|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, October 31, 2007

இராக்கின் மாபெரும் அணை உடைகிறது-ஆபத்தில் 5 லட்சம் உயிர்கள்!!!


இராக்கில் உள்ள மிகப் பெரிய அணை ஒன்று உடையும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்தால் 5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள் மற்றும் அமெரிக்க அரசின் பிற அதிகாரிகள் இணைந்து மதிப்பிட்டு ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், இராக்கின் மோசூல் பகுதியில் உள்ள அணை உடையக் கூடிய பேராபத்தில் உள்ளது. இந்த அணை உடைந்தால் 5 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இராக்கின் 2வது பெரிய நகரம்தான் மோசூல். பாக்தாத் நகருக்கு அருகே இந்த நகரம் உள்ளது. மோசூல் அணை உடைந்தால், மோசூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கி விடும். நகரில் 20 மீட்டர் ஆழத்திற்குத் தண்ணீர் மிதக்கும். அருகில் உள்ள தலைநகர் பாக்தாத்தின் பல பகுதிகளிலும் கூட நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்த அணையின் நிர்வாகியான தனூன் அயூப் கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அணையைப் பலப்படுத்தும் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்றும், அதனால்தான் அணை இந்த ஆபத்தை சந்தித்துள்ளதாகவும் அமெரிக்க பொறியாளர்கள் குழு கூறியுள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அமெரிக்க மற்றும் இராக் அதிகாரிகள் தீவிரமாக விவாதித்துக் கொண்டுள்ளனர். அணை உடையும் ஆபத்தைத் தடுக்க வேண்டுமானால், டைக்ரீஸ் நதியின் குறுக்கே 2வது அணை உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க பொறியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு அதிக செலவாகும், மேலும் இது தேவையற்றது என்று இராக் அதிகாரிகள் கூறுகின்றனராம்.

கடந்த மே மாதம் அமெரிக்க உயர் அதிகாரிகள் அணை உடைந்தால் ஏற்படும் அபாயம் குறித்து இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு கடிதம் எழுதி எச்சரித்துள்ளனர்.

மோசூல் அணை மோசூல் நகரைக் காப்பாற்றுவது இயலாத காரியம். அணை நிரம்பும் நிலை ஏற்பட்டால், மோசூல் நகரில் 20 மீட்டர் ஆழத்திற்கு மிகப் பெரும் தண்ணீர் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடும் என அமெரிக்க பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பேராபத்தை சந்தித்துள்ள மோசூல் அணை கடந்த 1980ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணை அமைந்துள்ள இடமே பெரும் சர்ச்சைக்குரியதாகும். அணை அமைந்துள்ள இடம் சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த இடம். தண்ணீர் இங்கு அதிகம் சேர்ந்தால் கரைந்து போய் விடக் கூடியது. இந்த இடத்தில் எப்படி அணையைக் கட்டினார்கள் என்று அமெரிக்க பொறியாளர்கள் வியப்பு வெளியிட்டுள்ளனர்.

அணை உடையும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அணையின் சுவர் பல்லாயிரக்கணக்கான தடுப்புப் பொருட்களைப் போட்டு முட்டுக் கொடுத்து வருகின்றனராம். இருந்தாலும் கூட, விரைவான மாற்று நடவடிக்கையை எடுக்காவிட்டால் அணை உடையும் ஆபத்தை தவிர்க்க முடியாது என்று அமெரிக்க குழு எச்சரித்துள்ளது.

நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை


நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.
Thanks...BBC


Tuesday, October 30, 2007

புதுவையில் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு கிடைக்க முழு முயற்சியில் தற்போது TNTJ!

புதுவையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திவருகின்றது. சமீபத்தில் அதனின் ஒரு

பகுதியாக புதுவை முதல்வர் திரு. ரங்கசாமியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது முனீர் தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை தலைவர் தாசிம் செயலாளர் ஜின்னா துனைத் தலைவர் பீர் முஹம்மது பொருளாளர் அக்பர் கரீம் ஆகியோர் புதுவை முதல்வரை சந்தித்து புதுவையில் முஸ்லிம்களுக்கு எவ்வாறு இடஓதுக்கீடு வழங்கினால் எந்த வித சட்டசிக்கலும் ஏற்படாமல் முழுமையாக முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என்பதை விளக்கினர்.


அது சம்பந்தமான ஆவனங்களையும் அவரிடம் சமர்ப்பித்தனர். மேலும் உளவர்கரை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வரின் பாராளுமன்றச் செயலாளர் நமச்சிவாயம் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு பெற்றுதருவதில் முழு மூச்சுடன் செயல்படுவேன் என உறுதி அளித்தார்.

மேலும் இடஒதுக்கீடு சம்பந்தமாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்து தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கமளித்தனர். புதுவை சமூக நலத்துறை இயக்குனர் பிரியதர்ஷனி அதிகமான நேரங்களை ஒதுக்கி பல்வேறு விளக்கங்களை கேட்டார். மேலும் அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை முஸ்லிம்களுக்கு சென்றடைய தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து எங்களை தொடர்பு கொண்டால் அதற்கு அனைத்து விதமான ஒத்துழைப்பும் தருவேன் என உறுதி அளித்தார் . இதுவரை எந்த முஸ்லிம் அமைப்புகளும் எங்களை சமூதாயம் தெர்டர்பான எந்த விஷயங்ளிலும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்தார்


புதுவை பிர்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் நீதி அரசர் கோவிந்த ராஜன் அவர்களை சந்தித்து முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றியும் நமது தரப்பு நியாயங்களையும் மாநிலச் செயலாளர் முஹம்மது முனீர் விளக்கமளித்தார். நிதியரசர் கோவிந்த ராஜன் மிகவும் உண்ணிப்பாக அனைத்து விபரங்களையும் கேட்டரிந்து கொண்டார்.

தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ(குஜராத் பயங்கரம்)

More Report From TEHELKA.COM.and Video Please Click link

Source: http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Press_release.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107spycam_videos.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Live_updates.asp

குஜராத்தில் கலவரத்தை தூண்டிவிட்டு ஏராளமான பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம், கோபத்தால் ஏற்பட்டதல்ல.முதலமைச்சர் மோடியின் ஒப்புதலோடு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சங்க் பரிவார் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களால் திட்டமிட்டே அந்த கலவரம் நடத்தப்பட்டது.

இதற்கு (ரகசிய காமிராவால் படம்பிடிக்கப்பட்ட)மறுக்க முடியாத ஆதாரம் தங்களிடம் உள்ளது என பிரபல ஆங்கில வார இதழான 'தெகல்கா' நேற்று தெரிவித்திருந்தது.

'தெகல்கா' வின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், 'தெகல்கா' கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, அத்வானி மற்றும் மோடி ஆகிய இரண்டு பேரையுமே உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், குஜராத் கலவரத்திற்கு யார் காரணம் என்பது தற்போது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது என்றார்.

மோடிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்ததால், குஜராத் படுகொலைக்கு காரணமான குற்றச்சாட்டிலிருந்து அவர் (அத்வானி) தப்ப முடியாது.

குஜராத் கலவரத்திற்கு மோடிக்கு எந்த அளவிற்கு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அப்போது பிரதமராக இருந்தவருக்கும், உளதுறை அமைச்சராக இருந்த அத்வானிக்கும் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் உள்ளது.

மோடி மற்றும் அத்வானி ஆகிய இருவர் மீதும் உடனடியாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையிலடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே காரணத்திற்காக அத்வானி மற்றும் மோடி ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..
கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...
விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:
குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

More Report From TEHELKA.COM.Please Click link

Source: http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Press_release.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp

http://www.tehelka.com/story_main35.aspfilename=Ne031107spycam_videos.asp

Thursday, October 25, 2007

களியக்காவிளை விவாதமும் கலங்கி போன கூட்டமும்

அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..
சுன்னத் வல் ஜமாஅத் என்ற பசுத்தோலை போர்த்திக்கொண்டு இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் பரேலவிகள் எனும் புலிகள், விவாதத்தில் பதில் சொல்ல முடியாமல் போனால் விவாதத்திற்கு சம்பந்தமில்லாமல் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என எண்ணித்தான் ஒப்பந்த தினத்தன்று தலைப்புகள் இருதரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனாலும் அவர்கள் நேரத்தை கடத்தும் விதமாக, நீங்கள் (P.J) சுப்ஹான மவ்லூது ஓர் ஆய்வு , இஸ்லாமிய அடிப்படை கல்வி போன்ற புத்தகங்களில் அப்படி எழுதியிருக்கிறீர்களே இப்படி எழுதியிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அங்கே என்ன எழுதினோம், இங்கே என்ன எழுதினோம் என்பதல்ல இப்போதைய தலைப்பு, அதைவிட இன்னும் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளோம். அங்கே எழுதியது பற்றி தனிதலைப்பில் நாம் விவாதிப்போம், இப்பொழுது இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பற்றி நாம் விவாதிப்போம் என்று தவ்ஹீத் அணியினர் கூறியபோது, அது அவர்களுக்கு சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது.


ஏனென்றால் விவாத ஒப்பந்த தினத்தன்று சொல்லப்பட்ட பல தலைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் இந்த நான்கு தலைப்புகளும். எனவே அவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் பதில்கள் தரப்பட வேண்டும், இதுதான் ஒப்பந்த விதி. உதாரணமாக, துபாயில் அரசு அனுமதியுடன் மவ்லூது நடக்கின்றது என்றார்கள். துபாயில் காபரே டான்ஸ் கூட அரசு அனுமதியுடன் நடக்கிறது, எனவே அதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று நீங்கள் சொல்வீர்களா என்று தவ்ஹீத் அணியினரால் கேட்க முடியும். ஆனால் இது தலைப்பிலிருந்து விலகி நேரத்தை வீணாக்கிவிடும். எனவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருதரப்பாரும் ஏற்றுக்கொண்ட தலைப்பு சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளை முதலில் பார்ப்போம் என்றனர்.


ஆனால் இந்த பரேலவிகளோ தாங்கள் எழுதிக்கொண்டு வந்ததைத்தான் திரும்ப திரும்ப சொன்னார்களே தவிர தவ்ஹீத் அணிக்கு பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. 'சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுங்கள், 9 கேள்வி கேட்டோம் 10 கேள்வி கேட்டோம் என்று விடாமல் சொல்லுங்கள். அவர்கள் அதற்கு பதில் சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்லுங்கள்' என்று ஷேக் அப்துல்லா ஜமாலி தன்னுடைய அணியினருக்கு எழுதிக் கொடுத்த துண்டு சீட்டுகள் இன்றும் என் கைவசம் இருக்கின்றன.


நிகழ்சியின் செலவுகளை இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்த விதியாக இருந்த போதிலும் மண்டபம் மற்றும் ஒலிப்பெருக்கி சாதனங்களை அவர்கள் ஏற்பாடு செய்ததால், அவர்கள் தரப்பிலுள்ள பார்வையாளர்களும் மைக்கில் பேசி குறுக்கிட்டார்கள், தவ்ஹீத் அணியின் மௌலவிகள் பேசும்போது மைக்கை ஆஃப் பண்ணினார்கள்.

தவ்ஹீத் அணியில் 8 பேர் விவாதித்தார்களென்றால் பரேலவிகள் அணியிலோ 208 பேர் விவாதித்தார்கள். பரேலவிகள் அணியிலிருந்த பார்வையாளர்கள் 200 பேரும் எழுந்து கூச்சல் போட்டனர். பாட்டில்களை வீசினர், களியக்காவிளையை பற்றி உங்களுக்கு தெரியாது என்று மிரட்டினர். களியக்காவிளையை விட்டு வெளியே போக முடியாது என்று கூறினர். கூச்சல்போட்டு மிரட்டிக் கொண்டிருந்த தமிழன் டிவி யில் வரும் மேலை நாஸர் என்பவரை ஒப்பந்தப்படி வெளியேற்றும் படி தவ்ஹீத் அணியின் நடுவர் கூறியபோது, மீதமுள்ள 199 பேரும் கூச்சல் போட்டனர். தகாத வார்த்தைகளால் திட்டினர். தவ்ஹீத் அணியின் பார்வையாளர்கள் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கி அமைதி காத்தனர். ஏனென்றால் 'நீங்கள் யாரும் எழுந்திருக்கக் கூடாது, இந்த விவாதம் நடக்க வேணடும். பல வருடங்களாக விவாதத்திற்கு மறுத்தவர்கள் வேறு வழியின்றி இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் விவாதத்தை முடக்க எதுவும் செய்யலாம் ,ஆனால் இந்த விவாதம் நடக்க வேண்டுமானால், இந்த அரங்கத்தில் எத்தகைய அசம்பாவிதம் நடந்தாலும் சரி நீங்கள் எழுந்திருக்கக் கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் அணியின் தலைவரும் நடுவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் அமைதி காத்தனர்.


எந்த அளவிற்கென்றால் அந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த அன்றைய குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான சகோ.ஹாஜா நூஹ்வை அவர்கள் அடித்தபோது கூட திருப்பி அடிக்க சக்தியிருந்தும் எதுவும் செய்யாமல் பொறுமை காத்தனர். மௌலவிகள் மட்டுமே பதிலளித்தனர். சற்று கடுமையாகவே நடந்து கொண்டனர். ஏனென்றால் அவர்களிடத்தில் சத்தியம் இருந்தது. அபுபக்கர்(ரலி) அவர்களின் மகன் தந்தையை நோக்கி 'தந்தையே அன்று போர்க்களத்தில் எதிரணியில் இருந்த நீங்கள், என் வாளுக்கு பக்கத்தில் இருந்தீர்கள், என் தந்தையாயிற்றே என்ற பாசத்தால் உங்களை நான் கொல்லாமல் விட்டு விட்டேன்' என்று சொன்னபோது, 'அதுபோன்ற ஒரு வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைத்திருக்குமானால், என் மகனாயிற்றே என்று உன்னை நான் விட்டிருக்கமாட்டேன். மாறாக கொன்றிருப்பேன்' என்று அபுபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். ஏனென்றால் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் பாடம் படித்தவர்கள். அதுபோலவே குர்ஆனையும் ஹதீஸையும் ஏற்றுக்கொண்டிருக்கும் தவ்ஹீத்வாதிகள், அசத்தியவாதிகளிடமும் இணைவைப்பாளர்களுடனும் கடுமையாகத்தான் நடந்து கொள்வார்கள்.


தவ்ஹீத் அணியினர் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிவீச தயாராக வந்தபோது, அதற்கெல்லாம் தேவையில்லாமல் குளத்தங்கரையிருந்து அவர்களை அல்லாஹ் எழுந்திருக்க முடியாமல் செய்துவிட்டான். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே!


விவாதம் முடிந்தபின், சுப்ஹான மௌலூதில் இத்தனை அசிங்கங்களும் ஆபாசங்களும் தான் உள்ளனவா என்பதை களியக்காவிளை விவாதத்தை விண் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டோம். இதையா நாங்கள் கண்ணியம், புண்ணியம் என நினைத்து ஓதிக்கொண்டிருந்தோம், எங்களை தெளிவுபெறச் செய்த இறைவா உனக்கு நன்றி என ஒவ்வொரு குடும்ப பெண்மணிகளும் கூறியதைக் கேட்டு புகழனைத்தும் இறைவனுக்கே என்றோம்.


இறுதியாக, அந்த விவாதம் களியக்காவிளையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. களியக்காவிளை பகுதியில் சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதை நோக்கி வந்தனர். அந்த நிகழ்ச்சியை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்த ஷிஹாப் என்பவரின் உதவியாளர்வரை இன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்துள்ளார் என்றால் இது எத்தகைய வெற்றி என்பதை உணரமுடியும். மேலும், விவாதத்திற்கு முன்புவரை சுன்னத் வல் ஜமாஅத்தில் இருந்த களியக்காவிளை இளைஞர்கள் விவாதத்தை கண்டபின், தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட தலைமையை தொடர்பு கொண்டு களியக்காவிளையில் உடனடியாக தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை துவங்கியே தீர வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக, அங்கு அவர்களை வைத்தே கிளையும் துவங்கப் பட்டது. விவாதத்திற்கு முன்பு வரை சுன்னத் ஜமாஅத்திலிருந்த இளைஞர்கள், இன்றைக்கு தவ்ஹீத் ஜமாஅத்துடைய களியக்காவிளை கிளையின் நிர்வாகிகளாக இருக்கின்றார்கள். உள்ளங்களை புரட்டக் கூடியவன் அல்லாஹ். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே!


(குறிப்பு : விவாதத்திற்கு பின் சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து சிறியவர் முதல் பெரியவர் வரை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாறி அவர்கள் அறியாமையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததை விவரித்து உணர்வுபூர்வமாக உள்ளத்திலிருந்து அளித்த பேட்டிகள் அடங்கிய சி.டி விண் டிவி யிலும் ஒளிபரப்பப்பட்டது. அது நம்மிடமும் உள்ளது.)

இன்ஷா அல்லாஹ் தொடரும்..
முஹம்மது மாஹீன்

Tuesday, October 23, 2007

யார் இந்த போலி?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்புக்குறித்தான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சத்தியமார்க்கம் இணையதளத்தின் அறிவிப்பு கட்டுரையை கீழே தந்துள்ளேன். இதை ஏன் அனைவருக்கும் அனுப்பியுள்ளேன் என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். நோன்பு கால வேளையில் இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம் என்றே பொருமை காத்து வந்தேன். கடந்த நோன்புப் பெருநாளின் விடுமுறையில் 4 நாட்களை சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண பகுதியில் கழித்தேன். அந்த பயணம் கூட ஒருவகையில் இந்த ஈமெயில் அனுப்பக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லலாம்.

வக்கிர சிந்தனை இல்லாத ஒரு மனிதன் உலகில் இருப்பதாக நான் நம்பவில்லை. அதை அடக்கி ஆள்பவன் சமுதாயத்தில் நல்ல மனிதனாக பிரகாசிக்கிறான். அதை அடக்காமல் அடங்காப்பிடாரியாக இருப்பவன் அசிங்கப்படுகிறான், கேவலப்பொருளாக காட்சி அளிக்கிறான். அப்படியொரு கேவலப்பொருளாக விளங்கும் ஒருவனை அடையாளம் காட்டும் தொடக்கம் தான் இது. கண்னை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லும் ஒரு குருமதியாளனின் முகத்திரையை கிழிக்கும் முயற்சியின் ஆரம்பமாக இதை எடுத்து கொள்ளுங்கள்.

நான் யாரைப்பற்றி பேசுகிறேன் அல்லது யார் இந்த போலி என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கட்டுரையில் நான் எதையெல்லாம் சிகப்பு கலரில் ஹை லைட் செய்துள்ளேனோ அவையனைத்தையும் இணைத்துப் பார்த்தால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

என்னை அறிந்தவர்கள் மத்தியில் என்னைப் பற்றியும், எனது அன்பு உறவுகள் பற்றியும் இழிவு படுத்தி இந்த போலி கருத்து பரப்பியுள்ளான். என்னைப் பொருத்தவரை மாற்றான் தோட்டத்து மல்லிகையின் நறுமணத்தையும் பொருந்திக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். அதே சமயம், சக முஸ்லிம் சகோதரனின் கண்ணியத்தை பேண தவறிய/முடியாத இந்த போலியின் கண்ணியத்திற்கு நான் எந்த உத்தரவாதத்தையும் தர விரும்பவில்லை.

இன்ஷா அல்லாஹ் தேவையேற்படும் பட்சத்தில் வெளிப்படையாக அந்த போலியின் ஒரிஜினல் பெயரிட்டு இது தொடர்பான எனது அடுத்த மெயிலை அனுப்புகிறேன். மாற்று மத சகோதரர்களிடையே முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த போலியை என்னால் முடிந்தளவு சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட நான் தயங்க மாட்டேன். எந்த சூழலிலும் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தாமல் இருக்க என்னால் முடிந்தளவு நான் முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

இந்த போலியை அடையாளம் தெரிந்து கொண்டவர்களும், தெரிந்து கொள்ளாதவர்களும் அன்பு கூர்ந்து எனது இந்த ஈமெயிலை சச்சரவுகளில் நாட்டமில்லாத உங்களுக்கு தெரிந்த சகோதரர்களுக்கு அனுப்பி வையுங்கள். அப்படி செய்வது அந்த போலி பற்றிய விழிப்புணர்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்தும். தெரிந்து கொள்ளாதவர்கள் அடுத்தடுத்த ஈமெயில் வழியாக இன்ஷா அல்லாஹ் தெரிந்து கொள்வார்கள், .

அன்புடன்,
முத்துப்பேட்டை ஏ.ஆர்.பரக்கத் அலி
ரியாத் - சவுதி அரேபியா

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-
சத்தியமார்க்கம்.காம் பெயரில் இயங்கும் போலிகள்!
செவ்வாய், 02 அக்டோபர் 2007

கடந்த சில வாரங்களாக சத்தியமார்க்கம்.காம் என்ற நமது இணைய தளத்தின் பெயரில் ஒருவர் திருகுதாளம் செய்து விஷமத்தனமாகப் பல இடங்களில் நிதானமிழந்து மோசமான வகையில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றார்.

இதனை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தாலும் விஷமிகளின் அறிவிழந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைத்ததாலும் , போலிகளுக்கு நாமே இலவச விளம்பரத்தை நமது தளத்தில் கொடுக்க வேண்டாம் என நினைத்ததாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளிக் கொண்டிருந்தோம் .

மேலும் , சமுதாயம் உலகளாவிய அளவில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற விஷமத்தனங்களின் பக்கம் நமது கவனத்தைச் செலுத்தினால் சமூக சிந்தனையின் பக்கமிருந்து நமது கவனம் திருப்பப்பட்டு இது போன்ற மனநோயாளிகளிடத்தில் பதிலுக்கு பதில் , விளக்கம் என நமது பொன்னான நேரம் வெறுமனே வீணாகும் என நினைத்ததாலும் அதுவே இஸ்லாத்தின் எதிரிகள் மற்றும் இது போன்று விஷமிகளின் நோக்கம் என்பதை நாம் நன்கறிந்ததாலும் அவர்களின் இச்சூழ்ச்சி வலையில் விழக்கூடாது என்ற நோக்கில் முழுமையாக அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருந்தோம் .

ஆனால் சில வாசக சகோதரர்கள் போலியின் எழுத்துகளை நேரடியாகக் குறிப்பிட்டு நம்மிடம் கீழ்கண்ட விதத்தில் விளக்கம் கோரி வருகின்றனர்.

//தங்கள் இணைய தளத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு கிறிஸ்தவ நண்பரின் வலைப்பதில் ஒரு செய்தியை ஒருவர் பதித்துள்ளார் . தாங்கள் அது பற்றி ஏன் எந்தச் செய்தியோ மறுப்போ இது வரை வெளியிடவில்லை . அப்படியானால் அத்தகவல் தாங்கள் பதித்தது தானா ? என்பதை விளக்கவும்//

இது போன்று தொடர்ந்து வரும் வாசகர்களின் கணைகளுக்குத் தகுந்த விளக்கம் கூறப்படாத சூழலில் அவ்விஷம எழுத்துகளுக்கு உரியவர்களாக எம்மை யாரும் கருதிவிடலாகாது என்ற நோக்கில் கீழ்க்காணும் தன்னிலை விளக்கம் கொடுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கட்டற்றச் சுதந்திரத்தைத் தன்னகத்தே கொண்ட இணையத்தில் எவரும் எந்தப் பெயரிலும் எழுதலாம் ; எழுதமுடியும் . அப்துல்லாஹ் என்ற பெயரில் ஒருவர் தவறானக் கருத்தை எழுதினால் அதற்காக அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்டவர்களையெல்லாம் சந்தேகிப்பது தவறானக் கண்ணோட்டம் ஆகும்.

சத்தியமார்க்கம் என்ற பெயரில் அடுத்த இணையத்திற்குச் சென்று எழுத நமக்கு எந்தத் தேவையும் இல்லை . அல்லாஹ்வின் அளப்பரும் அருளால் , எழுதுவதற்கும் பதிப்பதற்கும் எமக்குரியத் தனித் தளம் இருக்கும்போது வெளியே சென்று எழுத / பதிக்க வேண்டிய நிலையில் யாம் இல்லை . சத்தியம் என்றால் என்னவென்று தெரியாதவர்களே இது போன்ற போலிப் பெயர்களில் அசத்தியத்தைப் பரப்புவார்கள் .

'சத்திய மாக்கம் ' / ' சத்தியமார்க்கம் ' போன்ற பெயர்களில் இணைய சேவைகள் தரும் இலவச வலைப்பதிவுகளை ஏக அளவில் துவங்கி பிறரின் வலைப்பதிவுகளில் இவர் இட்டு வரும் பின்னூட்டங்களுக்குள் நம் தளத்தின் முகவரி கொடுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய தவறானக் கருத்தைப் பதிந்தவரிடம் அக்கருத்து பதியப்பட்ட இடத்திலேயே அதை நிரூபிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது . ஆனால் அவதூறு எழுதிய அந்த நபர் அதற்குத் தகுந்த விளக்கம் இதுவரை வைக்கவில்லை. இதிலிருந்தே அந்த நபரின் அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.

"ஒருவர் தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு ) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் " என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள் . ( முஸ்லிம் )

ஆதாரமற்ற எந்தச் செய்திகளையும் முஸ்லிம்கள் நம்பி அதைப் பிறருக்குப் பரப்பக்கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம் . எனவே ஆதாரமற்ற அவதூறு செய்திகளை எளிதில் நம்பி , அதற்கு மறுப்பு என்ற பெயரில் அந்த நபரை விளம்பரப்படுத்த நாங்கள் தயாராக இல்லை . இன்ஷா அல்லாஹ் இனியும் அது பற்றி எழுத மாட்டோம் .

சத்தியமார்க்கம்.காம் இணைய தளமானது , http://www.satyamargam.com/ என்ற ஒரே டொமைன் முகவரியில் இருந்து மட்டுமே தற்போது இயங்குகிறது . சத்தியமார்க்கம் தளத்திற்கென்று வலைப்பதிவுகள் எதுவும் இல்லை . அவ்வாறு ஒரு வலைப்பதிவு துவங்கப்படின் அது சத்தியமார்க்கம் தளத்திலேயே தெளிவாக அறிவிக்கப்படும்.

எனவே http://www.satyamargam.com/ என்ற முகவரி அல்லாமல் வேறு எந்த முகவரியில் இருந்து சத்தியமார்க்கம் என்ற பெயரில் கருத்துகள் பதிக்கப்பட்டாலும் அதற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைச் சகோதரர்களுக்கு அறியத்தருகின்றோம் .

சத்தியமார்க்கம் பெயரில் விஷமத்தனமாக வேறு ஏதாவது முகவரிகள் இயங்குவதைச் சகோதரர்கள் அறியவரின் அவற்றை இங்குப் பதிந்து மனநோய் முற்றிப்போயிருக்கும் இப்போலி யை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன்
-நிர்வாகம்(சத்தியமார்க்கம்.காம்)

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-
கருத்துக்கள்
-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

பழுத்த மரம் கல்லடிபடும் என்பார்கள்.
சர்வதேச அளவில் இன்று சத்தியமார்க்கமாம் இஸ்லாம் அதிக அளவில் தாக்கப்பட்டு வருவதற்கும் இதுவே காரணம். இதில் சத்தியமார்க்கம் தளமும் விலக்கல்ல என்பது தெரிகிறது. நேரடியாக எதிர்க ொள்ளும் திராணியற்ற இதுப ோன்ற முதுகெலும்பு அற்ற க ோ ழைகளின் செயல்களை ஒதுக்குங்கள். இணையத்தில் இஸ்லாத்தை எடுத்தியம்ப தமிழ் தளங்கள் பல இருக்க மூடர்களால் குறிவைத்து கல்லடி பெறும் :) பழுத்த சத்தியமார்க்கம் தளத்திற்கு எம் வாழ்த்துக்கள். த ொடரட்டும் உங்கள் பணி. நன்றி

கருத்து எழுதியவர் இப்னுஅமீர் , பதிந்தது: October 2, 2007 நேரம்: 5:42
-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ் இணைய உலகில் வலம் வருபவர்களுக்கு இதுப ோ ன்ற அசிங்கங்களை செய்வது யார் என்பது தெரியும்.
இவர் நிதானம் இழந்தது உங்களிடம் மட்டுமல்ல இவர் விஷமம் செய்து ஆங்காங்கே க ோட்டை விட்டு தன் தும்பை அடுத்தவர் கையில் க ொ டுத்து விட்டு மாட்டிக்க ொண்டு வருவது பல இடங்களில் நடந்துள்ளது.
தன்னைத் தவிர வேறு யாரும் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக அரசியல் பேசக்கூடாது என்று தனக்குத்தானே புலம்பிவரும் இவர் வெகு விரைவில் தனிமைப்படுத்தப்படுவது உறுதி.

கருத்து எழுதியவர் சவூதித்தமிழன் , பதிந்தது: October 3, 2007 நேரம்: 7:32

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

சத்தியமாக்கம் என்ற (தவறான பெயருடன்) கிறிஸ்த்தவ இணையத்தளத்தில் எனக்கு எதிராகவே ( சற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல்) மிகக் கேவலமான கருத்துப்பதிக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் இணையத்தில் கிறிஸ்த்தவ இணையத்தின் பின்னூடலுக்கு பதிலளித்தோம். விமர்சிப்பவர்கள் அந்நிய முகமூடி அணிந்துக் கொள்வதன் அவசியம் என்னவென்று புரியவில்லை. சிறப்பாக செயல்படும் இணையங்களில் பெயரைக் கெடுக்க எடுக்கப்படும் சதிவேலையாக இது இருக்குமோ...

கருத்து எழுதியவர் ஜி.நிஜாமுத்தீன் , பதிந்தது: October 3, 2007 நேரம்: 8:35

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

நன்றி,

TNTJ - திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு தொந்தரவையும், அவர்களுடைய சொத்துக்களுக்கு சேதத்தையும் பி.ஜே.பி மற்றும் இந்து முன்னனியை சேர்ந்த குண்டர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் ஈகைத் திருநாளை சந்தோசமாக கொண்டாடி விட கூடாது என்கிற சதி திட்டத்துடன் கலவரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

பி.ஜே.பி மற்றும் இந்து முன்னனி குண்டர்களால் ஏற்பட்ட இந்த பதற்றத்தை தொடர்ந்து காவல்துறை தனது அராஜக நடவடிக்கையை வழக்கம் போலவே முத்துப்பேட்டை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. அதனை கண்டித்து கடந்த 20-10-2007 அன்று சென்னையிலும் , மாவட்ட தலைநகரான திருவாரூரிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருவாரூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்ட காட்சிகளை கீழே காணலாம்.ஜித்தாவில் பி.ஜே அவர்களின் பேட்டி போஸ்டர்களாக...

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

கடந்த 14-10-2007 அன்று தினமணி நாளிதழில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் சகோதரர் பி.ஜே அவர்களின் சிறப்புப் பேட்டி முழுப்பக்கத்தில் வெளியாகி இருந்தது.

இது தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் தீவிரவாத்தை இஸ்லாம் எந்த அளவிற்கு எதிர்க்கின்றது , ஒழிக்கின்றது என்பதை ஆதாரத்தோடும் ஆழமாகவும் அந்த சிறப்பு பேட்டி விவரித்திருந்தது.

தமிழகம் மட்டுமல்லாது வளைகுடா போன்ற நாடுகளிலும் தினமணியில் வெளியான பி.ஜே அவர்களுடனான பேட்டி சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அப்பேட்டியை முழு வடிவில் பெரிய அளவிளான போஸ்டர்களாக மாற்றி ஜித்தா டி.என்.டி.ஜே மர்கஸ் மற்றும் பல்வேறு தமிழ் பேசும் மக்கள் கூடும் இடங்களிலும் , பள்ளிவாசல்களின் வாசலிலும் ஜித்தா டி.என்.டி.ஜே சகோதரர்கள் ஒட்டியுள்ளனர். அந்த புகைப்படங்களையே கீழே நீங்கள் காணுகிறீர்கள்.
தினமனி ஆசிரியர் அவர்களுக்கு அதிரை பாரூக் கடிதம்!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

உயர் திரு தினமனி ஆசிரியர் அவர்களுக்கு ரியாத்திலிருந்து அதிரை பாரூக் எழுதுவது.

புனித ரமளான் மாதத்தில் முஸ்லீம் சமுதாயத்திற்கு மூன்று மகிழ்ச்சிகள்

ஒன்று: தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி மகிழ்வித்தது,

மற்றொன்று: சவுதி அரசு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள் எழுதி வெளியிட்ட நோன்பு என்ற தலைப்பிட்ட நூலை பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு ரியாத் வாழ் தமிழ் கூறும் முஸ்லீம்களுக்கு வழங்கி கௌரவித்தது.

மூன்றாவது: தினமனி இதழில் அரசியல் அரங்கம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுடைய பேட்டியை முழுப் பக்கத்தில் வெளியிட்டது.

இவைகள் அனைத்தும் புனித ரமளான் மாதத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழ் கூறும் முஸ்லிம்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திற்று.

சுதந்திர இந்தியாவில் குடந்தை பேரணியில் குழுமியதுபோல் எப்பொழுதும், எங்கும் குழுமியதில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள், அதேப்போல் சுதந்திர இந்தியாவில் தினமனியில் அரசியல் அரங்கம் பகுதியில் முழுப்பக்கமும் இதுவரையில் யாருடைய பேட்டியும் வெளியானதில்லை என்றே எண்ணுகின்றேன்.

இந்த சந்தோஷங்களை உலகம் முழுவதிலும் வாழக்கூடிய தமிழ்கூறும் முஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் அலவாளாவிக் கொண்டிருக்கையில் துபாயிலிருந்து மேலப்பாளையக் காரர் ஒருவர் ( பசுலுல் இலாஹி ) உங்களுக்கு மாநில தலைவர் பிஜே அவர்களைப் பற்றி சில பொய்யான தகவல்களை எழுதி அனுப்பி உள்ளார். அவர் அதில் எழுதி உள்ளது அனைத்தும் பொய் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு அது உங்கள் பத்திரிகைக்கு வழங்கப்பட்ட்ட விளம்பரம் என்று அவர் குறிப்பிட்டதிலிருந்து அவர் எப்படி கற்பனையாக இட்டுக்கட்டிக் கூறுவார் என்பதற்கு தெளிவான உதாரணமாகும். மேலும் இவருடைய கடந்த காலத்தை உங்களுக்கு சிறிது விளக்குவது இந்த நேரத்தில் சரியானதாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

இவர் யார் ?
எந்த தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை இன்று உயர்த்திப் பிடித்து எழுதி இருக்கிறாரோ அதே தமுமுக தலைவர் ஒருமுறை துபாய் சென்றிருந்த போது அவரை தரக்குறைவான நரகல் நடை வாசகங்களைக் கொண்டு துண்டுப் பிரசுரங்களை எழுதி விநியோகித்தார் அவற்றில் ஒன்று ஜவாஹிருல்லாஹ்வுடைய பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது அதைப்படித்த ஜவாஹிருல்லாஹ் அமைதியாக அந்த பிரசுரத்தைக்கொண்டு மலப்பாதையை துடைக்கச் சொல்லுங்கள் என்று நாகரீகமாக ? கூறிவிட்டார். ( இன்றுவரையிலும் அவருடைய வெளியீடுகள் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிகிறோம் )

இவ்வாறு கீறியும், பாம்புமாக கொத்திக்கொண்டவர்கள் இப்பொழுது எவ்வாறு எதனடிப்படையில் தோழமைக் கொண்டார்கள்? அதற்கு முன் ஏன் பகைவர்களாக ஆனார்கள்? பிளவுபடாத தமுமுகவில் தற்போதைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாநில தலைவராக இருக்கும் அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள் அமைப்பாளராகவும், ஜவாஹிருல்லாஹ் தலைவராகவும், மேல்படி பசுல் இலாஹி வளைகுடா பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்கள்.

ஒரு டிசம்பர் 6 போராட்டத்திற்காக துபாய் மண்டல மக்கள் பெருவாரியான தொகையை வசூல் செய்து மேல்படி பசுல் இலாஹியிடம் கொடுத்தனர் அந்த பல்லாயிரக்கணக்கான திர்ஹம்களை தலைமைக்கு அனுப்பாமல் அப்படியே அமுக்கிக் கொண்டார் இதன் செய்தி அறிந்த தலைவரும், அமைப்பாளரும் அவரை இயக்கத்திலிருந்து வெளியாக்கி அவர் மீது ஒழுங்கு நடடிவடிக்கை எடுத்தார்கள். அவர் நீக்கப்பட்ட சமீப காலத்தில் ஜவாஹிருல்லாஹ் துபாய் சென்றிருந்த போது தான் இருவரும் நரகல் நடையில் மோதிக் கொண்டார்கள்.

கொத்திக் கொண்டவர்கள் தோழமை கொண்டது எவ்வாறு? எதனடிப்படையில்?
தஞ்சை பேரணியின் பெருந்திரளைக்கண்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது அத்தனை மக்களையும் கொண்டு அரியாசனையில்; அமர ஆசைப்பட்டார் அதற்கு தடையாக இருந்த மதபோதகர் பிஜே அவர்களையம், அவரது ஆதரவாளர்களையும் வெளியேற்றிட முடிவு கட்டி அதை செம்மையாக செயல்படுத்தவும் செய்தார், இயக்கம் பிளவுபட்டு இருகூறாக மாறியது பேனரும், தலைமை அலுவலகமும் அவர்களுக்கு ஒதுங்கி விட்டது (எந்த ஒரு இயக்கமும் பிளவு பட்டால் மக்கள் பழக்கப்பட்ட பழைய பேனரில் தான் இருப்பார்கள் புது பேனருக்கு அவ்வளவாக வரமாட்டார்கள் இதுதான் அவர்களது கனிப்பாக இருந்தது) புது பேனரை உருவாக்கி மக்கள் சக்தியை ஒருங்கிணைப்பது கடினம் என்று நினைத்தவர்கள் மக்களிடம் அவர்களை செல்லவிடாமல் பல திட்டங்களை வகுத்து செயல்பட்டார்கள்.

அதில் ஒன்று இன்டர்நெட்டில் தொடர்புடைய படித்த மக்கள் மத்தியில் வெளியேறிச் சென்றவர்களைப் பற்றி அவதூறுகள் எழுதி வெளியிடுவதும் அவற்றை காப்பிகளாக்கி பாமர மக்களுக்கு விநியோகிப்பதும் என்பது ஒரு திட்டமாகும். அதற்கு தகுதியான அவதூறு எழுதும் ஒருவர் தேடப்பட்டார் இதற்கு முன்பொரு முறை தன்னைப் பற்றி பொய் தகவல்களை நரகல் நடையில் எழுதியது பேராசிரியருக்கு நினைவுக்கு வரவே அவரையே இதற்கு தேர்வு செய்வது எனும் முடிவுக்கு வந்து அதனடிப்படையில் மேல்படி மேலப்பாளையத்து இலாஹி அவதூறுகள் எழுதும் அரும் ? பணிக்கு தகுந்த சன்மாங்களுடன் பேசி அமர்த்தப்பட்டார் இன்று வரை அது செம்மையாக நடந்து வருகிறது.

ஆனால் அவர்கள் நினைத்தது நடந்ததா ? என்றால் அது தான் இல்லை ! வளர்ச்சி இங்கும், வீழ்ச்சி அங்குமாக மாறிவிட்டது மனிதன் ஒன்று நினைப்பான் கடவுள் ஒன்றை நிகழ்த்தி விடுவார்.

இவர்களுடைய இந்த சதி ஆலோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அசிங்கத்தால் அறிஞர் பிஜே அவர்களும், அவரது அமைப்பும் மக்கள் மத்தியில் மாபெரும் வளர்ச்சி அடைந்தது.

அவரது ஊழல் பற்றி இறுதியாக ஒரு தகவல்
தமுமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டபின் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கிய தொகுதிகளில் பாளையங்கோட்டை தொகுதியை (மேலப்பாளையம் உள்ளடக்கியது) வாங்கி மேல்படி இலாஹிக்கு கொடுத்து தனது செஞ்சோற்றுக் கடனை தீர்த்து கொள்வதற்காகவும் அதன்பேரில் துபாயில் வசூல் வேட்டை நடத்துவதற்காகவும் தமுமுக தலைமையில் திட்டமிட்டார்கள்.

திட்டமிட்டப்பிரகாரம் துபாயில் இருந்த இலாஹிக்கு தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி ( இவர் ஏற்கனவே ரியாத்தில் விசா பிஸினஸ் செய்து பெருந்தொகையை அமுக்கிக் கொண்டு தலைமறைவானவர் ) பாளை தொகுதியை வாங்கித் தருகிறோம் ஞாயமான தொகையுடன் தாயகம் வந்து சேருங்கள் என்று தகவல் அனுப்பினார். அதன் பிரகாரம் மேல்படி அமுக்கல் பேர்வழி துபாயில் முக்கியமான அரசியல் பிரமுகர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு கேம்ப் கேம்பாகவும், பெரும் பெரும் தொழில் அதிபர்களையும் சந்தித்து கணத்த தொகையை கரந்து கொண்டு தாயகத்திற்கு வந்து சேர்ந்தார்.

கத்தை கத்தையாக ஃபாரின் கரன்சி கட்டுகளுடனும், கோட்டை கணவுகளுடனும் தாயகத்திற்கு வந்தவர் நிலைமை தலைகீழாக இருப்பதைப் பார்த்து ( முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பாளை தொகுதியை விட்டுக் கொடுக்க வலுவாக மறுத்து விட்டார் ) மீண்டும் துபாய்க்கு ஓட்டம் பிடித்தார் ஆனால் வசூலித்த எவரிடமும் அதன் தொகைகளை திருப்பித் தரவில்லை, அவற்றை அப்படியே அமுக்கிக் கொண்டார்.

இப்படிப்பட்ட பணத்துக்காக சமுதாயத்தில் மாண மரியாதையை இழந்து கேவலப்பட்ட ஒருவர் தான் மாபெரும் மக்கள் தலைவரும், மதகுருவுமாகிய மரியாதைக்குரியவரை இடிந்துரைக்கிறார் என்பதை உங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திமுகவுடன், தமுமுக கூட்டணி
தேர்தர் நேரத்தில் அனைத்து முஸ்லீம் அமைப்புகளிலும் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திமுகவுடன், தமுமுக மட்டும் தான் கூட்டணி அமைத்தது அதனால் தான் இடஒதுக்கீடு அளித்தாக உளறி இருக்கிறார்.

மற்ற அமைப்புகளை விட தமுமுக தான் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திமுகவுடன் கூட்டணி அமைத்தது உண்மை என்றால் ஆளும் மாநில ( திமுக ) அரசை வற்புருத்தி தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்களை நடத்தாமல் டெல்லிக்குச் சென்று ஏன் ஆர்பாட்டம் செய்தார்கள்? கூட்டணி அமைக்கும் போது மாநில அரசுக்கு இடஒதுக்கீடு வழங்கும் உரிமை உண்டு எனும் நம்பிக்கையில் கூட்டணி வைத்தவர்கள் அதற்கடுத்து மாநில அரசால் முடியாது என்று அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்த மர்மம் என்ன ? இப்பொழுது மாநில அரசு இடஒதுக்கீடு அறிவித்ததில் தனக்கு பங்கு உண்டு என்று எவ்வாறு கூறுகிறார்கள் ? இது முன்னுக்குப் பின் முரணாக இல்லையா ? அல்லது இடஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுக்கா ? மத்திய அரசுக்கா ? என்ற அரசியல் ஞானம் அறவே இல்லாமல் தான் கூட்டணி வைத்தார்களா ? இப்படிப்பட்ட ஞான சூன்யங்களை நம்பி பின் செல்லும் பாமர மக்களுடைய நிலை என்னாவது ? தவ்ஹீத் ஜமாத்துடைய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் தான் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது.

தீவிரவாதத்தை ஆதரித்தாரா?
 தீவிரவாதம் தான் தீர்வு என்ற உறுதியுடன் இருந்த பலரை ( இன்றும் கோவை சிறையில் அடைபட்டு கிடப்பவர்களில் முக்கியமானவர்களை ) தான் ஒரு மதபோதகர் என்ற அடிப்படையில் அறிஞர் பி.ஜே அவர்கள் தனிப்பட்ட முறையில் அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தை எடுத்துரைத்து தீவிரவாதத்திலிருந்து தடுத்து நிருத்தி இருக்கிறார்கள். அதையும் மீறிப்போய் விழுந்து விட்டவர்கள் அவர்கள்.

 ஜிஹாத் என்றப் பெயரில் அப்பாவி இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டும் விடியாத தலைவர்களுக்கும், அதில் போய் வீழ்ந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களுக்கும் ஜிஹாத் என்றால் என்ன ? ஜிஹாத் யாருக்கு கடமை ? எப்பொழுது கடமை ? ( இஸ்லாமிய அரசுக்கு மாத்திரம் கடமை, எந்த ஒரு அமைப்புக்கோ, தனி மனிதனுக்கோ ஜிஹாத் கடமை அல்ல ) என்று கொடிக்கால் பாளையத்தில் குர்ஆன் - ஹதீஸ் ( மார்க்க )அடிப்படையில் விலாவாரியாக விளக்கி பேசிய இரண்டு சிடிக்கள் இன்றும் உலகம் முழவதுமுள்ள தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சென்டர்களில் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் தீவிரவாதத்தை ரகசியமாக அவர் தூன்டி இருப்பாரா ?

பதவி ஆசையும், சுய விளம்பரத்தை விரும்புபவரா ?
 அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமுமுக உருவாக்கப்பட்டு அதனுடைய பொதுக் கூட்டங்களில் லட்சோப லட்சம் மக்கள் திரளில் ஒவ்வொரு முறையும் தவறாமல் இந்த அமைப்பை அரசியல் அமைப்பாக்க மாட்டோம், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம், உங்களை எங்களுக்காக ஓட்டுப் பொறுக்கும் கூட்டங்களாக ஆக்க மாட்டோம் என்று ஏக இறைவனின் மீது சத்தியமிட்டு முழங்குவார்கள். அதனடிப்படையில் இன்றளவும் வாக்கு மாறாமல் நடந்து வருகிறார்கள் அதனால் தான் இத்தனைப் பெரிய மக்கள் கூட்டம் அவர்கள் பக்கமும், பதவிக்காக துதி பாடக்கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய இலாஹி வகையறாக்கள் இந்தப் பக்கமும் இருக்கிறார்கள்.

தீவிரவாத்தினால் தான் நாடு கடத்தப்பட்டாரா ?
 இறந்தவர்களுடைய சமாதியில் மண்டியிட்டு பிரார்த்திப்பவர்களும், இறந்தவர்களுக்காக பூஜை, புனஷ்காரம் செய்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இலகுவாக சொர்க்கம் செல்வார்கள் நரக வேதனை குறைக்கப்படும் என்ற அவ நம்பிக்கையை பாமர மக்கள் மனதில் விதைத்து, பேய், பிசாசு, பில்லி, சூனியம் விரட்டுகிறேன் என்ற நம்பிக்கையையும் விதைது அதையே தொழிலாக செய்யும் ஒருக் கூட்டம் எங்களிலும் உண்டு இவ்வகையைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலும், மலேஷியாவிலும் அதிகமானோர் உண்டு அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் மேல்படி நாடுகளுக்கு மதபிரச்சாரம் செய்யச் சென்றபொழுது தமுமுக காரர்கள் அவர்களை உசுப்பி விட்டு பொய்யான தகவல்களை அரசுக்கு அளித்து தங்கள் செல்வாக்கு மூலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள் என்பது உண்மைiயே தீவிரவாதத்தினால் என்பது தார்ப்பாயில் வடிகட்டிய பொய். ஆனாலும் அதன் பிறகு அங்கு மாபெரும் எழுச்சியை எங்கள் அமைப்பு அடைந்திருக்கின்றன.

அரைவேக்காடுகளுக்கு. . .
அறைத்த மாவையே அறைத்துக் கொண்டிருக்கும் அரைவேக்காட்டுக்கு அடிக்கடி பதில் கொடுத்துக் கொண்டு எமது பொண்ணான நேரத்தை வீனாக்குவதற்கு நாம் தயாராக இல்லை என்பதால் பதில் கொடுத்துக் கொண்டிருப்பதை நிருத்தி வைத்திருந்தோம் இப்பொழுதும் நமது நிலை அதே தான் ஆனாலும் உங்களுக்கு மேல்படி அவதூறு மெயில் வுழு செய்யப்பட்டிருந்ததால் உங்களுக்காக உள்ள ஸ்பெஷல் விளக்கமே இது, மற்றபடி எங்கள் சகோதரர்களுக்கு இது அறிந்த பழைய விஷயமாகும்.

எங்கள் தலைவருடைய பேட்டியை முழுப்பக்கத்தில் அறிவுப்பூர்மான கேள்விகளுடனும், ஆதாரப்பூர்வமான பதில்களுடன் இடம் பெறச் செய்தமைக்காக நன்றி கூறி நிறைவு செயகிறேன் .

இப்படிக்கு
ஏ.எம்.பாரூக்
தபால் பெட்டி என் : 5795,
ரியாத்: 11432,
கே.எஸ்.ஏ.

கல்லூரிகளிலும் செல்போனுக்கு தடை கோரும் ராமதாஸ்


பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது போல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது போல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகளும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இளைஞர்களின் சக்தி செல்போன் பேச்சால் வீணடிக்கப்படுகிறது.

முன்பெல்லாம் திருமணம் நிச்சயமான பின்னர் ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் தொலைபேசியில் பேசிக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது முன்பின் அறிமுகமே இல்லாத நபரிடம் கையில் செல்போன் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசி முனங்கிக் கொண்டிருக்கிறார்கள். கண்டதும் காதல், காணாமல் காதல் மாதிரி இது செல்போனில் காதல். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த 16ம் தேதி நடந்த அரசு விழா ஒன்றில் இளைஞர்களை கெடுக்கும் வகையில் கெட்ட நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தியேட்டரில்தான் இது போன்று நடனங்களை ஆடுகிறார்கள் என்றால் இந்த விழாவில் யாருக்காக அப்படிப்பட்ட நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. இது இளைஞர்களை கெடுக்கும் வகையில் அமைந்திருந்தது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதமும், கிருஸ்துவர்களுக்கு 3.5 சதவீதமும் ஆக மொத்தம் சிறுபான்மையினருக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

முதல்வர் கருணாநிதி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அவை முன்னவரும் நிதியமைச்சருமான அன்பழகன் இதை முன்மொழிந்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, இன்றைய கூட்டத்துடன் சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Thanks...thatstamil


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்புக்குறித்தான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தினமணி நாளிதழில் வெளியான சகோதரர் பி.ஜே அவர்களுடனான சிறப்புப் பேட்டியை முழுமையாக எழுத்துருவில் கீழே தந்துள்ளேன். தினமணி போன்ற நாளிதழ்கள் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பரப்பும் போது அதற்கு நாம் நமது பத்திரிக்கை வாயிலாகவும், இன்னபிற வழியிலும் நமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வந்துள்ளோம். முஸ்லிம்களின் நியாயமான கருத்துக்களை பெரும்பாலான மீடியாக்கள் புறக்கணித்தே வந்துள்ளது. அதற்கு தினமணியும் விதி விலக்கல்ல. ஆனால், முஸ்லிம்கள் நடுநிலை சமுதாயமாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விடப்பட்டுள்ள கட்டளை. நமக்கு அநீதி இழைக்கப்படும் போது எவ்வாறு நாம் துளிர்த்து எழுகிறோமோ அது போலவே நமக்கு நன்மை நடக்கும் பொழுது அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.

அதனடிப்படையில் என் பங்கிற்கு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களை தொடர்பு கொண்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன். அதுபோல் நீங்களும் உங்கள் வாழ்த்துச் செய்திகளை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்.

info@dinmani.com

editor@dinmani.com

அன்புடன்,
முத்துப்பேட்டை ஏ.ஆர்.பரக்கத் அலி
ரியாத் - சவுதி அரேபியா.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - இது இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் அமைப்பு. கும்பகோணத்தில் இந்த அமைப்பு நடத்திய பேரணியும் ஊர்வலமும், சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய முஸ்லிம் பேரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜைனுல் ஆபிதீனை ஒரு மதச்சார்பு இயக்கவாதி என்பதைவிட ஒரு சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர் என்பது ஒரு புறம் இருக்க, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதில் முனைப்பாக இருப்பவர் என்பதுதான் இவருடைய தனித்தன்மை. சொல்லப் போனால் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் முஸ்லிம்களுக்கான இடஓதுக்கீடு, தவ்ஹீத் ஜமாத்தின் சிறை நிரப்புப் போராட்டத்தின் எதிரொலிதான் என்று கருத இடமுண்டு. இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய சமுதாயம் பற்றியும் என்ன கேள்வியைக் கேட்டாலும் அதற்குக் கோபப்படாமல் பதில் சொல்லும் இவரது லாவகம், பிரமிக்க வைக்கிறது. ஒரு சமுதாயத்தை நேர்வழியில் நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் படைத்தவர் என்று மாற்று மதத்தினரும் மதிக்கும் தலைவராக இருக்கும் ஜைனுல் ஆபிதீனின் இன்னொரு சிறப்பு - பதவி அரசியலில் இவருக்கு இல்லாத நாட்டம்.


தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அளித்த சிறப்புப் பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆரம்பம் என்ன? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?

எங்களது இயக்கத்தின் தொடக்கம் எண்பதுகளில் ஆரம்பித்தது. வரதட்சிணை, பெண் அடிமைத்தனம், புரோகிதம் போன்ற மூடநம்பிக்கைகள் முஸ்லிம்களிடமும் இருக்கின்றன. திருக்குரானுக்கு எதிரான செயல்கள் இவை என்பதை நாங்கள் எடுத்துரைத்தோம். அதனால், எங்கள் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட அதுதான் காரணமாக இருந்தது. ஜாக் என்பது அந்த அமைப்பின் பெயர் ஜமியா அஹவி குர்ரான் -ஊல் - ஹதீஸ் என்பது அதன் விரிவாக்கம்.திருக்குர்ரான் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அர்த்தம். சுமார் பதினைந்து வருடங்கள் எங்களது பிரசாரம் தொடர்ந்தது. மெல்ல, மெல்ல சமுதாயத்தினர் மத்தியில் பெரிய அளவில் எங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.

நமக்கு எதிராகத் தொடுக்கப்படும் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்களாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம்.தங்களது எதிர்ப்பை நியாயமாகத் தெரிவிக்க முடியாதபோதுதான், வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர்கள் இறங்குகிறார்கள்.

அதற்காக ஏற்பட்ட அமைப்புதானே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்?

ஆமாம். அதன் அமைப்பாளர் நான்தான். குணங்குடி ஹனீஅபா என்பவர் அந்தப் பெயரில், பெயரளவில் ஓர் அமைப்பை வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைத் தலைவராக அறிவித்தோம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு விசயங்களில் தீர்மானமாக இருந்தோம்.அவை,எந்தக் காரணம் கொண்டும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதும்,எந்தவித அரசுப் பதவியும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும்தான்.

அதற்கு என்ன காரணம்?

பதவியைக் காட்டிதான் எங்களது சமுதாயம் பல வருடங்களாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1967-ல் 'காயிதே மில்லத்' முகம்மது இஸ்மாயில் அவர்கள் திமுகவுடனான கூட்டணியில் பெற்ற இடங்கள் 15. இப்போது ஓர் இடத்திற்குக் கூட்டணி கட்சிகளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. 1967-ல் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னால் அண்ணா அளித்த வாக்குறுதி தான் எங்கள் சமுதாயத்துக்கான இடஓதுக்கீடு. அதனால்தான் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தது. அண்ணா இறந்துவிட்டதும் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் தங்களது இடங்களுக்கான ஒதுக்கீட்டுடன் ஒதுங்கிக் கொண்டார்களே தவிர, சமுதாயத்துக்கான இடஓதுக்கீடு பற்றிக் கவலைப்படவில்லை. அதனால்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதோ, பதவிக்கு ஆசைப்படுவதோ கூடாது என்று தீர்மானம் போட்டோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிளவுபட என்ன காரணம்?

முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்கிற தவறான கண்ணோட்டம் மாறவேண்டும் சமுதாய நல்லிணக்கத்துக்காக நாம் பாடுபட வேண்டும் போன்ற உறுதியான கொள்கைகளுடன் பல்வேறு மாநாடுகளையும், ஆங்காங்கே கூட்டங்களையும் ஏற்பாடு செய்தோம். அப்படி நடத்திக் காட்டியதுதான் தஞ்சையில் நடத்திய பேரணி. அந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம் இண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் எங்களில் சிலருக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்திவிட்டது. பதவி ஆசை வந்துவிட்ட பிறகு சமுதாய நலன் புறக்கணிக்கப்பட்டு விடும் என்பது எனது கருத்து. அவர்கள் பாதையில் செல்ல எனது மனம் ஒப்பவில்லை. அதன் விளைவுதான் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

ஆமாம், தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன அர்த்தம்?

தவ்ஹீத் என்றால் சரியான இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்று அர்த்தம். நமது சீர்திருத்தப் பிரசாரம் கைவிடப்பட்டால் நமது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் நாட்டமுடைய த.மு.மு.க. நிர்வாகிகளில் சிலர் கருதினார்கள். 'தவ்ஹீத்' தங்களது அரசியல் ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபிப்பதற்காகத்தான் எங்களது இயக்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்று பெயரிட்டோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு உங்களுடைய முயற்சிகள் முக்கியமான காரணம் என்று கருதப்படுகிறது. இட ஒதுக்கீட்டை நீங்கள் வலியுறுத்தியதன் காரணம் என்ன?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, அது சரியா, அதிலென்ன நியாயம் என்று கேட்கிறார்கள். முதலாவதாக, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பறிக்கப்பட்ட உரிமை திருப்பித் தரப்படுவதுதானே தவிர, புதிய சலுகை அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது எங்களுக்கு இருந்த இட ஓதுக்கீடு ஏழு சதவீதம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீடுதான் தனியாகப் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த விசயத்தைப் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எங்களை அழைத்துப் பேசினார். அப்போது மதரீதியாக இட ஓதுக்கீடு அளிக்க அரசியல் சட்டம் இடமளிக்காது என்று கருத்துத் தெரிவித்தார். இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள்தான் அந்த வழியைக் காட்டினோம்.

நீங்கள் காட்டிய மாற்று வழிதான் என்ன?

ஏற்கனவே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற எங்களது இஸ்லாமியப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடில் இடம் பெற்றிருக்கிறார்கள். மொத்த பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அதன் பயன் எங்களுக்கு கிடைப்பதில்லை.புதிதாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போதுதான் பிரச்னை வருமே தவிர, ஏற்கெனவே இருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமாகப் பிரித்து ஒதுக்குவதில் யாரும் குற்றம் காண முடியாது என்பதைக் கனிமொழியிடம் எடுத்துரைத்தோம். இடஒதுக்கீடு கிடைத்ததற்கு எங்கள் சமுதாயம் நன்றி சொல்ல வேண்டியது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் தான்.

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவைதானா?

நிச்சயமாகத் தேவைதான். மதரீதியாக மட்டும் அதைப் பார்க்கக்கூடாது. சமுதாய நல்லிணக்க ரீதியாகவும் பார்க்க வேண்டும். எங்கள் சமுதாய இளைஞர்கள் பலர் படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு வேலையில்லை. இப்படிப் படித்த, வேலையில்லாத இளைஞர்களைத்தான் தீவிரவாத இயக்கங்கள் குறிவைத்துத் தங்களது வலையில் வீழ்த்துகின்றன. போதிய படிப்பறிவும், வேலையும், அதனால் ஏற்படும் சமூக அந்தஸ்தும் முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடாமல் தடுக்கும்.

இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்றுக்கொன்று பிணைந்தவையாக இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?

இது மேலைநாட்டவரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று வேலை. விடுதலைப் போராளிகளை மதத்தின் பெயரால் குற்றம் சாட்டுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும்,இராக்கில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், பாலஸ்தீனத்தில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும் இஸ்லாமியராக இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்யமுடியும்? அமெரிக்காவிலும், ர;யாவிலும், பிரான்ஸிலும் அவரவர் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது அமெரிக்க உள்நாட்டுப் போராளி, ரஷியப் புரட்சிக்காரர், பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் என்று சொன்னார்களே தவிர, கிறிஸ்துவப் புரட்சியாளர்கள் என்றா கூறினார்கள்?

அப்படியானால் இந்தத் தீவிரவாதிகளை எப்படித்தான் அழைப்பது?

அந்தந்தத் தீவிரவாத அமைப்பின் பெயரால் அழையுங்கள். அதற்கு ஏன் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று பெயரிட்டு அத்தனை இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று சித்திரிக்கிறீர்கள்? இப்படி அழைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கு வழி வகுக்கப்படுகிறது. அது தவறு என்கிறோம்.

இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் வரவேற்பு இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தீவிரவாத இயக்கங்களை ஆதரிப்பதே இல்லை. தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல் எந்தவொரு சமுதாயமும், சமாதானமாகவும், பிரச்னைகள் இல்லாமலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புமே தவிர, இது போலத் தீவிரவாத அமைப்புகளுடன் ஒத்துழைக்கவே முன் வராது. அது மனித இயல்பு. இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல், இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது மடமை. விவரமில்லாத பேச்சு.

இந்தியாவில் காணப்படும் தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

நக்சலைட்டுகள், காஷ்மீர தீவிரவாத இயக்கங்கள், அசாமிலுள்ள போடோ தீவிரவாதிகள் என்று பலர் இருந்தாலும், இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.ஏஸ்.ஐ.யுடன் தொடர்புடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதிவலையில் விழுந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே நிலவும் மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். அப்படி என்ன மூடநம்பிக்கைகள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?

வரதட்சிணை என்கிற பழக்கமே திருக்குர்ரானுக்கு எதிரான விஷயம். ஆண்கள்தான் பெண்களுக்கு 'மஹர்' தரவேண்டுமே தவிர, ஆண்களுக்குப் பெண்கள் வரதட்சிணை தரும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் தற்போது இந்தப் பழக்கம் நிலவுகிறது. அதேபோல, தர்கா வழிபாடு திருக்குர்ரானில் மறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் பெண்கள் பலரும் தர்காவுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அது தவறு என்று கூறுகிறோம். புரோகிதம் என்பது இஸ்லாமியர்களுக்குக் கிடையாது. அதேபோல, ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக உரிமைகளை இஸ்லாம் அளித்திருக்கிறது. ஆனால் அவை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விவாகரத்து விஷயத்தில் ஆணுக்கு இருப்பதைவிட அதிக உரிமை பெண்களுக்குத்தான். அவர்களது உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.

பெண்களின் சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்று கூறும் நீங்கள், பெண்கள் 'பர்தா' அணிவதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

'பர்தா' என்பது உடலை மறைக்கும் ஆடை. அவ்வளவுதான். இஸ்லாமில் முகத்தை மறைக்கவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் முகத்தையும் கை, கால்களையும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான நியதி. பெண்கள் 'பர்தா'தான் அணிய வேண்டும் என்பதில்லை. உடலை மறைக்கும் உடைகளை அணியவேண்டும், அவ்வளவே..!

அவரவர் இஷ்டப்படி உடையணியும் உரிமை ஏன் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது?

ஆண்கள் தொப்புளைக் காட்டியபடி ஆடையணிவதில் எந்தவிதக் கவர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி உடையணிவதில்லையே? பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடையணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? ஆண்கள் உடலை மறைத்து உடை அணிவது போலப் பெண்களும் உடையணிவதில் தவறு காண்பவர்கள், வக்கிரபுத்தி உடையவர்கள். பெண்களின் உரிமை என்பது உடையணிவதில் அல்ல. அவர்களது நியாயமான அந்தஸ்தையும், மரியாதையையும் பெறுவதில்தான் இருக்கிறது.

தங்களது உடைப் பழக்கத்தாலும், பேச்சு வழக்காலும் இஸ்லாமியர்கள் மற்ற சமுதாயத்தினரிலிருந்து வேறுபடுகிறார்கள் என்கிற கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை, உடைப் பழக்கம் மாறுபடுகிறது என்பது சரி, ஆனால் பேச்சு வழக்கு மாறுபட்டிருக்கிறது என்பது தவறு. உடைப்பழக்கம் என்றால், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவரவர் உடைப் பழக்கங்கள் இருக்கின்றன. அதில் நாம் தவறு காண முடியாது. தமிழகத்தில் உள்ள பெருவாரியான முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள்தான். வெறும் ஐந்து சதவிகித முஸ்லிம்கள்தான் உருது பேசுபவர்கள். சினிமாவில் முஸ்லிம்கள் என்றாலே 'நம்பள்கி, நிம்பள்கி' என்று பேசுவது போலக் காட்டி தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்கிற ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எங்கள் சமுதாயத்தினர் மத்தியில் இருக்கும் தமிழார்வம் எத்தகையது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

கிறிஸ்துவர்கள் மாதா கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தும்போது, இன்றும் பள்ளிவாசலில் அரபிதான் ஒலிக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஆனால் ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய 'ஜனகணமண' என்கிற தேசிய கீதத்தை நாம் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்? அந்த தேசிய கீதம் வங்காலத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய் விடுகிறோமா? கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான். பிராத்தனைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி செய்து கொள்ளலாம். பல்வேறு இனத்தவரையும், நாடுகளையும் கடந்தது மதமும், இறையும். அதை ஒருங்கிணைக்க, மத ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு மொழியை தொழுகை மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது அரபி, அவ்வளவே. பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதால், நாங்கள் தமிழரல்ல என்று சொல்வது அபத்தமான வாதம்.

அயோத்தி பிரச்சனையில் உங்கள் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

இப்படி ஒரு பிரச்சனையை தீர்வே இல்லாமல் இழுத்துக் கொண்டு போவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், நமது வருங்காலத்துக்கும் நல்லதல்ல. அப்படியொரு சூழ்நிலையை அரசும், அரசியல் கட்சிகளும் உறுவாக்கி அதில் ஆதாயம் தேட முயலுகிறார்கள் என்பது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக இரண்டு தரப்பினருக்கும் ஏற்புடைய நீதிபதிகளை தேர்ந்தெடுத்து. ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விரைவாக தீர்ப்பு அளிப்பதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். அந்தத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

ராமர் பாலப் பிரச்சனை பற்றி...?

இந்தப் பிரச்சனைக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் சம்பந்தமே கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். எங்களை ஏன் அநாவசியமாக வம்புக்கு இழுக்குறீர்கள்?

ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் வரும்போது மட்டும் கலவரங்கள் ஏற்படுகின்றனவே, அது ஏன்?

எங்களை கேட்டால் எப்படி? கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்கள். எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா? மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களை கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது கலவரம் நடந்ததுண்டா? காரணம், அவை பக்தர்களால் நடத்தப்படுபவை. ஆனால், வினாயகர் ஊர்வலங்கள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. மதமும், அரசியலும் ஓர் அபத்தான கலவை. அதனால்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

முஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள் தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மை சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது - இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?

முஸ்லிம்கள் பலதார மணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்திய புள்ளி விவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்க வேண்டும், தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதரா மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்து விட்டது என்பதுதான் நிஜம்.

இஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். சின்ன விஷயத்தைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களுடைய பதில் எ ன்ன?

எங்களுக்கு இழைக்கப்படும் பல அவமானங்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. தாங்கிக் கொள்கிறோம். மனதிற்குள் புழுங்குகிறோம். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான். எங்களை இந்தியர்களாக பார்க்காமல், இஸ்லாமியர்களாக, பாகிஸ்தானின் கைக்கூலிகளாக சிலர் சித்தரிக்க முற்படும் போது நாங்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. இந்திய முஸ்லிமுக்கு இருக்குமளவு சகிப்புத் தன்மை உலகில் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்ல வேண்டும். அதையும் மீறி நாங்கள் இந்த தேசத்தை, இந்த மண்ணை நேசிக்கிறோம். ஏன் தெரியுமா? தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்தியர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். இன்னும் சகிப்போமே தவிர எங்கள் இந்தியத் தனத்தை இழக்க மாட்டோம்.

Monday, October 22, 2007

முத்துப்பேட்டை - TNTJ கண்டன ஆர்ப்பாட்டம்!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பி.ஜே.பி - இந்து முன்னணி குண்டர்களால் முத்துப்பேட்டை வாழ் முஸ்லிம்கள் தொடர்ந்து பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகி வருவதையும், அங்குள்ள காவல் துறையினர் பாரபட்சமாகவும், அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதையும் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.

இதன் தொடரில் கடந்த சில தினங்களாக மீண்டும் அங்கு மோதல் ஏற்பட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொய் வழக்குகளுக்கு பலரும் பலியாகியுள்ளனர்.

அங்கு நிலவும் பதட்டத்தைத் தணிக்கவும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை கலந்து ஆறுதல் கூறவும் தேவையான மேல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் டி.என்.டி.ஜே மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.எஸ் அலாவுத்தீன் 16-10-2007 அன்று முத்துப்பேட்டை சென்றார்.

அதனை தொடர்ந்து இன்று 20-10-2007 திருவாருரில் மௌலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

--
அன்புடன்,
அபிவிருத்தி

பி.ஜே.பி இந்து முன்னணி குண்டர்களால் முத்துப்பேட்டை முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,

அராஜக போக்கில் நடந்து கொள்ளும் முத்துப்பேட்டை காவல் துறையை கண்டித்தும், தடையை மீறி சென்னையில் இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்!

எஸ்.எம் பாக்கர் மற்றும் ஏ.எஸ் அலாவுத்தீன் கண்டன உரை!
Thanks...TNTJ.NET

Saturday, October 20, 2007

TNTJ 2007 ரமளான் பித்ரா வினியோகம்

TNTJ 2007 ரமளான் பித்ரா வினியோகம்
லக்சக்கணக்கானா ஏழை முஸ்லிம்கள் பயனடைந்தனர்!

TNTJ தலைமை ஃபித்ரா வினியோக வரவு செலவு கணக்கு.

2007 ஆம் ஆண்டு ஃபித்ரா வரவு செலவு விபரம்


வரவு விவரம்

01 - குவைத்

290000.00

02 - தம்மாம்

460000.00

03 - ஜித்தா

590000.00

04 - புரைதா

98000.00

05 - அல் ஹஸா

53000.00

06 - ரியாத்

588000.00

07 - அல்ஹைல்

25803.00

08 - யு.எ.இ

700000.00

09 - கத்தார்

173000.00

10 - மலேசியா

130000.00

11 - சிங்கப்பூர்

2720.00

12 - தலைமை வசூல்

51720.00

மெத்தம்

3162243.00


செலவு விவரம்

1 - வட சென்னை

118000

2 - தென் செனனை

94000

3 - திருவாருர்

158500

4 - தஞ்சை வடக்கு

147000

5 - தஞ்சை தெற்கு

50000

6 -புதுக்கோட்டை

208000

7 - தர்மபுரி

40000

8 - திருவண்ணாமலை

44000

9 - நாமக்கல்

35000

10 - சிவகங்கை

124000

11 - நீலகிரி

30000

12 - தூத்துக்குடி

75000

13 - காஞ்சி

100000

14 - நெல்லை

205000

15 - தேனீ

47500

16 - திருவள்ளுர்

68000

17 - வேலூர்

65000

18 - கன்னியாகுமரி

83000

19 - இராமநாதபுரம்

200000

20 - ஈரோடு

40000

21 - திண்டுக்கல்

50000

22 - விருதுநகர்

50000

23 - மதுரை

117000

24 - சேலம்

35000

25 -திருச்சி

50000

26 -கருhர்

20000

27 - பாண்டி

50000

28 - காரைக்கால்

25000

29 -நாகை தெற்கு

60000

30 - நாகை வடக்கு

85000

31 - கோவை தெற்கு

120000

32 -கோவை வடக்கு

50000

33 -கடலூர்

201000

34 -விழுப்புரம்

207000

35 -கேரளா


12000

36 - கர்நாடகா

27000

37 -பெரம்பலூர்

44000

38 - இலங்கை S.L.T.J

6025

39 - தனி தலமை முலம்

3000

மெத்தம்

3144025

மீதம் உள்ள தொகை

18218

குறிப்பு :மீதம் உள்ள தொகை சில கிளைகள் அதிகபடியாக செலவு செய்துள்ளனர் அப்படிபட்ட கிளைகளிடம் இருந்து முறையான கணக்குகள் வந்த பின ;இன்ஸா அல்லாஹ் அவர்களுக்கு பிரித்து அளிக்கப்படும்

நன்றி: TNTJ.NET

சேது ராமன் ' திட்டம் என பெயர் வைக்கவும் தயார் : கருணாநிதி


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அத்திட்டத்திற்கு ' சேது ராமன் ' திட்டம் பெயர் வைக்கவும் தயார் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக அவர் பேசுகையில் கூறியதாவது : சேது சமுத்திர திட்டத்தை வேண்டுமென்று சொன்னவர்கள், இப்போது வேண்டாமென்கிறார்கள்.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசும், திமுக அரசும் இணைந்து இந்த பெயரை பெற்று விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை சீர்குலைக்க, தேவையில்லாமல் ராமரை பிடித்து இழுக்கிறார்கள்.

ஏதோ ராமர் என்றால் எனக்கோ அல்லது பேராசிரியருக்கோ பிடிக்காது என்பதுபோல்.

அண்மையில் விழா ஒன்றிலே கூட நண்பர் ரஜினிகாந்த் பேசும்போது, ராமரை உங்களுக்கு பிடிக்காது என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொன்னார்.அதற்கு நான் சொன்னேன், அப்படியெல்லாம் ராமர் மீது எங்களுக்கு விரோதம் கிடையாது என்று அவர்களிடத்திலே சொல்லுங்கள் என்று.

வேண்டுமானால் ' சேது ராமன் ' திட்டம் என்றே கூட பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.எங்களுக்கு வேண்டியது திட்டம்.எங்களுக்கு வேண்டியது அந்த வழி ; அந்த வாய்க்கால்.எங்களுக்கு வேண்டியது தமிழ் நாட்டின் வளம்.

அதற்காகத்தான் இந்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்ற சொல்கிறோமே தவிர, ஏதோ வீண் பிடிவாதத்திற்காக, ராமனை இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக யாரும் இதை சொல்லவில்லை.

இந்த அரசு யாரையும் புண்படுத்த வேண்டுமென்று விரும்புகின்ற அரசல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.
(எது எப்படியோ சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதற்க்குள் இன்னும் என்ன என்ன கூத்து நடக்க போகிறதோ...)

Thursday, October 18, 2007

சக்தியற்ற சாயிபாபா - வீதிக்கு வந்த பித்தலாட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால் ...

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சாயிபாபாவை தரிசிக்க சென்று மாரடைப்பினால் அவர் காலடியிலேயே விழுந்து மரணமடைந்தார் என்ற பத்திரிகை செய்தி அறியாதவர்கள் புரிந்து கொள்வதற்காக பல தகவல்களை நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளது.

தன்னுடைய பக்தர்களுக்கு தனது உள்ளங்கையிலிருந்து தங்க செயினை எடுத்துக் கொடுக்கக்கூடிய சாயிபாபாவிற்கு தன்னுடைய காலடியில் ஒருவர் மரணமடைவார் என்ற ஞானம் இல்லாமல் போனதெப்படி?

வருவோருக்கெல்லாம் தீர்க்காயுசோடு வாழ்க என ஆசி வழங்கும் சாயிபாபாவினால் கண்முன்னே நடந்த மரணத்தை தடுக்க முடியாமல் போனதெப்படி ?

சாகாவரத்திற்கும் செல்வம் கொழிக்கவும் யாகங்கள் நடத்தும் சாயிபாபாவினால் ஏதாவதொரு யாகத்தை நடத்தி இறந்தவரை உயிர்ப்பிக்க முடியாமல் போனதெப்படி ?

இதுதான் இன்று பலரும் எழுப்பக்கூடிய கேள்வியாக இருக்கின்றது. தன்னை தரிசிக்க வந்த ஒருவர், அதுவும் அனைவராலும் அறியப்படக்கூடிய ஒரு தொழிலதிபர் தன் காலடியிலேயே இறந்துவிட்டதால் தன்னுடைய படத்தைவைத்து பூஜித்துக்கொண்டு, தன்னை நம்பியிருக்கும் மக்கள் தன்னுடைய பித்தலாட்டத்தை தெரிந்து கொள்வார்களே என பயந்து தனது முழு சக்தியையும் பயன்படுத்தி இறந்தவருக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டாமா ?

சக்தி இருந்தால் தானே செய்வார். இவருக்கு எந்த சக்தியும் கிடையாது, சில வித்தைகளை செய்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்பதை இவரை நம்பி ஏமாந்த மக்கள் இனியாவது விளங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜே அவர்கள் லிங்கத்தையும் செயினையும் கையிலிருந்து எடுத்து கொடுக்கும் சாய்பாபா, ஒரு பூசணிக்காயை எடுத்து தருவாரா என்று பொது மேடையிலேயே கேட்டார். லிங்கத்தையும் செயினையும் கைகளுக்குள் மறைத்து விட முடியும். ஆனால் பூசணிக்காயை மறைக்கமுடியாதல்லவா? அதுபோல திராவிடர் கழகத்தின் பெரியார் பித்தன் சாய்பாபாவின் கோட்டைக்கு முன்பாக சென்று சாய்பாபாவை விட சிறந்த பல வித்தைகளை செய்து காட்டி சவால் விட்டார். இதை செய்ய எந்த சக்தியும் தேவையில்லை. அனைவராலும் செய்ய முடியும் என்பதையும் நிரூபித்தார்.

இவருக்கு சக்தியிருந்தால் தினந்தோறும் பசியும் பட்டினியுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கு தன்னுடைய சக்தியால் உணவை (அதுவும் வேக வைத்த உணவை) வரவழைத்து கொடுத்து ஏழ்மையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும்.

தினந்தோறும் நோய்களினால் அவதிப்படும் நம் நாட்டு மக்களின் நோய்களை போக்கி தன்னுடைய சக்தியால் நோயற்ற, ஆரோக்கியமான ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும்.

கட்டி கட்டியாக தங்கத்தை வரவழைத்து, இந்தியாவின் கடனை அடைத்து, கடனில்லாத இந்தியாவை உருவாக்கி நம்மை தலை நிமிர்ந்து நிற்கும்படி செய்யவேண்டும்.

அஃதன்றி தன்னுடைய சுய லாபத்திற்காகவும் புகழுக்காகவும் பித்தலாட்டம் செய்து, சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதற்காக அரசியல்வாதிகளிடமும் சில தொழிலதிபர்களிடமும் மட்டும் உள்ளங்கையிலிருந்து தங்க செயினை எடுத்து கொடுக்கும் சாய்பாபா போன்ற ஏமாற்று பேர்வழிகளை அடையாளப்படுத்தி இவர்களிடத்தில் தங்களுடைய கற்பையும் பொருளையும் இழந்துவிடாமலிருக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

- அபு ஆஃபியா

காணவில்லை

ஏக இறைவனின் திருப்பெயரால் ...


பெயர் :வணக்கசாலிகள்

காணாமல் போன தேதி :12-10-2007

அடையாளம் :காணாமல் போன அன்று இறையச்சத்துடன் காணப்பட்டனர்.கடந்த ரமலான் மாதம் முழுவதும் பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த முஸ்லிம்களை கடந்த 5 தினங்களாக காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் (மறுமையில்) வழங்கப்படும். கண்டுபிடிப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள பள்ளிவாசலில் அவரை ஒப்படைக்கும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

இவண;
பிரிவால் வருந்தும் சகோதரர்கள்இன்றைக்கு ஒவ்வொரு பள்ளிவாசலிலும் இத்தகைய போர்டு போடக்கூடிய சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக பள்ளிவாசலுக்கு வந்தனர். சுபுஹூ தொழுகைக்கு கூட ஜூம்மாவை விட அதிகமான மக்கள் வந்தனர். எத்தனையோ புதுமுகங்கள். பெரியவர்,சிறியவர்,ஆண்கள்,பெண்கள் என அனைவருமே வணக்கசாலிகளாகி விட்டதால், அன்றாடம் பள்ளிக்கு வந்து ஐவேளை தொழுதுவந்தவர்களுக்குக்கூட பள்ளியில் இடமில்லாமல் போனது. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. ஏனென்றால், ரமலானில் செய்யக்கூடிய காரியங்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என அனைவரும் விளங்கி வைத்துள்ளனர்.

'யார் நம்பிக்கைக்கொண்டு நற்கூலியை எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹூரைரா (ரலி) ,நூல் : புஹாரி-37

எனவே ரமலானில் ஐவேளை தொழுகையிலும் தவறாது கலந்து கொண்டோம், இரவில் நன்மையை எதிர்பார்த்து தூக்கத்தை தியாகம் செய்தோம், விழித்திருந்து குர்ஆன் ஓதினோம், தான தர்மங்கள் செய்தோம், ஆனால் ரமலான் முடிந்த மறுதினமே அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறோம்!

அல்லாஹ் கூறுகிறான் :

நம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது . (திருக்குர்ஆன் 2:183,184)

இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாகவேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான். அல்லாஹ் எதிர்பார்க்கக்கூடிய இறையச்சம் நம்மில் ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இறையச்சம் என்பது, இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் அது வெளிப்பட வேண்டும். ஒரு இறை நம்பிக்கையாளன் ரமலான் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும்போது, தீமையான பேச்சுக்களை பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அம்மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என எண்ணி அனைத்து தீமைகளை விட்டும் விலகி இருக்கின்றான்.

ரமலான் முடிந்த பின் அவன் தீமையான காரியங்களை செய்யத் ;துவங்குவானானால் அந்த நோன்பானது அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் என்பது இந்த ஒரு மாதத்திற்கு மட்டும்தான், அம்மாதம் முடிந்து விட்டால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று இறைவன் கூறவில்லை. இறையச்சமானது வருடம் முழுமைக்கும் பொதுவானது தான். நாம் ரமலானில் எடுத்த பயிற்சியை வருடம் முழுவதும் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். ரமலான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கருகில், அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட, அவனுக்கு பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்கப்போவதில்லை.
ஆயினும் நாம் இறைவனுக்காக நோன்பு வைத்துள்ளோம். அது நமக்கு தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்கு தடுக்கப்பட்டுள்ளது என்று விளங்கி, விலகி இருக்கின்றான். இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் அதை தவிர்த்து இருக்கிறோம். அப்படியென்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒருபோதும் ஹலால் ஆகாது, எனவே நாம் யாரையும் ஏமாற்றக்கூடாது, யாருடைய பொருளையும் மோசடி செய்யக்கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வரவேண்டும்.
இந்த இறையச்சம் வருவதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளதாக இறைவன் குறிப்பிடுகின்றான். ஒரு முஸ்லிம் என்பவன் குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தை பின்பற்றி வாழ்ந்து பின்பு அவைகள் மாறும் போது தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்பவராக இருக்கக்கூடாது. இஸ்லாத்தை உண்மை மார்க்கமாக ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து மரணிக்கும்வரை எந்த இடத்திலும் எக்காலத்திலும் எந்நேரத்திலும் எப்படிப்பட்ட சோதனைகளை சந்திக்கும் போதும், இஸ்லாத்தில் உறுதியாக இருக்கவேண்டும.;

அல்லாஹ், கூறுகின்றான் : 'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி, அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்! எனக்கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)

குர்ஆனை நமக்கு ரமலானில் இறக்கி தந்து அம்மாதத்தில் நின்று வணங்க சொன்ன அதே அல்லாஹ்தான் உறுதியாகவும் இருக்க சொல்கிறான் .ரமலானில் தொழச்சொன்ன அல்லாஹ்வும் அவனது தூதரும் தான், ரமலான் அல்லாத காலங்களிலும் தொழச்சொல்லியிருக்கின்றார்கள். இறைநம்பிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்களென்றால்

அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தமது இறைவனை பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். (திருக்குர்ஆன் - 32:16)

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும் உண்மை பேசுவோராகவும் (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும் (நல் வழியில்) செலவிடுவோராகவும் இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்பு தேடுவோராகவும் (இருப்பார்கள் ) - (திருக்குர்ஆன் 3:17)

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள ; -(திருக்குர்ஆன் - 51:17,18) என்று அல்லாஹ் குறிப்படுகிறான்.

கடமையான தொழுகைக்கு பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள ;.

அறிவிப்பவர் - அபுஹுரைரா, நூல் : முஸ்லிம்-1982

ஸலாமை பரப்புங்கள், ஏழைகளுக்கு உணவளியுங்கள், மக்கள் தூங்கும்போது தொழுங்கள் (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள ;. அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் ஸலாம்(ரலி) நூல்:திர்மிதி-2409

இரவிலே நின்று வணங்குவதால் எத்தனையோ நன்மைகள் இருக்க அதில் ரமலானுக்கு மட்டும் என்ற முத்திரையை குத்தலாமா?

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் 'அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதுபோல் ஆகிவிடாதீh'; என்று கூறினார்கள ;. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல் : புஹாரி-1152

அதுபோல குர்ஆன் ரமலானில் இறக்கப்பட்டதால் அம்மாதத்தில் குர்ஆனை ஆர்வத்துடன் ஓதுகின்றோம். ஆனால் அதற்கு பின் அதை பரண்மேல் வைத்து விடுகின்றோம். குர்ஆனை எப்பொழுது ஓதினாலும் நன்மை உண்டு என்பது நமக்கு தெரியும். ஆனால் ஏறிட்டும் பார்ப்பதில்லை.

அல்லாஹ்வின் அருள்மறையான திருக்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலிஃப்,லாம்,மீம் ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக,அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள ;. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) ,நூல் : திர்மிதி-2910

இன்று தொலைக்காட்சி நம்மை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. டி.வி இல்லையேல் வாழ்க்கையே இல்லையென்ற அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பாங்கு சொல்வது கூட தெரியாமல் சினிமா, சீரியலில் மூழ்கி கிடக்கின்றோம். ஆனாலும் நம்மில் பலர் நோன்பு நேரங்களில் சினிமா, சீரியல் பார்ப்பதை தவிர்க்கிறோம். ஏனெனில்,

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விட வில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) , நூல் : புஹாரி 1903

ஆனால் ரமலான் முடிந்ததும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடுகின்றோம். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ரமலானில் மட்டும்தான் பொய்யான காரியங்களை விட்டும் தடுத்துள்ளார்களா!

ரமலானில் நம்மை கண்காணித்த அல்லாஹ் என்றென்றும் நம்மை கண்காணிப்பவன் என்ற எண்ணம் எப்பொழுதும் நம்மில் இருக்க வேண்டும். ரமலானில் மட்டும் அவன் டுயூட்டி பார்த்துவிட்டு ஓய்வெடுக்க போய்விடுவதில்லை என்பதை நினைவில் கொண்டு ரமலானில் செய்த வணக்க வழிபாடுகளையும் நற்காரியங்களையும் வருடம் முழுவதும் தொடர்ந்து செய்ய வல்ல இறைவனை பிரார்த்திப்போம் !

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார்தான் பரிpந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதை தவிர. அவனது ஆசனம் வானங்களையும் பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (திருக்குர்ஆன் -2:255)

- முஹம்மது மாஹீன்

Thursday, October 11, 2007

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு மசோதா

முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழஙகுவது தொடர்பான சட்ட மசோதா வரும் சட்டமன்ற குளிக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார்.


நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் 17ம் தேதி காலை தொடங்கும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் பூங்காநகர் நல்லதம்பி , அரவாக்குறிச்சி சதாசிவம், சங்கராபுரம் முத்துசாமி, திருப்பத்தூர் சிவராமன், பவானி நல்லசாமி, மைலாப்பூர் ராம ஜெயம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க அலுவலர் நியமன திருத்த மசோதா, முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, தமிழ்நாடு நகராட்சி சட்ட திருத்த மசோதா உள்பட 5 சட்டத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டம் கூடி சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குளிர்கால கூட்டத் தொடர் என்பதால் குறைந்த நாட்கள்தான் நடைபெறும் என்றார்.

அரசு கேபிள் நிறுவனம் பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படுமா என்று கேட்டபோது அதுபற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான உரிமை மீறல் பிரச்சனை ஆய்வில் உள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Monday, October 08, 2007

பெருநாள் தொழுகை எப்படி தொழ வேண்டும்?

ஏகனின் திருப்பெயரால்..

பெருநாள் தொழுகை என்பது மற்ற வழக்கமான தொழுகைகளைப் போன்று தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற தொழுகைக்கு உள்ள அனைத்து காரியங்களும் பெருநாள் தொழுகைக்கும் செய்யப்பட வேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான நிய்யத் சொல்லிக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

'நிய்யத்' என்பதன் பொருள் மனதால் எண்ணுவதாகும். வாயால் மொழிவதல்ல. எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் வணக்கத்தில் ஈடுபடும் எண்ணம் இருப்பது அவசியமாகும் வாயால் சொல்வது நபிவழி அல்ல.

சாதாரண தொழுகைகளில் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களைவிட பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعَهُ مِنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي عِيدٍ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً سَبْعًا فِي الْأُولَى وَخَمْسًا فِي الْآخِرَةِ وَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا قَالَ أَبِي وَأَنَا أَذْهَبُ إِلَى هَذَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்வார்கள். அதற்கு முன்னும் பின்னும் அவர்கள் வேறு எதையும் தொழுததில்லை.

நூல்:அஹ்மத்-6401, இப்னுமாஜா-1268

இந்த ஹதீஸின் படி, பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும் என்பது தெளிவாகின்றது.

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا الْمُعْتَمِرُ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيَّ يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى وَخَمْسٌ فِي الْآخِرَةِ وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا

'முதல் ரக்அத்தில் 7 தக்பீர்கள். இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்கள். இவ்விரண்டு தக்பீர்களுக்கு பின்பு கிராஅத் ஓத வேண்டும்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

நூல்: அபுதாவுத்-971

இந்த ஹதீஸில் 7105 தக்பீர்களை கிராஅத்திற்கு முன்பு சொல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

சாதாரண தொழுகைகளில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையிலும் உண்டு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தக்பீர் தஹ்ரீமாவிற்கு பிறகு ஓத வேண்டிய 'அல்லாஹும்ம பாஇத் பைனீ...' அல்லது 'வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ...' போன்ற துஆக்களில் ஏதேனும் ஒன்றை ஓதிக் கொள்ள வேண்டும். பிறகு 7 தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு கிராஅத் ஓத வேண்டும்.

சில இடங்களில் தக்பீர் தஹ்ரீமாவிற்கு பிறகு 7 தக்பீர்கள் கூறிவிட்டு 'அல்லாஹும்ம பாஇத் பைனீ' போன்ற துஆக்களை ஓதுகின்றனர். இந்த நடைமுறையால், கிராஅத்துக்கு முன்பு துஆ ஓதும் நிலை ஏற்படுகிறது. இது மேற்கண்ட ஹதீஸுக்கு மாற்றமானதாகும். எவ்வாறெனில் அதிகப்படியாக கூறப்படும் தக்பீர்கள் கிராஅத்துக்கு முன்பு கூறப்பட வேண்டும் என்று மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

'அல்லாஹும் பாயித்...' போன்ற துஆக்களுக்குப் பிறகு தான் கிராஅத் ஓதப்படவேண்டும். எனவே கிராஅத்துக்கு முன் அதிகப்படியான தக்பீர்களைக் கூறவேண்டும் என்றால் அதற்கு முன்பே 'அல்லாஹும்ம பாயித் பைனீ' போன்ற துஆக்களை ஓதிவிட வேண்டும் என்பதை சிந்திக்கும் போது விளங்கிக் கொள்ளலாம்.

இந்த தக்பீர்களின் போது ஒவ்வொரு தக்பீருக்குமிடையில், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் இன்று நடைமுறையில் தக்பீர் சொல்லும் போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து விருகிறது. இதற்கு காரணம் 'தக்பீர்' என்ற சொல்லை 'தக்பீர் கட்டுதல்' என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பது தான்.

அரபியில் 'தஹ்லீல்' என்றால் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லுதல், 'தஸ்பீஹ்' என்றால் 'சுப்ஹானல்லாஹ்' என்று சொல்லுதல், 'தஹ்மீத்' என்றால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்லுதல் என பொருள். இதே போல் 'தக்பீர்' என்றால் 'அல்லாஹு அக்பர்' என்று சொல்வதுதான் இதன் பொருளாகும். தொழுகைக்கு பிறகு 33 தடவை தக்பீர் சொல்லவேண்டும் என்றால் 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்கமாட்டோம். இது போன்று தான் 7105 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக் கூடாது. 7105 தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

இந்தக் கூடுதல் தக்பீர்களுக்கு இடையில் 'சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்' என்ற திக்ரை கூறும் வழக்கம் சில பகுதிகளில் இருந்து வருகின்றது. இதற்கும் நபி வழியில் ஆதாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தக்பீர்களுக்கு இடையில் ஓத வேண்டும் என எந்த ஒரு திக்ரையும் கற்றுத் தரவில்லை.

எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளை கட்டிய நிலையிலேயே அல்லாஹுஅக்பர் என ஏழு தடவை கூறிக் கொள்ள வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறிக் கொள்ள வேண்டும். கைகளை உயர்த்தவோ அவிழ்த்து கட்டவோ ஆதாரம் ஏதுமில்லை.
நன்றி.... ஆன்லைன்பிஜெ

அமெரிக்க நெருக்குதலால் ஈரானுடன் பேசவில்லை': சீதாராம் யெச்சூரி

கோல்கத்தா, அக். 1: அமெரிக்காவின் நெருக்குதலால்தான் ஈரானிடமிருந்து இந்தியா விலகிக்கொண்டிருக்கிறது, எரிவாயுவைக் குழாய்ப்பாதை மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவருவது குறித்து ஈரானுடன் அதனால்தான் பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டுகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ""கணசக்தி'' என்ற பத்திரிகையில் இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரிவாயுவை குழாய்ப்பாதை மூலம் கொண்டுவரும் திட்டம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக பேசப்பட்டது. பாகிஸ்தானும் இதில் ஆர்வம் காட்டியது.

ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டுவரும்போது, போக்குவரத்துச் செலவு கணிசமாக மிச்சப்படும்; அதிக அளவில் எரிவாயுவைப் பெற முடியும்.

எரிவாயுவைப் பயன்படுத்துவது அதிகரித்தால் கச்சா பெட்ரோலியத்தை வாங்குவதையும் குறைத்துவிட முடியும். இதனால் இந்தியாவுக்குக் கணிசமான அன்னியச் செலாவணி மிச்சப்படும்.

பாகிஸ்தானுக்கும் குழாய்ப்பாதையை பொறுப்பாக பார்த்துக் கொள்வதற்காக காவல் கூலியும், பராமரிப்புத் தொகையும் ஆண்டுதோறும் கணிசமாகக் கிடைக்கும். அதே குழாய்ப் பாதையை பாகிஸ்தானும் பயன்படுத்தி எரிவாயுவைப் பெறலாம். திட்டத்துக்கு ஆகும் செலவை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளலாம் என்று பேசி முடிவு செய்யப்பட்டது.

ஆனால், எரிவாயுவின் விலையை இறுதி செய்யும் கட்டத்தில் சிறிது கருத்து வேறுபாடு தோன்றியது. இந்தியா கூறிய தொகையைவிட அதிகத் தொகையை ஈரான் கேட்டது. இந் நிலையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உறவு மோசமடையத் தொடங்கியது. அதே சமயம், அணுசக்தி உடன்பாட்டுக்காக அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிச் செல்ல ஆரம்பித்தது.

ஈரானை பயங்கரவாத நாடு என்றே அழைக்கத் தொடங்கியுள்ள அமெரிக்கா, அந்நாட்டுடன் பொருளாதார உறவு வைத்துக்கொள்வதும், அதற்குப் பண ஆதாயம் கிடைக்கும் வகையில் செயல்படுவதும் சரியல்ல என்று இந்தியாவிடம் நேரடியாகவே கூறியது.

இந்நிலையில் செப்டம்பர் 24-ம் தேதி தெஹ்ரானில் இந்த குழாய்ப்பாதை தொடர்பான பேச்சு தொடங்கியது. அதில் ஈரானும் பாகிஸ்தானும் மட்டுமே கலந்துகொண்டன. இந்தியா பங்கேற்கவில்லை.

அத்துடன் சர்வதேச அணுவிசை ஏஜென்சி மூலம் ஈரானுடைய அணு நிலையங்களைத் தீவிரமாக சோதனைசெய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆதரித்து ஒரு முறை அல்ல இருமுறை வாக்களித்துள்ளது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இவையெல்லாம், வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் அமெரிக்காவின் மனம் கோணாதபடி இந்தியா நடக்க ஆரம்பித்ததன் அடையாளமே. அணுசக்தி உடன்பாட்டால் நமது இறையாண்மை அடகு வைக்கப்படும் என்பதையே இவை உணர்த்துகின்றன.

அதே சமயம், அமெரிக்காவுக்கு மிகவும் நட்பு நாடான பாகிஸ்தான், ஈரானுடன் இந்த ஒப்பந்தத்தை வெகுசாதாரணமாகச் செய்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கில்லாத அச்சமும், தயக்கமும் நமக்கு ஏன் என்று கட்டுரையில் வினவியுள்ளார் சீதாராம் யெச்சூரி.