|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, July 03, 2007

அமெரிக்க அடிவருடி இந்திய அரசின் கேவலமான அனுமதி

சென்னை: சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸில் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் நேற்று ஆட்டோக்களில் ஏறி சென்னை நகரை வலம் வந்து சுற்றிப் பார்த்தனர். அவர்கள் சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து மாடல் அழகிகள், துணை நடிகைகளுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

அமெரிக்காவின் பிரமாண்ட அணு சக்தி போர்க் கப்பல் நிமிட்ஸ் சென்னைக்கு வந்துள்ளது. நேற்று காலை சென்னை வந்த நிமிட்ஸ், துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் நிமிட்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து குட்டி கப்பல்கள் மூலம் நிமிட்ஸ் வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.



அவர்களை சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சென்னை நகரம் குறித்து அமெரிக்க வீரர்களிடையே காவல்துறை சார்பில் சிற்றுரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் சென்னை நகரை சுற்றிப் பார்க்க ரெடியா என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அமெரிக்கர்கள், சிறு குழந்தைகள் போல எஸ் போட்டனர்.

எப்படிப் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் ஆட்டோவில் சவாரி செய்ய விரும்புவதாக கூறினர். இதையடுத்து ஆட்டோக்கள் வரவழைக்கப்பட்டன. வரிசையாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்களில் இரண்டு பேராக, மூன்று பேராக, நான்கு பேராக அமெரிக்க வீரர், வீராங்கனைகள் ஏறிக் கொண்டனர்.

பெரும்பாலான ஆட்டோக்களில் ஜோடி ஜோடியாக வீரர், வீராங்கனைகளைப் பார்க்க முடிந்தது. ஆட்டோக்களில் பயணம் செய்பவர்கள் யார், அந்த ஆட்டோவின் எண், டிரைவர் பெயர் ஆகியவற்றை முன்கூட்டியே போலீஸார் குறித்து வைத்துக் கொண்டனர். பின்னர் ஆட்டோக்கள் கிளம்பின.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் சென்றன. சென்னை சென்டிரல் ரயில் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பல இடடங்களுக்குச் சென்று அமெரிக்க வீரர், வீராங்கனைகள் சுற்றிப் பார்த்தனர்.

சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை மின்சார ரயிலிலும் பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவுக்குள்ளும் புகுந்தனர். கைக்குக் கிடைத்த பொருட்களை அள்ளி பர்ச்சேஸ் செய்து மகிழ்ந்தனர்.

அமெரிக்க வீரர், வீராங்கனைகளுக்காக சென்னை நகரில் உள்ள 18க்கும் மேற்பட்ட ஸ்டார் ஹோட்டல்களில் அறைகள் போடப்பட்டுள்ளன. இங்குதான் அவர்கள் தங்கியிருக்கப் போகிறார்கள்.

கடலிலேயே பல மாதங்களாக இருந்து வந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் பல வகையான ஏற்பாடுகளை அமெரிக்க தூதரகம் தடபுடலாக செய்து வைத்துள்ளது.

வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான மாடல் அழகிகளை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனராம். இதுதவிர கோலிவுட் துணை நடிகைகள் பலரும் கூட 'ஏற்பாடு' செய்யப்பட்டுள்ளனராம்.

வீரர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் மது விருந்து, டான்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்துகளில் மாடல் அழகிகளும், துணை நடிகைகளும் கலந்து கொண்டு அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்தவுள்ளனராம்.

வெளிநாட்டு மாடல் அழகிகளை கலாச்சாரக் கோஷ்டி என்ற பெயரில் கூட்டி வந்து தங்க வைத்துள்ளனர். அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும், நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதைத் தவிர வேறு வேலையே அவர்களுக்குக் கிடையாதாம்.

அமெரிக்க வீரர்கள் ஜாலி செய்யும் ஹோட்டல்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 'இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால்' இரு நாட்டு 'நல்லுறவு' வலுப்படும் என நம்மூர் அதிகாரிகள் 'மகிழ்ச்சியோடு' கூறியுள்ளனர்.

சென்னை தவிர மாமல்லபுரத்தில் உள்ள ஜி.ஆர்.டி டெம்பிள் பே, ஸ்டெர்லிங், பார்ச்சூன், ஐடியல் பீச் ஆகிய இடங்களிலும் அமெரிக்க வீரர்களில் ஒரு பிரிவினர் தங்குகின்றனர்.

இதையொட்டி மாமல்லபுரம் மற்றும் கோவளம் ஆகிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்.

0 Comments:

Post a Comment

<< Home