ஆஸி. அரசுக்கு எதிர்க் கட்சி கடும் கண்டனம்:
Bismillah...
மெல்போர்ன்: இந்திய டாக்டர் முகம்மது ஹனீப் விவகாரத்தில் உலக சமுதாயத்தின் கேலிப் பொருளாக ஆஸ்திரேலிய காவல்துறை மாறியுள்ளதாக அந்நாட்டிந் முக்கியக் கட்சியான கிரீன் பார்ட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. கிரீன் கட்சியின் எம்.பி. கெர்ரி நெட்டில் கூறுகையில், இந்திய டாக்டர் முகம்மது ஹனீப் வழக்கைக் கையாண்ட விதத்தின் மூலம் உலக சமுதாயத்தின் கேலிப் பொருளாக ஆஸ்திரேலிய காவல்துறை மாறியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த கேவலமான நிலைக்கு ஆஸ்திரேலிய அரசுதான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள பிரதமர் ஜான் ஹோவர்ட் கொடுத்த நெருக்குதல் காரணமாகவே ஆஸ்திரேலிய காவல்துறை டாக்டர் ஹனீப்பின் பெயரையும், புகழையும் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசும், காவல்துறையும் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். தேவையில்லாமல் அவர் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. எதற்காக டாக்டர் ஹனீப்பை 12 நாட்கள் எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாமல் போலீஸார் காவலில் வைத்திருந்தனர் என்று தெரியவில்லை. அரசின் நெருக்குதலே இதற்கு முக்கியக் காரணமாக இருக்க முடியும். எப்படியாவது டாக்டர் ஹனீப்பை தீவிரவாதி என்று காட்டி விட வேண்டும் என்று அரசு கொடுத்த நெருக்குதல் காரணமாகவே ஆஸ்திரேலிய காவல்துறை இவ்வாறு நடந்து கொண்டுள்ளது. ஆனால் உண்மையை அவர்கள் சுலபமாக மறந்து விட்டார்கள். மறைக்க முயன்று தோற்றுள்ளனர். இதனால் பல தவறுகளை அடுத்தடுத்து செய்து கேவலப்பட்டு நிற்கிறார்கள்.
ஆஸ்திரேலிய காவல்துறையின் செயல்பாடுகளைப் பார்த்து உலக சமுதாயம் மட்டுமல்லாமல் இங்கிலாந்து போலீஸாரும் கூட கேலி செய்யும் நிலை உருவாகியுள்ளது. டாக்டர் ஹனீப்பின் விசாவை ரத்து செய்த முடிவை குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவரும் அரசின் நெருக்குதலால்தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார் அவர்.
மகளின் போட்டோவை பார்த்து அழுத ஹனீப்:
இந்நிலையில் ஹனீப்பை பார்க்க அவரது உறவினரான் இம்ரான் சித்திக் மூன்று நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றார். இம்ரான் ஆஸ்திரேலிய சிறையில் ஹனீப்பை சந்தித்தார். அப்போது அவர் ஹனீப்-பிர்தெளஸ் தம்பதியினருக்கு சமீபத்தில் பிறந்த மகளின் போட்டோவை ஹனீப்பிடம் காண்பித்தார். அதைப் பார்த்த டாக்டர் ஹனீப் கண் கலங்கி அழுததாக இம்ரான் சித்திக் தெரிவித்துள்ளார். இந்திய அரசு டாக்டர் ஹனீப்பை விடுதலை செய்ய முழு முயற்சிகளை செய்து வருவதாகவும் சித்திக் கூறினார்.
Thanks..thatstamil
0 Comments:
Post a Comment
<< Home