கொடுத்து இவ்வுலகுக்கு வருவதற்கு நீங்கள் காரணமாக இருக்கவில்லை அல்லாஹ்வே காரணமாவான் தந்தை – மகன் என்ற உறவின் காரணத்தால் அவன் மீது உங்களுக்கு சாட்டப்பட்ட பொறுப்பின் காரணத்தால் உங்களுக்கு கோபம் வருகிறது அதனால் அவனின் மீது அத்து மீறுவீர்கள் அதிலும் குறிப்பாக மேல்படி வழிகேடன் உங்களிடம் செய்த சபதத்தை நீங்கள் உங்கள் மகனிடம் சொல்லிக் காட்டி இருக்க வில்லை என்றால் உங்களுக்கு அவ்வளவு கோபம் வராது விபரம் தெரியாமல் போய் அவனுடைய சதிவலையில் வீழ்ந்து விட்டான் அதனால் அவனை அந்த வழிகேடனின்; சதி வலையிலிருந்து மீட்டெடுத்து விடுவோம் என்று நினைத்து அவனுடைய பிடியிலிருந்து அவனை வெளிக்கொண்டு வர முயற்சிப்பீர்கள், ஆனால் இங்கு நிலமை அவ்வாறில்லை அவனை வழிகெடுத்தவன் உங்களிடமே சொல்லியும் விடுகிறான் நீங்களும் அதை மறைத்து வைக்காமல் வெளிப்படையாக கூறியும் விடுகிறீர்கள் உங்களிடமிருந்து செவியுற்றப் பிறகு அவனுடன் இவனை வழிகேட்டில் இருக்கும் போது காண்கிறீர்கள் இதனால் உங்களுடைய கோபம் உங்கள் மகன் மீது நீங்கள் தந்தை என்பதாலும் நீங்களே உலகில் அவனது பொறுப்பாளி என்பதாலும் இரட்டிப்பாகி விடுகிறது.

...நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். 11:12. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து படைப்புகளின் மீது மாபெரும் பொறுப்பாளனாகிய ஏக இறைவன் மனித இனத்தை படைத்து மற்ற எல்லா ஜீவராசிகளையும் விட மனித இனத்தை ஒழுங்குப படுத்தி, அழகான உருவமாக ஆக்கி அவர்கள் சுகமாக வாழ்வதற்காக இப்பிரபஞ்சம் உருவாக்கப்பட்டு, அதில் அவர்கள் புசித்து களைப்பாறுவதற்காக தாவரவியல் ஏற்படுத்தி, மன அமைதி பெறுவதற்காக ஆணிலிருந்தே பெண்ணைப் படைத்து ஆணிலிருந்து படைக்கப்பட்ட பெண்ணை அவன் மணம் கவருவதற்காக அவனை விட இவளை அழகாக்கி அவளை இவனுக்கு துனையமக்கிக்கொடுத்த ஏக இறைவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள், என்றுக் கூறியதை ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொள்ளாத காரணத்தால் அல்லாஹ்வுடைய கோபம் மனித சமுதாயத்தின் மீது இறங்கி அழிவை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர ஷைத்தான் இறைவனிடம் கூறியவிதம் பெரும்பாலான மக்களை வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறான்.
ஆனால் ஒருக் கூட்டத்தாரிடம் மட்டும் இவனுடைய பாச்சா பலிக்கமால் வெருண்டோடினான் இவனை அவர்கள் ஓட ஓட விரட்டினார்கள்.

யார் அந்தக் கூட்டம் ?

எதனால் அவர்களைக் கண்டு இவன் ஓடினான் ?

இவனை அவர்கள் விரட்டி அடிப்பதற்கு எது ஆயுதமாக இருந்தது ?

இன்று அது நம்மிடம் இருக்கிறதா ? இல்லையா ?

அல்லாஹ் நாடினால் அடுத்து எழுதுவோம்.

மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

இஸ்லாம் என்னை கவர்ந்தது - ராஜா (எ) ராஜா முஹம்மத்.

Bismillah...

இஸ்லாமிய கொள்கைகளையும், அதன் சித்தாந்தங்களையும் வென்றெடுக்க முடியாத மேற்கத்திய நாடுகளும் , நமது உள்ளூர் சங்க்பரிவாரங்களும் நாளொரு மேனி பொழுதொரு வன்னமுமாக இஸ்லாத்தின் மீது களங்கத்தையும், முஸ்லிம்களை பயங்கரவாதியாகவும் சித்தரிக்க பல வகைகளிலும் முயற்சித்து வருகின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பிற சமுதாய மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விடக்கூடாது என்பதுவே முதன்மையான காரணமாக இருக்கிறது.

ஆனால் பூமியில் விதைக்கப்பட்ட விதை விடைத்து வெளியே வருவது போல் சத்தியம் வெளி வந்து கொண்டேதான் இருக்கிறது. பல்வேறு கடவுட் கொள்கைகளை கொண்ட மாற்று மத சகோதரர்கள் முன்பை விடவும் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்டு தங்களை இஸ்லாத்தில் இணைத்த வண்ணமிருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சிகளில் ஒன்றாக கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2007) அன்று சவுதி அரேபியா, ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அலுவலகத்தில் ஒரு ஹிந்து சகோதரர் இஸ்லாத்தை ஏற்றதாக அறிவித்தார். தான் இஸ்லாத்தை ஏற்று 3 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், ராஜா என்ற என்னுடைய பெயரை ராஜா முஹம்மத் என்று மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் இஸ்லாம் என்னை ஏன் கவர்ந்தது என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று கூடியிருந்த மக்களிடையே தன்னார்வத்துடன் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்.
கடவுளை வணங்கச் செல்லும் பொழுது மற்ற மதங்களைவிடவும் இஸ்லாம் தூய்மையாக இருக்கச் சொல்கிறது என்று சில ஒப்பீடுகளுடன் விளக்கினார். இந்த தூய்மை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்களிடையே நிலவும் சகோதரத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

என்னுடன் பணிபுரியும் முஸ்லிம் சகோதரர்கள் விண் டி.வியில் ஒளிப்பரப்படும் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சியை காணும் பொழுது நானும் அதை தொடர்ந்து பார்வையிட நேர்ந்தது என்றும் , என்னுள் இஸ்லாமிய சிந்தனை தழைத்தோங்க பிள்ளையார் சுழி இட்டவர்களில் முதன்மையானவராக சகோதரர் பி.ஜே அவர்களை இறைவன் ஆக்கியிருக்கிறான் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக கூடியிருந்த மக்களை நோக்கி நீங்கள் அனைவரும் எனக்கொரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டவர், என் பெற்றோர்கள் என்னை வளர்க்க அரும்பாடு பட்டவர்கள் என்றும், அவர்களும் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று என்னுடன் வாழ நீங்கள் அனைவரும் அந்த வல்ல இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கூடியிருந்த அனைவரும் நிச்சயமாக செய்வோம் என்று சொல்வது போல் தலையசைத்து இன்ஷh அல்லாஹ் என்று ஒருமித்து கூறினார்கள்.

ஒருவேளை எனது பெற்றோர்கள் நான் ஏற்ற இந்த ஓரிறைக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் என்னை இஸ்லாம் என்ன செய்யச் சொல்கிறது என்று ஒரு கேள்வியையும் எழுப்பினார்.

அதற்கு இலங்கையை சேர்ந்த மௌலவி ஹாபிஸ் அவர்கள் அளித்த விளக்கத்தின் சுருக்கம் கீழ்கண்டவாறு அமைந்திருந்தது.

நீங்கள் வினவும் நிலை போன்றதொரு சூழல் அன்றைய காலத்தில் ஒரு சில நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. அந்த தருணங்களில், ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக நிர்பந்தப்படுத்தும் போதும், மார்க்கத்தில் இல்லாத விசயங்களை செய்யச் சொல்லி தூண்டும் போது மட்டும் அவர்களுக்கு (பெற்றோர்களுக்கு) மாறு செய்யச் சொல்லி இஸ்லாம் கூறுகிறது. மேலும் , அவர்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்காதிருந்தாலும் கூட அவர்களை நல்லமுறையில் பராமரிக்கச் சொல்கிறது. அவர்களுக்கு சிறப்பாக பணிவிடை செய்யச் சொல்லியும் இஸ்லாம் கட்டளையிடுகிறது என்றும் விளக்கினார். மேலும் , பல கருத்து பரிமாற்றங்களை செய்த சகோதரர் ராஜா முஹம்மது அனைவருக்கும் சலாம் சொல்லி மகிழ்ச்சியாக விடைபெற்றார்.

விடைபெற்று வெளியே செல்ல ஆயத்தமான அந்த சகோதரரை சில கேள்விகள் கேட்க நாம் அனுகினோம். பொதுவாக சவுதி அரேபியாவிற்கு வரும் மாற்று மத சகோதரர்களை பணம் கொடுத்து மனம் மாற்றி முஸ்லிமாக மாற்றுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த குற்றச்சாட்டுப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டோம். உங்களுக்கு யாரும் பண ஆசை காட்டியதால்தான் நீங்கள் இஸ்லாத்தை தழுவினீர்களா என்று நாம் கேட்டது போல் கருதிய அந்த சகோதரர் உடனடியாக இல்லை, கிடையவே கிடையாது என்று கூறினார். அப்படி யாரும் என்னை அனுகியிருந்தால் நான் இஸ்லாத்தை தழுவியிருக்க மாட்டேன் என்றும் சொன்னார்.

முஸ்லிம்கள் தங்களது இறைவன் கட்டளையிட்டபடி அறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் இஸ்லாத்தை எடுத்தியம்பினாலும், மனித உள்ளத்தினுள் அந்த ஓரிறைக் கொள்கையை கொண்டு சேர்க்கும் பொருப்பு மனிதர்களுடையதல்ல. அது இறைவனால் மட்டுமே முடியும் , அப்படி இறைவனால் அருள் செய்யப்பட்டவர்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள், நெஞ்சுரத்தோடு காணப்படுவார்கள், தீர்க்கமாக பேசுவார்கள். சகோதரர் ராஜா முஹம்மத் அவர்களும் உறுதியாகவும், நெஞ்சுரத்தோடும், தீர்க்கமாகவுமே காணப்பட்டார். புகழுக்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே.

கண்டதும், கேட்டதும்...
முத்துப்பேட்டை பரக்கத்அலி ரியாத்திலிருந்து...

இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு

Bismillah...
இந்து மதம்
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் 'ஹிந்து' என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (ஊய்ஸ்ரீஹ்ஸ்ரீப்ர்ல்ங்க்ண்ஹ) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?
ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்' ஆவர்.

இஸ்லாம்லிஒர் அறிமுகம்
''ஸலாம்' எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்
இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹமது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

இந்துமத விசுவாசத்தின் தூண்கள்
இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூற வியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை
ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே அவரே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கம் உள்ள வேறுபாடுகள்
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. ஊஸ்ங்ழ்ஹ் ற்ட்ண்ய்ஞ் ண்ள் ஏர்க்'ள் எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் ஊஸ்ங்ழ்ஹ் ற்ட்ண்ய்ஞ் ண்ள் ஏர்க் எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் 'ள் ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் 'ள்) 'ள் நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்' எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்
பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்'.

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.
உபநிஷங்கள்:

உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்
1. சந்தோக்ய உபநிஷம்

சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (ஈட்ஹல்ற்ங்ழ்லி6) இரண்டாவது காண்டத்தில் (நங்ஸ்ரீற்ண்ர்ய்லி2) வசனம் ஒன்று (யங்ழ்ள்ங் சர்.1) இவ்வாறு கூறுகிறது.
''ஏகம் எவதித்யம்'

''இரண்டல்லாத அவன் ஒருவனே லி ஒருவன் மட்டுமே'

உபநிஷங்களின் தொகுப்பு லி எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது

(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)

''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா' அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே'
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்லி15ல் பக்கம் 745)
குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
குர்ஆன் கூறுகிறது

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
Thanks...islamkalvi

Sunday, July 29, 2007

இருப்பது மணல் திட்டு தான், பாலம் அல்ல நாஸா உறுதி- சேது திட்ட இயக்குனர் தகவல்

Bismillah...


சேது கால்வாய் தோண்டப்படும் ஆதாம் பால பகுதியில் இருப்பது வெறும் மணல் திட்டுக்கள் தான் எனவும், அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதும் இல்லை எனவும் நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக இத் திட்டத்தின் இயக்குனர் ரகுபதி கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டப் பணி நடந்து வரும் இடத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் (ராமர் பாலம்) இருப்பதாகவும் அதை நாஸா உறுதி செய்துள்ளதாகவும் விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றன.

இதனால் அதை இடிக்க பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய சேது சமுத்திரத் திட்ட இயக்குனர் ரகுபதி,

சேது சமுத்திரத் திட்டப் பணி நடந்து வரும் இடத்தில் இருப்பது வெறும் மணல் திட்டு தான் என நாஸா தெரிவித்துள்ளது.

அது மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக நாஸாவே சேது சமுத்திரத் திட்ட கமிஷனுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது என்றார்.
ராமர் பாலம் குறித்து சில வாரங்களுக்குமுன்பு மத்தியஅமைச்சர் வெளியிட்ட செய்தி

ராமேஸ்வரம்-இலங்கை இடையே மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் உண்மை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் நிரூபித்தால் என பதவியை ராஜினாமா செய்ய தயார் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.


மதுரை வந்த மத்திய அமைச்சர் பாலு, மதுரை- திருச்சி 4 வழி சாலை பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சேது சமுத்திர திட்டம் நடைபெறும் இடத்தில் மணல் குன்றுகள் மட்டுமே உள்ளன. புவியியல்ரீதியில் சொன்னால் இதற்கு தம்போலோஸ் என்று பெயர். நிலவியல் மாற்றங்களால் இயற்கையாக உருவான மணல் குன்றுகள் இவை.இதுவரை ேசது திட்டத்தில் 15 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு அகழ்வுப் பணி முடிவடைந்துள்ளது. எதிர்ப்பு மற்றும் போராட்டங்களினால் சேது சமுத்திர திட்டம் தடைபடாது. 2008 ஆண்டுக்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டு விடும். உமா பாரதி மத்திய கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது உத்தரவின் பேரில் ஆடம் பாலம் (ராமர் பாலம்) குறித்து புவியியல் ஆய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக ஆடம் பாலத்தை 200 மீட்டர் ஆழத்துக்கு வெட்டி சோதனையிட்டனர்.


அப்போது இந்தப் பாலம் நில மாற்றங்களால், இயற்கையாக உருவாகி 7 லட்சம் ஆண்டுகள் ஆவது தெரியவந்தது. ஆனால் இராமயணத்தில் ராமன் 17 லட்சம் ஆண்டுக்கு முன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ராமர் எவ்வாறு அந்த பாலத்தை கட்டியிருக்க முடியும் என பாலு கேள்வி எழுப்பினார்.மதசார்பற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடாது என்றார்.

Thanks...thatstamil

Saturday, July 28, 2007

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை

Bismillah.......


பொங்கலையொட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.கோபாலகிருஷ்ணன், தருண் சட்டர்ஜி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில், ஜல்லிக்கட்டின்போது விலங்குகளை பல துன்பங்களுக்கு ஆளாக்குகின்றனர். அவற்றை சாராயத்தை குடிக்க வைத்து கூட்டத்துக்குள் விரட்டுகின்றனர். அங்கு அந்த மாடுகள் மீது பாயும் கூட்டத்தினர் அதை பல வகையிலும் துன்புறுத்துகின்றனர். பலர் மிளகாய் பொடி போன்றவற்றை மாட்டின் கண் மீது தூவுகின்றனர். இதனால் உடல்ரீதியில் அந்த மாடு பெரும் சிரமத்தை சந்திக்கிறது. பல நேரங்களில் மாடுகள் இறந்து போவதும் உண்டு என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சிகளில் தேவையில்லாத மனித உயிர்ப் பலிகளும் நடக்கின்றன. 2007ம் ஆண்டில் பாலமேடு (அலங்காநல்லூர்) ஜல்லிக்கட்டில் 65 பேர் படுகாயமடைந்தனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 35 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியாகிவிட்டார் என்றும் தனது மனுவில் விலங்குகள் நல வாரியம் தெரிவித்திருந்தது.
மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் பேசுகையில், மிருகவதை தடுப்புச் சட்டத்தின்படி இதுபோன்ற ஜல்லிக்கட்டுகள் தடுக்கப்பட வேண்டும். இதற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தடை விதித்து தவறு செய்துவிட்டது என்றார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தனர். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.
ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ்!
லண்டன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக அந் நாட்டு போலீசார் அறிவித்துள்ளது. லண்டனில் கார் குண்டு வைத்தது மற்றும் கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்கியது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்
ஆனால், டாக்டர் ஹனீப்புக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய போலீசார் அவர் மீது தொடர்ந்து பல வழக்குகளை போட்டு ஜாமீனில் வர விடாமல் தடுத்தனர். இதையடுத்து மத்திய அரசும் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக் கொண்டதன் பேரில், ஹனீப் விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய போலீசார் தாங்கள் ஜோடித்த ஆவணங்களை கைவிட்டனர். இந் நிலையில் இப்போது டாக்டர் ஹனீப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதனால் கடந்த 3 வார காலமாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹனீப் விடுதலையாகவுள்ளார்.
டாக்டர் ஹனீப் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்று ஹனீப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனைவி மகிழ்ச்சி: இதன் மூலம் உண்மை வென்று விட்டதாக ஹனீப்பின் மனைவி பிர்தெளஸ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், உண்மையும் நியாயமும் வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், ஹனீப்பை நாடு கடத்தும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா கைவிட வேண்டும். அவர் இன்னும் 2 அல்லது மூன்று நாட்களில் பெங்களூர் வந்துவிடுவார் என நம்புகிறேன். பிரதமருக்கும் வெளியுறவுத்துறைக்கும் என் நன்றிகள்.
அதே போல ஆஸ்திரேலிய மனித உரிமை அமைப்புகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார். வீட்டுக் காவல்: டாக்டர் ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டாலும், அவருடைய விசா ரத்தாகியிருப்பதால் அவர் சிறையை விட்டு வெளியில் வந்தாலும் ஆஸ்திரேலியாவுக்குள் சுதந்திரமாக நடமாட முடியாது. அவருக்கு மீண்டும் விசா கொடுக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அவர் முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். அவருக்கு விசா வழங்கப்படும் அல்லது அவர் நாடு கடத்தப்படுவாரா என்று தெரியவில்லை.
இந்திய அரசு கோரிக்கை: இந் நிலையில் ரத்து செய்யப்பட்ட ஹனீப்பின் விசாவை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு இந்தியா கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Thanks ...thatstamil

Thursday, July 26, 2007

இந்து மதம் கூறும் இஸ்லாம்

Bismillah..
மனித இனத்தைப் பற்றி இஸ்லாம் கூறுகையில்..

மனிதர்களே.. நிச்சயமாக நாமே உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் உங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிமுகப் படுத்திக் கொள்வ தற்காகவே உங்களைப் பல்வேறு பிரிவினராகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியம் வாய்ந்தவர் (கடவுளுக்கு) அதிகம் அஞ்சி வாழ்பவர்தான். (அல்குர்ஆன்.)

இஸ்லாம் என்பது இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக உலகம்தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. காலப் போக்கில் அதில் மாசு படிந்த போது அவ்வப்போது தீர்க்க தரிசிகள் இறைத் தூதர்கள் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களில் இறுதியானவர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள். சிலர் அரேபியாவிலே இஸ்லாம் தோன்றியதால் அது அரபுகளுக்குரியது என்பர். அவ்வாறல்ல.. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இஸ்லாம்.

அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே கடவுள் தான், அதுதான் அல்லாஹ். முஹம்மது நபியவர்கள் அவனது தூதராவார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதே இஸ்லாம் எனப்படுகின்றது. அல்லாஹ் என்பது அரபு நாட்டுக்கடவுளல்ல. தமிமில் கடவுளென்றும் ஆங்கிலத்தில் God என்றும் உர்துவில் "குதா" என்றும் வட மொழியில் "பகவான்" என்றும் கூறுவது போல் அரபியில் ஒரே இறைவனுக்கு அல்லாஹ் என்கின்றோம்.

உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது.

உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதுவே நாளடைவில் பல்வேறு பிரிவுகளாக மாறி ஒன்றை ஒன்று எதிர்க்குமளவுக்கு குரோதத்தையும், விரோதத்தையும் உண்டு பண்ணி விட்டது. அவற்றைக் களைந்து இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை எதுவென அறிந்திருத்தல் ஒவ்வொரு இந்துவுக்கும் அவசியமாகும்.

இஸ்லாம் அதன் கடவுள் கொள்கை பற்றிக் குறிப்பிடுகையில்..

இந்த முழு அண்ட சராசரங்களுக்கும் ஒரே கடவுள்தான் இருக்க வேண்டும், கடவுள் என்பவர் அனைத்து வகையிலும் ஒப்பற்ற சக்தி பெற்ற வல்லவராக இருக்க வேண்டும். அவருக்கு எத்தகைய உலக தேவைகளும் இருக்கக் கூடாது. அவருக்குத் தூக்கமோ மறதியோ அலுப்போ ஓய்வோ தேவைப்படக் கூடாது. அவருக்குப் பிறப்போ இறப்போ இருக்கக் கூடாது. ஏனெனில் கடவுளுக்கு இவை உண்டு என வைத்துக் கொண்டால் - கடவுள் பிறப்பதற்கு முன் இவ்வுலகத்தைப் பரிபாலித்தவர் யார்? கடவுள் இறந்து விட்டதன் பின் மக்களைக் காப்பவர் யார் போன்ற வினாக்களுக்கு விடை காண முடியாத நிலை ஏற்படும். ஒரு கடவுள் இறந்த பின் வேறு கடவுள் கவனித்துக் கொள்ளும் என்று சொன்னால் பல கடவுள்கள் உண்டென ஏற்க வேண்டும். இவ்வாறு ஏற்றால் ஒவ்வொரு கடவுளுக்கும் குறிப்பிட்ட சில அதிகாரங்களே உண்டு என ஏற்க வேண்டும். எனவே கடவுள் அனைத்து சக்தி மிக்கவர் எனும் விடயம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது.

இஸ்லாம் முன் வைக்கும் இந்தக் கடவுள் கொள்கையினையே இந்து மதத்தின் மூல நூற்களிலும், முற்கால இந்துமத குருக்கள் பலரும் குறிப்பிட்டிருப்பதுதான் இங்கு ஆச்சரியான உண்மை. இதை நான் சொல்ல வில்லை. இந்து மத வேத மூல நூற்களில் காணப் படுபவைகளையே எடுத்துக் காட்டுகின்றேன். ஆனால் இப்போது அதிகமானோருக்கு இவ்வுண்மைகள் தெரியாது. பிற்காலத்தில் வந்த குருக்களும் பூசாரிகளும் இவற்றைப் பற்றியெல்லாம் மக்களுக்குக் கூறுவதை விடுத்து ஒரு சில ஆச்சாரங்கள், பொருள் புரியாத மந்திரங்களை மாத்திரம் உச்சரித்து அவையே இந்து மதம் என்று மக்கள் எண்ணும் அளவுக்கு, தாங்கள் சொல்வது தான் இந்து மத போதனை என மக்களை எண்ண வைத்து இந்து மதத்தின் மூல மத நூற்களை யாரும் படிக்க முடியாத படியும் செய்து விட்டார்கள்.

இந்து மதத்தின் நான்கு வேதங்களாகிய 'ரிக், சாம, அதர்வண, யஜூர்' வேதங்கள் காலப் போக்கில் காணமற் போய் விட்டன. இந்துக்களின் மனுதர்மம் 'மனு' என்பவருக்குரியது. அவரது தர்ம சூத்திரங்கள் ஒரு லட்சமாகும். மனுதர்ம சாத்திரமாக அது வடிவெடுத்த போது அது 2683 தான் இன்று நடைமுறையில் 1928 தான் உள்ளன. ஆக நடைமுறைக்கு ஒவ்வாத மனுதர்ம சாஸ்த்திரமும் காலப் போக்கில் கரைந்து போயிற்று. இந்து மதமும் பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டன.

இதோ இந்து மதத்தின் மூலத்தில் கடவுள் கொள்கை எப்படி என்று பாருங்கள்..

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..
(- சிவ வாக்கிய சுவாமிகள்)

ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர்.

அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை ஏகத்துவப் பெயர்களால் அழைத்தாலும் எங்குமே அனேக மக்கள் சிலை வைத்து இறைவனுக்கு இணை கற்பித்து விடுகின்றனர். ஆளுக்கொரு தெய்வம் ஏற்படுத்தி கல்லையெல்லாம் கடவுளாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து சிதறி விட்டனர்.

அல்குர்ஆன் சொல்கின்றது..
'அல்லாஹ் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றும் நிலைத்திருப்பவன். அவனை உறக்கமோ சிறு தூக்கமோ பீடிக்கா..' (அல்குர்ஆன் 2-255)

நபியே கூறுவீராக.. அல்லாஹ் அவன் ஒருவனே.. அவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்)பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல் குர்ஆன்)

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..

அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(- அல்லோப நிஸத்.)

பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். சிவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.

இஸ்லாத்தைப் பற்றி இவர்கள்..

-பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை கிடையாது. - அம்பேத்கார்.

-இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து. - பெரியார்

-பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கைமதம். - டாக்டர் ராதா கிருஷ்ணன்.

-ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான். குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள். (காந்திஜி)

-முஹம்மது போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது. ஒரே இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு விடை தரவில்லை. -அண்ணாத் துரை


எனதன்பின் இந்து நண்பர்களே..

இந்து வேத ஆதி மூல நூல்களில் கடவுளைப் பற்றி கடவுளின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் இன்றைய இந்துக்களில் பல கடவுள் கொள்கை வழிபாட்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிறைந்துள்ளன என்பதை இந்து வேத மூல நூற்களை வாசிக்கும் போது நீங்களாகவே முடிவு செய்து கொள்வீர்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அதுபோலவே இந்து மூல நூற்களில் கடவுளைப் பற்றிக் கூறுப்பட்ட அனைத்து தன்மைகளும் இஸ்லாத்தின் கடவுள் கோற்பாட்டுக்கு ஒத்துப் போவதையும் நீங்கள் உணர முடியும்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..


'ஆயிரம் தெய்வங்கள் உண்டென அலையும் அறிவிலிகாள்' எனப் பாரதியார் சாடுகின்றார்.


இஸ்லாத்தைப் பற்றி சில வரிகள்..

-இஸ்லாத்தில் ஒரே கடவுள்தான். அவன்தான் அல்லாஹ்.

-இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோருக்கு மத்தியில் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. இன, குல வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக உண்ணலாம், வணங்கலாம். இதில் உயர் சாதி, கீழ் சாதி எனும் சாதிப் பெருமைகளோ, இன,நிற வேறுபாடுகளோ கிடையாது. இஸ்லாத்தில் தீண்டாமை என்பதற்கு இடமே இல்லை. இஸ்லாம் அதை முற்றாக ஒழித்துக் கட்டிவிட்டது.

-இஸ்லாம் எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் மக்களுக்கும் பொருத்தமான சட்டதிட்டங்களையே கடைப்பிடிக்கின்றது. பகுத்தறிவுக்கொவ்வாத, புத்தி ஏற்றுக் கொள்ளாத புராணங்களோ இதிகாசங்களோ இதில் இல்லை.

-இஸ்லாத்திலேயே பெண்களுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப் பட்டிருக்கின்றன. பெண்களுக்கு மறு மண உரிமையுண்டு. கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டையேறுவதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை.

-இஸ்லாத்தில் கடவுளை வணங்கக் காணிக்கை செலுத்த வேண்டியதில்லை.

இன்னும் எத்தனையோ சிறப்பம்சங்களில் இஸ்லாம் ஏனைய மதங்களை விட்டும் வேறுபடுகின்றது.


முடிவாக..

இஸ்லாமிய மார்க்கம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இஸ்லாம் உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. முஸ்லிம்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இஸ்லாமியப் போதனைகளுக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இஸ்லாத்தைக் குறைகூற முடியாது.
இஸ்லாம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்..

இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது. (அல்குர்ஆன்)

எனவே இஸ்லாம் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென்று யாரையும் பலவந்தப் படுத்துவதில்லை. எனினும் அதிலுள்ள நற்பயன்களை உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.

அன்புள்ள நன்பர்களே,

உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். எந்த மார்க்கம் சிறந்தது. எந்த மார்க்கம் அனைத்து விதத்திலும் நடைமுறைச் சாத்தியம் மிக்கது, ஒவ்வொரு மனிதனும் சுய கௌரவத்துடன் உயர்சாதி- கீழ் சாதி, ஆண்டான் அடிமை போன்ற பிறப்பியல் வேறுபாடுகளை மறந்து சமத்துவத்துடன் வாழ எம்மதம் வழி வகுக்கின்றது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் நாடினால் உண்மை உங்களுக்கும் புலப்படலாம். நீங்களும் நேரிய,சீரிய ஓரு மார்க்கத்தை- சிறந்த வாழ்க்கைத் திட்டத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளலாம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

இது சம்பந்தமாக மேலதிக தெளிவுகளைப் பெற விரும்புவோர் ஜூபைலிலுள்ள வழிகாட்டல் நிலைத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
Thanks
- முஹம்மது ஜலீல் மதனி

ராஜீவ் காந்தி படுகொலையைத் தடுத்திருக்க முடியும்

Bismillah...முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, விடுதலைப் புலிகள் குறித்த முக்கியத் தகவல்களை ஜெர்மனி உளவுத்துறை இந்திய உளவுப் பிரிவுக்கு (ஐபி) அளித்தது. ஆனால் அதை அது சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதை நாம் உரிய முறையில் கவனித்திருந்தால் ராஜீவ் காந்தி படுகொலையைத் தடுத்திருக்க முடியும் என்று முன்னாள் 'ரா' உயர் அதிகாரி பி.ராமன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உளவு விவகாரங்களைக் கவனிப்பதற்காக ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (ரா) என்ற உளவுப் பிரிவு உள்ளது. உள்நாட்டு உளவுப் பணிகளை இன்டலிஜென்ஸ் பீரோ (ஐபி) கவனித்து வருகிறது.

ரா அமைப்பின் கூடுதல் செயலாளராக பணியாற்றியவர் ராமன்.

'The Kaoboys of RAW - Down the Memory Lane' என்ற நூலை தற்போது எழுதியுள்ளார் ராமன். இந்த நூலில் ரா , ஐபியின் பல்வேறு தோல்விகள், குளறுபடிகளைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தவிர்த்திருக்க முடியும் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபியின் குளறுபடியால்தான் ராஜீவ் காந்தி கொலையைத் தடுக்க முடியாமல் போய் விட்டதாகவும் ராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது நூலில் ராமன் கூறியிருக்கும் சில முக்கிய அம்சங்களின் சாராம்சம்:

ராஜீவ் காந்தி கொலை:

ஜெர்மனி உளவுப் பிரிவிலிருந்து விடுதலைப் புலிகளின் புதிய சதித் திட்டம் குறித்து ரா அமைப்புக்கு தகவல்கள் வந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நிபுணர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதாக அந்தத் தகவல் கூறியது. உடனடியாக இந்தத் தகவலை ஐபியிடம் ரா வழங்கியது.

ஆனால் ஐபி அந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் தரவில்லை. கிடப்பில் போட்டு விட்டது. அந்த அமைப்பு சற்று கவனம் செலுத்தியிருந்தால், ஜெர்மனி உளவுப் பிரிவிடமிருந்து கூடுதல் தகவல்களை சேகரித்திருக்க முடியும். அதன் மூலம் ராஜீவ் காந்தியைக் கொல்லும் சதித் திட்டம் குறித்தும் தெரிய வந்திருக்கும். படுகொலையையும் தவிர்த்திருக்க முடியும்.

ஐபியின் தோல்வியால்தான் ராஜீவ் காந்தி படுகொலையை நம்மால் தடுக்க முடியாமல் போய் விட்டது.

வழக்கமாக இதுபோன்ற முக்கியத் தகவல்கள் ஐபிக்கு வழங்கப்படும்போது அவற்றை பரிசீலிப்பார்கள். அந்த வேலையைக் கூட அவர்கள் செய்யாமல் அலட்சியமாக இருந்தனர்.

சென்னைக்கு அடிக்கடி ஒரு விடுதலைப் புலிகள் அமைப்பின் வெடிகுண்டு நிபுணர் வருவதாக கிடைத்துள்ள தகவலை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என நான் யோசனை கூறினேன். ஆனால் கேட்கக் கூட ஐபி அதிகாரிகள் தயாராக இல்லை.

ஐபி அதிகாரிகள் தீவிரம் காட்டியிருந்தால் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த முழு விவரமும் நமக்குக் கிடைத்திருக்கும்.

1971ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தபோது இதுபோன்ற ஒரு முக்கியச் செய்தியை ரா கொடுத்தது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், இந்திய விமானப்படையின் மேற்குப் பிராந்தியம் மீதான தாக்குதலை தடுக்க முடிந்தது.

பிரதமர் அலுவலகத்தில் ஊடுறுவிய பிரெஞ்சு உளவுப் பிரிவு:

பிரெஞ்சு நாட்டு உளவுப் பிரிவு 1980களில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்குள் ஊடுறுவி பல முக்கிய உளவுத் தகவல்களை திருடியது.

பிரதமர் அலுவலகத்திற்குள் எப்படியோ ஊடுறுவிய பிரெஞ்சு உளவுப் பிரிவு, ரா மற்றும் ஐபி ஆகிய உளவுப் பிரிவுகள், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்த பல முக்கிய உளவுத் தகவல்களை திருடியது.

பின்னர் இவற்றை அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவுகளுடன் பகிர்ந்து கொண்டது.

பல முக்கிய உளவுத் தகவல்களை இதுபோல பிரெஞ்சு உளவுப் பிரிவு திருடியுள்ளது.

அந்த சமயத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அமெரிக்காவுக்கு எதிரான போக்குக் கொண்டவர் என்பதால், இந்தியா தொடர்பான பல முக்கிய உளவுத் தகவல்களை அமெரிக்காவின் சிஐஏ பல்வேறு வழிகளில் பெற்று வந்தது.

1987ம் ஆண்டுதான் சிஐஏவின் இந்த திருட்டுத்தனத்தை ஐபி கண்டுபிடித்தது. சென்னையில் உள்ள ரா அலுவலகத்திலிருந்துதான் ரகசியத் தகவல்கள் கசிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பல முக்கியத் தகவல்கள் குறிப்பாக இலங்கை தொடர்பான பல முக்கியத் தகவல்கள், இலங்கை விவகாரத்தில் ராவின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சிஐஏ ரகசியமாக பெற்று வந்ததும் தெரிய வந்தது.

அந்த சமயத்தில் நமது உளவுப் பிரிவின் பலம் மிகவும் பலவீனமானதாக இருந்தது. உதாரணமாக, ஐ.நா. உதவியிலான ஒரு திட்டத்தின் கீழ் பணியாற்ற வந்த ஒரு ஆஸ்திரேலியப் பெண்மணி, டெல்லியில் பணியில் இருந்த 'ரா' அதிகாரி ஒருவருடன் வசித்து வந்தார். இதை கண்டுபிடிக்கவே ராவுக்கு பல காலம் பிடித்தது. அந்த அளவுக்கு நமது உளவுப் பிரிவு பலவீனமாக இருந்தது.

போபர்ஸ் ஊழல் வழக்கு:

போபர்ஸ் ஊழல் வழக்கில் சில மூத்த சிபிஐ அதிகாரிகளின் நம்பகத்தன்மையும், விசாரணை போக்கும் சந்தேகத்திற்குட்பட்டதாக இருந்தது.

போபர்ஸ் விசாரணையில் ஈடுபட்டிருந்த சில மூத்த சிபிஐ அதிகாரிகள், புகாருக்கு ஆளான இந்துஜா சகோதரர்களுடன் மதிய விருந்தில் கலந்து கொண்டதை நான் அறிவேன். ஒருமுரை இருமுறை அல்ல பலமுறை இவர்கள் இந்துஜா சகோதரர்களுடன் விருந்துண்டுள்ளனர். இந்த விருந்துகள் எல்லாம் போபர்ஸ் ஊழல் சர்ச்சை வெடித்து பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் நடந்தது.

இந்த ஊழல் விவகாரத்தின் உண்மைகளை மறைக்க முன்னாள் பிரமர் ராஜீவ் காந்தி சிபிஐக்கு நெருக்கடி கொடுத்தார். இந்த முயற்சிகளில் அவர் நேரடியாகவே இறங்கினார். போபர்ஸ் ஊழல் விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தவரான முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு எதிராக இந்த விவகாரத்தைத் திருப்பவும் அவர் தீவிரமாக முயன்றார்.

ராஜீவ் காந்தியின் வலியுறுத்தல் காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சங்கரானந்த் தலைமையில் கூட்டு நாடாளுமன்றக் குழு போடப்பட்டது.

இந்தக் குழு விசாரணை அதிகாரிகளுடன் ஜெனீவா, லண்டன் ஆகிய நகரங்களுக்குச் சென்றது. அங்கு போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் லஞ்சம் கைமாறியது குறித்து ஒன்றுமே தெரியாத அல்லது வெகு சுமாரான தகவல்களைத் தெரிந்தவர்களை மட்டுமே இந்தக் குழு சந்தித்தது. இந்த விவகாரம் குறித்து முழு விவரமும் தெரிந்தவர்களை இந்தக் குழு சந்திக்கவே இல்லை.

பிரதமர் அலுவலகத்தில் இருந்த சில அதிகாரிகளின் துணையுடன் ராஜீவ் காந்தியே இந்த மறைப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த அதிகாரிகள் தற்போதும் கூட பிரதமர் அலுவலகத்தில் உள்ளனர். இவர்களில் சிலர் ஐபியில் உள்ளனர், சிலர் வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஊழல் விவகாரம் குறித்து உண்மையான முறையில் சிபிஐ விசாரணை நடத்தவில்லை.

இந்துஜா சகோதரர்களின் பெயர் தீவிரமாக அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில் மூத்த சிபிஐ அதிகாரிகள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். அதை துண்டித்துக் கொள்ள அவர்கள் முன்வரவில்லை. இந்துஜா சகோதரர்களுடன் சேர்ந்து விருந்துகளிலும் கலந்து கொண்டார்கள்.

அதை விட முக்கியமாக ஜெனீவாவுக்கு விசாரணைக்காகச் சென்ற சிபிஐ அதிகாரிகள் பிரகாஷ் இந்துஜா, ஸ்ரீசந்த் இந்துஜா ஆகியோரோடு ஜெனீவா ஹோட்டலில் விருந்து சாப்பிட்டதை நான் நேரிலேயே பார்த்தேன்.

பாக். அதிபர் அலுலகத்தில் உளவு பார்த்த ரா:

பாகிஸ்தான் அதிபராக ஜெனரல் யாஹ்யா கான் இருந்தபோது அவரது அலுவலகத்தில் ரா உளவு பார்த்தது.

1971ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் யாஹ்யா கான் தீட்டிய ஒரு மிகப் பெரும் திட்டம் ராவுக்குத் தெரிய வந்தது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் மேற்குப் பிராந்திய விமானப்படை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அந்தத் தகவல் தெரிவித்தது.

அதை உடனடியாக தெரிவித்து இந்திய விமானப்படையை உஷார்படுத்தினோம். ஆனால் பாகிஸ்தான் விமானப்படை எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. இதையடுத்து நாங்கள் கூறிய உளவுத் தகவலை நிராகரித்தது இந்திய விமானப்படை. இருப்பினும் டிசம்பர் 4ம் தேதி வரை உஷார் நிலையில் இருந்தது விமானப்படை.

டிசம்பர் 3ம் தேதி இரவு (அன்றுதான் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது) பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்தத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. நாங்கள் சொன்ன தகவலால் மேற்குப் பிராந்திய தலைமையகம் பெரும் தாக்குதலிலிருந்து தப்பியது.

சிஐஏவிடம் பயிற்சி:

ரா அதிகாரிகளும், சிஐஏ உளவுப் பிரிவினரும் பல கட்டங்களில் இணைந்து செயல்பட்டுள்ளனர். உண்மையில் பல ரா அதிகாரிகளுக்கு சிஐஏதான் பயிற்சி அளித்தது. இங்கிலாந்தின் எம்ஐ6 உளவு அமைப்பும் ரா அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

இப்படிப் பல பரபரப்பு தகவல்களைக் கொண்டதாக ராமனின் புத்தகம் உள்ளது. அணல் பறக்கும் பல உண்மைகளை, குற்றச்சாட்டுக்களை, ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார் ராமன்.

இந்தியப் பிரதமர் அலுவலகத்திலேயே பிரெஞ்சு உளவுப் பிரிவு உளவு பார்த்ததாக அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரதமர் அலுவலகத்தில் ஒரு கருப்பு ஆடு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த கருப்பு ஆடு, இந்திய அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசியல் தலைவரான ககர் அயூப் கான் ஒரு புதிய தகவலை வெளியிட்டார். 60களில் இந்திய பாதுகாப்பு ரகசியங்களை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் பாகிஸ்தானுக்கு வழங்கியதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதை விடப் பயங்கரமான ரகசியங்களை ராமன் தனது நூலில் விலாவாரியாக விவரித்துள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற பரபரப்புத் தகவல்கள் அடங்கிய நூலை முன்னாள் ரா அதிகாரி ஒருவர் வெளியிட்டார். ஆனால் அந்த நூலை மத்திய அரசு தடை செய்து விட்டது. இந்த மாத இறுதியில் ராமனின் நூல் வெளியாகவுள்ளது. இந்த நூலுக்கும் தடை வருமா என்று தெரியவில்லை.

இந்த நூல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கம் கூறுகையில், இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் கற்பனையானவை. புத்தகத்தை விற்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நமது உளவுப் பிரிவு வலுவாகவே உள்ளது என்பதுதான் என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் ராமன் நூலில் கூறப்பட்டுள்ள தகவல்களை நிராகரித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

ராமனைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் எங்களுக்குத் தெரியும். எனவே அந்த நூலில் உள்ளது குறித்து கருத்துக் கூற தேவையில்லை என்றார்.
Thanks...thatstamil

இஸ்லாமிய மாக்கத்தில் பிரிவுகள் ?

Bismillah...
இஸ்லாமிய மாக்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது முதல் தவறாகும். முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்க வேண்டும். இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லையென்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.

ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.
வர்ணம் அடிப்படையிலான பிரிவுகள் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் கிடைக்கக் கூடியவை. முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகள் மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மூலம் ஏற்பட்டவை.

தலித் சமுதாயத்தில் பிறந்தவர் ஒருக்காலும் அவர் என்ன தான் முயன்றாலும் ஐயராக முடியாது. முதலியாராக முடியாது. செட்டியாராக முடியாது. ஆனால் ஷியாப் பிரிவில் இருந்தவர் அக்கொள்கையிலிருந்து விலகி எந்த நிமிடத்திலும் சன்னி பிரிவில் சேர்ந்து விட முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்தவர் அப்பிரிவில் அவருக்கு விருப்பமில்லா விட்டால் எந்த நிமிடமும் ஷியாப் பிரிவில் சேர முடியும்.

ஷியாப் பிரிவினர் இறந்தவர்களின் சமாதிகளை வழிபடுவார்கள். சன்னி பிரிவினர் அவ்வாறு வழிபட மாட்டார்கள். இது போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல. இது வர்ணாசிரமத்துக்கும் முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு.

மேலும் வர்ணாசிரம தர்மம் என்பது தீண்டாமையை நிலை நாட்டுவதற்காகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். சன்னிகள் ஷியாக்களைத் தீண்டாக்தகாதவர்கள் என்று கருதுவதில்லை. அது போல் ஷியாக்களும் கருதுவதில்லை. தவறான கொள்கையில் உள்ளனர் என்று ஒருவர் மற்றவரைப் பற்றி கருதுகிறார்களே தவிர பிறப்பால் தாமே உயர்ந்தவர்கள் என்று எந்தப் பிரிவும் கருதுவதில்லை.
அடுத்து முஸ்லிம்கள் ஏன் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற கேள்விக்கு வருவோம். பொதுவாக மனிதர்களிடையே எப்படியெல்லாம் சண்டைகள் நடக்கின்றன என்பதைக் கவனித்தால் இக்கேள்விக்கு சரியான விடை காணலாம்.

ஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன. ஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன. ஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன. ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன.

ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே எற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.

இன்னும் சொல்வதானால் இவர்களிடையே சண்டைகள் நிலவிடக் காரணம் இஸ்லாத்தின் போதனைகளை அவர்கள் கைவிட்டது தான்.
Thanks...onlinepj

அற்புதமான விருந்தோம்பல்


நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அன்புமிக்க தோழர்களும் அகழ்ப் போரின் போது, தற்காப்புக்காக வேண்டி அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கருங்கற்பாறை ஒன்று தென்பட்டது. உடனே, நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து : 'இதோ, கருங்கற்பாறை தென்படுகிறது என்றார்கள். அப்போது,பசி தாங்க முடியாமல் நபியவர்கள் தமது வயிற்றில் கற்களை கட்டியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மூன்று நாட்களாக உண்ண எந்த உணவும் இல்லாமல்,கடுமையான பசியிலே இருந்தார்கள். அந்த நிலையிலும் நபியவர்கள் கோடாறியை எடுத்து,அப்பாறை மீது அடித்தார்கள். அப்பாறை தூள் தூளாகியது.

அவ்வேளை, ஜாபிர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து,வீட்டுக்குச் சென்று வர அனுமதி கேட்டார்கள். நபியவர்களும் அனுமதி வழங்கினார்கள். அவர், தனது வீட்டுக்குச் சென்று தனது மனைவியிடத்தில்: நபியவர்கள் மிகுந்த பசியோடு இருப்பதைக் கண்டேன். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவி;ல்லை. அவர்களுக்கு விருந்தளிக்க ஏதாவது உணவு நமது வீட்டில் உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு மனைவி: எம்மிடத்தில் கோதுமை மாவும் ஓர் ஆடும் உள்ளது என்றார்கள். உடனே, ஜாபிர் (ரழி) அவர்கள்: ஆட்டை அறுத்து, உரித்து கறி சமைக்க அடுப்பில் வைத்து விட்டு, கோதுமையை அரைத்து மாவாக்கினார். ஆட்டு இறைச்சிக் கறி அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் போது, மனைவியிடம் ரொட்டி சுடுமாறு சொல்லி விட்டு, நபியவர்களிடம் விரைவாக வந்தார்கள்.;

'அல்லாஹ்வின் தூதரே! எனது வீட்டில் குறைந்த அளவு உணவு உள்ளது. எனவே, உங்களுடன் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு எனது வீட்டுக்கு வாருங்கள்' என்று கூறினார். எந்தளவு உணவு உள்ளது? என நபியவர்கள் கேட்டார்கள். ஜாபிர் (ரழி) அவர்கள் உணவின் அளவைக் கூறினார்கள்.

அதற்கு நபியவர்கள்: 'நன்று, உணவு அதிகமாகவே உள்ளது. நான் வரும் வரை ஆட்டுக் கறி உள்ள சட்டியை அடுப்பை விட்டு இறக்க வேண்டாம். ரொட்டி சுடும் ஓட்டையும் அடுப்பை விட்டு இறக்க வேண்டாம் என்று உங்கள் மiவியிடம் சென்று கூறிவிடவும்' என்று ஜாபிர் (ரழி) அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

நபியவர்கள், தம்மோடு அகழ் யுத்தத்திற்கு வந்திருந்த அனைவரையும் ஜாபிர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்துக்கொண்டு சென்றார்கள். இதைக் கண்ட ஜாபிர் (ரழி) அவர்கள் தனது மனைவியிடம்: நீ இன்று வசமாக மாட்டிக்கொண்டாய்! நபியவர்கள் தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருகின்றார்கள் என்று கூறினார். அதற்கு மனைவி: உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உணவின் அளவைப் பற்றி கேட்டார்களா? என்று விசாரித்தார். அதற்கு ஜாபிர் (ரழி) அவர்கள்: ஆம்! என்றார்கள்.

அவ்வேளை, நபியவர்கள் தனது தோழர்களுடன்வீட்டுக்கு வந்துவிட்டார்கள். தனது தோழர்கள் அனைவரையும் பார்த்து, நீங்கள் முண்டியடித்துக் கொள்ளாமல், அமைதியாக உள்ளே பிரவேசியுங்கள் என்று கூறினார்கள்.

பின்னர், நபியவர்கள் சமையலறைக்குள் நுழைந்தார்கள். ரொட்டிகளை துண்டு துண்டாக ஆக்கினார்கள். அதில் இறைச்சித் துண்டுகளை வைத்தார்கள். சட்டியிலிருந்து இறைச்சியை எடுத்ததும் அதை மூடிவிடுவார்கள். அடுப்பை அணையாமல் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு, ஆட்டு இறைச்சிக் கறியையும், ரொட்டியையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது தோழர்களுக்குப் பரிமாறினார்கள். அவர்கள் அனைவரும் வயிறு நிரம்பும் வரை சாப்பிட்டார்கள். நபியவர்கள்உண்ட பின்னரும் சிறிதளவு உணவு மீதம் இருந்தது. அதனை ஜாபிர் (ரழி) குடும்பத்தினர் உண்டனர்.

(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

Wednesday, July 25, 2007

தபால் நிலையத்தில் தலித்துகளுக்குத் தடை!!!

Bismillah..
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தபால் நிலையத்தில், தலித் சமூகத்தினர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தலித்கள் தபால் நிலையை சேவையை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மதுக்கரை அருகே உள்ளது திருமலையம்பாளையம் கிராமம். இங்கு தபால் நிலையம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த தபால் நிலையத்திற்குள் தலித் சமுதாயத்தினர் நுழைய முடியாது. காரணம் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதித்தது அரசோ அல்லது தபால் நிலைய அதிகாரியோ அல்ல. அந்தத் தபால் நிலையம் அமைந்துள்ள கட்டடடத்தின் உரிமையாளர்தான் இந்தத் தடையை விதித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தபால் நிலையம், ஒரு தனியாரின் இல்ல வளாகத்திற்குள் உள்ளது. அவரது வீட்டைத் தாண்டித்தான் தபால் நிலையத்திற்கு போக வேண்டும். அந்த வீட்டு உரிமையாளர் 'உயர்ஜாதி'யாம்.

இதன் காரணமாக தலித்துக்கள் தபால் நிலையத்திற்குள் வரக் கூடாது. வீட்டு வாசலுக்கு வெளியே நின்று கொண்டுதான் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அந்த வீட்டு உரிமையாளர் உத்தரவு போட்டுள்ளார்.

இதன் காரணமாக தலித் சமுதாயத்தினர் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து தபால் நிலையம் செல்ல முடியவில்லை. மாறாக வீட்டு வாசலிலேயே நின்று உரத்த குரலில் ஊழியர்களைக் கூப்பிட்டு போஸ்ட் கார்டும், ஸ்டாம்பும் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து உரியவர்களிடம் பெரியார் திராவிட கழகத்தினர் புகார் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்ட மேலிடங்களுக்கு தற்போது பெரியார் திராவிட கழகத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் வருகிற 25ம் தேதி தபால் நிலையத்திற்குள் தலித்களுடன் அத்துமீறி நுழையும் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
Thanks..thatstamil

எல்லா மதங்களும் ஒன்றுதானா?

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் மிக மிக பலவீனமான வாதமாகும். எல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள்! ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்தால் உயர்ந்தவராவும் மற்றொரு குலத்தில் பிறந்தால் தாழ்ந்தவனாகவும் மனிதன் ஆகிவிடுவதாக இன்னொரு மதம் கூறுகிறது. இரண்டுமே நல்லது என்று எப்படிக் கூற முடியும்?

வேதத்தை அனைவரும் கற்க வேண்டும் என ஒரு மதம் கூறுகிறது! இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது? முரண்பட்ட இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியுமா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஒரு மதம் சொல்கிறது. குலத்தால் உயர்ந்தவர் ஒரு தவறு செய்தால் இலேசான தண்டனையும் அதே குற்றத்தைக் குலத்தால் தாழ்ந்தவர் செய்தால் கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென மற்றொரு மதம் கூறுகிறது. இவ்விரண்டுமே நல்லவைதாமா?
கல்யாணம், கருமாதி, பேய், பிசாசு என்றெல்லாம் மதகுருமார்களுக்கத் தட்சிணை வழங்க வேண்டுமென ஒரு மதம் போதிக்கிறது. இன்னொரு மதம் எல்லா விதமான புரோகிதத்தையும் அடியோடு ஒழிக்கச் சொல்கிறது. கடவுளை வழிபடுவதில் நெருங்குவதில் ஒரு மதம் பாரபட்சம் காட்டுவதில்லை. கடவுளின் சன்னிதியைத் தாழ்ந்த குலத்தோர் நெருங்கக் கூட இயலாது என்று இன்னொரு மதம் கூறுகிறது.

உண்ணுதல், பருகுதல், மலம், ஜலம் கழித்தல், ஆசை, கோபம் போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாகவோ, கடவுளின் தன்மை பெற்றவராகவோ ஆக முடியாது என்று கூறுகிறது ஒரு மதம். மனிதனையும் தெய்வமாக்கி அவன் காலில் சக மனிதனை விழச் சொல்கிறது மற்றொரு மதம்.

விதவைக்கு விவாகமில்லை. பெண்களுக்க சொத்துரிமை இல்லை. கணவனே கண்கண்ட தெய்வம். கணவனை இழந்தவள் உடன்கட்டை ஏற வேண்டும். பெண்ணுக்கு விருப்பமின்றிக் கன்னித்தானம் செய்யலாம் என்றெல்லாம் ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் எதிரான கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

கடவுள் ஒருவனே! அவன் தேவையற்றவன். அவனுக்குத் தாய் தந்தை இல்லை. மனைவி மக்களில்லை. உறக்கமில்லை. ஓய்வு இல்லை என்று ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் மாற்றுக் கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

விபச்சாரம், ஓரினப்புணர்ச்சி, சூது, திருட்டு போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், லஞ்சம் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எல்லாத் தீமைகளையும் ஒரு மதம் கடுமையாக எதிர்க்கின்றது. இன்னொரு மதம் இந்தத் தீமைகளைக் கடவுள்களே செய்துள்ளதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறது.

ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்ததே அவரவர்க்கு என்று ஒரு மதம் கூறுகிறது. மற்றொரு மதமோ எல்லார் பாவத்தையும் ஒருவரே சுமக்க முடியும் எனக் கூறுகிறது. கடவுள் ஒருவனே என்று ஒரு மதம் கூறுகிறது. கடவுள் மூவர் என்றும் கடவுள்கள் பலர் என்றும் மற்றொரு மதம் கூறுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் முரண்பாடுகள்! முரண்பட்ட இவை அனைத்தும் நல்லவைதாம் என்பதை அறிவுடையோர் எப்படி ஏற்க இயலும் என்று கேளுங்கள்! அவர்கள் உண்மையை உணரக் கூடும்.
எல்லா நதிகளும் கடலில் கலப்பது உண்மைதான். நதிகளுக்கு பகுத்தறிவு இல்லை. அவை சங்கமிக்கும் கடலுக்கும் பகுத்தறிவு இல்லை. கூவத்துக்கம் சாக்கடைக்கும் கடலில் கலப்பதில் வெட்கமில்லை. கடலுக்கும் அதை உணரும் அறிவு இல்லை. அறிவும் சிந்திக்கும் திறனுமில்லாத நதிகள் போன்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களாகிய நமக்கு அறிவு இருக்கிறது. நாம் யாரிடம் சேரப்போகிறோமோ அந்த இறைவனுக்கும் அறிவு இருக்கிறது. நம்மை விட அதிகமாக! கடல் சாக்கடைகளைக் கூட ஏற்றுக் கொள்வது போல் சாக்கடை மனிதர்களைக் கடவுள் ஏற்க மாட்டான் என்று கூறுங்கள்!

எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றது என்பதால் யாரேனும் கூவத்தில் (சாக்கடையில்) குளிப்பார்களா? உண்ணக் கூடிய அனைத்தும் மலமாகத் தான் போகின்றது என்பதால் எதை வேண்டுமானாலும் மனிதர்கள் உண்பார்களா? குடிப்பவை அனைத்தும் சிறுநீராகத் தான் மாறப்போகின்றது என்பதற்காக சாக்கடையை யாரேனும் குடிப்பார்களா? என்றும் அவர்களிடம் கேளுங்கள்.

எதை உண்பது? எதைக் குடிப்பது? எதை அணிவது? எதில் குளிப்பது என்ற விஷயத்திலெல்லாம் அறிவைப் பயன்படுத்தும் மனிதன் எந்தக் கொள்கையைத் தேர்வு செய்வது என்பதில் அறிவைச் செலுத்த வேண்டாமா? அறிவும் உணர்வுமற்ற நதிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத் தானே தாழ்த்துவது என்ன நியாயம் என்றும் கேளுங்கள்!

ஒரு ஊருக்குப் பலவழிகள் இருக்கலாம். இதை அறிவு படைத்த யாரும் மறுக்க முடியாது. இங்கே எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது பிரச்சினையில்லை. எந்த ஊருக்குச் செல்வது என்பதே பிரச்சினை. வடக்கே உள்ள ஊரை நினைத்துக் கொண்டு தெற்கில் உள்ள ஊரை நோக்கிச் சென்றால் நினைத்துச் சென்ற ஊரை அடைய முடியாது.

சமத்துவம், பகுத்தறிவு, நேர்மை, ஒழுக்கம், சாந்தி ஆகிய ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனிதன், தீண்டாமை, மூட நம்பிக்கை, அநீதி, ஒழுக்கக் கேடு, குழப்பம் ஆகிய ஊர்களை நோக்கிப் பயணம் செய்ய முடியுமா? பயணம் செய்தால் விரும்பிய ஊர்களை அடைய முடியுமா?

எல்லா மதங்களும் ஒரே சட்டத்தை ஒரே அடிப்படைக் கொள்கையை வேறு வேறு வார்த்தையால் போதித்தால் ஒரு ஊருக்குப் பல வழிகள் என்று கூற முடியும். கொள்கை, சட்டம், அடிப்படை ஆகியவை வெவ்வேறாக இருக்கும் போது ஒரே ஊர் என்று எப்படிக் கூற முடியும்?
Thanks..onlinepj

Tuesday, July 24, 2007

சிதைக்கபடும் சிசுக்கள்

Bismillah...
இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒரிசாவில் 30 பிளாஸ்டிக் பைகளில், பெண் சிசுக்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் உடல் பாகங்கள் என தாம் சந்தேகப்படுவதை கண்டெடுத்துள்ளதாக அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு 90 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நயாகர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் வறண்ட கிணற்றில் இந்தப் பைகள் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பைகளில் பெரும்பாலும் மண்டை ஓடுகளும், எலும்புகளும் காணப்பட்டன. இது தொடர்பில் அந்த தனியார் மருத்துவமனையின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்னர், அந்த பகுதிக்கு அருகிலிருக்கும் ஒரு சிதிலமடைந்த இடத்தில் ஏழு பெண் சிசுக்களின் பாகங்கள் பாலித்தீன் பைகளில் கண்டெடுக்கப்பட்ட பிறகு, இந்தக் கிணற்றிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரிசா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
thanks....bbctamil

ஆஸி. அரசுக்கு எதிர்க் கட்சி கடும் கண்டனம்:

Bismillah...
மெல்போர்ன்: இந்திய டாக்டர் முகம்மது ஹனீப் விவகாரத்தில் உலக சமுதாயத்தின் கேலிப் பொருளாக ஆஸ்திரேலிய காவல்துறை மாறியுள்ளதாக அந்நாட்டிந் முக்கியக் கட்சியான கிரீன் பார்ட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. கிரீன் கட்சியின் எம்.பி. கெர்ரி நெட்டில் கூறுகையில், இந்திய டாக்டர் முகம்மது ஹனீப் வழக்கைக் கையாண்ட விதத்தின் மூலம் உலக சமுதாயத்தின் கேலிப் பொருளாக ஆஸ்திரேலிய காவல்துறை மாறியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த கேவலமான நிலைக்கு ஆஸ்திரேலிய அரசுதான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள பிரதமர் ஜான் ஹோவர்ட் கொடுத்த நெருக்குதல் காரணமாகவே ஆஸ்திரேலிய காவல்துறை டாக்டர் ஹனீப்பின் பெயரையும், புகழையும் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசும், காவல்துறையும் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். தேவையில்லாமல் அவர் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. எதற்காக டாக்டர் ஹனீப்பை 12 நாட்கள் எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாமல் போலீஸார் காவலில் வைத்திருந்தனர் என்று தெரியவில்லை. அரசின் நெருக்குதலே இதற்கு முக்கியக் காரணமாக இருக்க முடியும். எப்படியாவது டாக்டர் ஹனீப்பை தீவிரவாதி என்று காட்டி விட வேண்டும் என்று அரசு கொடுத்த நெருக்குதல் காரணமாகவே ஆஸ்திரேலிய காவல்துறை இவ்வாறு நடந்து கொண்டுள்ளது. ஆனால் உண்மையை அவர்கள் சுலபமாக மறந்து விட்டார்கள். மறைக்க முயன்று தோற்றுள்ளனர். இதனால் பல தவறுகளை அடுத்தடுத்து செய்து கேவலப்பட்டு நிற்கிறார்கள்.
ஆஸ்திரேலிய காவல்துறையின் செயல்பாடுகளைப் பார்த்து உலக சமுதாயம் மட்டுமல்லாமல் இங்கிலாந்து போலீஸாரும் கூட கேலி செய்யும் நிலை உருவாகியுள்ளது. டாக்டர் ஹனீப்பின் விசாவை ரத்து செய்த முடிவை குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவரும் அரசின் நெருக்குதலால்தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார் அவர்.
மகளின் போட்டோவை பார்த்து அழுத ஹனீப்:இந்நிலையில் ஹனீப்பை பார்க்க அவரது உறவினரான் இம்ரான் சித்திக் மூன்று நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றார். இம்ரான் ஆஸ்திரேலிய சிறையில் ஹனீப்பை சந்தித்தார். அப்போது அவர் ஹனீப்-பிர்தெளஸ் தம்பதியினருக்கு சமீபத்தில் பிறந்த மகளின் போட்டோவை ஹனீப்பிடம் காண்பித்தார். அதைப் பார்த்த டாக்டர் ஹனீப் கண் கலங்கி அழுததாக இம்ரான் சித்திக் தெரிவித்துள்ளார். இந்திய அரசு டாக்டர் ஹனீப்பை விடுதலை செய்ய முழு முயற்சிகளை செய்து வருவதாகவும் சித்திக் கூறினார்.
Thanks..thatstamil

கட்சி மாறி ஓட்டு-பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!

Bismillah...
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களித்த 5 பாஜக எம்எல்ஏக்களை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஆங்காங்கே கட்சி மாறி வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழகத்திலும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் மாறி ஓட்டு போட்டனர். அதே போல ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இருவர் பிரதீபாவுக்கு வாக்களித்தனர்.

குஜராத்தில் தான் நிலைமை மிக மோசம். அங்கு முதல்வர் நரேந்திர மோடியின் அரசியலை கண்டிக்கும் வகையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பிரதீபாவுக்கு வாக்களித்தனர்.

இந் நிலையில் இவர்களில் 5 எம்எல்ஏக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Thanks...thatstamil

Monday, July 23, 2007

கடவுளின் பெயரால் அக்கிரமங்கள்

Bismillah...
மேலோட்டமாகப் பார்த்தாலே அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தென்படுகின்ற பல காயங்கள் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப் படுகின்றன. மதங்கள் அர்த்தமற்றவை என்ற முடிவுக்கு வருவதற்கு இது போன்ற காயங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.

கடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற நடை முறையைச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள். கடவுளின் பெயரால் இது நியாயப்படுத்தப் படுவதையும் பார்க்கிறார்கள்.

கட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுமை அளிக்கப்படுவதையும், தர்ம தசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் காண்கிறார்கள். முக்கியப் பிரமுகர்கள் வரும் போது பவட்டம் கட்டி தனி மயாதையும், முதல் மயாதையும் செய்யப்படுவதையும் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களில் மட்டுமின்றி ஊலும், தெருவிலும் கூட சிலர் புழு பூச்சிகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.

* தொட்டாலும், பட்டாலும் தீட்டு
* சில வீதிகளில் நடமாடத் தடை
* தேநீர்க் கடைகளில் தனித் தனிக் குவளைகள்
* செருப்பணியத் தடை
* பெண்கள் ஜாக்கெட் அணியத் தடை

என்றெல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யும் அக்கிரமங்களையும், இதை மதத்தின் பெயராலேயே, கடவுளின் பெயராலேயே செய்வதையும் காண்கின்றனர். ''கடவுள் இப்படித் தான் மனிதர்களைப் படைத்திருக்கிறான். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்'' என்று வேத நூல்கள் கூறுவதையும் காண்கின்றனர். இந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி விட்டு 'மதங்கள் அர்த்தமுள்ளவை' என்று கூறுவதைச் சிந்தனையாளர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் இஸ்லாம் இதைக் கடுமையாக எதிர்க்கின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை)அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(திருக்குர்ஆன் 49:13)

இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

மனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது. ஒரு தாய் தந்தைக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவனை 'பிறப்பால் உயர்ந்தவன்' என்றும் மற்றவனை 'பிறப்பால் தாழ்ந்தவன்' என்றும் எவரும் கூற மாட்டோம். இத்தகைய சகோதரத்துவம் தான் மனித குலத்துக்கு மத்தியில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
''மனிதன் தனது முயற்சியால் அடையக் கூடிய கல்வி, பதவி, ஆற்றல், திறமை, நற்பண்புகள், நன்னடத்தை போன்றவற்றால் உயர்ந்தவனாக ஆகலாமே தவிர, குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் உயர்ந்தவனாக ஆக முடியாது'' என்பதையும் மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.

இதை வெறும் வரட்டுத் தத்துவமாக மட்டும் இஸ்லாம் கூறவில்லை. 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. ''மனிதர்கள் ஆதாம் ஏவாளிலிருந்து தோன்றினார்கள்'' என்று கிறித்தவ மதமும் கூறுகிறது.
ஆனாலும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. கிறித்தவம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது. நாடார் கிறித்தவர், தலித் கிறித்தவர் என்றெல்லாம் அவர்களின் முந்தைய ஜாதியும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வும் கிறித்தவ மதத்தில் தொடர்வது போல இஸ்லாத்தில் தொடர்வதில்லை. இருவருக்கும் தனித் தனி தேவலாயங்கள் இருப்பது போல் முஸ்லிம்களிடையே இல்லை.

நாடார் முஸ்லிம், தலித் முஸ்லிம் என்பன போன்ற சொற்கள் கூட முஸ்லிம்களிடம் கிடையாது. எந்தச் சாதியைச் சேர்ந்தவன் இஸ்லாத்தை ஏற்றாலும் அவனிடம் இருந்த சாதி அந்த நிமிடமே நீங்கி விடும். அவன் முஸ்லிம் மட்டுமே.

முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக ஷியா, சன்னி என்பது போல் தங்களைப் பித்துக் காட்டினாலும் இஸ்லாம் இதை ஆதக்கவில்லை. மேலும் இந்தப் பிவுகளைச் சாதியுடன் ஒப்பிடக் கூடாது. குர்ஆனையும் நபிவழியையும் புந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இவ்வாறு பிந்துள்ளனர்.

ஷியா பிவைச் சேர்ந்த ஒருவர் சன்னி பிவில் சேர விரும்பினால் உடனே அதில் சேர முடியும். சன்னி பிவைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிவில் சேர முடியும். ஆனால் தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது. மேலும் ஷியாக்களின் பள்ளிவாசல்களில் சன்னிகள் போய்த் தொழலாம். சன்னிகளின் பள்ளிவாசல்களில் ஷியாக்கள் தொழலாம். மக்காவில் உள்ள கஃபா ஆலயத்தில் ஷியா பிவினர் உள்ளிட்ட அனைவரும் சென்று இறைவனை வழிபடுகின்றனர். மேலும் உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலும் குலம், கோத்திரம், பதவி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த முன்னுமையும் தரப்படுவதில்லை. இதை யார் வேண்டுமானாலும் கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

யார் முதலில் வருகிறாரோ அவர் தான் முதல் வசையில் நிற்பார். கடைசியாக வந்தவர் கடைசியில் நிற்பார். இதில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். குடியரசுத் தலைவர்களாக இருந்த ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹ்மத் ஆகியோர் தில்லி ஜும்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தாமதமாக வந்ததால் இடமில்லாமல் வெட்ட வெளியில் தான் தொழுதனர்.
''குடியரசுத் தலைவர் வந்து விட்டார்'' என்று ஒரு முஸ்லிம் கூடஅவர்களுக்கு முன்னுமை அளிக்க முன் வரவில்லை. குடியரசுத் தலைவரும் ''என்னை முன் வசைக்கு அனுப்புங்கள்'' என்று கேட்டதும் இல்லை. கேட்டாலும் முஸ்லிம்கள் இதை ஏற்க மாட்டார்கள்.

கடையநல்லூர் மஜித், சாதிக் பாட்சா, ரஹ்மான் கான், ராஜா முகம்மது, முகம்மது ஆசிப், அன்வர் ராஜா, உள்ளிட்ட எத்தனையோ அமைச்சர்கள் பல சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலுக்கு வந்ததுண்டு. காலியாக இருக்கும் இடத்தில் தான் அவர்கள் அமர்ந்தார்களே தவிர அவர்களுக்கு 'பராக்' சொல்லி முதல் வசையில் யாரும் அமர வைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு கேட்கவில்லை. பள்ளிவாசலும் எவருக்கும் பவட்டம் கட்டப்படுவதுமில்லை.
எனவே கடவுளின் பெயரால் அக்கிரமத்தை நியாயப்படுத்தும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை. பள்ளிவாசலுக்கு வெளியிலும் தீண்டாமையை இஸ்லாம் அறவே ஒழித்துள்ளது. ஒரு தட்டில் பலரும் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு சகோரத்துவத்தை இஸ்லாம் பேணுகிறது.
Thanks...onlinepj.com

Sunday, July 22, 2007

து. ஜனாதிபதி: காங். கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி

Bismillah...
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஹமீத் அன்சாரி போட்டியிடவுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டது.

3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் சமாஜ்வாடி எம்.பி. ரஷீத் மசூத் போட்டியிடுகிறார். நேற்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் முக்கியக் கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய தீவிர ஆலோசனை நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக கூட்டணித் தலைவர்களிடையே நடந்து வந்த ஆலோசனைகள் நேற்று முடிவு பெற்றன.
இடதுசாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் முகம்மது ஹமீது அன்சாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை காங். கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஒருஙகிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. அதில் அன்சாரியின் பெயர் இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்சாரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தகவலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முறைப்படி அறிவித்தார்.யார் இந்த முகம்மது ஹமீது அன்சாரி?

70 வயதாகும் முகம்மது ஹமீது அன்சாரி 1937ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் பின்னர் கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பிறகு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பைப் படித்தார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேறி ஐ.எப்.எஸ். அதிகாரியான பின்னர் ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தூதராகப் பணியாற்றினார்.

தற்போது தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக மட்டுமல்லாமல், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் உள்ளார். ஐ.நா. சபையில் இந்தியாவின் சார்பில் நிரந்தர உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற அன்சாரி, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

அடுத்த முக்கிய கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியும், 3வது கூட்டணியும் முஸ்லீம் வேட்பாளர்களை அறிவித்துள்ளால் பாஜகவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு முனைப் போட்டி நிலவியது. ஆனால் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படவுள்ளது.

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பார்கள், எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks...Thatstamil

Saturday, July 21, 2007

கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்

Bismillah...

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.

பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.

''மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?'' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.

நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்

நாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்

சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்

குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்

வெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்

கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்

தமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்

படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்

சிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல்

இயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்

ஆடைகளையும் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்

இன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

கருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?

''மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே? இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே?'' என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்ற விமர்சனம்.

இஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.

ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.

கன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

நூல்: புகாரி 1297, 1298, 3519

தன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.

ஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ''ஏன் இவர் நடந்து செல்கிறார்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ''நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்'' என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: புகாரி 1865, 6701.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது ''அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்'' என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அவரைப் பேசச் சொல்லுங்கள்! நிழலில் அமரச் சொல்லுங்கள்! நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும்'' என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

நூல்: புகாரி 6704

கடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.
Thanks..onlinepj

அறிவியல் அறிஞர்களின் வாக்குமூலங்கள்

Bismillah...

விஞ்ஞானிகளின் கருத்துக்களை கீழே தருகிறேன். இந்த கருத்துக்கள் யாவும்”This is the Truth” என்ற வீடியோ டேப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இனி அந்த விஞஞானிகளின் கருத்துக்களைப் பார்ப்போம்.

டாக்டர் T.V.N. பெர்சாத்!

இவர் உயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology and Reproductive Sciences at the University of Manitoba,Winnipeg,Manitoba,Canada. இவர் உயிரியல் துறையில் பணியாற்றியது 16 வருடங்கள். உயிரியல் துறையில் இவரை அறியாதவர் யாரும் இல்லை எனலாம். மேலும் இவர் அறிவியல் சம்பந்தமாக 22 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கனடா நாட்டின் மிக உயரிய விருதான ஜே.சி.பி விருதையும் பெற்றுள்ளார். இனி இவர் குர்ஆனைப் பற்றி கூறுவதைக் கேட்போம்.

'என்னைக் கேட்டால் முகமது எல்லோரையும் போல சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். அவருக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. எனவே மிகப் பெரும் இலக்கியங்களை அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில படிக்காத பாமரன் சொல்லும் ஒரு சில கருத்துக்கள் ஆச்சரியமாக அறிவியலோடு ஒத்துப் போவது எல்லா நாட்டிலும் பார்க்கும் சாதாரண நடைமுறைதான். ஆனால் ஒருவர் சொன்ன அனைத்து கருத்துகளும், அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதை நினைத்து நான் ஆச்சரியப் பட்டு போகிறேன். அவருக்கு தெய்வீகத் தன்மை இருக்க வேண்டும். அல்லது அவர் குர்ஆன் என்று சொல்வது இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

2) டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன்!

“In every one of you, all components of your creation are collected together in your mothers womb by forty days …..”

-Saheeh Muslim 2643 , Bhuhary – 3208
-Saheeh Muslim 2645

இந்த இரண்டு நபி போதனையிலும் முதல் நாற்பது நாளில் கருவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதோ அவை அனைத்தும் மிகத் துல்லியமாக விவரிக்கப் படுவதாக லீ சிம்ப்ஸன்அறிவிக்கிறார்.மருத்துவ கருத்தரங்கில் அவர் பேசும்போது :

'ஆகையால் இந்த ஹதீஸ்களும் அருமையான அறிவியலைப் பேசுகின்றன. மருத்துவம் படிக்காத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் கருவின் வளர்ச்சியை வரிசையாக பட்டியலிடுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. எனக்கு முன்னால் இங்கு காலையில் பேசியவர்களின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். கருவின் வளர்ச்சிக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அறிவியலை நடத்திச் செல்வதற்கு குர்ஆனும் ஒரு தூண்டுகோலாய் இருக்கிறது என்பதை மறுக்க முடியபது. இது போன்ற உண்மைகள் முகமது காலத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இவை அனைத்தும் இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நானும் வருகிறேன்.'

டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன் மகப்பேறு, அணுவியல் ஆகிய இரு துறைக்கும் தலைவராக பணியாற்றியவர்.மேலும் மகப்பேறு மருத்துவம், மனிதனின் ஜீன்கள் சம்பந்தமான படிப்பு, அணுவியல் போன்ற துறைகளில் பேராசிரியராக Baylor College Of Medicine, Hoston, Texas,USA யில் பணியாற்றுகிறார். Formerly, he was Professor of OB-Gyn and the chairman of the Department of OB- Gyn at the university of Tennessee, Memphis, USA. He was also the president of the American Fertility Society. He has received many awards, including the Association of Professors of Obstetrics and Gynecology Public Recognition Award in 1992.

3) டாக்டர் இ மார்ஸல் ஜான்ஸன்!

இவர் 200க்கும் அதிகமாக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1981 ல் சவூதி அரேபியா தமாமில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தனது அறிக்கையை வாசிக்கும் போது :

'குர்ஆன் கருவியலின் வெளிப்புறத்தை மட்டும் சொல்லவில்லை. கருவின் உள்ளே நடக்கும் அனைத்து படித்தரங்களையும் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், இன்றைய அறிவியல் உண்மைகளை அடித்துக் கூறுகிறது.ஒரு விஞ்ஞானி என்ற நிலையில் ஒன்றைப் பார்த்து உறுதி செய்து அதன் பிறகுதான் நம்பிக்கை வைப்பேன். மனிதனின் உடற்கூறுகளை நன்கு அறிந்தவன்.உயிரியல் துறையிலும் நன்கு தேர்ந்தவன். குர்ஆனின் மொழி பெயர்ப்பு எனக்கு அங்கிலத்தில் தரப் பட்டது. குர்ஆனிலிருந்து உதாரணங்களை நான் எடுப்பதற்கு முன் முகமதுவுடைய காலத்துக்கு நான் செல்கிறேன். என்னால் அவருடைய போதனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.குர்ஆன் முகமது நபியால் சொந்தமாக தன் கற்பனையில் சொல்லியிருக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.'

Dr e. Marshall Johnson is Professor Emeritus of Anatomy and Developmental Biology at Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania,USA. There for 22 years he was Professor of Anatomy, the chairman of the department of Anatomy, and the director of the Daniel Baugh Institute. He was also the president of the Teratology society.

4) டாக்டர் வில்லியம் ஹே!

டாக்டர் வில்லியம் ஹே கடல் அராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி.

'இந்த பழமை வாய்ந்த குர்ஆனின் உண்மைகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். இது போன்ற உண்மைகள் முகமதுக்கு எப்படி கிடைத்தது என்பது எனக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. குர்ஆனின் வரிகளை படிக்கும் போது வியப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறேன்.இந்த குர்ஆன் ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்று தான் நான் நினைக்கிறேன்.'

Dr William W.Hay is a well known marine scientist. He is professor of Geological Sciences at the University of Colorado, Boulder, Colorado,USA. He was formerly the Dean of the Rosential School of Marine and Atmospheric Science at the university of Miami,Miami, Florida.

5)டாக்டர் ஜெரால்ட் சி. ஜோரிங்கர்

'நான் சில குர்ஆனின் வசனங்களைப் படிக்கும் போது மனிதனின் உருவாக்கம் எந்த அளவு துல்லியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப் படுகிறேன்.எந்த ஒரு வேறுபாடும் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் என்னால் காண முடியவில்லை. அறிவியலையும் குர்ஆனையும் என்னால் பிரித்துப் பார்க்கவும் முடியவில்லை.அறிவியல் வார்த்தைகளைக் குர்ஆன் அழகாக கையாள்கிறது. பல வருடங்கள் சிரமப்பட்டு ஒரு அறிவியல் புத்தகத்தை ஒருவர்உண்டாக்கினால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு தோற்றத்தை குர்அன் எனக்குத் தருகிறது.

Dr. Gerald C. Goeringer is course Director and Associate Professor of Medical Embryology at the Department of cell Biology, school of Medicine, Georgetown University, Washington, DC, USA.

6) டாக்டர் யோசிஹிடே கோசாய்!

'வானவியலைப் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகளை கண்டு நான் பிரமிப்படைகிறேன். வானவியல் அறிஞர்களான எங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் இதுவரை ஆராய்ந்திருக்கிறோம். இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை எண்ணிலடங்கா! அப்படி கண்டு பிடிப்பதற்குக் கூட அரிய தொலை நோக்கு கருவிகள், அறிவியல் அறிவு போன்றவை அவசியம். இவை அனைத்தும் தனக்குத் தேவையில்லை என்பது போல் குர்ஆனின் உண்மைகள் அமைந்திருக்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல உண்மைகள் வானவியலைப் பற்றி அறிய குர்ஆன் உதவி புரியும் என்று நினைக்கிறேன்.'

Dr Yoshihide Kozai is Professor Emeritus at Tokyo University, Hongo, Tokyo,Japan, and was the Director of the National Astronomical Observatory, Mitaka, Tokyo, Japan.

7) பேராசிரியர் தேஜாதத் தேஜாசென்!

மூன்று வருடங்களுக்கு முன்பு தான் குர்ஆனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கருத்தரங்கின் மூலம் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். 1400 வருடங்களுக்கு முன்பே அனைத்து உண்மைகளும் குர்ஆனில் பதியப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன்.அறிவியலோடு எந்த வகையிலும் மோதாத ஒரு புனித நூலாக குர்ஆனைப் பார்க்கிறேன்.எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபரால் இத்தகைய அறிவியல் உண்மைகளை கற்பனையில் கொண்டு வர முடியாது என்பதை ஒரு விஞ்ஞானி என்ற முறையில் ஒத்துக் கொள்கிறேன். இந்த குர்ஆனைக் கொடுத்தது நம்மையெல்லாம் படைத்த அந்த ஒரே இறைவன்தான் என்பதை உறுதி செய்கிறேன். நான் நினைக்கிறேன், நான் முஸ்லிமாக மாறுவதற்கு தருணம் இது தாள் என்று! 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்பதை உளமாற ஏற்று இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நுழைகிறேன். இந்த கருத்தரங்கினால் பல அறிவியல் விற்பன்னர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இவை அனைத்திற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.'

Professor Tejatat Tejasen is the chairman of the Department of Anatomy at Chiang Mai University, Chiang Mai, Thailand. Previously he was the Dean of the Faculty Of Medicine at the same University.

Evidence from
“The Scientific Miracles in the Holy Quran”
“This is the Truth” Video Tape
Thanks...suvanappriyan

Friday, July 20, 2007

ஆஸ்திரேலியாவின் புரட்டு வாதம் அம்பலம்

ஹனீப் சிம் கார்ட்- ஆஸி. புரட்டு வாதம் அம்பலம் பிரணாப்புடன் ஆஸி. அமைச்சர் போனில் பேச்சு.

ஜூலை 20, 2007

டெல்லி டாக்டர் முகம்மது ஹனீப் வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹனீப்.

அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில், விடுதலையாகி விடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் திடீரென தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்தார் என்ற குற்றத்தை சுமத்தி அவரை சிறையில் தள்ளியது ஆஸ்திரேலிய போலீஸ்.

அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தபோது, அப்போதும் அவர் வெளியே வந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, விசாவை ரத்து செய்து குடியேற்றப் பிரிவு முகாமில் அடைத்தனர். பின்னர் தனிமைச் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார்.


ஹனீப் விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் இந்த குழப்பமான நடவடிக்கைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய சட்டப்படி அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் கூறியிருந்தார்.

இந் நிலையில், நேற்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் டெளனர், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது டெளனரிடம், ஆஸ்திரேலிய சட்டப்படி ஹனீப் வழக்கை நியாயமான, நேர்மையான முறையில் கையாள வேண்டும். அவருக்கான அனைத்து உரிமைகளும் கிடைப்பதை ஆஸ்திரேலிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஹனீப் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்று அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதை ஆஸ்திரேலிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டெளனரிடம் கூறினார் பிரணாப் முகர்ஜி.

ஹனீப் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பெருகி வரும் அதிருப்தியை உணர்ந்தே ஆஸ்திரேலிய அரசு நேரடியாக இந்திய அரசுடன் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.

இன துவேஷம் இல்லை - ஆஸி. தூதர்:

இதற்கிடையே ஹனீப் விவகாரத்தில் எந்தவித இன துவேஷத்திற்கும் இடமில்லை. ஆஸ்திரேலிய நாட்டுச் சட்டப்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஜான் மெக்கார்த்தி கூறியுள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தீவிரவாதம் மட்டுமே இப்போது பிரதானமாக பார்க்கப்படுகிறது. மற்றபடி ஹனீப் விவகாரத்தில் இன துவேஷம் எதுவும் இல்லை.

இங்கிலாந்து அதிகாரிகளின் கோரிக்கைப்படியே கைது நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய காவல்துறை மேற்கொண்டது. இங்கிலாந்து கோரிக்கையை எங்களால் நிராகரிக்க முடியாது. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டாக்டர் ஹனீப்பின் விசா ரத்து செய்யப்பட்டதில் இன வெறி எதுவும் இல்லை. இந்திய டாக்டர்கள் ஆஸ்திரேலியர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றனர். அவர்களது சேவை ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியம். இன்னும் மதிக்கப்படக் கூடியவர்களாக இந்திய டாக்டர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். இது தொடர வேண்டும் என்றே அரசும் விரும்புகிறது.

டாக்டர் ஹனீப் விவகாரம் தொடர்பாக இந்திய அரசும், இந்தியப் பிரதமரும் கவலை தெரிவித்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒரு இந்தியர் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்றால் அவருக்காக இந்திய அரசும், இந்தியப் பிரதமரும் கவலை கொள்வதில் வியப்பேதும் இல்லை.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் உரிமைகள், நலன் குறித்து இந்திய அரசு அக்கறை காட்டித்தான் தீர வேண்டும். எனவே இந்தியப் பிரதமரின் கருத்தை நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

என்னைப் ெபாருத்தவரை டாக்டர் ஹனீப் மிகவும் நன்றாகவே நடத்தப்படுகிறார். ஆஸ்திரேலிய நாட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவருக்கு மறுக்கப்படவில்லை. சட்டப்படிதான் அவர் நடத்தப்படுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் மெக்கார்த்தி.

ஹனீப் வங்கிக் கணக்கை கேட்கும் ஆஸ்திரேலியா:

இதற்கிடையே, டாக்டர் ஹனீப்பின் இந்திய வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை ஆஸ்திரேலியா கோரியுள்ளது.

பெங்களூரில் உள்ள யுடிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் ஹனீப் வைத்துள்ள வங்கிக் கணக்கின் முழு விவரங்கள், பணப் பரிமாற்ற விவரங்களை தந்து உதவுமாறு கோரி ஆஸ்திரேலிய அரசு வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹனீப்புக்கு தீவிரவாத அமைப்புகளிலிருந்து பணம் ஏதும் அனுப்பப்பட்டதா என்பதை அறிய இந்த விவரங்களை ஆஸ்திரேலிய அரசு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கடிதம் மத்திய வெளியுறவுத்துறை மூலமாக சிபிஐக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஹனீப்பின் மனைவி பிர்தோஸ், சகோதரர் சோயப் ஆகியோருக்கும் சில கேள்விகளைக் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஹனீப்பின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, குடும்பப் பின்னணி, அவர் சம்பந்தப்பட்ட பிற தனிப்பட்ட தகவல்கள் அதில் கோரப்பட்டுள்ளன.ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்வதற்காக டிக்கெட் எடுத்த ஹனீப், திரும்பி வருவதற்கான டிக்கெட்டை எடுக்காதது ஏன் என்றும் ஆஸ்திரேலிய வழக்கறிஞர் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

ஹனீப்-சிம் கார்டு சிக்கியது எப்போது

இதற்கிடையே, ஹனீப்பின் சிம் கார்டு சிக்கிய நேரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ஹனீப் தரப்புக்கு பெரும் ஆதரவான செய்தியாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தனது சிம் கார்டை ஹனீப் கொடுத்தார் என்பதுதான் ஆஸ்திரேலிய போலீஸாரின் குற்றச்சாட்டு.

ஹனீப்பின் சிம்கார்டு, கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதலில் ஈடுபட்ட ஜீப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய போலீஸார் தெரிவித்துள்ளனர். இதைத்தான் பிரிஸ்பேன் நீதிமன்றத்திலும் சனிக்கிழமை அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாஸ், சபீல் அகமது கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப் தாக்குதல் நடத்தியபோது ஹனீப்பின் சிம்கார்டு ஜீபபில் இல்லை என இங்கிலாந்து, ஆஸ்திரேலியத் தகவல்களை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய அரசு வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.

கிளாஸ்கோ தாக்குதல் சம்பவம் நடந்து 8 மணி நேரம் கழித்தே சபீல் அகமது கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் பிடிபட்டன. அதில் ஒன்றில் ஹனீப்பின் சிம் கார்டு இருந்துள்ளது.

எனவே கிளாஸ்கோ விமான நிலையத்தில் ஜீப் மோதி எரிந்து கொண்டிருந்தபோது அதில் ஹனீப்பின் சிம்கார்டு இருந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாக முன்பு கூறிய ஆஸ்திரேலிய காவலதுறையின் வாதம் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல், ஹனீப் தரப்பு வாதத்திற்கு வலுவூட்டுவதாக உள்ளது. இதுகுறித்து ஹனீப்பின் வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ கூறுகையில், இந்த முரண்பாடுகளை நாங்கள் நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம்.

இப்போதைக்கு எனது முக்கிய வேலை, எங்களது தரப்பு வாதத்திற்கு வலுவூட்டும் வகையிலான தகவல்களை சேகரிப்பது, கடுமையாக உழைப்பது மட்டுமே. ஆகஸ்ட் 8ம் தேதி வரும் விசாரணையின்போது எங்களது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைக்கவுள்ளோம் என்றார்.

ஆஸி.க்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

இதற்கிடையே, ஹனீப் விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசுக்கும், காவல்துறைக்கும் எதிர்ப்பு மேலும் வலுத்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவுடனான உறவில் பெரும் பாதிப்பு ஏற்படும், வர்த்தகத் தொடர்புகள் கடும் சரிவை சந்திக்கும் என பல அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மேலும் ஹனீப்புக்கு ஆதரவு தெரிவித்து பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

தனக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய மக்கள் போராடி வருவதை அறிந்து ஹனீப் உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டாராம்.

மேலும் ஹனீப்பை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் பிரேசரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து சிறையில் ..

இதற்கிடையே, டாக்டர் ஹனீப் தொடர்ந்து உல்ஸ்டன் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்பு பிரிஸ்பேன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் உத்தரவாதத் தொகையை கட்டுமாறு கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. எனவே அவர் ஆஸ்திரேலிய அரசின் குடியுரிமை காவல் மையத்தில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க அந்த உத்தரவாத்த தொகையை கட்டவில்லை. இதனால் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு ஹனீப் வழக்கு குறித்த விவரங்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் சரி வர கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

முறையான தகவல்கள் ஆஸ்திரேலியா தராமல் இழுத்தடிப்பதாக கூறப்படுவதால், ஆஸ்திரேலிய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி தர இந்தியா முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சருடன் ஹனீப் குடும்பம் சந்திப்பு:

இந் நிலையில் பெங்களூர் வந்த வெளியுறவுத்துறை இணையைமச்சர் அகமதுவை முகமது ஹனீப்பின் குடும்பத்தினர் சந்தித்து அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

ஹனீப்பின் மனைவி பிர்தெளஸ் ஆர்ஷியா உட்பட அவரது குடும்பத்தினர் அகமதுவை சந்தித்துப் பேசினர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய தூதரகம் டாக்டர் ஹனீப் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அமகது தெரிவித்தார்.

மேலும் ஹனீப்பின் மாமா இம்ரான் சித்திக் ஆஸ்திரேலியா செல்ல விசாவிற்காக காத்திருப்பதாகவும் அகமதுவுடன் அவர்கள் தெரிவித்தனர்.

சந்தோஷமாக இருக்கிறார் ஹனீப்:

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹனீப் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ கூறியுள்ளார். ஹனீப்புக்குப் பிறந்துள்ள குழந்தையின் புகைப்படத்துடன் அவரது உறவினர் (மனைவியின் சகோதரர்) ஆஸ்திரேலியா வரவுள்ளதாகவும் ரூஸோ கூறியுள்ளார்.