|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, July 28, 2007

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை

Bismillah.......


பொங்கலையொட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.கோபாலகிருஷ்ணன், தருண் சட்டர்ஜி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில், ஜல்லிக்கட்டின்போது விலங்குகளை பல துன்பங்களுக்கு ஆளாக்குகின்றனர். அவற்றை சாராயத்தை குடிக்க வைத்து கூட்டத்துக்குள் விரட்டுகின்றனர். அங்கு அந்த மாடுகள் மீது பாயும் கூட்டத்தினர் அதை பல வகையிலும் துன்புறுத்துகின்றனர். பலர் மிளகாய் பொடி போன்றவற்றை மாட்டின் கண் மீது தூவுகின்றனர். இதனால் உடல்ரீதியில் அந்த மாடு பெரும் சிரமத்தை சந்திக்கிறது. பல நேரங்களில் மாடுகள் இறந்து போவதும் உண்டு என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சிகளில் தேவையில்லாத மனித உயிர்ப் பலிகளும் நடக்கின்றன. 2007ம் ஆண்டில் பாலமேடு (அலங்காநல்லூர்) ஜல்லிக்கட்டில் 65 பேர் படுகாயமடைந்தனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 35 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியாகிவிட்டார் என்றும் தனது மனுவில் விலங்குகள் நல வாரியம் தெரிவித்திருந்தது.
மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் பேசுகையில், மிருகவதை தடுப்புச் சட்டத்தின்படி இதுபோன்ற ஜல்லிக்கட்டுகள் தடுக்கப்பட வேண்டும். இதற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தடை விதித்து தவறு செய்துவிட்டது என்றார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தனர். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.
ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ்!
லண்டன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக அந் நாட்டு போலீசார் அறிவித்துள்ளது. லண்டனில் கார் குண்டு வைத்தது மற்றும் கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்கியது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்
ஆனால், டாக்டர் ஹனீப்புக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய போலீசார் அவர் மீது தொடர்ந்து பல வழக்குகளை போட்டு ஜாமீனில் வர விடாமல் தடுத்தனர். இதையடுத்து மத்திய அரசும் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக் கொண்டதன் பேரில், ஹனீப் விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய போலீசார் தாங்கள் ஜோடித்த ஆவணங்களை கைவிட்டனர். இந் நிலையில் இப்போது டாக்டர் ஹனீப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதனால் கடந்த 3 வார காலமாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹனீப் விடுதலையாகவுள்ளார்.
டாக்டர் ஹனீப் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்று ஹனீப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனைவி மகிழ்ச்சி: இதன் மூலம் உண்மை வென்று விட்டதாக ஹனீப்பின் மனைவி பிர்தெளஸ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், உண்மையும் நியாயமும் வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், ஹனீப்பை நாடு கடத்தும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா கைவிட வேண்டும். அவர் இன்னும் 2 அல்லது மூன்று நாட்களில் பெங்களூர் வந்துவிடுவார் என நம்புகிறேன். பிரதமருக்கும் வெளியுறவுத்துறைக்கும் என் நன்றிகள்.
அதே போல ஆஸ்திரேலிய மனித உரிமை அமைப்புகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார். வீட்டுக் காவல்: டாக்டர் ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டாலும், அவருடைய விசா ரத்தாகியிருப்பதால் அவர் சிறையை விட்டு வெளியில் வந்தாலும் ஆஸ்திரேலியாவுக்குள் சுதந்திரமாக நடமாட முடியாது. அவருக்கு மீண்டும் விசா கொடுக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அவர் முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். அவருக்கு விசா வழங்கப்படும் அல்லது அவர் நாடு கடத்தப்படுவாரா என்று தெரியவில்லை.
இந்திய அரசு கோரிக்கை: இந் நிலையில் ரத்து செய்யப்பட்ட ஹனீப்பின் விசாவை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு இந்தியா கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Thanks ...thatstamil

0 Comments:

Post a Comment

<< Home