|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, July 01, 2007

யாருக்காக ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

மார்க்கம் நலன் நாடுகிறது யாருக்காக ? என நாங்கள் வினவினோம், அப்போது நபியவர்கள், அல்லாஹ்விற்காகவும், அவனது வேதத்திற்காகவும், அவனது இறைத் தூதருக்காகவும், முஸ்லிம் தலைவர்களுக்காகவும் '' பொதுமக்களுக்காகவும் '' என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள். என்று தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்.
பொது மக்களுக்காக எவ்வாறு நலம் நாடுவது ?
இன்று தமிழகத்தில் முஸ்லீம் பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். ஓரளவு நகர் புறங்களில் வாழக்கூடிய முஸ்லீம்கள் எதையாவது ஒரு தொழிலை செய்து வயிற்றை வளர்க்க கூடியவர்களாக இருந்து வருகின்றனர், ஆனால் கிராமப்புறங்களில் வாழக்கூடிய முஸ்லீம்களின் நிலையோ மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்களில் பலர் அத்தக்கூலி தொழிலாளிகளாகவும், விவசாயிகளாகவும் இருந்து வருகின்றனர். ஒரு நாள் வேலை கிடைத்தால் இன்னொரு நாள் வேலை கிடைப்பதில்லை என்ற நிலை அவர்களிடத்தில் நிலவுவதால் அவர்களில் பெரும்பாலோர் குiயெnஉந என்கின்ற நாகரீக பெயரில் கந்து வட்டி நடத்துபவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கந்து வட்டி காரர்களிடம் குறிப்பிட்ட தவனையில் பணம் செலுத்த முடியவில்லை என்றால் பேட்டை ரவுடிகளை விட மோசமாக மிகவும் கீழ்தரமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.

அதற்கடுத்து மார்வாடி சேட்டுகளிடம் குடியிருக்கும் சிறிய வீட்டையோ, அல்லது குறைந்த அளவில் தங்களிடம் உள்ள ஆபரணங்களையோ, அல்லது வாகணத்தையோ அடைமானமாக வைத்து குறைந்த வட்டிக்கு பணம் பெறுவார்கள் குறிப்பிட்ட தவணையில் செலுத்த முடியவில்லை என்றால் சேட்டுகள்; அடைமானப் பொருளை அபேல் செய்து விடுவார்கள் இதற்காகத் தான் குறைந்த வட்டியை காட்டுவார்கள் அதாவது சிறிய மீனைக் காட்டி பெரிய மீன் பிடிப்பது இவ்வாறு தங்களது உடமைகளை இழந்து வீதிக்கு வந்த ஏழை முஸ்லீம்கள் தமிழகத்தில் ஏராளம், ஏராளம்.

வட்டிக்கும் பணம் பெற முடியாதவர்கள் ( சொத்தின் மதிப்பில் குறிப்பிட்ட சதவிகிதத்தின் அடிப்படையில் தான் வட்டிக்கு கடன் கிடைக்கும் குந்துவதற்கு குடிசைக் கூட இல்லாத வாடகை வீட்டுக் காரர்களுக்கு எதனடிப்படையில் கடன் கொடுப்பார்கள் ? ) அதனால் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கையேந்தினாலும் பிற முஸ்லிம்கள் தாராளமாக கொடுக்கும் நிலையில் இன்றில்லை காரணம் பெரும்பாலான முஸ்லிம்களுடைய நிலையும் பொருளாதாரத்தில் இழுபறியாகவே இருக்கிறத சிலர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் அவர்களில் அதிகமான பேர் லேபர்களாகவே இருப்பதால்; கைநிறைய சம்பளம் பெறமுடிவதில்லை அதனால் அதைக் கொண்டு தாயகத்தில் உள்ள தனது குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி n;சய்ய முடிவதில்லை அதனால் தான தர்மங்களை தடுத்து வைத்துள்ளனர்.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் வளைகுடாவில் 100 முஸ்லீம் லேபர்கள் பணிபுரியும் ஒரு கம்பெனியில் 4 ஐயர்கள் தொழில்நுட்ப கல்வியை கற்று வந்து 25 லேபருடைய சம்பளத்தை ஒரு ஐயர் வாங்கி விடுகிறார் அவருக்கு விருப்பமான கல்வியை அவர் விரும்பிய கல்லூரியில் சுலபமாக சீட் பெற்று படித்துக் கொள்ளலாம் அதற்குக் காரணம் அவர்கள் முன்னேறிய சமுதாயத்தினர் என்பதுவேயாகும் .

உயர் கல்வி படித்த அவர்கள் அமெரிக்கா, ஐரோப்பியா, வளைகுடா, நாடுகளுக்கு பயணித்து கைநிறைய சம்பாதித்து உண்டு கொழுத்து மேலை நாகரீகத்தில் ? மூழ்கி திளைத்தது போக எஞ்சியதை அவர்களுடைய தீவிரவாத அமைப்புகளுக்கு கணக்கின்றி அனுப்பி மேலும் வறுமை கோட்டுக்குக் கீழ்வாழும் முஸ்லீம்களை நரவேட்டையாட உதவுகின்றனர்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம்

மதபேதமின்றி வரி வசூலிக்கும் இந்திய அரசாங்கம்
உயர் கல்வி கற்க அனுமதிப்பதிலும், அரச பதவிகளில் வேலைக்கு ஆள் அமர்த்துவதிலும் அரசின் முக்கிய கேந்திரங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலும் மதபேதமின்றி நடப்பதில்லை, மாறாக மத துவேஷத்தை கையாளுகிறது.
திட்டமிட்டு முஸ்லிம்கள் புறக்கனிக்கப் படுகின்றனர். சுதந்திரத்திற்கு முன்பிருந்த முஸ்லீம்களுடைய இடஒதுக்கீட்டை தட்டிப்பறித்து விட்டதால் இன்று முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து வட்டியில் வீழ்பவர்களாகவும், பிறரிடம் கையேந்துபவர்களாகவும் ஆகிவிட்டனர். கையேந்தினாலும் தேவைப்படுவது கிடைக்காத காரணத்தால் தங்களுடைய வயிற்றை வளர்ப்பதற்காக இஸ்லாம் அனுமதிக்காத வட்டியில் வீழ்ந்து தங்களை அழித்துக் கொள்பவர்களாக தள்ளப் படுகிறார்கள்; அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
நம்மிடமிருந்து (முஸ்லீம்களிடம்) வரி வசூலிக்கும் அரசாங்கம் நமக்கு விகிதாரச்சாரப் படி இடஓதுக்கீடு வழங்கியே தீர வேண்டும் அவ்வாறு வழங்கினால் மட்டுமே நம்முடைய சமுதாயம் வறுமையின் கோரப் பிடியிலிருந்தும், மத தீவிரவாதிகளுடைய கொலை வெறி திட்டத்திலிருந்தும் ஓரளவு தப்பித்துக் கொள்ள முடியும்.

இடஒதுக்கீடு அடைவதற்காக இதற்கு முன்பும் பல வேலைகளில் போராடி விட்டோம் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராகி விட்டதால் திட்டமிட்டப் படி ஜூலை 4ல் இடஒதுக்கீடு கோரும் கோரிக்கையை விண்ணதிர முழங்கியவர்களாக தமிழகத்தின் மத்திய சிறைச்சாலைகளை நிரப்புவோம். அதன்மூலம் மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்தை ஈர்த்து நமது இடஓதுக்கீட்டை இன்ஷா அல்லாஹ் அடைய முயற்சிப்போம்.
குறிப்பு: சிறை நிரப்புவது என்றால் பத்து லட்சம் பேரையும் சிறைகளில் அடைக்க மாட்டார்கள் அனைவரையும் கைது செய்து சில மண்டபங்களில் அல்லது, பள்ளிக் கூடங்களில் வைத்து விட்டு அனுப்பி விடுவார்கள்.
அரசுக்கு நமது எதிர்ப்பை காட்டுவது தான் நமது நோக்கம் சிறையில் பிடித்து 15 நாட்கள் போட்டு விடுவார்கள் என்று விஷமிகள் செய்யும் பிரச்சாரத்தை நம்பாதீர்கள். லட்சக் கணக்கானோரை சிறையில் வைத்து உணவு பரிமாற முடியவே முடியாது. உணவு என்பது கூட அடுத்தக் கட்டம் முதலில் கழிப்பிட வசதி கூட செய்து கொடுக்க முடியாது.

விஷமிகளுடைய பிரச்சாரத்தை நம்பி நாம் உண்டு நமது பணி உண்டு என்றிருந்தால் நாமும் வாழ முடியாது நமது சகோதர முஸ்லிம் பொதுமக்களும் வாழ முடியாது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தினரின் நிகழ்ச்சியில் இடஒதுக்கீடு விஷயமாக கருனாநிதி கூறியது என்ன ஆனது ?

ஜனார்த்தனம் தலைமையில் கி.வீரமனி உட்பட 4 சதவீதம் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தது என்ன ஆனது .
மேற்கானும் ஏற்பாடுகள் முழுக்க முழுக்க தவ்ஹீத் ஜமாத்தின் ஜூலை 4 போராட்டத்தை வீரியமிழக்கச் செய்வதற்காகவே கூட திட்டமிட்ட ஏமாற்று வேலைகளாகம், ஏனென்றால் இதுபோன்று பல நாடகங்களை கலைஞருடைய அரசு ஏற்கனவே அறங்கேற்றி உள்ளது.

ஒரு வேளை உண்மையாகவும் கூட இருக்கலாம் அல்லாஹ் அறியக் கூடியவனாக இருக்கிறான். எதுவாக இருந்த போதிலும் ஜூலை 4 களப்பணியில் சோர்வடைந்து விடாதீர்கள் ஜூலை 3 ல் இடஒதுக்கீடு அறிவித்து விட்டாலும் கூட ஜூலை 4ல் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நன்றி அறிவிப்போம் சிறை நிரப்ப மாட்டோம். இல்லை என்றால் இடஒதுக்கீடு கோரும் வீர முழக்கங்களுடன் சிறைகளை நிரப்பியே தீருவோம். நமது சகோதர முஸ்லீம்களுக்காக நமது உயிரையும் அர்ப்பனிக்க தயாராகுவோம்.
தாயகத்தில் இருக்கக் கூடிய உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பி சிறை நிரப்ப புறப்படச் செய்யுங்கள் .

'தமக்கிடையே இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும், ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதிலும் ஓர் உடலைப் போல முஸ்லிம்களை நீ காண்பாய்! ஓர் உறுப்புக்கு நோய் ஏதும் வந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புகளும் உறங்காமல் காய்ச்சலால் (வாடி அதன் துன்பத்தில் பங்குகொண்டு) துனைநிற்கின்றது. ஆதார நூல்: புகாரி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

0 Comments:

Post a Comment

<< Home