ஷீஆக்கள்
Bismillah....
அறிமுகம்:
இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம், ஜாஹிலிய்யா சமூகத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. நரகின் விளிம்பில் இருந்தார்கள். இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்ட பின்னர், உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒரு போதும் காணப்பட்டதில்லை.
நபி (ஸல்) அவர்களின் பின்னர், இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களுமாவர். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.
இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி (ரழி) அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால், காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது. அரசியல் காரணங்களுக்காக அலி (ரழி) அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி, அல்குர்ஆனுக்கு தவறான விளக்கம் கூறி, கிளர்ச்சி செய்தனர்.
இதேபோல், இவர்களுக்கு எதிராக அலி (ரழி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே 'ஷீஆ' شيعة எனப்படுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக 'ஷீஅத்து அலி' என்று அழைக்கப்பட்டனர். 'ஷீஆ' شيعة என்ற சொல் கட்சி, குழு என்ற கருத்தைத் தருகிறது.
அலி (ரழி) அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரிவினர், நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும் தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும், நபி (ஸல்) அவர்களை விட உயர்வானவராகவும் கருதலானார்கள். இந்த வெறி முற்றிப்போன போது அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) போன்ற உன்னத ஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
இன்று இவர்கள் பல பிரிவுகளாக, பல கொள்கைகளுடன் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஈரானில் அவர்களின் ஆட்சியே உள்ளது. ஷீஆக்கள் இந்நாட்டில் நுழைவதற்கு சிலர் இன்று வழி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்ட 'ஷீஆக்கள்' தான், உண்மை முஸ்லிம்கள் என்ற பிரசாரம் கூட சில இயக்கவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏகத்துவக் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, அரசியலுக்கும் அனைத்து துறைக்கும் வழிகாட்டும் இயக்கங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு, 'ஷீஆப்' புரட்சியாகிய ஈரானியப் புரட்சிக்கு இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டிருக்கின்றன, இந்த இயக்கங்கள். எனவே, ஷீஆக்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பனவற்றை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அஷ்ஷீஆ : الشيعة
இப்பெயருக்குள் அனைத்து உட்பிரிவுகளும் அடங்கிவிடும். இதுவே மிகப் பிரபல்யமான பெயர்.
பிரதான பிரிவுகள்:
ஷீஆ இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான நான்கு பிரிவுகள் உள்ளன.
அஸ்ஸபயிய்யா
அஸ்ஸைதிய்யா
அல்கைஸானிய்யா
அர்ராபிழா
அஸ்ஸபயிய்யா:
இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும், இடி அவரின் ஓசை, மின்னல் அவரின் பார்வை என்றும், இறுதிகாலத்தில் மீண்டும் வந்து, நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது 'அர்ரஜ்இய்யா' வாகும்.
(அல் மிலல் வன்னிஹல் பாகம் 1 பக்கம் 146)
உட்பிரிவுகள்
அல்குராபிய்யா (காகம்): الغرابية
அலி (ரழி), முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும், ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் - சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)
அன்னமிரிய்யா:
முஹம்மத், அலி, பாதிமா, ஹஸன், ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன், தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன், தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள நடித்தான். இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை 1. தாரீகுத் தபரி 2. அல்பிதாயா வன்னிஹாயா 3. மீஸானுல் இஃதிதால் 4. லிஸானுல் மீஸான் 5. தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 'ஷீஆ' இயக்கம் உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள், மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால், அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் 'ஷீஆ' இயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என Pழணல போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அஸ்ஸைதிய்யா: الزيدية
அலி → ஹுஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில், ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸெய்த் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப் போக்குக் காணப்பட்டது. அதனால், மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு, ஆற்றல், ஆளுமை, நற்பண்புகள் என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.
இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர், முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியான வாஸில் பின் அதா, அபூ ஹனீபா போன்றோரிடமும் கற்றுள்ளார். இதனால், இக்குழுவினர் அடிப்படை விடயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் கிளை விடயங்களில் ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஸெய்த் அவர்கள், உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை, கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தி, இக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.
உட்பிரிவுகள்:
ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர், இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.
மூத்தோர்கள்: இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே, அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியை அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது, எமன் நாட்டில், கருத்து முரண்பாடுகளினால் பிளவுபட்டு ஸுலைமானிய்யா, ஜாரூதிய்யா, ஸாலிஹிய்யா போன்ற முப்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
(அல்மிலல் வந்நிஹல், பாகம் 1, பக்கம் 155)
பிந்தியோர்கள்: இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும், அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் 'காபிர்'கள் என்கின்றனர்.
கொள்கைகள்
இமாம்கள் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள்.
பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர்.
அல்லாஹ்வின் அறிவு: ஒவ்வொரு விடயமும் அது நடக்கும் போதுதான் அவனுக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இது, ஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும், கைஸானியாக்களினதும் கருத்திலிருந்து பிறப்பெடுத்ததாகும்.
(ஸெய்தின் கொள்கை இதற்கு மாற்றமானதாகும்.)
மஹ்தி: இவரின் வருகை பற்றி ஸெய்த் அவர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன. கைஸானிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா எனவும், இமாமிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி எனவும், ஏனைய பிரிவினர் இன்னும் பல மஹ்தீக்கள் வருவார்கள் என நம்புகின்றனர்.
ஷீஆக்கள்
அல் கைஸானிய்யா:
முஆவியா (ரழி) அவர்களின் மகன், யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழு உருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில் 'தவ்வாபீன்' என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்த இப்பிரிவினர், அவர்களுக்கு உதவி செய்யத் தவறியதனால் அவரை இழந்தோம். எனவே, நாம் பாவிகள் என்று கருதி, 'தவ்பா' செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்க ஆரம்பித்தனர். உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து, பல தளபதிகளைக் கொலை செய்தனர்.
இவர்கள் 'தனாஸுக்' என்ற மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டுள்ளனர். இவ்வாறு, வழி கெட்ட கொள்கைகள் பல. 'தீன் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுப்படல்' என்றும், அம்மனிதர் அலிதான் என்றும் பிரசாரம் செய்தான், முக்தார். இவனது புனைப் பெயர் 'கைஸானிய்யா' என்று அழைக்கப்படுகிறது. ஷீஆக்களின் அனைத்து வழிகெட்ட கொள்கைகளும் இப்பிரிவினரிடமும் காணப்பட்டன.
அர்ராபிழாக்கள்
இவர்கள் முன்னைய மூன்று ஆட்சியாளர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆட்சி, அலி (ரழி) அவர்களுக்கும் அவரது பரம்பரைக்கும் மட்டுமே உரித்தானது. ஏனைய அனைவரது ஆட்சி முறையும் தவறானது என்று கருதுகின்றனர்.
ராபிழாக்கள், ஷீஆக்களின் ஒரு பிரிவினர். இவர்களுக்குள் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
முஹம்மதிய்யா.
அல் - இஸ்னா அஷரிய்யா ஃ இமாமிய்யா.
முஹம்மதிய்யா:
அலி → ஹுஸைன் → அப்துல்லாஹ் → முஹம்மத். இவர்கள் தங்களது இமாமாகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் முஹம்மத் என்பவரைக் கருதுகின்றனர்.
முஹம்மத் என்பவர் ஹி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரை 'அந்நப்ஸ் அஸ்ஸகிய்யா' பரிசுத்த ஆத்மா என்ற புனை நாமமிட்டும் அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்கு எதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது, அபூ ஜஃபர் அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும், தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதி, அவரது தலையைத் துண்டித்து, அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.
அல் - இஸ்னா அஷரிய்யா ஷ இமாமிய்யா:
இவர்களும், நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர், ஆட்சி உரிமை அலி (ரழி) அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னைய ஆட்சியாளர்களைத் துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற நிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய, பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர்.
'அஹ்லுல்பைத்' திலிருந்தே 12 இமாம்களும் தெரிவு செய்யப்படுவர் என நம்புகின்றனர். இவர்கள், ஒவ்வொருவரும் தனக்குப் பின்னால் வரும் இமாமை 'வஸிய்யத்' மூலம் நியமித்து, பதவியில் அமர்த்துவர் எனக் கூறுகின்றனர்.
இந்த இமாமத் பதவிக்கு வரும் 12 பேரும் 'மஃஸும்' பாவங்கள் செய்யாதவர்கள். எனவே, அவர்களை ஏற்பது ஈமானின் ஓர் அங்கம்; மறுப்பவர்கள் 'காபிர்'கள் என்றும் வாதாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நம்பும் இமாம்களில் முதன்மையானவர் அலி (ரழி) அவர்களும் இறுதியானவர் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரீ அவர்களும் உள்ளனர்.
இமாம்களில் இறுதியான முஹம்மத் என்பவர் ஸாமர்ராவில் தனது தந்தையின் வீட்டில் திடிரென்று மறைந்துவிட்டதாகவும், அவர் மீண்டும் உலகுக்கு – பூமியில் குழப்ப நிலைகள் அதிகரிக்கும் காலப்பிரிவில் நீதியை நிலைநாட்ட – திரும்பி வருவார் என்றும் நம்புகின்றனர். இவரின் வருகையினால், மனிதர்கள் அனைவரும் பயன் பெறுவர் என்றும் கூறுகின்றனர். எதிர்பார்க்கப்படும் மஹ்தி (அலை) இவர்தான் எனவும் கருதுகின்றனர். ஷீஆக்களிடையே உள்ள பல பிரிவுகளிடையே, மஹ்தி பற்றி மாறுபட்ட கருத்துக்களும் சிந்தனைகளும் உள்ளன.
இமாமிய்யா சிந்தனையுடையோர் நம்பும் 12 இமாம்களின் பெயர்கள் பின்வருமாறு:
2. ஹஸன்
ஹுஸைன்
ஸெய்னுல் ஆப்தீன்
முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹுஸைன் அல் பாகிர்
ஜஃபர் அஸ்ஸாதிக்
மூஸா இப்னு ஜஃபர் அல் காழிம்
அலீ இப்னு மூஸா அர்ரிழா
முஹம்மத் அல் ஜவாத்
அலீ இப்னு முஹம்மத் அல் - ஹாதி
ஹஸன் அல் - அஸ்கரி
முஹம்மத் இப்னு அல் ஹஸன்
இமாமிய்யா சிந்தனைப் பிரிவினர் 'அல் ஜஃபரிய்யா' என்ற பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றனர். இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் கொள்கைகளும் யூத இனத்திற்கு ஒத்ததாக அமைந்துள்ளது.
உட்பிரிவுகள்:
அஷ்ஷைகிய்யா – குருத்துவம்
அர்ரிஷ்திய்யா
இஸ்மாயீலிய்யா
நுஸைரிகள் ஃ அலவியர்கள் – சிரியாவில் உள்ளனர்.
தகிய்யா:
ஷீஆக்களின் கொள்கைகளில் முக்கிய ஒன்றாக 'தகிய்யா'வும் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதாகவே இக்கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். இதன் மறுவடிவம் நிபாக் – நயவஞ்சகத்தனம், பொய் ஆகும். ஷீஆக் கொள்கை உள்ள ஒருவர் உள்ளொன்று வைத்துக் கொண்டு, அதற்கு மாற்றமாக வெளிப்படையாக வேறொன்றைக் கூறுவதே 'தகிய்யா' எனும் நயவஞ்சகத்தனமாகும்.
'தகிய்யா'வை ஷீஆக் கொள்கையின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். அதற்கான சில உதாரணங்கள்.
'தகிய்யா' என்பது எமது மார்க்கத்தின் அடிப்படை. அதனை மறுப்பவனுக்கு மார்க்கத்தில் இடமில்லை.
'தகிய்யா என்னுடையதும் எனது முன்னோர்களினதும் வழிமுறை. அது இல்லாதவனுக்கு ஈமான் இல்லை' என்று ஷீஆ இமாம்களில் ஒருவரான அபூ ஜஃபர் கூறுகின்றார். (அல்காபி 2 ஃ 27)
'தகிய்யா' என்பது மார்க்கத்திற்கு கண்ணியம் தருகின்றது. அது இல்லாவிடில் மார்க்கத்திற்கு இழிவு என ஷீஆக்கள் நம்புகின்றனர்.
'நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை மறைத்து வைத்துக் கொண்டால், அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவான்; அதனை வெளிப்படையாகப் பரப்பினால், அல்லாஹ் உங்களை இழிவடையச் செய்வான்' என அபூ அப்தில்லாஹ் எனும் ஷீஆ அறிஞர் குறிப்பிடுகின்றார். (அல்காபி 2 ஃ 176)
இஸ்மாயீலிய்யா:
இவர்கள் இமாமிய்யாவின் உட்பிரிவாக உள்ளனர். பன்னிரெண்டு இமாம்களில் முதல் ஆறு நபர்களையும் இவர்கள் நம்புகின்றனர். ஏழாவது இமாம் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து மோதல் இப்பிரிவுக்கு வழிகோலியது. ஜஃபர் அஸ்ஸாதிக் என்பவர் இவர்களின் ஆறாவது இமாம். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.
ஐ. இஸ்மாயீல். ஐஐ. மூஸா அல் காழிம்.
இஸ்மாயீலைத் தலைவராக ஏற்றவர்கள் இஸ்மாயீலிய்யாப் பிரிவினர் எனப்படுகின்றனர். மார்க்க விடயங்களில் வரம்பு மீறிச் சென்ற இக்குழு ஈராக்கில் தோன்றி வளர்ந்தது. இன்று ஈரான், குராஸான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். எகிப்தில் தோன்றிய பாதிமியர் ஆட்சியும் இவர்களின் வழிமுறைகளுடையதே. இவர்கள் தமது 14வது இமாமாக 'ஆகாகானை' நம்புகின்றனர்.
நுஸைரிய்யா:
இஸ்மாயீலிய்யாப் பிரிவின் உட்பிரிவாக உள்ள இக்குழுவினர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரம் என நம்புகின்றனர். இவர்களை அலவிய்யாக்கள் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் கிறிஸ்தவ மதத் தாக்கத்திற்குட்பட்டு, அவர்களின் முக்கிய விழாக்களையும் பெருநாள் தினங்களையும் கொண்டாடுவதோடு, கிறிஸ்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர். இன்று, இப்பிரிவினர் சிரியாவிலேயே அதிகமாக வாழ்கின்றனர். அங்கு நுஸைரிய்யா ஆட்சியே உள்ளது.
துரூஸிகள்:
இறைவன், இமாமின் வடிவில் வந்துள்ளான் என்கின்றனர். பாதிமிய்யா ஆட்சியாளனான அல்ஹாகிம் பீ அமிரில்லாஹ் என்பவன் தன்னில் இறைவன் அவதரித்துள்ளதால், தன்னை வணங்குமாறு மக்களைப் பணித்தான். பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். உறவினர்கள் இவனைக் கொலை செய்துவிட்டனர்.
அல் ஹாகிம் பீ அம்ரில்லாஹ் கொலை செய்யப்பட்ட பின்னர், 'இவன் சாகவில்லை; மறைந்திருக்கின்றான்' என்று பாரசீகப் பிரதேசத்தில் வாழ்ந்த ஹாமாஸ் அத்துரூஸி என்பவன் பிரசாரம் செய்தான்.
ஷீஆக்களின் கொள்கைகள்
அல்குர்ஆன்:
நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட, 30 ஜுஸ்வுகள் அடங்கிய, இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்ற அல்குர்ஆனை ஷீஆக்கள் முழுமையான அல்குர்ஆனாக ஏற்பதில்லை. 40 ஜுஸ்வுகள் இருப்பதாக நம்புகின்றனர். 'இமாமுல் காயிப்' என்பவரிடம் அது இருப்பதாகவும், அவர் வெளிவரும் போது கொண்டுவருவார் எனவும் அதன் பின்னர் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் நம்புகின்றனர்.
அல் ஹதீஸ்:
புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை. அலி (ரழி) அவர்களையும் இவர்கள் நம்பும் இமாம்களும் அறிவித்த, அல் உஸ்லுல் காபியில் உள்ளவற்றையே நம்புகின்றனர்.
ஸஹாபாக்கள்:
நான்கு ஸஹாபாக்களைத் தவிர மற்ற அனைவரையும் காபிர்கள் என்கின்றனர்.
ஷீஆக்கள் பற்றி அறிஞர்கள்:
நான் ஷீஆக்களின் வழிகெட்ட பிரிவான ராபிழாக்களைத் தவிர மற்றவர்களிடமே ஹதீஸ்களை எடுத்தேன். ஏனெனில், ராபிழாக்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி, பொய்களை மார்க்கம் என்பர்.
– ஷகீக் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்)–
பொய் சொல்வதிலும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதிலும் முன்னிலைவகிக்கின்றவர்கள் ராபிழாக்களே ஆவர்.
– இமாம் ஷாபிஈ (ரஹ்)–
இந்த வழிகெட்ட ஷீஆக்களைப் பற்றி இமாம் மாலிக் (ரஹ்), அப்துல்லாஹ் இப்னுல் முபாறக் (ரஹ்), அபூ ஸர்ஆ (ரஹ்), இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இப்னுல் கையிம் (ரஹ்), அர்ராஸி, அத்தஹபி போன்றவர்களும் நவீன கால நல்லறிஞர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.
ன்று, எமது நாட்டில் பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களின் செல்வாக்கு, அவற்றிற்கிடையிலான முரண்பாடான கொள்கைகள், அரசியல் அதிகார வீச்சுக்கு முக்கியத்துவமளிக்கின்ற, அசத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு, சத்தியத்தை தூக்கி எறிந்து விடுகின்ற இயக்கங்களின், அமைப்புகளின் அறிமுகம் என்பன இலங்கை முஸ்லிம்களின் சமகால சமய, சமூக, பண்பாடு, அரசியல் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறியுள்ளன. இயக்க நடவடிக்கைகளின் செல்வாக்கு, ஒவ்வொரு தனிமனிதனையும் அசைத்து வரும் இக்கால கட்டத்தில், அவற்றை மதிப்பீடு செய்வதும், விமர்சனப் பார்வைக்குள் உட்படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.
இன்று, இலங்கையில் காணப்படும் இயக்கங்கள், அவற்றின் சர்வதேச ஸ்தாபகர்களினதும் தலைவர்களினதும் குறிக்கோள்களையும் திட்டங்களையும் செயற்படுத்தும் நடவடிக்கைகளையே பெரும்பாலும் தீவிரமாக அனுஷ்டிக்கின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலேயே சாத்தியமற்றுப்போன, அநியாயமாகப் பெறுமதியான பல உயிர்களைப் பலியெடுத்த கொள்கைகளை, முஸ்;லிம்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கையில் அமுல்படுத்தி, அதே நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.
இஸ்லாத்தைப் பற்றியும் அதன் 'கிலாபத், ஜிஹாத்' பற்றிய தெளிவான அறிவற்ற, உணர்ச்சிக் கோஷங்களுக்கு அடிமைப்பட்ட, தூய்மையான ஏகத்துவக் கொள்கையை சிதைத்துவிட்ட, அற்பமான அரசியல் நோக்கம் கொண்ட, நபி (ஸல்) அவர்களின் தூய்மையான ஸுன்னாவைக் கொச்சைப்படுத்துகின்ற கோமாளிக் கூட்டங்களினால், இன்றுவரை உலகில் எங்கும் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை. இவர்களால் நிலைநாட்டவும் முடியாது. ஏனெனில், நபி வழியைப் புறக்கனித்த எந்தக் கூட்டத்திற்கும் அல்லாஹ் தனது உதவியை வழங்கிய வரலாறுகள் இல்லை.
இஸ்லாமிய வரலாற்றின் துவக்க நூற்றாண்டில் தோன்றிய 'கவாரிஜ்'கள் போன்று, இன்று அல்ஜீரியாவிலும் எகிப்திலும் பாகிஸ்தானிலும் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் ஏற்படுத்தியிருக்கின்ற இரத்தக் களறி, பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் உயிர்களைப் பலியெடுத்து வருகின்றன. பன்னாயிஸம், பலவாயிரம் பேரை எகிப்தில் பலியெடுத்துள்ளது. எனினும், எத்தகைய பலனையும் கண்டதில்லை. பன்னாயிஸம் எகிப்திலும், மௌதூதியிஸம் பாகிஸ்தானிலும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் எத்தகைய அரசியல் மாற்றங்களையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. ஒரு நூற்றாண்டு காலத்தை அண்மித்தும் அவர்களின் கொள்கை வெற்றிபெறவில்லை என்றால், அக்கொள்கை உயிரோட்டமற்ற, சாத்தியமற்ற, நடைமுறைச் சாத்தியமற்றவை என்பது புலனாகிறது.
பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே அந்த நாடுகளில் இவர்களின் அதிகார வீச்சு, 'கிலாபத்' கனவு ஏதோ சாத்தியவரைக்கோட்டின் எல்லை தாண்டிய ஏதோ ஒரு மங்கிய, குழப்பமான புள்ளியில் நின்று கொண்டிருக்கும் போது, மிகச் சிறுபான்மையினராக, மாற்று மதத்தவர்களுக்கு மத்தியில், முற்போக்கும், ஆழமான இஸ்லாமிய அறிவும் இல்லாத, அனைத்து அசத்தியக் கொள்கைகளுடனும் சமரசம் செய்துகொள்கின்ற இக்கொள்கை, எந்த வகையிலும் சாத்தியமற்றது என்று துணிந்து கூறலாம்.
ஏகத்துவத்தையும், நபிவழியையும் அடிப்படையாகக் கொள்ளாத, இன்றைய சில்லறை இயக்கங்கள் பற்றி விவாதிக்கப்பட வேண்டிய பல விடயங்களும் கருத்துக்களும் உள்ளன. எனினும் நாம், வரலாற்றில் தோன்றிய வழிகெட்ட ஷீஆக் கொள்கையுடன் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் எவ்வாறு உடன் படுகின்றன, ஒத்த பண்புக் கூறுகள் கொண்டுள்ளன என்பதை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அகீதா: ஷீஆக்கள் தங்களது கொள்கையை பகிரங்மாகச் சொல்வதில்லை. தெளிவான கொள்கையும் இல்லை. இதேபோல், பன்னாயிஸமும், மௌதூதியிஸமும் தூய இறை ஓர்மை வாதம் பற்றி அழுத்தமாகப் பேசவில்லை. புரட்சியில் நம்பிக்கையுள்ள அளவு, ஏகத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும், மதீனாவிலும் ஏகத்துவத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். ஆனால், இவர்கள் ஷீஆக்கள் போன்று, அழுத்தம் கொடுப்பதில்லை. ஷீஆக்கள் தாங்கள் நம்பும் இமாம்களிடம் இறைவன் பேசுவதாகவும், இறைவன் அவர்களின் சிலர் மீது இறங்கி, ஊடாடுவதாகவும் நம்புகின்றனர். இதே போன்ற அனைத்திறைவாதக் கொள்கையை குதுப் தனது சூறா இஃலாஸ் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்.
தரீக்கா ஃ சூபித்துவம்: உலகில் தரீக்காக்களைத் தோற்றுவித்து, கப்ரு வணக்கங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யூத – கிறிஸ்தவர்கள். ஷீஆ இயக்கம், யூதன் அப்துல்லாஹ் பின் ஸபாவினால் தோற்றுவிக்கப்பட்டது. இன்றுள்ள அனைத்துத் தரீக்காவும் ஷீஆக்களினால் தோற்றுவிக்கப்பட்டவைகளே! மவ்தூதியும், பன்னாவும் ஷீஆ ஆதரவாளர்கள். இருவரும் சூபித்துவ ஈடுபாடு உடையவர்கள். மவ்தூதி எழுதிய கவிதைகளில் சூபித்துவப் பிரதிபலிப்பைக் காண முடிகின்றது.
'தரீக்காக்களின் சூபி ஷெய்க்மார்கள், தனக்கு செயற்கையாக கப்றுகளைத் தயார் செய்து, அதனுள் இறங்கி, மறுமை வாழ்வு பற்றிய அச்சத்தை உள்ளத்தில் பதிக்க, பயிற்சி வழங்கினர்' என பன்னாவே கூறியுள்ளார். எனவேதான், இந்த நாட்டிலுள்ள, இவர்களின் இயக்கவாதிகள் தரீக்காக்களை இஸ்லாமிய ஆன்மீக தஃவா அமைப்பாக அங்கீகரித்து, பகிரங்கமாகப் பேசியும், எழுதியும் வருகின்றனர்.
தகிய்யா: ஒரு ஷீஆ, தனது கொள்கையைப் பகிரங்மாகச் சொல்லவே மாட்டான். தனக்கு மாற்றமான கொள்கை உள்ளவர்களிடம், அவர் கொள்கையை பின்பற்றுபவன் போன்று நடிப்பான். இந்த இயக்கவாதிகளும் இவ்வாறே நடிக்கின்றனர். பர்ளான தொழுகையின் பின்னர், கூட்டு துஆ இல்லை என்றிருந்தும், இவர்களிடம் கேட்டால், அப்படியும் – இப்படியும் உள்ளது என்பர். இது வழிகெட்ட ஷீஆக்களின் தரங்கெட்ட வழிமுறை. பன்னா, அனைவரையும் திருப்திப் படுத்தி அரசியல் செய்வதற்காக தூய்மையான கொள்கையைப் பலிபீடத்திற்கு அனுப்பினார். இதற்கு ஆதாரமாக அவர் ஏற்படுத்திய 'ஷீஆ – அஹ்லுஸ்ஸுன்னா ஒருங்கிணைப்பு இயக்கம் உள்ளது. மவ்தூதி, அனைத்து ஸஹாபாக்களையும் 'காபிர் என்ற, பல வழிகெட்ட கொள்கைகளை பிரசாரப்படுத்திய ஆயதுல்லாஹ் குமைனியின் ஈரானியப் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும், அந்த வழிகெட்ட மூடப் புரட்சியை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் 'வாஜிப்' என்றார்.
மீலாது விழா: இஸ்லாத்தின் எந்த மனிதனின் பிறப்பிற்கோ இறப்பிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. இதற்கு சிறந்த உதாரணமாக 'ஹிஜ்ரத்' அமைந்துள்ளது. எனினும், அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தினர், அவர்களின் இயக்க முக்கியஸ்தர்களின் மண்ணறைக்குச் சென்று மவ்லீது தினங்களில் பாடல் பாடி வருகின்றனர்.
'ஹிஜ்ரத்இ நபியவர்களின் பிறப்பு, இஸ்ரா, மிஃராஜ் முதலிய இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூறும் முகமாக அவற்றுக்கு விழா எடுத்தல் ஃ அனுஷ்டித்தல் ஹராமாக்கப்பட்டுள்ளது' என யூசுப் கர்ளாவி கூறுகிறார். (மீள்பார்வை ஜுலை 2001 Pயபந 04) 'மீலாத் தினத்தை எவ்வாறு கொண்டாடுவது?' என்று ஆ.யு.ஆ. மன்சூர், பித்அத் ஒன்றுக்கு உயிரூட்ட வழிசொல்லியிருந்தார். மீலாத் தினத்தை உருவாக்கியவர்கள் ஷீஆ ஆட்சியாளர்களான பாதிமியர்கள்.
தவ்ஹீதின் வகைகள்: இறையாட்சியை நிலைநாட்ட வேண்டும் - அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பது கவாரிஜ்களின் கொள்கை. இது ஷீஆக்களிடமும் உண்டு. பன்னா, இறையாட்சியை நிலைநாட்டப் போராடுவதாக வாதிட்டார். அதில், நபி வழி இருக்கவில்லை. உலகில் எந்த தூய அறிஞரும் சொல்லாத வகையில், 'ஹாகிமிய்யத்'இ தவ்ஹீதின் நான்காவது வகை, அதைப் புறக்கணிப்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது என்றார், மவ்தூதி. இதுவும் ஷீஆ வழிமுறையே!
ஸ்லாம், ஒரு புனிதமான பூரணத்துவமான வாழ்க்கை நெறி. அது, ஏனைய அனைத்துக் கொள்கை, கோட்பாடுகள், சிந்தனைகள் என்;பவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதேபோல், அது தெளிவான வழிகாட்டல்களைக் கொண்ட ஒரே மார்க்கமாகவும் உள்ளது.
புனித இஸ்லாத்தின் சிறப்பை மாசுபடுத்துவதற்காக வரலாற்றில் பல வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகள், கொள்கைகள், கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதில், ஷீஆக் கொள்கை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் காற்கூறில் ஈரானில் புரட்சி செய்து, குமைனியால் அங்கு ஷீஆ அரசு நிறுவப்பட்டது. இப்புரட்சியை இஸ்லாமிய அடைமொழியுடன் பலர் நம் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்களை மட்டுமே வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் அரசுதான் இஸ்லாமிய அரசாக இருக்க முடியும். ஷீஆக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு இஸ்லாத்திற்கு விரோதமானது. இதனை, அவர்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் நூல்களிலுள்ள செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.
தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
'(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார்.' இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.
(அய்யாஷி தப்ஸீர் Pயசவ - 1 Pயபந:128இ நூருஸ்ஸகலைன் Pயசவ - 1 Pயபந: 238)
ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில் 'நபி (ஸல்) அவர்கள், ருகூவு, ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது, அவர்கள் 'இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால், அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக' என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.
(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் Pயசவ - 1 Pயபந: 226)
அலியின் பொருட்டால், நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.
'நான் முஸா (அலை), ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால், அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்' என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில், புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம் 1, பக்கம் 261
'உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங் கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியை சோதித்தான்' என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.
அல்புர்ஹான் முன்னுரை, பக்கம் 27
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது 'முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ' என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அலி' என்றார்களாம். 'முஹம்மதே திரும்பிப் பாரும்' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.
தஃப்ஸீருல் புர்ஹான், பாகம் 2, பக்கம் 404
ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 258
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 393
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
மேற்படி நூல் பக்கம் 402
எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.
குர்புல் இஸ்னாத், பக்கம் 146
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 19, பக்கம் 197
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) 'வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன்.
நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்' என்றார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 1, பக்கம் 261
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது 'முடியுமே' என்றார்களாம்.
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470
அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:
'யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.' அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.
பஹ்ரானியின் 'புர்ஹான்' எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
'ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 78
'ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.' என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 315
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும், கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.
உயூனு அக்பாரிர் ரிளா, பாகம் 2, பக்கம் 236
'எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல், எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல், என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்' என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல்உஸுலுல் காபி, பாகம் 1, பக்கம் 197, 198.
ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:
பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும், நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே.
இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58
குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு அடிப்படையிலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமிய புரட்சியாகும்?
அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
காஷானியின் கிதாபுஸ்ஸாபி, பாகம் 1, பக்கம் 347
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர் என்று ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.
மிக்தார் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245
அபூபக்கரும், உமரும், அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 2, பக்கம் 246
(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பக்கம் 296
எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு
இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். திருக்குர்ஆனில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித் தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கின்றோம்.
இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சாதிப்போர் சிந்திக்க வேண்டும்.
ஷீயாக்களிடம் 'முத்ஆ' என்றொரு கொள்கை உண்டு. அதாவது, சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள், சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.
ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் 'முத்ஆ' என்பர். இதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.
ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு 'முத்ஆ' செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்டபோது 'செய்யலாம்' என்றாராம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 460
இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது 'ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில், இவர்கள் கூலிக்காரர்கள்' என்றார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 259
'ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது' என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியதுதான்' என்று பதிலளித்தார்களாம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 462
'மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 256
'யூத, கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்' என்று அபுல் ஹஸன் (8வது இமாம் கூறினாராம்! அதே நூல் அதே பக்கம்)
விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம். (அதே நூல் அதே பக்கம்)
இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்னதான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சியம் உண்டு. அங்கே விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி உண்டு. ஆனால், 'முத்ஆ' என்பதாகப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். சாட்சாத் புரட்சித்தலைவர் குமைனி கூறுவதைக் கேளுங்கள்!
விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். (குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம் 292) விபச்சாரத்துக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் ஓர் ஆட்சிதான் இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய ஆட்சிக்குப் பாடுபடும் இயக்கங்கள் இதைத்தான் செய்யப் போகின்றனவா? என்பதைச் சிந்திக்கட்டும்!
சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!
'ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும், ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.'
அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252
'யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு' என்று நபி (ஸல்) கூறினார்களாம்.
அல் இர்ஷாத் பக்கம் 252
அல்லாஹ்வின் தூதர் பெயரால் இதுபோல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் 'வர வேண்டியவர்' என்றோரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல் - காயிம்' என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
'காயிம்' வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கேடுகெட்ட கொள்கைகாரர்களே ஷீயாக்கள். பொய்களையும், கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.
விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள். ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.
இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!
0 Comments:
Post a Comment
<< Home