|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, October 09, 2006

முனாஃபிக் ரய்சுதீன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன
மேலும் சைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது.

ஆனால் இஸ்லாத்திற்குள் இருக்கும் முனாஃபிக்கீன்களுக்கோ, இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்த்ததுகளுக்கோ , காஃபிர்களுக்கோ, தஜ்ஜாலுக்கோ விலங்கிடப்பட்டதாக கூறப்படவில்லை

அதனால் அன்பிற்குரிய நோன்பாளிகளே ! அல்லாஹ்வையும், வேதத்தையும், தூதர்களையும், மறுமை நாளையும், நம்பக்கூடிய மக்களே ! நோன்பு நாட்களில் முனாஃபிக்கீன்களுடைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

தஜ்ஜாலுடைய குழப்பம் போன்றே ஏறத்தாழ முனாஃபிக்கீன்களுடைய குழப்பமும் தோன்றும் அதற்காகத் தான் அல்லாஹ்வின் தூதரவர்கள் தொழுகையில் அத்தஹயாத்தின் இருப்பில் ... ஃபித்னத்தில் மஸீஹூத் தஜ்ஜால் என்று கேட்கும்படிப் பணித்தார்கள் .

அல்லாஹ்வின் தூதரவர்களும் கூட ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் பெயர் தாங்கி முனாஃபிக்கின்களுடைய ஃபித்னாவில் சிக்கி மனநிம்மதியை இழந்து தங்கள் ஆருயிர் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பிரிந்து தத்தளித்தார்கள். அல்லாஹ்வுடைய பாதுகாப்பை பெற்ற அண்ணல் அவர்களுக்கே இந்த நிலை என்றால் குழப்பங்கள் சூழ்ந்த காலகட்டத்தில் வாழும் நம்முடைய நிலை எவ்வாறானதாக இருக்கும் என்று சிந்தித்துக் கொள்வதுடன் குழப்பவாதிகளாகிய முனாஃபிக்கீன்களுடைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்.

அண்ணல் அவர்கள் அல்லாஹ்வுடைய பாசத்திற்கும், நேசத்திற்கும் உகந்தவர்களாக திகழ்ந்ததால் அல்லாஹ் குழப்பவாதிகளுடைய சதி திட்டத்தை வெகுவிரைவில் முறியடித்து அண்ணலார் அவர்களை குழப்பத்திலிருந்து காப்பாற்றி கரை ஏற்றினான். அந்த முனாஃபிக்குகள் எப்படிப்பட்ட வெல்பிளான் திட்டத்தை தீட்டினார்கள் என்றால் அல்லாஹ்வின் தூதரவர்களே அவர்களுடைய சதி திட்டத்தில் வீழ்ந்து விடும் அளவுக்கு நம்பி விடும் அளவுக்கு தங்கள் மனைவியின் மீது சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஃபித்னா தீவிரமடைந்து விட்டது. அண்ணல் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பெரும் பெரும் வல்லரசுகளை எல்லாம் தங்களுடைய காலடியில் வீழ்த்திக் காட்டினார்கள் காஃபிர்களுடைய கொட்டத்தை ஒடுக்கிக் காட்டினார்கள் ஆனால் பசுத் தோல் போர்த்திய புலிகளாகிய உள்ளுக்குள் முளைவிட்ட பெயர் தாங்கி முஸ்லிம்களாகிய யூத முனாஃபிக்குகளை அவர்களால் ஒடுக்க முடியவில்லை இது ஓரிறை கொள்கை வாதிகளுடைய உறுதியான ஈமானை சோதிக்க இறைவனிடைய ஏற்பாடாகும்.

அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் முளைவிட்ட முனாஃபிக் விதை அவர்களுடைய காரத்திலே வளரத் தொடங்கி அலி (ரலி) அவர்களுடைய காலத்தில் வேர் விட்டு இன்று ஈரான், ஈராக் போன்ற இடங்களில் ஷியா என்றப்பெயரில் மாபெரும் விருட்சமாகி இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்த்தத்களாக ஆகி விட்டனர். அல்லாஹ்வுடைய தூதருக்கு செய்த சதிக் காரணமாக இஸ்லாத்திற்காக உயிர் நீத்த உத்தம சஹாபாக்களை இழித்துப் பழித்துரைத்த அந்தப் பாவிகளை அல்லாஹ் இஸ்லாத்தை விட்டு வெளியாக்கினான்.

இன்றும் அதேப்போன்ற முனாஃபிக்குகள் தங்களுடைய கைவரிசையை இன்றைய ஏகத்துவ உலமாக்கள் பேரில் காட்டி வருகிறார்கள் நம்புவது போன்றே அளந்து விடுவார்கள் ஆதாரம் கேட்டால் இவன் பிஜேயானி என்று முத்திரைக் குத்துவார்கள் அவர்களைப் பொறுத்தவரை புரோட்டாவுக்கு பிசைந்த மாவு உருண்டை மாதிரி அசையாமல் கிடக்க வேண்டும் அப்பொழுது குண்டு வைப்பதற்கும், கழுத்தருப்பதற்கும் பயன்படுத்த முடியும் எதிர் கேள்வி கேட்டால் தவ்ஹழுத் ஜமாத்துக்கு Nபுhய் விடு என்று விரட்டி விட்டு விடுவார்கள் அதனால் தான் ராமகோபாலனுடைய அட்டூழியத்திற்கு வடநாட்டு அத்வானிக்கு குண்டு வைக்க அப்பாவிகளை கூட்டிப் போனார்கள் அவர்கள் மட்டு;ம் அன்றைய தினம் அறிவுப் பூர்வமான கேள்விகளை தங்கள் தலைமையைப பார்த்துக் கேட்டிருந்தால் இன்று 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்திக்கு வந்திருக்காது இஸ்லாமிய அடிப்படையை அவர்களுக்கு போதித்திருந்தால் இது போன்ற நீசத்தனமான காரியத்தை செய்ய முன்வந்திருக்க மாட்டார்கள் ரய்சுதீன் போன்று உருட்டித் திரட்டிய புரோட்டா மாவு மாதிரி உள்ளவர்களாகப் பொருக்கி எடுத்து இந்த நீசத்தனமான வேலையை செய்து இன்று சிறைவாசிகளுடைய பெயரில் வருடக் கணக்கில் லட்சக்காணக்கான தொகை வசூலித்து பிழைப்பு நடத்தப் பட்டு வருகிறது.

இந்த புனித ரமளான் மாதத்தில் எவராவது தன்னிடம் வீன் வம்புக்கு வந்தாலும் கூட நான் நோன்பாளி என்றுக் கூறி நிராகரித்து விடுங்கள் என்று நபிகள் நாயகம் பணித்திருக்கையில் அதை மீறிக் கொண்டு ஒரு தாயியை இகழ்ந்துரைக்கிறான் ஒருவன் என்றால் அவன் எந்த வகையைச் சார்ந்தவனாக இருக்க முடியும் என்று அறிவுப் பூர்வமாக சிந்தித்துக் கொள்ளுங்கள்.

முஸ்லிம் என்றால் அல்லாஹ்வுடைய தூதரின் கட்டளைக்கு அல்லாஹ்வுடைய பாவமன்னிப்பு அதிகம் இறங்கக் கூடிய இந்தப் புனித ரமளானிலாவது குறைந்த பட்சம் சச்சரவிலிருந்து ஒதுங்கிக் கொள்வான் அல்லாஹ்வின் துர்தருடைய கட்டளையைப் பற்றியோ, அல்லாஹ்வுடைய பாவமன்னிப்பைப் பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப் படாமல் தான் அழிவதோடு பிறரையும் சேர்த்து அழிக்க நினைப்பவன் எந்த வகையைச் சேர்ந்தவன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்;.

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் முதறிஞர் பிஜே அவர்களும், பிஜே அவர்களால் உருவாக்கப்பட்ட ஏகத்துவ அறிஞர்களும், அவர்களுடன் இணைந்து களப்பணியாற்றிய கொள்கைச் சகோதரர்களும் அன்றைய தரீக்காவாதிகளாலும், புரோகிதர்களாலும் என்ன மாதிரியான கொலைவெறி தாக்குதலுக்கு சமீபத்தில் அல்தாஃபி வரை ஆனார்கள், அது இன்றைய முனாஃபிக் ரய்சுதீன் வரை தொடராக எழுதப்படும் . கிஞ்சிற்றும் மிகைப் படுத்தப் படாமல் நாகரீகமான சொற்களுடன் குர்ஆன் , ஹதீஸூக்கு முரணில்லாமல் ஆஹா, ஓஹோ வென்று தூக்கிப் பிடிக்காமல் நடந்த சம்பவங்களை மட்டும் எழுதுவோம் அனைத்து சம்பவங்களும் முழுமையாக Nசுகரித்து முடித்தப் பின்னரே அனுப்பப்படும். கொள்கைச் சநகோதரர்களே ! உங்களிடம் இருக்கும் ஐடிகளை எம்முடைய ஐடிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : இதைப் படிக்கும் கொள்கைச் சகோதரர்கள் தங்களுடைய பகுதிகளில் கொள்கையைப் பேணியதற்காக குராஃபிகளிடம் அனுபவித்த சோகச்சம்hவங்கள் இருந்தால் உடனடியாக எம்முடைய ஐடிக்கு டைப் செய்து, அல்லது கையில் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பவும். அந்த வசதிகள் இல்லாதவர்கள் உமர் , போஸ்ட் பாக்ஸ் நம்பர் 5790 ரியாத் 11432, கே.எஸ்.ஏ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

3:104 .மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
3:105 .(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
3:106 .அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்'' (என்று கூறப்படும்).
3:107 .எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்
( கழுத்தை அறுத்தாலும் உண்மையை மட்டும் கூறுவோம் )