தபால் நிலையத்தில் தலித்துகளுக்குத் தடை!!!
Bismillah..
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தபால் நிலையத்தில், தலித் சமூகத்தினர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தலித்கள் தபால் நிலையை சேவையை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தபால் நிலையத்தில், தலித் சமூகத்தினர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தலித்கள் தபால் நிலையை சேவையை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுக்கரை அருகே உள்ளது திருமலையம்பாளையம் கிராமம். இங்கு தபால் நிலையம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த தபால் நிலையத்திற்குள் தலித் சமுதாயத்தினர் நுழைய முடியாது. காரணம் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதித்தது அரசோ அல்லது தபால் நிலைய அதிகாரியோ அல்ல. அந்தத் தபால் நிலையம் அமைந்துள்ள கட்டடடத்தின் உரிமையாளர்தான் இந்தத் தடையை விதித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தபால் நிலையம், ஒரு தனியாரின் இல்ல வளாகத்திற்குள் உள்ளது. அவரது வீட்டைத் தாண்டித்தான் தபால் நிலையத்திற்கு போக வேண்டும். அந்த வீட்டு உரிமையாளர் 'உயர்ஜாதி'யாம்.
இதன் காரணமாக தலித்துக்கள் தபால் நிலையத்திற்குள் வரக் கூடாது. வீட்டு வாசலுக்கு வெளியே நின்று கொண்டுதான் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அந்த வீட்டு உரிமையாளர் உத்தரவு போட்டுள்ளார்.
இதன் காரணமாக தலித் சமுதாயத்தினர் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து தபால் நிலையம் செல்ல முடியவில்லை. மாறாக வீட்டு வாசலிலேயே நின்று உரத்த குரலில் ஊழியர்களைக் கூப்பிட்டு போஸ்ட் கார்டும், ஸ்டாம்பும் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து உரியவர்களிடம் பெரியார் திராவிட கழகத்தினர் புகார் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்ட மேலிடங்களுக்கு தற்போது பெரியார் திராவிட கழகத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
மேலும் வருகிற 25ம் தேதி தபால் நிலையத்திற்குள் தலித்களுடன் அத்துமீறி நுழையும் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
Thanks..thatstamil
0 Comments:
Post a Comment
<< Home