இடஒதுக்கீடு வழங்க கோரிவருகிற 4-ந்தேதி பாளை.யில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டம்தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் துணைத்தலைவர் பேட்டி
மேலப்பாளையம், ஜுலை.2-
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி வருகிற 4-ந்தேதி பாளையங்கோட்டையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் துணைத்தலைவர் சைபுல்லா காஜா கூறினார்.
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் துணைத்தலைவர் சைபுல்லா காஜா நேற்று மேலப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இடஒதுக்கீடு
இந்தியா சுதந்திரம் அடைவதற்கும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகமானதாகும். அப்படிப்பட்ட இந்த சமுதாயம் அரசியல், வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 2 சதவீதத்தில் கூட இல்லை.
இப்படி பின்தங்கி உள்ள முஸ்லிம் சமுதாயம் மேன்மை அடையவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையவும் ஒரே வழிமுறை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும். அப்போது தான் இந்த சமுதாயம் முன்னேற்றம் அடையும்.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் இது வரை மத்திய-மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முன்வரவில்லை. தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. அவர் அண்டை மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் தமிழகத்திலும் வழங்கப்படும் என்றார். கேரளாவிலும், கர்நாடகத்திலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இது வரை ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவிலை.
சிறை நிரப்பும் போராட்டம்
எனவே நீதிபதி சச்சார் கமிஷன் அறிக்கைப்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்ககோரி வருகிற 4-ந்தேதி தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் 8 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டங்கள் நடக்கிறது. வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். அருகே எனது தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது. இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். பெண்கள் கைகுழந்தைகளுடன் திரளாக கலந்து கொள்வார்கள். மேலும் இந்த போராட்டத்தில் அனைத்து முஸ்லிம்களும் கருத்துவேறுபாடுகளை மறந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் துணைத்தலைவர் சைபுல்லா காஜா கூறினார்.

யார்-யார்?
பேட்டியின் போது மாநில செயலாளர்கள் சம்சுல்லுகா ரப்பாணி, சுலைமான், ஹாஜாநூஹ், நெல்லை மாவட்ட தலைவர் ïசுப்அலி, துணைத்தலைவர் ஜபருல்லாஹ், செயலாளர் சாதீக், துணைச்செயலாளர்கள் முகமது, அப்துல்காதர், பொருளாளர் நேஷனல்சாகுல், தூத்துக்குடி மாவட்ட தலைவர் லியாகத்அலி, துணைத்தலைவர் சம்சுதீன், செயலாளர் அப்பாஸ், துணைச்செயலாளர்கள் சாகுல், ராஜா உசேன், நவ்ஷாத், பொருளாளர் இப்ராகிம், குமரி மாவட்ட தலைவர் அபுதாகீர், செயலாளர் முகமது அமீன், பொருளாளர் தஸ்தகீர் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி - தினத்தந்தி.
0 Comments:
Post a Comment
<< Home