|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 16, 2007

துணை ஜனாதிபதி தேர்தல்: முஸ்லீம் வேட்பாளருக்கு இடதுசாரிகள், காங் ஆதரவு

Bismillah...
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிகள் தேர்வு செய்யும் முஸ்லீம் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அரசியல் தொடர் இல்லாத ஒருவரைத் தான் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளன.

இந்த வேட்பாளர் தேர்வில் முழு உரிமையையும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வு குறித்து அக் கட்சியின் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இரு முஸ்லீம் வேட்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்வு செய்து வைத்துள்ளன. ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முசிருல் ஹசன் மற்றும் வரலாற்று ஆய்வாளரும் கவிஞருமான இர்பான் ஹபீப் ஆகியோரே அவர்கள்.

இந்த இருவரில் முசிருல் ஹசனுக்கு காங்கிரஸ் கட்சியிலும் மதிப்பு உண்டு. இந்த இருவரில் யாரை கம்யூனிஸ்டுகள் தேர்வு செய்தாலும் காங்கிரஸ் கட்சி பச்சைக் கொடி காட்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடையே ரகசிய பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.



ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும்.

ஜனாதிபதி கலாமை மீண்டும் ஏற்க மறுத்ததால் முஸ்லீம்களிடையே தனது செல்வாக்கு சரிந்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. அதை ஈடுகட்டவே கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் முஸ்லீம் வேட்பாளர் பரிந்துரைக்கப்பட்டால் அதை ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளது.
Thanks...Thatstamil

0 Comments:

Post a Comment

<< Home