|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, June 28, 2007

JULY 4 போராட்டம் ஏன் ? எதற்கு ?

Bismilla...
இன்று தமிழகத்தில் ஒரு ஐயர் ஏழையாக இருந்தால் அவர் கடன் பெற்று தனது மகனையோ, மகளையோ உயர் கல்வி கற்க வைத்து அரசின் உயர் கேந்திரங்களில் அமர்த்தி தனது கடனை அடைத்து விடுவார் சுகபோகமாக தனது வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வார் காரணம் அவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு;ள்ளது. இதையே ஒரு முஸ்லீம் கடன் பெற்று தனது மகனை படிக்க வைக்க முடியாது காரணம் முஸ்லிமுக்கு இடஒதுக்கீடு கிடையாது, கடன் பெற்று படிக்க வைத்தாலும் இந்தியாவாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் அவன் கூலித் தொழில் தான் பார்க்க வேண்டும் அதனால் கடன் பெற்று பாஸ்போர்ட் எடுத்து 17, 18 வயதுகளில் ஹவுஸ்பாய் வேலைக்கு வளைகுடாவிற்கு அனுப்பி விடுகின்றனர்.

முஸ்லிம்கள் படித்திருப்பது போன்றும், அரசின் உயர் கேந்திரங்களில் அமர்த்தப் பட்டிருப்பதுப் போன்றும் உலகுக்கு காட்டுவதற்காக ஒருசில முஸ்லீம்களை உயர் பதவிக்கு அரசு தேர்வு செய்யும். அல்லாஹ், ரசூல் என்ற வார்த்தையை பயன்படுத்தாத, அதை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளாதவராக பார்த்து தேர்வு செய்வார்கள். ஒரு முறை குஜராத்தில் அடித்து நொறுக்கப்பட்ட முஸ்லிம்கள் பல ஆசிரமங்களில் அடைக்கலம் புகுந்திருந்தனர் அவர்களைப் பார்வையிடுவதற்கு அபுல் கலாம் சென்றிருந்தார்; அப்பொழுது பாதிக்கப்பட்ட சில முஸ்லிம்கள் அவரை சூழ்ந்து கொண்டு நாங்கள் முஸ்லிம்கள் என்பதால் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் '' முஸ்லிம்கள் என்றுக் கூறாதீர்கள் இந்தியர்கள் என்றுக் கூறுங்கள் '' என்று திருவாய் ? மலர்ந்தருளினார் திருவாளர் அபுல் கலாம் அவர்கள் ?
நாம் கேட்கிறோம் ?

கர்ப்பினிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் பச்சை சிசுவை திரிசூலத்தால் குத்தி எடுத்து நெருப்பில் வீசும் பொழுது ஒரு இந்தியனை இந்தியாவை கட்டி எழுப்பக்கூடிய எதிர்காலத் தூனை பொசுக்கி சாம்பலாக்குகிறோமே என்ற உணர்வு அவனுக்கு வரவேண்டிய தேவை இல்லையாம், கர்ண கொடூரமாக விழுந்து கற்பழித்துக் குதறும் பொழுது ஒரு இந்திய தாயை கற்பழிக்கின்றோம் என்கின்ற சிந்தனை அவனுக்கு வர வேண்டிய தேவை இல்லையாம், அவர்களால் குதறப்பட்டு குற்றுயிரும் குறையுயிருமாய் கிடக்கக் கூடியவர்கள் '' நாங்கள் முஸ்லிம்கள் என்பதால் '' இவ்வாறு சீரழித்து விட்டார்கள் என்கின்ற வேதனையை வெளிப்படுத்தும் போது மட்டும் இந்தியன் என்று கூற வேண்டுமாம் ? இந்தளவுக்கு மூளையை கழட்டி சங்பரிவார சோப்பில் இட்டுக் கழுவி திரும்ப மாட்டி விட்டு உயர் பதவியில் அமர்த்துவார்கள் அதன் பிறகு அவர் ஒரு பரூக் மரைக்காயராகவோ, அபுல்கலாமாகவோ, பெயரளவில் இருந்து கொள்வார்கள், பெயரளவில் முஸ்லிம்களாக இருக்கக்கூடிய இவர்களும் எமக்கு அத்வானி, வாஜ்பேயி போன்றவர்களுக்கு சமமானவர்களேயாவார்கள்.

மேற்கூறப்பட்ட உதாரணகர்த்தாக்களை உயர் பதவிகளில் அமரச்செய்தது அவர்கள் இட்ட பிச்சையாகும். அதனால் அவர்களுக்கு அவர்கள் நன்றி கடன் பட்டவர்களாகி விடுகின்றனர் சத்திய மார்க்கம் கூறும் உயர்ந்த சகோதரத்துவத்தையும், இன உணர்வையும் விட்டு விலகி அல்லாஹ்வையும் மறந்து விடுகின்றனர்.

ஒரு முஸ்லிம்களுக்கு மேல்படி உயர் பதவிகள் விகிதாச்சார அடிப்படையில் கிடைக்குமானால் அதுவும் போராடி கிடைக்குமானால் இது எனது 'ஹக்' ( உரிமை ) என்ற நிலையில் படைத்தவனுக்கு மட்டும் நன்றிக்கடன் செலுத்துவார்கள் சகோதர முஸ்லிமுக்கு உதவுவார்கள். எவருக்கும் அடிவருடிகளாக மாற மாட்டார்கள் ஓரளவாவது இன உணர்வு வெளிப்படும்.

இதனால் தான் குறைந்த பட்ச வாரிய பதவிகளைக் கூட எவருடைய தயவாலும் எந்நிலையிலும் அடைந்து கொள்வதில்லை என்கின்ற உயர்ந்த லட்சியத்தை தாங்கி நிற்கின்றது தவ்ஹீத் ஜமாத். ஆளும் பாஷிச வர்க்கத்தினரால் சிறுபான்மை அமைப்பின் முக்கிய பொறுப்பு தாரிகளுக்கு வழங்கப்படும் எந்தப்பதவியும் அவர்களுடைய குரல்வளைகளுக்கு இடும் விலங்குகளாகும்.

அதனால் உயர் பதவிகளுக்கு ஆளும் பாஷிச வர்க்கத்தினரால் மூளை சலவை செய்யப்பட்ட ஒருசில முஸ்லிம்கள் என்றில்லாமால் பலதரப்பட்ட முஸ்லீம்களும் விகிதாச்சாரப்படி தங்களுடைய இடஒதுக்கீட்டை அடைந்து உயர் பதவிகளை நிறப்பினால் மதவெறி தீ முற்றிலும் அனைக்கப்பட்டு விடும்.

ஒரு மீரட், ஒரு பாகல்பூர், ஒரு குஜராத், ஒரு கோவை உருவாகாது அதனால் ஜூலை 4 சிறை நிரப்பும் போராட்டத்தை வலுப்பெறச் செய்யுங்கள் இது தவ்ஹீத் ஜமாத்தினரால் நடத்தப்படும் போராட்டம் என்றாலும் எல்லோரும் பயன் பெறக் கூடிய தொலை நோக்கு சிந்தனை திட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம் சகோதர முஸ்லிமுக்கு உதவிடுவதற்கு புறப்படுங்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: 'ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளின் சகோதரன் ஆவான். அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான், அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப் பாதுகாக்கின்றான். ' (முஸ்லிம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அழைப்புப் பணிpயில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

அமெரிக்கா வாழ் தமிழர், தமிழ் அமைப்புகளுக்கு

அமெரிக்காவில் உள்ள மேலவையான செனட் சபை இம்முறை தொடங்கும்போது, இந்து மதத்தின் பிரார்த்தனையாக ரிக் வேதம், உபநிஷத், பகவத் கீதை - இவைகளிலிருந்து பகுதிகள் பாடப்படும் என்றும், அதற்கென தனியே சம°கிருத புரோகிதப் பண்டிதர் ராஜன் சேட் என்பவரை அதிகாரபூர்வமாக அழைத்துள்ளார்கள் என்று அவர் சொன்னதாக `இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.


அமெரிக்கா வாழ் இந்தியர்களில் வெறும் இந்துக்கள் மட்டும் இல்லை; தமிழர், முஸ்லிம், கிறித்துவர், சீக்கியர் என்று பல்வேறு மதத்தவரும் அமெரிக்க குடிமக்களாகி உள்ள நிலையில், பார்ப்பனீய மதமான இதன் வேதம், உபநிஷத், கீதை இவைகளை செனட் தொடங்கும்போது பாடுவது ஏற்புடைத்தல்ல. மாறாக, செம்மொழி தமிழில் உள்ள எம்மதமும் சாராத, ஒழுக்கத்தினை வலியுறுத்தும் அறநூலான திருக்குறள் பாக்களைப் பாடவேண்டும் என்று வற்புறுத்துங்கள்.




`யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாட்டுகளைப் பாடித் தொடங்கி வைக்க அமெரிக்காவாழ் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், ஏனைய மதத்தவர் முயற்சிகளை தடுத்து, பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்., பண்பாட்டு ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க முனையவேண்டும். அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு நமது அவசர அன்பு வேண்டுகோள் இது.
சென்னை 27.6.2007
கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
(Thanks..Viduthalai)

இரத்ததானத்தில் TNTJவுக்கு மாநிலத்தில் முதல் இடம்.

இரத்த தானத்தில் மாநிலத் முதலிடத்திற்கான விருதுதை சுப்ரியார் சாஹுர் ஐ.ஏ.எஸ் வழங்க TNTJ மாநிலப் பொருளாளர் அபுக்கர் அவர்கள் பெறுகிறார்கள்!


இதுதான் அரசியல் சாக்கடை....

Bismilla...
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஹசன் அலி, ராமேஸ்வரம் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலின் புனிதத் தன்மை கெட்டு விட்டது என்று பாஜக பிரச்சினை கிளப்பியுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. எம்.எல்.ஏ. ஹசன் அலி கடந்த 11ம் தேதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திரராம வன்னியுடன் சென்றிருந்தார். இதை பாஜக பிரச்சினையாக்கியுள்ளது. இந்து மதத்தைச் சாராதவர்கள் 3ம் பிரகாரத்திற்கு மேல் செல்லக் கூடாது என கோவில் விதி கூறுகிறது. ஆனால் அதை மீறி ஹசன் அலி நடந்து கொண்டுள்ளார். இதனால் கோவிலின் புனித தன்மையை அலி கெடுத்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது.
ஹசன் அலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் முழுவதும் சுவரொட்டிகளையும் அது ஒட்டியுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பதட்டம் நிலவுகிறது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன் கூறுகையில், ராமேஸ்வரம் கோவிலில் 3ம் பிரகாரத்திற்கு மேல் இந்து சமயத்தைச் சேராதாவர்கள் செல்லக் கூடாது என்பது விதிமுறை. சில ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த கோவிலுக்கு வந்தபோது 3ம் பிரகாரத்தில் வழிபட்டாலும் கருவறைக்குள் செல்ல மறுத்து விட்டார். ஆனால் ஹசன் அலி விதிமுறைகளை மீறி கோவிலுக்குள் சென்றது சரியல்ல என்றார். ஆனால் இந்தப் புகாரை ஹசன் அலி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் முஸ்லீம் மட்டும் அல்ல, மக்களின் பிரதிநிதியும் கூட. கோவில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யவே நான் கோவிலுக்குள் சென்றேன். இதற்கு முன்பு கோவிலில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் பிரச்சினை எழுப்பாத பாஜக இப்போது சர்ச்சையைக் கிளப்புவது வியப்பாக உள்ளது. கடந்த காலங்களில் நடந்த சமபந்தி நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று கலந்து கொண்டிருக்கிறேன். தரிசனமும் செய்திருக்கிறேன் என்றார்.
ஹசன் அலியுடன் கோவிலுக்குள் சென்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி தெரிவிக்கையில், இந்து மதம் சகிப்பு தன்மை கொண்டது. ராமேஸ்வரம் கோவிலுக்கு இன்னார் தான் செல்லவேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் செல்லலாம். பாஜக தேவையில்லாமல் இதை அரசியலாக்க நினைக்கிறது.
கோவிலின் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்க்கவே ஹசன்அலி கோவிலுக்கு வந்தார் என்றார். ஹசன் அலி வந்து சென்றதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை கோவில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர். பல மதத்தினரும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். எம்எல்ஏ ஹசன்அலி சமபந்தி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் வந்து போனதற்காக பரிகார பூஜை எதுவும் நடத்தப்படவில்லை என்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவரான ஜனாதிபதி அப்துல் கலாம் தனது இளம் வயது முதலே இக் கோவிலுக்கு பலமுறை சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Thanks..T.tamil.com)