Bismillah..
'சேது' பேச்சு: உமாபாரதி மீது வழக்குப் பதிவு!
பாரதிய ஜன சக்தித் தலைவரும், முன்னாள் மத்தியப் பிரதேச மாநில முதல்வருமான உமாபாரதி மீது திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உமா பாரதி கலந்து கொண்டார். அதேபோல திருச்சியில் கண்டன பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். ராமேஸ்வரத்தில் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் கடுமையாக பேசினார். மேலும் சேது சமுத்திரத் திட்ட ஊழியர்களையும் எச்சரிக்கும் வகையிலும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சேது சமுத்திரத் திட்ட ஊழியர்களை மிரட்டும் வகையில் பேசியதாக உமாபாரதி மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராமர் பாலத்தைக் காக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும், தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று பேசியிருந்தார் உமா பாரதி.
இதையடுத்து வன்முறையைத் தூண்டும் விதமாக உமாபாரதி பேசியதாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கொலை மிரட்டல், அமைதிக்குப் பங்கம் வகிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் உமாபாரதி மீது இரு வழக்குகள் பதிவு செயய்யப்பட்டன. தன் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள பின்னணியில், இன்று அதிகாலை உமாபாரதி டெல்லி கிளம்பிச் சென்றார். விரைவில் இந்தப் புகார்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் உமா பாரதி மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
Thanks: thatstamil.com
0 Comments:
Post a Comment
<< Home