அரபு நாடுகளை இஸ்ரேல் உளவு பார்க்க இந்தியாவின் செயற்கைக் கோள் உதவும்.
Bismillah...
இஸ்ரேலுக்குச் சொந்தமான உளவு செயற்கைக் கோளை இந்தியா விண்ணில் செலுத்தவுள்ளது. இதற்கான ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் இந்த செயற்கைக் கோளை ஏவவுள்ளது.
டெக்ஸார் என்ற இந்த இஸ்ரேலிய செயற்கைக் கோள் 260 கிலோ எடை கொண்டது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து இந்த செயற்கைக் கோளை இந்தியா ஏவவுள்ளது.
இது குறித்த விவரங்களை வெளியிட இஸ்ரோ மறுத்து வந்தாலும் இப்போது விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.
பாலஸ்தீனம் உள்ளிட்ட அரபு நாடுகளை இஸ்ரேல் உளவு பார்க்க இந்த செயற்கைக் கோள் உதவும். இதன் படங்களை இந்தியாவுக்கும் தர இஸ்ரேல் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த செயற்கைக் கோளில் உள்ள synthetic aperture radar (SAR) என்ற அதிக சக்தி மிக்க ரேடார் மூலம் பூமியில் மிகச் சிறிய அளவில் நடமாடும் டார்கெட்களை 'லைவ்' ஆக கண்காணிக்க முடியும்.
இது குறித்து இஸ்ரோ அதிகாரிகளிடம் கேட்டபோது, வெளிநாட்டு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தப் போகிறோம். வேறு எந்த விவரத்தையும் சொல்ல முடியாது. அது பரம ரகசியம் என்றனர்.
Thanks...Thatstamil
0 Comments:
Post a Comment
<< Home