|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, June 22, 2008

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்திற்கு பொதுப்பணி மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்காக ஆள் எடுக்கிறார்கள். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் ஜுலை மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆள்சேர்ப்பு முகாம்
இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், டிரேட்மேன், நர்சிங் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) ஆகிய பணி இடங்களுக்காக ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (அண்ணா ஸ்டேடியம்) ஜுலை மாதம் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பொதுப்பணி நீங்கலாக மற்ற அனைத்திற்கும் வயது 171/2 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பணி வயது வரம்பு 21 ஆகும்.

உடற்திறன் தேர்வு
பொதுப்பணிக்கான தேர்வு ஜுலை 8 மற்றும் 9-ந் தேதியில் நடக்கிறது. 8-ந் தேதி அன்று வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோரும், 9-ந் தேதி அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் வர வேண்டும். தேர்வு நடக்கும் மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும்.

10-ந் தேதி அன்று டிரேட்மேன் தேர்வும், 11-ந் தேதி தொழில்நுட்ப பணி தேர்வும், 12-ந் தேதி நர்சிங் உதவியாளர் தேர்வும், 13-ந் தேதி கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கான தேர்வும் நடைபெறும். இந்த தேர்வுகளில் மேற்கண்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தோரும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்து மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும். `ஆப்டிடிïட்' தேர்வு 14-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி:
தினத்தந்தி

பெட்ரோல் கதை

கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன.

'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை.

இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன.

அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி. உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் சரிவு.

இப்படியாக அடிமேல் அடி வாங்கி வரும் தங்கள் சந்தையை நிலை நிறுத்த அமெரிக்கர்களுக்கு கிடைத்த கடைசி ஆயுதம் தான் கச்சா எண்ணெய்.

உலகின் தேவையில் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேல், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது என்னவோ செளதி அரேபியா, வெனிசுவேலா, ஈரான், அல்ஜீரியா, யுஏஇ, குவைத் உள்ளிட்ட OPEC (Organization of Petroleum Exporting Countries) நாடுகளாக இருக்கலாம்.ஆனால், இந்த கச்சா எண்ணெயின் வர்த்தகம் நடப்பது அமெரிக்காவிலும் லண்டனிலும் தான். குறிப்பாக அமெரிக்காவின் வால் ஸ்டீரிட்டில் தான் (நம் ஊர் மும்பை புரோக்கர்கள் நிறைந்த தலால் ஸ்டீரிட் மாதிரி). விலை நிர்ணயிக்கப்படுவது டாலரில் தான்.

(இத்தனைக்கும் உலகில் பெரிய அளவில் அமெரிக்காவிலும் பெட்ரோலிய 'ரிசர்வ்' உண்டு. அதை அவர்கள் வெளியே விற்பதில்லை. செளதியிடம் வாங்கிக் கொண்டு பதிலுக்கு கொஞ்சம் பணம், நிறைய போர் விமானங்கள்-ராக்கெட்களை தந்து விடுகிறார்கள், பணத்துக்கு பணம் மிச்சம்.. கூடவே அமெரிக்க தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம்!)

இந்த புரோக்கர்கள் தான் நாம் திண்ணும் உப்பில் ஆரம்பித்து நாம் அணியும் பனியன் வரை விலையை நிர்ணயம் செய்கின்றனர்.

பங்குச் சந்தை வர்த்தம் என்பதே ஒரு கணிப்பு தான். உண்மையை சொன்னால் 'பெட்டிங்' தான்.. உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று...

சீனாவில் ஒலிம்பிக் வருதா, அங்கு ஸ்டேடியங்கள் கட்ட இரும்பு அதிகமாக பயன்படுத்தப்படப் போகிறது, இதனால் இரும்பு நிறுவனங்களின் லாபம் அதிகமாகும், இதனால் இரும்பு நிறுவன பங்குகளில் அதிகம் முதலீடு செய்யுங்கோ.. என்று இவர்கள் 'கிளப்பிவிட்டால்' இரும்பு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் தான். ஒரே நாளில் அவர்களது பங்கு மதிப்பு பல பில்லியன் கூடிவிடும்.

(எதிர்பார்த்தபடி அந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவில்லை என்றால் அதன் பங்கு மதிப்புகள் மடமடவென சரியும். புரோக்கர்களின் கூவலை நம்பி பணம் போட்டவர்கள் தலையில் துண்டு மிஞ்சும். அது வேறு கதை)

இப்படித்தான் கச்சா எண்ணெயின் விலையையும் அமெரிக்க-இங்கிலாந்து புரோக்கர் நிறுவனங்கள் கூவிக் கூவியே கூட்டிவிட்டுவிட்டன.

குறிப்பாக கோல்ட்மேன் சேக்ஸ், சிட்டி குரூப் (நம்ம சிட்டி பாங்க்), ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் அண்ட் ஸ்டான்லி ஆகிய நான்கு நிறுவனங்கள் தான் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் மிக அதிகமாக முதலீடுகளை தள்ளிவிட்டவர்கள்.

இந்த நிறுவனங்களை 'financial companies' என்று அழைப்பதற்கு பதில் 'oil traders' என்றே அன்புடன் அழைக்கலாம். அந்த அளவுக்கு தங்கள் தொழிலையே கச்சா எண்ணெய்யை சார்ந்து மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டன.

கச்சா எண்ணெய் விலை கன்னாபின்னாவென உயர்வதற்கு கடவுளைத் தவிர வேறு யாருக்காவது காரணம் தெரியும் என்றால் அது இந்த நான்கு பேராகத் தான் இருக்க முடியும்.

விலை ஏன் உயர்கிறது என்று தெரியாமல் OPEC நாடுகளே திக்குமுக்காடிக் கொண்டிருப்பதும், விலை உயர்ந்தாலும் இந்த நாடுகளுக்கு நயா பைசா லாபம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் முன்பே சொன்னது போல பங்குச் சந்தையே ஒரு 'பெட்டிங்' தான். இன்று கச்சா எண்ணெய் விலை என்னவாக இருக்கும் என்று காலையில் புரோக்கர் நிறுவனங்கள் பெட்டிங்கை ஆரம்பித்தால் மாலையில் அந்த நிறுவன சிஇஓக்களும் சிஎப்ஓக்களும் வீடு போவதற்குள் பெட்ரோலியத்தின் விலை பீப்பாய்க்கு மேலும் சில டாலர்கள் உயர்ந்திருக்கும்.

விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்.. விலையைக் கூட்டிவிட்ட புரோக்கர் நிறுவனங்களுக்கு கமிஷன்.

இப்படியாகத் தான் speculative trading காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணை நோக்கி போய்க் கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதை விட்டுவிட்டு OPEC உடனே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் சாம் போட்மேன்.

எதற்காக கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும்.. அப்படி என்ன திடீரென தேவை அதிகரித்துவிட்டு.. உற்பத்தியை அதிகரித்தாலும் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றன எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.

எண்ணெய் விலையை உயர்த்தும் நிதி நிறுவனங்கள்- உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையி்ல் சிக்கித் தவிப்பது ஒவ்வொரு சொட்டு பெட்ரோலையும் இறக்குமதி செய்து வாழ்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள்.

இந்த OPEC, புரோக்கர்கள், சாம் போட்மேன் கதையை எல்லாம் எப்படி சமானிய மக்களுக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றனர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் விலைவாசியும் உயர, மக்கள் வெறுப்பேற, இனியும் சமாளிக்க முடியாது.. பேசாமல் நாமே ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று முடிவு செய்து தான் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தையே கையில் எடு்த்து இடதுசாரிகளை காங்கிரஸ் வெறுப்பேற்றுகிறதோ என்னவோ.

அடுத்த முறை பெட்ரோல் பங்குக்குள் நுழையும்போது இந்த 'பெட்ரோல் கதை'யை ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.. இனி தெரு முக்குக்கு போக எல்லாம் காரையோ பைக்கையோ எடுக்க மாட்டீர்கள்...


நன்றி
தட்ஸ்தமிழ்.காம்

Saturday, June 21, 2008

விடியாத வெள்ளி !

ஏகனின் திருப்பெயரால்..
நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று மக்களை ஏமாற்றி இயக்கம் வளர்க்கும் ஒரு கூட்டம் நம்மிடையே வலம் வந்து கொண்;டிருக்கிறது. இந்த கூட்டம் எவ்வளவு கொள்கை முரண்பாடுகளை கொண்ட கூட்டம் என்பதை விளக்கவே இக்கட்டுரை.இஸ்லாமிய ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் இக்கூட்டம் தனது உண்மையான முகத்தை மக்களிடம் காட்டி ஆள் எடுப்பது இல்லை. இவர்கள் ஆள் எடுக்கும்பொழுது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில கலவரங்களை எடுத்துக்காட்டி உசுப்பி, மக்களை குறிப்பாக இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கலவரத்தை சொல்லி உசுப்பப்பட்ட இந்த இயக்கத்தவர்கள், கலவரத்தை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை. பின்னர் அணு அணுவாக இஹ்வான்களின் கொள்கையான, முதலில் இஸ்லாமிய ஆட்சி பின்னர்தான் எல்லாம் என்ற நஞ்சை மெதுவாக திணிப்பார்கள். எக்கொள்கையும் சம்மதம் என்று எல்லா கொள்கையில் உள்ளவர்களையும் தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் இவர்கள், உண்மையான எந்த கொள்கையும் இயக்கத்தவர்களிடம் சொல்லுவதில்லை. மாறாக தாங்களின் இஸ்லாமிய ஆட்சி சிந்தனையை ஊட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இவர்களின் வலையில் அதிகம் சிக்குபவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய இளைஞர்கள். இப்படிப்பட்ட இளைஞர்களில் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்த பிறகு தங்களின் குர்ஆன் ஹதீஸ் கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக விட ஆரம்பிப்பார்கள். அதற்கு அந்த இளைஞர்களை நாம் குறை சொல்ல இயலாது, காரணம் அவர்களை இவ்வாறு மாற்றுவதற்கு இந்த இயக்கம் அந்த அளவு மூளைச் சலவையை செய்யும்.குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய அந்த இயக்க இளைஞர்களில் சிலர் தாங்கள் சதி வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்து இந்த இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களிடம் கேள்விகளை தொடுக்கத் தொடங்குவார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களை முடிந்தவரை சமாளிப்பார்கள், முடியாத பட்சத்தில் கேள்வி கேட்பவர்களை ஒதுக்கி இயக்கத்தை விட்டு வெளியேற்றி விடுவார்கள். அதே நேரத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது சிறிய குறைகள் ஏதுவும் இருந்தால் அதை பெரிதுபடுத்துவார்கள், அப்படி இல்லாவிட்டால் குறைகளை இவர்களே உருவாக்குவார்கள், அதை பரப்பவும் செய்வார்கள். இதற்கு இந்த இயக்கத்தின் முன்னாள் பல தலைவர்களே உதாரணம். எடுத்துகாட்டாக, இந்த இயக்கத்தை தூக்கிப் பிடித்த ஷம்சுதீன் காஸிமீ, குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, முகைதீன் பக்ரி, அபுதாஹீர், உமர் பாய், முஜாஹீத் மற்றும் இல்யாஸ் ரியாஜி. இன்று இவர்களில் யாருமே இந்த இயக்கத்தில் இல்லை. இவர்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தை விட்டு வெறியேறிய அல்லது அவர்கள் கூறுவது போல் வெளியேற்றப்பட்ட பொழுது அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி இறைத்தார்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தினர். அக்குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? என்பதை நாம் இங்கு ஆய்வு செய்யவில்லை.இவர்கள் இந்த விடியலை விட்டு வெளிச்சத்துக்கு சென்றப் பொழுது இவர்கள் மீது பல அவதூறுகளை அள்ளி வீசினார்கள் இந்த இஸ்லாமிய ஆட்சி பேசும் கொள்கையற்ற இயக்கத்தவர்கள். இவர்களில் சிலர் மீது சில குற்றச்சாட்டுகள் சொல்லும் இவர்கள், தங்கள் இயக்கத்தில் உள்ளவரையும் அதைப்பற்றி வாய்திறந்தில்லை. ஓரின சேர்க்;கை குற்றம் சாட்டப்பட்ட இவர்களில் ஒருவர் மீது கூட இவர்கள் வாய் திறந்து இந்த குற்றச்சாட்டைக் கூறியது இல்லை. அவர் இந்த இயக்கத்தில் இருந்து கொண்டே இந்த இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை வாய் திறந்து பேசிய பொழுதே! அதுமட்டுமல்லாமல், அவரை இந்த இயக்கத்தை விட்டு வெறியேற்றும் பொழுது 'நீங்கள் எங்கள் இயக்கத்தைப் பற்றி எதுவும் பேச கூடாது, அவ்வாறு செய்தால் தங்களின் இந்த குறையை நாங்கள் மக்களிடத்தில் பரப்புவோம்' என்றார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த இயக்கத்தின் முன்னாள் தன்மானத் தலைவர் குலாம் முஹம்மது அவர்கள் தனது வீட்டின் கல்யாணத்தை ஆடம்பரமாகவும், தனது வீட்டு பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றி தனது இயக்க பொறுப்பாளர்களுக்கு கண்காட்சி நடத்தி, தனது கொள்கை பிடிப்பை நிரூபித்தபொழுது, தனது தன்மானத் தலைவரின் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தற்பொழுது அந்த தன்மான தலைவரின் அந்த சூப்பர் கல்யாணத்தை குறை கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த திருமணத்தைப் பற்றி மக்கள் கேள்வி கேட்;க ஆரம்பித்தவுடன் அந்த திருமணத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசுவது எப்படி என்று பல இடங்களில் தனது இயக்கத்தின் தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) பயிற்சி கொடுத்தார்கள் என்பது தான் ஹைலைட்.விpடியலை வளர்த்து விட்டு வெளிச்சத்துக்கு போகிறோம் என்று சமீபத்தில் விடியலை விட்டு வெளியேறிய குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, உமர் பாய் மற்றும் இல்யாஸ் ரியாஜி ஆகியோர் மீண்டும் ஒர் இயக்கத்தை துவங்கியிருக்கிறார்கள். இவர்களின் கொள்கையை பின்னர் ஆய்வு செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்...தொடரும்...

Tuesday, June 10, 2008

*** கேமராக்கள் - பெண்களுக்கு எச்சரிக்கை ***


கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ��’ன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி**, **கல்லூரி**, **விடுதிகளில் :***
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை,குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன்
இருக்கவும்.


*பொதுக்கழிப்பிடங்கள்**, **குளியலறைகள்**, **ஹோட்டல் அறைகள் :***
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும்,கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

*மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :***
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப்
பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.


இப்படித்தான் ��’ரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான்.
இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை . ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

*துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு***
*பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :***
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ��’துக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும்
பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ��’ரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ��’ளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ��’ரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

நன்றி:Sha Nawas”