|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, July 09, 2008

பள்ளிகளில் பர்தா அணிய தடை- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்த தடையை உடனே நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


நாகை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பள்ளி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாட்டை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று கூறி பல பள்ளிகள் இந்த விதிகளை அமுல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக பள்ளிக்கு பர்தா அணிந்துவர முஸ்லீம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மாநில செயலாளர் சித்திக் கூறுகையில், நாகை மாவட்டத்தில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர பள்ளிகள் தடை விதித்துள்ளன. இது கடுமையாக கண்டிக்கதக்கது.

இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் தெரிவித்துள்ளோம். கல்வித்துறை அமைச்சரிடமும் முறையிட உள்ளோம்.

பள்ளியில் மதிய நேரத்தில் முஸ்லீம் மாணவ, மாணவிகள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அண்ணா பல்கலை கழகமே தொழுகை நடத்த அனுமதித்துள்ளது. எனவே இதை மற்ற பள்ளிகளும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதை கண்டித்து விரைவில் கண்டன ஆர்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.


Thanks:

Thatstamil.

0 Comments:

Post a Comment

<< Home