|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, June 22, 2008

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்திற்கு பொதுப்பணி மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்காக ஆள் எடுக்கிறார்கள். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் ஜுலை மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆள்சேர்ப்பு முகாம்
இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், டிரேட்மேன், நர்சிங் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) ஆகிய பணி இடங்களுக்காக ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (அண்ணா ஸ்டேடியம்) ஜுலை மாதம் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பொதுப்பணி நீங்கலாக மற்ற அனைத்திற்கும் வயது 171/2 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பணி வயது வரம்பு 21 ஆகும்.

உடற்திறன் தேர்வு
பொதுப்பணிக்கான தேர்வு ஜுலை 8 மற்றும் 9-ந் தேதியில் நடக்கிறது. 8-ந் தேதி அன்று வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோரும், 9-ந் தேதி அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் வர வேண்டும். தேர்வு நடக்கும் மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும்.

10-ந் தேதி அன்று டிரேட்மேன் தேர்வும், 11-ந் தேதி தொழில்நுட்ப பணி தேர்வும், 12-ந் தேதி நர்சிங் உதவியாளர் தேர்வும், 13-ந் தேதி கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கான தேர்வும் நடைபெறும். இந்த தேர்வுகளில் மேற்கண்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தோரும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்து மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும். `ஆப்டிடிïட்' தேர்வு 14-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி:
தினத்தந்தி

0 Comments:

Post a Comment

<< Home