Bismillah...
கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேலின் முடிவு போதுமானதாக இல்லை - பாலஸ்தீன அரசாங்கம்
இஸ்ரேலிய அரசு, ஃபத்தா அமைப்பைச் சேர்ந்த 250 கைதிகளை விடுவிக்க எடுத்துள்ள முடிவு போதுமான அளவுக்கு செல்லவில்லை என்று பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸ் அவர்களின் அரசாங்கம் கூறியுள்ளது.
மேற்குக் கரைப் பகுதியின் கட்டுப்பாட்டை ஹாமாஸ் பிரிவினர் எடுத்துக் கொண்ட பின் அதிபர் அப்பாஸின் அவசரகால அரச நிர்வாகத்தின் கையைப் பலப்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆனால் பாலஸ்தீன அரசின் கைதிகள் தொடர்பான விடயங்களுக்கான அமைச்சரான அஸ்ரஃப் அஜ்ரமி அவர்கள் இஸ்ரேலியச் சிறைகளில் இன்னமும் பத்தாயிரத்துக்கும் கூடுதலான பாலஸ்தீனர்கள் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார்.
பாலஸ்தீன மக்கள் மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஆதரவைத் திரட்டக் கூடிய பிரபலமான, முக்கியமான கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
<< Home