|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, September 05, 2007

கள்ளு கடைகளை திறக்க கோரும் பாஜக!


தமிழகத்தில் மீண்டும் கள்ளுக் கடைகளைத் திறக்கக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு தின கூலி கூட முழுமையாக கிடைப்பது இல்லை. பொள்ளாச்சி விவசாயிகளின் நிலை அதைவிட மோசமாக உள்ளது. தென்னை மரத்தினை குத்தகைக்கு விட்டுத் தான் லாபம் பார்க முடிகிறது. டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது ஏன் கள்ளுக்கடைகள் இருக்கக் கூடாது. விவசாயிகளின் நலன் கருதி அரசு கள்ளுக்கடையை திறக்கலாம். இக்கோரிக்கையை முன் வைத்து முன்ளாள் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் தஞ்சையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

குடிப்பவரின் உடல் நலத்தையும் கெடுத்து, சுயசிந்தனை அற்றவராக மாற்றி, அவரது குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்திவரும், டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்று சமுதாய அமைப்புகளும், பா.ம.க போன்ற அரசியல்கட்சிகளும் போராடி வருகிற வேளையில் பா.ஜ.க வின் இந்த செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது.
தாங்களும் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்க்கு இது போல எதையாவது செய்வது பா.ஜ.கவின் வாடிக்கை. இது போன்ற போராட்டங்கள் பா.ஜ.கவின் வளர்சிக்கு ஒரு விதத்திலும் உதவ போவது இல்லை. மேலும் அது அழிவைத்தான் ஏற்படுத்தும். மத குரோதத்தை வளர்த்து குளிர்காய முடியாமல் போன பா.ஜ.க வேறுவழியில் இறங்கியுள்ளது.

கள்ளுக்கடையை திறந்தால் பல விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று சொல்லும் பா.ஜ.க. சூதாட்ட விடுதி, விபச்சார விடுதி போன்றவற்றை அரசு திறக்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலமும் பல குடும்பங்கள் பயன் பெறுகின்றன என்று போராடினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை.
-ஜாஹிர் ஹீசேன்-

0 Comments:

Post a Comment

<< Home